Share:
Notifications
Clear all

அத்தியாயம் 25

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

"என்ன மா சொல்றிங்க ??"...என்று அபி அதிர்ந்து கேட்க ராஜேஸ்வரி நடந்த அனைத்தையும் அபியிடம் கூறினார்...

ஒன்று விடாமல் தன் மகனிடம் கொட்டி தீர்த்தார் ஒரு மகன் நாக்கை பிடுங்கி எறிவது போல கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி அப்போது தன் தவறும் இவ்வளவு காலம் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறேன் என அவருக்கு நினைக்கும் போதே நெஞ்சை அறுப்பது போல இருக்க அதிலும் தன்னுடைய அகங்காரத்தால் எவ்வளவு அழகான வாழ்க்கையை தான் இழந்தேன் என நினைத்து வருந்தியவருக்கு நேற்று வரை துளியும் ஈஸ்வர் மீது சந்தேகம் வராதது அவர் செய்த துர்பாக்கியம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல ?? அழுது கொண்டே அவர் நடந்ததை கூறி முடிக்க அதை கேட்ட அபி சிலையென இறுகி போய் இருந்தான்...

அவனுக்கு துளியும் அவனது தந்தை மரணம் அடைந்ததில் வருத்தம் ஏற்படவில்லை..தன் தாத்தா ஏன் இவர்கள் இருவரை நம்பாதே என்று கூறினார் என்பதை ராஜேஸ்வரி வாயாலே கேட்ட பின் அவரை காரி உமிழவே தோன்றியது..

அபியிடமாவது ஆறுதல் கிடைக்கும் என நினைக்க அவனோ, " சீ நீ எல்லாம் ஒரு பொம்பளை வெளியே சொல்லிடாத.. நான் உன் வயித்துல பொறந்தேன்னு நினைக்கும் போது அருவருப்பா இருக்கு சீ நீ இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்..நீ உன் புருஷன் செஞ்ச பாவத்துக்கு காலம் பூரா நீ வருத்தப்பட்டு அழுதாலும் தீராது ..பிருத்வியா இருக்கிறதுனால உன்னை சும்மா விட்டான்..நானா இருந்தா உன்னையும் சேர்த்து கொன்னு இருப்பேன்..ச்ச உன்னால எனக்கும் அசிங்கம் ..இதுல அழுது நடிக்கிறியா??

எந்த புள்ள வேணாம்னு நீ சொன்னியோ..எத்தனை பேரை நீ வருத்த பட வெச்சு இருப்ப ..அதுக்கு எல்லாம் தண்டனையா இப்போ சொல்றேன் கேட்டுக்கோ நீ எனக்கு வேணாம்..இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..அந்த ஆளோட நீயும் செத்துட்டன்னு நெனைச்சுக்கறேன் பெத்த பாவத்துக்கு இரண்டு பேருக்கும் சேர்த்தி திவசம் பண்ணறேன்.. "....என கூறியவன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்..

அவர் செய்தது தவறு தான் அதை அவரே ஒத்துக்கொண்டு அபியிடம் ஆறுதல் தேட போக அபியோ காலால் எட்டி உதைக்காமல் வார்த்தையால் எட்டி உதைத்து விட்டான்..அதை கேட்டவருக்கு நெஞ்சை அறுப்பது போல இருக்க மேலும் நொந்தவர் மீண்டும் அழ அவரோ அவனிடம் எந்த முகத்தை வைத்து அபியை அழைப்பார் அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தார்...அவர் ஒரு மகனை அவர் தவிர்க்க மற்றொரு மகன் அவரை தவிர்த்து விட்டான்..தெய்வம் என்ற ஒரு சக்தி இருந்தால் தவறுகள் செய்யும் போது தண்டனை உறுதியாக கிடைக்கும்..அது அவருக்கு கிடைத்து விட்டது ...அவருடைய கடைசி காலம் யாருமில்லா தனிமையே சரணம் என்பதை அவர் அந்த நேரம் உணர்ந்து கொண்டார்..செய்த பாவத்தை உணர்ந்தவருக்கு குற்ற உணர்ச்சி மேலிட குற்ற உணர்வில் திளைத்தார்..அவருக்கு காலம் முழுவதும் இதில் ஊற வேண்டும் என்பது அவருக்கென்று விதிக்கப்பட்ட தண்டனை...அதை அவர் எடுத்து கொள்ள தான் வேண்டும்..தனிமையில் அவருடைய இறுதி வாழ்க்கையை அவர் வாழ்ந்து தான் ஆக வேண்டும்...

அபிக்கு அவனது பிறப்பே அசிங்கமாக இருந்தது..இது போன்றவர்கள் உதிரத்தில் பிறந்ததே அவனுக்கு கேவலமான செயலாக தோன்றியது ...காரை எடுத்தவன் மனம் உலைகலன் போல கொதிக்க விஷயத்தை அறிந்து கோவப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என அறியாமல் நிலை இல்லாமல் ஓட்டி கொண்டிருந்தான் இறுதியில் ஒரு முடிவாக கார் நேராக பிருத்திவியின் வீட்டுக்கு சென்றது..

அவனுள் பெரும் தயக்கம் கிட்டத்தட்ட குற்ற உணர்ச்சியில் தள்ளாடினான் என்றே கூற வேண்டும்..வீட்டுக்குள் செல்ல நூறாவது முறையாக யோசித்து போக முடியாமல் ஏதோ தடுக்க காரில் ஸ்டியரிங்கில் தலை வைத்து படுக்க அவன் கண்களில் கண்ணீர் துளி அவனாலே தாங்கி கொள்ள இயலவில்லையே என அவன் மனம் குமுற அந்த நேரம் அவனது தலை ஹார்னரில் பட்டு சத்தம் கேட்கவும் வேகமாக தன்னை நிலைப்படுத்தியவன் காரை விட்டு இறங்கவும் அதற்குள் யார் வந்து உள்ளது என பார்க்க பிருத்வி மற்றும் சம்யூ ஓடி வர பின்னாலே தாத்தா மெதுவாக நடந்து வந்தார்..

அங்கே அபியை அந்த நேரம் எதிர்பார்க்கவில்லை என அனைவரின் முகமும் கூற அவனது விழிகளே கூறியது அவன் கலங்கி இருப்பது...பிருத்திவியை தவிர அனைவரும் அபியை பார்த்து இளகி இருக்க அபியை கண்ட சம்யூவுக்கு தாங்க இயலாமல் ஓடி சென்று அபியை அணைக்க அவனுக்கும் அந்த நேரம் சம்யூ தேவைப்பட்டாள்..

சம்யூவுக்கு அவ்வளவு நேரம் பிருத்வி கூறிய அறிவுரைகள் அபியை கண்ட நொடி வேலை செய்யாமல் போக இருவரும் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அணைத்து தங்களது மனபாரங்களை அழுது தீர்க்க இருவரின் செய்கையை கண்டு பிருத்வியின் மனம் இலேசாக அவர்கள் புறம் சாய்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல் , "சம்மு "...என்று உரக்க அழைக்க அந்த அழைப்பில் இருவரும் வேகமாக தங்கள் அழுகையை நிறுத்தி விட்டு விலகி நின்றனர்..

பிருத்வி ஒரு வித இறுக்கத்துடனே அவர்கள் இருவரையும் பார்த்து, " வீட்டுக்கு வந்தவங்களை இப்படியே நிக்க வெச்சு தான் இருப்பியா என்ன செய்யறதுனாலும் உள்ளே வந்து செய்ங்க"... என்று கூற அதை கேட்ட அவர்களும் உள்ளே சென்றனர்...

கிட்டத்தட்ட அரைமணி நேர அமைதிக்கு பின் மெதுவாக வாயை திறந்தான் அபி..

அவன் பேசட்டும் என்றே பிருத்திவியும் அமைதியாக இருந்தான்..ஏனெனில் அவனுக்கு தெரிய வேண்டும் அபியின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்று தெரியவேண்டும் என அவன் அவர்களை விட இறுக்கமான முகத்தை வைத்து அமர்ந்து இருக்க அபி அவனை பார்த்து கரகரத்த குரலில், " உங்க கிட்ட என்ன பேசறது தெரியல ஏன்னா தப்பு எல்லாம் எங்கே இருந்து நடந்து இருக்குன்னு எனக்கு இப்போதான் தெரியுது...

இவ்ளோ நாள் இப்படிப்பட்ட மனுசங்களோட வாழ்ந்து இருக்கோம்னு நினைக்கும் போதே அசிங்கமா இருக்கு அதிலயும் அவங்க வயித்துல பொறந்ததே அருவருப்பா இருக்கு எனக்கே என்னை தண்டிச்சுக்கனும் போல இருக்கு"... என்று அபி குலுங்க

"அப்போ நானும் தானே தண்டனையை அனுபவிக்கனும் "... என்று பிருத்வி கூற அதை கேட்ட அனைவரும் பிருத்திவியை கேள்வியாக பார்க்கவும் ,

"அவங்க வயித்துல பொறந்ததுக்காக உன்னை அழிச்சிகனும்னா நானும் தானே அழிச்சிக்கணும்ன்னு சொன்னேன் "..என்றவன் ,

"அபி நான் அப்படி கூப்பிடறதுல உனக்கு எந்த கஷ்டமும் இருக்காதுன்னு நெனைக்கிறேன்...இதோ பாரு அபி அவங்க தப்பு செஞ்சாங்க இப்போ தண்டனை அனுபவிக்கிறாங்க அவ்வளவு தான் நீங்க இரண்டு பேரும் இப்போ உண்மை தெரிஞ்சதுனால வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க எனக்கு உங்க வருத்தமும் புரியது ஒரே நேரத்தில் எல்லா விஷயங்களும் சேர்ந்து நம்மை தாக்கும் போது நாம உடைஞ்சு போகிறது சகஜம் தான்..ஆனால் அதில் இருந்து வெளில வரவும் நமக்கு தெரியணும்..

அபி உனக்கு தெரிஞ்சே ஆக வேண்டிய விஷயம் ஈஸ்வரை நான் தான் முடிச்சி கட்டினேன்.. சொல்லி இருப்பாங்கன்னு தெரியும் அவர் உனக்கு அப்பா நான் தான் கொன்னேன்னு நீ எங்கே வேணும் என்றாலும் சொல்லிக்கலாம் "...என்று கூற

அவனோ, " தயவு செஞ்சு அப்பா ன்னு சொல்லாதீங்க உங்க இடத்தில் நான் இருந்தாலும் அதை தான் செஞ்சு இருப்பேன் "...என்று கூறியவனுக்கு மேலும் அவருக்கு தண்டனை அதிகமாக கிடைத்து இருக்க வேண்டும் என்றே இருந்தது..

ஒரே நாளில் சொந்த அப்பா அம்மாவை ஒதுக்க முடியுமா இப்படி ஒருவனால் மாற முடியுமா என்ற கேள்வி எழுமாயின் மாற்றங்கள் ஒன்றே மாறாதது மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக மாறி கொள்வர் அதன் படி தவறு செய்தவன் தண்டனை பெற்றே ஆக வேண்டும் அது இதுபோல மரணம் அவருக்கு நிகழ்ந்து விட்டது இல்லையேல் அவர் மட்டும் அபியின் முன்னிலையில் இருப்பாராயின் அபியே பிருத்வி செய்த காரியத்தை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ..

சிறிது நேரம் நடந்த விஷயங்களை பற்றியும் ராம மூர்த்தி கூறிய விஷயங்களை எல்லாம் சம்யூவிடம் கூறியது போல அவனிடமும் விவரித்தவனிடம் அவனது தந்தையை எவ்வாறு கொன்றேன் என்பதை மட்டும் மறைத்து விட்டான்..

பெரிதாக பிருத்திவியும் அபியும் கட்டி பிடித்து உருள வில்லை என்றாலும் விரைவிலேயே அதற்கான சாத்திய கூறுகள் இல்லாமலும் இல்லை..கூடவே சம்யூவின் அப்பா விஷயத்தை கூறும் போது, " அவங்களை தேட வேணாமா??"... என்று அபி கேட்க சம்யூவோ பெரிதாக விருப்பப்படவில்லை என்றாலும், " ஹ்ம்ம் தேடனும்"... என்று மட்டும் கூற சிறிது நேரம் உரையாடி விட்டு வீட்டுக்கு சென்றான் அபி...

ஒரு வாரத்திற்கு பிறகு.....

ஈஸ்வர் மரணம் அடைந்த விஷயத்தை கேட்டு மும்பை முழுவதும் , "என்ன நல்ல மனுஷனை எவன் தான் அடிச்சு கொன்றானோ தெரியல" ....என்று ஊரார் பேசி கொண்டனர்..

ஆம் கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கிய அவரது அழுகிய உடலில் பிரேத பரிசோதனை நிபுணர்களால் கூட கைரேகையை கண்டு பிடிக்க முடியவில்லை மேலும் அவரது பாதி உடல் தான் கிடைத்து இருந்தது..மீதி மீனுக்கு இரையாகி இருந்ததால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இருப்பார் போல தொழில் முறை கொலையாக கூட இருக்கலாம் விரைவில் கொலையாளியை கண்டு பிடிப்போம் என கேஸை முடிக்க பார்த்தனர்..

ஏனெனில் பெரிய இடத்து விவாகரத்தை பெரிதாக தோண்டி துருவ அவர்களும் விருப்படவில்லை என்ற காரணத்தால் கேஸை இழுத்து மூடி விட்டனர்..மேலும் குடும்பத்தாரும் பெரிதாக அதில் விருப்பத்தை காட்டாத போது அவர்களும் தோண்டி துருவவில்லை..

உள்ளே கயவன் ஆனாலும் வெளியே நற்பெயரை பெற்று இருப்பதால் அவர் பெயரில் துக்கம் அனுசரிக்கப்பட சக நிறுவனம் என்ற பெயரில் பிருத்திவியும் பெரிய கும்பிடை போட்டு விட்டு வந்தான்..அந்த துக்க அனுசரிப்பில் கலந்து கொண்ட ராஜேஸ்வரியை அதன் பின்னர் எங்கேயும் காணவில்லை எங்கே சென்றார் என தெரியவில்லை..

அவர் சென்ற விஷயம் அறிந்ததும் அவரது அறையில் அபிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதி இருந்தார்..

"என்னுடைய தவறுகள் எனக்கு புரிப்பட்டது என்னை எனக்கே பல சமயங்களில் பிடிக்காமல் போகிறது..என்னால் உன்னுடைய வாழ்க்கை பாழாக நான் விருப்பப்பட வில்லை உனக்கும் நான் இருப்பதில் இருக்கும் விருப்பமின்மையை நான் அறிவேன் என்னை தேட வேண்டாம்..."...என்று எழுதி வைத்து விட்டு அவர் வெளியேறி இருக்க பெரிதாக அந்த கடிதத்தை கண்டோ அவர் சென்று விட்டார் என்பதை எண்ணியோ அபி வருத்தம் எல்லாம் கொள்ளவில்லை...போகட்டும் என்றே விட்டுவிட்டான்... சம்யூ மூலம் இந்த விஷயம் பிருத்திவியின் காதுகளையும் சென்றடைந்தது அது அவருடைய விருப்பம் என்று அவனும் விட்டுவிட்டான்...

இதற்கு இடையில் சோனாலிக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவள் இந்த கூட்டத்துக்கு வராமல் இருக்க பிருத்வி அவளை மனாலி முழுவதும் தேட சொல்லி இருந்தான்..

கிட்டத்தட்ட ஈஸ்வர் இறந்த பத்து நாட்களுக்கு பிறகு சோனாலி அலுவலகத்திற்கு வந்தாள் விஷயத்தை அவளும் கேள்வி பட்டு இருந்தாள்.. அவனை காணவே அவளுக்கு வருத்தமாக இருந்தது..

அவளும் இந்த நிலையை எல்லாம் கடந்து வந்தவள் தானே அவளால் அவனுடைய வருத்தத்தை புரிந்து கொள்ள முடியுமே.. அவனை இழுத்து அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என்று அவளது நாடி நரம்புகள் எல்லாம் துடிக்க

அபியோ அலுவலக பணிகளில் மூழ்கி இருந்தான் எங்கேயோ அவன் முகத்தில் வருத்திற்கான ரேகை கோடுகள் இருப்பதை கண்டவள் அலுவலகம் முடியட்டும் பேசி கொள்ளலாம் என நினைத்து இருந்தாள்...

அது போல அலுவலகம் முடிந்தும் அவள் ஏதோ வேலை இருப்பது போலவே குடைந்து கொண்டிருந்தாள்...எல்லோரும் போய் விட்டார்களா என நோட்டம் பார்த்தவள் மெல்ல அவன் அருகில் செல்ல அபியோ மெல்ல கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தான்..

அவளோ அவன் அருகே வந்து , "சார்".. என்க அவனோ அப்படியே அமர்ந்து இருந்தான்.."சார் கவலைப்படாதீங்க"... என்று தொடங்கும் போதே

அபியோ, "சோனா என்னை ஏன் அன்னிக்கு காப்பாத்தின??".. என்று கேள்வி கேட்க

அவளுள் நீண்ட நாளாக குடைந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது என்று மகிழ்வதா இல்லை எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் அவன் இப்படி ஒரே இறுக்கமாக இருக்கிறானே என நினைத்து வருத்தப்படுவதா என நினைத்து , "சார்".. என்க

கண்களை திறந்தவன் கண்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்க, " என்னை அன்னிக்கு அப்படியே விட்டு இருக்கலாமே எனக்கு பல விதமான வேதனைகள் இன்னிக்கு நிகழாமல் இருந்து இருக்கும்"... என்று கூற

"சார் நடந்த விஷயத்தை எண்ணியே வருத்தப்பட்டுட்டு இருக்காதீங்க அதில் இருந்து வெளியே வாங்க"... என்க

அவனோ , "வந்து என்ன செய்யறது??"...விரக்தியின் படிக்கட்டுகளில் இருப்பவன் எப்படி பேசுவானோ அப்படி இருந்தது அவனுடைய பேச்சு..

"உங்களுக்காக நெறைய பேர் காத்துட்டு இருக்காங்க அவங்களுக்காக நீங்க இதில் இருந்து வெளியே வரணும்"... என்று அவள் கூறவும் நீண்ட நெடிய மூச்சை வெளியே விட்டவன் தன்னை சமநிலை படுத்தி சட்டென்று சோனாவின் கையை பிடித்து தன் கைக்குள் வைத்து கொண்டான்..

அவளோ திடுக்கிட , "சோனா சுத்தி வளைச்சு பேசல எனக்கு யாரும் இல்லை உனக்கும் யாரும் இல்லை என்னை கல்யாணம் பண்ணிகிறியா?? உன்னோட வாழ்க்கையை என்கூட பகிர்ந்து கொள்ள விருப்பமா".. என்று கேட்டே விட்டான்..

இதே பழைய அபியாக இருந்து இருந்தால் அவன் இன்னும் கொஞ்சம் கூட அழகாக கேட்டு இருப்பானோ என்னவோ இந்த அபி சற்று மாறுபட்டவனாகி இருந்தான்...அவன் மன அழுத்தத்தில் உழன்று கொண்டிருந்தான் அவனுக்கு யாராவது துணை வேண்டும் என தோன்ற அவளிடம் கேட்டே விட்டான்..

அவன் சட்டென்று இப்படி கேட்பான் என்பதை அறியாத அவளும் விழி விரிய அவனை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் அவனை பிடித்து இருக்கிறது வெளியே அவனிடம் கூற தயங்கி கொண்டு இருக்க அவனோ மெலிதான விரக்தி சிரிப்பை உதிர்த்து ,"பரவாயில்லை சோனா எனக்கு ஏதோ உள்ளுக்குள் ஒரு அழுத்தத்தில் கேட்டுட்டேன்..

நீ அதை பத்தி கவலைப்படாத நான் கேட்டதை மறந்துடு "...என்று சட்டென்று கூறவும்

அவளோ , "அப்படி இல்ல நான் "...என்று அவள் கூறும் போதே பிருத்வி அபியின் அலுவலகத்துக்கு நேரடியாக வந்தான்..

வந்தவன், " சோனாலி".. என்க அவளோ அவனை குழப்பத்துடன் பார்க்கவும் அபியோ அவனை வரவேற்கும் விதமாக ஒரு சிறிய தலையசைப்பை மட்டும் உதிர்த்தான்..

மேலும் அவர்கள் இருவரின் முகத்தை பார்க்கவும் பிருத்திவிக்கு ஏதோ புரிவது போலவும் இருந்தது ..அதை அவனாக வாயை திறந்து அதுவும் அபியிடம் கேட்டால் அவன் பிருத்வி இல்லையே..

"நான் உன்னோட கார்டியன் என்னோட பேர் பிருத்விராஜ்".. என்று அறிமுகப்படுத்தி கொள்ள அவளோ யோசனை செய்து , "அவர் வயசானவங்க தானே சொன்னாங்க"... என்று கூறும் போதே இங்கு பிருத்விக்கு சோ என்றாகி போனது, " எல்லாத்தையும் இவ யோசிச்சு கிழிச்சு "...என்று நெனைத்த பிருத்வி அபியின் முகத்தை பார்த்து மனதுக்குள் , "உன்பாடு திண்டாட்டம் தான் டா".. என்று நெனைத்தவன் அவளுடைய சரித்தரத்தையே கூறி, " உனக்கு இங்கேயே எல்லா விஷயமும் பேசனுமா எனக்கு உன்கிட்ட தனியா சில விஷயங்கள் பேசனும் "...என்க

அவளோ யோசித்தபடி அபியை பார்க்கவும் , "அவர் தான் சொல்றார்ல அவர் கூட போ "..என்றவன், " எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன் "...என்று கிளம்பி விட்டான்..

அவளோ தயக்கத்துடன் அபியை பார்த்து கொண்டே பிருத்வியுடன் பிரயாணம் ஆனாள்...

மாயவன் வருவான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top