வேந்தன் : 17
அத்தியாயம் : 17
கொடைக்கானல் மிக குளுமையாக இருந்தது... எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தது போல அழகாக இருக்க மாணவ மாணவிகள் அனைவரும் கொடைக்கானல் எழிலை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்...
மாணவர்கள் அனைவரும் திருவின் அருகே சுற்றி வளைத்து நின்றனர்... ஒரே நாளில் அவன் அந்த மாணவர்களுக்கு மத்தியில் ஹீரோவாகி போனான் அவன்,. தனது வேலையை ராஜினாமா செய்த பிறகு மாணவ மாணவிகளோடு சிரித்து இயல்பாக பேச அவனுடைய மறுபக்கத்தை பார்த்த அவர்கள் அனைவரும் அதிர்ச்சியாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்..
அவள் பார்வை இவன் என்னவன் என தீண்ட அவனும் அவள் பார்க்காமல் அவளை பார்வையாலயே தீண்டினான்..இருவரும் அவரவர் மனதை பகிர்ந்து கொள்ளவில்லை காதலை சொல்லவில்லை உடலால் தீண்டவில்லை ஆனாலும் இருவரின் கண்களிலும் ஒரு வித நேசம் இளையோடியது ...அதை இருவரும் உணர்ந்து கொண்டே தான் இருந்தார்கள்...
"ஏய் எனக்கு இப்பல்லாம் நம்ம திரு சாரை ரொம்ப பிடிக்குது டி" என்று ரம்யா கூற இவன் என்னவன் என அவள் நினைத்ததால் தானோ என்னவோ ரம்யா அப்படி கூறியது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
"ஓவரா வழியாத அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு" என அவள் ரம்யாவை முறைத்து கொண்டு கூற
"அதுக்கு என்ன சைட் அடிக்கிறதில் தப்பு ஒன்னும் இல்லை சார் சிரிக்கும் ரொம்பவே அழகா இருக்கார்" என்க
அவளால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை...காதில் புகை வராத குறை தான் அவளை பார்த்து முறைத்தாள் கார்த்திகா..." உன்னோட புருஷனை சைட் அடிக்கிறேன்னு சொன்ன மாதிரி நீ இப்படி கோபப்படுற வாத்தியார் தானடி உனக்கே இவ்வளவு எரியுது???" என்று ரம்யா கூறினாள்...
அதை கேட்ட அவளுக்கு மேலும் ஆத்திரம் வந்தது..."நான் போய் அவர்கிட்ட சொல்லட்டா நீ இப்படி சொல்றன்னு" என கோபமாக கேட்டாள் கார்த்திகா...
அவளால் வாய் திறந்து சொல்ல முடியாது இல்லையா நான் தான் அவரோட பொண்டாட்டி அப்படி என்று அதனால் அவள் அமைதியாக இருந்தாள் ...அதுவே அவளுக்கு கடுப்பாக இருந்தது...
எங்கு சென்றாலும் திருவைப் பற்றிதான் அனைவரும் பேசினர் அவளுக்கு பற்றி கொண்டு வந்தது எல்லாரும் அவளுடைய மாமாவை புகழ்ந்துதான் பேசுகிறார்கள் சிலர் சைட் அடிக்கவும் செய்ய அவளால் அதை அவ்வளவு எளிதாக தாங்கிக் கொள்ள முடியவில்லை...
"பேசாம இந்த மாமா எப்பவும் போல சிடுமூஞ்சி மாதிரியே இருந்திருக்கலாம் இப்ப யாரு இந்த மாமா சிரிக்கவில்லை என்று சொல்லி அழுதா??? ஒவ்வொருத்தி கண்ணுகளும் என்னோட மாமா மேல தான் இருக்கு" என மனதுக்குள் புலம்ப துவங்கி விட்டாள்...
அவனோ அவள் மீது ஒரு நோட்டம் இருந்தாலும் மாணவர்களோடு ஐக்கியம் ஆகி விட மாணவர்களோ அவனை விடுவேனா என்று இருந்தனர்.. அவர்களுக்குள் ஒரு நல்ல இணக்கம் வேகமாக உருவாகியும் விட்டது...அவளோ ரம்யாவோடு சுற்றி திரிய ரமேஷ் மட்டும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என அடிக்கடி பார்த்து வந்தான்.. அவன் இங்கு வந்ததன் நோக்கமே இதுதான் அப்படி இருக்க அவன் அந்த காரியத்தில் மிகவும் குறிப்பாக இருந்தான்...
அவனுக்கு இன்னும் திரு அவனை அடித்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அவளும் அவனும் கணவன், மனைவி என ரமேஷ் மற்றும் அவனது நண்பர்களுக்கு தெரியும் மற்ற யாருக்கும் விஷயம் தெரியாது என்பதும் அவர்களுக்கு தெரியும்...
அதைக் கூற நேர்ந்தால் அன்று நடந்த விஷயத்தை கூற நேரிடும் என கருதி அவனுடைய நண்பர்கள் அமைதியாக இருந்தனர்.. ஆனால் ரமேஷ் அப்படியல்ல இவர்களை பழி வாங்கியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தான்...
அதன் படி தன் நண்பர்களிடம் ,"நம்மள அசிங்கப்படுத்திவிட்டு அவனும் அவளும் மட்டும் அவ்வளவு ஜாலியா இருக்கிறது பார்க்க முடியல டா" என்று கூற அதைக் கேட்ட ரமேஷ் நண்பர்கள்," நீ இன்னும் அதை மறக்காமல் தான் இருக்கியா?? அந்த ஆள் அடித்தத பார்த்தில கொஞ்சம் இந்த பிரச்சனையை இதோட விடு அதுதான் உனக்கும் நல்லது நமக்கும் நல்லது," என்று நண்பர்கள் கூறினர் ஏனெனில் அந்த அடியே இன்னும் இடி போல அவர்களுக்குள் இருக்க அவர்கள் அவனுக்கு புத்திமதி கூறினார்கள்...
அதைக் கேட்ட அவனும் ,"என்னால அப்படி இருக்க முடியல "
"அப்புறம் ஏன்டா இந்த டூருக்கு வந்த பேசாம அமைதியா வீட்ல இருந்து இருக்கலாம் இல்ல" என நண்பர்கள் கேட்கவும்
"நான் இந்த டூருக்கு வந்ததே அவங்கள அசிங்கப்படுத்த தான் எல்லாமே ஒரு காரணமாகத்தான் வந்திருக்கேன் என்கூட உங்களால இருக்க முடியுமா முடியாதா இப்ப சொல்லுங்க" என்று கேட்டான்...
அதைக் கேட்டு அவனது நண்பர்களோ ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு ,"டேய் என்னால அந்த ஆளு கிட்ட அடி வாங்க முடியாது நான் இல்ல நீ என்ன பண்ணினாலும் சரி நாங்க உங்க கூட இருக்க மாட்டோம்" என்று கூற அதை கேட்ட ரமேஷ் ,"போடா பொட்ட பசங்களா நீங்க இப்படித்தான் எனக்கு நல்லா தெரியும் நானே பார்த்துக்கொள்கிறேன் என் மேல மோதியவன் வாழ்க்கையை சீரழிக்காமல் விடமாட்டேன்" என்று கூறினான் ரமேஷ்... அவனுடைய நண்பர்களும் ,”நீ இப்படியே புலம்பிட்டு இரு” என்று கூறி அவனை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு அவர்கள் மற்ற நண்பர்களோடு கூடிவிட்டனர்...
அதன்படி அனைவரும் கொடைக்கானலில் ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்துக் கொண்டு வர திரு தான் அனைவருக்கும் அந்த இடத்தின் அழகையும் அதனின் பெருமைகளையும் விவரித்துக் கொண்டே வந்தான்...
இது இரண்டு நாள் சுற்றுலா இன்றும் நாளையும் என்ற நிலையில் ஒவ்வொரு இடமாக பொறுமையாக சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தனர்...
இரவு ஆகிவிட்டது கேம்பயர் நிகழ்ச்சி ஒன்று அவர்கள் தங்கி இருந்த ரிசார்ட்டில் ஏற்பாடு செய்து கொடுத்தனர்...மாணவ மாணவியர்களுக்கு ஒரே திரில்லாக இருக்க அனைவரும் என்ஜாய் செய்தனர்...யாருக்கும் சோர்வே இல்லை என கூறலாம்...
அப்படி இருக்க இரவு கேம்பயர் நிகழ்ச்சியில் அனைவரும் அமர்ந்து இருக்க மாணவர்கள் ஒரு பக்கமும் மாணவிகள் ஒரு பக்கமும் அமர்ந்து இருந்தனர்...
அந்தாக்ஷரி இரு குழுவும் விளையாட துவங்கினர் ஆசிரியர்கள் இதில் நடுவர்கள் போல அமர்ந்து கொண்டனர்...முதலில் ஒரு ஆசிரியர் ஒரு எழுத்து கூற அதை மாணவிகள் ஆரம்பிக்க அவர்கள் நிறுத்தும் கடைசி எழுத்தில் இருந்து மாணவர்கள் பாட வேண்டும்...
மாணவிகள் மற்றும் மாணவர்கள் பாடிய பாடல்கள் எல்லாமே இந்த காலத்து காதல் பாடல்கள் அப்படி இருக்க ஒவ்வொரு பாடலும் கார்த்திகாவின் நெஞ்சை கூறு போட்டு கொன்றது...காலை முதல் எங்கு போனாலும் திருவை பற்றியே அனைவரும் பேச இவன் என்னவன் என கார்த்திகாவுக்கு கத்த வேண்டும் என்பது போல இருந்தது...திருவோடு சில மணி நேரமாவது அவனோடு இருக்க வேண்டும் என தோன்றியது...
எப்போதடா இந்த டூர் முடியும் என இருந்தது ஆசை ஆசையாக வந்தாள்...ஆனால் இப்படி அவளே இந்த டூர் முடிந்தால் போதும் என நினைக்கும் அளவுக்கு அவன் அவளை ஆக்கிரமித்து இருந்தான் ஊருக்கு சென்றதும் அவளுடைய மனதை அவனிடம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும் இனி என்ன ஆனாலும் சரி என்பது போல அவள் எண்ணிக் கொண்டாள் ஓடிச் சென்று அவனை அணைக்க வேண்டும் என அவளது உள்ளம் பரபரத்தது...
ஆனால் அடக்கி கொண்டாள் அவனும் அவளை கவனித்து கொண்டு தான் என்னவோ போல இருக்கே அவள் முகம் என்று சூழ்நிலை கருதி அவன் அடக்கி கொண்டான்... இருந்தாலும் அவள் அவனை பார்க்க கண்களாலேயே என்ன என கேட்கவும் அவள் தலைவலி என லேசாக தலையை தொட்டு காட்ட அவனும்," சாப்பிட்டா சரி ஆகும்" என கண்களாலேயே கூறினான்..
அங்கே ஹோட்டல் ரிசார்ட் ஆட்களே லைவ் கிட்சன் தயார் செய்திருக்க ஒரு பக்கம் பாட்டும் கச்சேரியும் மறுபக்கம் சில மாணவர்கள் நடனமும் ஒரு பக்கம் வயிறு நிறைய சாப்பாடு சுடச்சுட நாசி நிறைய அனைத்து வகையான உணவுகளும் தயார் நிலையில் இருக்க மாணவ மாணவிகள் இந்த இரவை வாழ்க்கையில் மறக்கவே முடியாதபடி குதூகலித்துக் கொண்டிருக்கும் வேளையில் ரம்யா," ஏய் வாடி ரொம்ப பசிக்குது" என கூறினாள்...
கார்த்திக்காவும் அவனின் கரிசனத்தை பார்த்து மெல்ல தெம்பானாள்...அவள் முகம் இலேசாக மலர்ந்தது…
‘தேவையில்லாமல் நாம டென்ஷன் ஆகிறோம் அவர் எப்பவும் எனக்குத்தான்.. இத்தனை பேருக்கு நடுவே அவர் என் மேல தான அக்கறை வைத்து என்ன ஆச்சுன்னு கேட்டாரு இதிலேயே உனக்கு புரிய வேண்டாமா கார்த்திகா’ என மானசீகமாக தலையில் கொட்டி கொண்டவள் இவங்க எல்லாரும் அவரைப் பற்றி பேசினாலும் அவர் எனக்கு சொந்தமானவர் என எண்ணி கொண்டவளுக்கு அப்பொழுதுதான் நிம்மதி ஆக சரி சாப்பிடுவோம் என கருதி ரம்யாவோடு சென்றாள்...
அங்கு பலவிதமான உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அவளுக்கு தேவையான உணவுகளை எடுக்க ரம்யாவும் அவளுக்கு விருப்பமான உணவுகளை எல்லாம் எடுத்தாள்... இவர்களைப் போலவே பலரும் அங்கு உணவு அருந்திக்கொண்டு இருந்தனர்...
அந்த நேரம் பார்த்து ஒருவன் ,"மேடம் ஜூஸ் எடுத்துகிறீர்களா" என கேட்க ரம்யாவும் சரி என கூற அவர்களுக்கு என்ன ஜூஸ் வேண்டும் என கேட்டு கொண்டவன் ,"இருங்க மேடம் கொண்டுவரேன்" என்று கூறி சென்றவன் ஆளுக்கு ஒரு ஜூசை கையில் கொடுத்தான்...
உணவு உண்டு கொண்டே அந்த ஜீஸை குடித்தாள் கார்த்திகா அதன் சுவை என்னவோ போல இருக்க," என்ன டி என்னமோ மாதிரி இருக்கு ரம்யா" என கார்த்திகா கூற
"அதெல்லாம் ஒன்னும் இல்ல நல்லா தானே இருக்கு குடி" என்று கூற உணவை உண்டு அந்த ஜூஸையும் குடித்து முடித்தாள்.. ஜூசை குடித்து முடித்ததும் தான் அவளுக்கு நினைவு இருக்கிறது பிறகு எதுவும் நினைவு இல்லை...
உணவு உண்ட ரம்யா ,"ஹே அங்கே பாரு டி அந்த நதியா சார்கிட்ட பாட்டு பாட சொல்றா" என ரம்யா கூற
அவளோ அங்கே பார்க்க," சார் ஒரு பாட்டு பாடுங்க சார்" என அவர்களுடைய வகுப்பு தோழி கேட்டு கொண்டிருந்தாள்...
"நோ மா நாட் இன்டெரெஸ்டேட்" என்று அவன் கூற," சார் ப்ளீஸ் சார் எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்க" என்று அங்கே மாணவ மாணவிகள் கேட்க
அதற்குள் மாணவர்களோ ,"சார் பாட்டு எல்லாம் வேண்டாம் அதுதான் டி-ஷர்ட் தானே போட்டு இருக்கீங்க உங்க மசில் மட்டும் ஜஸ்ட் காட்டுங்க சார்...எங்களோட நீண்ட நாள் கனவு அது" என்று கேட்டனர்
அவனுக்கோ தர்ம சங்கடமான நிலையில் அவன் நின்றான் திரு...
"ஏ வாடி சாரு மசில் காட்டப் போறாரு போய் பார்க்க போகலாம்" என்று ரம்யா தோழி எந்த நிலையில் இருக்கிறாள் என ஆராயாமல் அவளை இழுத்துக் கொண்டு செல்ல ,"ஹே என் கையை விடு டி நானே வரேன்" என்றவள் நடையில் ஆட்டம் காண அதை முதலில் ரம்யா கவனிக்க மறந்தாள்...
"சார் நீங்க பாட்டு தான் பாடணும்" என பெண்களும் ,"சார் நீங்க உங்க மசில் தான் எங்களுக்கு காட்டணும்" என ஆண்களும் கேட்க அவனோ என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க அங்கிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு ரம்யாவின் கையை உதறியவள் அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்தாள்...
என்னதான் அவள் அவளை சமாதானம் செய்து கொடுத்தாலும் மாணவ மாணவிகளின் தொல்லையால் அவளால் அவ்வளவு எளிதாக இதை எடுத்துக் கொள்ள முடியவில்லை.... அவன் மேல் உள்ள காதல் அவளை யோசிக்க விடவில்லை...
" ஏய் என்ன எல்லாரும் இப்படி அதை செய்யுங்க இதை செய்ங்க என்று சொல்லிட்டு இருக்கீங்க!!! அவர் என்ன நீங்க வெச்ச வேலைக்காரனா??? மாமா நீங்க எதுவும் செய்யக்கூடாது சொல்லிட்டேன் காலையில இருந்து நானும் பார்த்துட்டு இருக்கேன் என் புருஷனை அதைச் செய்யுங்க இத செய்ங்கன்னு சொல்லிட்டு இருக்கீங்க???" என்றவள் தன் சுடிதாரின் ஷாலை எடுத்து தலையில் சுற்றியவள்,
" ஏய் பொண்ணுங்களா உங்க எல்லாருக்கும் சொல்லிட்டேன் என் புருஷனை எவளாவது பார்த்தீங்க கண்ணுல கொள்ளிக்கட்டையை வைத்து தேய்ச்சுடுவேன் சொல்லி புட்டேன் இவரு என்னோட மாமா என் புருசன்" என்று கூறிய அவள் நேராக அவன் அருகே நெருங்கி சென்றாள்...
அவள் இப்படி உலற அதைக்கேட்ட அனைவரும் அதிர அவனும் மேலும் அதிர்ச்சி அடைந்தான்..இவளுக்கு என்ன ஆச்சு என அவன் அவளை கவனித்தான்... கூடவே இருந்து இவள் இதை கூறாமல் போனாளே என்ற அதிர்ச்சியோடு ரம்யா நின்று கொண்டு இருந்தாள் அனைவருக்கும் அதிர்ச்சி என்ன திரு கார்த்திகாவின் கணவனா என்று அதிர்ச்சி அனைவரையும் அதிர்ச்சி நிலையில் உறைய வைத்திருந்தது...
ஆனால் அதிர்ச்சியடைய வேண்டியவனும் அதிர்ச்சி அடையவில்லை மாறாக அவளை உற்று நோக்க,
"மாமா .." என அவள் வழிய,
"ஹே என்ன டி ஆச்சு??" என அவன் மென் குரலில் கேட்க,
"ஏன் மாமா எனக்கு என்ன ஒன்னும் ஆகலையே நான் நல்லாத்தானே இருக்கேன்" என்று அவள் குழைவாக பேசுவதை பார்த்த அவனுக்கு ஏதோ சரி இல்லை என தோன்றியது......
"மாமா எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?? இவளுக யார் கூடவும் நீங்க பேசக்கூடாது சொல்லிட்டேன் எல்லாரும் உங்களையே பாக்குறாங்க உங்கள பத்தியே பேசுறாங்க நீங்க சொல்லுங்க நீங்க எனக்கு மட்டும்தான் சொந்தம் சொல்லுங்க" என்க
அதை கேட்ட அவன்,"ஹே கார்த்திகா கம்முனு இரு" என அவன் சுற்றுமுற்றும் பார்த்து அழுத்தமாக அவளிடம் கூறினான்...
அவளோ கேட்கும் நிலைமையில் இல்லை," போங்க மாமா என்னை மட்டும் இப்படியே சொல்லுங்க ஐ லவ் யூ மாமா எங்க நீங்க சொல்லுங்க பார்ப்போம் உங்களுக்கு என்னை பிடிக்குமா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள மட்டும் தான் பிடிக்கும் வேற யாரையும் பிடிக்காது" என்று அவன் தாடியை பிடித்து அவள் கொஞ்சி கூற அங்கிருந்த மாணவ மாணவிகளோ அதிர்ச்சி நிலையில் இருந்தனர்...
" என்ன இவ சொல்றா அப்போ இவதான் சாரோட பொண்டாட்டியா???" என மைண்ட் வாய்ஸ் எல்லாரும் கூற ரம்யா மட்டும் வாயைத் திறந்தே கூறிவிட்டாள் அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் அப்படி இருக்க கார்த்திகாவோ அவனின் சட்டையை பிடித்துக் கொண்டு ,"சொல்லுங்க மாமா" என்று கூற,
அவள் உலறுவது அவனுக்கு புரிந்தது எதை சாப்பிட்டாள் என எண்ணியவனுக்கு அனைவரும் பார்க்கிறார்கள் என்பது பிரச்சினையாக தெரியவில்லை ஆனால் இவளுக்கு என்ன ஆயிற்று என்பதுதான் பிரச்சினையாக இருந்தது...
"ஏய் என்னடி சாப்பிட்டு தொலைச்ச???" என அவன் அதட்டி கேட்க," என்னன்னு தெரியல மாமா ஜூஸ் தான் குடிச்சேன் ஜூஸ் குடிச்சதும் தல சுத்த ஆரம்பிச்சிடுச்சு உங்க மேல லவ் அதிகமாயிடுச்சு மாமா" என்று அவள் கூற
"ஐ லவ் யூ மாமா" என்ன மேலும் அவள் கூற ,"வாயை மூடு என்று சொல்லிட்டேன்" என்று அவன் கூறவும்,
" மாமா நீங்க செம்மையா இருக்கீங்க மாமா அழகா இருக்கீங்க நான் உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சுட்டே இருந்தேன் நான் சொல்றதுக்கு முன்னாடி இதோ இவலுங்க அத்தனை பேரும் உங்ககிட்ட சொல்றாங்க அதைக் கேட்டு எனக்கு எப்படி இருக்கு தெரியுமா" என்றவள் ,
ஏய் என்று கூறியவள் அவள் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டி ,"இதோ இவர் எனக்கு கட்டின தாலி நான் இவரோட பொண்டாட்டி புரியுதா இவர் எனக்கு மட்டும்தான் சொந்தம்" என்றவள் ,"மாமா அன்னைக்கு நீங்க எனக்கு முத்தம் கொடுத்தீங்க இல்ல அதே மாதிரி நானே இப்ப கொடுக்க போறேன்" என்று கூறியவள் அடுத்த நொடியே அவனது இதழில் இதழ் பதித்து உறிஞ்ச ஆரம்பித்தாள்...
அவன் எதிர்பார்க்கவில்லை இருந்தாலும் இவளை விட்டால் இனி சரி வராது என அவளை தன்னில் இருந்து பிரித்தவன் கருதி அவளை தன் கைகளில் ஏந்தி அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றான் திரு... சுற்றி இருந்த அனைவரும் திக் பிரம்மை பிடித்தது போல இருந்தனர்...
ரம்யாவை பற்றி கேட்கவே வேண்டாம் ,"பார்க்க பாப்பா மாதிரி இருந்துட்டு ஒரு 300 பேர் முன்னாடி லிப் டு லிப் கிஸ் அடிச்சிட்டாலே பாவி இவருதான் புருஷன்னு வாயைத் திறந்து சொல்லவே இல்லையே சரக்கடிச்சதும் இப்படி உண்மையை கொட்டிட்டாலே இது தெரிஞ்சிருந்தா நானே ஒரு குவாட்டர் வாங்கி கொடுத்திருப்பேனே" என கூற அனைத்து மாணவர்களிடமும் சலசலப்பு ஏற்பட்டது இதர உள்ள ஆசிரியர்கள் தான் அவர்களை அவரவர் அறைக்குள் போக சொல்ல மாணவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே சென்றனர்...
ரமேஷ் தான் அவள் குடிக்கும் ஜூஸில் சரக்கை கலந்து கொடுத்து விட்டான் அவள் ஏதாவது பிரச்சனை செய்வாள் என அவன் எதிர்பார்த்தான் ஆனால் இந்த அளவுக்கு பிரச்சனை செய்வாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை...
அவள் தளர்ந்து நடப்பது முதல் அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான்.. அதில் அழகாக அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதும் அவளை அவன் அத்தனை மாணவ மாணவிகள் முன்னிலையில் முத்தமிட்டதும் அழகாக அவனுடைய கேமரா படம் பிடித்தது...இது போதுமே திருவை அசிங்கப்படுத்த இது போதுமே இதை வைத்து ஒரு பிரச்சனையை உருவாக்க ரமேஷ் தீர்மானித்து விட்டான்...
