அத்தியாயம் 8
மனம் விரும்புதே மாயவா
மும்பையில் மிக பெரிய மருத்துவமனையான, " தி கேப்பிடல்"... மருத்துவமனை மிக பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது..வெளியே ஊடகவியலார்கள் குழுமியிருக்க அந்த மருத்துவமனையே அரண்டிருந்தது...
மும்பை முழுவதும் ஹாட் டாபிக் ஆர் ட்ரேடர்ஸ் ஆப் கம்பெனிஸ் எம்.டி திருமதி.ராஜேஸ்வரியை பற்றி தான்..தொழில் வட்டாரத்தில் எல்லோரையும் கலங்கடிக்கும் இரும்பு மனுஷிக்கு என்ன ஆனது என்ற கேள்வி தான் பெரிதாக பேசப்பட்டிருக்க அப்போது தான் கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் கார் அந்த கூட்டத்துக்குள் நுழைய முடியாமல் நுழைந்து கொண்டு இருந்தது..
காருக்குள் இருந்த சம்யூ அதிர ஈஸ்வர் நெற்றியை நீவி விட்டு தன் டென்ஷனை குறைத்தவர், " சம்யூ கார்ல இருந்து இறங்கினதும் யார் கேள்விக்கும் பதில் அளிக்காமல் நேரா உள்ளே போ "..என்று ஈஸ்வர் கூற, " சரி மாமா".. என்று கூறியவள் மிகுந்த வேதனையில் இருந்தாள்..
ஆம் அபி சரியாக உடல் நலம் தேறாத நிலையில் ராஜேஸ்வரிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால் ஏதோ கெட்ட காலம் அவள் குடும்பத்தை ஆட்டி படைக்கிறது என்றே சம்யூ நினைத்தாள்.. மிக சரியாக சொல்ல வேண்டுமெனில் அவர்களது தாத்தா ராம மூர்த்தி மறைவுக்கு பின் எதுவுமே சரியில்லை...
அத்தை கோபக்காரி இருந்தாலும் அவளிடம் ரொம்ப காய மாட்டாள் அப்படி இருக்க இப்போது எல்லாம் காரணமே இல்லாமல் திட்டிக் கொண்டு இருந்தாலும் அதை கூட சம்யூ அபிக்கு இப்படி நடந்ததால் தானே இல்லை என்றால் சம்யூவை இது போல கடிய மாட்டார் என நினைத்து மனதை அடக்கி கொண்டவளுக்கு அந்த அத்தை இப்போது உடல் நலம் சரியில்லாமல் படுத்து இருக்கிறார் என்ற செய்தி கிடைத்ததும் அவளுக்கு மிகுந்த மன வேதனையை கொடுத்தது..
காரில் இருந்து சம்யூ இறங்கியதும் பல மைக்குக்குள் அவளை பின் தொடர யாரையும் கவனிக்காமல் அவளுடைய மாமாவின் கையை பிடித்தபடி உள்ளே சென்ற பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது...
நேற்று மாலையில் இருந்து இங்கே இதே நிலைமை தான் மேனேஜர் ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டு இருக்கிறோம் என்று கூறியது முதல் இப்படித்தான் அதிலும் பல ஊடகங்கள் வாய்க்கு வந்தபடி எழுதி இருந்தனர்..
ராஜேஸ்வரிக்கு பதவி போன மன வலியில் தான் இப்படி ஆனது என்றும், " போர் ஸஃகோயர் " கம்பெனி மூலமே இப்படி ஆனது ராஜேஸ்வரியின் பங்குகளை அவர்கள் பெற்றதாலே அந்த அதிர்ச்சி அவர்களை இதய நோய் தாக்கி விட்டது என்று பல விதமாக பல வித சேனல்களில் உலா வந்து கொண்டிருக்க ராஜேஸ்வரி குடும்பத்தார் வாயை மூடிக் கொண்டு இருந்தது வேறு அவர்களுக்கு வசதியாக போய் விட்டது.. அவர்கள் அவர்களுடைய இஷ்டத்துக்கு எழுதி கொண்டு இருந்தனர்...
இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சம்யூ மற்றும் ஈஸ்வர் உள்ளே செல்ல அப்போது மருத்துவர் ராஜேஸ்வரியை பரிசோதனை செய்து கொண்டு இருந்தார்..
வெளியே வந்த மருத்துவர் ஈஸ்வரை பார்த்து , " மைல்ட் அட்டாக் தான் ஈஸ்வர்...ஆஞ்சியோ பண்ணிட்டோம்ல இனி சரியாகிடும் பயப்பட தேவையில்லை..அவங்களுக்கு அதிகம் ஸ்ட்ரெஸ் கொடுக்காமல் பார்த்துக்கோங்க..ஷீ நீட் ரெஸ்ட்".. என்று மருத்துவர் கூற
ஈஸ்வரோ , "சரி டாக்டர் நாங்க இப்போ ராஜேஸ்வரியை பார்க்கலாமா ??"
. என்று கேட்டனர்..
"இப்போ அவங்க மயக்கத்தில் இருக்காங்க நான் நர்ஸ் கிட்ட சொல்லிட்டு போறேன் நீங்க அவங்க எழுந்ததும் பார்க்கலாம்"... என்று மருத்துவர் கூற
"சரி டாக்டர்".. என்று கூறி ஈஸ்வர் அபியை காணலாம் என முடிவு செய்து,
" சம்யூ வா நாம போய் அபியை பார்த்துட்டு வரலாம் "...என அவளை அழைத்து சென்றார்..
அபி இன்னும் சரியாக நடக்கவில்லை முயன்று கொண்டு இருக்கிறான் அதனால் வீல் சேரில் அமர்ந்து இருந்தான்.. அவனது தாய்க்கு மாரடைப்பு என்ற விஷயம் அறிந்ததுமே அவனால் தாங்கி கொள்ள இயலாமல் அங்கும் இங்கும் வீல் சேரிலே சுழன்று கொண்டிருந்தான்..
இவர்கள் இருவரும் அவனை காண கதவை திறந்ததும் அவனுடைய வேதனை படிந்த முகமே கூறியது அவன் மிகவும் வருத்தத்தில் இருக்கிறான் என்று , "சம்யூ அம்மாவுக்கு எப்படி இருக்கு"... என்று பதட்டத்தோடு கேட்க
"இப்போ பரவாயில்லை அபி கொஞ்சம் நேரம் கழிச்சு பார்க்கலாம்ன்னு சொல்லி இருக்காங்க டாக்டர் இப்போ மயக்கத்தில் இருக்காங்க "...என்று சம்யூவும் வேதனையோடு கூற
அபியின் தந்தையை பார்த்து , "டாட் எனக்கு அம்மாவை உடனே பார்க்கணும் ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போங்க ஐயம் ஆல் ரைட் நௌ ஐ வான்ட் டூ சீ ஹெர் டாட் "..என்று கூற
ஈஸ்வரும் உடைந்து தான் இருந்தார் அவரை தேற்றவே ஆள் வேண்டும் என்ற நிலையில் இருந்த அவரை பார்த்த அபி தனது வேதனையை மறைத்து தனது தந்தைக்கு ஆறுதல் கூற துவங்கினான்..
"டாட் அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது ரீலாக்ஸ்.. இனி நான் பிசினஸ் ஆஹ் பார்த்துக்கறேன் "..என்று கூறியவன் முகத்தில் தைரியம், தன்னம்பிக்கை சுடர் விட்டு எரிந்து கொண்டு இருந்தது..
இதுவரை விளையாட்டு பையனாக சுற்றி கொண்டிருந்த அபி இனி தொழிலில் தாயாருக்கு வேண்டி தொழிலில் இறங்க முடிவெடுத்து விட்டான்..அவனது இம்முடிவை வரவேற்ற அவனது தந்தை ஈஸ்வர் சிறிது தைரியமாய் இருந்தாலும் எப்போதும் உடல் நலன், அழகில் கவனம் செலுத்தும் ராஜேஸ்வரிக்கு எப்படி மாரடைப்பு வந்தது என்பது அவருக்கு இந்த நொடி வரை புரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் புரிந்து போனது பிருத்வி வந்து விட்டு போனதுக்கு பிறகு தான் அவரின் உடல் நலம் மோசமாகி வந்தது என்பது அவர்கள் மூவருக்கும் சந்தேகமாக இருக்க அபி கேட்டே விட்டான், " யார் டாட் அம்மாவுக்கு இந்த அளவுக்கு ப்ரெஸர் கொடுக்கிறது"...
"எல்லாம் அந்த P.ராஜ் தான் அவன் தான் நம்ம கம்பெனியோட 48% சேர்ஸ் வெச்சு இருக்கான் "...என்று ஒரு மாதிரியான குரலில் ஈஸ்வர் கூற
"எதனால் அவன் நம்ம கம்பெனியை இப்படி செய்யணும் என்னவோ இருக்கு டாட்..நம்ம கம்பெனியை மட்டும் தான் அவன் டார்கெட் பண்ணி இருக்கான்னு நெனைக்கிறேன் "...என்று அபி சரியாக கணிக்க
"எனக்கும் அந்த சந்தேகம் இல்லாமல் இல்லை அபி"..என்று பதில் அளித்த ஈஸ்வருக்கு அந்த ராஜை கொல்லும் ஆத்திரம் எழுந்தாலும் வெளியே சாந்தமே உருவாக நின்று கொண்டு இருந்தார்..
அபியின் சந்தேக வட்டத்துக்குள் முகமறியாத அந்த ராஜ் நுழைந்தான்...அந்த நேரம் சம்யூவுக்கும் அந்த அந்நியன் மீது கோபம் வந்தது அதிலும் அபிக்கு தனது தாய்க்கு இவ்வளவு தூரம் குடைச்சல் கொடுப்பவன் யார் என்று காண வேண்டும் என்று எண்ணினான்..
"சம்யூ என்னை அம்மா கிட்ட கூட்டிட்டு போ "..என்று அபி கூற
சம்யூவும் அபியை வீல் சேரோடு அவனை உந்தி கொண்டு சென்றாள்..
இவர்கள் மூவரும் செல்லும் நேரம் மிக சரியாக இருக்க அப்போது கண் விழித்து இருந்தார் ராஜராஜேஸ்வரி..
குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்து மெல்லிய புன்னகை உதிர்த்தவர், " இப்போ எப்படி இருக்க அபி"... என்று தாயாய் மகனை விசாரிக்க
"அதை நான் கேட்கணும் மாம் நீங்க எப்படி இருக்கீங்க என்ன ஆச்சு எதுக்கு இப்படி ஸ்ட்ரெஸ் எடுத்துக்கறீங்க"... என்று பாசமாக வினவ
"எனக்கு என்ன ..எனக்கு ஒன்னும் இல்லை..ஐயம் பெர்பெக்ட்லி ஆல் ரைட் எனக்கு செய்ய வேலைகள் தலைக்கு மேல இருக்கு அபி "...என்க
"மாம் லிசன் டூ மீ ..இத்தனை நாள் என்கிட்ட நீங்க கேட்டுக்கிட்டே இருந்த விஷயத்துக்கு இப்போ நான் சம்மதிக்கறேன் நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஆபிஸ் வரேன்..இனி நீங்க கைட் பண்ணுங்க நான் தொழிலில் இறங்குறேன்" ..என்க
"இல்ல அபி அது சரி வராது..இந்த சமயம் அதுக்கான சமயம் இல்ல"..
"மாம் எல்லாம் சரி வரும் நான் பார்த்துக்கறேன் உங்களுக்கு எவன் குடைச்சல் கொடுக்கிறானே அதே போல அவனை அடிப்போம்".. என்று கூறும் போதே அபியின் கண்களில் ஆவேசம் தெரிந்தது...
ஆனால் அபி அறியாத ஒரு விஷயம் அபிக்கு முளைத்து இருக்கும் புதிய ஆவேசத்தால் பிருத்திவியின் காலடி மண்ணை கூட ஒன்றும் செய்ய முடியாது என்பது அவனுக்கு தெரியவில்லை..
மேலும் அபியோ, " மாம் அவன் வந்து உங்க கிட்ட என்ன சொன்னான் அவன் வந்துட்டு போன பிறகு தான் உங்களுக்கு இப்படி ஆகி இருக்கு அதுனால தான் கேக்கிறேன் "..என்று அபி கேட்க
ராஜராஜேஸ்வரியோ அவன் கேட்ட கேள்வியில் முகம் இருண்டு , "அது வந்து நத்திங் அபி..பட் நீ தொழிலுக்கு இறங்கும் முன் உனக்கும் சம்யூவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நான் டிசைட் பண்ணி இருக்கேன்"... என்று கூற
"வாட் மம்மி இப்போ என்ன அவசரம் எங்க கல்யாணத்துக்கு அதுமட்டுமின்றி எங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு ஒரு சிறு துளி எண்ணம் கூட எங்களுக்கு இல்லை"... என்று அபி கூறினான்..
சம்யூவோ அதை கேட்டதுமே தலை சுற்றியது அவளுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை தான் அவள் மனதில் பிருத்வி தான் இருக்கிறான் அதுவும் ஈருடல் ஓர் உயிராக ஒன்றாக கலந்த பிறகு அபியை பிருத்திவியின் இடத்தில் வைத்து பார்க்கவே முடியாது என நினைத்து,
" அத்தை எனக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லை அபியை என்னால அப்படி நெனைச்சு பார்க்க முடியாது"... என்று தன்மையாக தான் கூறினாள் உடனே கொதித்து எழுந்து விட்டார்..
"என்ன டி அப்படி நினைச்சு பார்க்க முடியாது??
நெனைச்சுட்டு இருக்கீங்க இரண்டு பேரும் ??..
உங்களால தான் நான் இங்கே வந்து படுத்து இருக்கேன் கல்யாணம் வேணாமாமே!!..
இனி உங்க இரண்டு பேரையும் உங்க இஷ்டத்துக்கு விட முடியாது அடுத்த முகூர்த்ததில் கல்யாணம் இது தான் என் முடிவு"
"மா இதில் எங்க இரண்டு பேருக்கும் இஷ்டம் இல்லை விருப்பம் இல்லாத இரண்டு பேரை நினைச்சு நீங்க என்ன சாதிக்க போறீங்க".. என்று அபி தெளிவாக கேட்க
ஒரு நொடி அதிர்ந்த ராஜேஸ்வரி ஈஸ்வரை பார்க்க அவரும் அந்நேரம் பார்த்தவர் நிலைமையை உடனே கையில் எடுத்து கொண்டு, " அபி அம்மாக்கு உடம்பு சரியில்லாத போது இது என்ன தேவை இல்லாத ஆர்க்யூமெண்ட் ..எப்படி இருந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணனும் அது ஏன் நீங்க இரண்டு பேரும் பண்ணிக்க கூடாது சோ அம்மா எடுத்த முடிவில் தப்பு இருக்கிற மாதிரி எதுவும் எனக்கு தெரியல..
நீங்க இரண்டு பேரும் பொறந்ததுல இருந்து ஒன்னா இருக்கீங்க சோ உங்களுக்கு என்ன பிரச்சனை சோ லீவ் த டாபிக் ..கல்யாணத்துக்கு ரெடியா இருங்க அண்ட் அம்மாக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுக்க வேணாம்".. என்று கூறிய ஈஸ்வர் பேச்சு முடிந்தது என்பது போல மனைவியை அர்த்தம் உள்ள பார்வை பார்க்க அதே நேரம் ராஜேஸ்வரியும் ஈஸ்வரை பார்த்தார்...
பெரியவர்கள் அவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க இளையவர்கள் வாய் திறக்கவே முடியாத படி விலங்கு இல்லாமல் கைகள் கட்டுப்பட்டு இருக்கும் நிலைக்கு சென்று இருந்தனர்...
அபிக்கு முகமறியாத அந்த பெண் மனதுக்குள் வந்தாள் என்றால் சம்யூவுக்கு சொல்லவே வேணாமே காதல் கொண்டவள் மனது காதலை மட்டும் அவனுக்கு தாரை வார்க்கவில்லையே...அவளை தானே முழுதாக தாரை வார்த்து இருக்கிறாள்...அவனை மறந்து விட்டு வேறொரு திருமணமா?? இல்லை நடக்கவே நடக்காது..
தன்னால் இந்த நிலையில் வாயை திறக்க முடியாது என்று தெரிந்தும் இந்த விஷயத்தை பிருத்திவியிடம் தெரிவித்தே தீர வேண்டும் அவனை எப்படி சந்திப்பது அவன் எங்கே இருப்பான் என்ன செய்கிறான் பெயரை தவிர வேறு எதுவுமே தெரியாதே என குமைந்தவள் உடைந்த போனை சரி செய்தாவது அவனை தொடர்பு கொள்ள வேண்டும் என முடிவு செய்தாள்..
அதன் படி இரு நாட்களுக்கு பிறகு கிட்டத்தட்ட அபி மற்றும் ராஜேஸ்வரி இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்க அந்த சமயம் பார்த்து வெளியே சென்றாள் சம்யூ..தோழி ஒருத்தி வருவதாக கூற சட்டென்று அந்த தோழியால் வர முடியாத சூழ்நிலையில் சம்யூ நொந்து கொண்டே தனியாக ஒரு பிரபல மாலுக்குள் நுழைந்தாள்..
புதிய போன் ஒன்று வாங்குவதற்காக தான் இங்கு வந்து இருந்தாள்...அது ஒரு ஆறு மாடிகளை கொண்ட அழகிய மால்..அதற்குள் நுழைந்தாலே ஏசியின் குளுமை ஆட்டி படைக்க யாருமின்றி தனியாக சுற்றுவது ஒரு மாதிரியாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் கூட சுற்றி கொண்டிருந்தாள்...
மொபைல் சாதனங்கள் உள்ள தளம் மேலே இருக்க அதற்காக லிப்ட்க்குள் ஏறியவள் யாருமில்லா லிப்ட்டின் இருக்கும் ஆள் உயர கண்ணாடி வழியே தன்னை கண்டவளுக்கு தன் முகத்தை பார்க்க கொஞ்சம் லிப்ஸ்டிக் அதிகமாக இருப்பது போல தோன்றியது..
உடனே தனது கைப்பையில் இருந்து டிஸுவை எடுத்து இலேசாக ஒற்றியவள் முத்தம் கொடுப்பது போல உதட்டை குவித்து தன்னை அழகு பார்த்தவள், " இன்னும் கொஞ்சம் லிப்ஸ்டிக் அதிகமா இருக்கோ".. என்று மீண்டும் உதட்டை குவித்து சரி பார்த்து கொண்டு இருக்கவும் அடுத்த தளம் வரவும் சரியாக இருக்க லிப்பிட்டின் கதவு திறக்கப்பட்டது ..
வெளியே இருந்து உள்ளே நுழைந்தது வேறு யாரும் இல்லை பிருத்வி ராஜ் ..யாருக்காக அவள் இங்கு வந்தாலோ அவனே வந்து இருந்தான்..
அவள் மனதை கொள்ளை கொண்ட அவளையும் கொள்ளை கொண்ட அவனவள் அவனை கண்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருந்தவள் கண்களை மூடியும் திறந்தும் ரோபர்ட் போல இருந்தவளின் உதடு மட்டும் குவித்த நிலையிலே இருந்தது..
அதை கண்டவனுக்கு அவள் அவனை அழைப்பது போலவே இருந்தது அவளது செய்கை..அவனை அவள் அழைக்கவில்லை என்றாலும் அவளை எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும் என்ற மாய வித்தை கற்று வைத்து இருக்கும் கள்வன் உள்ளே நுழைந்ததும் கதவு அடைப்பட்டு கொள்ள இன்னமும் அவள் இதே நிலையில் தான் இருந்தாள்..
ஒரு நொடி அவளை முழுதாக அளந்தான்.. சிறிய கை இல்லாத டாப்ஸ் ஆங்காங்கே கிழிந்து தொங்கும் ஜீன்ஸ் அணிந்து இருந்தாள்...அவளின் செந்நிற உதட்டுக்கு தாராளமாக உதட்டு சாயமும் லிப் க்ளாஸ் இட்டு அவளின் உதடே போதும் அவனை சொக்கி இழுக்க...
சம்யூ பிருத்திவியை சொக்கி இழுத்தாள் அவள் புறம் நோக்கி வந்தவன் ஒரு நொடி மட்டும் கண்களில் பழி வெறி மின்ன அடுத்த நொடி எதிரே நிற்பவள் இன்னும் தன்னை உற்று பார்த்து கொண்டு இருக்கிறாள் என்பதை கண்டு தன் முகத்தை நொடி பொழுதில் மாற்றியவன் மனதில் அவள் தன்னை இவ்வளவு காலமாக காணாதது எல்லாம் நினைவு வந்தாலும் இப்போது அந்த கோபத்தை காட்ட வேண்டிய வேலை இல்லை என்பதை உணர்ந்து சற்றே அவளின் செய்கைளை ஒதுக்கி அவள் எப்போதும் வீழும் அவனது கன்னக்குழி சிரிப்போடு அவள் அருகே வந்தவன் அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்து,
"என்ன அப்படி பார்க்கிற கிஸ் பண்ணனுமா?".. என்று கேட்டு கொண்டே அவள் அருகே வந்தவன் தனது இரு விரலால் அவள் குவித்த உதட்டை தன்னை நோக்கி இழுத்தவனின் மற்றொரு கை அவள் அணிந்து இருந்து சிறிய டாப்ஸின் மீதி வைக்க, அவன் அருகே வந்த போது அவனின் பிரித்யேக நறுமணம் அவளின் மூச்சு குழாயின் உள் செல்ல அவளுக்கு மூச்சு அடைத்து போக அதில் மேலே எழும்பி நின்ற அவளது வெண்ணிற இடையை தன்னை நோக்கி வளைத்தவனின் திண்ணிய மார்பில் அவளின் இளமை பொங்கும் செங்கொழுந்துகள் மோதி நின்றவளின் இதழை தன் இதழோடு வெறித்தனமாக ஒற்றினான்..இதழ் ஒற்றலோடு மட்டுமின்றி அவளை காற்று கூட பூகாத அளவுக்கு இறுக்கி அணைத்திருந்தான்..
எவ்வளவு நேரம் நீடித்ததோ தெரியவில்லை முதன் முறையாக இருவரும் சுயநினைவோடு ஒருவர் இதழை ஒருவர் ருசித்து கொண்டிருந்தனர்...
அவள் அவனை கண்டது முதல் கனவு உலகத்துக்கு சென்றவள் அவனது இதழை ருசித்தானோ தெரியாது ..அவன் நன்றாக ருசித்து கவ்வி இழுத்தான்
. அதில் மோகமுள் இருவரையும் குத்தி கிழித்தது..இல்லையில்லை அவளை தான் குத்தி கிழித்தது.. அவனுக்கு குத்தி இருக்குமோ யார் அறிவார் அவன் மனதில் என்ன இருக்கிறது என்று எவர் அறிவார்..
அவள் துவண்டு அவன் மீதே சாய அவளின் கலைந்த முடிகளை ஒதுக்கி விட்டவன் கைகள் அவளது தோளை பிடித்து ஒரு கையால் அவளது தாடையை தூக்கியவன் விழிகள் அவளை அளந்து," எஸ் இப்போ லிப்ஸ்டிக் சரியா இருக்கு "...என்று கூற சம்யூவுக்கு நாணம் வந்து உதடு மட்டுமல்ல உடல் முழுவதும் சிவந்தாள்...
அவள் முகத்தை பார்த்தவனின் விழிகள் விஷமம் வழிய வெட்கம் என்ற பூவை சூடியவள் அவனது மார்பிலே சாய்ந்தாள்..
தன் மீது சாய்ந்தவளை இறுகி அணைக்க துடித்த கையை ஒரு பெருமூச்சை விட்டு தன்னை நிலை பெற செய்தவனின் உடலில் காமம் சுடர் விட்டு எழுந்தாலும் தன்னை அடக்கியவன், " எனக்கு கால் செய்யணும் சொல்லிட்டு போகணும்னு கூட தெரியாதா??? "... என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான்..
அவனது குரலை பிரித்தறிய கூடிய புத்தி இருந்தால் அவள் ஏன் இன்னும் அவனின் தோளில் சாய்ந்து கொண்டு இருக்கிறாள்..அவள் நடந்த விஷயத்தை எல்லாம் அவனிடம் ஒன்று விடாமல் அவனிடம் கூற அதை கேட்ட அவனோ, " அப்போ உன்னோட கசினை கல்யாணம் பண்ணிக்க போற".. என்க
அவன் குரலில் இருந்த மாறுபாட்டை அப்போது உணர்ந்தவள் அவனை பார்த்து , "அப்படி இல்லை நான் சொல்ல வர விஷயத்தை கேளுங்க"... என்று கூற தன் கையை தூக்கி நிறுத்தியவன் , "ஓ ஓகே இனி எதுவும் சொல்ல தேவையில்லை..சந்திப்போம்"... என்று கூறியவன் அடுத்த தளத்தில் இறங்கி கொண்டான்..
சற்று முன் தன்னோடு காதல் களியாட்டம் ஆடியவன் இவன் தானா???!! என முதன் முறையாக அதிர்ந்தாள் சம்யூ...
மாயவன் வருவான்…
