அத்தியாயம் 3
மனம் விரும்புதே மாயவா
தன் கைகளை இறுக்கமாக அழுத்தி பிடிக்க பெண்ணவளின் பிடி அவனுக்கு வலியை கொடுக்கவில்லை என்றாலும் அவள் கால் அடி வளர்த்தி வைத்து நகங்கள் அவனது கையை அழுத்தியதில் அவன் கையில் கீறல்கள் உண்டாகி இலேசான நமச்சலை அவனுக்கு கொடுக்க ஒரு வழியாக விமானம் பறக்க தொடங்கியதும் இயல்பானவள் கண்களை திறந்து யார் கையை இவ்வளவு பிடித்து இருக்கிறோம் என்ற சுய உணர்வு வர பாவையவள் மெல்ல அண்ணலை வெட்கத்தோடு நோக்கினாள்..
அவளோ, "அவுச் "..என்று இலேசாக அவனது கையில் கீறிய கீறலை பார்த்து ஆங்கிலத்தில், " சாரி எனக்கு கொஞ்சம் டேக் ஆப் பயம் "...அது தான் என்று அவளின் சிவந்த உதட்டை மடித்து பயந்த விழிகளில் அவனிடம் மன்னிப்பு கேட்க அவனோ அவனது கன்னக்குழி தெரிய சிரித்தவன், " இவ்வளவு பயமா கொஞ்சம் ஆழமா தான் பயந்து இருக்கீங்க "...என்று அவனது கையை பார்த்துக்கொண்டே சிரிக்க அவளுக்கு வெட்கமும் சங்கடமாக பார்க்க அவனோ, " ஹே ரிலாக்ஸ் ..திரும்பவும் நிலத்தை பார்க்க தொடங்கிடாத எப்படியும் என்னை விட சின்ன பொண்ணா தான் இருப்ப ஐயம் பிருத்வி"... என்று அவனை அறிமுகப்படுத்தி கொள்ள, அவளும் அவளை அறிமுக படுத்தி கொண்டாள்.. அவன் அவளிடம் அவனை பற்றி சில விஷயங்கள் கூறி அவளிடம் பல விஷயங்கள் கறந்து எடுத்தான் அவள் அறியாமலேயே அவளும் பேச்சு சுவாரசியத்தில் அதை கண்டு கொள்ளவில்லை.....
அதும் பொதுவாக பல விஷயங்களை சிரித்த முகமாக பேசும் அவனின் முகம் அவளுள் எங்கோ பதிந்து போனது என்றே கூற வேண்டும்...ரொம்ப வலியாமல் டீசென்ட்டாக பேசும் அவனை அவளுக்கு பிடித்து தான் இருந்தது...பயணம் தொடங்கும் போது அவர்கள் உரையாட தொடங்கியது பயணம் முற்றுப்பெறும் போது ஒரு நல்ல நண்பர்கள் ஆகி இருந்தனர்...
இதற்கு இடையே அவன் அவளின் மொபைல் எண்ணோ இல்லை அவளை பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் எதுவுமே தோண்டி துருவாவது வேறு அவளுக்கு அவன் மீது நன்மதிப்பை கொடுக்க இருவரும் விமானம் தரை இறங்கியதும் பிரியும் நேரம் சிரித்த முகத்துடன் அவன் கை நீட்ட அவளை அறியாமல் அவளது கை நீண்டு அவனது கைக்குள் ஒளிய சிறு அழுத்ததுடன் தன் கைக்குள் புதைந்து இருக்கும் அவளது கையை அழுத்தி விட்டு அவளிடம் இருந்து அவன் விடைபெற்றான்..
இதை எல்லாம் அரைக்கண்ணில் பார்த்து கொண்டு இருந்த விக்கியோ மனதுக்குள், " ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காத டா உன்னை பத்தி எனக்கு தெரியாதா "..என்று மைண்ட் வாய்ஸ்ஸில் அவனை திட்ட வேக நடையுடன் நடந்து கொண்டு இருந்தவன் சட்டென்று பின்னால் வந்து கொண்டு இருக்கும் விக்கியை திரும்பி பார்த்து முறைக்க அதுக்கும் விக்கியோ அசராமல், " ரொம்ப முறைக்காத டா கண் வெளில வந்திட போகுது "...என்று முனகி கொண்டே அவனுடன் நடந்தான் விக்கி...
சம்யூவுக்கும் அவளது நண்பர்களை கண்டதும் உலகம் மறந்து போனது..அவளுக்கு பின்னால் வந்து கொண்டு இருந்தவன் அவளை நோட்டம் விட்டு கொண்டு இருப்பதை காண கூட சமயம் இல்லாமல் அவர்களுடன் சிட்டாக பறந்து விட்டாள் சம்யூ..
கோவா...
அழகிய நகரம் ...இயற்கை அன்னை அவள் அழகை வாரி வழங்கிய ஒரு அழகிய அற்புதமான இடம் கோவா..பார்ப்பவர் கண்ணை கொள்ளை கொள்ளும் இடம்..வாழ்க்கையில் ஒரு முறையேனும் கோவா செல்ல வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் லட்சியமாக இருக்கும்..அப்படிப்பட்ட ஒரு சுற்றுலா தளத்தில் தான் சம்யூவின் தோழி சோனுவின் திருமணம் நடக்க உள்ளது..
அதும் அவளது தந்தை ஒரு வைர வியாபாரி ஆனதால் மகளின் திருமணத்தில் பணத்தை வாரி இறைத்து இருந்தார்... கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு ரிசார்ட் முழுவதையும் புக் செய்து இருந்தார்..மாப்பிளை வீட்டாரும் அவரது சொந்தங்களுக்கும்,சோனுவின் நண்பர்கள், குடும்பத்தார்களுக்கும் சேர்ந்து அங்கே தங்குவதற்காக பல வசதிகள் செய்து இருந்தனர்...
மனுசன் பணத்தை வாரி இறைத்து தனது செல்வாக்கை காட்டி கொண்டு இருந்தார்...ஆங்காங்கே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தகுந்த மாதிரி செட் அமைத்து கொண்டு இருந்தனர்...அங்கே சம்யூவோ கடலை ரசித்துக்கொண்டே தன் நண்பிகளுடன் கதை வளவளத்து கொண்டு இருந்தவளுக்கு தீடிரென யாரோ தன்னை நோக்குவது போல தோன்ற சம்யூ வேகமாக திரும்பி பார்க்க அங்கே யாரும் இல்லை...
அவளும் இது என்ன இங்கே வந்த இரண்டு நாட்களாக இந்த உணர்வு நம்மை ஆட்டி வைக்கிறது...இங்கே வந்த இரண்டு நாட்களாக அவளை இந்த உணர்வு பின் தொடருவது போல இருக்க அவள் திரும்பி பார்க்கும் சமயம் யாரும் இருக்க மாட்டார்கள்.. புரியாமல் குழம்பிய பாவை ஆகி போனாள் சம்யூ ...
சோனுவின் திருமணத்தில் அவர்களின் வழக்கப்படி பல சடங்குகள் இருந்தாலும் இன்றைய சடங்கு எல்லோருக்கும் விருப்பமான சங்கீத் நடந்து கொண்டு இருக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தன் தோழிகளுடன் அசத்தி கொண்டு இருந்த சம்யூவோ இன்றைய தினம் டார்க் மெரூன் அண்ட் மெல்லிய கோல்டன் நிற லெங்கேஹ்ஹா அணிந்து அதற்கு பொருத்தமான அணிகலன்கள் எல்லாம் அணிந்து வான் லோகத்தில் இறங்கி வந்த ரம்பை போல தனது முடியை பிரீ ஹேர் விட்டு அவளது அறையில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருந்தாள்..
அவள் தான் கடைசி எல்லோரும் அவளுக்கு முன்னே சென்று விட அங்கே விழா வேறு தொடங்கி விட்டது என்று அவரசம் அவசரமாக காற்றில் அவளது முடி பறக்க அவளது துப்பட்டா வேறு அவள் ஓடி வருவதில் விலகி அவளின் வெண்ணிற இடை வெளிச்சம் போட்டு காட்ட அங்கே இருந்த அனைவரும் இத்தகைய உடை தான் அணிந்து இருந்தாலும் அவர்கள் மீது எல்லாம் திரும்பாத அந்த மாயவனின் கண் அவள் மீதே அதும் தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து கொண்டு இருந்தது..இதை ஏதும் அறியாத பாவையவள் விழா நடக்கும் இடத்திற்கு வருகை புரிந்தாள்...
ஆம் பிருத்வியும் அந்த திருமணத்திற்காக தான் கோவா வந்து இருந்தான்..அவனது தொழில் முறை நண்பர் குணால் தான் மணமகன் என்பதாலும் பிருத்திவி வந்தே ஆக வேண்டும் என்று அன்பு கட்டளை விதித்தாலும் மேலும் இவள் வருகிறாள் என்ற ஒற்றல் தகவல் கிடைத்தாலும் இது தான் சமயம் என பிருத்வி வந்து விட்டான்...
அதை அறியாத சம்யூவிடம் பழக்கமும் ஏற்படுத்தி கொள்ள இதோ இப்போது அவன் கண்கள் அவளை விட்டு அகல மறுத்தது...அவளை காண காண அவளை அடைய வேண்டும் என்ற வெறி அவனுள் எழுந்து கொண்டே இருந்தது..அது வேட்கையாக மாறி அவனை வதைத்தது என்றே கூற வேண்டும்..
அங்கே சங்கீத் தொடங்கி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஆட்டம் பாட்டம் என குதூகலித்து கொண்டு இருக்க சம்யூவும் ஆடிக் கொண்டே இருந்தவளுக்கு யாரோ அவளை துளைத்து எடுப்பது போல இருக்க அவளோ யோசித்துக்கொண்டே ஆடியவளின் துப்பட்டாவை யாரோ கூட்டத்தில் ஆடி கொண்டு இருந்தவர்களில் யாரோ மிதிக்க டிசைன் செய்யப்பட்ட மெலிய துணியால் செய்யப்பட்ட அவளது ஆடை அந்த நபர் காலால் மிதித்து இழுத்த விசையில் அவளது வலது கையில் குத்தி இருந்த பின்னும் சேர்த்து இழுக்கப்பட அந்த இழுவிசையில் அவளது உடை இலேசாக கிழிய தொடங்கி விட்டது..
அதும் அவளது உடை வேறு ஒரு பக்கம் மட்டுமே ஸ்லீவ் இருக்க அந்த ஸ்லீவ் கிழிந்தால் அவ்வளவு தான் என நினைத்த சம்யூவுக்கு வேகமாக பதட்டம் தொற்றி கொண்டது.. உடனே தன் கையால் வெளியே தெரியும் தன் உடலை மறைத்தவள் அந்த விழா நடக்கும் இடத்தை விட்டு கொஞ்சம் இருள் மறைந்த இடத்தை நோக்கி சென்று ஒளிந்து கொண்டாள்..
அந்நேரம் அவளுக்கு தனக்கு இரண்டு அடி தூரத்தில் ஆடிக் கொண்டு இருந்த தன் நண்பர்களை அழைக்க வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை அவளுக்கு எப்படியாவது அவளது உடலை மறைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்க ஓடி விட்டாள்..அவளையே கவனித்து கொண்டு இருந்தவனின் கண்களில் அவளது செய்கை வித்தியாசமாக பட வேகமாக அவள் அருகில் விரைந்து வந்தான்...
அங்கே ஒரு மரத்தின் மறைவில் மறைந்து நின்று கொண்டு இருந்தவளுக்கோ அவளது அருகில் யாரோ வருவதற்கான சலசலக்கும் ஓசையை கேட்டவளுக்கு யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் வர வேகமாக அங்கிருந்தும் நகர்ந்தாள்..
ஆனால் ஒரு கும்பல் இளைஞர்கள் அந்த புதர் பகுதியை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்..இவளோ ஒளியும் இடம் நோக்கி வேறு செல்ல
அருகில் இருந்த வேறொரு புதர் ஒன்று தட்டுப்பட அந்த பகுதிக்குள் தன் மானத்தை காப்பாற்றி கொள்ள சம்யூ செல்ல யார் மீதோ மோதி நின்றாள்..
மரம் போல அல்லாது ஏதோ மெத் மெத் என்று மெத்தை போன்று இருந்தாலும் தான் மோதிய இடத்தில் சில இடங்கள் கல் போன்று இருக்க படபடப்புக்கும் இதயத்துடன் இருந்த அவளுக்கு அது ஒரு நபர் என்று புரிய தன்னை விட பெரிய பரந்த உடலில் மோதி நிற்பது புரிய அந்த உடலும் அவளோடு சேர்ந்து நிற்க அவளோ பயந்து வேகமாக திரும்பியவளின் முகம் பிரகாசமாய் மின்னியது..
அதும் அவனை இந்த தருணத்தில் சந்திப்போம் என நம்ப முடியாமல் அவனை கண்ட சந்தோசத்தில் சிரித்த முகத்தோடு, " நீங்களா பிருத்வி?? நீங்க இங்கே என்ன செய்யறீங்க"... என்று கூறியவளுக்கு அப்போது தான் அவள் இழந்த மூச்சே திரும்ப வந்தது எனலாம்...ஏதோ அவனிடத்தில் இருக்கும் தருணம் அவள் மிக பாதுகாப்பாக உணர்ந்தாள்...
அவனை பார்த்ததில் அவள் மறைத்து இருந்த ஆடை விலக அவளை துளைத்து எடுக்கும் பார்வை அவளது உடலிலும் பட்டது..அதும் அவள் ஆடிக்கொண்டு இருந்த போதே அவளின் இடையில் வளைவில் தெரிந்த மச்சம் அவனை மிகவும் இம்சை செய்தது என்றே கூற வேண்டும்.. அவன் பார்வை மேலும் அவள் உடலில் விரிய அவளோ வேகமாக அவனை நிமிர்ந்து அவள் பார்க்க அதற்குள் பார்வையை வேறு பக்கம் திருப்பிய பிருத்வி அவளிடம்,
"நீ இங்கே என்ன செய்யற "..என்று கேள்வி கேக்க அவளோ மெல்லிய குரலில், " இல்லை என்னோட ட்ரெஸ் கிழிஞ்சுடுச்சு தையல் விட்டுடுச்சு அது தான்".. என்று தயங்கி தயங்கி கூற அவனோ அவளையே அளவெடுத்து கொண்டு இருந்தவன் சற்றும் யோசிக்காமல் அவளை இறுக்கி அணைத்தான்..
தீடிரென இவன் இவ்வாறு செய்வான் என்று எதிர்பார்க்காத அவளோ நல்லவன் என்று நினைத்தால் இப்படி அத்து மீறுகிறானே என நினைத்து, " என்ன செய்யறீங்க பிருத்வி என்னை விடுங்க".. என்று கூறி திமிற அவள் திமிற திமிற அவனது அணைப்பு இறுகியது..அவளது மூச்சு முட்ட அவளை இறுகி அணைத்தான்...
அவளும் பலம் கொள்ள மட்டும் அவனிடம் இருந்து விடுபட போராட முடியவில்லை அவளை அவனது நெஞ்சோடு சேர்த்து அணைத்து இருக்க அவளின் உடல் அவனோடு உரசி கொண்டு இருந்தது..அவனது கைகளோ அவளின் முதுகை வருட அவளோ பயத்தில் கிலி உண்டாக்க அவனது துடிக்கும் இதயத்தின் ஓசையை வேறு கேட்டவளுக்கு வேறு அவளது எண்ணங்கள் தறி கேட்டு ஓட பலம் கொண்ட மட்டும் அவனை பிடித்து தள்ள கூட அவளால் முடியவில்லை அவனது சூடான உஷ்ண மூச்சுக்காற்று வேறு அவளது கழுத்தில் வளைவில் பட்டு அவளுக்கு கிலியை உண்டாக்க சம்யூ எதற்கு எடுத்தாலும் அழுது கரைபவள் இல்லையென்றாலும் மிகுந்த பயந்த சுவாபம் கொண்ட பெண் இல்லையென்றாலும் அவனது அருகாமை ஏனோ சம்யூவிற்கு பயத்தை விதைத்தது..
இனி திமிறி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்தவள், " ப்ளீஸ் லீவ் மீ..எனி படிஸ் தேர் ஹெல்ப் மீ "...என்று மென் குரலில் அவள் கத்த தொடங்கவும் அதுவரை அவளை பிடித்து கொண்டு இருந்த பிடியை விட்டு அவள் கையை திருப்பி அவனின் நெஞ்சோடு அவள் முதுகு படும்படி தன்னோடு சேர்த்தி நிறுத்தியவன் அவளது செவிக்கு அருகில் குனிந்து அவனது உஷ்ண மூச்சு காற்று அவள் செவியில் நுழையும் அளவிற்கு நெருங்கியவன் அவள் செவியில், "என்னை என்ன இருட்டில தனியா இருக்கற பொண்ணை தேடி வந்து ரேப் பண்ணிட்டு போற ஸ்டேடீஸ்ன்னு நினைச்சியா "..என்று கூறிக்கொண்டே அவன் அவளது தோள் பட்டையை உரசி கொண்டு தன் கையை நீட்ட அவர்களை திரும்பி பார்த்துக்கொண்டே ஒரு சில இளைஞர்கள் சென்றனர்...
அவர்கள் இருவரை கண்டதும் காதலர்கள் என என்ணியவர்கள் அவர்களுக்கு தனிமை அளிக்கும் பொருட்டு விலகி சென்று விட்டனர்...அதை கண்டதும் தான் அவளுக்கு மனம் இலேசாக அவன் ஏன் அணைத்தான் என்றே விளங்க தொடங்கியது..
"இப்போ நான் மட்டும் வரலனா ?? நான் மட்டும் உன்னை அணைச்சு இருக்கலனா உன் மானம் கப்பல் ஏறி இருக்கும்..இந்த மாதிரி உடுப்பு போட்டா மட்டும் பத்தாது கொஞ்சம் மூளையும் வேணும் .."..என்று கோப விழிகளில் கூறியவன் சற்றும் தாமதிக்காமல் அவளிடம் அவன் அணிந்து இருந்த கோட்டை கழட்டி கொடுத்து அதை அணிய சொன்னான்..
அவள் தயங்கியபடியே வாங்க அவனோ அத்தோடு நிறுத்தாமல், " இப்போ நான் மட்டும் பார்த்ததை ஊரில் உள்ளவன் பார்க்க கூடாதுன்னு சொல்லி தான் அணைச்சேன் எனக்கு வேற எந்த இன்டென்ஷனும் இல்லை"... என்று கூறி விட்டு அவளை பார்த்து, " ஆபத்துல நிக்கற பொண்ணை பார்த்ததும் பாய்ஞ்சு பொங்கிடும் அளவுக்கு நான் கேவலமான பிறவி இல்லை "...என்று ஒரு மாதிரி குரலில் கூறியவன் வேகமாக தனது டையை தளர்த்தியபடியே சட்டையின் கையை முழம் கை வரை மடக்கி விட்டு விறுவிறுவென்று சென்று விட்டான்...
செல்லும் அவனையே பார்த்து கொண்டு இருந்தவள் கண்களில் , "ச்ச ஒரு நல்லவனை போய் இப்படி தப்பா நெனைச்சிட்டோம் பாவம் அவர் உதவி தான் செய்தார் ..நான் தான் தப்பா நெனைச்சுட்டேன் "...என்று அவளது அறைக்குள் நுழைந்தது முதல் யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம் அவன் வந்து இருப்பதை பார்த்தால் அவனும் இந்த திருமணத்துக்கு வந்து இருப்பவனை போல தான் தெரிகிறது எப்படியாவது எல்லோரும் கிளம்பும் முன் அவனை சந்தித்து மன்னிப்பு கேட்கனும் என்று நெனைத்தவள் அப்படியே உறங்கி போனாள்..
ஆனால் இவள் இவ்வாறு நினைத்து கொண்டு இருக்க அங்கே அவனது அறைக்குள் சென்றவனோ கழுத்தில் அணிந்து இருந்த டையை அவிழ்த்து தூர எறிந்தவன் வேகமாக அந்த அறையில் இருந்த பிரிட்ஜில் இருந்து பீரை எடுத்து பாட்டில்சிப் அடித்து கொண்டு இருந்தான்...இவன் இவ்வாறு செய்ய வேண்டுமெனில் ஒன்று மிகவும் சந்தோசமாக இருக்க வேண்டும் இல்லை கொலைவெறியில் இருக்க வேண்டும் அப்போது தான் பாட்டில்சிப்புக்கு வேலை வரும் என்பதை நன்றாக அறிந்த விக்கி அவனை ஆராய அதில் அவன் கண்ட விடயம் அவன் மாலை அணிந்து இருந்த கோட் இல்லை மேலும் அவனது வெள்ளை சட்டையில் ஆங்காங்கே காணப்பட்ட லிப்ஸ்டிக் கறைகள் மேலும் ஒரு சில இடங்களில் அழுந்த பதிந்த உதட்டு சாயத்தை கண்டவன் வேகமாக பிருத்திவியின் அருகில் வந்து, " என்ன அந்த பொண்ணு சோலியை முடிச்சுட்டான் போலையே ..முடிஞ்சு போச்சு இன்னிக்கு ஜெயில்ல உக்கார போறது உறுதி கடவுளே கொட்டை எழுத்தில அமெரிக்கவால் வக்கீல் விக்கி இந்த சதி செயலுக்கு உடந்தைன்னு பேர் வருமே".. என்று மலை கடந்து சிந்தித்த விக்கி வேகமாக , "டேய் பிருத்வி என்ன டா செஞ்ச அந்த பொண்ணை".. என்று கேட்க தீப்பார்வையை தன் நண்பனை நோக்கி வீசியவன் , "சிகரெட் எடுத்துட்டு வாங்க மிஸ்டர் விக்னேஷ் நாராயணன் "...என்று தெளிவாக கூற
விக்கியோ, "எஸ் பாஸ் "..என்று கூறி விட்டு சென்றவன், " தண்ணீ அடிச்சாலும் இதை மட்டும் மறக்க மாட்டேங்குறான் பா "...என்று புலம்பி கொண்டே அவன் கேட்டதை எடுத்து அவன் கையில் கொடுக்க அதை வாங்கியவனோ வாயில் வைத்து, " பத்த வைக்க யார் வருவா உங்கப்பா நாராயணன் ஆஹ் ??.." என்று கேட்க
"என் அப்பாவையே இழுத்துட்டானே இனி ரொம்ப மோசமா பேசுவானே".. என்று புலம்பிய விக்கி அவன் வாயில் இருக்கும் சிகரெட்டை பற்ற வைத்து விட்டு மெல்ல நழுவ பார்க்க அதற்கும் பிருத்வி விடவில்லை, "மச்சி பீர் எடுத்துட்டு வா விக்கி.. சரக்கு அடிக்கலாம்..நாம சரக்கு அடிச்சு ரொம்ப நாள் ஆச்சு "...என்றானே பார்க்கலாம் விக்கிக்கு அவன் நின்று கொண்டு இருந்த பால்கனியில் இருந்து கீழே நாம் குதித்து விடலாமா இல்லை தனக்கு எதிரே நின்று சிகரெட் பிடித்து கொண்டு இருக்கும் இவனை தள்ளி விடலாமா என்று யோசிக்க, " என்ன டா மச்சி யோசிக்கற..போ போ அந்த வோட்காவை என் டேஸ்ட்க்கு மிக்ஸ் பண்ணிட்டு வா "..என்று அனுப்பி வைத்தான்..இவனை புரிஞ்சுக்கவே முடியலையே என்று நெனைத்தவன் தலையில் அடித்து கொண்டு சென்றான் விக்கி..
அதே நேரம் மானாலியில் கடந்த மூன்று நாட்களாக சரக்கு அடித்து மட்டை ஆகி ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் சுற்றி திரிந்தது போதாது என்பது போல பாயலின் ஆசைப்படி அந்தி சாயும் நேரம் மானாலியில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடமான மலை ஒன்று உள்ளது..அங்கே செல்ல வேண்டும் என அவள் கூற அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து ஒரு மலை கடந்தால் பாயல் கூறிய அந்த இடம் வரும்..ஒரு சிறிய ஏறி வரும் அதை கடந்தால் பாயல் சொன்ன மலை வரும் அந்த இடத்தில் இருந்தும் சிறிது கடந்தால் அந்த பகுதியின் குடியிருப்புகள் உள்ளன..இது தான் அந்த இட அமைப்பு..
அப்படி இருக்க அபியின் நண்பர்கள் அந்த பகுதிக்கு சென்றனர்.. அங்கே அமர்ந்து சரக்கு அடித்து கிட்டத்தட்ட அனைவரும் மட்டையாகும் சமயம் பாயல் இவர்கள் அமர்ந்து இருக்கும் மறு திசையில் ஓடி விளையாடும் அந்த குட்டி நாய் குட்டியை கண்டவளுக்கு அதை தூக்கி கொஞ்ச வேண்டும் என்று தோன்ற தன் விருப்பத்தை அபியிடம் தெரிவித்தாள்... அபி கிட்டத்தட்ட மட்டையாகும் சமயம் ..அவனோ குளறிய படி, " அது எங்கே போச்சுன்னு தெரியலையே பாயல் நான் உனக்கு மும்பைக்கு போனதும் வேற வாங்கி தரேன் "...என்று கூற அவளோ பிடிவாதமாக , "அதே தான் வேண்டும்"... என்று கூற அவனோ மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் வேகமாக எழுந்து ஆற்றின் அக்கறைக்கு மெல்ல நடக்க தொடங்கினான்..
கூட இருந்த அவனது நண்பர்கள் தடுக்க , "அது தான் அவ கேக்கிறால..அவளுக்காக என் உயிரையே கொடுப்பேன் அந்த நாய் குட்டியை கொடுக்க மாட்டேனா".. என்று கூறி சிரித்தபடியே செல்ல அந்த சிறு நாய் குட்டியோ அவனிடம் போக்கு காட்டியது..மெல்ல அதன் பின்னாலே செல்ல அந்த நாய் ஓட அவனும் ஓடினான்..
மானாலி ஒரு மலை பிரேதசம் வேறு..எங்கு பார்க்கினும் மலைகள்,பள்ளதாக்குகள்,சிறு ஏரிகள் தான் அதுமட்டுமின்றி இடையிடையே சிறிய சிறிய ஓடைகள் கூட கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் அதற்கு இடையே பாறைகள் வேறு இருக்க அந்த குட்டி நாய் குட்டியோ வேகமாக அந்த மலையில் ஏற தொடங்கி இருந்தது..
அவனும் பின்னாலே சென்றவன் அங்கே இருந்த ஒரு பாறை தடுக்க முன்பே மலை ஏறி வந்ததும் அவன் அடித்த சரக்கும் சேர்த்து நிலை தடுமாற அந்த மலையில் இருந்து உருண்டு கீழே செல்லும் பள்ளத்தாக்கில், " அம்மா".. என்ற அலறல் சத்தத்துடன் விழுந்தான்...
அவனது சத்தத்தை கேட்ட நண்பர்களுக்கு அடித்த போதை எல்லாம் தெளிய அவன் சத்தம் வந்த திசை நோக்கி ஓடி வர கிட்டத்தட்ட இருட்ட தொடங்கி இருந்ததால் அவர்களால் அபி எங்கே என்று கண்டிபிடிக்க முடியவில்லை...
அதுமட்டுமின்றி அபியின் நண்பர்களுக்கு பைத்தியமே பிடித்து விடும் நிலையில் எல்லோரும் பாயலை திட்டி தீர்க்க அவளோ அழ தொடங்க அவர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன் விரைவாக போலீசுக்கு தகவல் கூறினான்...ஒருவன் அருகில் இருந்த ஊரில் இருப்பவர்களை அழைக்க சென்றான்..அபிக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்று நினைக்க நினைக்க அவர்கள் ஒவ்வொருவருக்கும் திக் என்று இருந்தது..
போலீசும் மீப்பு படையினரும் விரைவாக சம்பவ இடத்திற்கு வருகை புரிய அவனது நண்பர்கள் காத்திருக்கும் சமயம் அதற்குள் அபியின் நண்பர்களில் இருந்த ஒருவன் உள்துறை அமைச்சரின் மகனும் அடங்க அவன் விரைவாக தன் தந்தையை அழைத்து விஷயத்தை கூறி, " ஏதாவது உதவி செய்ய முடியுமா".. என தந்தையிடம் கேக்க
விஷயத்தை கேட்ட அந்த அமைச்சரோ தன் மகன் இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி இருக்கிறான் என அறிந்தால் நாளை நாடு முழுவதும் விஷயம் பேசப்படும் என்பதை உணர்ந்து அவனையும் அவனது நண்பர்களையும் , "எவ்வளவு சீக்கிரம் சம்பவ இடத்தில் இருந்து கிளம்ப முடியுமோ அவ்வளவு விரைவாக கிளம்ப சொல்ல அவர்கள் மறுக்கவும் நான் உங்கள் நண்பனை பார்த்து கொள்கிறேன் அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காது "..என்று எல்லாம் கூறியவர் நேரடியாக போலீஸ் மற்றும் மீட்பு படை வீரர்களை அனுப்ப ...மனமே இல்லாமலே அபியின் நண்பர்கள் அங்கிருந்து சென்றனர்...
அதும் அந்த அமைச்சர் நான் விவரம் தெரிவித்த பின் அபியின் வீட்டில் விவரம் தெரிவித்தால் போதுமென்றும் இப்போதே அறிவிக்க வேணாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்..அதை கேட்ட நண்பர்களுக்கு பீதி உருவானது என்னவோ உண்மை என்றாலும் அதே சமயம் தன் நண்பன் என்ன ஆனானோ என்று அபியை நினைத்து வருந்தினர்..அதிலும் பாயலின் நிலைமையை கூறவே வேணாம் தன்னால் தான் அபிக்கு இப்படி ஆனது என்று அவள் உயிர் இருந்தும் மடம் போல ஆகி விட்டாள்.. தேற்றுவார் யாருமின்றி நண்பர்கள் இழுத்த விசைக்கு எல்லாம் அவர்களுடன் சென்றாள்..
கிடைத்த பிலைட்டில் அபியின் நண்பர்கள் மும்பை புறப்பட்டு சென்றனர்..இங்கே பள்ளத்தாக்கில் விழுந்தவன் பாறையின் மீது மோதி தண்ணீருக்குள் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தான்..தண்ணீரில் விழுந்ததாலும் அவன் தலையில் பட்ட அடியாலும் அவனால் மேலே எழும்பி வர இயலவில்லை கூடவே அவனுக்கு மூச்சுக்கும் சிரமம் ஆக அவன் சுயநினைவை இழந்தான்..
அமைச்சர் கூறியதும் விரைந்து வந்த மீட்பு படையினர் அந்த மலையில் தேடுதல் வேட்டை நடத்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது...விடியும் வரை தேடியவர்களுக்கு பாறைகளுக்கு இடையே ஒரு ஒரு உடல் கிடைக்க அபி கிடைத்து விட்டான் என அருகில் சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது ஏனெனில் அந்த உடலை விட்டு உயிர் பிரிந்து பல மணி நேரம் கடந்து இருந்தது...
மறுநாள் காலை ரிசார்டில் சம்யூ பிருத்வியை தேடி கண்டுபிடித்து அவனின் முன்னால் கைகட்டி அவனையே குறுகுறு என பார்த்து கொண்டு இருந்தாள்.. ஆனால் அவளுக்கு எதிரே மார்பில் கைகளை கட்டி கம்பீரமாக நிற்கும் பிருத்திவியின் முகமோ கல் போல இறுகி இருந்தது..
அவளோ அவன் கண்களை பார்த்து, " நான் தான் சாரி சொல்றேன்ல ஏன் ஏத்துக்கவே மாட்டேங்கிறீங்க"..என்க
"யார் நீ என்கிட்ட எதுக்கு பேசிட்டு இருக்க கெட் லாஸ்ட் டேமிட்..".. என்று வார்த்தைகளை வாள் போல அவன் அவள் புறம் வீச
அவளோ அவள் புறம் இருந்த தவறை உணர்ந்து வருத்தத்துடன், " என்னை மன்னிச்சுடுங்க அந்த நேரத்தில் நீங்க அப்படி செய்யவும் "..என்று அந்த சம்பவத்தை நினைத்து முகம் சிவக்க அவள் முகத்தை பார்த்து கடுப்பு ஆனவன் , "சோ வாட்?? நான் என்ன இதுக்கு முன்னாடி என்ன பொண்ணுங்களையே பார்த்தது இல்லைன்னு நெனைச்சுட்டு இருக்கியா?? இல்லை நீ மட்டும் தான் இந்த உலகத்திலேயே இருக்கிற ஒரே பொண்ணுன்னு நெனைச்சுட்டு இருக்கியா?? என் முகத்தில் முழிக்காதே.. எனக்கு உன்னை பார்க்க பிடிக்கலை.. இதுவே நம்ம கடைசி சந்திப்பாக இருக்கட்டும்".. என்று கூறி விட்டி அவள் பதிலை எதிர்பாராமல் அவன் கிளம்பி விட்டான்...
அவள் பின்னாலே வந்தும் அவன் திரும்பி பார்த்தானில்லை விறுவிறுவென்று பிருத்வி செல்ல அவன் பின்னாலே பூனை குட்டி போல ஓடிய சம்யூவை கவனித்த விக்கியோ, " அவன் தான் பந்தா பண்ணிட்டு போறானே விட்டு தொலைய வேண்டியது தானே இந்தா லூசா தானா போய் மாட்டிக்க ஓடுது பாரு"... என்று தலையில் அடித்து கொண்டு அங்கே இருந்த பெண்களை சைட் அடித்து விம்பிய அவனது மனதை ஆற்றிக்கொண்டான் விக்கி..அப்படியே அன்றைய நாளும் கழிந்து போனது..
இன்று காலை சோனுவின் திருமணம் நடந்து கொண்டு இருக்க அடர் ஊதா நிற லெங்கேஹ்ஹா அணிந்து அதற்கு ஏற்ற அணிகலன்கள் அணிந்து அந்த திருமண விழா நடக்கும் இடத்தையே ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருந்தாள் சம்யூ... அவனும் திருமணத்தில் கலந்து கொண்டு இருந்தாலும் அவள் புறம் திரும்பாமல் விழாவை கண்டு கொண்டு இருந்தான்..அவளோ அவன் ஏக்கமாக பார்த்து கொண்டு இருந்தவளுக்கு இவன் ஏன் என்னை சுத்தலில் விடறான் அது தான் நான் மன்னிப்பு கேக்கிறேனே..ஒத்துக்க வேண்டியது தானே அவனுக்கு திமிர் அதிகம் என்று அவனை பார்க்க அவனது அழகும் கம்பீரமும் அவளை கொள்ளை அடித்தது என்றே கூற வேண்டும்..பெண்கள் பின்னால் சுற்றும் ஆண்களை விட அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் ஆண்கள் தான் பெண்களால் வெகுவாக கவரப்படுவார்கள்..அது போல தான் பிருத்வி வெகுவாக சம்யூவை கவர்ந்தான் என்றே கூற வேண்டும்..அவள் மனதில் அவனின் நாயகன் எப்படி இருக்க வேண்டும் என்ற தகுதியில் பிருத்வி நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து இருந்தான்..தான் ஏன் அவனை பற்றியே நினைத்து கொண்டு இருக்கிறோம் என அவள் அறியவில்லை..
ஆனால் அவனை நினைக்கும் போது ஏனோ அவளுள் குளுமை பரவுவதை அவளால் தடுக்கவும் இயலவில்லை.. அந்நேரம் அவளுக்கு அபியின் நினைவு வர அபி வரும் முன் இவனை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்து கொள்ள ஆனால் அவளது சமதானத்தை அவன் ஏற்று கொள்வானா ????...ஆழ்கடல் என ஆர்ப்பரித்து கொண்டு இருக்கும் அவனை எவ்வாறு சாமதானம் செய்ய போகிறாளோ ???...
மாயவன் வருவான்…
