Share:
Notifications
Clear all

அத்தியாயம் 7

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

தனது தாய்க்கு இவ்வளவு குடைச்சல் கொடுப்பவன் எவனோ என அபி யோசிக்க சம்யூவும் அந்த நேரம் அதையே தான் யோசித்து கொண்டு இருந்தாள்..

அதிலும் அவள் போன் வேறு ராஜேஸ்வரி கையால் உடைக்கப்பட்டு இருக்க அதில் மிளிர்ந்து இருந்த பிருத்வியின் பெயரை பார்த்ததும் தான் பிருத்வியின் நினைவு மேலோங்கியது..

"ஐயோ அவர் கூப்பிட்டு இருக்கார் போனை வேற அத்தை உடைச்சிட்டாங்களே"... இப்போ என்ன செய்யறது என்று வருந்தியவள் புதிய மொபைல் கிடைத்ததும் அழைத்து கொள்ளலாம் என நினைத்து காத்து இருந்தாள்..

அதிலும் காதல் என்றால் ராஜேஸ்வரி காட்டும் வெறுப்பிற்கு இடையே அவனை காண முடியாமலும் அவனுடன் பேச முடியாமலும் தவித்தாள் சம்யூ...அவள் தவிப்பதை எல்லாம் உணராமல் அவள் மீதி கோபத்தை வான் அளவு வளர்த்தி வைத்து இருந்தான் பிருத்திவி..

அவளை அழைத்து கிடைக்காத ஆத்திரத்தில் அவள் தன்னை தவிர்ப்பதாகவே எண்ணிய பிருத்விக்கு அபிக்கு அடிபட்ட விஷயம் அறிந்து இருந்தாலும் அதே நேரம் அன்று அவள் ரீசார்ட்டில் அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியது முதல் இதோ இன்று வரை மொத்தம் இரண்டு மூன்று முறை பிருத்வி மட்டுமே அழைத்து இருக்க சம்யூவை பற்றி தான் எண்ணி வைத்து இருந்த கணக்கு கூட்டல் தவறோ என முதன் முறையாக எண்ண தொடங்கினான்...

பொதுவாக அவன் மனதில் ஏதாவது ஒரு துளி சந்தேகம் முளைத்து விட்டால் போதும் அது தான் சரி என்ற எண்ணமுடையவன் அவன் அப்படி இருக்க சம்யூ மீதும் சந்தேக விதையை அவன் விதைக்க அதில் அடி பட போவது என்னமோ சம்யூ தான்..

இங்கே இப்படி இருக்க ராஜேஸ்வரியோ நேற்றைய மழையில் புதிதாக முளைத்த காளான் போல முளைத்து அவர் அசந்த நேரம் பார்த்து அவர் கண்ணிலே விரலை விட்டு ஆட்டும் ராஜ்(பிருத்வி ராஜ்)ஜை எண்ணி கொண்டு இருந்தார்..

ஆம் அது வரை four square நிறுவனம் ஒன்றை பற்றி பெரிதாக அலட்டி கொள்ளாமல் இருந்த ராஜேஸ்வரிக்கு சமீப காலமாக அசுர வளர்ச்சி பெற்று வரும் நிறுவனத்தை எண்ணி சிறு எரிச்சல் மேலிட்டாலும் இப்போது தனக்கே போட்டியாக வளர்ந்து நிற்பதை எண்ணி அவருக்கு புகைச்சல் வந்து அந்த நிறுவனத்தின் முதலாளியை பற்றி விசாரிக்க பிருத்வி ராஜை பற்றிய மூன்று வருடங்களாக அவன் தொடங்கிய நிறுவனத்தை பற்றிய குறிப்புகள் மட்டுமே ராஜேஸ்வரியின் ஆள்களுக்கு கிடைத்தது அவனை பற்றிய சொந்த குறிப்புகள் எதுவும் இதுவரை கிடைக்க பெறவில்லை.. அவன் குடும்பம் அவன் யார் அவன் எங்கே தங்கி இருக்கிறான் அவனுடன் இருப்பவர்கள் யார் என்று கூற அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை..

அப்படி இருக்க கடந்த இரண்டு வாரத்தில் ராஜேஸ்வரிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் நடந்து கொண்டு இருந்தது..ஒன்றாவது அபியின் விபத்து என்றால் அதை விட இரு முக்கியமான விஷயங்கள் நிகழ்ந்தது அது அவரை வெகுவாக உலுக்கி விட்டது என்றே கூற வேண்டும்..

அது என்னவெனில் ஒன்று ராஜேஸ்வரியின் நிறுவன பங்குகள் சிலவற்றை பங்குதாரர்கள் வாங்கி இருக்க அதிலும் ராஜேஸ்வரி எப்போதும் மொத்தமாகவோ பத்து சதவிகிதத்துக்கு மேலோ ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனத்க்கு விற்பனை செய்ய மாட்டார் ஏனெனில் பின்னாளில் ஏதேனும் பிரச்சனை வர கூடாது என்பதற்காகவே அவர் அப்படி அவனோ அவரை காட்டிலும் எத்தனுக்கு எத்தன்...

அவர் விற்று இருந்த பங்குகளை கொண்ட நபர்களை எல்லாம் ஒன்று திரட்டி அவர்கள் வாங்கிய அடக்க விலையை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் கொடுத்து அந்த பங்குகளை எல்லாம் அவன் வாங்கி விட்டான்..அப்படி அவன் சேர்த்து வைத்திருந்த பங்குகளின் எண்ணிக்கை 40 % பங்குகளை பெற்று இருக்க இதோ ஏழு நாட்களுக்கு முன் அவரது நிறுவன பங்குகள் சரிவை நோக்கி செல்ல ராஜேஸ்வரிக்கு சில விகித பங்குகளை விற்றே ஆக வேண்டிய நிலையில் அவரின் நிறுவனம் இருக்க அந்த சமயம் பார்த்து விக்கியை விட்டு அவன் பெயரில் 8% பங்குகளை பெற்று விட்டான்...

இப்போது அவன் மீதம் இருக்கும் அந்த இரண்டு விகித பங்குகளை பெற்றால் அவன் ராஜேஸ்வரி நிறுவனத்தின் பாட்னர் அதே நேரம் சம்யூவை திருமணம் செய்தால் அவள் மூலம் முழுதாகவே அந்த கம்பெனி அவன் பெயரில் மாறிவிடும் இது தான் அவனுக்கு தேவை ..

அதற்காக தான் அவன் இறங்கி இருக்க எதனால் ராஜேஸ்வரியின் பங்குகள் சரிந்தன என்றால் அதற்கு காரணமும் அவனே four square இன் வளர்ச்சி ராஜேஸ்வரியின் நிறுவனத்தை பாதித்து இருந்தது..அதனால் அவருக்கு தொழிலில் இறங்குமுகம் ஆகி விட்டது...

இந்த நொடி வரை அவன் மற்ற பங்குதாரர்களின் பங்குகளை பெற்ற விஷயம் அவர் செவிகளை சென்றடையும் முன் இந்தியன் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் குழுவின் தேர்தல் நடைபெற்றது ..அதாவது அந்த சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் தான் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலைவர் அவர் எடுக்கும் முடிவுகளை தான் மற்ற நிறுவனங்களும் ஏற்கும்..ஏற்கப்பட வேண்டும்..

அப்படி இருக்க கடந்த 18 வருடங்களாக அந்த பொறுப்பில் ராஜேஸ்வரி தான் இருந்தார் அந்த மிக பெரிய அங்கீகாரம் உடைய பதவியாகும்..அப்படி இருக்க இந்த வருட தேர்தலிலும் அவர் போட்டி இட்டு இருக்க அவருக்கு எதிராக P.ராஜ்(பிருத்வி ராஜ்) போட்டி இட்டு இருந்தான்..

அவன் அந்த சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றாக திரட்டி அவர்களுக்கு வேண்டியதை செய்து தருவதாக கூறி புதிய மாற்றம் வர வேண்டும் என்றெல்லாம் கூறி அவர்கள் மூளையை கரைத்து விட்டான்..பணத்திற்கு அடி பணியாதவர்கள் உண்டோ அந்த வாக்குக்கு ஏற்ப தேர்தலும் நடைபெற்றது..

எப்போதும் தான் தானே வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்பில் இருந்த ராஜ ராஜேஸ்வரிக்கு தலையில் பெரிய இடி தான் விழுந்தது என்றே கூற வேண்டும் அந்த தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்து இருக்க இளம் புயல் என அழைக்கப்பட்டு கொண்டு இருக்கும் P.ராஜ் ஜெயித்து விட்டான்...

அவமானம் பெருத்த அவமானம் அவரது தொழில் அனுபவ காலத்தை காட்டிலும் வயது குறைந்தவன் அதிலும் அவன் தொழிலுக்கு வந்தே மூன்று ஆண்டுகள் தான் ஆகி இருக்க எப்படி இந்த வளர்ச்சி என 100வது முறையாக சிந்தித்து தலை வலி கொண்டவர் தலையை நீவி விட்டு அங்கே மேடையில் இதுவரை நேரில் காணாத அந்த பகைவனை காண அவனுக்கு அவரது பதவியை தாரை வார்க்க அமர்ந்து இருந்தார்..

மேடைக்கு கீழே பதவியேற்பு விழாவுக்கு வருகை புரிந்து இருந்த சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து இருக்க விழா ஆரம்பிக்கும் இரண்டு நிமிடத்திற்கு முன் வீறு கொண்ட சிங்கம் போல கண்களில் அனல் தெறிக்க பிடிவாத உதடுகள் இறுகி மீசை முறுக்கி விட்டு கொண்டே இளம் சாம்பல் நிற கோட் சூட் சகிதம் அறைக்குள் மாவீரன் போல நுழைந்தான் பிருத்வி ராஜ்...

இதுவரை நேருக்கு நேர் பார்த்து கொள்ளாத இருவர் பார்த்து கொள்கின்றனர்...உறுப்பினர்கள் அனைவரும் அவனை கரகொலியில் வரவேற்க ராஜேஸ்வரி மட்டும் அவனது முகத்தை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்...

அவனோ அவரை பார்த்து நக்கல் சிரிப்பை உதிர்த்து யாரும் காணா வண்ணம் அதை நொடியில் மறைத்து கம்பீரத்துடன் மேடையில் உள்ள அனைவரிடமும் கை குலுக்கியவன் ராஜேஸ்வரி முறை வரும் பிருத்வி ராஜ் அவருக்கும் வணக்கம் தெரிவிக்க அவரோ திமிராக ஏழாமலே இருந்தார்...

அவனோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவருக்கு அருகே அவனுக்காக இடப்பட்டு இருக்கும் இருக்கையில் அமர்ந்தவன் அவரை பார்க்க அவரோ அவனை யாரும் காணா வகையில் கண்காளாலே எரிக்க அவனோ, " என்ன மேடம் ..ராஜ ராஜேஸ்வரி மேடம் ..தி கிரேட் R ட்ரேடர்ஸ் ஓனர்...ரொம்ப சூடா இருப்பீங்க போல?? அனல் அடிக்குது?? முதல் முறையா பார்க்கிறோம் அதுக்கே இப்படி பொசுக்கறீங்க??? இதுக்கே இப்படினா இப்போதானே சந்திச்சு இருக்கோம் இனியும் சந்திப்போம் அப்போ கொஞ்சம் மிச்சம் வைங்க..."... என்று அவரை விட திமிராக அவரை பார்த்து முறைத்து அடிக்குரலில் கூறியவன் அவரோ அவன் கூறியதில் வெந்துக் கொண்டு இருப்பதை ஒரு குரூர புத்தியுடன் பார்த்து ரசித்தவன் நிம்மதியாக விழாவை கவனிக்க தொடங்கினான்..

அவரோ முதன் முறையாக காணும் போதே அவன் மீது அவன் செய்த செயல்களால் வெறுப்பை விதைத்தவர் மேலும் அவனாலேயே அவரது பதவிக்கு பங்கம் வந்தது என்றும் நம்பியதால் அவனை பார்த்து அடிக்குரலில், " நான் எதுக்கு மிஸ்டர் ராஜ் கோபப்படனும்??? நீங்க யார் எனக்கு நான் கோபப்பட??? தேவையில்லாத யார் மீதும் நான் கோபப்படறது இல்ல அந்த அளவுக்கு நீங்க எனக்கு வொர்த் ஆஹ் இல்ல புரியதா??? இந்த ராஜ ராஜேஸ்வரிக்கு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு என்கிட்ட மோத ஆசைப்படுறவங்க கொஞ்சம் ஆவது எனக்கு ஈக்குவல் ஆஹ் இருக்கணும் நான் பார்த்த வரை அந்த தகுதி உங்க கிட்ட இல்லை ராஜ்...தீடீர் பணம், தீடீர் பதவி அதுனால வந்த ஆட்டம் ராஜ்..இந்த பதவி, பணம் ,தொழில் எல்லாம் என் ரத்தத்திலே ஊறினது ..சோ "... என்று கூறி அதோடு பேச்சை நிறுத்தி கொண்ட ராஜேஸ்வரியின் முகம் பிருத்வி ராஜை அவமானப்படுத்தியத்தில் சற்றே அவர் மனம் ஆற துவங்கியது..

ஆனால் தனக்கு எதிரே இருப்பவனின் கொம்பு முதலிலே சீவப்பட்டு இருக்க அதை மேலும் சீவும் விதமாக அவனோடு வார்த்தை போரில் ஈடுபட்ட அவரை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்த அவனோ அவரை பார்த்து , "ஓ சீ இனி வொர்த் ஆஹ் மாறிடறேன் "...என்று புரியாத மொழியில் கூறியவன் விழாவை கவனிக்க தொடங்கினான்..

விழா தொகுப்பாளர் விழாவை தொகுத்து வழங்கி அதே நேரம் கடந்த மூன்று வருடத்துக்குள் பிருத்திவி செய்த சாதனைகளை பட்டியல் இட்டு கூற அதை எல்லாம் கேட்ட அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தது என்றால் ராஜேஸ்வரிக்கோ காதில் புகை வந்தது...

அவனுக்கு தனது பதவியை தாரை வார்த்து கொடுக்க போவதும் அவரே அப்படி இருக்க உள்ளுக்குள் வெந்தாலும் வெளியே தனது கெத்தை விட்டு கொடுக்காமல் அவனுக்கு பதவி ஏற்பு செய்து வைத்தார்... ஆனால் பிருத்திவி ராஜின் கண்களில் மாளாத கொலை வெறி தாண்டவம் ஆடியது..

"கேம் ஸ்டார்ட்ஸ் ரைட் நௌ".. என்று மனதுக்குள்ளே கூறிக்கொண்டு அதே நேரம் அவரை பார்த்து ஒரு சிறிய ஆட்டத்தை துவங்கி விட்டேன் என்பது போல பார்க்க அவரோ அவனை பொசுக்கும் விழிகளில் இதே பதவியை உன் கையில் இருந்தே திரும்ப என் கைக்கு வாங்கி காட்டறேன் பார் என்பது போல சவால் விட்டவர் அடுத்த நொடி அங்கிருந்து விடைபெற்றார்..

அடுத்த அடி அவருக்கு விழுந்தது அடுத்த நாள் அவரது அலுவலகத்தில் இருக்கும் சமயம் சற்று நேரத்தில் பங்குதாரர்களின் மீட்டிங் நடக்க இருக்கும் சமயம் பார்த்து அவர்களுக்காக ராஜேஸ்வரியின் கம்பெனி தயார் ஆன போனது வந்தது ஒருவன் மட்டுமே P.ராஜ் மட்டுமே..

ஆம் அவன் தானே அவருடைய மொத்த பங்குகளையும் வாங்கியவன்..பெரிய கூடத்தில் மீட்டிங் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க அங்கே ஒருவன் மட்டும் தலையை தூக்கியபடி நேராக அவரை விட உயரத்தில் கண்களில் ரேபன் ஒளிர வந்து கொண்டு இருந்தான்..

அவன் உள்ளே நுழையும் போதே கண்டவர் இவன் எப்படி இங்கே வரலாம் என கேள்வி எழ உடனே அவரது மேனஜரை அழைத்து அவனை அங்கேயே நிறுத்த ராஜேஸ்வரி உத்தரவிட்டார்.. ஏனெனில் அவனது முகத்தை கூட பார்க்க அவருக்கு விருப்பம் இல்லை

அப்படி இருக்க ராஜேஸ்வரியின் மேனஜரோ," சார் நீங்க இப்போ உள்ளே வர கூடாது"...

"ஏன்"... என்பது போல புருவத்தை மட்டுமே உயர்த்தி கேட்டான்..அவனது முகத்தில் கடுமை விரவி இருந்தது..இவன் யார் என்னை தடுத்து நிறுத்த என்பது போல அவனை பார்த்த பிருத்வி தனது கூலர்சை கழட்டி அந்த மேனேஜரை தீ பார்வை பார்க்க

அவனது முகத்தின் கடுமையும் அவனது முகத்தின் அனலும் அந்த காவலாளியை விதிர்விதிர்க்க செய்ய இருந்தாலும் அவனது தொழில் அல்லவே..அவனது முதலாளி கூறியதை தானே அவன் செய்ய வேண்டும் என நினைத்து சற்றே பிருத்வி முன் குரலை தாழ்த்தி, " சார் அப்பாயின்மெண்ட் இருந்தா தா மேடமை பார்க்க முடியும் இது கம்பெனி ரூல் மீறினால் என்னோட வேலை போயிடும் "...என்று தணிந்த குரலில் கூற

பிருத்வி அவனை பார்த்து முறைத்து ஒரு கார்டை காட்ட அதில் அவனது பெயர் இடம் பெற்று இருந்தது..அதாவது அவனும் விக்கியின் பெயரில் ராஜேஸ்வரி கம்பெனியின் பங்குகளில் ஒரு எட்டு சதவிகிதத்தை வாங்கி வைத்து இருந்தான் அல்லவா அதன் படியே அவன் மீட்டிங்கிற்கு வர விக்கி கொடுத்து இருக்கும் கம்பெனி பெயரில் பிருத்வி வர காவலாளியால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அவன் மேல் அதிகாரியை அழைத்து விவரம் கூற ராஜேஸ்வரியின் காதுகளுக்கு எட்டப்பட்டு அவன் இதோ அந்த 50 பேர் அமர கூடிய கூடத்தில் எதிரே ஒரு நாற்காலியில் ராஜேஸ்வரி அமர்ந்து இருக்க பிருத்வியும் அவரை வைத்த கண் வைத்த படி பார்த்து கொண்டு கால் மேல் கால் இட்ட படி கம்பீரமாக அமர்ந்து இருந்தான்..

இவரோ மற்றவர்கள் எல்லாம் எங்கே என குழம்பிய படி அமர்ந்து இருக்க தான் வந்து பத்து நிமிடம் ஆகி விட்டது என்பதை உணர்த்த அவனது வாட்சை ஒரு முறை பார்த்து மீண்டும் ராஜேஸ்வரியை நோக்கி, " மிசஸ் . ராஜேஸ்வரி நான் வந்து 10 நிமிஷத்துக்கும் மேல ஆகிடுச்சி இன்னும் நீங்க மீட்டிங் ஸ்டார்ட் பண்ணாமல் இருக்கீங்க ??? எனக்கு இங்கே சும்மா உக்கார்ந்து இருக்க சமயம் இல்ல உங்களுக்கு நான் சொல்ல வரது புரியும்னு நெனைக்கிறேன்"... நக்கல் குரலில் கூறினான்..

அவரோ அவனை பார்த்து முறைத்து தனது கம்பெனியின் 8 % சதவிகித பங்குகளை பெற்று வைத்து இருக்கிறான் என்பதே அவருக்கு எரிச்சலை கொடுக்க , "நீங்க மட்டும் வந்தா போதாது மிஸ்டர் ராஜ் அதர் மெம்பேர்ஸ்யும் வரனும் என்று இது கூட தெரியாதா "...என்ற பாவத்தில் அவர் கூற

பிருத்திவியோ திமிரான பார்வையில் அவனை பார்த்து அதே திமிரோடு தனது முறுக்கு மீசையை முறுக்கி மீசை ஓரங்களுக்கு இடையே நக்கல் சிரிப்பை உதிர்த்து , "என்னை தவிர எவனும் வர மாட்டான் மிசஸ் ராஜேஸ்வரி..

நான் மட்டும் தான் இப்போ உங்க கம்பெனி பங்குகள் எல்லாம் வெச்சு இருக்கும் ஒரே ஆள்..என்ன இப்படி முழிக்கிறீங்க?? உங்களுக்கு விஷயம் தெரியலன்னு நினைச்சா??

தெரியாது ?? பிகாஸ் இந்த அதிர்ச்சியை பார்க்க தான் அப்படி செஞ்சேன்.. இப்போ என் கையில் 48% சேர்ஸ் இருக்கு அதுவே 50 ஆனால் வீ ஆர் பார்ட்னர்ஸ் அதுவே 51 ஆனால் நான் ஓனர் ஆப் திஸ் கம்பெனி இல்லையா சரியா தானே சொல்றேன் கணக்கு எல்லாம்?? நீங்க தான் கணக்கு போடறதுல புலி ஆச்சே கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வருதான்னு பாருங்க மேடம் "..என்று நக்கல் குரலில் கூற அவரது முகம் செத்து விட்டது என்றே கூற வேண்டும்..

அவரால் இந்த சதியை ஏற்று கொள்ள முடியவில்லை அதே நேரம் அந்த சதியின் வலையில் தானே விழுந்து சிக்கி இருக்கிறோம் என நினைக்கும் போது அவர் மனது நொந்து தான் போனது...

இடியட் என்று வாய் வரை வார்த்தை வந்தாலும் அதை செயல் ஆற்ற முடியாமல் அமர்ந்து இருந்தவருக்கு வியர்த்தது...அவரது ஒவ்வொரு அசைவையும் சமாதானமாக ஒரு குரூர பார்வையோடு பார்த்து கொண்டு இருந்தான் பிருத்வி ராஜ்...

மாயவன் வருவான்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top