Share:
Notifications
Clear all

அத்தியாயம் 9

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

சொந்தங்கள் , பந்தங்கள் பெரிய தலைகள் ,முக்கியப் பிரமுகர்கள் என அனைவரும் கூடியிருந்த அந்த விழாவில் அவளை மயக்குவதற்காகவே அவளுக்குப் பிடித்த கருப்பு நிற புல் சுய்ட் அணிந்து தன்னைப் போலவே இருக்கும் தன்னுடைய அடங்கா தலையை ஜெல் வைத்து வாரி அவனது இரண்டு நாள் மலிக்கப் படாத தாடியை அவளுக்காகவே இன்று ஷேவ் கூடச் செய்யாமல் அவளுக்குப் பிடித்தமான உடையில் அந்த விழா நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தான்...

கூடி இருந்த இளவயது பெண்களும் , ஆண்களும் போட்டி போட்டுக்கொண்டு அவனைப் பார்க்க அந்த நெடியவனும் கம்பீரமாக உள்ளே நுழைந்தான்..அவன் வேறு யாரும் அல்ல பிருத்வி ராஜ்...

அரங்கத்துக்குள் நுழைந்தவன் கண்களில் அவளும் பட்டாள்..தேவலோக ரம்பை போல அழகாக இருந்தவளின் கைகளை அருகில் நின்று கொண்டிருந்த அபி , சம்யூவின் கையைப் பொத்தி பிடித்து இருக்க அவளது கண்களுக்கும் பிருத்வி அழகாகப் பட்டு தொலைத்தான்..

அபியின் கைகளைப் பிடித்து இருந்தாலும் சம்யூவின் கைகள் ஏனோ நடுங்கியது...வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டோடி கொண்டிருந்தது...எதற்காக இவன் வந்து இருக்கிறான் என்ற கேள்வி அவளை அதிர்ச்சியுற செய்தது..அவனை பார்த்த முதல் அதி விரைவு ரயில் போல ஓடிக்கொண்டிருக்கும் அவளது இதயத்தை எவ்வாறு சரி செய்வது என சம்யூவுக்கு புரியவில்லை...

அதற்காகத் தானே அவனும் வந்தது.. இதோ இந்த ஒற்றை விழி அதிர்ச்சி கலந்த குற்ற உணர்ச்சி பார்வை தானே அவனுக்கும் வேண்டியது...

அவனையும் அவனது முகத்தையும் ஒரு நொடி கண்டவள் அதிர்ந்து பிருத்திவியைப் பார்க்க எப்போதும் போல யாரும் காணா வண்ணம் அவளுக்கு மட்டுமே புலப்படும் விதத்தில் அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே அவள் அருகில் வந்தான் பிருத்வி..

சம்யூவோ சுற்றி முற்றியும் பார்த்து பயந்து , " என்ன காரியம் செய்யற இடியட்".. என நினைத்த அவளுக்கு வியர்க்க துவங்கியது..

அபிக்கு இவர்களின் விஷயம் அறியாததாலும் அவள் கைகள் நடுங்கி கொண்டிருப்பது வெளிப்படையாக அவன் உணர்ந்தாதலும் சம்யூ முகத்தைப் பார்த்து, " என்ன "..எனக் கேட்க,

" அவளோ ஒன்னுமில்லை".. என்பது போலத் தலை கவிழ்ந்து கொண்டாள்...

அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவானா பிருத்வி ராஜ்.. அவளை வைத்த கண் வாங்காமல் சிரித்துக் கொண்டே அவள் அருகே வந்து ஒரு நொடி அபி மற்றும் சம்யூவின் கைகள் பிணைத்து இருப்பதை இலேசான குரூரத்துடன் கண்டு ,

பின் தன் இயல்பை மாற்றி அவள் அருகே நிற்கும் அபியை பார்த்து தனது ஆளை மயக்கும் ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்து "கங்கிராட்ஸ் மேன்"..எனக் கையை நீட்ட அபியும் மரியாதை நிமித்தமாக இலேசான மென்னகையுடன் சம்யூவின் கையை விட்டு பிருத்திவியின் கையைப் பிடித்துக் குலுக்கினான் அபி..

அபிக்கு உள்ளுக்குள் கொதித்துக் கொண்டு இருந்தது தனது குடும்பத்தைத் தங்களது தொழிலை இந்த அளவுக்கு நாசம் ஆக்கியவன் யாரை கேட்டு இங்கு வந்தான் என்று அவனுக்குத் தோன்றினாலும் சபை நாகரிகம் கருதி அமைதியாக நின்று கொண்டு இருந்தான்..

அவனது வருகை அந்த அரங்கத்தில் இருந்த ஒரு சில பேருக்கு(ராஜேஸ்வரி , ஈஸ்வர்) அதில் அவளையும் உள்ளடக்கி சிலருக்கு விருப்பமின்மையைக் கொடுத்தாலும் அவன் வருவான்..

பின்ன இன்று அவளின் நிச்சயம் ஆகிற்றே...அவன் வராமல் இருப்பானா... அவன் வாழ்த்துக் கூறாமல் தான் அவளால் அவளின் வாழ்க்கையின் அடுத்த அத்தியாத்திற்குள் நுழைந்து தான் விட முடியுமா ??..உண்மையில் அவளை வாழ்த்துவதற்காக தான் அவன் வந்து உள்ளானா???? அது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்...

பிருத்திவியைப் பார்க்க பார்க்க சம்யூவுக்கும் தான் ஏனோ குற்ற உணர்வு மேலிட தன் தலையை வேண்டுமென்றே குனித்துக் கொண்டாள்..

அதே நேரம் பிருத்திவியின் மீது கோபமும் போட்டி போட எப்போதும் போல அவனின் அருகாமையால் அவளது மூளையை மழுங்கடித்து விட்டான் பிருத்வி...

அதற்குள் யாரோ அபியை அழைக்க அபி சென்ற தருணம் பார்த்து சம்யூவின் அருகில் சென்றவன் வாழ்த்து கூறுவது போல நின்று அவள் புறம் அவனது கையை நீட்டினான்...

அவளோ கைகளைக் கொடுக்காமல் முகத்தை திருப்பி அப்படியே நிற்க ஓரக்கண்ணால் சுற்றியும் முற்றியும் பார்த்தவன்,

விடாமல் அவளுக்கும் , அவனுக்கும் இடையே ஒரு அடி இடைவெளியில் நின்று அவள் முகம் நோக்கி குனிந்து,

" வாழ்த்துக்கள் ஹனி..யூ லுக்கிங் ஆஸம் பேபி..அண்ட் மை பேவர்ட் இடுப்பு மச்சம் தூக்குற போ..இப்போ எப்படி இருக்கத் தெரியுமா??? அப்படியே உன்னைத் தூக்கிட்டு போய்.. ம்ம்ம்ம்... நான் இன்னும் நாம ரெண்டு பேரும் மட்டும் இருந்த அந்த நாளை நான் இன்னும் மறக்கல டியர் ஆனால் இப்போ எனக்கு உன் கையைத் தொட கூடத் தர மாட்டேங்கிற..

ஹ்ம்ம்..அவன் வந்து அவன் கையைப் பிடிச்சிட்டு நிக்காம இன்னும் அரை மணி நேரத்தில் நீ அந்தத் தோட்டத்து மறைவுக்கு நீ வர இல்லாட்டி இங்கேயே இத்தனை பேர் முன்னாடி எல்லா உண்மையும் சொல்லிடுவேன்..அண்ட் எப்போவும் சொல்லாமல் செய்யற நான் இன்னிக்கு சொல்லிட்டு செய்யறேன் அதுவும் உனக்காக சோ லூசுத்தனமா ஏதாவது செஞ்சு வைக்காமல் வந்து சேரு "...என்று அவளுக்கு மட்டுமே கேக்கும் ஹஸ்கி குரலில் குனிந்து இருந்த அவளது முகம் நோக்கி அவனும் குனிந்து அவனின் சூடான மூச்சுக்காற்று அவள் மீது படும்படி கூறினான்...கிட்டத்தட்ட மென்மையாக மிரட்டி விட்டே சென்றான் ..

அந்த வார்த்தையைக் கேட்டவள் இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டு இருக்க அவனது அருகாமை வேறு அவளுக்குக் கிலியை கொடுக்க மீண்டும் மந்தகாச புன்னகையுடன் அந்த அரங்கத்தின் கூட்டத்தில் நுழைந்து விட்டான்...

தலை குனிந்து கொண்டே நின்றவளுக்கு அவனது பேச்சை கேட்டவளுக்கு இவனிடம் போய் மதி மயங்கி இருந்தேனே என்று கண்ணீர் வந்தது..

இப்போது எதற்காக அழைக்கிறான் அது தான் அவனை வேண்டாம் என்று அவனிடமே கூறி விட்டனே என்று ஒரு மாதம் முன்பு நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தாள்...

ஒரு மாதம் முன்பு

கிட்டத்தட்ட மாலில் வைத்து பிருத்திவியைக் கண்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் அபிக்கும் இன்னும் சரியாக நடக்க முடியவில்லை கிட்டத்தட்ட நொண்டி நொண்டி நடந்து கொண்டு இருக்கும் நிலையில் உள்ளவனுக்கு உதவிகள் அவள் தான் செய்து வருகிறாள்..

அபி இப்போது தொழிலில் இறங்க அவன் தாயிடம் பயிற்சி எடுத்து வருகிறான்..ராஜேஸ்வரி மற்றும் ஈஸ்வர் முழுதாகத் தொழிலை அவனை நம்பி கொடுத்து விடவில்லை..அவர்கள் தான் கவனித்து வருகிறார்கள் அபியின் திறமை போல இருக்கும் அவனது உயர்வு என்று கூறி வேலையை கொடுக்க அவனும் முயன்ற அளவு அவனுக்கு அளித்த வேலையை சரியாக செய்து வருகிறான் ,

அப்படி ஒரு நாள், அபி அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்று கொண்டிருந்த சமயம் அவனை அழைத்தார் ராஜேஸ்வரி..

"எஸ் மாம் சொல்லுங்க"...

"அபி நம்ம கன்ஸ்ட்ரக்ஷன்ல கொஞ்சம் பிரச்சனை நானும் ,அப்பாவும் அங்கே போறோம் நாங்க வர லேட் ஆகும்னு நெனைக்கிறேன் நீ நம்ம மேனேஜர் கூட இந்தியன் எக்ஸ்போ நடக்குது அங்கே போ..அங்கே நிறையக் கிளைன்ட்ஸை நீ மீட் பண்ணலாம், புது மெசினரிஸ் வந்து இருக்குன்னு சொன்னாங்க அது என்ன டீடெய்ல்ஸ் அண்ட் காஸ்ட் எப்படி எல்லாமே விசாரிச்சு வை.. அண்ட் உனக்கும் கொஞ்சம் கத்துக்க முடியும்".. என்று கடைசியாகக் கூற

அவனும் , "சரி மாம் "...என்று கூறி விட்டு அங்குச் செல்ல ஆயத்தம் ஆனான்..

அந்த நேரம் பார்த்து சம்யூ , "அபி நீ தான் அந்த எக்ஸ்போக்கு போறில.. நான் எதுக்கு அங்கே நான் வேணா வீட்டுக்கு போகவா"... என்று கேட்டாள்..

ஏனெனில் காரணமே இல்லாமல் இன்று காலை முதல் தலை கனமாக இருந்தது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரியாகி விடும் என அவள் நினைத்து தான் அவனிடம் கேட்டான்..

அபியும் , "சரி எங்களை அங்கே ட்ராப் பண்ணிட்டு நீ போ தென் நான் கூப்பிடும் போது டிரைவரை அனுப்பினா போதும்"... என்றான்..

சரி என்று மூவரும் கிளம்பி அந்த எக்ஸ்போ நடக்கும் இடத்திற்குச் சென்றடைந்து அந்த எக்ஸ்போ நடக்கும் வாயிலில் இவர்களின் கார் நிறுத்தப்பட்டு அபி மற்றும் மேனேஜர் இறங்க முற்படும் போது அங்கே இவர்களை மோதுவது போல ஒரு உயர்ரகக் கார் வந்தது...

"யாரது இப்படி ஹார்சா டிரைவ் பண்றது ??"..என்று எதிரே வந்த கார் முட்டுவது போல வந்து நிற்பதை கண்டு அபி கூற சம்யூவும் அந்த நேரம் அதே தான் நினைத்து கொண்டிருந்தாள்...

"சார் அது போர் ஸ்கொயர் கம்பெனி ஓனர் P.ராஜ் அவரோட கார் சார் ஐ திங்க் அவர் தான் வந்திருப்பார்ன்னு நெனைக்கறேன்"...என்று அவர் கூற

"வாட் அவரா"... என்று அபி ஆச்சர்யமாகப் பார்க்க அதற்குள் ஆகாய வீரன் போல் காரில் இருந்து இறங்கினான் பிருத்திவி அவனைக் கண்ட அபி மற்றும் சம்யூ அதிர்ந்தனர்..

அபியின் மனதில் P.ராஜ் என்பது ஒரு மத்திய தர மனிதனாக இருப்பான் என்று அவன் உருவகப்படுத்தி வைத்திருக்கும் போது அவனை விட ஒரு இரண்டோ அல்லது மூன்று வயது மூத்ததாக இருக்கக் கூடும் அவ்வளவே...

அதற்குள் அவனது வளர்ச்சியைப் பார்த்தால் முப்பது வருடத்துக்கும் மேலாக இந்தத் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் கோலோச்சி வரும் ராஜேஸ்வரியை விட இவனது வளர்ச்சி அசுர வளர்ச்சி தான் என அந்த நிமிடம் அபிக்குத் தோன்றாமல் இல்லை..

அபி பிருத்திவியின் தோற்றத்தை கண்டு அதிர்ந்தான் என்றால் சம்யூ P.ராஜ் என்பது பிருத்வி தானா என அதிர்ந்தாள்..

அவள் முகமே கூறியது இந்த அதிர்ச்சியை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கண்களைக் கசக்கி எல்லாம் பார்க்கிறாள் இது என் காதலன் பிருத்வி தானா என ஆனால் அதோ பரிதாபம் அது அவனே எத்தனை முறை கண்களைக் கசக்கி பார்த்தாலும் அவன் உருவத்தைத் தவிர வேறு உருவம் எதுவும் அவள் கண்களுக்குப் புலப்படவில்லை..

அதிலும் காரில் இருந்து இறங்கியவன் இவர்களைக் யாரையும் கண்டுகொள்ளாமல் கார் வாலட்டை தூக்கி சிப்பாயிடம் பார்க் செய்யக் கொடுத்தவன் இவர்களைக் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று விட்டான்...

பிருத்வி சென்ற பின் அபி மற்றும் மேனேஜர் இறங்க அவர்களுடனே சம்யூவும் இறங்கினாள்..

அவளுக்கு அவனது சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் எதுக்கு டா என்னை இப்படி ஏமாத்தின என்று கேட்க அவளது உள்மனம் துடித்துக் கொண்டிருந்தது..

அதை வெளிக்காட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.. , "நீ எங்கே வர தலை வலின்னு சொன்ன??"... என்று அபி கரிசனையாகக் கேட்க

"இல்லை அபி தலை வலி போயிடுச்சு நான் உன்கூடவே வரேன் "...என்று அவள் உள்மனம் குமைந்தாலும் வெளியே எதையும் காட்டி கொள்ளாத படி தன்னைப் பிறரிடம் மறைக்கத் தெரிந்தவளுக்குப் பிருத்திவியை நேருக்கு நேர் சந்தித்தால் மறைப்பது கடினம் என்றே தோன்றியது..

இதோ மூவரும் விழா நடக்கும் இடத்திற்கு நுழைய அப்போது தான் ஒரு இயந்திரத்தை பார்வையிட்டுக் கொண்டே ஒரு சிலர் அவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது இவர்கள் உள் நுழைய பிருத்வி முதலில் கவனிக்காமல் தான் இருந்தான்..அவன் எதற்காக அங்கு வந்தானோ அந்த வேலையை சரியாக செய்து கொண்டிருந்தான்...

ஆனால் சம்யூவின் நிலைமை தான் பாவமாக இருந்தது...என்னவோ இவள் தவறு செய்தவள் போல அபியின் கைகளை தெம்பாக பிடித்து கொள்ள அபியின் கண்கள் பிருத்திவியின் மீதே நிலைத்து நிற்பதால் அவனுக்குச் சம்யூவின் நிலைமை அவனது கண்ணில் படவில்லை அப்படிப் பட்டிருந்தால் கூடப் பின்னாளில் நடக்கும் பிரச்சனைகள் நடக்காமலாவது இருந்திருக்கும்...

சம்யூவால் அப்போது கூட நம்ப முடியவில்லை.. இரண்டு வாரத்திற்கு முன்பு கூட என்னை முத்தமிட்டானே அது கூடக் காதல் என்று நினைத்தேனே அது காதல் அல்ல என் அத்தை மீது இருக்கும் பழி வாங்கும் வெறிக்கு என்னையும் இரையாக்கி விட்டான் என்று அறிவுள்ள பெண் விரைவில் விஷயத்தைப் புரிந்து கொண்டாள்..

தன்னைச் சீரழித்த அவன் மீது கோபமே வந்தது காதல் என்ற பெயரில் என்னை ஏமாற்றி இருக்க வேண்டாம் எனப் பெண் மனம் துடித்தது..ஆனால் சம்யூ அந்நேரம் ஒன்றை மறந்து விட்டாள் அவன் எங்கேயும் அவளிடம் காதலிக்கிறேன் என்று அவளிடம் கூறவே இல்லை அதுமட்டுமின்றி அவள் தான் அவனைக் கண்டதும் அவன் மீது ஈர்ப்பு உண்டாகி அது காதலாகி இப்போது கண்ணீரோடு நிற்கிறாளே ஒழிய இந்த விஷயத்தில் அவன் மீது தவறில்லை...

அவனுக்கு இவர்களின் குடும்பத்தைக் குலைக்கவே அவன் இங்கு வந்திருக்க அவனைப் பொறுத்தவரை அவன் மிகச் சரியாக அவன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறான்...

இப்படி அவள் அவனைத் தீப்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போது மேலும் எண்ணெய் ஊற்றும் விதத்தில் அபியின் இளரத்தம் சூடாகக் கொதித்து எழுந்து அவன் முன்னே அவனைக் கொண்டு போய் நிறுத்தியது...கூடவே தன் கையை பிடித்து இருப்பவளையும் இழுத்து சென்றான்...

தன் முன்னே வந்து நிற்பது யாரென்று தெரியாத அளவுக்குப் பிருத்வி ஒன்றும் முட்டாள் இல்லையே..

"ஹலோ மிஸ்டர் அபிஷேக் ஈஸ்வர் எப்படி இருக்கீங்க ??"...என்று கூறிக் கொண்டே அவன் அருகில் அபியின் கையைப் பிடித்தபடி நிற்கும் சம்யூவின் மீது அவனது பார்வை ஒரு நொடி பதிய அவளோ தீப்பார்வை பார்த்து அவனைக் குற்றப்படுத்தினாள்..

ஆனால் அவனைப் பார்த்தாலே அவளுக்குப் புரிந்து போனது அவன் எதற்கும் தயாராக இருப்பது போல நின்றவன், " என்ன குடும்பச் சகிதமா வந்து இருக்கீங்க "...என்று ஒன்றுமே தெரியாதவன் போல அவன் வினவ

"என்ன மிஸ்டர் P.ராஜ் நீங்க மட்டும் தான் இங்கே எல்லாம் வரனும்னு இருக்கா ??"...என்று எதிர் கேள்வி கேட்டான் சற்றே காரம் கூடுதலாக

புருவத்தைத் தூக்கி சற்றே நக்கல் கலந்த குரலில், " எங்கே வேணாலும் வரலாமே யாதும் ஊரில் யாவரும் கேளீர்"... என்று கூறி தன் கன்னகுழி தெரிய சிரிக்க

அவனது சிரிப்பை கண்ட சம்யூவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது...

அபிக்கு சற்றும் பொருந்தாத இந்த வார்த்தை போரில் விளையாட அவனுக்கு விருப்பமில்லை என்றாலும் பிருத்திவியைக் காணும் போதே எரிச்சல் மேலோங்கி இருக்க நேருக்கு நேரே பிருத்திவியின் முகத்தைப் பார்த்து , "மிஸ்டர் ராஜ் நீங்க எப்படித் தந்திர பூர்வமா எங்க தொழிலை அழிக்க நெனைச்சீங்களோ அதே போல நான் உங்களோடதை அழிப்பேன்"...என்று நேருக்கு நேராக விஷயத்தை போட்டு உடைக்க

"இஸ் இட் அதுக்காக நான் காத்து இருக்கேன்..எனக்கும் என் முன்னே போராடுற எதிராளியை தான் பிடிக்கும் "...என்று புருவத்தை நெளித்த படி அவன் மீது நம்ப முடியா பார்வையைப் பதித்துக் கூற

"இனி R ட்ரேடஸுக்குள் நீங்க இனி நுழையனும்னா அது என்னை மீறி தான் நீங்க நுழைய முடியும்"... என்று கண்களில் அனல் தெறிக்க அபி கூற

அதைக் கூலாகக் கேட்டவனின் விழிகளில் வில்லத்தனம் குடிபுகுந்து எதிரே நிற்பவளை ஒரு நொடி நோட்டம் விட்டவன் , "மிஸ்டர் அபிஷேக் நான் ஏற்கனவே உங்க பாதையில் நுழைஞ்சுட்டேன்னு உங்க வீட்டு பொம்பளைங்க சொல்லலையா??"... என்று அவன் சம்யூவை பார்த்துக்கொண்டே கேட்க சம்யூ அந்த இடத்தில் செத்து விட்டாள் என்றே கூற வேண்டும்..

அவளுக்கு அங்கே துடித்துக் கொண்டு இருக்கப் பிருத்வி இந்த வார்த்தையைக் கூறவும் அவளுக்கு அவனது கன்னத்தைப் பதம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற கூடவே அழுகையும் போட்டிப்போட்டு அவளை வாட்டியது அதில் அழுகை ஜெயிக்க மற்றவர்கள் முன் தன் சோகத்தைக் காட்டி கொள்ள விருப்பமில்லாதவள் சுற்றி முற்றி பார்க்க ஒரு கழிப்பறை தென்பட்டது..

உடனே தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அவ்விடம் பெயர்ந்தாள் சம்யூ..

பிருத்திவி கூறி இருந்த வார்த்தையில் பொம்பளைங்க என்ற வார்த்தையில் தன் அம்மா மட்டும் தான் இருக்கிறார் என நினைத்து, " எங்கே வீட்டுல ஆம்பிளைங்களும் இருக்காங்க..சந்திப்போம் மிஸ்டர் ராஜ் ".. ..என்று கூறியவன் கூட்டத்துக்குள் நுழைந்து கொண்டான்...அபியின் மனம் முழுவதும் பிருத்திவியை எப்படித் தாக்கலாம் என்றே இருந்தது...

ஆனால் பிருத்திவியின் கண்கள் தலை குனிந்து கழிப்பறைக்குள் சென்றவள் மீதே இருக்க அபியை பின்னர்ப் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அவ்விடம் நகர்ந்தான்...

மாயவன் வருவான்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top