அத்தியாயம் 26
மனம் விரும்புதே மாயவா
அபியின் மனம் முழுவதும் ரணத்திலே இருந்தது அவள் அவனிடம் ஒரு பதிலும் அளிக்காதது வேறு அவனுக்கு ஒரு வேளை அவளுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்றெல்லாம் யோசிக்க துவங்கி விட்டான்..கலகலப்பாக இருக்கும் அபிக்கு தனிமை வாட்ட என்ன செய்வதென்று தெரியவில்லை ..
குடி தான் நமக்கு இருக்கும் ஆறுதல் என நினைத்து குடித்து விட்டு வீட்டில் வந்து மட்டையாகி விட்டான்..பிருத்வி சோனாவை அவளுடைய வீட்டுக்கு அழைத்து வர சம்யூ அவளை கண்டதுமே இவள் தான் அவளுடைய அப்பாவின் மகள் என்பதை புரிந்து கொண்ட சம்யூ கணவனின் கோபத்துக்காக வாயை மூடிக்கொண்டு இருந்தாள்..
இல்லேயேல் அவன் வாயில் உள்ளதை மொத்தம் அவள் கேட்க வேண்டி இருக்கும் என அவளுக்கு நன்றாக தெரியும்..ஆம் பிருத்வி எப்படி காதலால் அவளை குளிப்பாட்டுகிறானோ அதே போல அவள் ஏதாவது செய்து விட்டால் அவளை கடியவும் அவன் மறக்கவில்லை..
பிருத்வியின் பின்னால் தயங்கி தயங்கி தன் வீட்டுக்குள் நுழைபவளை பார்த்து முகத்தை மென்மையாக மாற்றிய பிருத்வி, " சோனா இதுவும் உன் வீடு மாதிரி தான் தயக்கப்படமால் வா "...என்று கூறியவன், அவளை அழைத்து ஒரு இருக்கையில் அமர சொன்னான்..
"நான் உன்னோட கார்டியனோட பேரன் தான் அதுனால ரிலாக்ஸ் ஆஹ் இரு "..என்று அன்பாக கூற சோனாவோ கொஞ்சம் நிம்மதியாக தலையாட்ட சம்யூவோ பிருத்திவியை முறைத்து பார்த்து, " இவனுக்கு அன்பா எல்லாம் பேச தெரியுமா "...என்று யோசித்தாள்..
"உன் வீட்டில் யார் எல்லாம் இருக்காங்க??"... என்று பதில் தெரிந்தே அவளிடம் ஒரு கேள்வியை பிருத்வி அவள் முன் வைக்க
அவளோ , "எனக்கு யாரும் இல்லை நான் இப்போ ஒரு அனாதை ..என்னோட அம்மா இறந்துட்டாங்க "...என்று வருத்தத்துடன் கூற
அப்போ , "அப்பா".. என்று பிருத்வி அடுத்த கேள்வி கேட்க
சோனாவோ திடுக்கிட்டாள் சிறு வயது முதலே அப்பாவை பற்றி பேச கூடாது என்பது அவள் வாழ்க்கையில் எழுதப்படாத சட்டமாக இருக்க அதையே அவள் பிரித்வியிடமும் மொழிந்தாள்..
"சரி" என்றவன், " உன்னோட அப்பா யாருன்னு உனக்கு தெரியுமா ??"...என்று கேட்க
இங்கே சம்யூவுக்கு கொஞ்சம் வருத்தமாகவும் அவமானமாகவும் அந்த பெண்ணை கண்டு பாவமாகவும் இருந்தது...
அவன் மீண்டும் மீண்டும் அவள் உறவுகளை பற்றியே தோண்டி துருவவும் ஒரு கட்டத்தில் வெகுண்டவள் , "எனக்கு தான் யாரும் இல்லைன்னு சொல்றேனே இப்போ வரை நான் என்னோட பாபு ஜீ முகத்தை பார்த்தது இல்லை அதுக்கு என்னோட அம்மா சம்மதிச்சத்தும் இல்ல..அவருக்கு வேறொரு குடும்பம் இருக்கு நம்மனால எந்த பிரச்னையும் வர கூடாதுன்னு சொல்லியே அம்மா எனக்கு காட்டினது இல்ல நான் கூட கேட்டு இருக்கேன் பாபுஜீ கெட்டவரா அது தான் நம்மல பார்க்க வரலையான்னு ஆனால் என்னோட அம்மா சொல்லுவாங்க உலகத்திலே ஒரு அன்பான ஆள் இருக்க முடியும்னா அது உன்னோட பாபு ஜீ தான் "...என்று கூறி அழ ,
"எனக்கும் அவரை பார்க்கணும் அவர் கூட பேசனும்னு இருக்கும் இத்தனைக்கும் என்னோட அம்மாவை ரொம்ப காதலிச்சாராம் ஆனால் அவரோட அப்பாக்கு இதில் விருப்பம் இல்லை நான் வேற ஒரு கல்யாணம் பண்ணிட்டேன் நீயும் வேற ஒரு வாழ்க்கையை பார்ன்னு சொன்னாராம் என்னோட அம்மா தான் ஒதுக்கலையாம் வாழ்ந்தா உங்கக்கூட தான் வாழ்வேன்னு சொல்லி வாழ்ந்தாங்களாம் "...என்று கூறியவள்,
" எனக்கு துணையா அக்கா அண்ணாவோ விட்டுவிட்டு போக கூடாது என்னை இப்படி தனியா விட்டிட்டு போய்ட்டாங்க"... என்று கூறி அழுதவளை பார்க்கவே பாவமாக இருந்தது..
அவளும் இங்கே சிம்பத்தி உருவாக்க வேண்டும் என்று அழவில்லை ஆனால் காலை முதல் அபியின் வருத்தமான முகத்தை பார்த்து கொண்டே இருந்ததில் அவளுக்குள் இருந்து அவளுடைய பழைய நினைவுகள் கிளர்த்து கொண்டு எழுந்தது..
அதில் மேலும் பிருத்வி கிளறவும் அனைத்தையும் கொட்டி விட்டவள் வேகமாக கண்ணை அழுந்த துடைத்து தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் , "இப்போ எதுக்கு என்னை கூட்டிட்டு வந்து இருக்கீங்க"... என்று கேட்க
பிருத்திவியோ சம்யூவை பார்க்க சம்யூவும் அவள் கூறியதை கேட்டு வருத்தமடைந்தவள் வேகமாக சோனாவின் அருகில் சென்று, " உனக்கு யாரும் இல்லன்னு யார் உன்னோட அக்கா நான் இருக்கேன்"... என்று கூறி அணைக்க அவளோ என்ன இது புதுக்கதை என்பது போல பார்க்க பிருத்வி சோனாவிடம் அனைத்து விஷயங்களையும் கூற அதை கேட்டு அதிர்ந்த அவளிடம் அபியின் விஷயத்தையும் கூறினான்..
மேலும் , "அபியை எப்படி தெரியும்??"... என்று கேட்க
சோனா அபியை காப்பாற்றிய விஷயத்தை கூறவும் அதை கேட்ட சம்யூ, " ஓ போனில் பொண்டாட்டின்னு சொன்னது நீ தானே".. என்று கேட்கவும் கன்னம் செம்மையுற தலை குனிந்து , "ஆமாம் "..என்று கூறினாள்..
மேலும் பிருத்திவி சோனாவிடம், "அபி என்னை விட ரொம்ப நல்லவன் அவனுக்கு ஏமாத்த தெரியாது..பொய் சொல்ல தெரியாது அன்பு வைக்க மட்டுமே தெரியும் அவன் இப்போ மன உளைச்சலில் இருக்கான்னு தெரியும் இந்த நேரம் அவனுக்கான ஆறுதல் நீ மட்டும் தான்..அதுனால அவனை விட்டு எக்காரணத்தை கொண்டும் நீ விலகிடாத"... என்று அறிவுரை கூற அதை கேட்டு அழகாக வெட்கப்பட்டு சிரித்தவளிடம் அதி முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டாள் சம்யூ, " உனக்கு தமிழ் தெரியுமா ??"...என்க
"கொஞ்சம் கொஞ்சம் தெரியும் தீதி பெரிசா தெரியாது".. என்று கூற,
அவளோ , "கவலையை விடு அதெல்லாம் என்னோட அபி உனக்கு சொல்லி கொடுப்பான் "...என்று சம்யூ கூற பிருத்வி அவளது வார்த்தையை மனதில் குறித்து வைத்து கொண்டான்..
"ஆமாம் இப்போ அபி எங்கே??"... என்க
பிருத்திவியோ கடுப்பாக , "அவன் எங்கேயாவது சோக கீதம் பாடிட்டு இருப்பான்".. என்க
அதை கேட்டு இருவரும் ஒரே சேர சிரித்தனர்..
இரவு தங்களது அறைக்குள் வந்தவளை முரட்டுதனமாக இழுத்து அணைத்த பிருத்வி , "உனக்கு நான் மட்டும் தான் சொந்தம் உன்னோடது அப்படினா அது நான் மட்டும் தான் அது நமக்கு பிறக்க போற குழந்தை கூட கிடையாது "...என்று அதிரடியாக கூற அவனுடைய பொசசிவ்வை உணர்ந்தவள் சிரித்தபடியே அவனுடைய கண்களை பார்த்து அவன் காலை மிதித்து மெல்ல அவன் உயரத்துக்கு எம்பி அவன் இதழில் முத்தம் வைத்து , "நானும் நீங்களும் வேற வேறயா பிருத்வி??".. என்க அது போதாதா அவர்களுடைய அன்றைய இரவை கொண்டாட,
விடியல் யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிந்தது ஆனால் அபிக்கு மட்டும் அழகானதுதானா என்று கேள்வி கேட்டால் அவனுக்கே தெரியாத விடயம் காலை பத்து மணி ஆகியும் அவனுடைய விடியல் மட்டும் விடியாமலே இருக்க அவன் வருவான் என்று வேகமாக தயாராகி அலுவலகம் வந்த சோனாவுக்கோ அவன் வராதது தெரியவர அந்த சமயம் பார்த்து பிருத்வி அவளை அழைத்து இருந்தான்..
"என்ன அவன் இருக்கானா??"... என்க
"இல்ல இன்னும் வரல".. என்று சோகமாக சோனா சொல்ல
"அப்போ அவன் வீட்டுல தான் இருப்பான் நீ அவன் வீட்டுக்கு போக அரைமணி நேரம் ஆகும் போ நான் ஒரு மணி நேரம் கழிச்சு வரேன்".. என்று கூற அவளோ சரியென்று தலையாட்ட வேகமாக அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்..
நேற்றில் இருந்து தன்னிடம் பாராமுகமாக இருக்கும் கணவனிடம் வலிய சென்று பேசினாலும் முகம் கொடுத்து பேசாதவன் மீது இலேசான கோபம் கொண்டிருந்தவளுக்கு இரவு மட்டும் அவளை காதலால் அவன் குளிப்பாட்ட மறக்காதது ஏனோ என தெரியவில்லை ..
அப்படி காதலால் இருந்தவன் காலை எழுந்தது முதல் வாயை மூடி கொண்டு இருந்தவனிடம் அவள் என்ன கேட்டாலும் முறைத்தபடி பதில் அளிக்க சம்யூவுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது..அதிலும் இப்போது சோனாவிடம் அவன் பதில் அளித்தது வேறு அவளுக்கு அவன் அதிகாரமாக கூறியது போல தோன்ற,
"அமைதியா மென்மையா பேசவே தெரியாதா எல்லாமே அதிகாரம் தானா கொஞ்சம் பொறுமையா பேசினா தான் என்ன?? ஒன்னு ஓவரா பேசி கொல்றது இல்லாட்டி பேசாமலே உயிரை வாங்க வேண்டியது"... என்று கூற
"ஏன் நான் நல்லா பேசிட்டு தானே இருக்கேன்".. என்க
"எங்கே பேசினீங்க என்கிட்ட நீங்க எதுவுமே சொல்றது இல்ல என்னை மட்டும் சொல்றது என்கிட்ட சொல்லாமல் எங்கேயும் போக கூடாது யாரையும் பார்க்க கூடாதுன்னு ஆனால் நீங்க செய்யறது மட்டும் சரியா??"...
"அப்படி என்ன செஞ்சிட்டேன்??"..என்று பிருத்வி கேட்க
"காலையில் என்னையும் தாத்தாவையும் தயாராக சொன்னீங்க எங்கே போறோம்ன்னு கேட்டா சொல்ல மாட்டேன்கிறீங்க "...என்று அவள் கடுப்பில் கூற அவனோ உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே பதில் அளிக்காமல் வண்டியை ஓட்ட அவளோ கடுப்பானவள் , "தாத்தா எல்லாம் உங்க தப்பு தான், நீங்களும் இப்படி தான் வளர்ந்து இருக்கீங்க எதுவும் பேச மாட்டேன்கிறீங்க உங்க பேர பிள்ளையும் இப்படி தான் வளர்த்தி வெச்சு இருக்கீங்க பாருங்க எப்படி முரடான வளர்த்து வெச்சு இருக்கீங்கன்னு பாருங்க"... என்று முன் சீட்டில் அமர்ந்து இருந்தவரிடம் பேசுவதற்காக காரில் பின் சீட்டில் அமர்ந்து இருந்தவள் கொஞ்சம் முன்புறம் வந்து பேச அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை மணத்தோடு அவளது மணமும் கலக்க அதிலும் அவள் அவனுக்கும் தாத்தாவுக்கும் இடைப்பட்ட இடத்தில் வந்து அமர்ந்து தாத்தாவிடம் வாயாடவும் அவளின் காதோரமாக ஒதுக்கி விட்டு இருந்த முடிகளில் ஒரு சிலது அவனது நெற்றியை தொட்டு செல்ல அதுவரை அவன் இழுத்து பிடித்திருந்த மோக வலைகள் அறுபட துவங்கி இருந்தது..
அதிலும் தாத்தாவின் புறம் இலேசாக திரும்பிய படி அமர்ந்து இருக்க அவனது ஒரு கை ஸ்டியரிங்கில் இருக்க மற்றொரு கை சும்மா தானே இருக்கிறது சீண்டி தான் பார்ப்போமே என நினைத்தான்..தாத்தா மட்டும் காரில் இல்லையென்றால் அவனை பற்றி குறை சொல்லும் அவளது வாயை வேறு வழியில் அடைத்து இருப்பான் ஆனால் இப்போது அது முடியாதே...
அவள் அணிந்து இருந்த சாரியில் இவள் தாத்தாவின் புறம் திரும்பி இருக்கும் போது இலேசாக விலகி இருந்த அவளது சாரியில் தெரிந்த அவளின் எழில் மேனி அவன் கண்களை உறுத்த மெல்ல அவனது விரல்கள் அவளின் பின்னழகில் இருந்து மெல்ல மெல்ல அவனது கை அவளது சேலைக்கும் ரவிக்கைக்கும் இடைப்பட்ட இடத்தில் செல்ல அதுவரை உணர்வில்லாமல் வாய் அடித்தவள் பின் வாயே திறக்க வில்லை அவளால் அவனிடமிருந்து விடுபடவும் முடியவில்லை..ஏனெனில் அவனுடைய ஒரு விரல் அவளது அழகிய வேலைப்பாடு செய்யப்பட்ட ரவிக்கையினுள் இருக்க அவள் பலமாக இழுத்தால் அந்த ரவிக்கை பிய்ந்து போக வாய்ப்பு இருக்கிறது மெதுவாக அவளால் இழுக்கவே முடியாது என்ற நிலையில் அவனது விரல் அழகாக கோலம் இட்டு கொண்டு இருக்க சம்யூ மூச்சடைத்து போனாள்..
இறுதியில் தாத்தாவோ, " அவன் அப்படியே வளர்ந்துட்டான் மா இனி நீ பொறுப்பா அவனை பார்த்துகோ மா".. என்க அவளுக்கு எங்கே அதெல்லாம் காதில் விழுந்தது அவளுக்கு அவனது விரல் அவளது முதுகில் நிமிண்டி கொண்டு இருப்பது அல்லவா ஓடி கொண்டிருந்தது கூடவே அவளது முகமும் அவனது விரலுக்கு ஏற்ப சிவந்து கொண்டே செல்ல சுகமாக அவஸ்தையில் நெளிந்தாள் சம்யூ..
இங்கே இப்படி இருக்க அங்கே அவனது வீட்டு வாசலில் இருக்கும் காவலாளியிடம் பேசி உள்ளே சென்றவளுக்கு வீட்டுக்குள் செல்ல ஓரிரு வேலைக்காரர்களை தவிர வேறு யாருமில்லை..
அவனது அறை எங்கே இருக்கிறது என்று கேட்க அவர்களும் வழி சொன்னாலும் கேள்வியாக பார்த்து கொண்டே தங்களது வேலைகளில் ஈடுபட அதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் சோனா அவனது அறைக்கு சென்றாள்..
கதவு இலேசாக அடைத்து வைக்கப்பட்டு இருக்க அவள் உள்ளே செல்லும் போது அவன் அங்கு இல்லை குளிக்க சென்று இருப்பான் போலும் பாத்ரூமில் சத்தம் கேட்க அவன் வரட்டும் என்று அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தாள்..
நேற்று இரவு அவன் குடித்து இருக்கிறான் என்பதற்கான எல்லாம் விடயமும் அதில் தென்பட எதுக்கு இப்படி உடம்பை கெடுத்துகிறாங்க என்ற கவலையில் அமர்ந்து இருக்க அவளது கவலைக்கு சொந்தாக்காரனோ கதவை திறக்கவும் அங்கே அவளை கண்டவன் அதிர்ந்தான்..
அவளும் அவனது தோற்றத்தை கண்டு அதிர்ந்து தான் போய் இருந்தாள் ஏனெனில் இடுப்பில் துண்டோடு அவனது முறுக்கேறிய உடலை அவளுக்கு விருந்து வைத்தபடி அவன் வரவும் அதை கண்டவள் அதிர்ந்தாள்..
அவன் அதிர்ந்தது ஒரு நொடியே பின் அவள் நினைப்பில் இருப்பதால் அவளாக இருக்கும் என நெனைத்தவன் ஒன்றும் பேசாமல் கண்ணாடி முன் சென்று தலையை வாரியவன் பின் அவனது இடுப்பில் உள்ள துண்டை அவிழ்க்க போக, " ஐயோ".. என்று சத்தமாக கூறி கண்களை மூடியவள் வேகமாக திரும்பி நிற்க அவனோ வேகமாக துண்டை இறுக்கமாக இழுத்து கட்டியவன், " நீ எங்கே வந்த?? "...என்று பதட்டத்தோடு கேட்க
"அது நான் உங்களை பார்க்க வந்தேன்"... என்று கண்களை மூடிக்கொண்டே கூற
அப்போ வந்தது அவள் தானா என்று தன் தலையில் தட்டியவன் , "எதுவும் பார்க்கலயே".. என்று அதிமுக்கியமான கேள்வியை கேட்க,
அவளோ , "இல்லை".. என்று கூறினாள்..
"சரி அப்படியே இரு "..என்று கூறியவன் வேகமாக ஒரு ஷார்ட்ஸை எடுத்து அணிந்தவன் தோளில் துண்டை இட்டு, " ஹ்ம்ம் இப்போ திரும்பு "...என்று கூற
திரும்பியவளை பார்த்து , "எதுக்கு வந்த ??"...என்று கேட்க
அவளோ அவனை பார்த்து, " எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சுடுச்சு"... என்க
அவனோ ,"அதுக்கு என்ன இப்போ அதை சொல்ல தான் வந்தியா ??"...என்று சூடாக கேட்க
"இல்ல நேத்து நீங்க ஒன்னு என்கிட்ட ஒன்னு கேட்டு இருந்தீங்க"... என்று தலை கவிழ்ந்து கூற
அவனோ , "அதுக்கு நீ நேத்து பதில் சொல்லாததா எனக்கு நியாபகம்"... என்று கத்தரித்து கூற
"அப்போ தானே பிருத்வி ஜிஜு வந்தார் அவர் கூட போயிட்டேன்ல".. என்று அவள் பக்கத்தை கூற அவனோ, " ஜிஜு வா ஓ எல்லோரும் ஒரே குடும்பம்ல அதான் சீக்கிரம் ஒன்னு கூடிட்டாங்க நான் யாரோ தான எனக்கு தானே யாரும் இல்லை "..என்று நெனைத்தவன்
"அதுக்கு என்ன இப்போ உன் ஜிஜு கூடவே இருக்க வேண்டியது தானே இங்கே எதுக்கு டி வந்த "...என்று கோபத்துடன் அவள் அருகே வந்து நெருங்கி கையை பிடித்து கேட்க
அவளோ, " உங்க கூட வாழ்க்கை முழுவதும் இருக்கலாம்ன்னு வந்தேன் என்று பதில் கூறவும் அவனுக்கு ஏறிய கோபம் அடுத்த நொடியில் இறங்கி இருந்தது..
"என்ன சொன்ன புரியல என் கண்ணை பார்த்து சொல்லு "...என்று அவள் அருகே நெருங்கி நின்று கேட்க அவனது அருகாமை அவளுக்கு தவிப்பை அளித்தாலும் அவனது மனவேதனையை புரிந்து தன்னை கட்டுப்படுத்தியவள் , "எனக்கு உங்களை பிடிச்சு இருக்கு இப்போ இல்ல நீங்க அடிப்பட்டு இருக்கும் ஒரு கையை தூக்கி என் விரலை பிடிச்சுக்கிட்டிங்க அந்த சமயம் நான் என்னோட அம்மாவை இழந்த சமயம் எனக்குன்னு யாருமில்லைன்னு நான் தவிச்ச சமயம் அப்போ உங்களோட பிடிப்பு எனக்குள்ளே ஏதோ ஒரு உணர்வுகளை தந்துச்சு அந்த நொடி நான் தைரியமாக பாதுகாப்பா உணர்ந்தேன்...உங்களை ஹாஸ்பிட்டல சேர்த்து இரண்டு நாள் நான் தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும் தீடிரெனு ஒரு நாள் உங்களை உங்க வீட்டு ஆளுங்க கூட்டிட்டு போயிட்டாங்க..நானும் உங்களுக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்... எப்போவாவது உங்க நியாபகம் வரும் அந்த நேரம் நீங்க நல்லா இருக்கனும்னு தோணும்..
உங்களை நான் சந்திச்சப்போ உங்களுக்கு என்னை தெரியுமான்னு எனக்கு ஒரு சந்தேகம் ஆனால் தெரிஞ்சும் நீங்க வாயே திறக்கல நேத்து தான் சொல்றீங்க அதை நினைச்சு நான் ஷாக்கா நின்னா அதுக்குள்ள ஜிஜு மூலமா அடுத்த சாக் இப்போ சொல்லுங்க என் மேல என்ன கோபம்ன்னு எனக்கும் யாருமில்லை உங்களுக்கும் யாருமில்லை என்னை உங்களில் பாதியா ஏத்துக்கறீங்களா ??"...என்று கேட்க
அவளுக்குள்ளும் தான் தவித்த தவிப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவனுக்கு அவனுக்கே அவனுக்கு மட்டுமேயான ஓர் உறவு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அவனுக்கு தேவையான ஒன்று ஓர் உறவு மட்டுமே அதை தான் அவன் எதிர்பார்த்தான் அவன் வருத்தப்படும் நேரம் தோள் சாயவும் மடி சாய்ந்து அழ ஓர் உறவுக்காக ஏங்கினான் அது கிடைத்ததில் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி
அவள் அவளுடைய காதலை கூறிய அடுத்த நொடி அவனோ , "அடியே என் சோன் பப்டி உன்னோட ஒரு சிறு கொலுசொலியை வெச்சு உன் மாமன் உன்னை கண்டு பிடிச்சு இருக்கேன் அந்த ஒலி தான் என்னோட மறு ஜென்மத்துக்கு காரணம்னு எனக்கு தெரியும்..இப்போவும் நீ தான் டி வேணும் நீ மட்டும் தான் எனக்கு வேணும்"... என்று கூறி அவளை நெருங்கி அவள் முகத்தை எந்தினான்..
அவனுக்கு அவனது மகிழ்ச்சியை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என தோன்ற அவள் முகத்துக்கு நேராக குனிய அவளோ, " ஹே இதெல்லாம் கல்யாணத்துக்கு பின்னாடி தான் "...என்று விலக
"ஹே ப்ளீஸ் டி சோனு ப்ளீஸ் சத்தியமா அடுத்த கிஸ் கல்யாணத்துக்கு பின்னாடி தான் டி "...என்க
"சரி".. என்று கன்னம் சிவக்க அபியின் மனதுக்குள்ளே பேசாமல் இப்போவே தாலி கட்டிடலாமா என்று கூட அவன் யோசித்தவன் முதலில் இதை கவனிப்போம் பின் பார்த்து கொள்ளலாம் என்று கூறியவன் அவள் முகத்தை கையில் ஏந்தி பூப்போன்ற அவளது கன்னத்தில் தன் இதழ்களை பதித்தான்..
முதல் முத்தம் எப்போதும் அனைத்து காதலர்களுக்கும் சிறப்பு அதில் இவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன முதல் முத்தத்தோடு தீர கூடியதா அபியின் தாகம் அப்படியே அவளின் சிவந்த அதரத்தை வருடியபடியே அவளின் இதழுக்கு தாவி அவளின் சிவந்த இதழை தனதாக்கி கொள்ள அவனுடைய சோனு அவனது வேகத்தில் தாள இயலாமல் உணர்ச்சி பிளம்பில் தடுமாறியவள் அவனுடைய தலையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க அந்த நேரம் கதவு பட்டென திறக்கப்பட்டது..
இவர்கள் இரு
வரும் சட்டென விலக அங்கே மார்பில் கையை கட்டியபடி பிருத்திவியும் கேலி சிரிப்போடு சம்யூவும் நின்று கொண்டிருந்தனர்..
மாயவன் வருவான்...
