வேந்தன் : 10
அத்தியாயம் : 10
ஏனோ தெரியவில்லை அவளுக்கு அவனை சற்றென்று இந்த கோலத்தில் பார்க்கவும் அவன் மீது பரிதாபம் வந்தது..
எப்போதும் தன் உணர்வுகளை மறைத்து இறுக்கமாக இருப்பவன் இப்படி உளறி பேசும் போது அவளால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை இருந்தாலும் அவன் என்ன பேசுகிறான் என கேட்க அமைதியாக இருந்தாள்...
அவன் மீது அவளுக்கு கோபம் தான் இருந்தாலும் அவனை பார்க்க பாவமாக இருக்க அவள் அமைதியை கடைப்பிடித்தாள்..
" உனக்கு எப்படி டி மனசு வந்தது என்னை விட்டுட்டு போக, உனக்கு எப்படி மனசு வந்தது?? அந்த பைக்கை நீ ஏண்டி என்னை விட்டுட்டு தனியா ஓட்டுன... என்னையும் உன் கூட அழைச்சிட்டு போயிருக்கலாம் தானே நானும் உன் கூட வந்திருப்பேனே இப்ப பார் எதுக்கு உயிர் வாழ்கிறேன் என்று தெரியாமலேயே வாழ்ந்துட்டு இருக்கேன் உனக்கு பிடிச்சதெல்லாம் செய்கிறேன் ஆனால் அதை பார்க்க நீ இல்ல இதுல என்னோட சுயநலத்துக்காக ஒருத்தி கழுத்துல தாலியும் வேற கட்டிட்டேன்..
யாரும் என்னைக் கேள்வி கேட்கக் கூடாது அப்படின்னு அவ கழுத்துல தாலி கட்டிட்டேன்... மனசு வலிக்குதுடி உன்னை மறக்கவும் முடியாம உன்னை நினைக்காமல் இருக்கவும் முடியாமல் மனசு வலிக்குது கார்த்திகாவை தெரிஞ்சே நான் இதுக்குள்ள தள்ளி விட்டுட்டேன்..
நான் சொன்னா அவள் கேட்பா அப்படிங்கற தைரியம் என்னை அப்படி செய்ய வைச்சிடுச்சு அது மனசுல கிடந்து அரிக்குது.. என் மனசுல நீ தான் இருக்க அது எனக்கு நல்லா தெரியும் ஆனா அவளோட வாழ்க்கை என்னால பாழாய் போயிடுச்சு..
அதை என்னால எப்படி சரியாக முடியும் என்னால் ஒன்னும் பண்ண முடியாது இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டி கனவுல கூட என்னை விட்டுட்டு ஓடிப்போக பார்க்கிறாயா? நான் மனசுல வெச்சிருக்கறதெல்லாம் யார்கிட்டயாவது கொட்ட வேண்டாம் நீ கேட்டு தான் ஆகணும் உன்ன விடவே மாட்டேன் நான் பேசுறது கேளுடி கேளு...இப்படி தண்ணியை போட்டு புலம்ப வைக்கிற தானே!!!
உன் கூட கடைசி வரை வாழ்வேன் உனக்காக உயிரைக் கொடுப்பேன் என்று சொன்னாயே ஏதாவது செஞ்சியாடி மாயா விட்டுட்டு போயிட்டியே இப்ப சொல்லுடி நான் என்ன பண்றது கார்த்திகாவை என்ன பண்ணட்டும் சொல்லுடி சொல்லு" என உலறினான்...
அதை கேட்டவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது...அவன் புலம்பும் போது அவனின் மனதில் உள்ள வலி அவளுக்கு புரிந்தது...
அவனின் பேச்சையும் அவனின் வருத்தத்தையும் கேட்டவளுக்கு அவளை வாரி அணைத்து உனக்கு நான் இருக்கிறேன் என கூற வேண்டும் என்பது போல தோன்றியது...அவளின் கை பரபரத்தது...
அந்த நேரத்தில் அவன் பேசியதும் அவன் திட்டியதும் எல்லாம் அவளுக்கு மறந்து போனது அவனுடைய வலி அவளுக்கு தெரியும் ஆனால் இந்த அளவுக்கு மாயாவை அவன் நேசிக்கிறான் என அவளுக்கு தெரியாது...
மாயாவை உயிருக்குயிராய் நேசிக்கும் இந்த திருவை அவளுக்கு பிடித்தது... அவளுக்காக அவன் இந்த வேலையை அவன் செய்கிறான் என தெரியவும் அவளுக்கு இவள் மீது இவ்வளவு காதலா என எண்ணினாள்...
காதலித்த பெண்ணுக்காக இவன் இவ்வளவு தூரம் இறங்கி இருக்கும் இவனின் தூய மனம் அவளுக்கு பிடித்தது...தன்னை பற்றியும் அவன் பேசுகிறானே என எண்ணினாள்...
தன்னை அவன் திருமணம் செய்ததை எண்ணி வருந்துகிறான் என அவளால் புரிந்து கொள்ள முடிந்தது...
ஏனோ அவன் வருந்தி நிற்பதை அவளால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை அவளின் அழுத்தத்திற்கான காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்பதை அவள் உணர்ந்தால் அவனின் அணைப்பிலேயே இருந்து கொண்டு அவள் அவனை பற்றி யோசித்து கொண்டு இருந்தாள்...
ஏனோ அவள் மனம் இலேசாக அவன் பக்கம் சாய்வது போல இருந்தது அப்படி என்ன தவறு செய்துவிட்டான்?? அவனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தது பாவம் ஒருவேளை மாயா அக்காவுடன் வாழ்ந்திருந்தால் அவன் மிகவும் சந்தோஷமாக இருந்திருப்பானோ என்னவோ??? அந்த அக்காவை கடவுள் இவர் கிட்ட இருந்து பிரிச்சிட்டானே என எண்ணினாள்...
உண்மையில் அவன் நல்லவன் தான் லேசான முன்கோபம் இருக்கிறது என அவளுக்கு தெரியும் அவன் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் இது மட்டும் தான் அவனுடைய பிரச்சனையாக இருப்பது மற்றபடி அவன் நல்ல மனிதன் தான் அதில் எந்த அளவும் சந்தேகம் அவளுக்கு இல்லை..
அப்படி இருக்க, புலம்பி புலம்பி அவன் அப்படியே அவள் இடையை வருடியவன் நொடி பொழுதில் அவள் மீது சரிந்தான்..
அவளோ அதிர அவள் மீது ஏறியவன் அவளின் இடையில் அழுத்தம் கொடுத்து அவளின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்தவன் அவளின் செவி மடலை அவனின் இதழ்களால் தீண்டவும் அவள் உடல் கூசி சிலிர்த்தான்...
அவன் அணைப்பில் கூட அவன் பேசுவதை எல்லாம் கேட்டு கட்டுண்டு கிடந்தவளுக்கு அவனின் தீண்டலை சகிக்க முடியவில்லை அவளால் அவளின் உள்ளுணர்வுகளை அடக்க முடியவில்லை ..
தன் உணர்வுகளை அடக்க முடியாமல் தன்மீது படுத்திருக்கும் அவனின் முதுகில் தன் கைகளை வைத்து அழுத்தம் கொடுக்க அந்த நொடி அவன் சற்றும் யோசிக்காமல் அவளின் கண்ணம் செவி மடல் கழுத்து என அனைத்திலும் இதழ்களை சரமாரியாக பதித்தான்..
அவளால் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் முதுகில் தன் நகங்களால் அழுத்தம் கொடுத்தவள் விரல்களின் நகங்கள் அவனது முதுகில் கோலமிட்டது..
பிறகு அவன் அப்படியே அவளின் இதழை ருசித்தான்.. ஆழ்ந்த இதழோடு அவன் கார்த்திகாவின் இதழை அதிரடியாக தீண்டி அவளை திக்கு முக்காட செய்தவன் அவளை விட்டு மீண்டும் அவளின் முகத்தில் முத்த மழை பொழிந்தான்... அவளால் அவன் செய்த மாயத்தில் இருந்து விடு படவும் முடியவில்லை அவளின் உணர்வுகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை அவனின் திடீர் யுத்தியால் அவள் தளர்ந்துதான் போனாள்...
பிறகு அவனின் உள்ளுணர்வு அடங்கி அவன் அப்படியே அவளின் கழுத்து வளைவில் புதைந்து போதையின் வீரியத்தில் உறங்கிப் போனான் அப்போதுதான் அவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது...
நொடி பொழுதில் என்ன காரியம் செய்து விட்டான் என அவள் எண்ணினாள்... இதற்கு மேலும் அவனை விடுவதாக இல்லை அவனின் மனம் படும் பாட்டை உணர்ந்தவள் மனம் இனி அவன் பக்கம் சாய்ந்தது இனி என்ன ஆனாலும் சரி அவனை விட்டு விலகக் கூடாது என நினைத்தாள்...
அவளை அணைத்துக் கொண்டு உறங்கி விட்டான்.. அவளும் அவனின் அணைப்பிலேயே யோசித்து யோசித்து உறங்கி போனாள்...அவள் இறுதியான ஒரு நிலைப்பாடான முடிவையும் எடுத்தும் விட்டாள்.. இனி வாழ்வோ சாவோ இனி அவனோடு தான் என எண்ணி கொண்டு அவனது அழைப்பிலேயே சுகமாக படுத்தாள்...
மறுநாள் காலை வரை அவளை அவன் விடவில்லை அவன் தான் முதலில் உறக்கம் கலைந்தான்...
தன்னருகே அவள் படுத்து உறங்கி கொண்டிருப்பதை பார்த்தவன் அதிர சட்டென்று தன் கை கால்களை அவளது உடலில் இருந்து எடுத்தான்...அவளது ஆடை வேறு இலேசாக விலகி இருக்க அதை பார்த்தவன் திகைத்தான் அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை...அடித்த போதையால் என்ன நடந்தது என நினைவு இல்லாமல் போனது...
"என்ன ஆச்சு இவ எங்கே இங்கே" என அவன் முழிக்க," இல்லையில்லை நீ தான் அவள் அருகே வந்து இருக்கிறாய்" என அவனுக்கு புரிய அதிர்ச்சியோடு பட்டென்று அந்த இடத்திலிருந்து எழ அவன் எழவும் அவள் உறக்கம் கலைந்தாள்...
அதிர்ச்சியோடு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்த அவள் அவனது கண்களை நேருக்கு நேராக சந்திக்க அவனும் அவளைப் பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான் முதன்முறையாக பேச்சற்று நின்றான்...
அவளுக்கோ இருட்டுக்குள் என்னென்னவோ நடந்தது வெளிச்சத்தில் அவனது முகத்தை பார்க்க அவளுக்கு வெட்கமாக இருந்தது...வேறு பக்கமாக முகத்தை திருப்பி கொண்டாள்...
அவளாக அவன் அருகே வந்து படுப்பதற்கு சாத்தியம் இல்லை அவனாகத்தான் படுத்து இருக்க வேண்டும் அவன் அடித்த போதையால் அவளை ஏதேனும் தொந்தரவு செய்து விட்டேனோ என அவன் எண்ணி அவளை பார்த்து,"நான் ஏதாவது உன்கிட்ட தப்பு பண்ணிட்டேனா???" என கேட்டான் அவன் முகத்தில் அவ்வளவு அதிர்ச்சி நிறைந்து இருந்தது அவளது கண்களை கூட சந்திக்க முடியவில்லை..
ஆனால் அவளோ என்ன சொல்வாள் அவன் நேற்று இரவு செய்த காரியத்தை எப்படி அவளால் விலக்கி சொல்ல முடியும்...அதனால் ,"இல்லை ஒன்னும் பண்ணல நீங்க தெரியாமல் என்கிட்ட வந்து படுத்துட்டீங்க நான் உங்களை எவ்வளவோ விலக்கினேன் ஆனால் நீங்க எந்திரிக்கவே இல்ல என்னால எதுவும் செய்ய முடியல" என்று அவள் உள்ளதை கூற அவள் கூறியதைக் கேட்டு அவன் செய்த மடத்தனத்தை எண்ணி அவனுக்கு ஆத்திரமாக வந்தது..அவளும் அவன் தன்னை இதழ்களால் தீண்டிய விஷயத்தை அவனிடம் கூறாமல் விட்டான் ஏனில் அவன் குணம் தெரியும் என்பதால் அவள் கூறவில்லை..
அவள் கூறியதை கேட்டவன் தன்னை தானே வெட்கி,"சாரி என்னை மன்னிச்சிடு" என ஏதோ பெரிய தவறு செய்த போல அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டான்...
ஆனால் அவளோ அவளை எப்படியாவது மாற்றி அவனோடு வாழ்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்று இரவு முதல் அவனை மனதில் நினைத்துக் கொண்டு இருப்பவளுக்கு இது சரிதானா தன் எண்ணம் சரிதானா என யோசித்துக் கொண்டிருப்பவளுக்கு அவனுடைய மன்னிப்பு வேண்டாததாகிப் போக ,"மன்னிப்பு எல்லாம் வேண்டாம் திருண்ணா தெரியாமல் தானே செஞ்சீங்க" என கூறி விட்டு மேலும் அவ்விடத்தில் இருந்தால் நேற்று நடந்த விஷயத்தை என் முகமே காட்டி கொடுத்து விடும் என கருதி அவள் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்..
என்னதான் அவள் சென்றாலும் அவன் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான்.. இப்படி அவளிடம் நடந்து கொண்டேனே என அவன் நினைக்க அவனுக்கு அடித்த போதையிலும் அவன் செய்த காரியத்திலும் தலை வலித்தது...
இனி இதற்கு மேல் இதைத் தொடர விடக்கூடாது இதை இப்போது நிறுத்தி விட வேண்டும் என எண்ணி குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்....
தான் செய்த மடத்தனத்தை எண்ணி எவ்வளவு நேரம் தண்ணிக்குள் நின்று இருப்பான் என அவனுக்கு தெரியாது... அவன் முதுகில் தண்ணீர் பட ஏதோ எரிச்சல் ஏற்பட்டது.. அது என்ன என்று பார்க்க நகக்கிரல்கள் அதை பார்த்ததும் அவனுக்கு என்னென்னவோ தோன்றியது ஏதோ ஏடாகூடம் நடந்திருக்கிறது என்பதை மட்டும் அவன் உணர்ந்தான்...
குளித்து தயாராகி வந்தவன் அவளை பார்க்க அவளோ சமையல் கட்டில் இருந்து சமையல் செய்து கொண்டிருந்தாள்...
"கார்த்திகா" என்க
"சொல்லுங்க திருண்ணா" என்றாள் அவளுக்கு அவனுடைய முகம் பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தது.. ஏனெனில் அவன் அவளை சுயநினைவு இன்றி முத்தமிட்டாலும் அவளுக்கு சுயநினைவு இருக்கிறது அல்லவா??
நேற்று என்ன நடந்தது என தெளிவாக அவளுக்கு தெரியும் அதனால் அவனது முகம் பார்க்கவே அவளுக்கு கூச்சமாக இருந்தது அவனைப் பார்க்கும் நேரம் எல்லாம் அவள் முகம் சிவப்பது போல அவளுக்கு தோன்றியது...
அதனால் அவனைப் பார்ப்பது அறவே தவிர்த்து அவள் சமையல் செய்வது போல அவனிடம் பேச அவனும் அவளிடம்," ஏதோ தெரியாம நான் உன்னை டச் பண்ணிட்டேன் இனி அப்படி நடக்காது நீ பேசாம ஹாஸ்டல் போயிடுறியா நான் உனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ டிவோர்ஸ் கொடுத்துடறேன் நமக்குள்ள இந்த ரிலேஷன்ஷிப் ஒத்து வராது என்று நினைக்கிறேன் நீ இங்கே இருக்கிறதும் சரிப்பட்டு வராது" என்று கூறவும் அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ தெரியாது..
விடிய விடிய அவள் ஏதேதோ கனவு கண்டிருந்தாள் அவன் மனதை மாற்ற வேண்டும் அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் இனி அவன் மட்டும்தான் அவள் வாழ்க்கையில் என என்னென்னவோ கனவு கண்டிருந்தாள் ..
அதையெல்லாம் தூள் தூளாக்கும் படி அவன் பேசவும் அவளுக்கு அதைக் கேட்டுக் கொண்டிருக்க பொறுமை இல்லை அவனுடைய எப்போது வாழ வேண்டும் என அவள் முடிவு எடுத்தாலோ அப்பொழுதே அவளுக்கு அவனிடம் இருக்கும் பயம் சற்று தளர்ந்து தைரியம் வந்தது..
அவனைப் பார்த்து ,"நான் எங்கேயும் போக மாட்டேன் நான் இங்கேதான் இருப்பேன்" என்று கூறினாள்...
அதைக் கேட்டு அவனும் ,"மறுபடியும் இதுபோல நடக்காதுன்னு என்ன நிச்சயம் அதனால தான் சொல்றேன் புரிஞ்சுக்கோ" என கோபமாக கூறினான்.. அவனது குரலில் கோபத்தை மீறிய பதற்றம் இருந்தது...
"எனக்கு அதெல்லாம் தெரியாது நான் எங்கேயும் போக மாட்டேன் நான் உங்க கூட தான் இருப்பேன்" என்று அவள் ஆணித்தரமாக கூறினாள்
அதைக் கேட்டவனோ ,"என் கூட இருந்து நீ என்ன பண்ண போற உன்னோட வாழ்க்கையை பாழாக்கிக்க போறியா?? என்னால உனக்கு ஒரு யூசும் கிடையாது" என அவன் மனதை அவன் அறியாமலேயே வெளிக்காட்டிக் கொண்டிருந்தான்...
அதற்கு அவளோ ,"அதை நான் பார்த்துக்கிறேன் நீங்க தானே தாலி கட்டுனீங்க நீங்க நினைச்சா தாலி கட்டுவீங்க நினைச்சா விவாகரத்து பண்ணுவீங்க நீ கிளம்பு என்று சொல்லுவீங்க வான்னு சொல்லுவீங்க நீங்க சொல்றதெல்லாம் செய்யணுமா முடியாது...
நான் இங்கேதான் இருப்பேன் உங்க கூட தான் வாழ்வேன் நீங்கதானே எனக்கு தாலி கட்டுனீங்க என்கிட்ட கேட்காமதானே தாலி கட்டுனீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமான ஒரு வார்த்தை கேட்டீங்களா இல்லையே இப்போ நீங்க சொல்றத நான் எதுவும் கேட்க மாட்டேன் நான் உங்க கூட தான் வாழ்வேன் உங்க கூட தான் இருப்பேன் அதை நான் முடிவு பண்ணிட்டேன்.."
அவள் அதை கூறவும் அதைக் கேட்டு அவனும் அதிர்ந்தான்..." உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு உன்னோட வயசு என்ன என்னோட வயசு என்ன???" என்றான்...
"அதை நீங்க தாலி கட்டுறதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கணும்" என்றாள் அவளும்..
அதைக் கேட்டு அவனுக்கு பதில் இல்லை...அவள் கூறுவது உண்மை தானே அந்த நேரத்தில் ஏதோ ஒரு ஆத்திரத்தில் செய்து விட்டான் பிறகு அதை எண்ணி அவன் வருத்தப்படாத நாளே இல்லை என கூறலாம்... அதனால் கோபத்தை விட்டுவிட்டு அவளிடம் பொறுமையாக ,"இதோ பார் சொன்ன புரிஞ்சிக்கோ என்னால மாயாவை மறக்க முடியாது" என கூற
"அது உங்க பிரச்சனை நான் ஒன்னும் உங்களை மறக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே நான் உங்க கூட வாழ்வேன்னு தான் சொல்லிட்டு இருக்கேன்... நீங்க என்கூட வாழனும்னு நான் சொல்லவே இல்ல"
"அப்படி என்ன நடந்தது சொல்லு??? ஏன் இப்படி என் கூட இருக்கணும்னு ஆசைப்படுற" என அவன் நேற்று இரவு என்ன நடந்தது என அறிய அவன் முற்பட்டான்....
ஏனெனில் அவன் முதுகில் உள்ள நகக்கீரல் அவனை அப்படி கேட்க வைத்தது..
"ஒன்னும் நடக்கலையே" என அவள் கூற அவனுக்கு அதைக் கேட்டுக் கொண்டிருக்க பொறுமை இல்லை... அவள் அருகே வந்தவன் ,"என்ன இப்படியே இருக்கலாம் என்று முடிவு பண்ணிட்டியா அதுக்கு என்னை கிடைக்காது என்னால உன் கூட வாழ முடியாது" என்று கூற
"நான் ஒன்னும் உங்களை என் கூட வாழுங்கன்னு சொல்லல நான் உங்க கூட வாழறேன் அப்படின்னா சொல்றேன்" என்க
"என்னால முடியாது" என்று அவன் திட்டவட்டமாக கூற ,"அதை நீங்க என் பக்கத்துல படுத்து என்னை கிஸ் அடிக்கும் போது யோசித்து இருக்கணும்... சும்மா பாய்ஞ்சு பாய்ஞ்சு எல்லா பக்கமும் முத்தம் கொடுத்துட்டு இப்போ போனா எப்படி போறது நான் எல்லாம் போக மாட்டேன்" என்று அவள் நேற்று நடந்த விசயத்தை போட்டு உடைக்க அதை கேட்டு அதிர்ந்தான் திரு...
எப்போதும் அவளை போட்டு உருட்டி எடுத்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது அவள் முன்னால் அதிர்ந்த நிலையில் நின்று கொண்டிருந்தான் அதைப் பார்த்த அவளுக்கு சிரிப்புதான் வந்தது ஆனால் மனதுக்குள்ளோ உங்களை இனி சும்மா விடறதாவே இல்ல என எண்ணி கொண்டாள் கார்த்திகா...
அவள் முடிவே செய்து விட்டாள் இனி இவனோடு தான் அவள் வாழ்க்கை என அவள் முடிவு செய்துவிட்டாள் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய அவள் முடிவு செய்து விட்டாள் கார்த்திகா திருவேந்தன்.....
