வேந்தன் : 20
அத்தியாயம் : 20
அறைக்குள் நுழைந்ததும் அவன் படுக்கையில் அமர அவன் அருகே அமர்ந்த அவளோ ,"மாமா" என அவனது சட்டை பட்டனை நோண்டி கொண்டே அவள் ,"நான் வேணும்னா ஒரு வாரம் கூட காலேஜ் போகாம இருக்கவா???" என அவள் கேட்டாள்...
அவனோ லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டே ,"ஏன்" என்று கேட்க ,"இல்லை நமக்குள்ள தான் எதுவுமே நடக்கலையே" என்று அவள் கூற
"என்ன நடக்கல" என அவன் கேட்க
"அது தான் மாமா அது"
"எது????"
"கசமுசா...."
"அப்படின்னா??" என அவள் கூற வருவது புரியாதது போல கேட்டான்...
"மாமா எதுவுமே தெரியாத மாதிரி பேசாதீங்க மாமா எனக்கு வெட்க வெட்கமா வருது நானே எப்படி எல்லாமே சொல்றது" என்று அவள் கண்ணை மூடிக்கொண்டு கூற அதை கண்ட அவனோ ,"ரொம்ப வழியாத போய் புக் எடுத்துட்டு வா படிக்கிற வேலையை பாரு நாளைக்கு காலையில நீ காலேஜ் போக ரெடியா இருக்கணும் நான் உன்னை கொண்டு போய் டிராப் பண்ணுவேன் புரியுதா" என்று அவன் கூறினான்...
அதைக் கேட்ட அவளோ ,"என்ன படிக்கவா??? இந்த நேரத்திலா" என கேட்க ,"ஆமாம் கடைசியாக நான் எடுத்த பாடத்தை படி இப்ப நான் கேள்வி கேட்பேன்" என்று கூற அதைக் கேட்டு அவளோ அதிர்ந்தாள்...
"மாமா இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன் நீங்கதான் காலேஜ் விட்டு நின்னுட்டீங்க இல்ல மறுபடியும் கேள்வி கேட்பேன்னு சொல்றீங்க" என்று கூறினாள்...
"அது மத்தவங்களுக்கு உன்னை பொறுத்த வரைக்கும் நான் இன்னும் ப்ரொபசர் தான் புரியுதா?? நீ படிக்கிற நான் உன்னை கேள்வி கேட்பேன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதுக்குள்ள நீ படிச்சு முடிக்கிற புரியுதா???" என்று அவன் கூறவும் அவளோ தலை மீது கையை வைத்து உட்கார்ந்து விட்டாள்...
"ஆளும் மண்டையும் பாரு பப்ளிக்கா கிஸ் அடிச்சா ஃபர்ஸ்ட் நைட் வேணுமா ஃபர்ஸ்ட் நைட் அதெல்லாம் நடக்கும்போது நடக்கும் மிஸ்ஸஸ் வேந்தன் கொஞ்ச நேரம் படிங்க படிச்சு டிகிரி வாங்குங்க அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம்" என்று கூற ,
அவளோ ,"உங்க கிட்ட போய் நான் ரொமான்ஸ் எதிர்பார்த்தேன் பாருங்க என்ன இந்த புக்காலேயே அடிச்சுக்கணும் நான் கூட நீங்க திருந்திட்டீங்கன்னு நினைச்சேன் நீங்க திருந்தவே மாட்டீங்க" என்று அவள் கூற அதை கேட்ட அவன் அவனுடைய மீசைக்கு இடையில் மெல்லிய புன்னகையோடு அதை ரசித்தபடி தன் லேப்டாப்பில் மூழ்கி இருந்தான்...
அவளோ புலம்பி கொண்டே புத்தகத்தை திறந்து வைத்தவளுக்கு படிப்பு தலையில் ஏறினால் தானே அவனையே பாவமாக அவள் பார்த்து கொண்டு இருக்க அதை பார்த்த அவனோ என்ன நினைத்தானோ தன்னுடைய லேப்டாப்பை அணைத்தவன்," புக்கை கொடு படிச்சிட்டியா" என கேட்க
அவளோ தலையில் கை வைத்து அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்து ,"மாமா இதெல்லாம் ரொம்ப ஓவர் அப்படி நான் என்ன கேட்டுடேன்னு சொல்லி எனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்து இருக்கீங்க" என்ன அவள் கேட்க,
அவனும் ,"புக்கை கொடு என்று சொன்னேன்" என அதட்ட,
" நான் படிக்கவே இல்ல மாமா ப்ளீஸ் தயவு செஞ்சு கேள்வி கேட்காதீங்க" என அவள் கூற,
அவளோ மனதுக்குள் புக்கை வாங்கி கேள்வி கேட்டு நான் பதில் சொல்லல என்ன இந்த ரூமை விட்டு வெளியே துரத்திடுவாரோ என எண்ணிக்கொண்டே அவள் இருக்க, புக்கை மற்றும் அவளை ஒரு பார்வை பார்த்தவன் புக்கை மூடி வைத்தவன்," அது தான் நீ படிக்கலை அப்படின்னு உன் மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கே" என கூறியவன் அவள் மீது பாய அவள் அதை எதிர்பார்க்கவில்லை...
அவள் உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது அதை விட அவனுக்கு நாடி நரம்புகள் எல்லாம் சிலிர்த்து கொண்டு எழுந்தது...அவளின் வெட்டும் பார்வையை பார்த்தவன் அவளின் கண்களுக்குள் செல்ல ஆசைப்பட்டு அவளின் கண்களில் இதழ் பதிக்க அவளோ அவனது அருகாமையில் முகம் சிவந்து கண்களை மூடி கொண்டாள்...
அவனோ அவளின் இரு கைகளை பின்னி கொண்டவன் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க அவளுக்கு கூச்சமாக இருந்தது...என்ன அவள் கேட்டாலோ அதை அவன் கொடுக்க போகிறான் என்ற எண்ணமும் ஐயோ நடந்து கொண்டு இருக்கிறதே என்ற பரிதவிப்பும் கலந்து கட்டி அடித்தது...மனதுக்குள் என்னவோ பயமாக அவளுக்கு இருந்தது...பட்டாம்பூச்சி எல்லாம் பறக்க அவனோ அவளின் உணர்வுகளை படித்து கொண்டே வந்தவன் ,"என்ன பயமா இருக்கா???" என கேட்க
"மாமா" என அவள் பயந்து கூற அவனோ அவள் அருகே படுத்து கொள்ள அவனுக்கு கோபம் வந்து விட்டதோ என பயந்து," கொஞ்சம் தான் பயம் மாமா" என கூற ,
அவனோ அவளுடைய தலையில் கொட்டி ,"வெறும் வாய் தான் வேறு ஒன்னும் இல்லை" என்றவன் ,"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்று அவன் கூறினான் என்ன என அவள் பார்க்க ,"நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் நாம இப்படியே இருப்போம்" என்க
அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது தான் பயந்ததால் தானோ அவன் தன்னை விட்டு விலகி இருக்கிறான் என எண்ணி ,"மாமா" என கூற ,
"எனக்கும் என்னுடைய கனவை தேடி போக ஒரு வருஷம் தேவைப்படுது நீயும் படிச்சு முடிக்க ஒரு வருஷம் ஆகும் அதுவரைக்கும் நாம இப்படி இருக்கலாம் புரியுதா???இந்த ஒரு வருட காலமும் நீ என்னை புரிஞ்சிக்கவும் நான் உன்னை புரிஞ்சுக்கவும் சரியா இருக்கும் அப்புறம் இந்த ஒரு வருஷம் நாம ஜாலியா காதலிக்கலாமே" என்று அவன் கூற ,
"ஏன் மாமா அப்படி சொல்றீங்க" என்று அவள் கேட்கவும் ,"திடீர்னு குழந்தை குட்டின்னு ஆயிடுச்சின்னா மறுபடியும் உன்னுடைய படிப்பு தடைப்படக்கூடாது இல்ல படிச்சு முடிச்சிடு நீ எந்த ஒரு காரணத்துக்காகவும் உன்னோட படிப்பு தடைப்படக்கூடாது அவ்வளவுதான்" என்று அவன் கூறினான்..
அதைக்கேட்டு அவளுக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் வெளியே ,"மாமா சாமியார் மாதிரி பேசுறீங்க மாமா நிஜமா சொல்றேன்" என்று அவள் கூறவும் அதைக் கேட்டாலும் சிரித்துக்கொண்டு அவளை," நானா டி சாமியார் "என்று கேட்டான்...
"ஆமாம் நீங்க தான்" என கூற அவனோ அவளை இறுக்கமாக அணைத்து கொண்டு கண்களை மூடி படுத்து கொள்ள அவனின் தாடியில் உள்ள ரோமம் அவளை குத்தியது...
அது வேறு கூச செய்ய எதுவுமே நடக்கவில்லையே என கருதி அவளோ ,"ஏன் மாமா 90ஸ் கிட்டாவே இருக்கீங்க போங்க மாமா உங்க கிட்ட போய் நான் ரொமான்ஸ் எதிர்பார்த்தேன் பாருங்க என்னை சொல்லணும்" என்று அவள் புலம்பிக்கொண்டே இருக்க அதை கண்களை மூடி கேட்டவனோ," உன்னை இறுக்கமா டைட்டா கட்டி புடிச்சி இருக்கேன் உன்னோட கழுத்துல என்னோட முகம் புதைஞ்சிருக்கு உன்னோட லிப்ஸுக்கும் என்னோட லிப்ஸுக்கும் இடையே ஒரு இன்ச் கூட இடைவெளி கிடையாது உரசிட்டு தான் இருக்கு என் உடலும் உன் உடலும் உரசிட்டு தான் இருக்கு இப்படி படுத்து கிடக்கிறேன் இதுக்கு மேல உனக்கு என்னடி ரொமான்ஸ் வேணும் இதைவிட உனக்கு ரொமான்ஸ் வேணுமா??? அதையும் காட்ட நான் ரெடி இப்போ இல்ல வெயிட் பண்ணு" என்று அவன் ஹஸ்கி வாய்சில் கூறினான்.. அதைக் கேட்டு அவளுக்கோ அவன் விரிவாக அவர்கள் படுத்து கிடக்கும் காட்சியை கூறவும் அவளுடைய காது கூச்சத்தில் சிலிர்த்தது...
அவன் சொன்னது போல அவளை அடுத்த நாள் காலை கல்லூரியில் கொண்டு போய் விட்டான்... அவனை மாணவர்கள் பிடித்துக் கொள்ள அவர்களிடம் இனிமையாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தான்...
பிறகு என்ன ஒரு வருடம் இருவரும் அழகாகக் காதல் புரிந்தனர்...கணவன், மனைவி என்ற அங்கீகாரம் இருந்தாலும் காதலர்களாக சுற்றி திரிந்தனர்...
கார்த்திகாவுக்கு அவளுடைய வாழ்க்கையே வண்ணமயமாக இருந்தது.. இவனை விட ஒரு சிறந்த கணவன் அவளுக்கு கிடைத்திடவே மாட்டான் என்பது போல ஒவ்வொரு விஷயத்திலும் அவளுடைய நலன் மட்டும்தான் அவனுக்கு முக்கியமாக இருந்தது சிறுவயதிலிருந்தே அப்படித்தான் அவளுக்கு என்ன வேண்டும் அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என அவனுக்கு நன்றாகத் தெரியும் ...
அப்படி இருக்க ரம்யா கூறியது போல முதல் காதல் தோல்வியில் முடிந்த ஆண்கள் அவர்களுக்கு இரண்டாவதாக கிடைத்த வாழ்கையில் வரும் பெண்களை தேவதை போல தாங்குவார்கள் என்பதை கண்கூடாக அவள் பார்த்து கொண்டு இருந்தாள்...
இப்படி அவன் அவனுடைய தொழிலையும் அவள் அவளுடைய படிப்பையும் படித்து கொண்டு இருந்தனர்...
ஒரு வருடம் போனதே தெரியவில்லை... பெரியவர்களும் இவர்கள் இருவரும் ஒரு சேர்ந்து விட்டார்கள் என்று தெரிந்தது முதல் அவர்களை ஒரு கேள்வியும் கேட்பதில்லை அவர்கள் எங்கு சென்றாலும் கேட்பதில்லை குழந்தை என்ற பேச்சை பாட்டி எடுப்பதில்லை பாட்டிக்கு தேவையானது அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஒன்று மட்டும் தான் அதற்காகத்தான் பாட்டி குழந்தை வேண்டும் என இவளிடம் கூறிக்கொண்டு இருந்தார் ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று அறிந்ததும் அவர்கள் எண்ண படி வாழட்டும் என அவரும் இருந்து விட்டார்...
இதோ இன்று தான் அவள் கல்லூரியின் கடைசி நாள் மாணவர்கள் எல்லாம் இன்று தான் கடைசி நாள் பிரிய போகிறோம் என வருந்தி கொண்டிருக்க கார்த்திகா மட்டும்," இன்று முதல் மாமா கூட இருக்க போகிறோம்" என எண்ணி மகிழ்ச்சியாக கனவு உலகத்தில் இருப்பதை பார்த்த ரம்யா ,"இங்க பாரு ஒவ்வொருத்தையும் மூக்கால அழுதுட்டு இருக்கானுங்க இவளை பார்த்தியா பல்லக் காட்டிட்டு இருக்கா!!! அதாவது மேடம் நம்ம கூட தான் இருப்பாங்க ஆனால் 24/7 திரு சாரை பற்றி தான் நினைச்சுட்டு இருப்பா...
ஏண்டி அவர் கூடவே தான் இருக்க இப்பவாச்சும் எங்களை கொஞ்சம் நினைச்சு பாருடி உன்னை எல்லாம் போன வருஷமே என்னோட பிரண்ட் லிஸ்டில் இருந்து தூக்கணும்னு நினைச்சேன்.. ஏதோ மனசு கேட்காம உட்கார வைத்திருக்கிறேன் இப்பவும் எங்களை நினைச்சு பாக்காம நீ கனவுல மிதந்துட்டு இருந்த சத்தியமா சொல்றேன் வயிறு எரிஞ்சு சொல்றேன் நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட" என்று அவள் கூறவும் அதைக் கேட்டு கார்த்திகா சிரித்தாள்...
"ஏய் நீயும் என்னை மாதிரி கல்யாணம் பண்ணுடி அப்பத்தான் நான் எப்படி பீல் பண்றேன்னு உனக்கு புரியும் சும்மா என்னையவே குறை சொல்லிட்டு இருக்காத நாம என்ன பிரியவா போறோம் நம்ம சென்னைல தான் இருக்க போறோம் எப்ப வேணாலும் பார்த்துக்கலாம் அதுக்காக அழுதுட்டு இருந்துட்டு காரியம் இருக்கா ஒன்னும் கிடையாது அதனால எல்லாரும் ஜாலியா இருங்க" என்று அவள் கூறவும் நண்பர்களோ அதைக் கேட்டு சரி என்று கூறினார்கள்...
இதோ அவன் கல்லூரி வாயிலில் அவளுக்காக காத்து இருந்தான் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் எப்படி கொண்டு சென்றான் என்று அவனுக்கு தெரியவில்லை... அவளிடம் ஏதோ பெரிய மனிதன் போல கூறிவிட்டான் ஆனால் இந்த ஒரு வருடத்தை கடத்த அவன் அரும்பாடு பட்டான் என அவனுக்கு தான் தெரியும் இனி அதற்கெல்லாம் வேலையே இல்லை இன்று தனது விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் அவன் இருந்தான்...
அதற்காக கல்லூரி வாயிலில் இருந்தே மனைவியை அழைத்துச் செல்ல முடிவு செய்து விட்டான்.. அவளோ வருவேனா என்று இருக்க அவனும் பொறுமையின்றி அவளை அழைத்து விட்டான் போனில் அவன் பெயர் ஒளிரவும்," ஏய் மாமா வந்துட்டாருனு நினைக்கிறேன் நான் போறேன்" என்று கூற
ரம்யாவோ ,"இங்கிருந்து போன செருப்பு பிஞ்சிடும் கடைசியா ஒரு செல்பி எடுத்துட்டு போவோம் வாய மூடிட்டு இரு குதிக்கிறா இனி வாழ்க்கை முழுசும் அவர் கூடத்தான் இருக்க போற ஒரு அஞ்சு நிமிஷம் எங்க கூட ஸ்பென்ட் பண்ணு ஒன்னும் குறைந்திட மாட்ட " என்று கூறியவள் தன் நண்பர்களோடு சேர்ந்து ஒரு செல்பி எடுக்க கார்த்திகாவும் அவர்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டாள்...
போட்டோ எடுத்ததும் தான் தாமதம் ஒரே ஓட்டமாக கார்த்திகா ஓடி விட்டாள்... பின்னால் இருந்து ரம்யா கெட்ட வார்த்தைகளில் திட்ட அது எதுவும் அவளுடைய காதுகளில் விழவில்லை அவள் கண்ணிலும் கருத்தில் மனதிலும் திரு மட்டும்தான் நிறைந்து இருந்தான்...
