அத்தியாயம் 22
மனம் விரும்புதே மாயவா
அலைப்பரித்து கொண்டிருந்தது அந்த நீண்ட ஆழி ..கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமில்லை ...சம்யூ கத்தி கத்தியே மடிந்து விடுவாள் போல..அவளது உதடு வறண்டு போய அவளால் இனியும் முடியாது என்பது போல அவளின் உடல் முழுவதும் சோர்ந்து போய் இருந்தது அவள் கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்தது...அவள் கத்தி கத்தி தொண்டை வறண்டு கண்கள் வேறு அவளுக்கு இருட்டி கொண்டிருந்தது அந்த வேளையிலும் இதை எல்லாம் செய்வது அவளது மாமா தானா என நம்ப முடியாமல் நின்று கொண்டு இருந்தாள்..
ஆம் காலையில் அலுவலகம் செல்லவே மனமில்லாமல் எப்போதும் நேரமாக எழும் கணவன் நேற்றைய களியாட்டத்தின் மிச்சமாக காலை எட்டு மணி ஆகியும் அவளை விடாமல் கட்டி கொண்டு படுத்து இருக்க உடைகள் இல்லா அவள் உடலில் கோலமிட்டு கொண்டே அவனது அடுத்த அச்சாரத்தை துவங்க அதில் கண் விழித்த அவளோ , "ப்ளீஸ் கண்ணை மூடுங்க எனக்கு ட்ரெஸ் மாத்தனும்"... என்றாள் கொஞ்சலாக,
ஒரே பிளங்கெட்டில் தான் அத்தனை நேரம் ஈருயிர் ஓர் உடலாக படுத்து இருந்தாலும் காலை வெளிச்சத்தில் பெண்ணவளுக்கு கூச்சம் வந்தது என்னவோ உண்மை தான்...
அவனோ அவளது கொஞ்சலான குரலில் தன்னை தொலைத்தவன் கண்களை திறக்க போக அவளோ வேகமாக தனது மென்மையான கையால் அவளது கையை வைத்து மூடியவள், " ப்ளீஸ் நான் ட்ரெஸ் சேஞ் பண்ற வரைக்கும் திறக்காதீங்க".. என்க அவனோ, " ஹே என்ன டி இப்படி இம்சை பண்ற??... காலையிலே நல்ல வியூவை காட்டாம மறைக்கிற??
நான் பார்க்காத என்ன விஷயத்தை நீ மறைச்சு வெச்சு இருக்க"... என்று அவளது கையை மாற்ற போக
அவளோ அவன் கூறியதை கேட்டு அழகாக வெட்கப்பட்டவள், "ஹ்ம்ம் அதெல்லாம் நிறைய வெச்சு இருக்கேன் நீங்க கண்ணை திறக்காமல் இருந்தா போதும் "...என்று கூறியவள் எழ போக
அவனோ , "நீ என் கண்ணில் இருந்து உன் கையை எடுத்தா கண்ணை திறப்பேன் சோ இப்படியே இரு இல்லாட்டி நான் நீ அப்படி என்ன ஒளிச்சு வெச்சு இருக்கேன்னு பார்ப்பேன் "...என்று காலையிலே அவனுடைய விசமத்தை இறக்க
சலித்து கொண்ட அவளோ , "பிருத்வி ப்ளீஸ் விளையாடாதீங்க என்று சிணுங்க அந்த சிணுங்கலில் தன்னை தொலைத்தவன் , "ஹ்ம்ம் சரி நான் விளையாடல சீரியஸாவே கேக்கிறேன் நான் எந்த வேலையும் லாபம் இல்லாமல் செய்ய மாட்டேன் சோ ஐ நீட் ஒன் டர்ட்டி கிஸ் அதுவும் நீ எனக்கு தரணும் "..என்க
அவளோ வேகமாக அவளுடைய கையை அவன் கண்ணில் இருந்து எடுத்து , "நோ வே "...என்றாள்..
அவள் கையை எடுத்ததும் அவனோ கள்ள சிரிப்போடு, " எஸ் எனக்கு இது தான் வேணும்"... என்று கண்ணை திறக்க அவளோ வேகமாக அவனை எதிர்கொள்ள முடியாமல் அவளது கண்களை மூடிக்கொண்டவள் வேகமாக போர்வைக்குள் சுருண்டு கொள்ள அவளுடன் அடுத்த களியாட்டத்தில் ஈடுப்பட்டான்..
அவளை இனிக்க இனிக்க துடிக்க வைத்தவன் துடிக்க துடிக்க இனிக்க வைத்தான்..
அவளது கணவன் அவளுடன் இருக்கும் போது மட்டும் அவனின் குறும்புத்தனம் வெளிப்படுகிறது அந்த முகம் அவனுக்கு அழகாகவும் இருக்கிறது..அதை ரசித்து கொண்டே அவனுடன் ஒன்றி போனவளை சமயம் கருதி அவளின் முன்னுச்சியில் முத்தமிட்டு , "ஈவினிங் ரெடியா இரு"... என்று கூறி விட்டு தயாராக சென்றான்..
கணவன் வெளியேறும் வரை தன்னருகிலே அவளை வைத்து கொண்டு அவளை சீண்டிக்கொண்டே அவன் இருந்தவன் ஒரு வழியாக வெளியே செல்லவும் அவள் மனதில் அரித்து கொண்டிருந்த அரிப்பு மேலோங்கியது..
ஆம் அவளது அத்தையை கண்டு கேள்வி கேட்க வேண்டும் என நினைத்து தாத்தாவிடம் , "வெளியே செல்கிறேன் "...என்று மட்டும் கூறிவிட்டு சென்றவள் நேராக அத்தையை காண வீட்டுக்கு செல்ல அங்கே பல குழப்பமான முகத்தோடு ஈஸ்வர் அமர்ந்து இருந்தார்..
ஆம் இத்தனை சட்ட சிக்கலை அவருக்கு உருவாக்கிய பால கிருஷ்ணன் மகன் விக்கியை சும்மா விட அவருக்கு துளியும் விருப்பமில்லை ஆள் வைத்து அடித்து துவைத்து அவரமற்ற ரோட்டில் கிடத்தி விட்டார்..வலியால் துடித்து கத்தி கொண்டு இருந்தான் விக்கி..அதை வெகுவாக மனதுக்குள்ளே ரசித்து பின் எங்கேயோ அவருக்கு பிழை வந்து இருப்பது போல தோன்றி கொண்டே இருந்தது ..அவர் மூளை அடுத்து என்ன செய்யலாம் என கணக்கிட்டு கொண்டிருக்க,
அந்த நேரம் பார்த்து நேராக வீட்டுக்குள் வந்த சம்யூ, " அத்தை இல்லையா"...என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க
என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருந்தவர் முன் லட்டு போல இவள் வந்து நின்றாள் வேண்டாம் என்பாரா??
"இல்ல என்ன விஷயம்??".. என்க
அவர் வாயை திறப்பதற்க்குள் , "பெத்த மகனையே வேணாம்னு சொன்ன உங்க பொண்டாட்டியை நாலு கேள்வி கேட்டுட்டு போலாம்னு தான் வந்தேன்"... என்க
ஈஸ்வரின் மூளை வேகமாக கணக்கிட்டது அவருக்கும் அந்த தர்மா ஹோட்டல் பெயரை கேட்டதில் இருந்து உள்ளூற பதைப்பு தான்..இருந்தாலும் சம்யூ கூறியதை கேட்டதும் அவருக்கு எல்லாம் விளங்கி விட அந்த நாய் பெத்து போட்ட நாயா டா இனி உனக்கு என்னை பத்தி சரியா தெரியல..
எத்தனை பேரை அடையாளம் தெரியாமல் கொன்னு இருக்கேன்னு தெரியுமா உன்னை அப்படி எல்லாம் செய்ய கூடாது உன்னை கதற விட்டு செய்யணும் என மனதுக்குள் திட்டத்தை வகுத்தவர் , "சம்யூ வா உன் அத்தை இருக்கிற இடத்துக்கு உன்னை அழைச்சிட்டு போறேன்".. என்க
அவளோ சந்தேகமாக பார்க்க கைதேர்ந்த நடிகனால் நடிக்க இயலாதா என்ன?? , "வா மா எனக்கும் ஆத்திரம் வருது பெத்த பிள்ளைய தூக்கி எறிஞ்சு இருக்கா என்கிட்ட அவங்க தாத்தா சண்டை கட்டி குழந்தையை வாங்கிட்டு போயிட்டாங்கன்னு நாடகம் ஆடினாளே இவளை என்ன செய்யறது ..வா உன்கூட சேர்ந்து நானும் கேட்கணும் ஊர்ல எங்கேயாவது இருப்பாளா இது மாதிரி ஒரு அம்மா ச்ச "... என்று கூறியவர்
சம்யூ நம்பும் விதமாக பேசி தன்னுடன் அழைத்து சென்றார்..சிட்டியை விட்டு தொலைதூரம் சென்ற கார் நின்றது என்னவோ ஆள் அரவமற்ற ஒரு கடற்கரையில்...
"இங்கே எதுக்கு வந்து இருக்கோம்"... என சம்யூ சந்தேகமாக கேட்க
"சொல்றேன் வா".. என அவர் காரில் இருந்து இறங்கவும் அவரது காரை பார்த்ததும் ஒரு நான்கு தடியன்கள் ஓடி வந்தனர்..
இப்போது தான் விக்கியை அடித்து போட்டு விட்டு ஈஸ்வர் அழைத்தார் என இங்கே ஓடி வர சம்யூவுக்கு இலேசான பதற்றம் தொற்றி கொண்டது அவரசப்பட்டு விட்டோமோ என பதறியவள் காரில் இருந்து இறங்காமல் அவளது கணவனை அழைக்க அவளது கெட்ட நேரம் அழைப்பு செல்லவில்லை..
அவளது கை பதறி அவளது போனில் வேறு ஏதேதோ அமர்த்தி கொண்டிருக்க ஈஸ்வர் தனது சாந்தமான முகத்தை வைத்து கொண்டு கையை காட்டவும் அந்த நாலு தடியன்களும் சம்யூவை காரிலிருந்து அவளை வெளியே இழுத்தனர்..
சம்யூ முரண்டு பிடிப்பதை பார்த்து இடியென ஒரு கை அவளது கன்னத்தில் விழுந்திருந்தது..அவளுக்கு அடியை விட ஈஸ்வர் தானா தன்னை அடித்தது என அதிர்ச்சியாக பார்த்தாள்..
ஆம் சாந்தம் தவிர வேறு எதுவும் தெரியாது என இது நாள் வரை அனைவரும் நினைத்து இருக்க சம்யூவுக்கு இந்த கொடியனின் முகத்தை பார்க்கும் துர்பாக்கியம் கிடைக்க அதை கண்ட அவரோ, " என்ன டி துள்ளிகிட்டு இருக்க எவனும் இங்கே வரவும் முடியாது என்னை தொடவும் முடியாது உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்தவும் முடியாது..
உன் அப்பன் அம்மா போன அன்னிக்கே உன்னையும் போட்டு தள்ளி இருப்பேன் அந்த கிழட்டு பயலும் என் பையனும் எப்போவும் உன்னை சுத்தியே இருந்ததினால நீ தப்பிச்ச என் பையனை கல்யாணம் பண்ணி வீட்டுல இருப்ப பார்த்தா அந்த நாயை கல்யாணம் பண்ணிட்டு அவன் எனக்கே சவால் விடுறான் நீயும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க" .. என்று ஈஸ்வர் வெடிக்க
அதை கேட்டவளுக்கு அப்போது தான் புத்தியில் உரைத்தது இந்த கொடியவன் தான் தனது அத்தையை விட மோசமானவன் என ,
அப்போது வெகுண்ட அவளோ, " உன்னை போய் நம்பி இருந்து இருக்கோமே "...என்க
"அது உங்க தப்பு என்னோட தப்பு இல்ல".. என்று சிரித்தபடியே கூறிய ஈஸ்வரிடம்,
" நீ ஒரு தைரியமில்லாத கோழை ..உனக்கு தைரியம் இருந்து இருந்தா என் புருஷன்கிட்ட சொல்லிட்டு என்னை கொன்னுக்கோ இல்லாட்டி நீ ஒரு பேடி பய தான் "...என்க
அவளின் பேச்சு ஈஸ்வரின் கோபத்துக்கு வடிகால் இட , "டேய் இப்போவே அவன் புருசனுக்கு மெசேஜ்ஜை போடுங்க டா அவன் வரத்துக்குள்ள இவ கதையை முடிப்போம் "...என கூறி தகவல் அனுப்பிய நொடி மீண்டும் ஒரு அறை அவளுக்கு விழுந்தது..
"இப்போ என்ன ஒத்துகிறியா நான் ஆம்பிளைன்னு வயசு ஆகி இருக்கலாம் ஆனால் இப்போவும் ஆம்பிளை தான் பார்க்கிறியா வா காட்டறேன் "..என்க
சம்யூவோ , "சீ நீ எல்லாம் ஒரு மனுஷனா பொண்ணு மாதிரி சொல்லிட்டு இருந்த என்கிட்டயே இப்படி பேசறயே "...என்க
"உன்னை விட சின்ன பொண்ணுங்கலேயே அனுபவிச்சவன் டி நீ என்ன பெரிய இவ மாதிரி பேசிட்டு இருக்க இளம் குட்டி தான் ருசி அதிகம் அது உனக்கு தெரியுமா "..என்று அருமை பெருமைகளை கூற
அதை கேட்டவளுக்கு," சீ என்ன மிருகம் நீ "..என்று கூறாமல் இருக்க முடியவில்லை..
"என்ன டி சீ இன்னிக்கு நடக்க போகுது பார் அது தான் சீ...உன்னை தோள் உரிச்சி இதோ இந்த தடியனுங்களுக்கு விருந்து வெச்சு அதை உலகம் பூரா பரப்பினோம்னு வை உன் புருஷன் மானம் காத்துல பறக்கும் அவன் ரொம்ப என் வழியில் நுழைஞ்சிட்டான் ..அவனுக்கு இந்த பரிசு கூட தரலனா எப்படி "...என கூறிய ஈஸ்வர் , "ஹே அவளை இழுத்துட்டு வாங்க டா".. என்று கூற
அங்கே இவர்களுக்காக ஒரு விசை படகும் தயாராக இருந்தது..அதில் சம்யூவை ஏற்றி படகு தண்ணீருக்குள் பறந்தது என்றே கூற வேண்டும்..
நடுகடலை அடைந்ததும் படகின் விசை குறைந்து மெதுவாக மிதந்து கொண்டிருக்க படகில் இருக்கும் ஒரு கம்பத்தில் அவளது கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்தது..
அவளோ கத்திக்கொண்டு இருந்தாள் அவளது குரல் நாளங்கள் வெடித்து சிதறும் அவளுக்கு பிருத்திவியை அழைத்தாள் ஆனால் அவன் ஒன்றும் கடவுள் இல்லையே பாய்ந்து ஓடி வர என நினைக்கும் போதே சம்யூவுக்கு பயப்பந்து உருண்டோடி கொண்டிருந்தது..
கணவன் வருவானா என்ற பயமும் அவன் என்னை தேடி அலைந்து கொண்டிப்பானோ என புழுவாக துடிக்க அவனது கண்ணின் கருமணி போன்ற அவனது உயிர் மூச்சை அப்படியே விட்டு விடுவானா அவளது கணவன்..
ராஜேஸ்வரிக்கு எச்சரிக்கை விடுத்தவன் நேராக அவனுக்கு தெரிந்த போலீசிடம் யாராவது விபத்து ஏற்பட்டது போல செய்தி வந்ததா என விசாரித்தவன் கூடவே விக்கிக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்ற விஷயத்தை கூறவும் அவரும் அந்த நொடி யோசித்தவர், " இப்போ தான் சார் ஒரு போன் வந்துச்சி NH ரோட்டில் தான் விபத்து நடந்து இருக்குன்னு சொல்றாங்க "...என கூறவும்
சரி என்றவன் வேகமாக ஆம்புலன்ஸ் க்கு அழைத்து தகவல் கூறியவன் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றான்..
அதற்குள் அங்கே ஒரு கூட்டம் கூடி அவர்கள் அவனை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்க விக்கியோ அதுவரை உயிருக்கு போராடி யாராவது வந்து தன்னை காப்பாற்ற மாட்டாங்களா என தவித்தவனுக்கு கூடியிருந்த ஒரு சிலரும் அங்கே புயல் போல வந்திறங்கிய நண்பனை கண்டதும் சற்றே கண்கள் மின்ன ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்றான் விக்கி..
தன் நண்பன் தன்னால் இந்த நிலைக்கு ஆள் ஆகி விட்டானே என நெனைத்தவன் நொடியே அவனை நினைத்து வருந்தியவனுக்கு மேலும் இன்னொரு உயிர் ஊசலாடி கொண்டிருக்கிறதே அங்கே இருந்த ஆம்புலன்ஸில் அவனை ஏற்றி விட்டு தன் தாத்தாவை அழைத்து தகவல் கூறியவன் விக்கியை பார்த்து கொள்ளும் படி கூறி விட்டு தனது GPRSசை ஆன் செய்தான்..
மாயவன் வருவான்..
