Share:
Notifications
Clear all

அத்தியாயம் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

தன்னருகில் படுத்து கொண்டு இருந்தவளின் முதுகை இலேசாக வருடியபடியே சிந்தித்து கொண்டு இருந்தவன் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று திட்டங்களை எல்லாம் வகுத்த பின் ஒரு முடிவுக்கு வந்தவன் தன் மார்பில் துயில் கொண்டு இருப்பவளை பார்த்து அவள் பால் கிளர்த்து எழும் தன் உணர்வுகளை அடக்கி அவள் மீது உள்ள அவனது ஆசைகள் அனைத்தையும் ஒரு ஒற்றை முத்தத்தில் தெரிவிக்க அவளது மென் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு அவளை தன்னிடம் இருந்து நீக்கி படுக்க வைத்து , "ஒரு ஆக்சன் சீனுக்கு சீக்கிரம் ரெடி ஆகு பேபி"... என்று கூறி எழுந்து கொண்டான்...

பின் குளியறைக்குள் சென்று புகுந்து கொள்ள அப்போது தான் துயில் கலைந்து பிரிக்க முடியாத இமையை பிரித்து சம்யூ பார்க்க அவளுக்கு எங்கே இருக்கிறோம் என்றே முதலில் புலப்படவில்லை கழுத்து வரை போர்த்தப்பட்டு இருக்கும் போர்வையை விலக்கி எழ போக அப்போது தான் அவளது ஆடை இல்லா அவளது உடலை கண்டவளுக்கு அதிர்ச்சியாகி அவள் அறையை உற்று கவனிக்க நேற்று அவள் உடுத்தி இருந்த உடை கீழே கிடக்க அதனுடன் பிருத்வி நேற்று அணிந்து இருந்த உடையையும் கண்டவளுக்கு என்னமோ நடந்து இருப்பது மட்டும் மிக தெள்ள தெளிவாக விளங்க அவளுக்கு நேற்று அவன் கொடுத்த முரட்டு முத்தமும் அதன் பின் தோழிகளுடன் சென்றதும் பாங் பால் குடித்தது வரை மட்டுமே நியாபகம் இருக்க அதற்கு பின் அவளுக்கு என்ன நடந்தது என்று அவள் யோசிக்க அவள் மூளையோ அவளது கேள்விக்கு பதில் அளிக்காமல் இருக்க அவளுக்கு தலையே சுற்றுவது போல இருந்தது..

அதிரடியாக முத்தம் வைத்தது போல என்னை ஏதாவது செய்து விட்டானோ என்று நினைக்கும் போதே அவளுள் குளிர் எடுக்க தொடங்கியது..அது உண்மை தான் என்பது போல அங்கே அவளும் அந்த அறையும் காட்சி அளிக்க இதற்கு எல்லாம் காரணம் ஆனவனை மனம் தேட அவன் அங்கு இல்லை..

சிலை போல சமைந்து அமர்ந்து இருந்தவள் எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருக்கிறாளோ என அவள் அறியாள்..தீடிரென கதவு திறக்கப்படும் ஒலி கேக்க ஒலி வரும் திசை நோக்கி திரும்பியவள் பார்க்க அங்கே அவன் ராவணன் போல காட்சி அளித்து கொண்டு இருந்தான் பிருத்வி..

ஆறு அடி உடலை மறைக்க வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு தோளில் துண்டுடன் கலைந்த கேஷமும் உறக்கம் தொலைத்த விழிகளுடன் அவளுக்கு அவனது சிக்ஸ் பேக்கை காட்டிக் கொண்டு அவளை முறைத்து பார்க்க அவளோ அழுது அழுது முகம் வீங்கி தேற்றுவார் யாருமில்லாத பாவை போல அழுகையில் கரைந்து கொண்டு இருந்தவளுக்கு அவனை கண்டதும் ஆத்திரம் கோபம் வெறி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டாயே என்ற கோபம் எல்லாம் கிளர்ந்து எழ அவனை வெறிகொண்ட பார்வை அவள் பார்க்க அவனோ அவளுக்கும் மீறி தன் கோப விழிகளில் உறுத்து விழித்தவனின் கண்கள் அவளின் முகத்திலே நிலைத்து இருக்க இன்னும் உடை கூட மாற்றாமல் அப்படியே அமர்ந்து இருக்கும் அவளை பார்த்து கண்காளாலே அவளை எரிக்க தொடங்கியவன் அவள் முகத்திலேயே அவன் தோளில் இட்டு இருந்த துண்டை வீசி எறிந்தான்...

அவளோ அதிர்ச்சியாக அவனை பார்க்க பிருத்வியோ விழிகளாலே அவளை குற்றப் படுத்திவிட்டு சென்று பால் கனியில் நின்று கொண்டான்..அவன் பார்வை என்ன சொல்லுது என்னை தானே குற்றப்படுத்துது அப்போ நான் நினைச்ச மாதிரி தவறு நடந்து இருக்கு என்று நினைக்கும் போதே அவள் மனதை உள்ளுக்குள் யாரோ வேரோடு அறுத்து எரிவது போல இருக்க நானா நடந்த விஷயங்களுக்கு காரணம் அப்படி தானே அவன் பார்த்துட்டு போறான் என்று நினைக்க ஆத்திரம் தாளாமல் வேகமாக கீழே கிடந்த அவளது பாவாடை மற்றும் அவரசத்துக்கு அங்கே கிடந்த அவனது சட்டையை எடுத்து அணிந்தவள் சட்டை பட்டனை அங்கு ஒன்று இங்கு ஒன்றாக அணிந்தாள்.. அவன் தன் முகத்தில் விட்டு எறிந்த துண்டை எடுத்தவள் பால் கனியில் அவளுக்கு முதுகு காட்டி பால் கனியின் பிடியை பிடித்து எங்கோ வெறித்து கொண்டு இருந்தவன் முகத்திலேயே அவன் விட்டு எறிந்த துண்டை திருப்பி எறிந்தாள் சம்யூ..

அவள் காலி அவதாரம் எடுத்து அவளிடம் வேல் இல்லை இல்லையேல் பிருத்வி வயிற்றை கிழித்து மாலையாக அணிந்து இருப்பாள்..

அவள் செய்த செயலால் அவளை கோபத்துடன் பார்க்க அவளோ , "சீ நீ எல்லாம் ஒரு மனுசனா..என்னை இப்படி நாசம் பண்ணிட்டியே..நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன் "..என்று அவனை பார்த்து கோபத்தால் மூக்கு சிவந்து கேட்டவளோ அவன் அவள் கேள்வியை எதிர்கொள்ளும் கண் இமைக்கும் நேரம் முன்னரே அவன் கன்னத்தில் அவளது மென்கை அழுந்த பதிந்து இருந்தது.. இது கூட அவள் செய்யவில்லை என்றால் அவள் மனமே ஆறி இருக்காது...

அவனோ இதை சற்றும் எதிர்பாரக்காதவன் அதை விட சூடாகி, " யார் மேல டி கையை வைக்கிற "..என கேட்டு அவள் கழுத்தை பிடித்து இருந்தான்..

அவளோ வேதனையால் திமிற அவனோ வெறி கொண்ட வேங்கையாக ஒரு சிறு பெண்ணின் கையால் அடி வாங்கியதை ஏற்று கொள்ள முடியாமல் அவளின் கழுத்தின் பிடியை இறுக்கி , "என் பின்னால சுத்தாதன்னு சொன்னேன்ல..கேட்டியா..என் பின்னாடி நீ சுத்திட்டு விலகி நடந்த என்னை பார்த்து கேள்வியா கேக்கிற?? இப்போ என் மேல கை வைக்கறியா??..என்னமோ நான் தான் தப்பு பண்ணின மாதிரி துள்ளுற?? என்ன கருமத்தை டி எனக்கு குடிக்க கொடுத்த?? அது குடிச்சதுல இருந்து என்ன நடந்துச்சுன்னு நியாபகமே இல்லை..நீ எப்படி என் ரூமுக்கு வந்த..என்னை என்ன டி செஞ்ச ".. என்று அப்படியே பிளேட்டை திருப்பி அவள் பக்கமாக இட அதிர்வது அவள் முறையானது..

அவனுக்கு அரை போதை இருந்தது என்னவோ உண்மை தான் ஒரு பெண்ணை தொட்டு கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வு எல்லாம் அவனுக்கு இருந்தது இருந்தும் அவள் செய்தது போல அவளை குற்றப்படுத்தினான்..

சம்யூ அவன் தான் தவறாக நடந்து கொண்டான் என கூறுவான் என எதிர்பார்க்க அவனோ இப்படி கூறவும் அவளோ அதிர்ச்சி அடைந்து விழிகளாலே நம்ப முடியா பார்வை அவனை பார்த்து , "வறே வா சூப்பர் பொய்..ஆனால் நம்ப தான் என்னால முடியல மிஸ்டர்...என்ன பொய் சொல்றியா??? இப்படி சொல்லி தப்புச்சுக்கலாம்னு நெனைக்கிறியா?? என் வாழ்க்கையை அழிச்சுட்டு வசனமா பேசிட்டு இருக்க..யூ பிளடி பாஸ்டர்ட்"... என்று கொந்தளித்து கேட்க

பிருத்வியோ மேலும் சிவந்த கண்களில் கோபமாக அவளை பார்த்து கூசாமல், " யாரை பார்த்து என்ன கேள்வி டி கேக்கிற??".. என்று கேட்டவன் அப்படியே கழுத்தில் வைத்த கையை எடுக்காமல் அவளை அந்தரத்தில் தூக்கி பிடிக்க அவளோ வலியால் முனகி, " விடு டா..என்னை விடு டா இடியட்..".. என தவளை போல அவளது கையையும் காலையும் ஆட்டி கத்த அவனோ அந்த நேரத்திலும் அவள் அழகை ரசித்து கொண்டு இருந்தான்..அதிலும் அவள் பாவாடை மற்றும் அவனுடைய சட்டையை மட்டுமே அணிந்து இருக்க சட்டையின் வழியே தெரியும் அவளது உடலின் வடிவத்தை நேற்று சரசம் ஆடிய அவள் மேனியை ரசித்து விடுபட்ட சட்டையின் பட்டன் வழியே தெரிந்த அவளது வெண்ணிற இடையை தீண்டும் ஆவல் மேலும் அவனை தீண்டியது..

அவளோ என்னை விடு என்று கத்த அவனோ அதற்கு மேலும் அவளை சோதிக்காமல் இறக்கி விட்டு யோசனை செய்வது போல பாவனை செய்து அவளிடம் , "இதோ பார் நடந்தது உனக்கும் நியாபகம் இல்லை எனக்கும் நியாபகம் இல்லை இது தான் உண்மை நடந்த விஷயம் ஒரு விபத்து அதுக்கு நாம ரெண்டு பேருமே காரணம் இல்லை..ஒரு பேச்சுக்கு வேணா நீ என்னையும் நான் உன்னையும் சொல்லலாம்"... என்று அவளிடம் கூற அவளோ அப்போது தான் அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ என அந்த பாதையில் சிந்தித்தாள்..

அப்படி சிந்தித்து பார்க்கவும் அவன் மேல் உள்ள கோபம் இலேசாக போனாலும் ஒரு பெண் இழக்க கூடா விஷயத்தை அல்லவா இழந்து இருக்கிறாள் என நினைத்து அப்படியே பால் கனியிலே மடிந்து சாய்ந்து அழ ஆரம்பித்தாள்..

அவனோ மிக அழகாக கலங்கிய குட்டையில் மீன் பிடித்தான்..அவன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பண முதலைகளை பார்த்து இருப்பான் இவள் என்ன அவனை பொறுத்தவரை சிறிய மின்மினி பூச்சி அவளை அப்படியே எடுத்து ஒரு டப்பாவில் அடைத்து விட்டு செல்ல அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகி விட போகிறது..இதோ அவளையும் குற்றப்படுத்தி அவளுக்கு குற்ற உணர்ச்சியை உருவாக்கி விட்டான்..அதன் பலன் இதுவரை எதற்கும் பெரிதாக கலங்காத பெண் இப்போது கதறி கொண்டு இருக்கிறாள்..அதுவும் அவனுக்கு பிரச்னையாகி போனது..

அவள் அழுவதை பார்க்கும் போதே அவனுக்கு கோபம் கொப்பளிக்க, " இப்போ என்ன நடந்து போச்சுன்னு ஒப்பாரி வெச்சுட்டு இருக்க"..

"என் வாழ்க்கையே போச்சே..இனி எப்படி ஒரு வாழ்க்கை அமையும்"..என்று புலம்ப

அவனோ, " நீ மட்டும் தான் இழந்த மாதிரி சொல்லி சீன் போடாத என்னோடதும் போச்சு "..என்று ஒரு மாதிரி குரலில் இரட்டை அர்த்தத்தில் கூற அவளோ அவனை பார்த்து முறைத்து மீண்டும் அழ தொடங்கினாள்..

அவள் குனிந்து அழுது கொண்டு இருக்கும் போது வேறு அவளின் பின் இடுப்பு வேறு அவனுக்கு விருந்து வைக்க , "சோ முடியலையே இவ இப்படி உள்ளேயும் வெளியேயும் ஹாட்டா இருந்து என்னை கொல்றாலே "...என்று கையை பிசைந்தவன் அவளை நல்லவன் போல மெல்ல எழுப்பியவன் கண்கள் நீர் படல இருப்பவள் முகத்தை தீர்க்கமாக பார்த்து , "இப்போ எதுக்கு அழுகற..அழுது கரையிற அளவுக்கு என்ன நடந்து போச்சு..நடந்தது நடந்து போச்சு..அது ஒரு விபத்து.. இனி மேற்கொண்டு நடக்க போவதை பார்ப்போம்..இப்போ என்ன செய்யலாம்னு இருக்க ??? "..என்று மென்மையாக அவன் கேட்க அவளால் உடைய மட்டுமே முடிந்தது..

அவளோ அவனையும் குற்றப்படுத்த முடியாமல் அதே நேரம் நடந்த விஷயத்தை நியாய படுத்தவும் முடியாமல் இருதலை எறும்பாக தவிக்க அவனோ தீர்க்கமாக அவள் முகத்தை பார்த்து சட்டென்று, "என்னை கல்யாணம் பண்ணிகிறியா"... என்று கேட்க

அவன் கேட்ட கேள்வியில் அவள் அதிர்ந்தாலும் அது மட்டுமே சாத்தியம் என்று அவளின் உள்மனம் கூறினாலும் அவன் இப்படி தீடிரென கேட்பான் என எதிர்பாராதவள் அமைதியாக நிற்க

அவனோ பெருமூச்சை விட்டு , "சம்மூ என்னை பாரு ..நான் பேசி முடிக்கும் வரை என் கண்ணை மட்டும் பாரு"..என்று கூற

அவளோ நிமிர்ந்து அவனை பார்க்க அதில் என்ன கண்டாலோ அப்படியே அவனை பார்த்து கொண்டே சமைந்து நிற்க , "நடந்தது விபத்தே ஆனாலும் ஒரு பொண்ணை நாசம் பண்ணிட்டு ஓடி போகவோ இல்லை அது செஞ்சது நான் இல்லைன்னு மறுக்கவோ என்னால முடியாது ..நான் அந்த மாதிரியான ஆளும் இல்லை..எஸ் நடந்தது உண்மை..அதுக்கு நானும் ஒரு காரணம்..நான் ஒத்துக்கறேன்..அதுக்காக நடந்த விஷயத்துக்கு நான் மட்டுமே காரணம்னு முழுசா என்னால ஏத்துகவும் முடியாது..

இந்த நிலையில் உன்னை அப்படியே விட எனக்கு மனசு..நம்மல இணைக்கத்தான் கடவுள் இப்படி செஞ்சு இருக்காரோ என்னவோ எனக்கு தெரியல..நாம குடிச்ச அந்த பாலில் தான் நமக்கு நடந்த விஷயங்கள் மறந்து போய் இருக்கு... எனக்கு தெரிஞ்சு இது ஒரு சொல்யூஷன் உனக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே நம்ம கல்யாணம் நடக்கும்..அப்படி இல்லையா நடந்தது ஒரு அழுக்குன்னு நினைச்சு கழுவிட்டு அவங்கவங்க வழியை பார்த்து போவோம் ஆனால் நடந்ததுக்கு யார் காரணம்னு என்னால சரியா சொல்ல முடியல..

இருந்தாலும் நான் தான் காரணம் ன்னு வெளில நீ சொல்லிட்டு என் பேர் கெடுறதையும் என்னால ஒத்துக்க முடியாது இனி நீயே முடிவு பண்ணு "... என்று கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான் அந்த நேர்மையின் திரு உரு..

அவன் கூறுவதை எல்லாம் கேட்ட இவளுக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை அவனோ நம்மை மீறி தவறு நடந்து விட்டது சரி செய்வோம் இல்லையா.. நடந்ததை மறந்து புது வாழ்க்கை அவரவர் பாதைக்கு ஏற்ப செல்வோம் என்கிறான் ..அந்த இடத்தில் குழம்பிய நிலையில் இருக்கும் பெண்ணின் மனநிலையில் இருக்கும் சம்யூவுக்கு அந்த நேரத்திலும் அவனது கம்பீரம் பிடிக்கவே செய்தது..அவன் பால் ஏற்கனவே சரிய தொடங்கி இருந்த அவளது மனது இப்போது அவன் நேர்மையாக செயல்படவும் மேலும் ஒரு இணக்கம் வந்தது என்னவோ உண்மை தான்..

ஆம் அவன் ஒன்றும் ஓடி ஒளியவில்லையே..நேர்மையாக தானே அவளிடம் பேசி இருக்கிறான்..என் நிலையில் தானே அவனும் இருந்தான்..இருக்கிறான்..இப்போது கூட எனக்காக தானே பேசிக் கொண்டு இருக்கிறான்..எனக்கே ஒன்றும் நியாபகம் இல்லாத போது அவனுக்கும் அப்படி தானே இருக்கும் அவன் தன்னிடம் இருந்து எப்போதும் பார்த்தாலும் விலகித்தானே சென்றான் நான் தானே அவனை வம்புக்கு இழுத்தேன் என்று அவனுக்கு சாதமாக பல விஷயங்களை எண்ணி திரட்டியவளுக்கு அவன் முத்தமிட்டது அந்நேரம் மறந்து விட்டது..மறந்து விட்டதா இல்லை மறக்க எண்ணினாளா அந்த நேரத்தில் அவளது தேவையானதை மட்டும் எடுத்து கொண்டாளா????

அவனுக்காக அவள் மனதோடு வாதிட்டு வந்தவளுக்கு ஆழ் மனதில் அவனுடன் வாழ வேண்டும் என்ற விருப்பமே போலும் அதனால் அவன் கூறியது போல இனி என்னால் வேறு ஒருவனிடம் வாழ முடியாது அதனால் அவனையே ஏற்றுக்கொள்வோம் என்ற முடிவுக்கு அவள் வர (அவளை அந்த எண்ணத்திற்கு அவளை அவளை அவன் வர வைக்க)

அவனோ அவளை வைத்த கண் விடாமல் அவளை ரசித்து கொண்டு இருந்த அந்த நேர்மையின் திரு உரு, " ஹே ஓகே சொல்ல இவ்வளவு நேரமா டி சீக்கிரம் சொல்லு எவ்வளவு நேரம் தான் நானும் உன்னை இந்த செக்ஸி போஸ்லேயே பார்க்கிறது".. உள்ளுக்குள் என்று அவளின் மனம் படித்தவன் போல தனக்குள் யோசித்தபடியே அந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து இருந்தான்..உள்ளே அவளை கண்டு ஜொள்ளு விட்டாலும் வெளியே கம்பீரமாக தான் தெரிந்தான்..அவனின் இந்த வில்லத்தனம் மிக சரியாக அங்கே வேலை செய்தது என்னவோ உண்மை தான்..

ஒரு வழியாக எல்லாம் யோசித்து முடித்தவள் மெல்ல தயங்கி தயங்கி அவனருகே வந்து அவனை ஏறிட்டு, "எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்".. என்று கூற

ஒரு நொடி அவனது முகத்தில் வெற்றி களிப்பு தாண்டவம் ஆடியது அதை அவள் காணும் முன்னே மறைத்தவன் உடனே , "ஹ்ம்ம் ஓகே "...என்று கூறியவனை ஏறிட்டு பார்க்க அவனோ , "வேறு ஏதாவது சொல்லனுமா".. என்க ,

"இல்லை "..என்பது போல தலையாட்ட

" அப்போ நீ போலாம்".. என்று கூற அவளோ திருத்திருவென விழித்தாள்..

அவளுக்கும் ஏதோ ஒன்று உள்ளே வைத்து இருக்க முடியாமலும் வெளியே தள்ளவும் முடியாமலும் இருக்க அதை கண்ட அவனோ , "என்ன விஷயம் சொல்லு "..என்று எடுத்து கொடுக்க ,

அவளோ , "இப்போ என்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு என்னை ஏமாத்திட மாட்டிங்களே ??..உங்களை நான் எப்படி நம்புறது"...என்று தயங்கினாலும் அவள் கேட்டு விட்டாள் ஏனெனில் பாதிப்பு அவளுக்கு தானே என எண்ணி அவள் கேட்க அவள் கேட்ட கேள்வியில் அவனுக்கு மெச்சுதல் தோன்றினாலும் அவள் முன்னே அதை பிரதிபலிக்காமல் அவளை பார்த்து கோபமாக, " என்னை மட்டும் சந்தேகப்படறது சரி இல்ல ..உனக்கு என்மேல அப்படி ஒரு சந்தேகம் இருந்தா இதுக்கு மேல என்னால ஒன்னும் செய்ய முடியாது|.. என்று கூறியவன் அவன் கழுத்தில் கிடந்த சங்கிலியை கழட்டி சட்டென்று அவள் கழுத்தில் அணிவித்து , "என் வார்த்தையை விட உனக்கு இந்த சங்கிலி தான் உன் மனசை ஆறுதல் படுத்தும்னா இதோ ஆறுதல் படுத்திட்டேன்...இதை நீ தாலின்னு நினைச்சாலும் சரி இல்லை வேற ஏதாவது நினைச்சாலும் சரி நம்ம கல்யாணம் நடக்கும் வரை இது உன் கழுத்தில் கிடக்கட்டும் "...என்று கூறி விட அவள் மனதில் அரித்து கொண்டு இருந்த பாரம் இறங்கி இனியும் இவனை நம்பவில்லை என்றால் எப்படி என அவள் பால் அவள் மனம் சாய இனி தான் அவனை நம்ப கூடாது என அவளுக்கு புரியவைக்க அங்கே யாரும் இல்லை..

அதே நேரம் மீண்டும் ஒரு முறை அவளை நெருங்கி பார்க்கலாமா என அவனுள் இருக்கும் வில்லன் பிருத்வியை விரட்டினாலும் அதே நேரம் வெளியே பூசி இருக்கும் சாயம் வெளுத்து விட கூடாதே என தன்னை கட்டுப்படுத்தி அமைதியாக இருந்தான் ..

அவளோ மீண்டும் தயங்கி நிற்க , "இனி என்ன".. என்று ஒரு மாதிரியான குரலில் பிருத்வி கேட்க

"நத்திங் "..என்று அவள் கூற "இனி உன் ரூமுக்கு போ நமக்குள் நேற்றில் இருந்து இதோ இந்த நிமிஷம் வரை நடந்தது யாருக்கும் தெரிய வேணாம் நிலைமை எல்லாம் சரி ஆனதும் உன் வீட்டுல பேசு அதுவரைக்கும் இப்படியே இருப்போம் "...என்று பிருத்வி என்ற நல்லவன் கூற சம்யூ என்ற அறிவு கெட்டவள் அவன் அணிவித்த சங்கிலியை பார்த்துக்கொண்டே அவன் கூறியதற்கு எல்லாம் தலையாட்டி கொண்டு இருந்தாள்..

அதற்குள் அவனது அறையின் அழைப்பு மணி அடிக்க இந்த நேரத்தில் யார் என அவன் யோசிக்கும் முன்னே அவளுக்கோ பதட்டம் தொற்றி கொண்டது அதே நேரம் கதவோ விடாமல் அடிக்க அவளிடம் மறைந்து நிற்க சொல்லி விட்டு கதவை இலேசாக திறக்க அங்கே பிருத்வி கொடுத்த வேலையை செய்ய போனவன் போன காரியம் சீக்கிரமே நடந்து முடிய விரைவாக ரீசார்ட்டை அடைந்து இருந்தான் அவனை கண்டதும் தான் பிருத்திவிக்கு மூச்சே வர தன்னை பார்த்து பல்லை காட்டி கொண்டு நிற்கும் நண்பனை பார்த்து முகம் கடுமையாக்கி அவனை பார்த்து, " என்ன எதுக்கு இப்போ வந்த".. என்று பிருத்வி கேட்க

"டேய் நீ தான் டா வேலை கொடுத்த".. என்று விக்கி கூற அப்போது தான் அது நினைவு வர , "ஓ ஓகே மிஸ்டர் விக்னேஷ் நாராயணன் இன்னிக்கு உங்க ஒர்க் வேற யாரும் என் ரூமுக்குள்ள வராமல் இருக்க இங்கேயே காவல் நில்லுங்க "..என்று கூறி விட்டு அவனது பதிலை எதிர்பார்க்காமல் பிருத்வி கதவை அடைத்து விட்டான்..

விக்கியோ , "டேய் நான் வக்கீல் டா இப்படி வாட்ச்மேன் ஆக்கிட்டியே..இன்னும் என்ன எல்லாம் பார்க்க போறேனோ ".. என்று புலம்பி கொண்டு அவன் நிற்க உள்ளே வந்தவனோ , "ஓகே நீ இப்போ கிளம்பு என்னோட பிரெண்ட் வந்துட்டான்".. என்று கூற அவளோ மேற்கொண்டு எதுவும் கேக்காமல் , "சரி "..என்று கூற

அவனோ அவளை தலையில் இருந்து கீழ் வரை ஒரு மாதிரியாக பார்த்து, "என்ன இப்படியேவா போக போற ட்ரெஸ் மாத்திட்டு போ "..என்று கூற அவளோ சுயம் அவள் தலையில் அடித்து வேகமாக அவளது புடவையை எடுத்து கொண்டு வேறு ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.. அவனோ ஓடும் அவளை கண்டு, " ஆமாம் எதை என்கிட்ட மறைக்க இவ கதவை தாழ்ப்பாள் போடுற "...என்று நக்கல் கேள்வியை கேட்டு சிரித்தும் கொண்டான்..

அடுத்த பத்து நிமிடத்தில் சம்யூ அறையில் இருந்து வெளியே வர அவளை பார்க்க அவளின் இடுப்பு அவனை இம்சித்தாலும் , "என் நம்பர் உன்கிட்ட இருக்குல்ல ஏதாவதுனா கால் பண்ணு "..என்று கூறி அவள் அருகே வந்து கூறியவன் என்ன நினைத்தானோ, "கொஞ்ச நாளில் எல்லாம் சரி ஆகும் என்னை நம்பு".. என்று அவள் தோளை ஆதரவாக தட்ட அவளும் தலையாட்டி விட்டு வெளியேறினாள்..

பிருத்வியின் அறைக்குள் இருந்து கல்யாணம் ஆன புது பெண் முதலிரவு கழிந்து வருவது போல தலை குனிந்து வரும் அவளை கண்ட விக்கிக்கு தலையே சுற்றியது , "டேய் பாவி அப்போ என்னை வாட்ச்மேன் ஆக்கலையா மாமாவா ஆக்கினே டேய் படுபாவி"... என்று அதிர்ந்து பிருத்வியை பார்க்க பிருத்வியோ விக்கியை எதிர்கொள்ளாமல் சம்யூ செல்வதைப் பார்த்து கொண்டு இருந்தவனை உள்ளே இழுத்து கொண்டு சென்றான் விக்கி..

"டேய் அந்த பொண்ணை என்ன டா பண்ணின அதைய பார்த்தா என்னமோ எக்குதப்பா செஞ்சு இருப்ப போலையே ..ஆனால் அது உன்னை இழுத்து நாலு அறை விடாமல் வெக்கப்பட்டு போறா என்ன டா நடக்குது இங்க...அரேபியன் குதிரை மாதிரி இருந்த பொண்ணை ஒரே நாளில் ஹச் டாக் மாதிரி ஆக்கி வெச்சு இருக்க "...என்று கேட்க பிருத்வியோ மென்னகை புரிந்து ,"அது எல்லாம் அப்படி தான் மச்சான்..உனக்கு எல்லாம் சொன்னா புரியாது "என்று சிரித்தபடி கூற

"அப்போ அந்த பொண்ணை "...என்று வாய் வரை வந்த கேள்வியை கேட்க முடியாமல் விக்கி தவிக்க பிருத்வியோ , "ஆமாம் அவ நேற்றில் இருந்து என்கூட தான் இருக்கா "..என்று கூற இரண்டாம் முறை அதிர்வது விக்கி அவன் கூறிய செய்தியை கேட்டதும் சோபாவில் விழுந்தவன் தான் அதன் பிறகு எழவில்லை..

தயங்கி தயங்கி அவளது அறைக்குள் சென்ற சம்யூவை பெரிதாக அவளது தோழிகள் யாரும் எந்த கேள்வியும் கேட்க வில்லை சோனு தோழிகளுக்கு என்று மூணு நான்கு அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதால் அவள் ஏதோ ஒரு அறைக்குள் இருப்பாள் என அவர்களும் பெரிதாக எந்த கேள்வியும் கேக்காமல் இருக்க அவளோ யாரிடமும் ஒன்றும் பேசாமல் வேகமாக குளியறைக்குள் புகுந்து கொண்டாள்..

இங்கே மும்பையில் ராமா விலாசில் போலி பத்திரம் உண்டாக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது அதுவும் ராஜராஜேஸ்வரி எப்படியோ மறுத்த தன் கணவனை சம்மதிக்க வைத்து இருந்தார்..வெளியூர் சென்று இருந்த வக்கீல் அதை விட பயப்பட ராஜேஸ்வரியோ, " உன் வாழ்நாளில் இனி நீ கோர்ட் படியை மிதிக்க தேவையே இராது".. என்று கூறி மடக்கவும் ஆசை யாரை விட்டது அந்த மனிதனும் சம்மதித்து விட்டார்..

ஈஸ்வர் , "இது எல்லாம் தேவையா ராஜி "...என்று நூறு முறை கேக்க ராஜேஸ்வரி , "எனக்கு வேணும்ங்க என்னால ஒன்னும் இல்லாமல் இருக்க முடியாது...அப்பன் சொத்து பசங்களுக்கு தான் செத்து போனவர் இப்படி செய்வாரு நாம கையை கட்டி வேடிக்கை பார்க்கணுமா யாருக்கும் சந்தேகம் வராது நாம அந்த பத்திரத்தில் ஒரு வரி தானே சேர்க்க போறோம் அபியை சம்யூ கல்யாணம் பண்ணிக்கனும் பண்ணினா தான் இந்த சொத்து சேரும் இல்லாட்டி ராஜேஸ்வரி பேரில் மாறும்னு அதுனால எந்த பிரச்னையும் வராது நல்ல வேலை பசங்க இல்லாதது நல்லதா போச்சு இல்லாட்டி என்ன ஆகிறது|... என்று ராஜேஸ்வரி கூற

ஈஸ்வரோ , "எதுக்கு இப்படி மாத்தனும்னு சொல்ற "..என்ற கேள்விக்கு,.

" இல்லை ஈஸ்வர் யாரையும் இந்த காலத்தில் நம்ப முடியாது அந்த என்னை பெத்தவரே சாட்சி "...என்று அடிபட்ட புலியின் பார்வையில் ராஜேஸ்வரி கூற "இப்படி மாத்தினா யாருக்காவது சந்தேகம் வந்திட போகுது ?? என்று ஈஸ்வர் கூற,

"யாருக்கு வரும் நான் அவரோட பொண்ணு என்னை மீறி எங்கே வருதுன்னு பார்க்கிறேன் விஷயம் தெரிஞ்சவங்க நாம மட்டும் தான் எல்லோரும் இந்த வீட்டு ஆளுங்க தென் வக்கீல் அவனுக்கு முன்னாடியே பணத்தை கொடுத்து இருக்கோம் அவன் வாயை திறந்தால் அவன் உயிர் உடம்பில தங்காதுன்னு சொல்லி மிரட்டி இருக்கேன் "...என்று கூறும் போதே அவர் முகத்தில் பழி வெறி உண்டாக பிளான் சரியாக வரையறை செய்யப்பட்டு விட்டது மாடலுக்காக போலி பத்திரத்தில் ட்ரையல் கூட பார்த்து விட்டார்கள் இனி ஊருக்கு சென்ற வக்கீல் திரும்பி வந்ததும் எழுதி மாற்ற வேண்டியது தான் என இவர்கள் மனகோட்டை கட்டி கொண்டு இருந்தனர்..

சோனுவின் வரவேற்பும் நிறைவடைய ஒவ்வொருவராக எல்லோரும் கிளம்பி செல்ல ஆரம்பித்து இருந்தனர்..வந்த இரண்டாம் நாளில் அபி அழைத்தவன் தான் அதன் பின் அவனிடம் இருந்து எந்த அழைப்பும் வராமல் இருக்க இவளும் இங்கே சுற்றி திரிந்ததில் அவனை அழைக்கவில்லை அதே நேரம் வீட்டிலும் வந்த சமயத்தில் உரையாடியது தான் அதன் பின் அவள் பேசவே இல்லை அப்படி இருக்க அவன் எப்போது வருவான் என்பதை அறியவும் பிருத்வி யாரிடமும் கூற வேண்டாம் என்றாலும் அவளது அத்தை மாமாவிடம் கூறும் தைரியம் எள்ளளவும் அவளுக்கு இல்லை என்றாலும் நடந்த தவறை அவளது உயிருள்ள மனசாட்சி ஆன அபியிடம் கூறியே ஆக வேண்டும் என்ற உந்துதல் அவளுக்கு எழ அவன் எண்ணுக்கு அழைத்தாள்...

ரிங் அடித்து கொண்டே இருக்க டிஸ்பிளே போன போனில் யாரையும் அழைக்கவும் முடியாமல் குளு - மானாலி மருத்துவமனையின் வாயிலில் நின்று கொண்டு இருந்த ஒரு பெண் அபியின் போனில் ரிங் அடிக்கவும் போனை எடுத்து, " ஹலோ"..என்க

மறுமுனையில் இருந்த சம்யூ யாரது அவனது தோழியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், " அபி இல்லையா".. என்று கேட்க

இந்த முனையில் இருந்தவள், " சொல்லுங்க.. நான் அவரோட மனைவி தான் பேசறேன் "... என்று அழுத்தமான குரலில் ஹிந்தியில் மறுமுனையில் இருந்தவள் கூறினாள்... யார் அவள்????..

அதை கேட்ட சம்யூ ,"மனைவியா "...என மீண்டும் ஒரு

முறை சம்யூ அதிர்ந்தாள்...இன்னும் எத்தனை அதிர்ச்சிகளை சம்யூ தாங்கி கொள்ள போகிறாளோ!!!!!!!!!!!!!

மாயவன் வருவான்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top