வேந்தன் : 19

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 19

என்னதான் அவளை அவன் சமாதானம் செய்தாலும் அவள் சமாதானம் அடைவது போல இல்லை அவளால் தான் அவனுக்கு இந்த நிலைமை அவன் இதனால் வரை சம்பாதித்து வைத்த பெயரை அவப்பெயர் ஆக்கி வைத்து விட்டேன் என்று நாள்தோறும் அழுது கொண்டே இருந்தாள்...

அதிலும் அவன் வேலையை விட்டு விட்டான் என்றதும் அவளுக்கு மேலும் அதிர்ச்சியாக தான் இருந்தது...

" நீங்க சொல்லுங்க என்னால தானே வேலையை விட்டீங்க நான் தானே இப்படி உங்களை ஆக்கிட்டேன்" என்று அவன் கூற, அதைக் கேட்ட அவனும் ,"ஏய் லூசு நான் இந்த பிரச்சனை வரலைன்னாலும் ஒரு மாசம் தான் நான் வேலை செஞ்சு இருப்பேன் அதனால அது இதையும் போட்டு குழப்பிக்காத ஒரு மாசத்துக்கு முன்னாடியே நிக்கிறேன் அவ்வளவுதான்" என்று அவன் கூற அப்போதும் அவள் மனம் மாறவில்லை...

"இல்லை நீங்க எனக்காக பொய் சொல்றீங்க" என அதற்கும் வருத்தப்பட்டாள்...அவள் வருத்தப்படும் விதமாக தான் தினமும் ஏதாவது நியூஸ் போட்டு அவளை அவர்கள் கொன்று கொண்டிருந்தார்கள் இவர்கள் இருவரும் கணவன், மனைவி என கல்லூரியின் தரப்பு கூறினாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர்...

அவளை எப்படி சமாதானம் செய்வது என அவனுக்கு தெரியவில்லை அவளுக்கே வருத்தம் என்றால் அவனுக்கு அதைவிட வருத்தம் இருக்கத்தான் செய்தது.. ஆனால் அவனுடைய வருத்தத்தை காட்டி அவளை மேலும் சங்கடப்படுத்த அவன் விரும்பவில்லை அதற்காக அவன் ஒரு விஷயத்தை செய்தான்...

கல்லூரியில் இருந்து நின்றதும் கிட்டத்தட்ட சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பிரச்சினை துவங்கி நியூஸ் பேப்பரில் நியூஸ் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது...

இந்த ஒரு வாரத்தில் அவன் அவனுடைய தொழிலான மென்பொருள் நிறுவனம் ஒன்றை மிக பிரமாண்டமாக புதிய சென்னை கிளையை துவங்கி விட்டான்... ஆம் சிறிய அளவில் பிறரை வைத்து நடத்தி வந்தான் இப்போது பெரிய அளவில் செய்ய தீர்மானித்து விட்டான்...

ஆம் வேந்தன் இன்போடெக் நிறுவனம் புதிதாக சென்னையில் ஒரு கிளையை துவங்கி விட்டது... அப்படி இருக்க அந்த விழாவிற்கு ராமகிருஷ்ணன் அவருடைய மனைவி இவனுடைய தாத்தா, பாட்டி, கல்லூரி முதல்வர், அவளுடைய தோழி ரம்யா மற்றும் அவனுடைய மாணவர்கள் என அனைவரும் வந்திருந்தார்கள் அவனுக்கு வேண்டப்பட்ட அனைவரும் அங்கு கூடி இருந்தனர்...

ராமகிருஷ்ணன் முதல் பாட்டி வரை அனைவருக்கும் நடந்த விஷயம் தெரிந்தது... அவர்களுக்கும் இப்படி ஆகிவிட்டது என்ற வருத்தம் இருந்தாலும் இவனையும் இவரையும் பற்றி தெரியும் ஆதலால் பெரிதாக அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை...

ஆனால் பாட்டிக்கு இந்த செய்தியால் வாய் நிறைய சிரிப்பாக இருந்தது...பின்ன அவருடைய இரு பேர குழந்தைகளும் காதலோடு இருப்பது பேப்பரில் வந்து இருக்க அதை உலகம் முழுவதிலும் உள்ள ஆட்கள் பார்த்து என்ன கூறினாலும் பாட்டிக்கு கவலை இல்லை.. ஆனால் அந்த படத்தை பார்த்த அவருக்கு அவ்வளவு சந்தோஷம் அந்த நியூஸ் பேப்பரில் வந்த படத்தை பேப்பர் கட் வேறு வைத்து இருக்கிறார்...

ஆம் இருவரும் சேர்ந்து விட மாட்டார்களா என எண்ணிக்கொண்டிருந்த அவருடைய கண்களுக்கு மிக குளுமையாக அந்த காட்சி இருந்தாலும்," கிரகங்க இப்படியா நியூஸ்ல வர்ற மாதிரி நடக்கிறது பாரு எத்தனை பேரு கொல்லி கண்ணு என்னோட பசங்க மேல பட்டு இருக்குமோ தெரியலையே நேர்ல பார்த்தா சுத்தி போடணும்...நாலு செவுத்துகுள்ள பண்ண வேண்டிய விஷயத்தை இப்படி பேப்பர்ல வர மாதிரி செஞ்சுட்டாங்களே" என்று வெட்கத்தோடு அந்த படத்தை பார்த்து ரசித்தார் பாட்டி...

அதனால் செய்தி வந்ததில் மகிழ்ந்தது என்னவோ மயிலாத்தா தான்...அப்படி இருக்க அவனின் வேந்தன் இன்பொடெக் லோகோவை தன் தாத்தாவின் கரங்களால் திறந்தான்...

பிறகு குத்து விளக்கு ஏற்ற அவனுடைய மனைவி, பாட்டி மற்றும் ராமகிருஷ்ணனின் மனைவி என அனைவரையும் அழைத்து சிறப்பாக அந்த நிறுவனத்தை துவங்கி விட்டான்...அனைவருக்கும் இது அவனுடைய குடும்பம் என புரிந்தது..

பிறகு அங்கு கூடி இருந்த அனைவரும் ஆர்ப்பரிக்க அன்று எந்த பத்திரிக்கையாளர்கள் இவனை தவறான கண்ணோட்டத்தில் செய்தி வெளியிட்ட நேரம் அவர்களை எல்லாம் அவன் அழைத்து இருந்தான்...

அவர்களும் சரமாரியாக புகைப்படம் எடுத்து தள்ள அனைத்து போட்டோகளிலும் தன் மனைவியை தன் கை வளைவில் வைத்து சிரித்த முகத்தோடு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தான் திரு.. அதை பார்த்த பெரியவர்களின் கண்கள் நிறைந்தது...

பத்திரிகையாளர்கள் அவர்கள் இருவரையும் ஃபோட்டோ எடுத்து முடித்த பின் பத்திரிகையாளர்களை பார்த்த அவன் தன் மனைவியை தன் அருகிலேயே அமர வைத்து," நான் உங்களையெல்லாம் எதுக்காக வர சொல்லி இருக்கேன்னா எங்க வேந்தன் இன்போடெக் மாநில அளவில் சிறு சிறு புராஜக்ட்டுகள் செஞ்சிட்டு வந்துச்சு இனி அதை பெருசா பண்ணலாம்னு இருக்கோம் அதை பத்தி உங்ககிட்ட சொல்லலாம் அப்படிங்கிறதுனால தான் நான் உங்களை அழைத்து இருக்கேன்" என்று கூற

பத்திரிகையாளர்கள் அனைவரும் முகத்திலும் போனவாரம் தான் கிசுகிசு இவர்கள் இருவரை பற்றியும் வந்திருந்தது அவர்களுக்கு தெரியாது..ஒரு சிலருக்கு தெரியும் இருந்தாலும் கிசுகிசு வேண்டும் என்றே எழுதினர்..

அவர்களை பொறுத்தவரை திரு ஒரு பேராசிரியர் அவருடைய மாணவி கார்த்திகா இருவரும் தன்னிலை மறந்து இருக்கும் தருணத்தை போட்டோ எடுத்து யாரோ தர இவர்களும் விஷயத்தை வெளியிட்டு விட முடிவு செய்திருந்தனர்...

அப்படி இருக்க, ஒரு வார காலமும் ஏதாவது பேப்பரில் ஏதாவது ரூபத்தில் அவர்களாகவே அவர்களுக்கு தெரிந்தது போல இஷ்டத்துக்கு இவர்களைப் பற்றி கதை எழுதி வந்தனர்.. அதை எல்லாம் பார்த்தும் கண்டு கொள்ளாமல் தன் வேலையில் முனைப்பாக இருந்தான்... அவளோ அதை எல்லாம் படித்து விட்டு," இனி நான் காலேஜ் செல்ல மாட்டேன்" என்று அமர்ந்து விட்டாள் அப்போதும் அவளை அவன் கண்டிக்கவில்லை அவனும் சரி அவள் தேறட்டும் என விட்டுவிட்டான்..

அப்படி இருக்க இவர்களோ அமைதியாக இருக்காமல்," வாத்தியாரும் மாணவியும் ஓட்டம் தலைமறைவு" என்று கண்ணா பின்னா என எழுத துவங்கி விட்டனர்...

அதை நிறுத்த தான் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்தான்.. எந்த இடத்தில் வீழ்ந்தோமோ அதே இடத்தில் எழுவது இதுதான் அவனுடைய தாரக மந்திரம் அப்படி இருக்க, இவர்கள்தானே இவன் மீது இவள் மீதும் கரியை வாரி பூசியது என எண்ணித்தான் அடுத்த மாதம் துவங்க இருந்த அவனுடைய இந்த துவக்க விழாவை இன்று துவங்கி விட்டான்...

அவன் பேச ஆரம்பிக்கவும் ,"அப்போ இவங்க உங்க மனைவியா நீங்க ரெண்டு பேரும் தானே அந்த ரிசோட்ல காலேஜ் டூர்ல ஒண்ணா இருந்தது" என்க

"இப்போவும் நாங்க ஒண்ணா தான் இருக்கோம்" என்றான் அவன் நக்கலாக

"என்ன சார் நியூஸ் வந்த ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா???" என நக்கலாக ஒருத்தன் கேட்டான்...

"நான் தாலி கட்டின பொண்டாட்டியை எத்தனை தடவை சார் கல்யாணம் பண்ணிக்கிறது எங்க கல்யாணம் எல்லாம் ஏற்கனவே ஆயிடுச்சு எங்களுக்கு கல்யாணம் ஆகி எட்டு மாசம் ஆச்சு" என்க

அதை கேட்ட அவர்கள் அதிர ,"அதுதான் காலேஜ் டூர் போய் இப்படி இருந்திங்களா???" என்க

அவளுக்கு அதை கேட்டு கோபம் வந்தது அவள் ஏதோ சொல்ல வர அவளின் கையை பிடித்து தடுத்தவன் ,"ஆமாம் சார்" என்க

"என்ன சார் ஒரு இர் ரெஸ்பான்சிபில் ஆன்சர் சொல்றீங்க நீங்க ஒரு ப்ரொபசர் என்னதான் அவங்க உங்க வைஃப் ஆக இருந்தாலும் இத்தனை மாணவர்கள் முன்னாடி நீங்க ரெண்டு பேரும் இப்படி இருந்தது தப்புன்னு உங்களுக்கு தோணலையா" என அவர்கள் கேட்கவும் அதைக் கேட்ட அவன் ,"நடந்தது என்னன்னு தெரியாம தீர விசாரிக்காமல் நியூஸ் போடறது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா???" என அவன் கேட்டான்..

"பத்திரிகைக்காரங்களுக்குன்னு ஒரு தர்மம் இருக்கு சார் அதை மீறி நடக்காதீங்க காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யணும்னு நினைக்காதீங்க நீங்க தான் ட்ரெண்ட்ல இருக்கணும்னு சொல்லி யார் குடியை வேணாலும் கெடுக்கலாம் அப்படின்னு நினைக்காதீங்க" என்று அவன் கூறினான்...

"அப்போ என்ன நடந்ததுன்னு சொல்லுங்க" என்று கூற

"இது கூட தெரியாம தான் ஒரு வாரமா என்னையும், இவளையும் பத்தி அசிங்கமா எழுதிட்டு இருந்தீங்களா??? சிலருக்கு தெரிஞ்சே எழுதி இருக்காங்க இதை என்ன சார் சொல்றது???" என்று கேட்டவன் நடந்த விஷயத்தை கூற அதைக் கேட்ட அவர்களோ அவர்களிடம் மன்னிப்பு கேட்டனர்...

பிறகு அவனோ," இத உங்களுக்கு தெளிவுபடுவதற்காக எல்லாம் நான் சொல்லல எனக்கும் என்னை சுற்றி இருக்கவங்களுக்கும் நடந்தது என்னன்னு தெரியும் அது எனக்கு போதுமானது உங்களுடைய அனுமானம் எல்லாம் என்னை எதுவும் செய்யாது.. அண்ட் இப்ப நான் ப்ரொபசர் கிடையாது..

ஷி இஸ் மை வைஃப் நான் ப்ரௌடா சொல்லுவேன் இப்போ என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தன்னை பற்றி கேவலமாக எழுதிய அந்த பத்திரிகையாளனை பார்த்த திரு உங்க பேப்பர்ல கவர் பேஜில் இந்த பிக்சரை போடுங்க" என்று கூறி அனைவரும் முன்னாலும் அவளுக்கு முத்தம் கொடுத்தான் திரு...அதை கண்டு அனைவரும் அதிர,

"வேந்தன் இன்போடெக் ஓனர் திருவேந்தன் அவருடைய நிறுவன துவக்க விழாவில் அவருடைய மனைவியான கார்த்திகா திருவேந்தனை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் முத்தம் கொடுத்தார் அதை கண்டு பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அப்படின்னு கேப்சன் வைங்க" என்று அவர்களுக்கு எல்லாம் செருப்படி பதிலை கொடுத்தான் அவன்...

அதை செய்த போது தான் அவன் மனம் ஆறியது...அவன் இப்படி செய்வான் என யாருமே எதிர்பார்க்கவில்லை இவ்வளவு ஏன் அவனுடைய மனைவி கூட எதிர்பார்க்காத தருணத்தில் அவன் இதை செய்ய அங்கு கூடியிருந்த மாணவர்களோ ஆர்ப்பரிக்க துவங்கி விட்டனர்...

பிறகு தன் மனைவி மற்றும் தன் குடும்பத்தை அழைத்து கொண்டு சென்று விட்டான் திரு...

எல்லாம் நல்ல படியாக துவங்கி விட்டது...வீட்டுக்கும் வந்ததும் தன் கணவனை ஓடி சென்று அணைத்து கொண்டாள் கார்த்திகா...

ஏனெனில் தவறே என்றாலும் தவறுதலாக தவறான வார்த்தைகளால் அவர்களை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு சூடு வைக்கும் விதத்தில் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்ததில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டானது...

அதை எப்படி வெளிக்காட்டுவது என தெரியாமல் அவனை அணைத்துக் கொள்ள ,"கரும கருமம் இரண்டும் என்ன பண்ணுதுங்க எல்லாம் நாலு செவத்துக்குள்ள பண்ண வேண்டியது எல்லாம் நாலு பேர் முன்னாடியே பண்றது என்ன ஜென்மங்கள் என்று தெரியவில்லை" என்று பாட்டி குமற துவங்கி விட , அதை பார்த்து சிரித்த அவனோ ,"நீ தானே நாங்க ஒன்னு சேரலன்னு சொல்லி அழுதுட்டு இருந்த இப்போ சேர்ந்திருந்தாலும் திட்டற உனக்கு என்னதான் வேணும்???" என சிரித்தபடி கேட்டான் அது கேட்டு அவரோ ,"உள்ள போய் பண்ணுங்க டா" என மீண்டும் திட்ட அங்கு சிரிப்பொலி நிறைந்தது...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top