வேந்தன் : 14
அத்தியாயம் : 14
"ஏன் வரல???" என்றான்...
"எனக்கு அந்த காலேஜ் புடிக்கல...நான் இனி போக மாட்டேன்"
ஏன்...செருப்பு பிஞ்சிடும் காலேஜ் போகலைன்னா" என்றான் அவன்...
அதை கேட்டவள் குரல் தழைந்து,"ஏன்னு கேட்டா அங்கு இருக்கவங்க எல்லாம் தப்பா தான் இருக்காங்க" என்க
"ஏன் ரம்யா எல்லாம் நல்லா தானே இருக்கா??? கண்டதே தான் யோசிச்சிட்டு இருப்பியா நல்லதை யோசிக்கவே மாட்டியா நீ இங்கே இல்லை எங்க போனாலும் இந்த மாதிரி கெட்ட அனுபவங்கள் இருக்கும்.. அதுக்காக அந்த இடத்துக்கு போகாம வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்க முடியுமா???" என அவன் கூற, அதைக் கேட்ட அவளோ ,"அந்த பசங்க திரும்பவும் அப்படி பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்???" என கேட்கவும்
"அந்த பசங்க இல்ல நாம பயந்து நடுங்கிட்டு இருந்தோம்னா யார் வேணாலும் இப்படி வருவாங்க நீ தான் தைரியமா இருக்கணும் உன்னால முடியுற வரைக்கும் நீ தான் போராடனும்" என்று அவன் கூறினான்...
"நீங்க என்ன சொன்னாலும் என்னால அந்த இன்சிடென்ட் மறக்க முடியல... அந்த காலேஜ் போகணும்ன்னாலே எனக்கு அவங்க ஞாபகம் தான் வருது அன்னைக்கு நடந்தது தான் ஞாபகம் வருது" என்க
"இன்னும் எத்தனை நாளைக்கு நெனச்சிட்டு இருக்கிறதா உத்தேசம் கிளம்பு கிளம்பு இப்பவே காலேஜ் போற வழியை பார் காலேஜ் போகாமல் இருப்பதற்கு இது ஒரு சாக்கு.. இதை சாக்கா வச்சு மார்க் மட்டும் குறையட்டும் தலைகீழா தொங்க விடுறேன்" என கடுப்பாக கூறியவன் தயாராகினான்...
அவளோ அதைக் கேட்டு திகைத்தவள் இவன் செய்தாலும் செய்வான் என எண்ணி,"நான் கண்டிப்பா போயே தான் ஆகணுமா மாமா???" என கேட்க அவனும் முறைக்கவும் ,"சரி போறேன்" என்று கூறி தயாராக சென்றாள்..
அவனும் அவளுடைய பேச்சில் மென்னகையோடு தயாராகி வந்தான்... இந்த ஒரு வாரத்தில் அவனையே நிறைய மாற்றங்கள் அவனாகவே உணர்ந்தான்... ஆனால் அதை அவள் அறியாமல் மறைத்து வைத்துக் கொண்டான் என்று தான் கூற வேண்டும்...
அப்படி இருக்க அவளும் தயாராகி வர ,"ஆட்டோ அண்ணன் கிட்ட சொல்லி இருக்கேன் அவர் வந்து உன்னை பிக் பண்ணி பார்" என்று கூற ,"நான் பஸ்லே வருவேன்" என்று அவள் கூற ,"நீ இப்ப கொஞ்ச நாளைக்கு ஆட்டோல வந்தா போதும்" என்று அவன் மீண்டும் அழுத்தமாக கூறியவன் அங்கிருந்து சென்று விட்டான்...
"ஆட்டோக்கு குடுக்குற காசுல என்னை உங்க கார்ல ஏத்திட்டு போனால் தான் என்ன கார் சும்மாதானே போகுது" என அவள் வேண்டுமென்று அவனை சீண்ட பதிலுக்கு அவனும் அவளை பார்த்து ,"இந்த ப்ரொபசர் கார்ல ஒரு ஸ்டூடண்ட்டை ஏத்துறதா இல்ல" என்று அவன் கூறினான்...
அதைக் கேட்டு அவளோ ,"ரொம்ப தான் பண்றீங்க மாமா" என்க அவனோ பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து சென்று விட அவளும் எப்போதும் போல கல்லூரிக்கு சென்றவளை பிடித்து கொண்டாள் ரம்யா..
"ஏய் நீ ஏண்டி ஒரு வாரமா வரல ஒரு போன் இல்ல மெசேஜ் இல்ல நான் உன் மேல ரொம்ப கோபமா இருக்கேன்" என்று அவள் கூறவும்
"சாரிடி உடம்பு சரியில்ல.. நான் போனை எடுக்கல" என வருத்தமாக கூற அதை கேட்ட ரம்யாவின் கோபம் சற்று தணிந்தது..
"என்னமோ எக்ஸ்கியூஸ் சொல்ற அதனால உன்னை மன்னித்து விடுகிறேன் நீ வராத நேரம் ஒரு வாரம் செம ஜாலி அந்த ஹிட்லரும் வரல செமையா என்ஜாய் பண்ணனும் தெரியுமா நீ தான் மிஸ் பண்ணிட்டேன் அவரும் ஒரு வாரம் லீவு.." என்றாள் ரம்யா
"அப்படியா???" என அவள் தெரியாதது போல கேட்டவள்,
"ஏன் அவர் லீவு??" என கேட்க
"அவரோட பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதா கேள்விப்பட்டேன்" என்று கூற அதை கேட்ட அவளோ உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்...
ரமேஷ் மற்றும் அவனின் நண்பர்களை அவள் பார்க்கவே இல்லை...பார்க்கவும் விரும்பவில்லை இப்படி தான் மாணவர்கள் இருப்பார்களா இவ்வளவு கேவலமாக தான் இருப்பார்களா என எண்ணினாள்...
அதனால் அவள் திரு கூறியது போல நடந்தது யாரிடம் கூறாமல் இருந்தாள்...அவளிடம் யாரும் தோண்டி கேட்கவும் இல்லை...
எப்போதும் போல வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டு இருந்தது...
அவனோ எப்போதும் போல வகுப்பில் புலியை போல சீறி நிற்பவன் வீட்டிற்கும் வந்ததும் அமைதியாக நாட்களை கடத்தி வந்தான்...
இதற்கு இடையே தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை என அழைப்பு வந்தது...அதை கேட்டதும் அவன் அவளை அழைத்து கொண்டு ஊருக்கு கிளம்பினான்...
தாத்தாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி தாத்தா மயங்கி கீழே விழுந்து இருந்தார்... பிறகு ராமகிருஷ்ணன் தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து வீட்டிற்கு திரும்ப அழைத்து வந்தார்...அவருக்கு இரத்த அழுத்தம் வந்து இருந்தது.. அதனால் ஏற்பட்ட மயக்கம் தான் வேறு ஒன்றுமில்லை என மருத்துவர் கூறிவிட்டார்...
அப்படி இருக்க, ராமகிருஷ்ணன் தான் திருவை அழைத்த விஷயத்தை கூறவும் அவன் துடித்துப் போனான்...அவளுக்கோ டென்ஷன் அதிகம் ஆகியது...
வரும் வழியில் எல்லாம்," வயசானவர்களை இப்படி விட்டுட்டு தனியா தவிக்க விட்டுட்டு நான் பாட்டுக்கு வந்திருக்கக் கூடாது" என புலம்பிக்கொண்டே வந்தாள்...
அவனே அவர்களுக்கு என்ன ஆனதோ என்ற டென்ஷனில் இருக்கும் பொழுது இவள் மேலும் புலம்பவும் அவன் ஆத்திரத்தில்," கொஞ்சம் வாய் மூடிட்டு வரியா அவங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்று கடுப்போடு அவன் கூறினான்.. அதைக்கேட்ட அவளோ வாயை மூடிக்கொள்ள அவன் கார் அவன் மனம் போல சீறியது...
அவர்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைய அப்போது தாத்தா படுக்கையில் படுத்து இருந்தார்..
ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி உடன் இருக்க பாட்டி தான் இவர்களை கண்டதும் அழ துவங்கி விட்டார்.." வாடா வா உனக்கு இப்பதான் வழி தெரிந்ததா இந்த மனுஷன் செத்தா தான் வரணும்னு இருந்தியா???" என கேட்டார்.. அவன் எதுவும் பேசவில்லை நேராக தன் தாத்தாவின் அருகே போய் அமர்ந்தான்..
அவரோ புன்னகைக்க ,"இப்போ எப்படி இருக்கு தாத்தா???" என கேட்க ,”எனக்கு என்ன ஐயா நான் நல்லா இருக்கேன் நான் தோட்டத்துல வேலை செஞ்சிட்டு இருக்கும்போது மயங்கி விழுந்துட்டேன் அவ்வளவுதான்" என கூறவும் பாட்டியோ அழ ஆரம்பித்தார்...
"பெத்த பையனை பறி கொடுத்துட்டு இதோ இவனுக்காக உயிரை கையில பிடிச்சு நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம் ஆனால் இவன் இப்படி இருக்கான்??? ஏன் எங்களுக்கு ஆசை இருக்காது இவன் ஒரு நல்ல வாழ்க்கை வாழனும்னு ஆசை இருக்காதா சொல்லுங்க" என ராமகிருஷ்ணனை பார்த்து கேட்க அவரோ கைகளை பிசைந்து அமர்ந்து இருந்தார்... என்ன சொல்வது என அவருக்கு தெரியவில்லை...
அவளோ பாட்டியின் அருகே அமர்ந்து," பாட்டி எதுக்கு இப்போ இதையெல்லாம் பேசிட்டு இருக்கீங்க??? நாங்க நல்லா தானே இருக்கோம் எதுக்கு வந்ததும் வராததுமா அவங்களை திட்டறீங்க" என கூற,
"நீ வாயை மூடு டி பெருசா புருஷனுக்கு வக்காலத்து வாங்க வந்துட்டா அவன் உன் கூட வாழாத போதே இப்படி வக்காலத்து வாங்குற வாழ்ந்துட்டு நீ என்ன பேச்சு பேசுவ???" என கூற அவளோ வாயை மூடி கொண்டாள்...
"பாட்டி இப்போ என்ன உங்க பிரச்சனை???"என அவன் கத்தினான்...தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை என அனைவரும் வருத்தப்பட பாட்டியோ இவனை பற்றி பேசவும் இவனுக்கு கோபம் வந்தது...
அவரோ ,"ஏன் டா நான் பேச கூடாது நீ சொல்லு அவளை உன் மனைவியா ஏத்துக்கிட்டு நீங்க இரண்டு பேரும் புருசன் பொண்டாட்டியா வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு சொல்லு பார்ப்போம்" என கூற
இதை கேட்டு அவள் திகைத்தாள்...அவனுக்கும் இப்படி தன்னுடைய தனிப்பட்ட விசயத்தை மற்றவர்கள் முன்னால் தன் பாட்டி கடை பரப்புவதை அவனால் அவ்வளவு எளிதாக ஏற்று கொள்ள முடியவில்லை...
அவளும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை...அப்படி இருக்க அவனோ ,"தாலி கட்டினது நான் தானே எனக்கு அவ கூட வாழ தெரியும் நீ உன் வேலையை பார் அவளுக்கே பிரச்சனை இல்லாத போது உனக்கு என்ன பிரச்சினை????" என்றான்...
அதை கேட்ட பாட்டி ,"கேட்டீங்களா அவன் வாயில் இருந்து வரத கேட்டீங்களா இதுக்கு ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்களோ வெட்கக்கேடு இப்பவும் அப்படியேதான் இருக்காங்க" என்று கூறவும் அவனுக்கு ஒரே அவமானமாக இருந்தது...
" இதுக்கு தான் நான் இங்கே வரலை என்று சொல்றேன் நான் ஒன்னும் இவளை நடுரோட்டில் விட்டுடலையே நல்லா தானே பார்த்துக்கிறேன் கடைசி வரைக்கும் இவளை விடவும் மாட்டேன் இதுக்கு மேல என்ன உத்தரவாதம் குடுக்க சொல்றீங்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும் உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது எனக்கு தெரியல" என அவன் டென்ஷன் ஆனான்...
அதை பார்த்து ராமகிருஷ்ணன் கொஞ்சம் சங்கோஜபட்டு ,"அம்மா அவன் மனசு மாறனும் இல்ல கண்டிப்பா மாறும் கொஞ்சம் அதுவரைக்கும் அவனுக்கு டைம் கொடுங்க அந்த பொண்ணு அழகா அவனை புரிஞ்சுக்கிறா நாமளும் அவனை புரிந்து கொள்ளனும்ல" என்க
"என்னமோ சார் நீங்க சொல்றீங்க நான் கேட்கிறேன் வயசான காலத்துல பயமா இருக்குது சார் எங்கே இவங்க ரெண்டு பேரும் இப்படியே இருந்திருவார்களோன்னு பயமா இருக்கு சார்" என கண்ணீர் வடிக்க,
அவனோ அவள் கல் போல நிற்பதை பார்த்து ,"ஏய் அப்படியெல்லாம் நடக்காதுன்னு உன்னோட பாட்டி கிட்ட சொல்லுடி சும்மா கத்திட்டு என்ன குழந்தை வேணுமா உன் பாட்டிக்கு கொஞ்ச வருஷம் காத்து இருக்க சொல்லு ரொம்ப அர்ஜெண்ட்னா தாத்தா கிட்ட கேக்க சொல்லு" என்று கடுப்போடு அவன் கூற அதைக் கேட்ட ராமகிருஷ்ணன் ,"திரு பெரியவங்க அவங்க கிட்ட என்ன பேசணுமோ அப்படி பேசு" என்று கூற,
"என்னை என்ன சார் பண்ண சொல்றீங்க எப்போ வந்தாலும் கல்யாணம் சொல்லிட்டு இருப்பாங்க இப்போ குழந்தை குழந்தை சொல்றாங்க நான் என்னதான் பண்ணட்டும் எனக்கு புரியல" என்று கூறினான்...அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அமைதியாக இருந்தாள்.. எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை இதில் முடிவு எடுக்க வேண்டியது அவன்தான் என அவள் நின்று கொண்டாள்...
"நீ கொஞ்சம் வெளியே வா உன்னிடம் பேச வேண்டும்" என்று கூற ,"நல்ல புத்தி மதியா எடுத்து சொல்லுங்க சார்" என்று பின்னாலேயே குரல் கொடுத்தார் மயிலாத்தாள்..
"கிழவி உன்னை போட்டு தள்ளமா விடமாட்டேன்" என திரும்பி பார்த்து அவன் கூற அவரோ ,"போடா" என்று அவரும் பதிலுக்கு கூறினார்...
அவளின் கையைப் பிடித்து அழைத்து வந்த ராமகிருஷ்ணன்," என்ன திரு இதெல்லாம்???" என்று கூற ," என்ன சார் பண்ண சொல்றீங்க நான் என்னதான் பண்ணுறது???" என்றான்
"அவங்க சொல்ற மாதிரி நீ அவ கூட வாழலையா???" என கேட்க
"சார் இதெல்லாம் சொல்லி வரது கிடையாது சார் உங்களுக்கு தெரியாதா இரண்டு மனசும் இணையனும். நான் மாயா நினைப்பிலிருந்து வெளியே வரவேண்டும் அதுக்கப்புறம் தான் மத்ததை பத்தி நான் யோசிக்கணும்" என்று அவன் கூற
"இன்னும் எத்தனை நாள் மாயா மாயான்னு உளறிட்டு இருக்க போற போனவ போனவ தான் திரும்பி வரமாட்டா அதுக்காக நீ இப்படியே இருக்கிறது உன்னுடைய முட்டாள்தனம்.. கூடவே ஒரு பொண்ணுக்கு தாலி கட்டி அவளையும் உன்னை மாதிரி உட்கார வச்சிருக்கிறது அதைவிட முட்டாள்தனம்" என்று அவர் கூறினார்... அவர் கூறியதைக் கேட்டு அவனது தலை தாமாக கவிழ்ந்தது..
"உங்க பாட்டி சொல்றத பார்த்தா நீ என்னமோ டிவோர்ஸ் கொடுக்க போறதா சொல்றாங்க" என்று கூற அதைக் கேட்டு அவனும்," இதெல்லாம் அவள் வேலை தான்" என மனதுக்குள் எண்ணி," சார் அது அப்போ இருந்த மைண்ட் செட்டில் சொன்னேன் இப்போ இல்ல" என்றான்...
"அந்த மாதிரி என்னவெல்லாம் இருந்தா உடனடியா மாத்திடு" என்க
அவனோ ,"இப்போ அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்ல சார்" என்று மெல்லிய குரலில் கூற அவரோ," அப்போ வாழலாம்னு முடிவு பண்ணிட்டியா???" என்று கேட்க அவன்," இல்லை" என தலையாட்டினான்...
அதைக் கேட்டு அவரோ அதிர ,"சார் அவளுக்கும், எனக்கும் 12 வயசு வித்தியாசம் நான் அவளை ஒரு ப்ரோடெக்ட் பண்ற ஒரு கார்டியனவே இருந்துட்டேன்.. புருஷன் அப்படிங்கிற தாட் வரவே மாட்டேங்குது என்னன்னு எனக்கு புரியல எனக்கு அவ பார்க்க சின்ன பொண்ணா தான் தெரியுறா என்னால அவளை என்னுடைய ஒய்ஃப்பா அக்ஸப்ட் பண்ணிக்க முடியல" என்றான்...
அதை கேட்ட அவரோ ,"இது தான் உன் பிரச்சனையா???" என கேட்க அவனும் ஆமாம் என்றான்...
"லவ் ஹேஸ் நோ ஏஜ் லிமிட்ஸ் திரு...காதலுக்கு வயது இல்லை திரு அதுனால அந்த எண்ணம் உனக்கு வர தேவை இல்லை...
அவளைப் பார் உன்னை விட்டுக் கொடுக்காமல் எவ்வளவு பாசமா இருக்கா அந்த பாசத்தை நீ கொச்சைப்படுத்தாத அவளுக்கே பிராப்ளம் கிடையாது உனக்கு என்ன பிரச்சனை அப்படி பார்த்தா சேம் வயசு ஆளுக தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லுவ போல அவ கண்ணுல மேல வச்சிருக்க அன்பும் காதலும் நிரம்பி வழியது...
உனக்கு ஒன்னுனா துடிச்சு போற உன்னை யாராவது ஏதாவது சொன்னால் அவ யாருன்னு கூட பார்க்காம கேள்வி கேட்கிறா இதுக்கு மேல அவ உன் மேல வச்சிருக்க காதலை நீ எப்படி வெளிப்படுத்தணும்னு எதிர்பார்க்கிற அந்த காதலை கொச்சைப்படுத்தாத..
மாயா அப்படிங்கற ஒரு சேப்டர் உன் வாழ்க்கையில் இருந்தா இப்போ இல்ல.. மாயாவை உனக்குள்ள ஓரமா ஒதுக்கி வை... ஓரமா பத்திரமா பாதுகாப்பா உனக்குள்ளே இருப்பா... எங்கேயும் போயிட மாட்டா ...கூடவே கார்த்திகா அவளை உன் மனசார ஏத்துக்கோ அவளை சிம்மாசனம் போட்டு உட்கார வை அவளை காதலிக்க முயற்சி பண்ணு ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணாத" என்று அவர் காதலியின் தந்தையாக இருந்தாலும் அவனுடைய குருவாக இருந்தாலும் அவனுடைய தந்தையின் ஸ்தானத்தில் இருந்து அவனுக்கு எப்படி அறிவுரை கூற வேண்டுமோ அதுபோல அவனுக்கு அறிவுரை கூற அதைக் கேட்ட அவனும் சரி என்பது போல தலையாட்டினான்....
