வேந்தன் : 12
அத்தியாயம் : 12
அவன் வந்து அவளை காப்பாற்றியதும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது..நல்ல வேளை தப்பித்தேன் என எண்ணினாள்...அவனுக்கு ஒரு நன்றியாவது சொல்ல வேண்டும் என எண்ணி கொண்டவள் அவன் வருகைக்காக காத்து இருந்தாள்...அதுவரை வகுப்பில் நேரம் போனதே தெரியவில்லை...
எப்போதும் போல அவன் வகுப்புக்கு வந்தான்...அவன் வரவும்," ஹிட்லர் வந்துட்டாரு" என்று கமெண்ட் அடித்த ரம்யா எப்போதும் போல தலையை குனிந்து அமர்ந்து கொண்டாள்.. அவள் மட்டுமல்ல அந்த வகுப்பு எப்போதும் போல தலையை குனிந்து அமர்ந்து கொள்ள அந்த சமயம் தன் கைகளில் அவள் தேங்க்ஸ் என எழுதி வைத்து இருந்தாள்...
அதை எடுத்து அவனுக்கு காட்டி கொண்டு நிமிர்ந்து அமர்ந்து இருக்க அதை அவன் ஒரு பார்வை பார்த்தவனுக்கு மேலும் கடுப்பாகி ,"கார்த்திகா கெட்டப் " என்றவன் அவளிடம் கேள்வி கேட்க துவங்கினான்...
சரமாரியாக கேள்வி கேட்க துவங்க அவளும் சளைக்காமல் பதில் கூற, அவனோ இறுதியில் சுற்றி வளைத்து ஒரு கேள்வியை கேட்க அவளுக்கு அதற்கான விடை தெரியவில்லை... இதுதான் சாக்கு என்று ,"கெட் அவுட்" என்று கூறினான்...
அவன் வெளியே அனுப்புவான் என அவளும் எதிர்பார்க்கவில்லை ..." சார் நான் எல்லா கேள்விக்கும் சரியா தானே பதில் சொன்னேன்" என அவள் கூற,
"நான் கேட்ட கடைசி கேள்விக்கு நீ பதில் சொல்லல" என்று அவன் கூற, அவன் வகுப்பில் உள்ள மாணவர்களும் எதிர்பார்க்கவில்லை ஏனெனில் அவன் ஒரு கேள்வி கேட்பான் தெரியவில்லை என்றால் திட்டி அமர வைத்து விடுவான்.. அப்படி இருக்க, இவளிடம் பல கேள்விகள் கேட்டு அனைத்திற்கும் அவள் பதில் அளித்தும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்காமல் இருக்க, அதை காரணம் காட்டி அவன் வெளியே அனுப்பவும் அனைவருக்கும் அதிசயமாகத்தான் இருந்தது...
அவளோ தயங்கிக் கொண்டு அங்கேயே நிற்க, அவனோ கொஞ்சம் கூட இரக்கமின்றி ,"இப்ப நீ வெளியே போகல நான் வெளியே போயிடுவேன்" என்று கூறினான்..
அதை கேட்டவள் அதிர்ந்து முதன்முறையாக அவள் வெளியே நிற்கிறாள்.. அவளுக்கு என்னவோ மிகவும் சங்கடமாக இருந்தது...ரம்யாவுக்கு இதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை...
தன் தோழி வெளியே நிற்பதை பார்த்தவள் திரும்பித் திரும்பி அவளையே பார்த்துக் கொண்டு இருக்க ,"ரம்யா யூ மே ஆல்சோ கோ ஏன் உன்னோட ப்ரெண்ட் வெளியே நிற்கிறத பார்த்துட்டு ரொம்ப வருத்தமா இருக்கா?? அவளையே பார்த்துட்டு இருக்க ஒரு கொஸ்டினுக்கு கேள்வி கேட்டா சொல்ல துப்பு இல்ல தலையை குனிஞ்சு உட்கார்ந்து கொள்வது அப்படியே கமெண்ட் அடிச்சிட்டு இருக்கிறது என்ன எதுவும் தெரியாது நினைச்சுட்டு இருக்கியா?? அதுதான் உன் பிரண்டு வெளியே நிற்கிறாளே நீயும் கூட சேர்ந்து நில்லு போ " என்றான்...
இவளும் அவளும் தான் கூட்டு என நன்றாக தெரியுமே அதனால் அவன் இருவரையுமே வெளியே அனுப்பியவன் மீதம் இருப்பவர்களுக்கு பாடம் எடுக்க துவங்கினான்...
வெளியே நின்று கொண்டிருந்த ரம்யா தன் தோழியிடம் ,"இந்த ஆளை எங்கே இருந்து புடிச்சாங்கன்னு சத்தியமா எனக்கு தெரியல நீ அவ்வளவு கேள்விகளுக்கு பதில் சொன்ன கடைசியா ஒரு கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்று சொன்னதும் வெளியே துரத்திட்டாரு... இவரை எல்லாம் அதிசய பீஸ்ன்னு மியூசியத்தில் தான் வைக்கணும்" என்க
அவளுக்கு தான் எதற்காக வெளியே வந்தோம் என நன்றாக தெரியுமே அதனால் ,"பரவால்ல விடு அவர் அப்படித்தானே" என்று கூறவும் ,"அவர் வேணும்னே பண்ற மாதிரி எனக்கு தோணுச்சு" என்று கூறவும் ,”என்னமோ தெரியல” என அவளும் மழுப்பி விட்டாள்...
வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம் அவனிடம் எப்படி ஆவது நன்றி கேட்டு விட வேண்டும் என எண்ணிக்கொண்டே வீட்டிற்கு வந்தவள் உடைமாற்றி ஒரு காபியை குடிப்பதற்குள் அவன் வந்தான்...
அவன் வரவும் ,"காபி வைக்கட்டுமா" என கேட்க, அவனை முறைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்த கதவை தாழிட்டவன் உடைமாற்றி பிறகு வெளியே வந்தவன் அவனுக்கான காபியை தயாரிக்க அவளோ அவனிடம் சென்று," இன்னைக்கு என்னை காப்பாற்றினதுக்கு ரொம்ப நன்றி.. நீங்க வரலைன்னா நான் பயத்திலேயே செத்து இருப்பேன்" என ஒரு வார்த்தை தான் கூறியிருப்பாள்...
அதற்குள் அவளைப் பார்த்து ,"என்கிட்ட மட்டும் வாய் கிழிய பேச தெரியுதுல எவனாவது ஒருத்தன் நம்மகிட்ட அத்து மீறும் போது செருப்பு கழட்டி அடிக்கணும்னு தோணாது தேவையில்லாததெல்லாம் நிறைய கத்து வச்சிருக்கியே தேவை இருக்கிற இதையும் கத்து வச்சா தான் என்ன???" என கேட்டான்..
அவன் அப்படி கேட்டதிலும் நியாயம் உண்டு அவள் அங்கேயே அவனிடம் பிரச்சனை செய்திருந்தால் அவன் எந்த அளவுக்கு செய்திருக்க மாட்டான் ஒரு ஆண் தன்னிடம் அத்துமீற வருகிறான் என்று தெரிந்தும் அவனிடமிருந்து போராடாமல் விலகி நிற்காமல் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
அவன் திட்டவும் அவளோ ஒரு அடி பின்னால் சென்று," அவங்க பக்கத்துல வரவும் எனக்கு என்ன பண்ணனும்னு தெரியல" என்று கூற அவனுக்கு அதைக் கேட்டு மேலும் கடுப்பு ஆனது...
"போ இன்னைக்கு துப்பட்டா மேல கைய வைப்பாங்க நாளைக்கு உன் மேல கையை வைப்பாங்க பார்த்திட்டு சும்மா இரு இதுல தேங்க்ஸ் வேற" என கூறி விட்டு செல்ல அவளுக்கு அவன் கூறுவது தெளிவாக புரிந்தது...
இனி பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என அவள் எண்ணி கொண்டாள்...
இப்படியே நாட்கள் செல்ல அவர்களுக்குள் எந்த விதமான மாற்றமும் பெரிதாக ஏற்படவில்லை அவர்கள் அவரவர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர்...
அந்த நேரத்தில் கார்த்திகாவின் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் சேர்ந்து ஒரு பெரிய ஹீரோவின் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கு அந்த திரைப்படத்திற்கு அனைவரும் சேர்ந்து போவோம் என முடிவு செய்தனர்.. இதற்கு அனைவரும் உடன்பட இவளுக்கு பயம் அவனிடம் கேட்காமல் எப்படி சம்மதம் கூறுவது என பயந்து கொண்டு இருந்தாள்...
ரம்யா," ஏ ஜாலியா இருக்கும் டி உனக்கு ஓகே தானே நாங்க இப்படி எந்த படம் ரிலீஸ் ஆனாலும் எல்லாரும் ஒட்டுக்கா சேர்ந்து போய் பார்ப்போம் செமையா இருக்கும்" என்று கூற
"வீட்ல விடுவாங்களான்னு தெரியலையே அது தான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்று கார்த்திகா கூறினாள்...
"அதெல்லாம் விடுவாங்க இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்டுட்டு இருப்பாங்க" என அவள் கூற
அவள் வாழ்க்கையில் இதுபோல் அவள் நண்பர்களோடு சேர்ந்து இப்படி எல்லாம் சுற்றியதே இல்லை அதனால் அவளுக்கு பயம் அதிகமாக இருந்தது ஆனால் ரம்யா விடுவேனா என்று ஒத்த காலில் நின்று கொண்டிருந்தாள் ,"நீ கண்டிப்பா வந்தே ஆகணும் இல்லை நானே உங்க வீட்டுல கூப்பிட்டு பேசிடுவேன்" என்க
இவள் செய்தாலும் செய்வாள் என்று எண்ணி இல்லை நானே பேசி பார்க்கிறேன் என்று கூறியவள் அவன் வருகைக்காக காத்திருக்க அவனும் வந்தாள்...
அவன் அவன் வேலையில் மூழ்கி இருக்க ,"எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்" என தயங்கிக்கொண்டே கேட்டாள்...
"என்ன??"
"பிரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து படத்துக்கு போறாங்க என்னையும் கூப்பிட்டாங்க ரம்யாவும் வரா" என்க
அதை பார்த்தவனோ என்ன எண்ணினானோ தெரியவில்லை," எத்தனை மணிக்கு ஷோ" என்க
"இவனிங் ஷோ" எனவும் ,"ம்ம் ஓகே படம் முடிஞ்சா மெசேஜ் பண்ணு" என்றான்...
என்ன ஒரு அதிசயம் கேட்ட உடனே சம்மதம் சொல்கிறான் இவனுக்கு என்ன ஆனது என அவள் பேய் முழி முழிக்க அவனோ அவளை கண்டு கொள்ளாமல் இருந்தான்...
அதற்கு ஒரு காரணம் உண்டு இரண்டு நாட்கள் முன்பு அவள் பாட்டியிடம் பேசி கொண்டிருக்கும் போது ,"என்ன டி லீவ் நாள் அதுவுமா வீட்ல இருக்கன்னு சொல்ற ஏன் அந்த ஊரை சுத்தி பார்க்கலாம்ல அவன் கூட்டிட்டு போகிறானா???" என அவர் கேட்க
அவளோ," நான் எங்கேயும் போனது இல்லை பாட்டி" என கூறி நிறுத்தி விட்டாள்..இங்கே வந்தது முதல் வீடு விட்டால் கல்லூரி கல்லூரி விட்டால் வீடு இப்படி தான் அவள் சுற்றி கொண்டிருக்கிறாள் ஒரு கடை எப்படி இருக்கும் என கூட அவளுக்கு தெரியாது அப்படி இருக்க, அவள் இன்று அவளாக வந்து கேட்கவும் நாம தான் எங்கேயும் அவளை அழைத்து செல்லவில்லை அவளாவது போகட்டும் என எண்ணி கொண்டாள்..
அதான் இவளின் தோழி ரம்யா இருக்கிறாளே அவள் பத்திரமாக இவளை பார்த்து கொள்வாள் என எண்ணி அவன் ஓகே சொல்லி விட்டான்..
அவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது... அடுத்த நாள் தான் இவர்கள் திரைப்படத்திற்கு செல்ல வேண்டிய தினம் அவனிடம் சொல்ல அவனோ ,"அங்கே எப்படி போவ???" என கேட்டான்..
"ரம்யா பஸ்ல வர சொல்லி இருக்கா அவ பஸ் நம்பர் எல்லாம் சொல்லிக் கொடுத்து இருக்கா" என்று கூறவும் அதைக் கேட்டு அவனும் நம்பிக்கை இல்லாமல் ,"நான் கொண்டு போய் டிராப் பண்றேன்" என்று கூற அவளோ தயங்கினாள்..
"என்ன ஆச்சு" என அவன் கேட்க ,"இல்ல யாராவது பாத்துட்டா???" என கேட்க," நான் காரில் இருந்து இறங்க மாட்டேன் வா" என அழைத்து சென்றான்..
ரம்யா கூறிய இடத்துக்கு வந்து அடைந்ததும் அவள் தான் முதல் ஆளாக வந்து இருக்க காரில் இருந்து அவள் இறங்கப் போகவும்," கவனமா இரு படம் முடிஞ்சதும் மெசேஜ் பண்ணு..இதே ஸ்டாப்ல வெயிட் பண்ணு நான் வரேன்" என கூறினான்..
சரி என கூறி அவள் காரில் இருந்து இறங்க அவனோ காரை அவளை விட்டு ஒரு பத்தடி தொலைவில் நிறுத்தியவன் ரம்யா வர காத்து இருந்தான்...அதை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது...
அவள் அவர்களை வெகு நேரம் காக்க வைக்காமல் அடுத்த பஸ்ஸில் ரம்யா வந்து இறங்க அவள் வந்து விட்டாள் என்பதை உறுதி செய்த பின் அவன் காரை எடுத்து சென்றான்...
அவள் மனதுக்குள்ளோ சந்தோஷம் ,"இவ்வளவு அக்கறையா எனக்காக நிக்கிறீங்க???" ஆனா இப்படி விரைப்பாக எல்லாமே செய்யறீங்களே ஏன் இப்படி ஏன் உங்களையே ஏமாற்றுகிறீர்கள்? உங்களால என்னை அவ்வளவு சீக்கிரம் விட முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும் ஆனால் நீங்கதான் ஒத்துக்க மாட்டேங்கிறீங்க" என மனதுக்குள் எண்ணி கொண்டவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது...
அவனுக்கும் அவனுடைய மனதில் அதே கேள்விதான் ஓடிக்கொண்டிருந்தது.. அவளை ஏன் இப்படி பின்தொடர்கிறோம் என அவனுக்கே புரியவில்லை.. அவள் ஏதாவது செய்ய நினைத்தால் கூட அவளுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற எண்ணம் அவனுள் அவனை ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கிறது என்று தான் கூற வேண்டும்...
பிறகு அவளின் நண்பர்கள் படை வர அனைவரும் சேர்ந்து படத்திற்கு சென்றனர் அந்த தியேட்டரை அதிரும் அளவுக்கு அவர்கள் மகிழ்ச்சியாக படத்தை கண்டுகளிக்க இப்படி எல்லாம் அவள் வாழ்க்கையில் ஒரு திரைப்படத்தை இந்த குதூகலத்துக்கு மத்தியில் பார்த்ததே இல்லை என்று கூறலாம் அவளுக்கு அவ்வளவு அதிசயமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது...
படம் முடிந்து வெளியே வரும்பொழுது நன்றாக இருட்டி இருந்தது மழை வேறு வரும் லக்ஷணம் தென்பட்டது.. அதனால் நண்பர்களே எல்லாம் மாணவிகளிடம் பொதுவாக ,"மழை வர மாதிரி இருக்கு சீக்கிரம் வீடு போய் சேருங்க" என்று கூறி அவர்களை அனுப்பி வைக்க அவர்களும் பஸ் ஸ்டாப்பில் நின்று ஒவ்வொருவராக பஸ் ஏற துவங்கினர்...
இவன் வேறு வருகிறான் என்று கூறவும்," ரம்யா இந்த பஸ் உன்னுடைய ஏரியாவுக்கு போகும் டி ஏறு" என கூற அதிலெல்லாம் அவள் ஏறவில்லை மாறாக," படம் முடிந்து விட்டது நான் பஸ் ஸ்டாப்பில் இருக்கிறேன்" என அவனுக்கு மெசேஜ் மட்டும் அனுப்பினாள்..
"இல்ல உன்னோட பஸ் போனதுக்கப்புறம் நான் போகிறேன்" என்று அவள் மழுப்ப," நீ சென்னைக்கு புதுசா இல்ல நான் புதுசா???" என ரம்யா கிண்டலாக கேட்டாள் அதற்குள் மழை வெளுத்து விட்டது...
ரம்யாவுக்கு இந்த தியேட்டர் இருக்கும் பகுதியில் இருந்து அவள் வீடு கொஞ்சம் தூரமாக இருக்கும் பஸ்ஸோ அதிகமாக இருக்காது ஆனால் கார்த்திகாவுக்கு பஸ் நிறைய இருக்கும் அப்படி இருக்க ரம்யாவோ சமயமாவதை பார்த்து லேசாக டென்ஷனாக துவங்கி விட்டாள்...
அவள் டென்ஷன் ஆவதை பார்த்து," ஏய் வர பஸ்ல நீ போடி நான் பாத்துக்குறேன் இல்லனா வீட்டிலிருந்து யாராவது வந்து என்னை கூட்டிட்டு போவாங்க கவலைப்படாதே" என்று கார்த்திகா கூறவும் ஒருவழியாக ரம்யா சமாதானம் ஆகினாள்...
அவள் ஏரியாவுக்கு வரும் பஸ் மிகவும் கூட்டமாக வந்தது மழை வேறு வெளுத்து வாங்கியது இதை விட்டால் அவள் வீட்டிற்கு போக சிரமமாகிவிடும் என எண்ணி கார்த்திகா தான் அவளை அனுப்பி வைத்தாள் ..
ரம்யா ஒரு வழியாக சென்று விட என்ன இவரை இனியும் காணோம் என எண்ணி அவனை அழைக்கலாம் என போனை எடுத்து பார்க்க அவளது போனோம் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது சார்ஜ் போட அவள் மறந்து இருந்தாள்..
"ஐயோ இப்போ என்ன செய்யறது அவர் என்னோட மெசேஜை பார்த்தாரா இல்லையான்னு தெரியலையே" என எண்ணியவள் எதற்கும் கொஞ்ச நேரம் நின்று பார்ப்போம் இல்லையென்றால் வரும் பஸ்ஸில் ஏறிவிடலாம் என நினைத்தாள்...
அவளுடைய மெசேஜை பார்த்த அவனும் அப்போதே கிளம்பி இருந்தான் ஆனால் மழை காரணமாக சென்னையில் ஆங்காங்கே டிராபிக் ஏற்பட்டது அதனால் அவனால் அவள் எளிதாக ட்ராபிக்கை கடந்து அவள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியவில்லை..
அப்படி அவள் காத்து கொண்டிருக்கும் போது தான் ரமேஷ் மற்றும் அவனது நண்பர்கள் அந்த பக்கமாக வர அவர்களின் பார்வையில் அவள் பட்டாள்..
அவளை கண்டதும்," டேய் அங்கே பாரு டா அவ அங்கே நிக்கிறா இன்னிக்கு அவளை சும்மா விட கூடாது" என ரமேஷ் கூறினான்...
அவனது நண்பர்களும் அதையே கூற அவர்கள் அனைவரும் அந்த பேருந்து நிலையத்திற்கு வந்து நின்று கொண்டனர்..
இவளுக்கு இவன் வராததை எண்ணி லேசாக பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது கூடவே இவர்கள் வரவும் அவள் அரண்டு விட்டாள்...
அந்த பேருந்து நிலையத்திலேயே அவள் மட்டும் தான் இருக்கிறாள் என்ற நிலையில் அவளின் கை கால்கள் உதற துவங்கியது...
மெல்ல பேருந்து நிலையத்தை விட்டு கீழ் இறங்கி நின்று கொண்டாள்...
மழையோ கொட்டிக் கொண்டிருக்க அவள் தொப்பலாக நினைத்து விட்டாள்...ரமேஷ் அவள் அருகே வந்து ,"என்ன இந்த பக்கம்??" அவள் பதில் ஏதும் கூறாமல் நின்று கொண்டிருந்தாள்..
"என்ன பேச மாட்டியா?? ஓ அவ்வளவு அடக்கமான பொண்ணா ??அடக்கமான பொண்ணுக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு என்ன வேலை??" என அவன் கேட்டான்..
உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் திரு வருகிறானா என அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் கார்த்திகா...
மழை வேறு கொட்டிக் கொண்டிருக்க மழையால் அவளின் உடல் எல்லாம் நடுங்க துவங்கியது.. அவளின் உடை அவளின் உடலோடு ஒட்டிக் கொண்டிருக்க பஸ் ஸ்டாப்பின் விளக்கொளியில் அவளின் எழில் மேனியை ரசித்து கொண்டு இருந்தான் ரமேஷ்...
பேசாமல் ரம்யா கூறும் போது அந்த பஸ்ஸில் ஏறி இருக்கலாம் என நினைத்தவள் இந்த மழையில் இவர்கள் ஏதாவது செய்தால் கூட உதவி என யாரும் வர மாட்டார்கள் என்ற நிலையில் அவளுக்கு பயம் மேலும் அதிகமாகியது... பஸ் ஸ்டாப்பில் இருந்து அவள் லேசாக கொஞ்சம் தள்ளி நிற்கலாம் என எண்ணி நகர முற்பட அதற்குள் ரமேஷின் நண்பர்கள் படை அவளை சுற்றி நின்று கொண்டது ரமேஷும் அவளும் நடுவே நிற்க,
"என்ன பாக்குற இனி உன்னை யாரும் காப்பாற்ற வர மாட்டாங்க இப்ப சொல்லு என்னை பார்த்து ஐ லவ் யூ ன்னு சொல்லு நானும் உன்னை பார்த்ததிலிருந்து ஒரு மாதிரி தினுசா தான் சுத்திட்டு இருக்கேன்" என்றவன் அவளிடம்,” சொல்லு” என்க,
அவளோ ,"தயவு செஞ்சு என்னை விடுங்க தேவையில்லாமல் பிரச்சினை பண்ணாதீங்க அப்புறம் அவ்வளவு தான்", என்று கூற," ஓ அப்ப நீ என்ன பண்ணுவ???" என அவன் நக்கலாக கேட்டான்..
"நானும் மரியாதையா ஐ லவ் யூ சொல்லுன்னு சொல்லி பார்த்துட்டேன் நீ சொல்லல அப்போ நேரடியா ஆக்ஷன்ல இறங்கிட வேண்டியதுதான்...
டேய் மச்சான் லைவா லிப் டு லிப் கிஸ் அடிக்கிறதை பார்த்திருக்கீங்களா இப்போ இந்த மழைக்கு இதமா நான் இவ உதட்டுல என் உதட்டை வைத்து கிஸ் அடிக்கப் போறேன் நீங்க எங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்க" என்று அவன் கூறினான்
அவன் கூறியதைக் கேட்டவளுக்கு மேலும் பயம் தொற்றிக் கொள்ள அவள் அங்கிருந்து ஓட முற்பட அதற்குள் அவளின் நண்பர்கள் இருவரும் அவளின் கைகளை பிடித்து நின்று கொண்டனர்...
அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...அவளுக்கு மேலும் பயம் அதிகரித்தது...
"ஆளு செமையா இருக்கா இல்ல" என்றவன் அவள் அருகே வந்தான்.. அவளுக்கோ பயம் தொற்றிக் கொள்ள," என்னை விடுங்க பிளீஸ்" என கெஞ்ச அவனோ,”அதெப்படி விட முடியும் முடியாதே" என கூறி அவள் முகத்துக்கு அருகே வந்தவன் அவன் இதழ்களை ஈரப்படுத்தினான்... அவள் முகத்தை நோக்கி குனிந்தான்...
அதை கண்டவள் இப்போவே செத்து போனாள் என்ன என கூட யோசித்து விட்டாள்.. அவள் வேண்டாத தெய்வம் இல்லை...அந்த சமயம் பார்த்து ரமேஷின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விழ அப்படியே சரிந்தான்...
அதற்குள் அவளை பிடித்திருந்த அவனின் நண்பர்களோ அவளின் கைகளை விட்டு ,”யாரது அடித்தது??” என பார்க்க அங்கு நின்று கொண்டிருந்தான் திரு...
அவனை இந்த நேரத்தில் இங்கு எதிர் பார்த்திராத ரமேஷ் எழுந்து நின்று ,”என்னை எப்ப பார்த்தாலும் அடித்துக்கொண்டே இருக்கான் இவனை சும்மா விடக்கூடாது” என வாய் வழியாகவே கூறினான்..
அதைக்கேட்ட நண்பர்களும் தலையாட்ட," சார் உங்களுக்கு இங்கே என்ன வேலை?? இது நீங்க சொன்ன மாதிரி காலேஜும் கிடையாது வேற எதுவும் கிடையாது நான் இவ கூட பேசிட்டு இருக்கேன் உங்களுக்கு என்ன பிரச்சனை???" என கேட்க ,"எனக்கு வேலையே இங்க தாண்டா எங்க முத்தம் கொடுக்கணும்னு ஆசைப்பட்ட குடு பார்ப்போம்" என்றான் திரு
"சார் நான் முத்தமும் கொடுப்பேன் என்ன வேணாலும் செய்வேன் அதைக் கேட்க நீங்க யாரு??? வாத்தியார் என்று கூட பார்க்க மாட்டேன் சார் அவ்வளவுதான் இனி என் மேல கைய வச்சீங்க நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" என கேட்க மீண்டும் ஓங்கி ஒரு முகத்தில் குத்து விட்டான் திரு...
கூடவே நிற்கும் அவனது நண்பர்களுக்கும் ஆளுக்கு இரு அடி என தர்ம அடி கொடுத்தவன் ரமேஷ் கொத்தோடு பிடித்து,"என்ன வேணாலும் செய்வியா எங்கேயாவது செஞ்சுதான் பாரேன்" என்க
"சார் நான் அந்த பொண்ணு கிட்ட பேசினா உங்களுக்கு என்ன பிரச்சனை அவளை கம்முனு தான இருக்கா???" என்றான் அவன்..
" அவள் கம்முனு இருப்பா டா ஆனால் அவள் மேல கை வைச்சா நான் சும்மா இருக்க மாட்டேன் டா ஏன்னா நான் அவ புருஷன் டா நான் கேட்காமல் வேற யாரு கேப்பா?? என்ன தைரியம் இருந்தால் என்னோட பொண்டாட்டிக்கு என் முன்னாடி முத்தம் கொடுப்பேன்னு சொல்ற குடுத்து தான் பாரேன்" என்று திரு கூற அதைக் கேட்ட ரமேஷ் அதிர்ந்தான்...
இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை என அவன் முகமே கூற ஆனால் திருவுக்கு ஆத்திரமாக வந்தது... அதனால் மேலும் இரண்டு அடிகள் ரமேஷை வைத்தவன்," இது இவளை நீ அட்டாக் பண்ண வந்ததுக்கு அல்ல வேற ஏதாவது பொண்ணு இப்படி தனியா நின்னாலும் அந்த பொண்ணை இப்படி பண்ண கூடாதுன்னு சொல்லி அடிக்கிறேன் இனி ஏதாவது பொண்ணு கிட்ட உன் பார்வை போச்சு மவனே நீ முடிஞ்சா இப்பவும் உன்னை ஏதாவது செய்ய முடியாமல் இல்லை ஆனால் கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைக்கிறார்களே அவங்களுக்காக உன்னை விட்டுட்டு போறேன்" என்றவன் தொலைச்சிடுவேன் என்று கூறினான்...
" இங்கே நடந்தது எதையாவது யார்கிட்டயாவது சொன்னீங்க அதுதான் நீங்க வாழ்கிற கடைசி நாளாக இருக்கும்.. என்னை பத்தி உங்களுக்கு தெரியாது.. உங்க காலேஜ் ஹிஸ்டரியில ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி வேந்தன் அப்படின்னு யாரையாவது தெரியுமான்னு விசாரிச்சு பாருங்க அப்ப தெரியும் நான் யாருன்னு" என எச்சரிக்கை செய்தான் திரு... பிறகு அவளை பார்த்து பயந்து கோழி குஞ்சு போல அவனின் குதுகில் ஒதுங்கி நின்று கொண்டு இருக்கும் அவளின் இடையை அழுத்தமாக பிடித்தவன் சற்றும் அவள் இடையை விடாமல் அழைத்து சென்றான்...
