வேந்தன் : 15

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 15

அவர் கூறியதை கேட்டு சரி என தலையாட்டினான்... வேறு எதுவும் சொல்லவில்லை.... வீட்டுக்குள் பாட்டியை பார்த்து முறைத்த அவள் ,"அவங்களை பேசலேனா உங்களுக்கு தூக்கமே வராதா எப்ப பாரு அவங்களை திட்டிட்டே இருக்கீங்க!!! " என்க

"போடி போக்கத்தவளே வந்துட்டா அவனுக்கு துணை பேசிட்டு" என அவர் நொடித்து கொள்ள அவளோ ,"பாட்டி முன்னே விட அவர் எவ்வளவோ மாறி இருக்கார் இன்னும் மாறுவார் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு நீங்க பேசிப்பேசியே அவரை கஷ்டப்படுத்தாதீங்க... நீங்க வேணா பாருங்க அவரு என்னை விட்டுட்டு இருக்க மாட்டார்" என்க

அதற்கு அவர் மனம் குளிர்ந்தாலும் அதற்குள் ராமகிருஷ்ணன் வந்துவிட பேச்சு தடைப்பட்டது ராமகிருஷ்ணன் பாட்டியை பார்த்து ,"அம்மா நான் எல்லா விஷயத்தையும் அவனுக்கு புரியிற மாதிரி சொல்லிக் கொடுத்து இருக்கேன் நீங்க தேவையில்லாமல் அவனை பேசாதீங்க கொஞ்ச நாள்ல அவனே மாறிடுவான் அதுவரைக்கும் காத்திருப்போம் இவ்வளவு நாள் காத்திருந்தீங்கல்ல இனியும் கொஞ்ச நாள் காத்திருங்க" என கூறிவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு சென்றார்...

அவனும் பாட்டியை முறைத்து விட்டு ,"கார்த்திகா ஒரு கப் பால் எடுத்துட்டு வா" என கூறி அவனுடைய அறைக்குள் செல்ல அவளோ அவனே பார்த்துக் கொண்டு நிற்க பாட்டி எழுந்து நின்று ,"மசமசன்னு நிக்காம அவனுக்கு பாலை காய்ச்சி கொண்டு போய் கொடு டி வாய் மட்டும் கிழிய பேசுவா ஆனா அந்த பையன் நினைச்சு ஏதாவது அக்கறை இருக்கா???" என புலம்பி கொண்டு செல்ல, அவளோ ,”இப்போ யார் இங்கே பிரச்சனை பண்ணினா இப்போ யார் பேரனுக்கு துணை பேசிட்டு போறது எல்லாம் கலி காலம்” என சிரித்து கொண்டே அவனுக்கு பால் காய்ச்சி கொண்டு போனாள்...

அவனோ அறைக்குள் விட்டத்தை பார்வையிட்டு படுத்து இருக்க அவளோ அறைக்குள் நுழைந்து பாலை கொடுக்க அவனோ," அங்கே வை" என்றான்...

அவளும் சொன்னது போல செய்தவள் ,"பாட்டி பேசின எதையும் மனசுக்குள்ள வச்சுக்காதீங்க பாட்டியை பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல உங்க மேல அன்பு கடந்த பாசம் வெச்சிருக்காங்க அதனாலதான் இப்படி வார்த்தையை விடறாங்க" என அவள் கூறவும் ,

அவன் ,”ம்ம் தெரியும்” என்றான்...அவளோ சரி அவன் யோசிக்கட்டும் என்பது போல படுக்கையை கீழே விரிக்க அவனோ ,"மேலே வந்து படு "என்றான்...

அவளுக்கு இவன் தான் இந்த வார்த்தையை கூறுகிறானா என அதிர்ந்து ,"என்ன சொன்னீங்க???" என மறுபடியும் கேட்டாள்...

"மேலே வந்து படு" என்று சொன்னேன் என்று கூறவும் அவளுக்கு கை கால்கள் உதறத் துவங்கியது... பால் கொண்டு வர சொன்னான் இப்போ மேலே வந்து படுக்க சொல்றான் ஐயய்யோ எதாவது நடந்திடுமோ??? என அவள் மனம் ரயில் போல வேகமாக அடித்துக் கொண்டு ஓடியது...

அவனாக அவளை அவன் அருகே படுக்க சொல்லவும் ஏதேதோ கற்பனை குதிரை தறிகெட்டு ஓட அவளோ ,"இல்லை நான் கீழே படுத்துகிறேன்" என்று அவள் கூறினாள்... அவன் அப்படி ஒரு வார்த்தை சொல்லவும் அவளுக்கு ஒரே வெட்கமாக போய்விட்டது... அதைவிட என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் தான் அவளுக்கு முன்னுக்கு வந்தது அவனை பிடிக்கும் தான் ஆனால் உடனே குழந்தை அது இது என்றால் அவள் எப்படி அவளால் யோசிக்கவே முடியவில்லை...

அதைக்கேட்ட அவனும்," நீ கீழே படுத்து அந்த கிழவி இடையில் வந்து கதவை திறந்து பார்க்கவா வேணாம் வேணாம் மேலேயே படு " என்று கூறவும் அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது... அவனைப் பார்த்து ,"இதுக்கு தான் படுக்க சொன்னீங்களா???" என கேட்க,

"ஆமாம் வேற எதுக்கு??? நீ என்ன என் பக்கத்துல படுத்ததே இல்லையா இரண்டு வாரம் முன்ன கூட என் பக்கத்துல படுத்துகிறீங்களான்னு நீ கேட்ட தானே அப்புறம் என்ன???" என அவனும் திருப்பி கேட்டான்...

அவன் பார்வையை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் அவள் பார்வையில் என்ன இருக்கிறது என அவனால் புரிந்து கொள்ள முடிந்தது அதை அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை...

அவளும் தன் உணர்வுகளை எல்லாம் அடக்கி ,"இவர் என்ன மனுஷனா இல்லை மிஷினா???" என்ன மனதுக்குள் நினைத்தாலும் வாயை மூடிக்கொண்டு கட்டிலுக்கு மறுபுறம் வந்து படுத்தாள்...

படுத்தவள் புறம் திரும்பிய அவன் தன் கையை தலைக்கு கொடுத்தபடி அவளைப் பார்த்தான் ..

அவளிடம் பேசுவதற்காக தான் அவளை அழைத்தான் வேறு எதற்காகவும் அல்ல...மேலும் இப்படியே ஆளுக்கு ஒரு திசையில் வாழ்க்கை போக வேண்டாம் எனவும் அவன் முடிவு செய்தான்..

அப்படி இருக்க அவளை பார்த்து,"அவங்க பேசுவதை நினைத்து உனக்கு ஏதாவது வருத்தமா???" என கேட்டான்.. அவள் ,"இல்லை எனக்கு தான் உங்களை பற்றி தெரியுமே" என அவள் கூற

அவள் அவனை பார்த்து,"எனக்கு கொஞ்சம் டைம் வேணும் இதிலிருந்தெல்லாம் வெளியே வர எனக்கு கொஞ்சம் டைம் வேணும்...இப்படியே உன்னை விட்டிட மாட்டேன் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" என கூற, அவளோ சரி என்பது தலையாட்ட," அதுக்குள்ள நீ படிச்சு முடிச்சிடு" என கூற அவளோ அவனை ஒரு மாதிரியாக பார்த்தாள்...

அங்க சுத்தி இங்க சுத்தி எங்க சுத்தினாலும் நான் படிச்சு முடிக்கிறது தான் குறியாக இருப்பார் போல என மனதுக்குள் குமைந்தவள் வார்த்தைகளை பெரிதாக விடவில்லை...
எங்கே வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுமோ என்ற பயத்தால் அவள் வாயை பெரிதாக கொடுக்கவில்லை...

மறுநாள் காலையிலேயே அங்கிருந்து அவன் கிளம்பி விட்டான்...பாட்டி தாத்தாவிடம் எல்லாம் கூறி விட்டு ராமகிருஷ்ணன் அவரையும் சந்தித்து விட்டு எல்லாம் முடிந்து இருவரும் பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர்...

ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அவர்களின் பயணத்தை ஈர்க்க, இருவருக்கும் இடையே பேச்சுக்கள் இல்லை என்றாலும் ஏதோ இருவரின் மனதுக்குள்ளும் மிக பெரிய அமைதி நிலவியது...

அந்த தருணம் பார்த்து ரம்யா அழைக்க இவன் முன்னால் எப்படி போனை எடுப்பது என அவளோ தயங்கிய படி போனை எடுக்காமல் விட அவனோ அதை கண்டு கொள்ளவில்லை...

பிறகும் அவள் அடிக்க அவளோ எடுக்காமல் போக திரு அவளிடம் ,"ஃபோன் எடு" என்க ,

"வேணாம் அப்புறம் பேசுகிறேன்" என்க,

"ஏன் என் முன்னாடி பேசினா நீங்க என்ன பேசுறீங்கன்னு நான் கேட்டுடுவேன்னு நினைப்பா???" என்க

அவளோ ,"அப்படி எல்லாம் இல்லை மாமா" என்க ,"அப்போ பேசு" என்றான் அவளோ பேசாமல் இருக்க மீண்டும் கால் வரவும்,

அவளின் போனை பட்டென எடுத்து போனை ஸ்பீக்கரில் போட்டான்.

அப்படி என்ன இருவரும் பேசி கொள்கிறார்கள் என அறிய அவன் செய்ய அவளோ ஆப் பண்ண போக அவனோ ,"நீ பேசு" என்றான்...

அதற்குள் மூன்று முறை ஹலோ என கூறி விட்டாள் ரம்யா...

"ஏன் டி இரண்டு நாளா வரல??" என அவள் கேட்க,

"அது ஊர்ல தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை அதான் ஊருக்கு போய் இருந்தேன்" என்க

"ஓ அப்படியா அது எப்படி டி நீ வராத அன்னைக்கெல்லாம் அந்த ஹிட்லரும் லீவு எடுக்கிறார் எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு..." என்றாள் அவள்

அதை கேட்ட அவளோ பதறினாள் அவனை பார்க்க அவனும் அந்த நேரம் அவளை பார்த்தான்...

ஹிட்லர் என்றெல்லாம் கூற ,"நீ பேசுறது எனக்கு கேட்கவே இல்லை நான் அப்புறம் கூப்பிடவா" என அவனை பார்த்து கொண்டே கூற

அவனோ வைக்காதே என்பது போல கண்ணை உருட்ட அவளுக்கோ தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது..

அதிலும் ரம்யாவோ ,"ஏய் உனக்கு என்னடி காது கேட்கலையா அந்த ஹிட்லர் இருக்கார் இல்ல அவரும் ரெண்டு நாளா லீவு அது எப்படி நீங்க ரெண்டு பேரும் மேட்ச்சாவே லீவு போடுறீங்க???" என்க

"என்னைக் கேட்டால் எனக்கு எப்படி தெரியும் நானே தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஊருக்கு வந்து இருக்கேன்" என அவள் மழுப்பி கூற,

"என்னமோ எனக்கு தெரியல ஆனால் அந்த ஹிட்லர் இல்லாததும் நல்லாத்தான் இருக்கு" என்று கூற அவனும் அவளைப் பார்த்து முறைத்தான்...

அவளோ அவனிடம் கண்களாலே கெஞ்ச அவனும் ரோட்டை பார்த்து வாகனத்தை ஓட்ட துவங்கி விட்டான் ..மனதுக்குள்ளோ," இவளுங்க என்னென்ன பேசுறாங்க இரு நாளைக்கு இருக்கு உனக்கு" என எண்ணி கொள்ள,

"சரி ரம்யா" என கார்த்திகா பேச்சை முடிக்க பார்க்க,

"என்ன டி சரி??? எப்பிடி இப்படி ஒரு மனுஷன் கூட அவரோட வைஃப் இருக்கா எப்ப பாரு ரெண்டு கிளாஸ் கஞ்சி குடிச்ச மாதிரியே இருக்காரு அவரு இல்லைன்னு வையேன் கிளாஸ் எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா?? அவர் வந்தா போதும் கேள்வி கேட்டே நம்ம உயிரை வாங்கிடுவாரு அதுக்கு பயந்தே படிக்க வேண்டியது இருக்கு தெரியுமா?? நான் ஜஸ்ட் பாஸ் ஆகிற ஆள் என்னை போய் அவர் சப்ஜெக்ட்ல 80 மார்க் வாங்க வைக்கிறார்.. இதையெல்லாம் எங்க கொண்டு போய் கொட்டுகிறது அப்ப நான் எடுத்த சபதம் எல்லாம் என்ன ஆகிறது???" என ரம்யா புலம்ப,

அதைக்கேட்ட கார்த்திகா,' ரம்யா அவர் வேற முறைக்கிறாரே நாளைக்கு நீ சாகப் போறியே அதை நினைக்கும் போது தான் எனக்கு சங்கடமா இருக்கு' என துடிக்கும் மனதை அடக்கி கொண்டவள் ,"அவரு நம்ம நல்லதுக்கு தானே சொல்றார்??"என அவனுக்கு துணை போனாள் அவனுடைய தர்ம பத்தினி...

"எது நல்லது என் வாயில நல்லா வந்துரும்" என்க

"சரி டி நாளைக்கு நான் வருவேன்ல அப்போ பேசிக்கலாம்" என அவள் கூற ரம்யாவும் ,"ஹே வைச்சிடாத எப்போ உன்னோட கார்டியனை எனக்கு காட்ட போற??? " என்க

"இது வேறயா” என கார்த்திகா நினைக்க அவனோ அவளை ஒரு மாதிரியாக பார்க்க அவளோ பாவமாக முகத்தை வைத்தாள்...

"சொல்லு டி நீ அவரை பத்தி சொன்னதுல இருந்து அவரைப் பாக்கணும்னு ஒரே ஆசையா இருக்கு சீக்கிரம் அதுக்கு ஏற்பாடு பண்ணுடி" என்று கூற கார்த்திகாவும் சரியென கூறி வைத்து விட்டாள்..

ஃபோன் வைத்ததும் அவள் அவனை பார்க்க அவனோ," இப்படி தான் நீங்க இரண்டு பேரும் பேசிப்பிங்களா???" என அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க

அவளோ தன் தலையை குனிந்து கொள்ள அவனோ ,"ஹிட்லரா நான்???" என கேட்க

"அது வந்து மாமா நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் எப்ப பாத்தாலும் கேள்வி கேட்டுட்டே இருப்பீங்களா அதனால பசங்க எல்லாரும் உங்களுக்கு அப்படி பெயர் வச்சிருக்காங்க ஆனா எல்லாருக்கும் உங்க மேல ரொம்ப மரியாதை இருக்கு மாமா" என கூற

"அதுதான் எப்படிப்பட்ட மரியாதை என்று நான் கேட்டுட்டு தானே இருந்தேன்" என்க

அதை கேட்ட அவளோ மெலிதாக சிரிக்க அவன் வேறு எதுவும் சொல்லவில்லை...

ஆனால் அவளுக்கோ பயம் நாளை இதை வைத்து ரம்யாவை வைத்து செய்து விடுவானோ என எண்ணி ,"மாமா நாளைக்கு தயவு செஞ்சு இதை மனசுக்குள்ள வச்சு அவளை வச்சு செஞ்சுடாதீங்க மாமா" என கேட்க

அதை கேட்டவனோ ,"நாளைக்கு தானே அதை நாளைக்கு பாக்கலாம் இவ்ளோ பேசுனா அவளை சும்மாவே விடக்கூடாது" என்று அவன் கூற ,"மாமா ப்ளீஸ் மாமா பாவம் ஏதோ ஆர்வக்கோளாறுல நீங்கதான் என் புருஷன் என்று தெரியாமல் பேசிட்டு இருக்கா" என்று கூற, அவனோ அவனுடைய மீசைக்கு இடையில் மெலிதாக சிறு கோடு போன்ற சிரிப்பை அவன் அவள் காணாமல் மறைத்தான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top