Share:
Notifications
Clear all

அத்தியாயம் 27

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

கோவா

காண்போர் கண்ணை பறிக்கும் எழில் கொஞ்சும் அழகிய இடம் ...தேன் நிலவுக்கு சுற்றுக்கு செல்லும் இளம் ஜோடிகள் கட்டாய அவர்கள் மனதில் தோன்றும் ஒரு இடமாக இருக்க பிருத்திவியின் மேலை நாட்டு காரில் சொகுசாக பயணம் இனிதே ஆரம்பித்து இருந்தது...

அபியும் பிருத்திவியும் முன் இருக்கையில் அமர்ந்து இருக்க பின் சீட்டில் சன் டாப்பை திறந்த வெட்ட வெளி அழகை ரசித்தபடியே இருவரும் மிக உல்லாசமாக சந்தோசமாக கத்தி கொண்டு வந்தனர்..

அவர்களின் சத்தத்தை கேட்டு அந்த தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் எல்லாம் சிறு மலர்ச்சியோடு அவர்களை பார்த்து கடந்து சென்றனர்..

பிருத்திவியோ , "எப்படி மேன் சாமாளிக்கிற முடியல "..என்று காதை நீவி விட்ட படி காரை லாவகமாக ஓட்ட, " ப்ரோ அதெல்லாம் ஈஸி ப்ரோ இங்கே பாருங்க "..என்று கூறி காதில் வைத்திருந்த பஞ்சை எடுத்து அபி காட்ட பிருத்திவியோ சிரித்தபடி எடு என்று கண்களை அசைக்க இருவரும் ஒரு பீர் பாட்டிலை உடைத்து ஆளுக்கு பாதி என குடித்து கொண்டே தத்தம் தம் மனைவிமார்களுடன் கோவாவிற்கு தேன் நிலவு கொண்டாட சென்று கொண்டிருக்கின்றனர்...

ஆம் கிட்டத்தட்ட அபி மற்றும் சோனாவின் திருமணம் நடந்து ஒரு மாதம் ஆகி விட்டது...

அன்றைய தினம் சோனாவும் அபியும் தங்களை மறந்து இருக்கும் சமயம் கதவு திறக்கப்பட அங்கே பிருத்வி மற்றும் சம்யூவை பார்த்து அசடு வலிந்த அபி பிருத்திவியை எதிர் கொள்ளாமல் சம்யூவை பார்த்து சிரிக்க சம்யூவோ," ஹோ ஹோ ஹா ஹா "...என்று சத்தம் செய்து அவர்கள் இருவரை கேலி செய்ய சோனா அபியின் பரந்து விரிந்த முதுகில் ஒதுங்கி கொண்டாள் அவன் தான் இவர்கள் இருவரையும் எதிர்கொள்ள நேரிட என்ன தீடிரென இவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள் என தோன்றினாலும் வாங்க என்று வரவேற்க பிருத்திவியோ, " நாங்க வரது எல்லாம் இருக்கட்டும் நீ தயாராக வழியை பார் இப்போவே சமயம் 11 ஆச்சு 1 மணி வரை ரிஜிஸ்டர் ஆபிஸ் இருக்கும் "..என்க

"அங்கே எதுக்கு??"..என்று புரியமால் அபி கேட்க

"உங்க கல்யாணத்துக்கு தான் ஹ்ம்ம் கிளம்புங்க சம்மு அவளை தயார் பண்ணு நான் இவனை தயார் செய்யறேன் "...என்று கூறிய பிருத்வி பெண்கள் இருவரையும் வெளியேற்றி கதவை அடைத்து அவன் கையில் இருந்த புத்தம் புதிய உடையை அவனுக்கு கொடுக்க அதை வாங்கியவன் பிருத்திவியை ஏறிட பிருத்வியோ அவனை பார்த்து, " நீயும் நானும் ஒரே இடத்தில் இருந்து தான் வந்து இருக்கோம் ..நீ அவங்களை ஒதுக்கினது எனக்கு தெரியும்...யாரும் இல்லாமல் தனியா இருக்கிறது எவ்ளோ பெரிய கொடுமை அப்டிங்கிறதை நான் அனுபவிச்சு இருக்கேன்..யாரும் இல்லன்னு வருத்தப்பட்டு இருக்காத நான் இருக்கேன் உனக்கு அண்ணனா எப்போதும் உன் கூட நான் இருப்பேன் "... என்று சம்யூ சோனாவிடம் கூறியதை பிருத்வி அபியிடம் கூற அபியின் உள்ளிலும் பிருத்வியுடன் இணைய வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது ஆனால் தன்னை பிருத்வி ஏற்று கொள்வானா என அபி இருக்க பிருத்திவியே வந்து பேசியது அபிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்க அவனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பிருத்திவியை அணைத்து கொண்டான்..

பிருத்வியும் பதிலுக்கு அணைத்து, " அவங்க செஞ்ச தப்புக்கு நீ என்ன டா செய்வ அதை மறந்துடு டா அதில் இருந்து வெளில வா புது வாழ்க்கையை துவங்குவோம் "...என்று பிருத்வி கூற அபியும் ஆமோதிக்கும் விதமாக தலையாட்டினான்..

அதே போல நேற்றே பெண்கள் இருவரும் இணைந்து இருக்க சோனாவை மிக அழகாக தயார் செய்தாள் சம்யூ..

ஜோடிகள் ஒவ்வொருவரும் தங்கள் இணையின் அழகை ரசித்து பெரியவர் வேலாயுதத்தின் முன்னிலையில் அபி மற்றும் சோனாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது...

பல சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாலேயே வெளியே கூறாமல் தீடிரென இந்த ஏற்பாடை செய்து இருந்தனர்...அப்படியும் பல கேமிராக்கள் இவர்களின் குடும்பத்தை போட்டோ எடுத்து தள்ளி இருந்தனர்...

பெரியவர் இளையவர்கள் இருவரையும் ஒரே வீட்டில் இருக்க சொல்ல பிருத்வி மறுத்து விட்டான்..

"எங்கேயாவது போக வர வீடு வேணாமா தாத்தா ...கொஞ்சம் தள்ளி இருந்தா காலம் பூரா இப்படியே இருக்கலாம் இவன் கூட எனக்கு காலம் பூரா இப்படியே இருக்கணும்"... என்று கூற அபியும் அதையே வழி மொழிய அந்த பிரச்சனை அடங்கியது..

ஆனால் பெண்கள் இருவரும் கேட்பதாக இல்லை, " நாங்க இப்போ தான் ஒன்னு சேர்ந்து இருக்கோம் இப்போ போய் எங்களை பிரிக்க பார்க்கறீங்களே "...என்று ஒரு சேர்ந்து கொடி பிடிக்க அப்போ தான் அபிக்கு ஒரு யோசனை தோன்றியது ,"நம்ம தாத்தா நமக்கு கொடுத்த சொத்தில் நாம ஒரு வீடு கட்டுவோம் "...

பிருத்திவியோ, " இரண்டு வீடு "...என்க இவர்கள் பேசி முடிவெடுக்கட்டும் என்று வேலாயுதம் மெல்ல உறங்க சென்றார்...

சம்யூவோ , "இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல சொத்து வேணாமா பொண்ணு மட்டும் வேணுமாம் "...என்று நொடித்தாள்..

"ஹே என்ன டி வாய் நீளுது அப்படியே இழுத்து வெச்சு"... என்று கூறி பிருத்வி நிறுத்த

"ஜிஜு நாங்க இன்னும் போகல".. என்றாள் சோனா

"நீ இன்னுமா போகல "..என்று கூறிய பிருத்வி , "டேய் அபி நீயுமா டா கதை பேசிட்டு இருக்க என்ன டா வீடு தான டா கட்டுவோம் போங்க டா முதல்ல அந்த வீட்டுல இருக்கிற போற மெம்பெர்ஸை உருவாக்குங்க டா"... என்று கூற அனைவரும் கொல்லென சிரிக்க அபியோ, " ப்ரோ நான் ட்வின்ஸ்க்கு "...என்று கூற பிருத்திவியோ , "உன் வாய் தான் டா பேசுது உன்கிட்ட ஆக்ஷன் ஒன்னும் இல்லை "..என்று கூற

"அடியே சோன்பப்டி பெருத்த அவமானம் இன்னிக்கு வா ரூமுக்கு"... என்று கூற அவளோ , "ஆமாம் வந்துட்டாலும்".. என்று முணுமுணுத்தவள் அவன் பின்னாடியே செல்ல ,

சம்யூவோ , "உங்களுக்கு விவஸ்தையே இல்லையா எல்லோர் முன்னாடியும் என் மானத்தை வாங்குறீங்க"... என்று கூறி சிணுங்க அப்படியாங்க என்று கூறியவன் அங்கே யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவளது சிணுங்கும் உதட்டை சிணுங்காமல் இருக்க அவளுக்கு உதட்டில் ட்ரைனிங் கொடுத்த பின்னே அவன் அடங்கினான்..

மேலும் விக்கிக்கு குணம் ஆகி அவன் மீண்டும் அமெரிக்கா பறந்து விட்டான்..அவனுடைய தந்தையின் நிர்பந்தத்தின் பேரில் தான் அவன் சென்றான் அங்கு சென்று அவன் புதிதாக தொழில் தொடங்கி விட்டான்...

இப்படி அவர்கள் வாழ்க்கை அழகாக ஓடிக்கொண்டு இருக்கும் போது தான் இந்த அழகிய பயணம்...அதிலும் பிருத்திவியும் , சம்யூவும் முதன் முதலாக காதலால் கரைந்து உருகிய இடமான அந்த ரீசார்ட்டில் தான் அறை புக் செய்து இருந்தான் பிருத்வி...

பிருத்வி காரணமாக தான் இங்கே வந்து இருக்கிறான் என இடத்தை கண்டதும் புரிந்து கொண்ட சம்யூ வேகமாக அவனை கட்டி கொள்ள, " என்ன டி உன் தங்கச்சியை விட்டு இப்போ தான் உனக்கு என்னை கண்ணு தெரியுது போல"... என்க

அவளோ , "நீங்க சொன்னா தானே எதுவுமே சொல்றது இல்லை".. என்க

" நீ உள்ளே வா டி சொல்லி தரேன்".. என்க அதே போல அபியும் அவனவளை தூக்கி கொண்டு அவர்களது அறைக்குள் நுழைந்தனர்..

பிருத்வி அவர்களுக்காக அவர்கள் இருவருக்கும் கள்ளத்தனமான முதல் கூடல் நடந்த அதே அறையை புக் செய்து இருந்தான்..அதை நெனைத்தவளுக்கு அந்த ரீசார்ட்டில் நுழைந்தது முதல் அவனை கண்டது முதல் எல்லா நினைவுகளும் அலைஅலையாக போட்டி போட சம்யூ கணவனை காதலோடு பார்த்தாள்..

அன்று நடந்ததை நான் பழி வெறி என்று நினைக்க அவனோ இல்லை அது காதல் பெண்ணே உன்னை என்னுடனே தக்க வைக்க நான் செய்த பிரயத்தனம் என அவன் கூறும் போது கூட அவள் மனம் அவன் கூற்றில் ஒப்பவில்லை..ஆனால் இந்த நொடி அவள் மனம் அவன் கூற்றில் ஒப்புகிறது..

ஆம் அன்று சந்தேக கண்ணோடு அவனை பார்க்கும் போது அவனது காதலும் அரவணைப்பும் விளங்கவில்லை ஆனால் இன்று அவளுக்கு அழகாக விளங்குகிறது என்று நெடு நேரமாக பால் கனியில் இருந்து தூரே தெரியும் கடலை ரசித்தபடியே கைகளை மார்புக்கு கீழே கட்டியபடி காற்றில் அவள் முடி அலைமோத சம்யூ யோசித்து கொண்டிருக்கும் போது அவளை பின்னால் வந்து அதிரடியாக அணைத்து அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளது வயிற்றை சுற்றி அவளது கைகளோடு அவனது கையையும் கோர்த்து கொண்டு, " என்ன டி ரொம்ப யோசனை போல ?? "...என்க

கோர்த்த அவனது கைகளை முறுக்க பிடித்து , "பிருத்வி நான் ரொம்ப லக்கி தெரியுமா என்னை சுத்தி ரொம்ப அன்பானவங்க இருக்காங்க...அவங்களை விட என்னை உங்க உயிரை விட அதிகமாக நேசிக்கிற நீங்க ..உங்களை மட்டும் நான் என் வாழ்க்கையில் பார்க்காமல் போய் இருந்தா என்ன ஆகி இருப்பேன் எனக்கு தெரியல இந்த ஜென்மம் எனக்கு நஷ்டம் அடைஞ்சிருக்கும் பிருத்வி .நான் எங்கே தேடினாலும் இது போல ஒரு மனுஷனை என்னால கண்டு பிடிக்க முடியாது எனக்காக என்கிட்ட வந்ததுக்கு ஓராயிரம் முத்தங்கள் பிருத்வி "...என்று உணர்வு பூர்வமாக சம்யூ பிருத்திவியின் முகத்தை பார்த்து காதலோடு கூற அதை கேட்டவன் அவனது கன்னத்தை விசமத்தோடு காட்டினான்..

"என்ன".. என்க

" ஓராயிரம் முத்தங்கள்ன்னு வாய் மூலமா சொல்றதை விட்டு செயல சொல்லிடு சம்மு "...என்க

"ஹே பிருத்வி உனக்கு எப்போவும் இதே நினைப்பு தான்"... என்று கூறி சிரிக்க

"அடிப்பாவி ஓராயிரம் ஈராயிரம் ன்னு டயலாக் பேசிட்டு ஒன்னும் தராம ஏமாத்துறியா மரியாதையா தந்திடு"... என்க

அவளோ, " சோ ஸ்வீட் பிருத்வி இந்த முகம் பார்க்க எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா ஆனால் கோபம் வந்தா மட்டும் பார்க்கணுமே டெரர் ஆஹ் இருந்து எல்லோரையும் பயப்படுத்த வேண்டியது "...என்க

"சம்யூ சில இடத்தில் சில முகமூடி அவசியம் அதை நாம விரும்பலனாலும் நாம அணிஞ்சு தான் ஆகனும் ஆனால் நீ என்னில் பாதி ஏன் என்னுடைய உயிர் நீ உன்கிட்ட நான் நடிக்கணும்னு அவசியம் இல்லை அது தான் உன்கிட்ட நான் இயல்பா இருக்கேன்"... என்க அவளோ அவன் கூறியதை கேட்டு அகம் மகிழ்ந்தவள் அவனை அணைத்து கொண்டாள்..

"போதும் கட்டி பிடிச்சு ஏமாத்துற வேலை எல்லாம் வேணாம் நீ ஆயிரம் முத்தம் மட்டும் தந்திடு"... என்க அவளோ , "பிருத்வி நான் வந்து அது "

.. என்று மழுப்ப,

" அந்த வேலை எல்லாம் ஆகாது டி "...என கூறி அவளை கையில் ஏந்தி ஒரு காலால் பால்கனி கதவை அடைத்தவன் அவளை படுக்கையில் கிடத்தி அவள் மேல் படர்ந்தான்..அவள் மீது அவனுக்கான ஆசை நாள் தோறும் கூடிக்கொண்டே வருகிறதே ஒழிய சற்றும் குறையவில்லை...அவள் தானே ஓராயிரம் முத்தங்கள் தர வெட்கப்படுகிறாள் என்னிடம் எனக்கு தேவையானதை எடுத்து கொள்ள எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்று நினைத்தவன் அவள் மேனி முழுவதும் அவனது முத்தங்களால் குளிப்பாட்டினான்..

அவளும் அவன் மீது மையல் கொண்டு அவனோடு ஒன்றி போனாள்... அவன் எப்போதும் தொடும் போதும் நாணம் என்ற பூவை சூடுபவள் இன்றும் அதை சூடி அவனை மோக கடலுக்குள் முத்தெடுக்க வைத்தாள்...

காதலோடு காமமும் போட்டி போட அங்கே ஒரு அழகிய சங்கமம் உருவானது...அதே போன்று அபியும் தன் இணையான சோனாவுடன் கலந்து இருந்தான்...

இப்படியே நாட்கள் செல்ல காதலில் முக்குளித்தவர்களுக்குஒரு வருடம் போனதே தெரியவில்லை...இதோ இன்று சம்யூவுக்கு இன்று பிரசவம் அவளோ வலியால் துடித்து கொண்டிருக்க பெண்ணவளின் சிறு துளி கண்ணீர் போதுமே எப்படிப்பட்ட கொம்பனையும் வீழ்த்த அவளோ வலியால் துடித்து கொண்டிருக்க அவனோ அவளின் வலியால் துடித்து கொண்டிருந்தான்...

"சம்மு கொஞ்சம் பொறுத்துக்கோ டி".. என்று அவன் கூறும் தெம்பில் தான் சம்யூ இருக்கிறாள்...இல்லையேல் மரணித்து இருப்பாள் போலும், " முடியல பிருத்வி ரொம்ப வலிக்குது"... என்று அவள் அழுக அவனுக்குள் பெரும் போராட்டம் ..

மருத்துவர்கள் தங்கள் வேலையை செய்ய சம்யூவை துடிக்க வைத்து பிறந்தான் பிருத்திவியின் புதல்வன்...ரத்தம் சொட்ட சொட்ட குழந்தையை மருத்துவர்கள் எடுக்க அதை கண்டவனுக்கு ஜீவன் இல்லை என்றே கூறலாம்...என்ன ஒரு புண்ணியமான நிலையது...பெண்களால் மட்டுமே ஒரு உயிரை உருவாக்க முடியும் என்ற அற்புதமான செயலை பிருத்திவியால் காண நேர்ந்தது..

அதே நேரம் அவனால் எவ்வளவு முயற்சி செய்தும் ராஜேஸ்வரியை நினைக்காமல் இருக்க முடியவில்லை..தன்னையும் இது போல தானே நொந்து பெற்றிருப்பார் என நினைத்தான்.. ஆனாலும் அவர் செய்த வஞ்சகம் மட்டும் அவன் மனதில் ஆறா வடுவாகவே இருந்தது...

அபியும் லேபர் ரூம் வாயிலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே மாசமாக இருக்கும் தன் மனைவியை பார்த்து கொண்டே சம்யூவின் கதறலை கேட்க முடியாமல் கேட்டு கொண்டிருந்தவனின் மனமும் அந்நேரம் அதையே தான் நினைத்து கொண்டிருந்தது..

இந்நேரம் எங்கு இருக்கிறாரோ என்று கூட யோசித்தான்... மேலும் அவர் செய்த தவறுக்கான தண்டனையே அது என்று நினைத்தவன் நான் ஒன்றும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றவில்லையே அவராக தானே வெளியேறினார் என அவன் மனதை அவனே தேற்றி கொண்டான்..

தன் இரு மகன்களின் தவிப்புக்கு காரணமான அவரோ தான் யார் என யாருக்கும் தெரியாத ஏன் தொழில் நுட்பமே என்னவென்று அறியாத மலைவாழ் மக்கள் வசிக்கும் ஒரு இடத்தில் தங்கி இருக்கிறார்..ஆரம்பத்தில் அவரால் இந்த வாழ்க்கைக்கு அவரை பழக்கப்படுத்தி கொள்ள முடியவில்லை என்றாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்தி கொண்டிருக்கிறார்..

இப்போது அவரின் பிரதான தொழில் அந்த மலைவாழ் மக்களுக்கு தான் படித்த படிப்பை கற்று தருவது தான்.. தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவருக்கு தொழில் செய்யாமல் இருக்க இயலாதே இதோ படிப்பு என்றால் என்னவென்றே அறிந்திடாத குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுக்கிறார்... அந்த மலை வாழ் மக்கள் ராஜேஸ்வரியை தெய்வம் போல காண்கின்றனர்...அதுவும் அவருக்கு ஒரு குற்ற உணர்ச்சியை தான் கொடுத்தது எனினும் அவருடைய ஆத்ம திருப்திகாக செய்து வருகிறார்...

அதே போல அடுத்த மூன்று மாதத்தில் அபிக்கும் சோனாவுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது...பெரியவர் வேலாயுதம் இரண்டு குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்தார்..அவர்கள் ஏற்கனவே முடிவு செய்தது போல ஒரே காம்பவுன்டில் இரண்டு அழகிய வீடுகள் கட்டப்பட்டது..

இன்று அந்த புதிய வீட்டின் கிரக பிரவேசம் மற்றும் அவர்கள் குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவும் நடைபெற்று கொண்டிருந்தது..உற்றார் உறவினர்கள் கூடி இருக்க பெரியவர் வேலாயுதம் இரு கொள்ளு பேரன்களோடு எப்போதோ தயாராகி இருக்க விழா நாயகர்கள் ,நாயகிகளோடு இன்னும் விழா நடக்கும் இடத்திற்கு எழுந்தருளவில்லை..

அது ஏன் என அனைவரும் அறிந்ததே எப்போதும் போல அவர்களின் மனைவிகளை செல்லம் கொஞ்சி வர தாமதம் ஆக இது போன்ற தருணத்தில் யார் தொல்லை செய்தாலும் பிடிக்காத அவர்களுக்கு இதோ அவர்களின் மகன்கள் கத்தியே தொல்லை கொடுக்க அவர்கள் மனமே இல்லாமல் இறங்கி வந்தனர்..

விழா இனிதே துவங்கியது பிருத்திவி சம்யூ தங்கள் மைந்தனுக்கு , "ருத்ர ராஜ் "...என்று பெயர் வைக்க அபி மற்றும் சோனா அவர்களின் குழந்தைக்கு , "ரிஷிவந்த்".. என்று பெயர் வைத்தனர்...

இரு குழந்தைகளின் முகமே கூறியது தங்கள் தந்தைமார்களை விட பல நூறு அடி தாண்டி சாதனை புரிவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை அதில் பிருத்திவியின் மகனுக்கு பிருத்திவியின் அதே வில்லத்தனம் கிடைத்து இருக்க அபியின் மகனுக்கோ அபியின் சாந்தமும் கிடைத்து இருந்தது...

மூத்த தலை முறையினர் செய்த செயலால் இன்றைய தலைமுறையினர்களான இவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இளையவர்கள் ஒரு சேர்ந்து ஒற்றுமையாக இனிமையாக ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் ..அந்த வீட்டில் எங்கும் வசந்தம் பொங்கட்டும் என்றே வசந்தம் என்ற பெயரை சூடியிருக்க இனி வரும் அவர்களது வாழ்க்கையிலும் வசந்தம் பெருகட்டும் என்று அவர்களை வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.. நன்றி!!!!

***சுபம்***



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top