வேந்தன் : 11
அத்தியாயம் : 11
அவள் பேசியதை கேட்டு இடிந்து அமர்ந்து விட்டான்... அவனது யூகம் சரிதான் சரக்கடித்து ஒரு பெண்ணை தீண்டி இருக்கிறோம் அந்த அளவுக்கு போதை அவனை ஆக்கிரமித்து இருக்கிறது என்ற எண்ணமே அவனை அவனாகவே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும் என அவனுக்கு தோன்றியது...
இனி என்ன செய்வது என அவனுக்கு தெரியவில்லை..ஆனால் அவளுக்கு நன்றாக விளங்கி விட்டது அவள் என்ன செய்ய வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என அவள் கணக்கிட்டு வைத்துக்கொண்டாள்...
அப்படி இருக்க, அவள் உல்லாசமாக எப்போதும் போல இல்லையில்லை அதை விட சந்தோசமாக சுற்றி கொண்டு இருந்தாள்...ஆனால் அவனோ கதி கலங்கி சுற்றி கொண்டு இருந்தான்...
எப்போதும் போல கல்லூரிக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது...அவள் காலையில் எழுந்து குளித்து அவளுக்கு வேண்டியதை சமைத்து முடித்து தயாராகி விட அவனோ அப்படியே அமர்ந்து இருந்தான்...
"என்ன நீங்க தயார் ஆகலையா???" என கேட்க
அவனோ அவளை பார்த்து முறைத்து ,"இது தான் உன் முடிவா??" என்க
"என்ன முடிவு" என அவள் தெரிந்தாலும் திருப்பி கேட்டாள்...
அவனோ முறைத்து ,"அப்போ நீ என்னை விட்டு போக மாட்ட???.."
"சான்சே இல்ல உங்க கூட தான் இருக்க போறேன்"
"அப்ப நீ பொள்ளாச்சி கிளம்பு" என அவன் கோபமாக கூறினான்..
"நான் ஏன் பொள்ளாச்சி போகணும் நான் எல்லாம் போக மாட்டேன் இங்கே தான் இருப்பேன் எனக்கு தாலி கட்டுனது நீங்க தானே உங்க கூட தான் இருப்பேன்" என்று அவள் கூறிவிட்டு அவனை வேண்டுமென்று வெறுப்பேற்ற அவனும் அவளை முறைத்தான் இப்பொழுது அவன் முறைப்பது எல்லாம் பார்க்கும் பொழுது அவளுக்கு சிரிப்பு தான் வந்தது...
இருந்தாலும் அவள் செய்வது சரியா என கேட்டால் அவளுக்கு தெரியாது.. அவள் கல்லூரிக்கு சென்றதும் ரம்யாவை பிடித்துக் கொண்டாள் அவளிடம் உண்மையை கூறாமல்," நான் ஒரு கதை படிச்சேன் அந்த கதையில வர ஹீரோ அந்த பொண்ண விட 12 வயசு மூத்தவங்க என்று அவள் ஆரம்பிக்கும் போது ,"என்ன 12 வயசு மூத்தவனா???" என ரம்யா கேட்டாள்..
அதைக் கேட்டதும் சுருக்கு என்று கோபம் கொண்ட கார்த்திகா," நான் சொல்றத மட்டும் கேளு நான் படிச்சதை சொல்றேன் நீ இடையில ஏதாவது பேசினா நான் சொல்ல மாட்டேன்" என்று அவள் கூற," சரி சொல்லு" என்றாள்..
“அந்த பொண்ணுக்கு யாரும் இல்ல அம்மா அப்பா இறந்துட்டாங்க இந்த ஹீரோ தான் அவளை சின்ன வயசுல இருந்து வளர்த்தினாங்க அவர் காதலிச்ச பொண்ணு இறந்துட்டாங்க.. அப்போ ஒரு சூழ்நிலையில் இவர் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. அவளுக்கு அந்த கல்யாணத்துல எந்த பிரச்சினையும் இல்லை.. அவர் மேலயும் எந்த பிரச்சனையும் இல்லை.. அவர் ரொம்ப நல்லவரு கொஞ்சம் கோபம் இருக்கும்.. ஆனா ரொம்பவுமே நல்ல மனசுக்கு சொந்தக்காரர் இப்ப சொல்லு.. அந்த பொண்ணு அவர் கூட வாழனுமா வாழ கூடாதா??? அவர் ரொம்ப பாசமானவர் ஆனால் அந்த பொண்ணை நீ சின்ன பொண்ணு நீ வேண்டாம் அப்படின்னு சொல்றாரு..
ஆனா ஹீரோவுக்கு என்னை விட உனக்கு வயசு கம்மி அதனால நான் உன் கூட வாழ மாட்டேன் என்று சொல்றார் இப்போ அந்த பொண்ணு என்ன பண்ணுவா???" என ரம்யாவிடம் கேட்டாள்..
ரம்யாவோ யோசிக்காமல் ,"ரொம்ப கேர் பண்ற ஆள் கிடைக்கிறது ரொம்பவுமே கஷ்டம் வயசு ஒரு மேட்டரே கிடையாது அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்கா தாராளமா கூடவே இருக்கலாம் வாழலாம் ஏன்னா அது அவங்க லைஃப் இதுல யாரும் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை அதைவிட இன்னொரு விஷயம் உயிருக்குயிரா காதலிச்ச பொண்ணுக்காக இவ்வளவு தூரம் இருக்கிற மனுஷனை கல்யாணம் பண்ணிக்க அந்த பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும் ஏன்னா அதைவிட அதிகமா மனைவியை கண்டிப்பா நேசிக்க அவரால முடியும்" என்று அவள் கூறவும் அதைக் கேட்ட கார்த்திகாவுக்கு ஒரு தெளிவு பிறந்தது..
மாயா அவருடைய மனதுக்குள் இருந்தாலும் தனக்கு பிரச்சனை இல்லை தன்னை அவரால் நேசிக்க முடியும் நேசிக்க வைப்பேன் என அவள் எண்ணி கொண்டாள்...
அப்படி இருக்க, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து விமல் அங்கு வந்தான்...
"ஏய் உன்னோட ஊர் கார பையன் வந்துட்டாண்டி" என ரம்யா சொல்ல அவனை பார்க்கவும், அவனும் இவர்களை நோக்கித்தான் வந்து கொண்டிருக்க இங்கு கார்த்திகாவுக்கு உதறல் எடுத்துக் கொண்டது..
இவனும் அவளும் பேசிக் கொண்டிருப்பதை எங்கேயாவது இருந்து திரு பார்த்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு வந்தது... ஆனால் ரம்யாவிடம் காட்டிக் கொள்ள முடியாதல்லவா அதனால் அவள் அமைதியாக இருக்க விமல் அவளிடம் வந்து," என்ன கிளாஸ் போகலையா??" என எதார்த்தமாக கேட்டான்," போகணும்" என அவள் அவனது முகம் பார்க்காமல் பதில் கூற,
அதற்கு விமலோ ,"கார்த்திகா ஒரு நிமிஷம் உன்கிட்ட தனியா பேசணும்" என்று கூற ரம்யா அவளிடம் ,”நான் கிளாஸ் போறேன் நீ பேசிட்டு வா” என அவளை பார்த்து சிரித்தபடி சென்று விட்டாள்.. போகும்போதே இவளை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பை சிரிக்க இவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது..
எங்கே மறுபடியும் இவன் காதல் கடிதத்தை நீட்டி விடுவானோ என்ற பயம் இருக்க ,"என்ன பேசணுமோ அதை இங்கேயே பேசு" என்று அவள் கூறவும் ,"இல்ல தனியா தான் பேசணும்" என்று விமல் பிடிவாதமாக இருந்தான்...
அவளுக்கு வேறு வழி இல்லை இருந்தாலும் விமலிடம் விமல் ஏதாவது காதல் கீதல் என கூறினால் அதை மறுத்து விட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த கார்த்திகா அவன் பின்னால் செல்ல யாரும் இல்லாத ஒரு மரத்தடி தனலில் இருவரும் நின்று கொண்டு இருந்தனர்...
அப்போது அந்தப் பக்கமாக சென்ற திருவின் கண்களுக்கு தெள்ளத் தெளிவாக அவளும் அவளும் தனியாக நிற்பது தெரிந்தது.. அதை பார்த்து கடுப்பு ஆனாலும் அவள் காலையில் பேசிய பேச்சுக்கு என்னமோ பண்ணி தொலையட்டும் இனி அவள் பக்கமே போகக்கூடாது என எண்ணிக் கொண்டான் அதனால் உள்ளுக்குள் எழும் கடுப்பை மறைத்துக் கொண்டு அவன் ஸ்டாப் ரூம் சென்று விட்டான்...
விமல் அருகே தனியாக நிற்கும் போது முள்ளின் மீது நிற்பது போலவே கார்த்திகாவுக்கு தோன்றியது.. விமல் அவளின் உடல் மொழியை பார்த்துக் கொண்டு," நீ எதுக்காக பயப்படுற??" என கேட்டான்...
"எனக்கு பயம் எல்லாம் இல்லையே" என அவள் கூற," இல்லையே அது தான் உன் முகமே காட்டிக் கொடுக்குதே ரொம்ப பயப்படாத நான் லவ் லெட்டர் எல்லாம் உனக்கு கொடுக்க மாட்டேன் அது தான் ஹிட்லர் மாதிரி இங்கேயே உன்னோட மாமா இருக்காரே" என கூற அதை கேட்ட அவளோ மென்மையாக சிரிக்க,
" உனக்கு அன்னைக்கு அவர் கொடுத்த அடி எனக்கு கொடுத்த மாதிரி இருந்தது.. அதுக்கு அப்புறம் வாழ்க்கையில் உன்னை நான் நினைச்சு பார்த்ததே இல்லை இப்போ எனக்கு ஒரு ஆள் இருக்கா அதனால தான் தைரியமா உன்னை பார்த்ததும் உன்கிட்ட பேச வந்தேன்.. நான் உன்கிட்ட எதுக்கு தனியா பேசணும்னு சொன்னேனா இனி இனி நீ எந்த பதட்டமும் இல்லாமல் என்கிட்ட ஃப்ரெண்ட்லியா இருக்கலாம்.. நானும் உன்கிட்ட அப்படித்தான் இருப்பேன் முன்னாடி பாஸ்ட்ல நான் உனக்கு காதல் கடிதம் கொடுத்தது எல்லாம் மறந்துடு.. அது எங்கேயாவது என்னோட காதலிக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் என்னை தொலைத்து கட்டிடுவா" என்று சிரித்தபடி அவன் கூற பதிலுக்கு கார்த்திகா சிரித்தாள்...
அவளின் மனதில் உள்ள பாரமெல்லாம் அப்படியே குறைந்து போனது போல இருந்தது.. பிறகு விமலை பார்த்து மென்மையாக சிரித்த கார்த்திகா அவனிடம் ,"அவரு என்னோட மாமான்னு தயவு செஞ்சு யார்கிட்டயும் சொல்லிடாத" என்று கூற ,”சே ச்சே நான் எல்லாம் சொல்ல மாட்டேன் அவருக்கு என்ன சரியா அடையாளம் தெரியல நானே போய் எனக்கான குழியை தோண்டிப்பேனா அதுனால பயப்படாத" என்று அவன் கூறினான்..
அதைக் கேட்க அவளுக்கு மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்தது ..தைரியமாக அவனை தன்னுடைய நண்பன் ஆக்கிக் கொண்டாள்...
அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த சீனியர் மாணவர்கள் ,"ஹே விமல் இங்கே வா டா" என்றனர்..
"யாருடா அது புது ஃபிகரு செம்மையா இருக்கா இந்த காலேஜ்ல இவ்வளவு நான் பார்த்ததே இல்லையே" என ரமேஷ் கூறினான் ரமேஷ் அந்த காலேஜிலேயே சற்று மோசமான மாணவன் அப்படி இருக்க, அவன் விமலை அழைக்கவும் விமலுக்கு போகாமல் இருக்க முடியவில்லை ..
அதனால் விமல் அவளிடம்," நீ போ நான் போறேன்" என்று கூற அவளோ வேகமாக திரும்பி செல்ல," ஏய் விமல் அவளையும் சேர்த்து கூட்டிட்டு வா உன்னை யாரு பார்க்க கூப்பிட்டாங்க" என்று அவன் இங்கிருந்து கத்த விமல்," ஐயோ இவங்க கண்ணுலயா நீ படணும் இனி என்ன பண்ண போறான்னு எனக்கு தெரியல நானே தேவையில்லாமல் உன்னை மாட்டி விட்டேன் " என்று கூற,
"ஆமாம் யார் இவங்க என்னோட டிபார்ட்மெண்ட் சீனியர்ஸ் கொஞ்சம் மோசமானவங்க பெண்களை பார்த்தால் மட்டும் போதும் எப்படித்தான் இருக்கும்னு தெரியாது" என்க
அவளுக்கோ உதறல் அதிகமாகியது ஏனெனில் இது எல்லாம் அவளுக்கு புதிது ஏதோ விமல் அவள் பள்ளியில் படித்த மாணவனாகிற்றே என சரளமாக பேசுகிறாள் அதை விட்டால் அவள் யாருடனும் அப்படி பேசியது இல்லை...
மேலும் இன்று தானே அதிசயமாக தன் வாழ்வை தக்கவைத்துக் கொள்ள திருவிடம் மூச்சுமுட்ட பேசிவிட்டு வந்திருக்கிறாள் அப்படி இருக்க இவர்கள் அழைக்கவும் அவளுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது..
என்னதான் ஸ்டாப் ரூமுக்குள் சென்று அமர்ந்தாலும் அவனால் அப்படி அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை...
அவளை இங்கு அழைத்துக் கொண்டு வந்ததே தவறு என மீண்டும் மீண்டும் அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டவன் கடுப்போடு தன் கை சட்டையை மடக்கிவிட்டபடி எழுந்து வெளியே சென்று வாராந்தாவில் நின்று கொண்டான்...
அவன் நின்ற இடத்தில் இருந்து பார்த்தால் அவள் நிற்பது தெளிவாக தெரியும் அதனால் சாதாரணமாக நிற்பது போல அவன் நின்றான்..
அவள் எங்கே இருக்கிறாள் என பார்க்க அவள் தோழி ரம்யா அங்கு இல்லை அவள் மட்டும் விமல் உடன் நடந்து வருவது தெரிய," இவ எங்கே போறா??" என பார்க்க நேராக ரமேஷ் அருகே செல்லவும் ரமேஷ் அவளை மேலும் கீழுமாக பார்த்தான்...
அவனுடைய பார்வையே கார்த்திகாவுக்கு எரிச்சல் கொடுத்தது...
அதனால்," விமல் நான் கிளம்புறேன்" என்க..
"ஏய் நில்லு என்ன மரியாதை இல்லாம கிளம்புற உன்னை கூப்பிட்டது நான் நான் சொல்லாமல் நீ எப்படி போலாம்" என ரமேஷ் கேட்டான்.. விமல் ரமேஷிடம் ,"ரமேஷ் அண்ணா இவளை விட்டுடு" என்று கூற ,"டேய் அது எப்படி நீ சொல்லலாம் யார் இவ??? " என்க
"இவ என்னோட ஃப்ரெண்ட் போனவாரம் தான் புதுசா காலேஜ்ல ஜாயின் பண்ணி இருக்கா" என்க
"ஓ புதுசா சேர்ந்திருக்காளா அதுதான் என் கண்ணில் சிக்கலையா ஏண்டா விவேக் புதுசா இந்த காலேஜ்ல வந்தா ராகிங் இருக்குன்னு தெரியாதா ??"
"கண்டிப்பா இது தெரியுமே ரூல்ஸ் புக்லயே ராகிங் பண்ணலாம்னு இருக்கே" என வேண்டுமென்று அந்த விவேக் ஏத்தி விட ,"அப்போ இந்த பாப்பாவை கொஞ்சம் ராகிங் பண்ணி அனுப்புவோமா" என்று கேட்க விமல் அதிர்ந்து ,"ரமேஷ் அண்ணா வேண்டாம் விட்டுடு" என்று கூறினான்...
" என்னடா ரமேஷ் அண்ணா வாய மூடிட்டு பேசாம நிக்கணும் ஏன் நீ எல்லாம் அடிவாங்கியது மறந்துட்டியா" என்று கேட்க விமலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவன் பேசியதை எல்லாம் கேட்ட கார்த்திகாவுக்கு அதிர்ச்சி தான் வந்தது.. கூடவே பயமும் வந்தது என்ன செய்யப் போகிறார்களோ என பயந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள் இதையெல்லாம் திரு காரிடோரில் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான்...
திரு என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்க ரமேஷ் அவள் அருகே வந்தான் ,"டேய் விமல் எங்கடா இவளை புடிச்ச செமயா இருக்கா பிரஷ் பீஸா இருக்கா" என்று கூற அவனது பேச்சால் கார்த்திகாவின் முகம் சுருங்கியது...
விமல் ,"அவளை விட்டுட்டு ப்ளீஸ் தயவு செஞ்சு விட்டுடு பாவம் அவளுக்கு இதெல்லாம் புதுசு" என்று கூற அப்போதும் ரமேஷ் கேட்பதாக இல்லை ,"ஏண்டா அவன் இந்த காலேஜ்ல தான படிக்கிறா அவளுக்கு இதெல்லாம் என்னன்னு தெரிய வேண்டாமா நான் சொல்லிக் கொடுக்கிறேன் அவள் தெரிஞ்சுட்டு போகட்டும்" என கார்த்திகாவை மேலிருந்து கீழாக அணு அணுவாக அவன் பார்வை செல்ல இதை பார்த்த திருவுக்கு கடுப்பு தான் வந்தது...
"அவ நம்ம டிபார்ட்மென்ட் இல்ல அவ டிபார்ட்மென்ட் ஆளுகளுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும்" என்று கூற
"ஏய் வந்தா வரட்டும் டா நான் பாத்துக்குறேன் அதுக்கு முன்னாடி இவளை ஒரு கை பார்க்காம நான் விடமாட்டேன் எனக்கு என்னமோ இவளை பார்த்தாலே சும்மா செம்மையா என்னென்னமோ தோணுது" என வக்கிரமாக ரமேஷ் கூறினான்...
அதை கேட்டு கார்த்திகா நன்றாக பயப்பட ரமேஷ் அவள் அருகே வந்து நின்று அவளது முகத்தைப் பார்க்க அவளோ அழும் நிலையில் இருந்தாள்..
"சரி உன்னை பார்க்க ரொம்ப பாவமா இருக்கு எனக்கு என்னமோ தெரியல உன்ன பார்த்தா ரொம்ப பிடிச்சு போச்சு.. நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் ரமேஷ் மாமா ஐ லவ் யூ நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொல்லு நாம ரெண்டு பேரும் லவ்வர்ஸ் ஆயிடலாம் என்ன சொல்ற??" என கேட்டான்..
அதைக் கேட்டு அவளோ," நான் அதெல்லாம் சொல்ல மாட்டேன்" என்று கூற ,"சொல்ல மாட்டியா ஏன் எனக்கு என்ன குறைச்சல் பாக்க அழகா இல்லையா நல்லா தானே இருக்கேன்" என்று அவன் கூற ,"தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க" என்று கூறி அங்கிருந்து செல்ல பார்க்க அவனும் அவளுடைய துப்பட்டாவின் தும்பை பிடித்து நின்று கொண்டான்...
அவளோ ,"விடுங்க" என கெஞ்ச ரமேஷ் விடுவதாக இல்லை தட்டி கேட்ட விமலையும் அவனின் நண்பர்கள் அடி வெளுக்க அவளின் நிலையை பலர் பார்த்தாலும் யாரும் அவளுக்கு உதவ முன் வரவில்லை அதை எண்ணி அவளுக்கு கண்ணில் கண்ணீர் வந்தது... அதற்கு மேல் இந்த கூத்தை பார்த்து கொண்டு இருக்க திருவுக்கு பொறுமையில்லை...
தனது சட்டையின் கை மடிப்பை மடக்கிவிட்டபடி நேராக அவர்களை நோக்கி வந்த திரு ரமேஷை ,"பார்த்து இங்கே என்ன பிரச்சனை" என்று கேட்க, வேகமாக அவளுடைய துப்பட்டாவின் தும்பை விட்டான் ரமேஷ் அப்பொழுதுதான் அவளுக்கு நிம்மதியாக இருக்க,
அங்கு இருந்த யாரும் அவன் கேட்ட கேள்விக்கு வாயே திறக்கவில்லை ,"நான் தான் கேட்கிறேன் இங்கே என்ன பிரச்சனை " என அழுத்தமாக கேட்க ,"இல்ல சார் புது பொண்ணுன்னு ராக்கிங் பண்றாங்க" என விமல் மெல்லிய குரலில் கூற அவனும் அவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே ,"ராக் பண்றதுன்னு ஒரு வாரம் உங்களுக்கு டைம் கொடுத்து இருந்தாங்க அது எப்பவோ முடிஞ்சு போச்சு அதுக்கப்புறம் ராக் பண்ணா டிஸ்மிஸ்னு உனக்கு தெரியாதா???" என ரமேஷை கேட்டான்...
"சார் புது பொண்ணு சார்" என்று ரமேஷ் கூற ,"அதற்கு ராகிங் என்பது ஒரு ஜாலிக்கு செய்யறது இப்படி வரம்பு மீறி பொண்ணோட துப்பட்டாவை தான் பிடிப்பாயா?" என்று கூறியவன் சற்றும் யோசிக்காமல் ஆத்திரத்தோடு ஓங்கி ஒரு அறை விட்டான் ரமேஷ் இதை எதிர்பார்க்கவில்லை...
"இது காலேஜ் பொறுக்கித்தனம் பண்ற இடம் கிடையாது உன்னோட பொறுக்கி தனத்தை எல்லாம் வெளிய வச்சுக்கோ புரியுதா" என்று கூற ரமேஷ் மிகவும் அவமானமாக உணர்ந்தான்.. அடுத்த நொடி அவ்விடம் விட்டு ரமேஷ் மற்றும் அவனது கேங் சென்று விட்டனர்...
விமல் மற்றும் கார்த்திகா இருவரும் நிற்க விமல் அவனைப் பார்த்து ,"ரொம்ப தேங்க்ஸ் சார் " என்று கூறினான்.. அதைக் கேட்ட திரு விமலையும் கார்த்திகாவையும் முறைத்து," உங்களுக்கெல்லாம் கிளாஸ் இல்லையா அங்கங்க மரத்தடியில் நிற்கிறது தான் வேலையா உங்க ரெண்டு பேரையும் இனி ஒட்டுக்கா பார்த்தேன் தொலைத்து கட்டிடுவேன் புரியுதா போங்க" மிரட்டியவன் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்... அவளோ அவனை நிமிர்ந்து பார்க்க அவனின் கோபத்தை பார்த்து ரசித்து கொண்டே சென்றாள்…
