வேந்தன் : 16

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 16

கல்லூரி முதல்வர் முன்னால் நின்று கொண்டு இருந்தான் திருவேந்தன் ,"என்ன திரு???" என அவர் குறையோடு கேட்க

"சார் நான் ஒரு சேஞ்சு காகத்தான் இந்த வேலைக்கு வந்தேன் இப்போ எனக்கு இது போதும்னு தோணுது என்னோட பிசினஸ் என்னால சரியா கவனிக்க முடியல வேறொரு பிரான்ச் எல்லாம் தொடங்க வேண்டி இருக்கு.. அதனால என்னால இந்த ஜாப் கண்டினியூ பண்ண முடியும்னு தோணல அதனாலதான் ரிசைன் பண்றேன்" என்று கூறினான்...

அதைக்கேட்ட அவரோ ,"நீ இந்த காலேஜ்ல ப்ரொபசர் மட்டும் கிடையாது.. இந்த காலேஜ் ஓட சீனியர் ஸ்டுடென்ட் உன்னை நினைத்து நான் எப்பவும் பெருமை தான் பட்டு இருக்கேன்.. இப்பவும் பெருமைப்படுகிறேன் ஒரு நல்ல விஷயத்துக்காக நீ இந்த வேலையை விடனும்னு ஆசைப்படற அதனால கண்டிப்பா நான் கிராண்ட் பண்றேன் நீ எப்ப வந்து ரீஜாயின் பண்ணனும்னு ஆசைப்பட்டாலும் கண்டிப்பா நம்ம காலேஜ் உனக்கு ஓப்பனாவே இருக்கும்" என்று அவர் கூற அதைக் கேட்டாலும் ,"தாங்க் யூ சார்" என்று கூறினான்...

ஆம் அவன் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டான்... இனி ஒரு ஒரு மாதம் அவன் பணியில் இருந்தால் போதும்..

அப்படி இருக்க ,அவன் கல்லூரி முதல்வரிடம் கூறியது உண்மைதான் என்றாலும் அதைவிட மிகப்பெரிய உண்மை என்னவெனில் மாயாவுக்காக தான் மாயா இந்த கல்லூரியில் வேலை செய்தால் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் அவன் இந்த கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தான்...

அப்படி இருக்க இப்பொழுது ராமகிருஷ்ணன் கூறியது போல மாயாவே அவனால் சாகும்வரை மறக்க இயலாது ஆனால் கார்த்திகாவுக்கும் அவனது இதயத்தில் இடம் கொடுத்து இருக்க ஆம் அவளை அவன் மனைவியாக ஏற்றுக் கொள்ள நினைத்து இருக்க இனி இந்த வேலையில் அவன் ஈடுபடுவது அவனுக்கு சரியாக படவில்லை அதனால் மட்டுமே வேலையை விட்டு அவன் செல்கிறான் ...

மேலும் அவன் ஏற்கனவே முடிவு செய்ததுதான் எப்பொழுது கார்த்திகாவை மனமாற மனைவி என அவன் நினைக்கிறானோ மனைவி என்ற அந்தஸ்து அவனுடைய மனது கொடுக்கிறதோ அந்த நேரத்தில் இந்த வேலையை விட்டு விடுவதாக அவன் எண்ணியிருந்தான்...

இவள் அல்லாமல் வேறு எந்த பெண்ணாக இருந்திருந்தாலும் அவன் இதையே தான் செய்திருப்பான் மாயாவை மறக்க முடியாமல் தானே அவன் இப்படி இந்த வேலைக்கு வந்து இருந்தான் இப்பொழுது கார்த்திகா அவன் மனதை கொள்ளையிட துவங்கவும் அவன் இந்த வேலைக்கு விடுப்பு கொடுக்க நினைத்தான் அவ்வளவே!!! அதை அவளிடம் கூறவில்லை பிறகு சொல்லி கொள்ளலாம் என விட்டு விட்டான்...

அதற்குள் மைதானத்தில் பெரிய சலசலப்பு கேட்டது..."போராடுவோம் போராடுவோம்" என மாணவர்கள் அனைவரும் கத்தி கொண்டு இருந்தனர்...

ரம்யா அவளின் கையை பிடித்து ,"வா டி இங்கே உட்கார்ந்து கத்து" என்க

"எதுக்கு டி கத்தனும்??" என கார்த்திகா புரியாமல் கேட்டாள் கார்த்திகா...அவளுக்கு விசயமே புரியவில்லை...

"என்ன உனக்கு விசயமே தெரியாதா???"

"இல்லையே"

"உனக்கு காலேஜ் டூர் போகணுமா வேணாமா??? இவங்க இந்த வருடம் டூர் கேன்சல் பண்ண போறாங்களாம்" என கூற

"இதுக்கா எல்லோரும் போராடிட்டு இருக்கீங்க"

"ஆமாம்" என பெருமையாக ரம்யா சொல்ல,

"அடப்போடி வெயில்ல இப்படி என்னை உட்கார வைச்சுட்டியே??? நான் நீங்க எல்லாம் சும்மா கூப்பிட்டாலும் வர மாட்டேன் நான் இந்த போராட்டத்துக்கு எல்லாம் வரல ப்பா" என எழுந்து செல்ல பார்த்தாள் கார்த்திகா..

"ஹே கம்முன்னு உட்காரு டி இவனுங்களே எப்பவாச்சி தான் இந்த மாதிரி போராட்டம் பண்றாங்க கிளாஸ் வேற கட் ஆகும் வாய மூடிட்டு என்கூடவே உட்காரு நீ மட்டும் கிளாசுக்கு போய் எங்களையெல்லாம் மாட்டி விடவா வாங்குற பனிஷ்மென்ட் மொத்தமா எல்லாரும் சேர்ந்து வாங்கிப்போம் நம்ம கிளாஸ் பசங்க எல்லாரும் இங்கதான் இருக்காங்க நீயும் இங்கு உட்கார்ந்து தான் ஆகணும்" என வம்படியாக ரம்யா அமர வைத்து விட்டாள்...

அங்கு ஸ்டாப் ரூமில் எல்லாம் போராட்டம் பற்றிய பேச்சாகவே இருந்தது... திருவும் அங்கு என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்க வெளியே போய் நின்றான்... கிட்டதட்ட இரண்டு டிபார்ட்மெண்ட் ஜூனியர் சீனியர் என அனைவரும் கலந்து நின்று கொண்டிருந்தனர்...அதில் ரமேஷ் மற்றும் அவனுடைய நண்பர்களும் அடக்கம் அவர்கள் கல்லூரிக்கு வந்ததிலிருந்து அந்த பிரச்சனைக்கு பிறகு எந்த பிரச்சனையும் செய்யவில்லை அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள்... அவர்களுக்கு டூர் போக வேண்டும் அதற்காகத்தான் இந்த போராட்டத்தை எழுப்பி வருகின்றனர்...

அப்படி இருக்க அந்த ஜன கூட்டத்துக்கு இடையே அவள் இருக்கிறாளா என பார்க்க அவளோ தலையில் ஷாலை போட்டு ரம்யா அருகில் போய் அமர்ந்து இருக்க அவனோ மனதுக்குள் ,"ஓ காலேஜ் ஸ்டிரைக் பண்ற அளவுக்கு ஆயிட்டியா வீட்டுக்கு வா உனக்கு இருக்கு" என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்...

அதே நேரம் அவளும் அவனை பார்த்தாள்... அவளுக்கோ அவனது பார்வை அவள் மீது விடுவதை பார்த்து கிளாசுக்கு போகாம இங்க உட்கார்ந்து இருக்கிறாளே என கூறுவது போல இருக்க ,"ஏய் சார் பாக்குறாரு டி" என்று ரம்யாவிடம் கூறினாள்...

"பார்த்தா பார்த்துட்டு போட்டு நீயும் நானும் மட்டும் ஸ்ட்ரைக் பண்ணலையே எல்லாரும் சேர்ந்துதானே பண்றாங்க வாயை மூடிட்டு உட்காரு எல்லாருக்கும் என்ன கிடைக்குதோ அதுவே தான் நமக்கும் கிடைக்கும் புதுசா ஒரு பனிஷ்மென்ட் கிடைக்காது" என ரம்யா கூறினாள்...

அதற்குள் டிபார்ட்மெண்ட் ஹெச்ஓடி வந்து விட கூடவே பேராசிரியர்களும் நின்று கொண்டிருந்தனர்...

அவனும் தனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டபடி நின்று கொண்டு இருந்தான் ...அவன் படிப்பிக்கும் மாணவர்கள் அனைவரும் மீதும் அவனுடைய பார்வை இருந்தது...

அழுத்தமாக அவன் இருக்க ஹெச்ஓடி அனைவரையும் பார்த்து," எதுக்காக இப்படி பிரச்சினை பண்ணிட்டு இருக்கீங்க??" என்றார்...

கூட்டத்தில் இருந்த மாணவன் ஒருவன் எழுந்து நின்று ,"சார் காலேஜ்ல நம்ம படிக்கிறதுக்கு மட்டும் வரல குட் மெமரீ சொல்லி கொஞ்சம் சேர்த்து வைக்க வேண்டாம்மா எங்களுக்கு இருக்கிற ஆக இருக்கிற என்ஜாய்மென்ட் அப்படிங்கறது இந்த டூர் மட்டும் தான் அதை நீங்க கேன்சல் பண்ணுவீங்க நாங்க எதிர்பார்க்கவே இல்லை நீங்கள் கூட்டிட்டு போறேன்னு சொல்ற வரைக்கும் நாங்க யாரும் இந்த இடத்தை விட்டு எழுந்து போறதா இல்லை" என்றான்...

அதை கேட்ட அவரோ ,"ஆரம்பத்திலேயே இதை பத்தி நான் இன்ஃபோர்ம் பண்ணிட்டேன்... மேனேஜ்மென்ட் எடுக்கிற முடிவு தான் இதுல எங்களால் ஒன்னும் பண்ண முடியாது...அதுனால எல்லோரும் கிளாஸ்க்கு போங்க" என்க

"முடியாது சார் நாங்க போக மாட்டோம்" என மாணவர்கள பிரச்சனை செய்ய திரு ஹெச்ஓடியிடம்," சார் மேனேஜ்மென்ட்ல பேசி பாருங்க அவங்க இருக்கிற பயருக்கு இந்த பசங்க கிளாசுக்கு போற மாதிரி எனக்கு தெரியல நீங்க பேசி ஒரு முடிவு அவங்க எதிர்பார்க்கிற முடிவை நீங்க சொன்னாதான் அவங்க கிளாஸ் போவாங்க போல இருக்கு" என்க

அவரோ அவனை பார்த்து சிரித்து,"இதுக்கு எல்லாம் அஸ்திவாரமே நீ தானே நீ பண்ணாத போராட்டமா இங்கே இப்போ இவங்க பண்றாங்க" என்க அவனோ மெல்லிய சிரிப்போடு தலையை குனிந்து சிரித்தான்...

"நான் மேனேஜ்மென்ட்ல பேசி பார்க்கிறேன் நீ அவங்களை கிளாசுக்கு போக சொல்லு" என அவர் கூற அவரும் சரி என்று கூறினான்...

பிறகு அவர்களிடத்தில் வந்தவன் ,"கூடிய சீக்கிரம் நீங்க ஆசைப்பட்டது நடக்கும் சார் மேனேஜ்மென்ட்ல பேச போய் இருக்கார் சோ நீங்க கிளம்புங்க” என அவன் கூற,

"சார் நீங்க சொல்றது எப்படி நம்பறது??"

அதை கேட்ட தன் மார்பில் கையைக் கட்டி ,"நான் சொன்னா நம்புங்கடா நடக்கும் போங்க அதுதான் அவரு மேனேஜ்மென்ட் பேச போயிருக்காருல கண்டிப்பா பாசிட்டிவ் ரிப்ளை தான் உங்களுக்கு வரும்" என்று அவன் கூற,

அதைக் கேட்ட மாணவர்களோ ,"சார் நீங்களும் வாத்தியார் தான அவங்கள மாதிரி தானே நீங்களும் பேசுவீங்க எங்களை சமாதானப்படுத்திட்டு திரும்ப நீங்க கூட்டிட்டு போகாம விட்டுட்டா என்ன சார் பண்றது" என்க

"டேய் நான் இப்ப தான்டா வாத்தியாரு பத்து வருஷத்துக்கு முன்னாடி நானும் ஸ்டூடண்ட் தான் இதோ அங்க தூரமா தெரியுது ஒரு ஸ்டேஜ் அங்கே ஏறி நின்று உங்களை மாதிரி நானும் கத்தி போராடி இருக்கேன் போதுமா இப்போ தைரியமா போங்க... வாத்தியாரா நினைக்கலனாலும் பரவால்ல உங்க காலேஜ் சீனியரா நெனச்சு கிளம்புங்க" என்று அவன் நக்கலாக கூற, அதைக் கேட்ட மாணவர்களோ ,"அப்போ சார் அப்போ நீங்களும் எங்க கட்சி தானா நீங்க ரொம்ப டெரரா இருக்கவும் நாங்க ரொம்ப பயந்துட்டோம் சார்" என்று கூற,

"போட்டு இருக்க வேஷத்துக்கு தகுந்த மாதிரி நடிக்க கத்துக்கணும் புரியுதா இப்போ கிளம்புங்க" என்று அவன் சிரித்தபடி கூற அதைக் கேட்டு அனைவரும் ஆரவாரம் செய்தனர்..

ரம்யா அவளை பார்த்தும் அவனுடைய பேச்சை கேட்டு ,"ஹே சார் இப்படி பார்க்க அழகா இருக்கார்ல" என கூற

அதை கேட்ட கார்த்திகா," நீ தான் அவரை அப்படி திட்டுவியே இன்னைக்கு மட்டும் என்ன???" என கார்த்திகா கேட்க,

"அவர் இந்த காலேஜ்ல தான் படிச்சாராம் என்னோட அக்கா ஹஸ்பண்ட் சொன்னாரு... என் மாமாவும் இவரும் வேற வேற டிபார்ட்மெண்ட் ஆனால் இவர் ஹீரோ மாதிரி இந்த காலேஜ்ல இருந்திருக்காரு காலேஜ்ல எந்த பிரச்சனை வந்தாலும் இவருதான் முதல் ஆளா நிற்பாரு.. இப்போ எப்படி இவன் ப்ரொபஷரா இங்க வந்து இருக்கான்னு கேட்கிறாங்க???" என அவள் கூற அதற்கான காரணம் அறிந்த கார்த்திகா வாயை மூடி கொண்டாள்...

பிறகு அவன் கூறியது போல மேனேஜ்மென்ட் சம்மதம் தெரிவிக்க அடுத்த ஒரு வாரத்திலேயே கல்லூரியிலிருந்து கொடைக்கானல் ட்ரிப் போக அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது...

அவனோ அவளிடம் டூர் செல்வதற்கான பணத்தை அவள் கேட்காமலேயே கொடுக்க அவளோ ,"நானெல்லாம் போகல" என்று கூற அதைக் கேட்டு அவனோ ,"நீ போய் தான் ஆகற போய் பெயரை கொடு போ "என்று கூறினான்..

"நீங்களும் வருவீங்களா??" என அவள் கேட்க ,"தெரியல மேனேஜ்மென்டில் இருந்து வர சொன்னா வருவேன் இல்லனா நீ போய் என்ஜாய் பண்ணிட்டு வா இதெல்லாம் வாழ்க்கையில ஒரு முறை தான் வரும் வரும்போது நல்ல அனுபவிச்சுக்கணும் திரும்ப பத்து வருஷம் கழிச்சு யோசிச்சு பார்க்கும்போது நல்ல ஒரு அனுபவத்தை இது கொடுக்கும்" என்று அவன் கூறினான்...

அதை கேட்ட அவளோ உள்ளுக்குள் மகிழ்ந்தாள்... உடனே ரம்யாவை அழைத்து ,"ஏய் நானும் டூர் வரேன்" என்று அவள் கூற ரம்யாவும் அவளும் வருவதாக கூற கார்த்திகாவை கையிலேயே பிடிக்க முடியவில்லை..

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்...அதை பார்த்த அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்க அன்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் அவளை அழைத்து கொண்டு அருகில் உள்ள மாலுக்கு அழைத்து சென்றான்...

அவளுக்கோ எட்டாவது அதிசயமாக இருந்தது..கூடவே நெருடலாக இருந்தது...

"மாமா இப்போ யாராவது நம்மை பார்த்துட்டா நீங்க என்ன சொல்லுவீங்க???" என கேட்க

"என்ன சொல்லணும்??? நான் என்ன கள்ளக்கடத்தலா பண்றேன்???" என அவன் கேட்க,

"அதில்ல மாமா என்னையும் உங்களையும் சேர்த்து வச்சு யாராவது பார்த்தா என்ன பண்ணுவீங்க ஒன்னு பண்ணுங்க நான் வழி தெரியாமல் வந்துட்டேன் அதுனால ஹெல்ப் பண்றேன்னு சொல்லுங்க " என அவனுடன் வெளியே செல்வது உள்ளுக்குள் மகிழ்ச்சி தான் என்றாலும் யாராவது பார்த்து அது அவனுக்கு பிரச்சினையாகி விடப் போகிறது என எண்ணி அவள் கூறினாள்...

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்த அவனோ," வேணும்னா வேற ஒன்னும் சொல்லவா??" என்று கேட்டான்...

"என்ன??" என அவள் வினவ

"யாராவது பார்த்தாங்கன்னா என்னோட பொண்டாட்டி கூட நான் ஷாப்பிங் வந்து இருக்கேன்னு சொல்லவா???" என கேட்க அதைக் கேட்டு அவளோ அவனை ஆச்சரியமாக பார்த்தாள்...

அவனின் இந்த முகம் அவளுக்கு புதிது...அவளுக்கு அவன் இப்படி பேசுவது மிகவும் பிடித்து இருந்தது...இப்போது எல்லாம் அவனை ரொம்பவே பிடித்து இருக்கிறது..ஆனால் அதை அவனிடம் சொல்ல தான் பயமாக இருந்தது...

அப்படி இருக்க, அவன் அவளுக்கு அங்கு இருந்த துணிக்கடையில் இரண்டு சுடிதார்களை வாங்கி கொடுத்தான்...அவளுக்கு மிகவும் பிடித்து இருக்க அவனோ அவளுக்கு பார்த்து பார்த்து அவனுக்கு பிடித்தது போல வாங்கினான்...

அவளோ ,"மாமா இத நான் டூர் போகும் போது போட்டுக்கவா??" என்று ஆசையாக கேட்க, அதை கண்ட அவனும் சிரித்துக்கொண்டே சரி என்றான்...

அவனுக்கும் அவளோடு இப்படி இருப்பது பிடிக்க தான் செய்தது...அவனும் அவனை மாற்றி கொள்ள முடிவு செய்து விட்டான்...

அப்படி இருக்க டூர் போகும் நாளும் வந்தது ஆனால் பார்த்து பார்த்து அனைத்தையும் தயார் செய்த கார்த்திகாவுக்கு போகத்தான் மனமே இல்லை... அவன் ,"நான் வரல நீ போயிட்டு வா என்னை மேனேஜ்மென்டில் இருந்து போக சொல்லல" என்று கூறவும் அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது...

" நீங்க வரலைனா நானும் போகல பேசாம நாம ரெண்டு பேரும் வீட்டிலேயே இருந்திடுவோமா???" என கேட்க அவனும்," அடிச்சேனா பாரு கிளம்புடி இங்க இருந்துட்டு என்ன பண்ண போற???" என அதட்டினான்...

பிறகு அவளோ அவன் பேசுவதைக் கேட்டு வருத்தப்பட்டு கொண்டு கல்லூரிக்கு சென்றாள்... அவன் தான் கல்லூரி வாசல்வரை அவளை கொண்டு வந்தும் விட்டான்...உள்ளே வராமல் காரை சற்று தள்ளியே நிறுத்தி அவளை இறங்கி போக சொல்லி விட்டான் அவளும் அவனைப் பார்த்துக் கொண்டே வேண்டாம் வெறுப்பாக சென்றாள்.....

அங்கு ரம்யா நின்று கொண்டிருந்தாள்..." என்னடி உன்னோட கார்டியன் வந்தாங்களா???" என அவள் கேட்க அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் ,"இல்லடி அவர் வரல நான் மட்டும்தான் வந்தேன் உன்னை டிராப் பண்ண கூட அவர் வரலையா???" என்க

"வந்தாரு என்ட்ரன்ஸ்ல விட்டுட்டு போயிட்டாரு" என்று கூற அதைக் கேட்ட அவளோ," மிஸ் பண்ணிட்டேன்" என்க

பிறகு அவர்கள் செல்லும் பஸ் வந்தது அதில் அனைவரும் ஏறி அமர கார்த்திகா மற்றும் ரம்யா ஒரே சீட்டில் அமர்ந்து கொள்ள இவர்களை போல ஏனைய மாணவர்களும் ஏறி கொண்டனர்...

இவர்களை கண்காணிக்க ஒவ்வொரு பஸ்ஸிலும் ஒரு பெண் பேராசிரியர் மற்றும் ஆண் பேராசிரியர் இருவரும் இருக்க வேண்டும் என மேனேஜ்மென்ட் சொல்லி இருக்க பெண் பேராசிரியர் ஏறிவிட்டார் ..

ஆனால் இன்னும் ஆண் பேராசிரியர் வராமல் இருக்க அவருக்காக வாகனம் நின்று கொண்டிருந்தது ,"என்னடி இன்னும் பஸ் எடுக்காமல் இருக்கிறார்கள்" என ரம்யா இருக்கும் திர்லில் கூறிக் கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் அணிந்து அந்த பஸ்ஸுக்குள் ஏறினான் திருவேந்தன்...

அவனை கண்டு மாணவர்கள் ஆர்ப்பரிக்க அவளோ அவனைக் கண்டு மெய்மறந்து போனாள் ...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top