வேந்தன் : 18
அத்தியாயம் : 18
அவளை அறைக்குள் கொண்டு செல்லும் போதே போதை தலைக்கு ஏறி மட்டையாகி விட்டாள்...அவன் படுக்க வைக்கும் போது கூட ,"மாமா என்னை ஏத்துக்கோங்க மாமா நீங்க இல்லாமல் என்னால இருக்க முடியாது...உங்களுக்கும் என்னை பிடிக்கும்னு தெரியும் நான் சின்ன பொண்ணுன்னு ஒதுங்கி இருக்காதீங்க மாமா எனக்கு உங்க வயசு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை" என உலற இவள் இப்படி ஒரு காரியத்தை அனைவரும் முன்னும் செய்து விட்டாலே என்ற ஆத்திரம் இருந்தாலும் அவள் உலறுவதைப் பார்த்து அவளாக இதை செய்யவில்லையே என எண்ணினான்... ஆனால் உலறும் போதும் கூட அவள் பேசிய வார்த்தைகள் அவனுடைய மனப் பெட்டகத்தில் பதிந்து போனது...அவள் மீது காதல் கசிந்து உருகியது...
"பண்றதெல்லாம் பண்ணிட்டு எப்படி தூங்குகிறா என்று பார் இதுல யாராவது பார்த்துட்டா வழி தெரியாம வந்துட்டேன்னு வேற சொல்ல சொல்லி ஐடியா எல்லாம் என் நேரம்* என எண்ணினான்...
எதையெல்லாம் பொத்தி பாதுகாக்க வேண்டும் என எண்ணினானோ அதை எல்லாம் மொத்தமாக அவள் போட்டு உடைத்து விட்டாள் அதைப் பற்றி கவலை எல்லாம் இல்லை அவனுக்கு அவளுடைய மனைவி தானே ஆனால் இடம் பொருள் ஏவல் ஒன்று உள்ளது அல்லவா???
எந்த இடத்தில் எதற்காக வந்திருக்கிறோம் இந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது... அவளின் செய்கை அவன் மீதுள்ள அதீத காதல் தான் காரணம் என்றாலும் வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே என்ற எண்ணம் எல்லாம் இல்லாமல் இல்லை... இனி இதைப் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை.. ஆனால் யார் இதை செய்தார்கள் என அவனுக்கு தெரிய வேண்டும் அவள் உண்ட உணவு தான் ஏதோ பிரச்சனையை கொடுத்திருக்கிறது என அவனுக்கு புரிந்தது அவள் உறங்கி விட்டாள் என்பதை ஊர்ஜிதம் செய்ததும் அவன் அந்த அறையை விட்டு வெளியேறினான்...
அங்கு மாணவர்கள் சென்றுவிட அங்குள்ள வேலையாட்கள் அனைவரும் உணவு பதார்த்தங்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்...
அந்த நேரத்தில் ரிசார்ட் மேனேஜரை அழைத்த அவன் ,"நடந்த சம்பவத்தை பார்த்திருப்பீங்க என்னோட வைஃப் சாப்பிட்ட ஃபுட்ல ஏதோ மிக்ஸ் பண்ணி இருக்காங்க அது யாரு அது யாரு செஞ்ச அப்படிங்கறது எனக்கு தெரிஞ்சு இருக்கணும் இல்ல அப்படின்னா கண்டிப்பா உங்களை சும்மா விடமாட்டேன்" என்று எச்சரிக்கை செய்து விட்டு அவனுடைய அறைக்குள் வந்து அவள் அருகே படுத்தவன் அவளை பார்க்க அவளோ தன் உடலை சுருக்கி ஒரு குழந்தை போல படுத்து இருந்தாள்...
" பார்க்க புள்ள பூச்சி மாதிரி இருந்துட்டு செஞ்சிருக்க வேலையை பாரு" என மனதுக்குள் பேசியவன் அவள் அருகே சென்று படுத்தான்...அவளை கண்டவன் மனம் காதலால் நிறைய அவளது நெற்றியில் தன் இதழ்களை பதித்தவன் மனம் அவள் இதழோடு இதழ் கவி பாடிய தருணத்தை எண்ணி அகம் மகிழ்ந்தது...
மெல்ல அவளுடைய முகத்தை பார்த்தவன் அவளுடைய கண்களில் தன் இதழ்களை பதித்தான் பிறகு கன்னம் பிறகு மென்மையாக அவளுக்கு வலிக்கவே கூடாது என்று அவளுடைய இதழில் முத்தமிட்டவன் அவளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான்...
அதற்கு மேல் செல்ல அவனுக்கும் ஆசை தான் ஆனால் அவனாகவே அவனுக்கு ஒரு தடை போட்டு வைத்திருக்கிறான் அதை மீற அவனுக்கு விருப்பமில்லை மேலும் அவள் இந்த நிலையில் இருக்கும் பொழுது இது தேவை இல்லை என அவனுக்கும் தோன்றியது...
மறுநாள் காலை இனிய காலையாக அமையாது என அவன் கனவிலும் எண்ணி இருக்க மாட்டான்...
மறுநாள் காலை அழகாக விடிய மிக மிக கடுப்பாக அவன் அமர்ந்திருந்தான் திரு... அவன் முன்னே ஒரு தினசரி நாளிதழ் இருந்தது... அவளோ அடித்துப் போட்ட போல உறங்கியவள் மெல்ல உறக்கம் கலைந்து எழுந்தவள் முன்னால் அந்த பேப்பர் இருக்க அந்த பேப்பரை பார்த்தவள் அதிர்ந்தாள்...
முதல் பக்கத்திலேயே அவனுடைய படத்தையும் அவளுடைய படத்தையும் போட்டு அதில் இருவரும் இதழோடு இதழ் கவி பாடிய படத்தையும் போட்டு ,"டூர் சென்ற இடத்தில் மாணவியோடு பேராசிரியர் உல்லாசம்" என்ற கேப்சனில் செய்தி வந்திருந்தது...
அதைப் பார்த்தவள் அதிர்ந்தாள் அவனோ மிகவும் ருத்ரமூர்த்தியாக அவள் முன்னால் அமர்ந்திருக்க ,"மாமா இது" என்று கூற அவனோ கையை காட்டி பேசாதே என்பது போல தடுத்தவன் ,"சீக்கிரம் ரெடி ஆகுற வழியைப் பார் 8 மணிக்கு இங்கிருந்து பஸ் கிளம்பும்" என்று மட்டும் கூறினான் அவளுக்கு பேச்சே எழவில்லை...அவளிடம் அதை மட்டும் கூறி விட்டு அவன் அறையை விட்டு வெளியேறி விட்டான்...
அவன் சொன்னது போல தயாராகியவளுக்கு நேற்று இரவு என்ன நடந்தது என்று கூட நினைவு இல்லை...எப்படி எப்படி என பல கேள்விகள் அவளுக்குள்ளே கேட்டு நொந்து போனவளுக்கு எந்த விடையும் கிடைக்கவில்லை...
அனைவருக்கும் நேற்று நடந்ததும் இன்று நடந்ததும் அதிர்ச்சி தான் யார் இப்படி நியூஸ் கொடுத்திருப்பார்கள் என யாருக்குமே தெரியவில்லை அவன் இதனால் வரை சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர் அனைத்தும் இந்த ஒரே விஷயத்தில் தூள் தூளாகி போனது என்று கூறலாம் அது அவனை தாக்கியதும் என்றும் கூறலாம்... அதுவும் ஒரு ஆசிரியராய் இப்படி ஒரு அவப்பெயரை அவன் கனவிலும் எண்ணி இருக்க மாட்டான்....
அனைவருக்கும் டூர் வந்த போது இருந்த சந்தோஷம் இப்பொழுது இல்லை அனைவரும் முகமும் வருத்தத்தில் நிறைந்து இருந்தது... கார்த்திகாவின் முகம் அழுது அழுது வீங்கி இருந்தது...
வரும் வழியில் எல்லாம் ,"நான் ஏண்டி அப்படி நடந்துகிட்டேன்" என்று என்ன நடந்தது என ரம்யாவிடம் விசாரித்தவள் கூற ரம்யாவோ," நீ சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் இந்த மாதிரி எல்லாம் ஆச்சு அதுலதான் ஏதோ மிக்ஸ் பண்ணி கொடுத்து இருக்காங்க" என்று கூறியவள் ,"இதுல உன் தப்பும் எதுவும் இல்லை சாரோட தப்பும் எதுவும் இல்லை" என்று கூறினாள்...
ரம்யாவுக்கு கார்த்திகாவின் மீது அதீத கோபம் தான் இருந்தாலும் சூழ்நிலை கருதி தன் கோபத்தை அடக்கி கொண்டாள்... மேலும் ,"எங்ககிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்கு தோணல தானே" என அவள் மனம் கேட்காமல் கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அழுகை அழுகையாக வந்தது...அவள் மீதே சரிந்து அழுதாள் கார்த்திகா.. ரம்யாவுக்கு அதை கண்டு தன் தோழியின் நிலையை கருத்தில் கொண்டு அவளை ஆறுதல் படுத்த நினைத்தாள்..
தன்னால் தன் புருஷன் இப்படி அவமானப்பட்டு விட்டானே என நினைக்கும் பொழுது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது அவனும் கல் போல அந்த வாகனத்தில் அமர்ந்து வந்திருந்தான்.. எப்படி சென்னை வந்து சேர்ந்தனர் என யாருக்குமே தெரியவில்லை சென்னை வந்ததும் கல்லூரி முதல்வர் முன்னால் நின்று கொண்டிருந்தான் திரு...
அவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை நடந்த விஷயத்தின் சாராம்சம் அவருக்கு புரிந்தது ஆனால் கல்லூரியின் பெயர் இந்த ஒரு விஷயத்தால் கெட்டுவிட்டதே என்று வருத்தத்தில் அவர் இருந்தார்...
"திரு நான் அந்த ரிசார்ட் மேல கேஸ் கொடுக்கலாம்னு இருக்கேன் அங்க என்ன நடந்தது என்று தெரியவேண்டும் இல்லையா???" என்று கூற," சார் நானும் வார்ன் பண்ணிட்டு வந்து இருக்கேன் சார்" என்றான்...
அவனுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை...அதற்குள் போலீஸ் வாகனம் ஒன்று கல்லூரிக்குள் நுழைந்தது இதுபோன்ற விஷயத்தை கேள்விப்பட்ட சமூக சீர்திருத்தவாதிகள் சிலர் திரு மீது கேஸ் கொடுத்திருக்க அதைப்பற்றி விசாரிக்க போலீசார் வந்திருந்தனர்...
போலீசார் விசாரிக்கவும் கல்லூரி முதல்வர் கல்லூரியின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தார் அவர் நடந்த விஷயத்தை அப்படியே கூறினார் அவருக்கு திருவுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதிலும் அவர் குறியாக தான் இருந்தார்...
ஆனால் நேற்று நடந்த சம்பவமும் போலீசார் வருகையும் மாணவர்களை உசுப்பி விட மாணவர்களுக்கு ஒரே நாளில் ஹீரோவான திருவை விட்டுக் கொடுக்க மனமில்லை என்ன ஆனாலும் சரி நம்ம சாரை கூட்டிட்டு போக விடக்கூடாது என மாணவர்கள் கூடி பேசி போலீஸ் வாகனத்தின் அருகிலேயே நின்று கொண்டனர் பெருங்கூட்டம் அங்கு திரண்டிருந்தது...
போலீசாரோ," உங்க பக்கம் எனக்கு புரியுது ஆனா எதுக்கும் ஸ்டேஷன் வரை வந்துட்டு போயிடுங்க" என்று கூற திரு அவன் மீது தவறு ஒன்றும் இல்லை ஆதலால் போலீசாரோடு செல்ல முடிவு செய்தான்...
விஷயம் அறிந்த கார்த்திகா மேலும் நொந்து போனாள்... அவளை எத்தனை ஆறுதல் படுத்த நண்பர்கள் முனைந்தாலும் அவளால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
அந்த தருணத்தில் பாரில் தன் நண்பர்களோடு அமர்ந்திருந்த ரமேஷ் ,"என்னடா பொட்ட பசங்களா இப்போ பார்த்தீங்களா அந்த வாத்தியார் வேஷம் கலைந்து போய் சும்மா தமிழ்நாடு முழுசும் நாறிட்டு இருக்கு இதுதான் இந்த ரமேஷ் கிட்ட மோதினா இப்படித்தான் நடக்கும்" என்று கூற,
அவனது நண்பர்களோ அதிர ,"நான்தான் பண்ணினேன் நான் தான் இதுக்கெல்லாம் காரணம் நான் தான் அவ குடிச்ச ஜூஸ்ல சரக்கு கலந்து கொடுத்தேன்" என்று கூலாக கூறவும் நண்பர்கள் அதிர்ந்தனர்...
அதில் ஒருவன் மட்டும் தன் நண்பன் செய்த ஈன காரியத்தை கூறியே ஆக வேண்டும் என்று கருதி நேராக இந்த விஷயத்தை திருவுக்கு தெரிவிக்க வேண்டும் என கருதி திருவை காண சென்றான்...அங்கிருந்த கூட்டத்தை பார்த்தவன் அதிர்ந்தாலும் அவன் திருவை காண சென்றான்...
அவன் அந்த நேரம் கல்லூரியில் தான் இருந்தான்...ஆம் மாணவர்கள் முற்றுகை இட்டதால் அவனால் போலீஸ் வாகனத்தின் அருகில் கூட செல்ல முடியவில்லை போலீசார் கூட்டத்தை கண்டு மிரண்டு," உங்க சாருக்கு எதுவும் ஆகாது எங்களை நம்புங்க" என கூறினாலும் மாணவர்கள் அதைக் கேட்க தயாராக இல்லை...
அவர்களோ ,"எங்க சார் எந்த தப்பும் செய்யல அவரை அரெஸ்ட் பண்ண நாங்க ஒத்துக்க மாட்டோம் ஏதோ ஒரு பேப்பர்ல ஏதோ ஒரு நியூஸ் வந்துச்சுன்னு சொல்லி எங்க சாரை அசிங்கப்படுத்துவதை நாங்கள் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டோம்" என்று கொந்தளித்து கூறினர் அதைக் கேட்டவன் மனமோ மாணவர்களின் அன்பை கண்டு நெகிழ்ந்து போனது...
அந்த சமயத்தில் திரு அருகே வந்த ரமேஷின் நண்பன் ,"சார் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும்" என கூறியவன் நடந்த விசயத்தை கூற அதை கேட்ட அவனோ அதிர்ந்தான்...
இந்த சிறுவயதில் எத்தனை பழி வெறி அவன் மனதில் ஊறி இருக்கிறது என நினைத்தவன் நேராக கல்லூரி முதல்வரிடம் சென்று ,"சார் இந்த விஷயத்தை செஞ்சது நம்ம ஸ்டுடென்ட் தான் அவன் என் பொண்டாட்டி கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினான் அதை நான் தடுத்து வார்ன் பண்ணினேன் அதுக்காக தான் இதை செய்திருக்கான்" என கூற அவருக்கு விஷயம் விளங்கியது உடனே ரமேஷ் அவனை டிஸ்மிஸ் செய்ய உத்தரவு இட்டார்... போலீசாருக்கு தெளிவாக யார் செய்தார் என்ற விசயமும் விளங்க அவனை அரெஸ்ட் பண்ண உத்தரவு கொடுத்தனர்...
அவ்வளவு ரம்யாவோடு சேர்ந்து அழுது கொண்டிருக்க ரம்யா எவ்வளவு சமாதானம் செய்தும் அவள் அழுது கொண்டிருக்க மாணவர்களுக்கு இடையே விசயம் கசிந்தது...ரமேஷ் தான் இதை செய்தான் என்றதும் அனைவரும் அதிர்ந்தனர்...
இந்த விசயம் ரம்யா மற்றும் கார்த்திகாவுக்கு தெரிய கார்த்திகா அதிர்ந்தாள்...எவ்வளவு வன்மம் மனதுக்குள் இருந்தால் இவன் இப்படி ஒரு காரியத்தை செய்து இருப்பான் என நினைத்த கார்த்திகாவுக்கு ஆத்திரம் தாளவில்லை...
தன்னால் தன் மாமா அசிங்கப்பட்டு நிற்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை சற்றும் யோசிக்கவே இல்லை அவள்," ரம்யா இங்கே போலீஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கு சொல்லு எனக்கு ஒரு கேஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கணும் " என்று கூறியவள் அவளை அழைத்துக்கொண்டு திருவிடம் கூட கேட்காமல் சென்றாள்...
அனைத்து விஷயத்திற்கும் பயப்படும் கார்த்திகா தன் கணவன் தன் கணவனின் கௌரவம் என்ற விஷயம் வரும்பொழுது அவள் மிகவும் தைரியத்தோடு களம் இறங்கினாள்...
நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்றவள் ரமேஷ் அவளுக்கு செய்த விசயத்தையும் திரு அதற்கு எதிர்த்ததையும் எல்லாம் கூறியவள் அவன் மீது கம்பளைன்ட் கொடுத்தாள்...
அப்போது அவளை பிடித்த பத்திரிக்கையாளர்கள் ,"நீங்கதானே உங்க ப்ரொபஸருக்கு கிஸ் பண்ணுன ஆள்" என அவர்கள் வக்கிரமாக கேள்வி கேட்கத் துவங்க அதற்கு எதற்கும் பதில் அளிக்காமல் அவள் வந்து விட்டாள்...
விசயம் காட்டுத்தீ போல் அனைவருக்கும் பரவியது... ரமேஷின் பெற்றோர்கள் திருவிடம் கேசை வாபஸ் வாங்குமாறு கெஞ்ச அவனும் சற்றும் மனம் இறங்கவில்லை கல்லூரி முதல்வரும் மனமிறங்கவில்லை அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மகனை போலீஸ் ஸ்டேஷனில் கண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர் அவனின் பெற்றோர் விஷயமெல்லாம் ஓய்ந்து மாணவர்களை எல்லாம் ஒரு விதமாக சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்த திரு இரவு தான் வீட்டுக்கு வந்தான் திரு...அவன் வரவும் அவனை அணைத்துக் கொண்டாள் அவள்...
"என்னை மன்னிச்சிடுங்க மாமா எனக்கு எதுவும் நியாபகம் இல்லை... என்னாலதானே நீங்....க உங்க....ளுக்கு இப்படி எல்லாம் ஆயிடுச்சு""" என கூற
அவனோ அவள் முகத்தை கைகளில் ஏந்தி," இதுல உன் தப்பு எதுவும் இல்லை டி" என கூற
"என்னால தானே நீங்க மத்தவங்க முன்னாடி இப்படி அசிங்கப்பட்டு நிக்கறிங்க" என்க
அதை கேட்ட அவனோ ,"நியூஸ்ல வரது எல்லாம் நம்பிட்டு இருந்தா அவ்ளோ தான் இந்த காலத்துல பத்திரிகைக்காரர்கள் எதை விசாரிச்சு நியூஸ்ஸா போடுறாங்க" என்றான்...
அதை கேட்டவளுக்கு அழுகை முட்டியது...,"எல்லாத்துக்கும் காரணம் நான் தான்" என சொல்லி கொண்டே இருக்க
அவனோ அவளை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் அவனின் அணைப்பை இறுக்கி பின் அவள் முகத்தை பார்த்து," அதுதான் தைரியமா என் புருஷன் எந்த தப்பும் பண்ணல அப்படின்னு சொல்லிட்டியே" என்று அவன் சிரித்தபடி கூற,
" பின்ன அப்படியே விட சொல்றீங்களா என்னோட புருஷனுக்கு ஒன்னுனா தாங்கிக்கொண்டு இருக்க மாட்டேன்" என்று அவள் மூக்கு விடைக்க சிவந்த மூக்கை உறிஞ்சியபடி கூறினாள்..
அதை கண்ட அவனோ," பயந்து பயந்து ஒதுங்கியே இருந்த உனக்குள்ள இவ்வளவு தைரியமா எனக்கு தெரியாம போயிடுச்சு இனி உன்கிட்ட பார்த்து தான் நடந்துக்கணும் இல்லேன்னா என் மேலேயும் கேஸ் கொடுத்துடுவ" என அவன் சிரித்தபடி கூற அதை கேட்டு அவளோ சிரித்தாள்...
அதோடு அவன் நிற்கவில்லை மறுநாள் நேராக கல்லூரி முதல்வரிடம் சென்றவன்... இனி அவன் வேலைக்கு வருவதில்லை என்றும் கூறிவிட்டான்...
அவர் கூட ,"இதில் உங்க தப்பு எதுவும் இல்லையே" என கூறினாலும் ,"சார் ஒரு ஆசிரியருக்கு ஒரு சில குணங்கள் வேணும் நாம பசங்களுக்கு ரோல் மாடலா இருக்கணும் அதை செய்ய தவறிட்டோம் அப்படின்னா நாம அந்த தொழிலுக்கு லாய்க்கு கிடையாது...
என்னதான் தப்பு சரி அப்படின்னு பிரிச்சு பார்க்க நான் விரும்பல எனக்கு என்னமோ இனி நான் இந்த வேலைக்கு செட்டாக மாட்டேன் என்று தோன்றுகிறது அதனால நான் இன்னையிலிருந்து என்னோட ஜாப் ரிசைன் பண்ணிக்கிறேன்" என்று கூறினான்.. அவரும் இதற்கு மேல் அவனை வற்புறுத்த முடியாது என்று எண்ணி பரிசீலனை செய்து விட்டார்...அவன் வேலையில் இருந்து நின்று விட்டான் என்றதும் மாணவர்கள் அனைவருக்கும் அதை எளிதாக ஏற்று கொள்ள முடியவில்லை...
அவனை கல்லூரி வாசலிலேயே பிடித்து கொண்டனர்...
"சார் நீங்க செய்றது சரி இல்லை சார்.." என ஒரு சில மாணவர்கள் வருத்தமாக பேச அவனோ ,"என்ன சரியில்லை என்னோட கனவுகளை தேடி ஓட போறேன் இதுல என்னடா தப்பு???" என அவன் சிரித்தபடி கேட்டான்...
"சார் நீங்க அன்னைக்கு நடந்து சம்பவத்துக்காக தான் காலேஜ் விட்டு போறீங்கன்னு எல்லாருக்கும் தெரியும் அந்த சம்பவம் நடந்த அப்போ என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும் எதார்த்தத்தில் யார் மேலயும் தப்பு கிடையாது அதுக்காக நீங்க காலேஜ் விட்டு எல்லாம் போகாதீங்க சார்" என்று மாணவர்கள் கூற அதைக் கேட்டு அவனுக்கு ஒரு நொடி நெகிழ்ந்தது...
மேலும் அவனை நெகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அவன் பாடம் எடுத்த மாணவர்கள் எல்லாம் ,"சார் நீங்க ஒரு நாள் லீவு போட மாட்டீங்களா நீங்க கேள்வி கேட்காமல் இருக்க மாட்டீங்களா அப்படின்னு உங்களை நாங்கள் திட்டாத நாளே கிடையாது மனசுக்குள்ள அப்படி வறுத்தெடுத்து இருக்கோம் ஆனா நாங்க பாஸான பாடத்திலேயே அதிக மார்க் உங்களோட பாடத்துல தான் நாங்க எடுத்திருக்கோம் அப்ப கூட நாங்க உங்களை திட்டாமல் இருந்தது கிடையாது ஆனால் நீங்கள் கடைசியா எங்க கூட சகஜமா சிரிச்சு பேசும் போது அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு இப்படி நீங்க விட்டுட்டு போறது ரொம்ப கஷ்டமா இருக்கு சார்" என்று அவர்கள் கூறினர்...அதை கூறியவன் மேலும் நெகிழ்ந்து போனான்...
உள்ளுக்குள் எதையோ சாதித்து விட்ட உணர்வு அவனுக்கு வந்தது பிறகு மாணவர்களை பார்த்து ,"நான் எங்கடா போக போறேன் இந்த காலேஜுக்கு வரதில்லை அவ்வளவுதானே இதோ இந்த காலேஜ் வாசல்ல எப்பவும் என் பொண்டாட்டியை பிக் பண்ண வருவேன் என்னோட வீடு இங்க தான் இருக்கு எப்ப வேணா யார் வேணா வரலாம்.. வீடு இல்லனா, ஆபீஸ், இல்ல இந்த காலேஜ் வாசல், இந்த மூன்று இடத்தில் என்னை நீங்க பார்க்கலாம் அப்புறம் என்னடா???? சொன்னா புரிஞ்சுக்கோங்க நான் மத்த ஆசிரியர்களுக்கு ஒரு கரும்புள்ளியா இருக்க விரும்பல அந்த நியூஸ் சரியோ தப்போ ஆனா அப்படி வரக்கூடாது..
நாளைக்கு இப்படி ஒரு ஆசிரியர் இருக்காங்க இப்படி செய்தார்கள் யாரும் யாரையும் கண்டிக்கல அப்படின்னு ஒரு வார்த்தை வந்து விடக்கூடாது அதுக்காக எனக்காகவே நான் இந்த முடிவை எடுத்துக்கிட்டேன் இத நீங்க மதிப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று மாணவர்களை சமாதானம் செய்துவிட்டு அனுப்பி வைத்தான் அவன்...
