அத்தியாயம் 6
மனம் விரும்புதே மாயவா
என்னது மனைவியா அதிர்ச்சி இன்னும் மீளாமல் அவள் மீண்டும் மீண்டும் கேட்க
மறுமுனையில் இருந்த பெண்ணின் குரலில் சற்று எரிச்சல் மேலிட்டு இருந்ததோ என்னவோ , "ஆமாம் மனைவி தான் நீங்க யாரு".. என்று அழுத்தமாக கேள்வி கேட்டாள்.
அவளது கேள்வியை கேட்டு சம்யூ தான் இறங்கி போய்," நான் அபியோட கசின் சம்யுக்தா அவன்கிட்ட போனை கொடுக்க முடியுமா "..அவன் கிட்ட பேசனும் என்று சம்யூ கேட்டாலும் அதெப்படி எனக்கு தெரியாமல் திருமணம் ஆகி இருக்கும் என்று அவள் மண்டையை அவள் குடைய அவளது மனசாட்சியோ ஏன் உன் வாழ்க்கை ஒரே நாளில் மாறி விட வில்லையா என்று நினைக்க அப்படி ஏதாவது அவனுடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்குமோ என்று அவள் நினைத்து கொண்டு இருக்க மறுமுனையில் அபியின் மனைவி என்று கூறிய பெண்ணோ, " உங்க நம்பர் தாங்க..நான் திருப்பி அழைக்கிறேன்"... என்று கூற அவள் எதுக்கு என்னுடைய எண்ணை கேக்கிறாள் என்ற கேள்வி சம்யூவின் மண்டையை மீண்டும் குடைந்தாலும் மறு பேச்சு பேசாமல் கூறினாள்..
அதன் பின் அபியின் போன் ஆப் ஆகி விட சம்யூ மீண்டும் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு சென்று இருந்தது..
அதன் பின் அவள் வேறு ஒரு எண்ணிலிருந்து அழைத்தவள், " எவ்வளவு சீக்கிரம் உங்களால குளு மானாலி மருத்துவமனைக்கு வர முடியுமோ வாங்க அங்கே தான் உங்க அபி இருக்கார்..சீக்கிரம் வாங்க..அவசரம் ..நீங்க வர லேட்டாகும் ஒவ்வொரு நொடியும் அபிக்கு ஆபத்து "...என்று அபியின் மனைவி என்று கூறியவள் படப்படவென வேகமாக கூற
அவள் கூறியதை கேட்டு ஒரு நொடி அபிக்கு உலகம் இருண்டு போனது என்னவோ உண்மை தான், " அபிக்கு என்ன ஆச்சு "...என்று அதிர்ச்சியில் கேட்க
"அபிக்கு விபத்து போன்லயே எல்லாம் கேட்டுட்டு இருக்காமல் சீக்கிரம் வர வழியை பாருங்க"... என்று எரிச்சல் மண்டிய குரலில் அந்த பெண் கூறி பட்டென போனை வைத்து விட்டாள்..
அவள் போனை வைத்ததும் அவளுக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை அதே நேரம் தனது உயிர் நண்பனுக்கு என்ன ஆகிற்று என்ற பதட்டம் மேலிட அவளுக்கு அழுகை முற்றியது யாரிடமாவது விஷயத்தை கூற வேண்டும் என தோன்ற முதலில் அவளுக்கு அழைக்க தோன்றியது பிருத்விக்கு தான்..
அவனை அழைக்க அவன் போன் கிடைக்காமல் போக வேகமாக ஈஸ்வரை அழைத்து , "மாமா அபிக்கு விபத்து".. என்று கூற அவருக்கு சப்த நாடியும் அடங்கியது போல ஆக அவருக்கு என்று இருக்கும் ஒரே குல கொழுந்து அவர் பெயர் சொல்லும் பிள்ளை அவனுக்கு விபத்து என்றால் அவரால் தாங்கி கொள்ள முடியுமா தெளிவாக நடந்த விஷயத்தை கேட்டறிந்தவர் ,"சம்யூ உங்க கிட்ட இருந்து இந்த திருட்டுதனத்தை எதிர்பார்க்கலை..இப்போ பார் எங்களை ஏமாத்தனும்ன்னு நினைச்ச உங்களுக்கு கிடைச்ச தண்டனை அபியோட உயிர் தான்"...
"இல்லை மாமா விளையாட்டுக்கு"...
"என்ன விளையாட்டுக்கு உன் விளையாட்டு தான் வினை ஆகி இருக்கு..நாங்க இங்கே இருந்து கிளம்பிடறோம் நீயும் இங்கே இருந்து கிளம்பி அங்கே போ "...என்று கூற
சம்யூவுக்கு ஈஸ்வரின் அவஸ்த்தை தெள்ள தெளிவாக புரிந்தாலும் அவருடைய பதட்டம் அவளையும் தொற்றி கொண்டாலும் , "மாமா அத்தை கிட்ட "...என்று கூற
"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ முதலில் அங்கே போ "...என்று வார்த்தைகளில் கடினம் காட்டாமல் கூற அவளோ ,"சரி "..என்று வேகமாக தனது உடைகளை பேக் செய்ய தொடங்கி விட்டாள்..
எப்போது அபிக்கு அடி பட்டு விட்டது என்ற செய்தி அவளது தலையில் ஏறியதோ அந்த நேரத்தில் இருந்து அவள் தலையில் பிருத்வி பின்னுக்கு செல்ல அவளுடைய பிரச்னைகள் கூட அவள் மறந்து போனாள்.. அவள் மனதில் முழுவதும் அபி மட்டுமே நிறைந்து இருந்தான்..
அபிக்கு ஒன்றும் ஆகி விட கூடாது என்ற வேண்டுதல் மட்டுமே இருக்க கிடைத்த பிலைட்டில் அவளின் ஓரிரு நண்பர்களிடம் அபியை காண செல்கிறேன் என்று மட்டும் தெரிவித்து விட்டு கிளம்பி விட்டாள்..
பிருத்விக்கு ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருப்பதால் அவன் எண் அவளுக்கு கிடைக்காமல் இருக்க அவனும் பிறகு அழைத்து கொள்ளலாம் என நினைத்து இதோ அதற்குள் இரவு ஆகி விட எதுக்கு அழைத்து இருப்பாள் என நினைத்து சம்யூவின் எண்ணுக்கு அழைக்க லைன் கிடைக்கவில்லை எப்படி கிடைக்கும் அவள் தான் விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறாளே..
அவனோ மீண்டும் மீண்டும் அவள் எண்ணுக்கு கிடைக்காமல் போக குழப்பத்தில் ஆழ்ந்தவன் அவள் தோழிகளிடம் விக்கியை ஒன்றும் தெரியாதது போல விசாரிக்க சொல்ல "அவள் அபியை காண காலையிலே கிளம்பி சென்று விட்டாள்"..என்ற பதில் கிடைக்க இங்கே பிருத்விக்கு கோபம் துளிர் விட தொடங்கியது அவள் எப்படி செல்லலாம் என்றும் அதும் அபியிடம் என்ற பதில் அவனுக்கு அவ்வளவு சுகிக்கவில்லை ஏனெனில் அவர்களது நெருக்கத்தை தான் அவன் ஆரம்பத்திலேயே கண்டு இருக்கிறானே..
அதை எல்லாம் மனதில் வைத்த பிருத்வி, " இனி உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் டி"... என்று கருவி கொண்டு விக்கியுடன் அடுத்த நிமிடமே மும்பைக்கு செல்ல தயாராகி விட்டான்..
அங்கே ராஜேஸ்வரியை அழைத்து கொண்டு குளு மானாலி ஈஸ்வர் செல்ல பிரயாணம் செய்து கொண்டு இருக்கும் போதே தன் மனைவியின் முகத்தை காண மனைவியின் வேதனை படிந்த முகம் அவரது உள்ளத்தை தாக்கியது..அதும் அவர்களின் மகன் இப்போது எந்த நிலையில் இருக்கிறானோ என நெனைக்கும் போதே அவர்கள் இருவருக்கும் பதறியது..
விஷயம் அறிந்தது முதல் ராஜேஸ்வரி அபி மற்றும் சம்யூவை பொறிய தொடங்கி விட்டார் அதில் ஈஸ்வர் தலையும் உருண்டது, " உங்களால் தான் ஈஸ்வர் இப்படி ஆகிடுச்சு..பாருங்க இவ்வளவு நடந்தும் இரண்டு பேரும் நம்ம கிட்ட வாயே திறக்கல பாருங்க "..என்று புலம்பி கொண்டே வந்தவரை சாந்தப்படுத்தி விமானம் ஏற வைப்பதற்குள் ஈஸ்வருக்கு போதும் போதுமென்றாகி விட்டது..இதோ அவர்கள் குளு மானாலி அடைந்தும் விட்டனர்..இன்னும் சம்யூ வரவில்லை..
அங்கே இருந்த டாக்டரை சந்திக்க அவரோ அபியின் நிலையை எல்லாம் விளக்கி படியே அவர்களை அபி இருக்கும் அறையை நோக்கி நடக்க தலையிலும் கை கால்கள் என அனைத்து இடங்களிலும் பெரிய கட்டுகளோடு மயக்கத்தில் ஆழ்ந்து இருந்தான்..அவனை கண்டதும் பெற்றவர்கள் துடித்து போயினர்..
"அவனுக்கு நினைவு திரும்பி இரண்டு நாட்கள் தான் ஆகிறது..அவனுடைய மனைவி தான் அவனை கூட இருந்து கவனித்து கொண்டாள்".. என்று மருத்துவர் கூற ராஜேஸ்வரி மகனை உயிரோடு கண்ட தெம்பில் , "வாட் ரப்பிஷ் யூ ஆர் டாக்கிங் டாக்டர் என் பையனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை..மனைவின்னு யார் வந்தாலும் ஒன்னும் விசாரிக்காமல் இருப்பீங்களா"... என்று அவரை நோக்கி எகிற
அவரோ மிகவும் தன்மையாக, " அவங்க மனைவி இல்லையான்னு எங்களுக்கு தெரியாது ..அது தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை..ஆனால் அவங்க மனைவின்னு சொல்லித்தான் சைன் பண்ணி இவரை இங்கே சேர்த்தி இருக்காங்க..அந்த பொண்ணு மட்டும் சரியான சமயத்தில் கொண்டு வந்து சேர்க்கலைன்னா உங்க பையன் உயிர் உடம்புல தங்கி இருக்காது.. அதுக்கு அந்த பொண்ணு தான் காரணம்..இந்த ஹாஸ்பிடல் ரூல்ஸ் படி ரீலேட்டிவ் வந்து சேர்க்கலைனா நாங்க எடுத்துக்க மாட்டோம்".. என்று எல்லாம் அந்த பெண்ணிற்கு சப்போட்டாக பேச அந்த பேச்சு ஏனோ ராஜேஸ்வரிக்கு சுகிக்கவில்லை..
உடனே மருத்துவரின் அந்த பெண்ணின் மீதான அவரது புகழ் பாட்டை நிறுத்தும் பொருட்டு ராஜேஸ்வரி, " டாக்டர் அபிக்கு ட்ராவல் பண்ண முடியுமா???..நாங்க வேற ஹாஸ்பிடல்ல பார்த்துக்கறோம்"
. என்று கூற மருத்துவரோ , "தாராளமாக மாத்திக்கோங்க" ..என்று கூறியவர் கிளம்பி விட்டார்..
இதை எல்லாம் பேசி கொண்டு இருக்கும் போது தான் புயல் போல சம்யூ அவன் படுத்து இருக்கும் அறை நோக்கி வர ராஜேஸ்வரி கண்களால் எரிக்கவில்லை அவ்வளவே.."வீட்டுக்கு வா உங்க இரண்டு பேருக்கும் இருக்கு..என்ன ஒரு கொழுப்பு பொய் சொல்ற அளவுக்கு வந்துட்டீங்களா..தோலை உரிச்சா சரியா போகிடும் ".என்று அடக்க முடியாமல் கேட்டே விட்டார்..
"பாரு டி என் பையனை பாரு அவனை இந்த மாதிரி கொல்லவா கூட்டிட்டு வந்த..இப்போவோ நீ இந்த மாதிரி செஞ்சா நாளைக்கு நீ எந்த அளவுக்கு போவ".. என்று மனதில் வேறு ஒன்றை வைத்து கேட்க அவளுக்கு ராஜேஸ்வரி கூறியது ஒன்றும் தலையில் ஏறவில்லை அவள் மனம் முழுவதும் அபி மட்டுமே நிறைந்து இருந்தான் அபியை இந்த நிலையில் சம்யூவால் காண இயலவில்லை..எல்லாம் என்னால தானே ஒரு வேளை நான் கோவா செல்ல வேண்டும் என கூறாமல் இருந்தா அவனுக்கு இப்படி ஆகி இருக்காதோ என்று அவள் விஷயம் அறிந்தது முதல் யோசிக்க தொடங்கியவள் இப்போதும் அதையே யோசித்தாள்..
"எப்படி நிக்கிறான்னு பாருங்க..ஏதாவது கவலை இருக்கான்னு பாருங்க.. எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்".. என்று ராஜேஸ்வரி ஆரம்பிக்க ஈஸ்வர் தான், "ராஜி சின்ன புள்ளைங்க டா அபிக்கு இப்படி ஆகணும்னு இருக்கு ஆகிடுச்சு..விடு.."என்று கூறி அவர் பேச்சை முடித்து கொண்டார்..
சம்யூ விழி நீர் கலங்க ஈஸ்வரை பார்க்க அவர் அமைதியாக கடந்து விட்டார்..அந்த நொடி சம்யூவுக்கு என்னால் தான் அவனுக்கு இப்படி ஆகி விட்டதோ என நினைத்து மறுக தொடங்கி விட்டாள்.
அன்று இரவே அபியை அழைத்து கொண்டு பயணம் செய்ய மும்பையில் விமானம் தரை இறங்கியதும் அபியை பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர்..அவனுக்கு அவசர சிகிச்சைகள் கொடுக்க ஆரம்ப கட்ட பாதிப்புகளை எல்லாம் அபி கடந்து விட்டு இதோ இப்போது பத்து தினங்கள் ஆன பிறகு எல்லோரையும் பீதியில் ஆக்கி ஒரு வழியாக உயிர் பிழைத்து கொண்டான்...அவனை கண்டதும் அவனது குடும்பத்தார் வேதனை கொள்ள அவனோ சின்ன சிரிப்புடன்
"எதுக்கு இந்த பீலிங்ஸ் திரும்ப வந்துட்டேன்னு சொல்லியா ??? இப்படி உங்க மூஞ்சியை பார்க்க சகிக்கல"...என்று உற்சாக முறுவலுடன் சிரிக்க ஈஸ்வரும் மகனின் தலையை கோதி சிரித்தார்..
ஆனால் ராஜேஸ்வரியோ மகனை பார்த்து முறைத்து, " ஸ்டாப் இட் அபி உன்னோட விளையாட்டை இதோட முட்டை கட்டி வெச்சுக்கோ உன் வயசில் உள்ள பிள்ளைகள் எல்லாம் எப்படி பொறுப்பா இருக்காங்கன்னு பாரு..இனி நீ அங்கே இங்கே சுத்துற வேலை எல்லாம் வேணாம் ..உடம்பு சரி ஆனதும் ஆபிஸ் வர வழியை பாரு"..என்று அவர் வேறு ஒருவனை நினைத்து இவன் மீது காய அபியோ கண்களை மூடி கொண்டு படுத்து விட்டான்..கண்களை திறந்தாலே அவன் அம்மா ஏதாவது வம்புக்கு என்று வர உறக்கமே சரணம் என்று ஆகி விட்டான்...
ஆனால் உறக்கத்தில் ஏதோ ஒரு முகமறியா அழகிய முகம் அவனை வந்து இம்சித்தது..ஆம் அவனை பொறுத்தவரை முகத்தை காணவில்லை என்றாலும் அந்த உடலுக்கு அழகிய முகம் தான்..ஆம் அவன் அடிபட்டு சுயநினைவை இழந்து கொண்டு இருக்கும் போது தண்ணீரில் தடதடக்கும் கொலுசின் ஓசையோடு ஓடி வந்த ஒரு முகம் , "ஹே எழுந்திரு என்னை பாரு "...என்று அவனின் கன்னம் தட்டி எழுப்ப முயற்சி செய்ய அவனால் முடியவில்லை..என்னை காக்க என்னுடைய தேவதை வந்து விட்டாள் என்ற நிம்மதியோடு அவன் அந்த குரலின் உடமையாளின் கையை பிடித்துக்கொண்டு மயக்கத்தில் சென்று விட்டான்..
அதன் பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்று அவனுக்கு நியாபகம் இல்லை என்றாலும் அந்த குரல், கொலுசு ஒலி, அந்த உருவத்தின் தொடுகை இது மூன்றும் அவனின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது..
அதன் பிறகு அவன் எப்போது கண் திறந்தான் என அபி அறியான்..எப்போதோ ஒரு நாள் மருத்துவர், " கண்ணை திற "...என்று கூற அவனது இமை இலேசாக திறக்க அதில் மங்கலாக ஒரு உருவம் தெரிந்தது..சரியாக அவனால் கவனிக்க முடியவில்லை மீண்டும் மயக்கத்திற்கு சென்று விட்டான்..அதன் பிறகு அந்த உருவத்தின் அந்த வெண் பிஞ்சு விரல்கள் அவனது தலையை ஆதூரமாக தடவியது..அந்த கைகள் அவனது காயத்திற்கு ஆறுதலாக இருந்தன.. அந்த விரல்கள் அவனுக்கு தேவையான பணிவிடைகளும் செய்தன..அந்த விரல்களின் மென்மையை வைத்தே உறுதியாக அவனால் கூற முடியும் அது ஒரு இளம் பெண் தான் என்றும் அதிலும் அவளின் காலில் அவள் அணிந்து இருந்த அவள் பூமிக்கே வலிக்க கூடாது என்று அவன் அருகே நடந்து வருவாள் போலும் மெல்லிய கொலுசின் ஒலி அவள் அவன் அருகே வரும் போது அவனுக்கு கேட்கும் அந்த மெல்லிய ஒலி தான் அவனை எமனிடம் கூட செல்லாமல் பிடித்து வைத்து இருந்தது..
மேலும் மயக்கத்தில் இருந்தாலும் அவனால் அவனது சுவாசிக்க முடியுமே ஏதோ தேவைக்காக அவனது அருகில் அவள் வந்த போது அவளது உடலின் சுகந்ததை அவனது நாசியில் நிரப்பி கொண்டு இருக்கிறான்..இது எல்லாமே அவளை பற்றி அவன் மனதில் அவன் குறித்து வைத்துள்ள அவன் சேகரித்து வைத்துள்ள அடையாளங்கள் தான்..
இதை எல்லாம் அவனுக்கு துணையாக இருக்கும் சம்யூவிடம் ஒரு நாள் கூற அப்போது தான் அவளுக்கு நியாபகம் வந்தது சம்யூவிடம் அவள் உரையாடி இருக்கிறாளே என நினைத்து கூற அபியின் முகம் மிளிர்ந்து , "அப்படியா சம்யூ அவ என்ன சொன்னா??".. என்று கேட்க
அன்று நடந்த விஷயங்களை கூற அதை கேட்டவன் ,"அந்த நம்பர் இருக்கா??? "...என அபி அவரசமாக கேட்க
அவளோ அவளது மொபைலில் தேடி பிடித்து அந்த பெண் அழைத்த எண்னை காட்ட அபி உடனே அந்த எண்ணுக்கு அழைத்தான்..
ஆனால் அவனது கெட்ட நேரம் என்றே கூற வேண்டும் அந்த எண்ணானது குளு மானாலியின் அபி அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவனையின் பொது தொலைபேசியில் இருந்து தான் அவள் அழைத்து இருக்கிறாள் என்று அறியவும் அபியின் முகம் சுருங்கி போனது...
அதை பார்த்த சம்யூவோ , "விடு டா அவளை எப்படியாவது கண்டு பிடிச்சுடலாம்..அங்கே போனா தெரிஞ்சிட போகுது "... என்று இவள் சமாதானம் செய்யவும்
அவனோ வருந்தி , "இல்ல அபி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரும் வராமல் இருக்கும் போது என்னை யார்னே தெரியாமல் எனக்காக உதவி செய்து இருக்கா அவ எப்படி பட்ட பொண்ணா இருப்பா பாரு..யார் செய்வா இந்த காலத்தில்...அதிலும் என்னோட பர்ஸ் அதில் இருந்த பணம் என்னோட வாட்ச் எல்லாமே அப்படியே என்னோட பெட்க்கு கீழே இருந்து இருக்கு..ஒரு பைசா கூட அவ எடுக்கலை...அவளை மாதிரி எல்லாம் ஒரு பொண்ணு கிடைச்சா கண்ணை மூடி கல்யாணம் பண்ணிக்கலாம் சம்யூ "...என்று விழி மலர அவன் கூற
அதே நொடி ராஜேஸ்வரி மற்றும் ஈஸ்வர் மகனை காண அவனது அறைக்குள் வர அவர்களது முகமே கூறியது இவர்கள் பேசியதை அவர்கள் கேட்டு விட்டார்கள் என்று சம்யூ மீது தீ கங்குகளை வீசி கொண்டே வந்தவர் , "எதுக்கு போய் திரும்ப வந்த உயிரை மறுபடியும் போக வைக்கவா அவனுக்கு மறுபடியும் ஐடியா கொடுத்திட்டு இருக்க "... என்று கூற
அபிக்கு உணவு கொடுத்து கொண்டே உரையாடி கொண்டு இருந்தவளை பார்த்து ராஜேஸ்வரி தன் விஷத்தை கொட்ட தொடங்கினார்..
"இல்லை அத்தை அவனுக்கு அந்த பொண்ணு யார்ன்னு தெரியனும்னு சொன்னா அது தான்"... என்று அவள் வார்த்தையை மென்று முழுங்கி கூற
அதை கேட்ட அவரோ அவளை பார்த்து அவளை பார்த்து, "அதை கேட்டு இவன் என்ன பண்ண போறான் மறுபடியும் கல்யாணம் பண்ணிட்டா வர போறான்..அவளே ஒரு பிராடு இவளை மாதிரி நான் எத்தனை பேரை பார்த்து இருப்பேன்..இவனை பத்தி தெரிஞ்சே புருஷன்னு சொல்லி நடிச்சி இருக்கா...எவ்வளவு திமிரு ஏத்தம் இருக்கும் கையில் கிடைக்காமல் போயிட்டா இல்லாட்டி நசுக்கி இருப்பேன் "... என்று கூற
ஈஸ்வரோ , "விடு ராஜி அந்த பொண்ணு பொய் சொன்னாலும் நம்ம மகன் உயிரை காப்பாத்தி இருக்கே "..என்று கூற
அவரோ ஏளனமாக நகைத்து, " எல்லாத்துக்கும் காரணம் பணம் ஈஸ்வர்..சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க முயற்சி செஞ்சு இருக்கா..இடியட்..அவ்வளவு சீக்கிரம் நான் விட்டுடுவேனா ".. என்று கூறியவர்
"இதோ பாருங்க கண்டவனை பார்க்க போகிறேன் கல்யாணம் பண்ண போறேன்ன்னு சொல்லிட்டு திரியற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம் உங்களுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் "...என்று அவர் அபி மற்றும் சம்யூவுக்கு அறிவுரை கூறிக்கொண்டு இருக்கும் போதே சம்யூவின் போனுக்கு பிருத்வி அழைக்க அவளோ கையை பிசைந்து மொபைலையே வெறித்து கொண்டு இருந்தாள்..
ராஜேஸ்வரியை தகர்க்கவென்றே அழைப்பான் போலும் அவளது போன் அவனை போல பிடிவாதம் பிடித்து அலறி கொண்டே இருக்க திரையில் வேறு "பியார் "..என்று மின்னிய எழுத்துகளை பார்த்து அவருக்கு எங்கு இருந்து தான் கோபம் வந்ததோ தெரியவில்லை அந்த போனை பிடுங்கி சுவற்றில் அடித்து உடைத்தார்..
"என்ன பியாரா...யாரு டி உனக்கு பியார்...என்ன காதலா "..என கேட்க,.
அவளிடம் பதிலே இல்லை தலையை தாழ்த்தி கொள்ள ராஜேஸ்வரி கொந்தளித்து, "
உங்க இரண்டு பேருக்கும் சொல்லிக்கறேன் இந்த வீட்டுக்குள்ள காதல் கத்தரிக்காய்ன்னு சொல்லிட்டு திரிஞ்சிங்க இந்த போனுக்கு நடந்த கதி தான் உங்களுக்கும்"... என்று எச்சரித்து விட்டு அவ்விடம் நகர்ந்தார்..
ராஜேஸ்வரி கடுமையானவர் தான் ஆனால் இவ்வளவு தூரம் கடுமையானவர் அல்ல என்பதை அறிந்த அபி மற்றும் சம்யூவுக்கு ராஜேஸ்வரியின் பேச்சு நெருடலை அளிக்க ,
அதிர்ந்து நோக்கும் இருவரையும் பார்த்து ஈஸ்வரோ, "நீங்க ஒன்னும் அவ சொன்னா ன்னு வருத்தப்படாதீங்க..அவளுக்கு தாத்தா இறந்தது முதல் அவள் அவளாகவே இல்லை..தாத்தா இறந்தது ஒரு பக்கம்ன்னா அபிக்கு இப்படி ஆனது மறுபக்கம் இதுக்கு எல்லாம் மேல இப்போ புதுசா ஒருத்தன் வந்து இருக்கான் அவளோட தொழில்களை எல்லாம் முடக்க அவன் தர தொல்லைகள் தான் அவளால் சரியா மூச்சுக்கூட விட முடியல "...என்று கூற
எல்லாத்தையும் கேட்ட அவர்கள் இவ்வளவு செய்பவன் , " யார் அவன்"
. என்று கேட்க..
"P.ராஜ்.. "...என்று கூறியவர் மேலும், "இப்போ நம்ம ஆபிசோட 48% பங்கு அவன் கிட்ட தான் இருக்கு.. "என்று ஒரு பெரிய இடியை இறக்கினார் ஈஸ்வர்...
P.ராஜ் என்ற பிருத்வி ராஜ் குடைச்சல் கொடுக்க தொடங்கி விட்டான்...ராஜேஸ்வரிக்கு மூச்சு விட கூட அவன் விட வில்லை என வருத்தப்படும் ஈஸ்வருக்கு தெரியாது அவரது மூச்சை கூட அவனால் அவனது செய்கையால்
நொடியில் நிறுத்த முடியும் என ஈஸ்வர் அறிந்தால் ?? ஆருயிர் மனைவியை எப்படி காப்பாற்றுவார்???...
மாயவன் வருவான்..
