வேந்தன் : 13
அத்தியாயம் : 13
அவன் அணைப்பிலயே அவள் இருந்தாலும் குளிரால் அவள் உடல் நடுங்குவதை காட்டிலும் நடந்த சம்பவத்தால் அவள் உடல் குலுங்கியது..அவளால் சற்று முன் நடந்ததை அவ்வளவு எளிதில் மறக்க முடியவில்லை..
அவனும் பயந்துவிட்டான் என எண்ணி, அவளை அணைத்த வாக்கிலேயே எதுவும் பேசாமல் கார் பகுதிக்கு அழைத்துச் செல்ல மழையில் இருவரும் தொப்பலாக நனைந்து இருந்தனர்...
"நீங்க வரலையா எனக்கு என்ன ஆகி இருக்கும்? என்று வார்த்தையால் சொல்ல முடியல ஒருவேளை அவன் என்கிட்ட தப்பா நடந்துகிட்டா??? " என அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்து கேட்டாள்...
"அதுதான் நடக்கலையே அப்புறம் என்ன???" என அவன் கூற,
" ஒருவேளை நடந்து இருந்தா" என அவள் அதிர்ச்சி மாறாமல் கேட்டாள்...அவள் முகம் இன்னும் தெளிவு அடையவில்லை... மழை பேய் மாரியாக பொழிந்தாலும் அவள் உள்ளம் கொதித்துக் கொண்டு இருந்தது...
"நடந்திருந்தா என்ன ரோட்ல போற நாய் நம்ம மேல பாய்ந்ததுன்னு சொல்லி நாம என்ன அப்படியே இருந்துடுவோமா என்ன??? மூவ் ஆன் பண்ண மாட்டோமா???" என அவன் கூற,
"உங்களால் எவ்வளவு ஈசியா சொல்ல முடியுது என்னால் அப்படி யோசிக்கவே முடியல" என நடுங்கி கொண்டே கூறியவள், கார் அருகே வந்ததும் அவன் கார் கதவை திறக்க ,"ஒரு அஞ்சு நிமிஷம் நான் உங்களை கட்டிப்பிச்சுக்கவா எனக்கு ஒரே படபடப்பா இருக்கு" என தயக்கமாக கேட்டாள்..
அவள் முகத்தில் பயம் மட்டுமே தெரிந்தது.. அவள் பயத்தில் தான் இப்படி பேசுகிறாள் என்பதை புரிந்தவன் தன் கைகளை விரிக்க அதில் வாககாக அவளும் நுழைந்து கொண்டாள்...
திருவுக்கும் நடந்த சம்பவத்தை எண்ணி கோபம் தான் அவன் வரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்ற பதற்றம் அவனுக்கும் இல்லாமல் இல்லை ஆனால் தன்னுடைய பதட்டத்தை அவளிடம் காட்டக் கூடாது என்று பாதிக்கப்பட்டவளுக்கு ஆறுதலாக வார்த்தைகளை கூறினான்..
அப்படி இருக்க கொட்டும் மழையில் நனைந்தபடி அவனை அணைத்துக் கொண்டு இருந்தாள்...
அவளின் இதயத்தின் படபடப்பு இன்னும் போக வில்லை... அவள் இதயம் துடிப்பதை அவன் உணர்ந்தான்.. அவள் உடல் குலுங்குவதையும் அவனது தேகம் நடு ரோடு என்பதை அவளும் மறந்தான்.. அவனும் மறந்தான் அப்படியே இருவரும் அணைத்த படி நின்று கொண்டிருந்தனர்...
அவனது நெஞ்சில் சூடான நீர் வந்தது.. அவள் அழுகிறாள் என்பதை அவன் புரிந்து கொள்ள அவன் கைகள் தாமாக அவளின் முதுகை தடவி கொடுத்தது அதில் சற்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அவன் அவளை காரில் ஏற்றினான்...
அவனும் ஏறிக்கொண்டு கார் நேராக வீட்டிற்கு சென்றது...காரில் எதுவும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை அவள் கை கால்கள் இன்னும் நடுங்கிக் கொண்டு தான் இருந்தன....வீட்டிற்கு வரும் வழியில் மழை காரணமாக கரண்ட் தடைப்பட்டு இருந்தது எல்லா பக்கமும் ஒரே கும்மிருட்டாக இருக்க அவளோ கண்களை மூடிக்கொண்டாள்...
வீடு வரவும் அவன் வண்டியை நிறுத்த அவள் அப்போதும் கண்களை திறக்காமல் அமர்ந்திருக்க, அவனும் இறங்கி அவள் பக்க கதவை திறந்தவன் ,”இறங்கு” எனக் கூற அவளும் இறங்கினாள் எல்லா பக்கமும் இருட்டாக இருந்தது...
பிளாட்டிலும் கரண்டு இல்லை அவன் தன்னுடைய மொபைல் போனின் டார்ச் லைட்டை ஆன் செய்தவன் அவளை அழைத்துக் கொண்டு செல்ல அவளோ மேலும் மேலும் அவனோடு ஒண்டிக் கொண்டே இருந்தாள்...
அவன் எதுவும் சொல்லவில்லை... அவனும் அவளுக்கு ஆதரவாக அவளை அணைத்த படி தான் அழைத்து வந்தான்...வீட்டுக்குள் நுழைந்த போது இருவரும் நனைந்து இருக்க அவனோ ,"நீ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா" என்க அவளோ ,"நீங்களும் வரிங்களா எனக்குன்னு இருட்டுன்னா பயம்" என்க..
அவனோ நானா எப்படி இவள் தெரிந்து தான் பேசுகிறாள்ளா என எண்ணி ,"நான் எப்படி இதோ என்னோட போன் டார்ச் ஆன் பண்ணி இருக்கேன் அந்த வெளிச்சத்தில் டிரஸ் மாத்திட்டு வா" என்று கூற அவளோ ,”சரி” என அவனுடைய போனை வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அந்த சிறிய வெளிச்சத்திலும் அவளுக்கு பயமாக இருந்தது...
எப்படியோ தன் உடலை சுத்தம் செய்தவள் உடையை எடுத்து அவளுடைய பான்ட்டை முதலில் போட்டவள் டாப்பை மாற்றும் போது அவனுடைய ஃபோனின் சார்ஜும் முடிந்து விட அது அணைந்து விட்டது... ஐயோ என டாப் கூட மாற்றாமல் அவள் அலற இருட்டுக்குள்ளேயே அவளுடைய சத்தம் வந்த திசையை பார்த்து அவன் ஓட ,"என்ன ஆச்சு" என கேட்டு கொண்டே அவன் போக ,"போன்ல சார்ஜ் இல்ல சுத்தமா இருட்டா இருக்கு பயமா இருக்கு" என அவள் கத்தினாள்... அவள் பகுதி உடையை தான் அணிந்து இருக்கிறாள்..
இருட்டில் அவளும் ஓட அவனும்," என்னாச்சு" என பதைபதைப்போடு வர இருவரும் முட்டிக்கொள்ள அவன் அவள் அருகே வந்து விட்டான் என தெரிந்ததும் கார்த்திகா அவனை அணைத்து கொண்டாள்..
அவள் அவன் மீது உரசவும் அவள் மேலாடை எதுவும் இல்லாமல் இருக்கிறாள் என்பதை உணர்ந்த அவனது நாடி நரம்புகள் எல்லாம் சிலிர்த்துக்கொண்டு எழுந்தது...அவளுக்கு அது எல்லாம் தோன்றியதோ என்னவோ தெய்வத்துக்கே வெளிச்சம்...
இத்தனை வருடமாக மாயாவை எண்ணி தவ வாழ்க்கை போல வாழ்ந்து வருபவனுக்கு பெண்ணின் தேகம் உரசவும் அவனுள்ளே மின்சாரம் பாய்ந்தது...
அவள் வேண்டுமென்றே செய்யவில்லை அது வேறு விஷயம்...அவனுக்கு அது நன்றாக தெரியும்... அவளுக்கு இருட்டு என்றால் சிறுவயதிலிருந்தே பயம் அது அவனுக்கும் தெரியும் பல நாட்களில் அதாவது அவள் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் இறந்து ஒரு சில வருடங்கள் மழை வந்தாலோ இல்லை இடி இடித்தாலோ கரண்ட் போனாலும் வேகமாக ஓடி வந்து இவன் அருகே தான் படுத்துக் கொள்வாள்...
அப்படி இருக்க, கொஞ்சம் பெரிதாகவும் தான் அவள் அதை மாற்றி கொண்டாள். அப்படி இருக்க அவள் தேகம் உரச அவனின் உணர்வுகள் தூண்டப்பட்டன.. அதனால் அவன் எண்ணங்கள் தாறுமாறாக சென்றன.. இருந்தாலும் தன் கண்ணியத்தை அந்த இடத்தில் காப்பாற்ற அவன் எண்ணினான்.. அவளே இப்பொழுதுதான் சற்று நடந்த சம்பவங்களை மறந்து இருக்க அந்த நேரத்தில் அவளிடம் தவறாக நடக்க ஏனோ அவனுக்கு தோன்றவில்லை...
அவன் லேசாக அவளை விலக்கி ,"அதுதான் நான் இங்கே இருக்கேன்ல்ல" என்று கூற ,"உங்களுக்கு தெரியும் தானே எனக்கு இருட்டுனா பயம்" என்று அவள் அழுது கொண்டே கூற," சரி நான் இங்கே இருக்கிறேன் டிரஸ் மாத்து" என்று கூறினான்...
அப்பொழுதுதான் அவள் ஆடையின்றி இருக்கிறாள் என அவளுக்கே உறைக்க அவள் முகம் செவ்வானமாய் சிவந்தது.. ஐயோ என்ன காரியம் பண்ணிட்டேன் என நினைத்த அவளோ நல்லவேளை இருட்டுக்குள்ள நடந்துச்சு என எண்ணி வேகமாக தன் உடைய அணிந்தாள்...
அதுவரை அவன் நனைந்த உடையோடு நிற்க அவள் உடை மாற்றி முடித்ததும் அவனோ வெளியே மழை பேய் மாரியாக பெய்து கொண்டிருக்க ,"இன்னைக்கு ஃபுல்லா இப்படித்தான் இருக்கும் போல நீ இங்கே உட்காரு நான் டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்" என்று கூற அவளோ," தயவு செய்து என்னை தனியா மட்டும் விட்டுட்டு போயிடாதீங்க எனக்கு பயமா இருக்கு" என்று கூறினாள்...
அவனுக்கோ," இது என்ன டா வம்பா போச்சு" என எண்ணி ,"சரி கண்ணை மூடிட்டு உட்கார்" என கூற அவளோ சரி என கண்ணை மூடி கொள்ள அவனோ வேகமாக இருட்டில் அவனுக்கு கிடைத்த ஷார்ட்ஸை மட்டும் அணிந்து கொள்ள அதற்குள் நூறு தடவை அவள் அவனிடம் பேசி இருப்பாள் அவனுக்கோ போதும் போதும் என்று ஆனது....
இறுதியில் அவன் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு மேலாடை இன்றி நிற்கவும் ஒரு இடி சத்தம் கேட்க சரியாக இருக்க அவளோ ,"ஐயோ அம்மா" என அலறி எழுந்து மீண்டும் அவன் மார்பில் தஞ்சம் புகுந்து கொண்டாள்...
அவனோ," அடேய் என்னை ஏன் டி இப்படி சோதிக்கிற" என்ற நிலையில் தான் அவன் இருந்தான் இருந்தாலும் அவள் பயப்படுகிறாள் என்பதை உணர்ந்த அவனோ அவளை ஆதரவாக அணைக்க,
"தயவு செஞ்சு கரண்ட் போற வரை என் கூடவே இருக்கீங்களா???" என கேட்டாள்...
அவன் சரி என்று கூறி படுக்கை அருகே சென்று அவளை அழைத்து கொண்டு அமர்ந்து விட்டான்...
அவளோ ஒவ்வொரு இடிக்கும் அவனோடு ஒன்ற அவனுக்கோ நாடி நரம்பு எல்லாம் தறிகெட்டு ஓட அவன் நிலைமை சற்று பரிதாபத்துக்குரிய நிலையில் தான் அவன் இருந்தான் ஆனால் அவளுக்கு அது எல்லாம் இல்லை போலும்...
அவனின் உடல் சூட்டில் தன்னுடைய தேக குளுமையை தணித்து கொண்டாள்...
ஒரு கட்டத்தில் இடி நிற்க அவனோ ,"கொஞ்சம் தள்ளி உட்கார்" என்க
"இல்லை நீங்க என்னை விட்டுட்டு போயிடுவீங்க"
"நான் போக மாட்டேன் நீ தள்ளி உட்காரு" என்றான் அவன்..
"எனக்கு இருட்டுனா ரொம்ப பயம் ப்ளீஸ் ப்ளீஸ் என் கூடவே இருக்கிங்களா" என அவள் கெஞ்ச,
"இருக்கேன்டி நீ தள்ளி உட்கார்" என்று அவன் கடுப்போடு கூறினான்... அவன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவன் உடல் உடலின் தேவைக்காக அவள் மீது பாய கூடும் என்ற நிலையில் தான் அவன் இருந்தான்...
அதைப் பற்றி எல்லாம் உணர்வே இல்லாத அவளோ,"நான் வேணா கொஞ்சம் படுத்துக்கவா" என அவள் கேட்க,
"படுத்து தொலை அப்போ தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் இன்னும் கொஞ்சம் நீ உரசினா என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது" என்றான் அவன்..
"என்ன நடக்கும்?? நான் உங்களை தொல்லை படுத்துறேனா என் மேல கோபமா" என அவள் கேட்க
"ம்ம் நீ தள்ளி படுக்கலேன்னா என்ன நடக்கும் நமக்கு இரண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் நய்ட் நடக்கும் மூடிட்டு படுடி" என்றான் அவனோ கோபமாக
அதை கேட்டவளுக்கு சிரிப்பு தான் வந்தது."கோபமா திருண்ணா" என்க
அவனோ மேலும் கடுப்போடு ,"இனி என்னைத் திரு அண்ணான்னு கூப்பிட்ட சாவடிச்சிடுவேன்" என்க
"அப்போ உங்களை எப்படி கூப்பிடுறது???" என அவள் கேட்க
"நீ எதுவும் கூப்பிட வேண்டாம் கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு பேசாம இரு"
அவளோ அந்த நேரத்தில் ,"பழையபடி உங்களை மாமா என்று கூப்பிடவா??" என கேட்க," சரி கூப்பிட்டு தொலை.." என்றான் அவன்...
"நான் தூங்கினதுக்கு அப்புறம் நீங்க என்னை விட்டுட்டு போக மாட்டீங்க தானே இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்கேயே படுக்குறீங்களா" என்ன அவள் கேட்டாள்...
"சரி நீ தூங்கு" என்றான் அவன்
"என் மேல கோபமா மாமா???"
"எதுக்கு???"
"நான் படத்துக்கு போனதனாலதான அவங்க என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாங்க" என்று கூற ,"அவங்க அப்படி நடந்ததுக்கு நீ எப்படி காரணமாக கண்டதை யோசிச்சிட்டு இருக்காமல் படுத்து தூங்கு" என இப்பொழுது தான் அவள் அந்த நினைவு இல்லாமல் இருக்கிறாள் மீண்டும் அதை எண்ணி மூட் அவுட் ஆக வேண்டாம் என்று கருதி அவன் கூற அதைக் கேட்ட அவளோ அப்படியே உறங்கி போனாள்...
அவனும் என்ன செய்வது என தெரியாமல் தான் எழுந்தால் அவள் உறக்கம் தடைபடுமோ என்று கருதி அவனும் அப்படியே அமர்ந்து இருக்க அதற்குள் அவனுடைய உணர்வும் சற்று அடங்க இருட்டுக்குள் என்ன செய்ய இயலும் பால்கனியில் பெய்யும் மழையை பார்த்தபடி அமர்ந்து இருந்தவன் எப்பொழுது அப்படியே அந்த படுக்கையில் சரிந்து படுத்தான் என அவனுக்கும் தெரியாது...அவள் அருகே படுத்து அப்படியே உறங்கி போனான்...
விடியல் அமர்க்களமாக விடிய தன் மார்பில் ஒண்டி படுத்து உறங்கி கொண்டிருக்கும் கார்த்திகாவை பார்த்தவன் அதிர அவன் மெல்ல அவளை விலக்க அவளுக்கோ அனல் போல தேகம் எல்லாம் கொதித்தது...
நேற்றைய இரவின் தாக்கம் என அவன் எண்ணினான்..அவளை அழைக்க அவளால் எழுந்து கொள்ளவே முடியவில்லை...அவள் உடல் காய்ச்சலின் வீரியத்தில் தூக்கி தூக்கி போட்டது...
டெம்பரேச்சர் அவன் செக் செய்ய அது அதிக காய்ச்சல் என காட்ட அவனும் அதிர்ந்தான்... வேகமாக அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்...
அங்கு அவளுக்கு பரிசோதனை செய்துவிட்டு மருந்து கொடுத்து அனுப்பி வைத்தனர்...அவன் தான் அவளை பார்த்து கொண்டான்..
அவளுக்கு உணவு தயாரித்து கொடுப்பதில் இருந்து அவளை கவனித்து கொள்வது வரை அவனே பார்த்து கொள்ள அவளை விட்டு இம்மியும் அவன் விலகவில்லை...
இரவு ஆனதும் அவளின் கெஞ்சல் மொழிக்கு உடன்பட்டு அவள் அருகேயே படுத்து உறங்கினாள்...
கிட்டத்தட்ட ஒரு வாரம் எப்படி போனது என்றே தெரியவில்லை...அவள் ஓரளவுக்கு தேறி விட்டாள் என்றதும் அவன் அன்றைய தினம் காலேஜ் செல்ல தயாராகிக் கொண்டிருக்க அப்போது தான் அவள் மெல்ல எழுந்தாள்...
அவளுடைய வாழ்க்கையில் அழகான இந்த ஒரு வாரம் அவளின் மன பொக்கிஷத்தில் நிச்சயமாக இடம்பெறும் என்பதில் ஐயமில்லை அவளுடைய மனதில் அவன் ஒரு படி மேலே போய் விட்டான் அவனுடைய கண்ணியமான அக்கறையும் அவளை கவனித்துக் கொள்ளும் விதமும் அவள் மனம் அவன் பால் சரிய துவங்கியது...
தன் மீது யாராவது அக்கறை எடுத்துக் கொள்வது பொதுவாகவே பெண்களுக்கு பிடிக்கும் யாருமே இல்லாத பாசம் காட்ட யாருமே இல்லாத ஒருவருக்குத்தான் மற்றவர்கள் காட்டும் சிறு அக்கறை கூட பெரிய விஷயமாக தென்படும் அப்படி அவன் காட்டும் அக்கறையும் அவளைப் பார்த்துக் கொள்ளும் விதத்தையும் எண்ணி அவளுக்கு அவன் மேல் காதல் அளவுக்கு அதிகமாக பொங்கியது...
அவன் எப்பொழுதும் போல காய்ச்சல் இருக்கிறதா என அவள் நெற்றியை தொட்டுப் பார்க்க காய்ச்சல் இல்லை அவளைப் பார்த்த அவனும் ,"நீ காலேஜ் வரல??" என கேட்க," நான் வரல" என அவள் கூறினான்...அதைக் கேட்டு அவனுக்கு கடுப்பானது...
