அத்தியாயம் 23
மனம் விரும்புதே மாயவா
தன் மனைவியின் போனுக்கு அழைத்து பார்க்க சிக்னல் விட்டு விட்டு இருக்க ஆனால் போன் ரிங் ஆனது கூடவே அவளுடைய போனில் GPRS ஐ ஆன் செய்து வைத்து இருந்ததால் வேகமாக ட்ரேக்கர்ஸிடம் கூற அவர்கள் சம்யூவின் நண்பரை ட்ரேக் செய்து அந்த மொபைல் இருக்கும் இடத்தை கூற கூடவே ஈஸ்வரின் என்னையும் ட்ரேக் செய்ய சொன்னான்..
அந்த எண்ணும் அதே இடத்தில் இருக்க பிருத்வி முடிவே கட்டி விட்டான் ..நேராக அந்த இடத்துக்கு செல்ல அது ஒரு கடல் தீரம் ..கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பிருத்வி சுற்றி பார்க்க யாரும் அங்கு இல்லை சற்று தொலைவில் ஈஸ்வரின் கார் இருப்பதை கண்டவனுக்கு அவர்கள் இங்கே தான் எங்கேயோ இருப்பது போல தோன்றியது கூடவே எங்கோ அவளது மனைவியின் குரல் கேட்பது போல இருக்க அவன் மனம் துடித்தது...
அப்போது தான் அங்கே ஒரு சிலர் வந்து மீன் பிடிக்க செல்ல அவர்கள் படகை எடுத்து கொண்டிருந்தனர்..அவனது உள்மனம் கூறியது அவள் இந்த கடலில் தான் இருப்பார்கள் என கூற அந்த மீனவ நண்பர்களிடம், " யாராவது இன்னிக்கு படகு எடுத்தாங்களா?? "...என கேட்க
"ஆமாம் சார் ஒரு இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி ஒரு படகு போய் இருக்கு "...என்று அவர்கள் கூற
"அதுல ஒரு பெண்ணை பார்த்தீங்களா??"... என்று கேட்க
"ஆமாம் சார் ஒரு பொண்ணை இழுத்துட்டு போனாங்க"... என்று கூட்டத்தில் ஒருவன் கூற அப்போது ஊர்ஜிதமாகி விட்டது..
" என்னை அங்கே கூட்டிட்டு போறீங்களா "..என விஷயத்தை வேகமாக கூற அவர்களும் யோசிக்காமல் உதவி செய்ய வந்தனர்..
படகு மிக விசையில் போய் கொண்டிருக்க கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு பின் அவர்கள் அந்த படகை கண்டு பிடிக்க அங்கே சுட்டெரிக்கும் வெயிலில் சம்யூவை கட்டி போட்டு வைத்திருக்க அவள் தளர்ந்து போய் தலையை கவிழ்த்து இருந்தாலும் அவளது உதடுகள் பிருத்வி என முணுமுணுத்து கொண்டிருந்தது...
அதிலும் ஒருவன் அவள் மீது தண்ணீரை ஊற்றி அவளது உடையை நனைத்து அவளின் உடலோடு ஒட்டிய ஆடையில் தெரியும் அவளது அழகை வர்ணித்து கொண்டிருந்தான்..
கூடவே ஈஸ்வரோ , "அடேய் தண்ணியை மட்டும் ஊத்தி என்ன தெரியுது ட்ரெசை கழட்டி தொட்டு பாருங்க டா இன்னிக்கு அவ உங்களுக்கு விருந்து "...என்று கூறி சிரித்து கொண்டே சரக்கு அடிக்க அவர்களும் அவளது ஆடையை கிழிக்கும் வேலையை துவங்கினர்..
எப்போதும் அவர் தான் கொலை செய்தார் என்பதை கொலை செய்யப்படுவருக்கே கூறாமல் தான் கொலையை செய்பவருக்கு இந்த முறை அவ்வாறு தோன்றவில்லை ஏனெனில் பிருத்திவிக்கு பலத்த அடி கொடுக்க வேண்டும் என அவரது உள்மனம் கூறவே இவ்வாறு செய்கிறார்...
அஸ்தினாபுரத்தில் திரௌபதியின் ஆடையை கலைந்த துச்சதானன் போல இங்கே இந்த கயவர்கள் அவளை நாசம் செய்ய அதை கட்டிய கணவனால் பார்த்து கொண்டிருக்க இயலுமா அவர்களின் படக்குக்கும் அருகில் இவர்களின் படகும் இருக்க ஒரே தாவலில் பாய்ந்தவன் ஒரே எட்டில் அவளது உடையை கிழித்து கொண்டிருந்தவனை எட்டி உதைத்தான்..
உதைத்த மறுநொடி அவன் கடல் இவ்வளவு தூரம் ஆழம் உள்ளதா என பார்க்க கடலுக்குள் விழுந்து விட்டான் அவன் எழுந்து வர எள்ளளவும் சாத்திய கூறு இல்லை ஏனெனில் பிருத்வி உதைத்த உதை அப்படி இருந்தது..
பிருத்வி மட்டும் அந்த படகுக்குள் பாயவில்லை அவனுக்கு உதவிய அந்த மீனவர்களில் இருவரை தவிர மீதம் மூன்று பேரும் படகுக்குள் இறங்க மீதம் உள்ள மூன்று கயவர்களை பிடிக்க தண்ணீரில் மூழ்கி இருந்த ஈஸ்வர் அந்த இடத்தில் அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை..
"அடேய் அவனை அடிங்க டா.."... என உரைக்கும் முன் அவரது வாயிலே காலால் எட்டி ஒரு உதை கொடுத்தான் பிருத்வி ..
அவர் சுருண்டு கீழே விழ வேகமாக தன் சட்டையை கழட்டி தன்னவள் மானத்தை காப்பாற்றியவன் இது நாள் வரை முருக்கேற்றி வைத்திருந்த உடலை மீண்டும் ஒரு முறை முறுக்கி விலா எலும்புகள் புடைத்து இருக்க அவன் கண்களில் கனல் தெறித்து கொண்டிருந்தது..
முதலில் இந்த சிறு மீன்களின் முட்களை பிடித்து எறிந்து விட்டே அந்த விலாங்கு மீனை கூறு போட வேண்டும் என எண்ணியவன் அவர்களை பிடித்து வைத்திருக்கும் மீனவ நண்பர்களில் ஒருவன் ஒருத்தனை அடிக்க போக , "நீங்க அடிக்காதீங்க இங்கே இவனுங்க உடலில் இருந்து விழற ஒவ்வொரு துளி ரத்தமும் என்னால தான் இருக்கணும் "...என்று கூறி ,
அதை பார்த்து மற்ற ஒருவனோ , "டேய் சார் உடம்பை பார்த்தீல இவனுங்க என்ன சுண்டைக்காய் பசங்க அவர் உடம்புக்கு இன்னும் இருபது பேர் வந்தாலும் அவர் நின்னு அடிப்பார் வா நாம சிஸ்டரை காப்பாத்துவோம்"... என்று கூற அடியாளில் ஒருவன் பிருத்திவியின் பலம் அறியாமல், " என்னங்க டா பூச்சாண்டி காட்டுறீங்க இன்னிக்கு தான் ஒருத்தனை ரோட்ல போட்டு வெளுத்துட்டு வந்தோம்"... என்று கூறி முடிக்கவில்லை அவனுடைய கழுத்தை திருப்பி விட கழுத்தெலும்பு உடையும் சத்தம் தாறுமாறாக கேட்டது..
மீதம் இரண்டு பேர் இருவரும் யார் முதலில் செல்வது என்பது போல பார்க்க பிருத்வி வாயிலே உதைத்த உதையில் அடித்த சரக்கு எல்லாம் வியர்வை வழியாக ஒழுகி பின் ரத்தம் வேறு வாயில் வர மெல்ல எழுந்தவர் பாக்கெட்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை தேடினார்..
அதுவோ அவன் உதைத்த உதையில் எங்கேயோ விழுந்து இருக்க அவனை இப்போதே கொன்றாக வேண்டும் இல்லையேல் பிரச்சனை பெரிதாகி விடும் என நெனைத்தவருக்கு அவன் கொடுத்த ஒரு உதையே உடலில் பதைப்பதைப்பு உருவாக துவங்கி இருந்தது..
எப்போதும் நிதானமாக தீர ஆராய்ந்து செய்பவர் கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் இவளை கடத்தி விட்டாரோ என நினைத்தார்..
அந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதே அவர்கள் இருவரின் அருகில் சென்று அவர்கள் தோளில் கையிட சட்டை இல்லாத அவனது உடலில் வரிவரியாக சதை இல்லா தசை பிடிப்புகளை கண்ட அவர்களுக்கும் உள்ளூற பதைப்பு தான்...
இருந்தாலும் அவனை தாக்க தயாராக இருக்க அவன் அடிக்க வருவான் என்றால் அவன் தோளில் கையிடவும் அவர்கள் இருவரும் குழம்பி பார்க்கும் போதே அவர்கள் இருவரின் பின்னங்கழுத்தில் கையை வைத்தவன் அப்படியே முறுக்கி பிருத்திவியின் கை அவர்களின் கழுத்தில் ஆழ பதிய அவனது விரல்களின் நகங்கள் அவர்களுடைய கழுத்துக்குள் துளையிட்டது..நகங்கள் அவர்களுடைய நரம்பை கிற வழியால் துடித்த அவர்கள் விலகி போகாத படி மீனவ நண்பர்கள் பார்த்து கொண்டனர்..
மேலும் ஆவேசம் கொண்டவன் அவர்கள் இருவரையும் ஒரு சுத்து சுத்தி இருவரின் உடலையும் ஒரு சேர சேர்த்து இடிக்க ஒருவர் உடலில் மற்றொருவர் உடல் மிக வேகமாக மோதும் போது அவர்களின் கண்,காது மூக்கு என எது எங்கே இடித்தது என சொல்ல முடியாத படி மோத அவர்களின் முகமெங்கும் ரத்தம் வழிந்தோடியது..
இன்னும் அவனது ஆத்திரம் குறையாமல் அவர்கள் இருவரை ஆத்திரம் தீரும் அளவுக்கு உதைக்க அதில் ஒருவன் அடி வாங்க தெம்பு இன்றி வேகமாக கடலுக்குள் குதித்து விட்டான்..
மற்றொருவனோ மயக்கமே ஆகி விட அவனது நரம்புகளை கிழித்தது போதாதென்று கழுத்திலே மீண்டும் பூட்ஸ் காலால் உதைக்க அவனது கழுத்து உடைந்தது மட்டுமின்றி அவனும் உடைந்து கிழிந்து விட்டான் என்றே கூறவேண்டும்..
அதற்குள் , "டேய் இப்போ அவனை அடி டா பார்க்கலாம் "...என ஈஸ்வர் வாயில் வழிந்தோடும் ரத்தத்தை துடைத்து கொண்டு துப்பாக்கியை தூக்கி பிருத்திவியின் முன் பிடிக்க
அதற்குள் மீனவர்கள் சம்யூவின் கையில் கட்டை அவிழ்த்து அவளை காப்பாற்ற அவளோ மயக்க நிலையிலே இருந்தாள்..
மேலும் அவள் முகத்தில் தண்ணீர் வேறு தெளித்து கொண்டிருந்த சமயத்தில் தான் ஈஸ்வர் துப்பாக்கியை காட்ட வா டா வா என்பது போல ஒரு கையை மடக்கி வா என்பது போல பிருத்வி சைகை காட்ட ஈஸ்வரோ துப்பாக்கியை அவன் முகத்துக்கு நேராக நீட்டி , "என்ன டா பெரிய பாடி பில்டர்ன்னு நினைப்பா என்னை இவனுங்களை அடிச்சிட்டினா நீ பெரிய இவனா இப்போ அடி டா பார்ப்போம் நான் என்ன உன்கிட்ட அடி வாங்கினா போயிடுவேன்னு நினைப்பா ..உன் அப்பன் பாட்டன் மாமனை போட்ட மாதிரி உன்னை முதலிலே போட்டு இருக்கணும் அந்த தப்பை நான் செஞ்சிட்டேன்" ..என்று அவர் கூறிய அடுத்த நொடி அந்த துப்பாக்கி தண்ணீருக்குள் விழுந்திருந்தது...கூடவே ஈஸ்வரும் கீழே விழுந்து இருந்தார்
எதிராளி பேசிக்கொண்டு இருக்கும் போது அவரின் பேச்சில் கவனம் வைப்பது போல நம் தேவையை முடித்து கொள்வது ஒரு தந்திரம் அதன் படி பிருத்வி ஈஸ்வர் பேசிக்கொண்டு இருக்கும் போதே பிருத்திவியின் காலுக்கு கீழ் ஒரு கயிறு கிடந்தது அது ஈஸ்வரை சுற்றி இருக்க கயிறை பிருத்வி இழுத்தால் ஈஸ்வர் கீழே விழுவார் என்பதை அறிந்தே அவன் இழுக்க பிருத்வி எதிர்பார்த்தது போல கீழே விழுந்தார் ஈஸ்வர்..
அவர் விழுந்த நொடி அவர் மீது பாய்ந்து இருந்தான் பிருத்வி அவரது முடியை கொத்தாக பிடித்து தரதரவென இழுத்து படகின் நடுப்பகுதியில் கொண்டு வந்தவன் அவரின் முடியோடு தூக்கி பிடிக்க உயிர் போன வலியை உணர்ந்தார் ஈஸ்வர்..
"என்ன பெரிய பருப்பு மாதிரி ஐஞ்சு கொலையை பண்ணிட்டு வலிக்குதுன்னு சொன்னா என்ன அர்த்தம் இதுக்கு மேல தான் உனக்கு இருக்கு "...என்று கூறியவன் ஈஸ்வரை எடுத்து ஒரு நாற்காலியில் அமரவைத்து கையை பின்னால் கயிரால் கட்டினான்..
அந்த சமயம் பார்த்து மயக்கம் தெளிந்த சம்யூ இலேசாக கண்களை பிரிக்க அவளிடம் ஓடி வந்தவன் அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன் அவளை பார்த்து அவளது தலையை இலேசாக தூக்கி அவன் மடியில் வைத்தவன் அவளை காற்று புகாத அளவுக்கு ஒரு நொடி இறுக்கமாக அணைத்தான் ..
அவளது குலுங்கும் உடலுக்கு ஆறுதலாக அணைத்தவன் அவளின் உடல் மிக பலவீனமாக உள்ளதை உணர்ந்தவன் அப்போது எதுவும் பேசும் நிலையில் அவன் இல்லை அவளும் இல்லை அவளோ ஏதோ சொல்ல வாய் எடுக்கும் போதே சம்யூவுக்கு வார்த்தை வரவில்லை , "நீ எதுவும் சொல்ல வேண்டாம் சம்மு எனக்கு எல்லாமே தெரியும்.. புரியும்.."...
மேலும் ஈஸ்வரை பார்த்து ஏதோ சொல்ல வர அவளின் வறண்ட உதட்டின் மீது அவனது கையை வைத்து , "எனக்காக ஒன்னு செய் இதோ கார் கீ அவங்க கூட போ "...என்று அந்த மீனவ படகை காட்ட,
அவளோ, " நான் இனி உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பிருத்வி ப்ளீஸ் என்ன ஆனாலும் நான் உங்க கூடவே இருக்கேன்"... என்று கூற,
"சரி நான் சொல்ற வரைக்கும் கண்ணை திறக்கவும் கூடாது பார்க்கவும் கூடாது "...என கூறியவன் அவளை அங்கேயே ஒரு ஓரமாக அமரவைத்து விட்டு ஈஸ்வர் கயிறை அவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்க அதை கண்டவன் வேகமாக ஒரு எட்டு உதை விட்டு தடுத்து பின் மீண்டும் நாற்காலியை எடுத்து வைத்தவன், " என்ன நீ பெரிய இவனா பார்க்க சொங்கி மாதிரி இருந்துட்டு சீரியல் கில்லர் ரேஞ்ச்க்கு ஒவ்வொரு வேலையும் செஞ்சு இருக்க??.."
அவரோ முழித்து பார்க்க
"என்ன டா ஒன்னும் தெரியாத மாதிரி பார்க்கிற ?? உன் வேலைத்தனம் எல்லாம் உன் மாமாக்கு இருபது வருஷத்துக்கு முன்னாடியே தெரிஞ்சு போச்சு அந்த மனுசன் குடும்பம் குட்டி மானம் பயம் ன்னு காலத்தை ஒட்டிட்டார்..ஆனால் நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் டா என்னோட லெவலே வேற"... என கூறி அவரது முகத்திலே குத்து விட கண்கள் வெளியே தெறித்து விடும் போல கண்கள் வலித்தது அவரால் கண்ணை திறக்க இயலவில்லை..
"டேய் என்னை விடு டா"... என்று அவர் வலியால் கதற
"இப்படி தானா டா அவங்களும் கதறி இருப்பாங்க.. அதெப்படி ஒரு ஆளை தொடாமல் மிரட்டமால் கொலை செஞ்சு இருக்க யாருக்கும் தெரியாமல் மறைச்சும் வெச்சு இருக்க நீ பலே ஆளு தான்"... என்று கூறிய பிருத்வி
"யானைக்கும் அடி சறுக்கும் அது போல உனக்கான சரிவு காலம் வந்துடுச்சு "...என்று கூறியவன் ஈஸ்வரின் மற்றொரு கண்ணிலும் குத்து விட இந்த முறை கண்களை அவரால் திறக்க கூட முடியவில்லை..
அவரோ வலியால் துடிக்க, " என்ன வலிக்குதா இதே மாதிரி தான் மனசு அளவில் பலர் துடிச்சு இருப்பாங்க ஒவ்வொருத்தர் வீக் பாயிண்ட் பார்த்து அடிச்சி இருக்க அதே தான் நானும் செஞ்சேன் "...என்று கூறியவன் மூக்கில் குத்து விட அவர் முகத்தில் ஒரு இடம் விடாமல் அடித்து விட்டோமா என சரி பார்த்தான்...
"என்ன பேச மாட்டேங்கிற தலை எல்லாம் தொங்குது??".. என்று கூறியவன் எழுந்து நின்று அவனது உடலை முறுக்கி நெட்டி முறித்தவன் கழுத்தை இடம் வலமாக ஆட்ட,
" என்னை கொன்னுடு அடிக்காத!"... என்று ஈஸ்வர் கூற ,
"அப்படி தான் டா செய்ய போறேன் ஆனால் எப்படி இருந்தாலும் உன்னை நான் கொன்னுடுவேன் ஆனால் இனி இப்படியே செத்து போனா மேலே போனவங்க ஆத்மா சாந்தி அடையாது"... என்று கூறி அவரது கழுத்தில் ஒரு மிதி மிதித்து, " இது என்னோட அப்பாவை போதை மருந்துக்கு அடிமையாக்கி கொன்றதுக்கு".. என்று மிதித்தவன்
பின் அவரது நெஞ்சிலே அடுத்த மிதியை இறக்கி , "இது எத்தனை நாள் பாட்டி கையால் சாப்பிட்டி இருப்ப ஆனால் கொன்னுட்ட ..பாட்டியை விஷம் வெச்சு கொன்றதுக்கு"... இந்த அடி என்று கூற அவர் அரை மயக்கமானார்.. அவனோ வேகமாக அவரது முகத்தில் நீரை தெளித்தவன்,
" நீ மயக்கமாக கூடாது டா செத்த பொணத்தை அடிக்க நான் ஒன்னும் ஈஸ்வர் இல்ல நான் பிருத்வி ராஜ்"... என கூறி வயிற்றில் ஓங்கி குத்தியவன் , "இது சம்யூவோட அம்மா அப்பாவை கார் விபத்து ஏற்பட வைச்சு கொன்றதுக்கு"..
அடுத்த அடி அவரது அடி வயிற்றில் காலால் மிதிக்க ஈஸ்வரின் நிலைமை பரிதாபத்துக்குறிய நிலையை அடைந்து இருக்க இருந்தாலும் பிருத்வி விடவில்லை..
சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் கூட கண்களை மூடி கொள்ளும் நிலையில் இருந்தனர்.. அப்படி இருந்தது பிருத்திவியின் ஒவ்வொரு அடியும்..
ஆனாலும் பிருத்வி இளகவில்லை மேலும் அவரது பிறப்பு உறுப்பில் மிதித்தவர் , "இது பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்ததுக்கு "...என்று கூறியவர் , "கடைசியாக".. என்று கூறி, " என்னோட இரண்டு கண்ணை பறிக்க பார்த்தியே அதுக்கு தான் இந்த அடி "...என கூறி அவரது தலை முதல் கால் வரை கண்ணு மூக்கு தெரியாமல் அடித்து துவைத்தவன் இன்னும் ஆத்திரம் அடங்காமல் மீனவ நண்பர்களிடம்," மீன் பிடிச்சு போக ஐஸ் வெச்சு இருப்பீங்களே இருக்கா??".. என கேட்க,
அவர்களும் பிருத்வி கூறுவதை எல்லாம் கேட்டு நியாயத்துக்கு தான் அவன் அடிக்கிறான் என்பதை உணர்ந்து ஒரு ஆள் மூழ்கி இருக்கும் அளவுக்கு ஒரு பெரிய ட்ரெம்மில் உள்ள ஐஸ் கட்டிகளை எதிரே உள்ள படகை காட்ட , "எல்லா போட்லயும் இருக்கா??"... என கேட்டு பிருத்வி இந்த படகில் தேட அந்த ட்ரெம் கிடைத்தது அதை திறந்து பார்க்க அதில் பெரிய ஐஸ் கட்டிகள் மீனை பதப்படுத்த இருக்க அதில் ஈஸ்வரை தூக்கி போட சொல்ல அவர்களும் தூக்கி போட்டனர்..
பின் ட்ரெமை உள்ளே இருந்து திறக்க இயலாதபடி கயிற்றால் சீல் செய்தனர்..
"சார் செத்திடுவார் சார் "...என்க
"அதுக்கு தான் ப்ரோ இதெல்லாம் செய்யறேன் "...என கூறி சிரித்தவன்
" இப்போ கொஞ்சம் ஓட்டை போட்டு கடலில் இறக்குங்க".. என்று கூற அவர்களும் கீழே கிடந்த கத்தியால் ஓட்டை போட்டு ஆழ் கடலில் இறக்கினர்..
முதலில் மிதந்த ட்ரெம் சிறிது சிறிதாக ஓட்டை போடப்பட்டதால் தண்ணீருக்குள் மூழ்கியது..கூடவே ஐஸ் கட்டிகளுக்குள் இறக்கும் போதே ஈன சுரத்தில் அவர் தன்னை விடும் படி கூறியதை பொருட்படுத்தாமல் இறக்கிய பின்னரே பிருத்வி ராஜ் அடங்கினான்..
இவனை வதம் செய்ய வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் வெறி அது இப்போது அடங்கி சற்றே சாந்த நிலையை அடைந்தவன் நொடியும் தாமதிக்காமல் ஆழ் கடலுக்குள் குதித்து இருந்தான் பிருத்வி...
மாயவன் வருவான்...
