அத்தியாயம் 24
மனம் விரும்புதே மாயவா
"சார் என்ன டா குதிச்சிட்டாரு"... என மீனவ நண்பர்கள் பதற கணவன் கண்களை மூடி இரு என்று என்று கூறினாலும் அவனுடைய ஆவேசமும் அவனுடைய கோபமும் அவள் அறியாத பல விஷயங்களை கணவனின் வாய் மூலமாக கேட்டவளுக்கு அந்த ஆழ் கடலை போல அவன் மனம் கொதிப்பதை உணர முடிந்தது..
ஈஸ்வர் ஒரு கொடூரன் என்பதை அவளால் உணர முடிந்தாலும் அவளை வளர்த்த பாசம் அவளுள் வேலை செய்தது அவரது இறப்பு இப்படி இருக்கும் என கனவிலும் அவள் நினைத்து பார்க்கவில்லை..
மேலும் இது அனைத்தும் இந்த பாழாய் போன சொத்துக்கு தானே அவர் இப்படி எல்லாம் திருட்டுத்தனம் செய்தார் எனும் போது அவருக்கு இதை விட கொடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றே தோன்றியது..
அதிலும் பிருத்வி ஈஸ்வர் செய்த ஒவ்வொரு செயலையும் எண்ணி எண்ணி கூறி அடிக்கும் போதே அவள் மனம் துடித்த துடிப்பு அவளுக்கு மட்டுமே தெரியும்..
"அப்பா வெளியே போயிட்டு வரும் போது புது ட்ரெஸ் வாங்கிட்டு வரேன்".. என கூறிய தாய் தந்தை திரும்பி வரும் போது வெள்ளை துணியில் சடலமாக வந்ததை எண்ணி பார்த்த அவளுக்கு நெஞ்சோரம் வலித்தது...
தாய் தந்தை இல்லாமல் யாரிடமும் பேச தோன்றாமல் அறையே கதி என்று இருந்தவளை அபியும் தாத்தாவும் தான் ஆறுதல் கூறி அவளுடனே இருந்து அவளை மெல்ல மெல்ல மாற்றியதை அவள் இப்போது நினைவு கூர்ந்தாள்..
அவளுக்கு இன்றும் அன்றைய தின காட்சிகள் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்து போய் இருந்தது அதற்கு எல்லாம் காரணம் இந்த கயவன் தானா எனும் போது சம்யூவுக்கு தாங்கொண்ணா பாரம் நெஞ்சில் உருவாகி அவனுக்கு தக்க தண்டனை அளித்த கணவனை காண அவள் ஆவல் கொள்ளும் போது தான், " என்ன டா சார் குதிச்சிட்டாங்க சார் சார் "...என மீனவர்கள் கத்த அதில் வேகமாக கண்களை திறந்தவளுக்கு படகு முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளிக்க ஈஸ்வரை அடைத்த ட்ரெம் இலேசாக மூழ்கி கொண்டிருந்தது கூடவே ஈஸ்வரின் சத்தமும் அலையோடு அலையாக கேட்டாலும் தன் கணவன் எங்கே என பதறிய அவள் படகின் நாலா மூலையிலும் போய் , "பிருத்வி ! பிருத்வி! "..என்று கத்த,
அவளுக்கு அழுகை வந்து விடும் போல இருந்தது பேசாமல் நாமும் குதித்து விடுவோமா என்று கூட நெனைத்த சம்யூ நினைக்கும் போதே ஆழ் கடலில் தனது சூரசம்ஹாரத்தை நிறைவு செய்தவன் அந்த கடலில் தன் உடலையும் மனதையும் சுத்தம் செய்தவன் திமிங்கலம் போல வெளியே வர, " மேடம் அழாதீங்க அங்கே பாருங்க சாரை "...என கூறி அவர்கள் சிரிக்க கண்களில் நீரோடு தன் கணவனை கண்ட சம்யூ முகம் பளிச்சிட அவனோ நீந்தி கொண்டே படகில் ஏறினான்...
அவன் ஏறவும் அவனிடம் சரணடைந்த சம்யூ அவனை இறுக்கமாக அணைத்து கொண்டாள்..அவளது அணைப்பின் வீரியமே கூறியது அவள் வெகுவாக பயந்து போயிருக்கிறாள் என அவனும் அவளை அணைத்து அவளுக்கு ஆறுதல் கூறியவன் கரைக்கு வந்த பின்னும் அவளை விடவில்லை தன் அணைப்பிலே வைத்திருந்தான்...
அவனுக்கு உதவி செய்த அந்த மீனவ நண்பர்களுக்கு தேவைக்கு அதிகமாக பணத்தை கொடுக்க அவர்களோ வாங்க மறுத்தனர்..பிருத்திவியோ நிர்பந்தித்து பணத்தை கொடுத்தவன், " நீங்க என்கிட்ட இருந்து சும்மா பணத்தை வாங்குறேன்னு நினைக்காதீங்க..நீங்க சரியான சமயத்தில் உதவி செய்யலனா இந்நேரம்"... என கூறி அணைத்து இருந்த மனைவியின் தோளை அழுத்தமாக பிடித்தவன் , "என்ன ஆகி இருக்கும்ன்னு தெரியாது..சோ அந்த கவலை உங்களுக்கும் வேணாம் ..நான் உங்க கிட்டிருந்து மீன் வாங்கிட்டேன்னு நெனைச்சுக்கோங்க "...என்று கூறியவன் அவர்களிடமிருந்து விடைபெற்று காரை எடுத்தான்...
காரில் ஏறியதும் தாத்தாவை அழைத்து , "விக்கிக்கு எப்படி இருக்கு"... என்று கேட்க
அவரோ, " ஆப்ரேஷன் பண்ணி இருக்கு பா ..பயப்பட ஒன்னுமில்லைன்னு சொல்லி இருக்காங்க...நிறைய இடத்தில் அடி பாலா கிட்ட விஷயத்தை சொல்லி இருக்கேன் அவன் வரேன்னு சொல்லி இருக்கான்..இரண்டு நாளில் வந்துடுவான் "...என்று கூற
அவனோ, " சரி தாத்தா நான் வரேன்"... என்று கூறி வைத்து விட்டான்...
காரில் ஏறியும் தன்னிடம் ஒன்றும் பேசாமல் தன் தோளில் சாய்ந்தபடியே அமர்ந்து இருந்தவளை பார்த்து, " என்ன டி சூப்பர் வுமன் மாதிரி அவன் கிட்ட பேச போன இப்போ இப்படி அமைதியா இருக்க "...என்று தன் தோளில் சாய்ந்தபடி அமர்ந்து சாலையை வெறித்து வந்தவளை கேட்க
"ஏன் பிருத்வி பணம் மனுஷனை விட பெரிசா ஏன் எல்லோரும் பணத்துக்கு பின்னாடி போறாங்க..பாருங்க எத்தனை கொலைகள் நடந்து இருக்கு..பணம் ஏன் நம்மல இவ்ளோ அரக்கனா மாத்துமா??"... என்று கேட்க
காரை சாலை ஓரமாக நிறுத்தியவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி," பணம் பெருசுன்னு அதை நினைச்சு மட்டுமே அவன் இப்படி செய்த மாதிரி தெரியல அவன் ஒரு சைக்கோ அவன் உடம்புல எங்கேயோ ஒளிஞ்சு இருக்கு அவன் பிறந்ததும் முதல் இப்படி தான் இருந்திருப்பான்னு நெனைக்கிறேன் ..ஆனால் நீ சொன்ன மாதிரி பணம் மட்டுமே வாழ்க்கை இல்ல சம்யூ அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கு..
இதோ எனக்கு நீ இருக்க உன்னோட காய்ஞ்சு வறண்டு போன உதடுகள் இருக்கு..அந்த உதடுகள் கிட்டத்தட்ட உன்னை பார்த்ததில் இருந்து
மூன்று மணி நேரமா என்னை நீ கவனிக்க மாட்டியான்னு ஏங்குது தெரியுமா??"... என்று அவள் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள் அவளது மனநிலையை மாற்ற அவன் கூற ,
அவளோ முதலில் அவன் கூறுவதை சீரியஸாக கேட்டு கொண்டிருந்தவளுக்கு அவன் இடையில் சொருகிய வார்த்தையில் பொதிந்து இருக்கும் கள்ளத்தனத்தை புரிந்து கொண்டவளுக்கு , "போங்க".. என்று அவன் மார்பிலே குத்தி," எப்போவும் இதே நினைப்பு தானா வேற எதுவுமே இல்லையா??"... என்று கேட்டவளுக்கு அப்போது தான் உரைத்தது அவன் ஆடையில்லாமல் இருக்கிறாள் என்றும் அவள் அவனுடைய சட்டையை அணிந்து இருக்கிறாள் என்பதை உணர்ந்தவளுக்கு இந்த நிலையில் அவனை நிமிர்ந்து பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்க தலை கவிழ்ந்து வெட்கப்பட்டவளை இழுத்து அணைத்து
" என்னோட சின்ன வயசிலேயே எல்லோரும் அவங்க அம்மா கூட இருக்கும் போது நான் தாத்தா கூட வளர்ந்தேன்...எனக்கு மட்டும் ஏன் அம்மா , அப்பா இல்லைன்னு நான் பல தடவை நினைச்சு இருக்கேன், வருத்தப்பட்டு இருக்கேன் அதுவே நான் யார்கிட்டயும் அதிகமா ஓட்ட மாட்டேன் அந்த சூழ்நிலையில் தான் தாத்தா வந்து எல்லா விஷயத்தை எனக்கு கொஞ்சம் கொஞ்சமா புரிய வெச்சாரு அப்போ இருந்து பொண்ணுங்க இப்படி எல்லாம் இருப்பாங்களான்னு தோணுச்சு...
அப்போ மேலும் என்னுள்ளே நானே ஒடுங்கி போனேன் ஏன் அவங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு நினைச்சேன்...நான் என்ன தப்பு பண்ணினேன்னு நினைச்சேன் ஆனால் அவங்கள பத்தி ஈஸ்வரை பத்தி எல்லாம் தாத்தா ஒவ்வொரு தடவை வரும் போதும் சொல்றதை எல்லாம் கேட்டு கொலை வெறி வந்தது உண்மை..அப்போ நானே என் மனசை கட்டுப்படுத்திக்குவேன்..
என்னை வேணாம்னு சொன்னவங்க குடும்ப பிரச்சனை எனக்கு எதுக்கு நான் யார் அவங்களுக்கு அப்படின்னு எனக்கு தோணி ஒதுங்கி இருந்தாலும் என்னோட அப்பா அவர் எந்த தீங்கும் செய்யலயேன்னு தோணுச்சு ஏன்னா தாத்தா தினமும் அவரோட மகனை பத்தி பேசாமல் தூங்கினது இல்லை இதுக்கு எல்லாம் காரணமானவங்களை சும்மா விட கூடாதுன்னு நினைச்சேன்..
அப்போ தான் தாத்தா வந்து உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னார் "...என்று கூறும் போதே அவனது கதையை கண்ணில் கண்ணீரோடு கேட்டு கொண்டு இருந்தவள் அவளது பெயர் வரவும் தலை நிமிர்ந்து பார்க்க
அவனோ , "இப்படியே இரு அப்போ தான் சொல்லுவேன்"... என்று கூற அவளோ சுகமாக அவனை கட்டி கொண்டாள் அப்போது , "ரொம்ப கட்டி பிடிச்சு உன் மாமாவை வேற நெனைப்புக்கு கொண்டு போகாத"... என்று கூறி சிரிக்க
அப்போதும் அவனை விடாமல் இறுக்கமாக அணைக்க அவனோ, " முதல நான் மறுத்தேன் உங்க குடும்ப சங்காத்தாமே வேணாம்னு சொன்னேன்"... என்று கூற
அவளோ தலை நிமிர்த்தி பார்க்க அவனோ அவளது முகத்தை கைகளில் ஏந்தி, " நீ அந்த வீட்டு பொண்ணுன்னு தெரியாமல் உன்னை நான் ஒரு நாள் ரோட்டில பார்த்தேன் அப்போவே முடிவு பண்ணினேன் கல்யாணம்ன்னு ஒன்னு செஞ்சா அது உன்னை தான்னு..
பார்த்த நொடியிலே நீ எனக்குள்ள வந்துட்ட ஒரு கண்மூடித்தனமான பொஸாஸிவ்ன்னு சொல்வாங்களே அந்த மாதிரி எப்போ உன்னை பார்த்தாலும் நீ என்னை ஈர்த்து இருப்ப உன்னை எவனுக்கும் விட்டு கொடுக்க கூடாதுன்னு தோணுச்சு..
அப்போ நீ அபி கூட இருக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை அறையனும்ன்னு தோணும்.. உன்னை எப்படியாவது இழுத்து என் கைக்குள் வெச்சுக்கணும்னு தோணும் டி ஆனால் அதே நேரம் என் மனசில் இவ்வளவு காதலை வெச்சுக்கிட்டு நீ என்னை காதலிக்கலைனா அப்படி ஒரு கேள்வி எனக்குள்ள வரும் போது தான் மேடம் வந்து என்னை பார்த்துட்டு விழுந்திங்க..சோ முடிவே பண்ணிட்டேன் உன்னை கட்டம் கட்டி தூக்கணும்ன்னு.. தூக்கிட்டேன்..."... என்று கூற
"அப்புறம் ஏன் என்கிட்ட நீங்க சொல்லவே இல்லை உங்க காதலை??".. என்று சம்யூ கேட்க
"நேத்து நான் சொன்னேனே சம்மு"... என்று கூறி சிரிக்க அவளோ நேற்றைய இரவை நினைத்து வெட்கப்பட்டு சிணுங்கினாள்...
மேலும் அவளிடம் அவளுக்கு ஒரு தங்கை இருப்பதை கூற அவளால் அந்த நொடி நம்பவே முடியவில்லை அவள் அப்பாவா என்று நம்ப முடியாத பார்வையில் முழிக்க ,
"எதுக்கு இந்த ரியாக்ஷன் கொடுக்கிற உனக்கு விருப்பம் இருந்தா அவளை தங்கையா ஏத்துக்கோ இல்லையா ஒதுங்கி இரு ..உன் அப்பா காதலிச்ச பொண்ணை மறக்க முடியாமல் இதை செய்து இருக்கிறார் அது அவர் தனிப்பட்ட விஷயம் அதில் நீ மூக்கை நுழைக்காத...இதுல சரி தப்புன்னு பார்த்துட்டு ஒன்னும் நடக்க போறது இல்ல ...
எனக்கு அவளை காலம் பூரா பார்த்துக்கும் கடமை இருக்கு...ஆனால் அவளை காணோம் அவளை தேட சொல்லி இருக்கேன்"... என்று கூற அந்த நேரம் சம்யூவால் ஏற்று கொள்ள முடியவில்லை இருந்தாலும் கணவன் கூறியதற்காக அமைதியாக இருந்தாள்..
கூடவே அவன் ராஜேஸ்வரி விஷயத்தை பற்றி எல்லாம் கூற, " ஆமாம் மேடம் என்னை பழி வாங்கிட்டு இருந்தீங்களே தீடீர்னு என்ன ஆச்சு??"... என்று கேட்க
அவளோ, " உங்களை பத்தி தெரிஞ்சுதா அதுனால"...
"அதுனால"... என்று கேட்கும் போதே அவன் உடல் இறுகியது அவளை விட்டு விலகி , "என்னோட பாஸ்ட் தெரிஞ்சு நீ என்கூட இருந்தியா??"... என்று கேட்க
அவளோ வேகமாக தலையை ஆட்டியவள் , "அது கேட்டதுனால உங்க மேல உள்ள கோபம் போயிடுச்சு"... என்று கூறவும் அவள் கண்களை தீர்க்கமாக பார்த்து , "சம்மு நான் உன்னை காதலிச்சு தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் சிம்பத்தினால இல்ல "...என்று கூற அவளுக்கு அவன் கூற வருவது புரிந்து போனது ...
அவளும் சரி என்று பாவமாக தலையாட்ட சரி என்றவன், "இப்போவும் உன் உதடு வறண்டு போய் தான் இருக்கு "...என்று கூற அவளோ தன் நாவால் ஈரப்படுத்த போக அதற்குள் அவனது உதடு அந்த வேலையை கையில் எடுத்து கொண்டது..
அவளுக்கு புரிந்தது அவனின் அவள் மீதான ஆழ் மனது நேசம்..அதை அவன் எப்போதும் உணர்த்தி கொண்டே இருந்தான் அவன் எப்படி அதிரடியானவனோ அதே போல அவனுடைய காதலும் அதிரடி அதை சுகமாக அவள் சுகிக்கவே நினைத்தாள்..
இப்படியே அவர்கள் எல்லா விஷயங்களையும் பேசியபடி வீட்டை அடைந்து உடைமாற்றி உடனே அவளையும் அழைத்து கொண்டு விக்கியை சேர்த்தி இருக்கும் மருத்துவமனையை அடைந்து மருத்துவரிடம் பேசி மருத்துவர் விக்கிக்கு ஒன்றுமில்லை என்று கூறிய பின்னரே அவன் அமைதியானான்..
கூடவே எதுவுமே செய்யாதது போல தன் தாத்தாவிடம் பேச அவருக்கு அவன் முகமே கூறியது அவன் என்ன செய்து விட்டு வந்து இருக்கிறான் என்று, " தம்பி ஈஸ்வர் "...என்று கேட்க அவனோ சிரித்தபடி மேலே கையை காட்ட பெரியவர் கண்களை அழுந்த மூடி திறந்தார்...எல்லாம் நன்மைக்கே என்று அவர் நினைத்து அதன் பின்னர் அதை பற்றி எதுவுமே கேட்கவில்லை..
ஆனால் அபியின் வீட்டிலோ நிலைமை வேறு விதமாக இருந்தது ..அவன் சிறு வயது முதலே தந்தையும் தாயும் என்ன செய்கிறார்கள் என அவனுக்கு தெரியாது அவர்கள் எப்போது வீட்டுக்கு வருவார்கள் எப்போது வீட்டை விட்டு வெளியேறுவார்க்ள என எதுவுமே அவனுக்கு தெரியாது..
அவனை வளர்த்தியது எல்லாம் ராம மூர்த்தி தான் என்பதால் பெரிய ஒட்டுதல் எப்போதும் தாய் தந்தையிடம் அவனுக்கு இருந்தது இல்லை..
அதில் வேறு இந்த சொத்து மோசடி தெரிய வரவும் அவனால் எளிதாக அவர்கள் மீது கோபப்பட்டு விலக முடிந்து இருந்தது..
அப்படி இருக்க விஷயம் ஒன்றும் அறியாத அவன் அவனது அலுவலக வேலை முடிய இரவு ஆக அவன் வீட்டை நோக்கி சென்றான்..வீட்டை அடைந்தால் வெறுமையான வீடே அவனை வரவேற்க அவனது அம்மாவின் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது..
அவனும் அவனது தாயின் அறையை கடந்து அறைக்கு செல்ல போக அவனுக்கு ஒரு அழைப்பு வர அவனும் எடுத்தான் மறுமுனை கூறிய செய்தியில் அவன் அதிர்ந்தான்..
"சார் உங்க வீட்டு கார் ஒன்னு பீச் பக்கம் இருக்கு நம்பர் செக் பண்ணினா அது உங்க வீட்டு அட்ரஸ்ல இருக்கு"... என்று கூற அபி காரின் நம்பரை கேட்க அது அவனோட அப்பாவின் கார் என புரிப்பட எங்கே போனார் என யோசித்து கொண்டே , "அப்படியா நான் வரேன்"... என்று கூறினான்...
ஏறிய மாடிப்படிகளில் இருந்தும் மீண்டும் இறங்கவும், " அபி"... என்றழைப்பு அவனை தடுத்து நிறுத்தியது ..
அவனை எதற்காக அழைக்கிறார் என அவன் அவரது அறைக்கு போக அவர் இருந்த கோலம் அவனை உலுக்கியது என்றே கூற வேண்டும்..
இது போன்ற ஒரு தோற்றத்தில் அவனது தாயை அவன் இதுவரை கண்டது இல்லை என்றே கூற வேண்டும்..
அழுது இருப்பார் போலும் கண்கள் வீங்கி அவர் முகமே என்னவோ போல இருக்க அவர் அருகில் சென்ற அபி, " என்னாச்சு மா".. என்று கேட்க கண்களை அழுந்த துடைத்தவர், " எங்கே போற??".. என்று கேட்க
"அப்பாவோட கார் பிச் கிட்ட இருக்குன்னு சொன்னாங்க போலீஸ் அவர் எங்கே போனார்ன்னு தெரியுமா போன் ரீச் ஆகலை??"... என்று கூற
அவரோ அவனை பார்த்து விரக்தி சிரிப்போடு , "அவரை தேடாத அபி அவர் உனக்கு கிடைக்க மாட்டார் "...என்க
அவனோ புரியாத பார்வையை வீச ராஜேஸ்வரியோ , "ஆமாம் நீ இல்ல யார் தேடினாலும் உன் அப்பா கிடைக்க மாட்டார் ..அவர் உயிரோடு இருந்தா தானே தேடுறதுக்கு அவர் இந்நேரம் இறந்து இருப்பார்"... என்று ராஜேஷ்வரி விரக்தியோடு கூற அபி அதிர்ந்தான்...
மாயவன் வருவான்..
