அத்தியாயம் 21
மனம் விரும்புதே மாயவா
ஆம் ஈஸ்வர் கொலைக்காரன் தான் ராமா விலாசின் அனைத்து மரணத்திற்கும் இல்லையில்லை கொலைக்கும் அவனே காரணம் அந்த கயவன் தான் காரணம்..அதற்கு முதலில் பலி ஆனது தர்ம ராஜ் தான்..
ஆம் ஈஸ்வருக்கு ராஜேஷ்வரியின் மீது காதல் இருந்தது கூடவே பெண்கள் சகவாசமும் இருந்தது என்னவோ உண்மை தான் அவர் ஒரு செக்ஸ் பைத்தியம் என்றால் நம்ப முடிகிறதா ஆனால் அது தான் உண்மை ..குடிக்கவே மாட்டார் என அவரது வீட்டார் மார்தட்டி கூற அவரோ ஒரு கடைந்து எடுத்த குடிகாரர்..
அவருக்கு இல்லாத பழக்கமே இல்லை ஆனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது அது தான் அவரது சாமர்த்தியம் என்று தான் கூற வேண்டும்..
ஆம் அவர் மும்பையில் எந்த வேலையும் வைத்து கொள்வதில்லை எல்லாமே வெளியூரில் தான் வைத்து கொள்கிறார்..தொழிலை கவனிக்க செல்கிறேன் என வெளியூர் சென்றால் அவரது இஷ்டப்படி வாழ்ந்து விட்டு தான் வருவார்..
அப்படி இருக்கும் போது தான் ராஜேஸ்வரி மற்றும் தர்ம ராஜின் காதல் வெளிவருகிறது...ஈஸ்வரும் ராஜராஜனை வைத்து பல திட்டங்கள் தீட்ட அது எல்லாம் தவிடு பொடியாகி ராஜேஸ்வரி கர்ப்பம் ஆனது தான் மிச்சம்..
ராஜேஸ்வரியை திருமணம் செய்து இந்த சொத்துக்களை ஆளாலாம் என நினைத்தால் இதெல்லாம் மண்ணாகி போய் விடுமோ என நெனைத்தவர் மெல்ல ராஜேஸ்வரியை உசுப்பி விட்டு தர்ம ராஜின் தொழிலை தரைகுறைவாக பேச அது மிக சரியாக வேலைக்கு ஆனது..
கூடவே ராஜேஸ்வரியின் நம்பிக்கையை பெற ராஜேஷ்வரிக்கு உதவுவது போல ஈஸ்வர் நடிக்க ராஜேஸ்வரியும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் வலையில் வீழ்ந்தார்...
இந்த சமயம் பார்த்து தான் ஈஸ்வரின் சதியால் தர்ம ராஜ் மற்றும் ராஜேஸ்வரி சண்டையிட்டு பிரிய அன்றைய இரவு வீட்டை விட்டு வெளியேறிய தர்ம ராஜை தேடுவது போல சென்ற ஈஸ்வர் தர்ம ராஜ் எங்கே செல்கிறார் என வேவு பார்க்க அவரோ ஒரு ஹோட்டலில் தங்க சென்றார்...
அதோ பரிதாபம் அந்த ஹோட்டல் முதலாளி ஈஸ்வரின் நண்பராக இருக்க ஈஸ்வர் அவரை சந்தித்து அவருக்கு கொடுக்கும் உணவுகளில் மட்டும் போதை மருந்து கொடுக்க சொல்ல அவரும் அதை தொழிலாக செய்பவர் செய்ய மாட்டாரா என்ன ..செய்து விட்டார் ..ஆம் ஈஸ்வரின் சதியால் போதை பழக்கமே இல்லாத தர்மராஜ் போதைக்கு அடிமையாகினார்..
முதலில் தெரியமால் அவர் உடலில் செல்ல இறுதியில் அது இல்லை என்றால் வாழ இயலாது என்ற நிலை வந்ததும் தெரிந்தே அந்த வேலையை செய்ய துவங்கினார்...
ஆம் அவரால் போதை பழக்கத்தால் மரியாதையாக வேலைக்கு செல்ல முடியவில்லை அதிலும் ஈஸ்வர் அவர் எப்போது கேட்டாலும் சரக்கு கொடுக்க சொல்ல ,அவர் தங்கி இருந்த அறையின் வாடகை மற்றும் போதை மருந்து உணவு இதற்கு எல்லாம் ஈஸ்வர் தான் படி அளந்து கொண்டிருந்தார்..
இந்நிலையில் ஒரு நாள் ஈஸ்வர் அந்த ஹோட்டல் முதலாளியிடம் தர்ம ராஜை வெளியேற்றும் படி கூற அவரும் வெளியேற்றினார்..
இந்நிலையில் கையில் பணம் இல்லாமல் சுற்றி திரிந்த தர்ம ராஜ் மீண்டும் ராஜேஸ்வரியிடம் சண்டையிட அங்கிருந்தும் விரட்டப்பட்டார்..
கையில் பணம் இல்லாமலும் பழகிய பழக்கத்தை விட முடியாமலும் தவித்த தர்ம ராஜ் மீண்டும் அந்த ஹோட்டல் முதலாளியிடம் சென்று போதை மருந்து கேட்க அவரோ மறுத்தார்...
இறுதியில் தர்ம ராஜ் நிலைமை மிகவும் மோசமடைந்து சரக்கு கடை முன்னே பிச்சை எடுக்கும் நிலைக்கு செல்ல யாரோ ஒருவர் அவர் உறங்கி கொண்டிருக்கும் போது ஒரு பாட்டில் சரக்கும் போதை ஊசியும் வைத்து விட்டு செல்ல தர்ம ராஜ் கண் விழித்து பார்க்கும் போது அது இருக்கவும் வேகமாக குடிக்கவும் செய்தார் அந்த ஊசியை தன் கையில் தானே போட்டுக்கொள்ளவும் செய்தார்..இறுதியில் அந்த ஊசியின் வீரியத்தில் அதீத டோஸ் உடன் வேறு சில மருந்துகளும் கலக்கப்பட தர்ம ராஜ்க்கு மாரடைப்பு வந்தது..
பாவம் ஒரு பாவமும் செய்யாத தர்ம ராஜ் இவர்களின் சதி வலை என தெரியாமல் தன் கையாலே தனக்கான குழியை தோண்டிக் கொண்டார்..
அடுத்து ராஜேஸ்வரியை பெரியவர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார் ஈஸ்வர் என்னவோ ஈஸ்வர் ராஜேஸ்வரிக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கிறார் என பெரியவர்கள் நினைக்க ராஜேஸ்வரியோ தனக்கு தன்னை புரிந்து கொள்ளும் ஒரு உன்னதமான உறவு கிடைத்து இருக்கிறது என எண்ணி கொண்டார்..
இந்நிலையில் தான் ராஜராஜன் ராம மூர்த்தியிடம் காதல் என்ற வார்த்தையோடு வர ஒரு முறை சூடு பட்ட ராம மூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து தன் மகனுக்கு அவரது ஊரில் இருந்து பார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்...அவரும் தனக்கு விதித்த விதி இது தான் என தனது காதல் வாழ்க்கையை எண்ணி கொண்டே பார்வதியுடன் காலத்தை ஓட்டுகிறார்..
இதற்கு இடையில் ஒரு நாள் ஈஸ்வர் தொழில் முறையில் மீட்டிங் என்று வீட்டில் பொய் சொல்லிக்கொண்டு வெளியூர் சென்றார்..
அந்த சமயம் ராஜேஸ்வரி இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார்...ஆனால் ராஜேஸ்வரிக்கு தன் கணவனுக்கு செக்ஸ் அடிமை என்பது தெரியாது.. ஏனெனில் எப்போதும் அவரிடம் தாம்பத்தியத்தை நாடியது இல்லை ..
அதற்கு அவர் கூறுவது, "ராஜி மா உடலை விட உள்ளம் தான் பெரிசு"... என்று விலகி நின்று கொண்டு அவரது காதலை ராஜேஷ்வரிக்கு பறைசாற்றுவது போல நடிக்க அது போதுமே ராஜேஸ்வரிக்கு..
தன்னுடைய உள்ளம் தான் பெரிது என நினைத்து தன் உடலை கூட விரும்பாது தன் மனதை விரும்பும் ஒருவனா என அகம் மகிழ்ந்து போய் அன்று முதல் அவரை கண்மூடித்தனமாக நம்ப துவங்கினார்..அப்படி ராஜேஸ்வரி ஈஸ்வரின் வலையில் வீழ்ந்து உருவானவன் தான் அபி...
அப்போது அவர் வெளியூரில் உல்லாசமாக இருக்க போயிருந்த வேளையில் ராம மூர்த்தியின் மனைவி சிவகாமி மிகுந்த ஆன்மீக பக்தை அவர் எப்போதும் பல கோவில்களுக்கு சென்று வருவார் யாருடைய துணையும் தேவை இல்லாது அவர் அவருடைய நண்பர்களுடன் சென்று வருவார் அப்படி இருக்க தீடிரென ஒரு ஆன்மீக பயணம் போவதற்கான வாய்ப்பு ஒன்று கிடைத்தது..
அவரும் அங்கு செல்ல அங்கு அவர் கண்ட காட்சி அவரின் உடல் பொருள் மெய் ஆவி அனைத்தையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருந்தது..
ஆம் ஈஸ்வர் குடி போதையில் ஒரு பெண்ணுடன் சல்லாபித்து கொண்டிருந்தார் அதுவும் வீதியில் போதை மிகுதியில் அவரது கை அந்த பெண்ணின் அங்கத்துகுள் இருந்தது அவரது மற்றொரு கையோ அவளின் இடுப்புக்குள் விட்டு சுற்றி கொண்டிருந்தார்..
இதை கண்டு வெகுண்ட சிவகாமி தன் மகளின் வாழ்க்கை இப்படி நாசம் போவதை கண்டவர் நேராக செல்லவும் இயலாத சூழ்நிலை ஏனெனில் குடும்ப மானம் தத்தளித்து போவதையும் பிறர் வாய்க்கு அவில் இட வேண்டாம் என கருதியும் அவர் அமைதியாக இருந்தவர் வீட்டுக்கு வந்ததும் ராம மூர்த்தியிடம் மட்டும் நடந்த விஷயத்தை கூறினார்...
அதை கேட்ட ராம மூர்த்தியோ அதிர்ச்சி அடைந்தாலும் அதே சமயம் நிதானத்தை கை விடாமல் , "நான் பார்த்துக்கறேன் மா நீ உன்னை வருத்திக்காத என்னை தவிர வேறு யார் கிட்டயும் நீ இந்த விஷயத்தை சொல்லாத "...என்று கூற அவரும் சரியென்று தலையாட்டினார்..
ஆனால் ராம மூர்த்திக்கு முன்பே அவரது மருமகன் மீது துளி சந்தேகம் வந்தது அது என்னவென்றால் ஒரு முறை அவர் அலுவலகம் விட்டு வரும் போது ஈஸ்வர் தர்ம ராஜ் தங்கி இருந்த ஹோட்டல் முதலாளியிடம் சர்வ சாதாரணமாக பேசி கொண்டிருந்தார்...அதை கண்ட அவருக்கு அப்போது எந்த விதமான சந்தேகமும் எழ வில்லை அதே நேரம் தர்ம ராஜ் இறந்த சமயம் அவரது தந்தை வேலாயுதம் குமுறி அழுது கொண்டே , "அவன் உடம்புல ஆல்ஹகால் இருக்குன்னு சொல்றாங்க போதை பழக்கம் இருக்குன்னு சொல்றாங்க ஆனால் அவனுக்கு இந்த மாதிரி எந்த பழக்கமும் இல்லையே "..என்று அழுது கொண்டிருக்கும் போதே
அதே ஹோட்டல் முதலாளி வந்து, " ஐயா உங்க பையனோட பொருள்".. என்று அவருடைய உடை எல்லாம் கொண்டு வந்து கொடுக்க அதை கண்ட அவர் வெடித்து அழுதது இப்போதும் ராம மூர்த்திக்கு நினைவு இருக்கிறது..
தர்ம ராஜ் காணாமல் போயிருந்த வேளையில் கூட , "நான் தர்மாவை தேடுறேன் மாமா நீங்க கவலைபாடதீங்கன்னு".. சொன்னானே பிறகு கூட ,"மும்பையில் எல்லா ஹோட்டல்ஸ்லையும் தேடிட்டேன் அவன் எங்கேயும் இல்லன்னு".. சொன்னானே என்று நினைத்தவர்,
அதே நேரம் தர்ம ராஜ் மறைந்து ஆறு மாதம் கூட முடியவில்லை அதற்குள், " மாமா என்னால ராஜியை இப்படி பார்க்க முடியல இவ்ளோ நாள் உங்க வீட்டு உப்பை தின்னுட்டேன் அதுக்காக கேக்கிறேன் ராஜியை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்க காலம் பூரா நான் அவளுக்கு நாயா கிடந்து சேவகம் பன்றேன் போறவங்க வரவங்க எல்லாம் அவளை தப்பா பேசுறாங்க காது கொடுத்து கேட்க முடியல "...என்று கண்ணீர் மல்க கூற அதில் கரைந்த ராம மூர்த்தி மகளை பார்க்க மகளின் மௌனமே கூறியது அவளுக்கு அவனை பிடித்து இருக்கிறது என்று அப்படி தான் அவர்கள் திருமணம் நடைபெற்றது..
இப்படி அவன் ஒவ்வொரு காயாக நகர்த்துகிறானோ என அவர் சந்தேகித்து ஈஸ்வரை கண்காணிக்கும் போது தான் அவருக்கு ஒரு தகவல் வந்தது அவரது மனைவி கோவிலுக்கு சென்ற போது அங்கே கிடைத்த பிரசாதத்தை உண்டவர் மயங்கி விழுந்தார் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறோம் என்று தகவல் வர அதிர்ச்சியில் உறைந்தவர் மருத்துவமனைக்கு சென்ற போது அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து இருந்தார் ..
மேலும் அவன் உண்ட பிராசதத்தில் விஷம் கலக்கப்பட்டு இருப்பதாக கூறவும் அதிர்ச்சியில் உறைந்தவருக்கு தன் மருமகனாக இருப்பானோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை ...
ஆனால் அவருக்கு வாயை விட பயம் என்ன செய்வதென்று யோசித்தவர் ஈஸ்வரை போலவே நடிக்க ஆரம்பித்தார்...ஒன்றும் தெரியாதது போலவே இருக்க ஆரம்பித்தார்..
அந்த சமயம் தான் அவருடைய நண்பரும் வக்கீலுமான பால கிருஷ்ணனை சந்தித்து விஷயத்தை கூற அவரோ போலீசில் தெரிவிக்க சொன்னார் அதற்கு மறுத்த ராம மூர்த்தி குடும்ப மானம் போய்விடும் என கூறியும் அவரிடம் தான் ஈஸ்வர் தான் இதை செய்தார் என்ற எந்த வித தடயமும் இல்லையே எதை வைத்து அவர் ஈஸ்வரை குற்றம் சாட்டுவார் என அவர் கூற பாலகிருஷ்ணனும் சரி என கூறி அவருக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்தார்..
அவரிடம் தன் மன குமுறலை கூறுவதற்காகவே ராம மூர்த்தி அமெரிக்கா தொழில் விஷயமாக செல்லும் போதெல்லாம் அங்கு செல்ல அப்போது அவரது வீட்டில் அவரது மகன் விக்கியுடன் ஒரு சிறுவன் விளையாடி கொண்டிருந்தான் அவனிடம் விளையாடி கொண்டிருந்தாலும் அவன் கண்கள் அந்த நேரம் அவனை யார் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க அவனது அந்த செயல் ராம மூர்த்தியை வெகுவாக கவர்ந்தது..
அந்த நேரம் பார்த்து அந்த சிறுவனை அழைப்பதற்காக வந்த வேலாயுதத்தை கண்டதும் புரிந்து போனது அது அவருடைய பேர மகன் தான் என்று பின் அவர் வருடாவருடம் பிருத்திவியை காணாவே செல்ல சிறு வயதிலேயே பக்குவப்பட்ட குழந்தையாக வளர்ந்த பிருத்திவியிடம் வேலாயுதம் மற்றும் ராம மூர்த்தி நடந்த விஷயங்கள் மற்றும் வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கூற தனது தாயை அறவே வெறுத்தான்..
கூடவே தன் தாயிடம் இருந்து தன் தந்தையின் நிலத்தை வாங்க வேண்டும் என வெறி கொண்டான்..
இந்த நிலையில் ஒரு நாள் ராஜராஜனுக்கும் ஈஸ்வரின் குணம் தெரியவர அவரோ அவனது சட்டையை பிடித்து கேட்க அப்போது ராஜராஜனிடம் அழுது சமாளித்த ஈஸ்வர் அதற்கு பரிசாக ஒரு விஷேசத்துக்கு சென்ற ராஜராஜன் மற்றும் அவனது மனைவி பயணித்த காரை விபத்துக்கு உள்ளாக்கினார்..
இந்த விஷயம் அறிந்த ராம மூர்த்தி நிலை குலைந்து போனார் ..இந்த முறை ஈஸ்வர் மேல் ஆத்திரம் கூட வந்தது..தன் மகனையும் கொன்று விட்டானோ இந்த முறையும் அவன் தான் செய்து இருப்பான் என்று அவரது உள்மனம் கூறியது ஆனால் அதை வைத்து அவரால் வாதாட முடியாதே இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று அவர் நினைத்தார்..
அவனுடைய அடுத்த இலக்கு நான் அல்லது சம்யூவாக இருக்கலாம் என்ற தோன்றியது..அவர் கண் முன்னே மகனின் மகள் பத்து வயதை அடைந்து நிற்கிறாள்..அவளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அமெரிக்கா சென்றார் பால கிருஷ்ணன் மற்றும் வேலாயுதத்திடம் விஷயத்தை கூற இந்த முறை அவர்கள் கூட கோபமாக போலீசில் தெரிவிக்கலாம் என கூற ராம மூர்த்தி மறுத்து விட்டார்..
வேண்டாம் என்னை நம்பி என் பேர பிள்ளைகள் இருக்கின்றன..அவர்களுக்கு யாரும் இல்லை என்று கூறியே மறுத்து விட்டவர் சொத்துக்களை பிரிக்க முடிவு செய்தார் அதன் படி பிருத்திவிக்கு 50 சதவிகிதம் மற்றும் சம்யூ மற்றும் அபிக்கு சேர்ந்து 50 என முதலில் எழுதலாம் என முடிவு செய்தார்..
இந்நிலையில் தான் ஒரு சில நாட்கள் கழித்து ஒரு நாள் ராம மூர்த்தி பத்திரத்தை தேடுவதற்காக தனது அலமாரியை குடையும் போது ஒரு டயரி தென்பட்டது அதை பிரித்து பார்த்தால் ராஜராஜன் கைப்பட எழுதிய டயரி.. "என்னால் என் காதலியை மறக்க இயல வில்லை என்றும் அவளுக்கு என் மீது காதல் அதிகம் ..எனக்கு திருமணம் ஆனது தெரிந்தும் கூட அவள் என்னை மறக்காமல் இருக்கிறாள்..அவளிடம் என்ன வேண்டும் என கேட்டேன் என் உதிரத்தை சுமக்க வேண்டும் என கூறினாள் அதனால் நான் அவளுக்கு விருப்பமான காதலை கொடுத்தேன் அந்த வகையில் எனக்கு சம்யூ அல்லாது ஒரு பெண் கூட உண்டு அவள் பெயர் சோனாலி இதை எனக்கு உங்களிடம் கூற பயம் அப்பா ..நான் என்ன செஞ்சாலும் அது தப்புன்னு ஈஸ்வர் சொல்லுவான் அதையே தான் நீங்களும் சொல்வீங்க இந்த விஷயத்தையும் நீங்க தப்புன்னு சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும் அப்பா அதுனால தான் எழுதி உங்க அறையில் வைக்கிறேன் என்னிக்காவது ஒரு நாள் நீங்க இதை எடுத்து பார்த்து படிச்சு என்னை திட்டினா கூட பாரவாயில்லை அப்பா"... என்று அவரது டயரியில் எழுதி வைத்திருந்தார்...அதை ராம மூர்த்தி அறையில் ஒளித்து வைத்திருந்தார்..
இந்த செய்தி அவருக்கு புதிது ராம மூர்த்தி நொந்து விட்டார் என்றே கூற வேண்டும் அதில் ராஜராஜன் எழுதி வைத்திருந்த முகவரியில் சென்று பார்க்கும் போது அங்கு குழந்தையும் தாயும் இருந்தது..
ஆனால் அவர் இருந்த நிலையில் புதிதாக ஒரு உறவை உருவாக்கவோ அவருக்கென்று இருக்கும் சிக்கலில் இவர்களையும் இழுத்து விட மனம் வரவில்லை அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து அந்த ஊர் பெரியவரிடம் அந்த குழந்தையின் படிப்பு செலவை ஏற்று கொள்கிறேன் என்று கூறி அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி கொள்ள விருப்பம் இல்லை என்று கூறி விட்டு மாதாமாதம் சோனாலியின் படிப்பு செலவுக்கு பணம் அனுப்பி வைத்து கொண்டிருந்தார் அவர் இறக்கும் வரை அவர் செய்து கொண்டிருந்த பணிகளை எல்லாம் தனது பேரமகனான பிருத்வியிடம் ஒரு முறை கூற அப்போது அவன் 22 வயது கட்டிளம் காளையாக வளர்ந்து தொழில் தொடங்கும் வேளையில் மும்முரமாக இறங்கி இருந்தான்..
"பிருத்திவி கண்ணா "..என்று அவர் ஆரம்பிக்கும் போதே அவர் என்ன கூற வருகிறான் என கணித்தவன்,
" இதோ பாருங்க தாத்தா நீங்க நல்லவங்க தான் நான் ஒத்துக்கறேன் அதே நேரம் உங்க குடும்ப சிக்கலை என்னை வெச்சு தீர்த்து கொள்ள வேணாம் எனக்கு உங்க குடும்ப விஷயம் தெரியவும் வேணாம் எனக்கு உங்க சொத்தும் வேணாம் எதுவும் வேணாம் எனக்கு சம்பாதிக்க திறமை இருக்கு ஆனால் என் அப்பாவோட நிலத்தை நான் எப்படி இருந்தாலும் வாங்கி இருப்பேன்" என்று கூறியவனுக்கு தாய் என்ற முறையில் ராஜேஸ்வரியின் உறவுகளே வேண்டாம் என்று தான் இருந்தான் அவரது தாத்தா நல்லவர் தான் ஆனால் தாய் என்ற உறவு முறையாக அந்த சொத்தை அடைவதில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை..
அவர் எவ்வளவோ கூறியும் காது கொடுத்து கேட்காமல் இருந்தான் பிருத்விராஜ் அந்த அளவுக்கு அவனுக்கு அவனது தாய் மீது வெறுப்பு இருந்தது அப்படி இருக்கும் வேளையில் அடுத்த வருடம் சம்யூவுக்கு பதினெட்டு வயது இருக்கும் போது அவளது , "தாத்தா இது போல பிராயணம் செய்யும் போது அது என்ன நீங்க மட்டும் என்னை போறீங்க எங்களையும் கூட்டிட்டு போங்க "...என்க அவரோ மறுத்துவிட்டார்..
அடுத்த இரு வருடத்தில் பிருத்வி இந்தியா வந்தான் அதற்குள் அவனது வளர்ச்சி அபாரமாக இருந்தது..அப்போதும் அவனை பொதுவெளியில் காணாமல் மறைமுகமாக கண்டு வந்தார் ராம மூர்த்தி அப்படி ஒரு நாள் தாத்தாவும் பேத்தியும் வாக்கிங் செல்லும் போது அந்த பக்கமாக பிருத்வி தனது காரில் வந்து கொண்டிருந்தான்...
சம்யூவோ அவள் வளர்த்து வரும் நாயையும் சேர்த்து அழைத்து வர அது ஒரு கட்டத்தில் அவள் கையில் இருந்து துள்ளி குதித்தோட நாயை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் சம்யூ..
அதிலும் சிறு ஷார்ட்ஸ் மட்டும் கையில்லாத பனியன் அணிந்து தன் முன்னால் ஓடும் நாய் குட்டி போல துள்ளி ஓடி வருவதை பார்த்தவனுக்கு தன்னை நோக்கி வருவது போலவே இருக்க காரின் வேகத்தை குறைத்தவன் மெல்ல அவளை நோட்டம் விட்டவன் அந்த நொடி அவளது காலடியில் விழுந்து விட்டான் என்பதில் அவனுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை..
பார்த்த ஒரு நொடியில் இவ்வளவு ஈர்ப்பா ஒரு பெண்ணால் என்னை வீழ்த்த முடியுமா என்று பத்து முறையாவது கேள்வி கேட்டவன் அவளை நோட்டம் விட அவளோ இவனின் காரின் முன்னே ஓடி வந்து குனிந்து அவள் துரத்தி வந்த நாயை தூக்கியவள் அந்த நாய்க்கு முத்தம் கொடுக்க இங்கே பிருத்திவியின் இதயம் வெடித்து கொண்டு இருந்தது..
பேசாமல் காரை ஸ்பீடில் ஓட்டி அந்த நாயை கொன்று விடலாமா என்று கூட நினைத்து விட்டான்..
"ஹே அவ இதழ் என்னுடையது".. என்று அவன் மனம் மானசீகமாக அந்த நாயோடு சண்டையிட அதற்கு தகுந்தது போல அந்த நாயும் இவனது காரை பார்த்து குரைக்க பிருத்திவிக்கு கடுப்பு தான் வந்தது..
அவளோ , "சுவீட்டி வா போலாம் என மீண்டும் நாயை முத்தமிட்டு அவனை வெறுப்பேற்றி நாயை தூக்கியபடியே கொஞ்சிக்கொண்டு செல்ல பின்னால் அவளது தாத்தா மெதுவாக நடந்து வர அவருடன் போய் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்..
அப்போது தான் அவனுக்கு புரிந்தது இது யார் என்று கண்ட நொடியே இவளை அவனுடையவள் என அவனது மனம் கூறி இருக்க அவன் எடுத்த முடிவை சற்றே மாற்றி சம்யூவை அவனுடையவளாக எடுத்து கொள்ள முடிவு செய்தான்..
இதை ராம மூர்த்தியிடம் கூறவில்லை என்றாலும் அவர் அவனது காரையும் அவனையும் கண்டு கொண்டார் என்பதில் சந்தேகம் இல்லை...
இப்படி தான் உயில் எழுதி வைத்திருந்தாலும் அதை எல்லாம் அமெரிக்க வக்கிலிடம் அவர் கையில் உள்ள எல்லா தகவல்கள்,ஒரு சில வீடியோக்கள்(தான் இறந்து விடுவோம் என முன்பே கணித்து வைத்து அவர் எடுத்து வைத்திருந்தது) அனுப்பி வைத்தவர் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் பதுக்கி வைத்தார் என்றே கூறவேண்டும் ஆனால் வெளியே ராம மூர்த்தி மூச் கூட விடாமல் இருந்தார்..
எவ்வளவு நாள் தான் இப்படியே ஒட்டுண்ணியாக இருப்பது என முடிவு செய்த ஈஸ்வர் இறுதியாக ராஜேஸ்வரி மூலம் பெரியவர் கம்பெனியையும் அவரது நிறுவனத்தோடு இணைத்தவர் மேலும் பெரியவர் இறந்தால் தான் தனக்கு ஒரு பெயர் கிடைக்கும் என்று முடிவு செய்தவர் ஒரு நாள் பெரியவர் மாடியில் இருந்து இறங்கும் போது யாரும் காணா வண்ணம் எண்ணெய் ஊற்றி விட பெரியவரும் அதை அறியாது மிதித்து ஈஸ்வர் எண்ணியது போல வழுக்கி படிகளில் உருண்டு விழுந்தார்..
அவரின் இடுப்பு எலும்பு உடைந்து போனது கூடவே அதற்காக சிகிச்சை எடுத்து தேறினாலும் அவரால் பழைய போல எழுந்து நடக்க இயலவில்லை படுத்த படுக்கையாக கிடந்தார்...பின் மெல்ல மெல்ல வயோதிகம் காரணம் அவரது உயிரும் பிரிந்தது..
ஆனால் பாவம் அவராக இருந்ததால் இவ்வளவு தூரம் பிடித்து இவர்கள் உடன் வாழ்ந்து வந்தார்..வேறு யாராக இருந்தாலும் இந்நேரம் தற்கொலை செய்து இருப்பார்கள்..அவரால் இவர்கள் கயவர்கள் என தெரிந்தும் அவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை..தன்னால் முடியாததை தன் பேரமகன் செய்வான் என்ற நம்பிக்கையில் அவர் மரணம் அடைந்தார்...
நடந்ததை எல்லாம் ஒரு வரி விடாமல் பிருத்வி ராஜேஸ்வரியிடம் கூறி முடித்தவர் மீண்டும் , "இதையும் நான் உங்ககிட்ட சொல்லி இருக்க மாட்டேன் ஆனால் உங்க அப்பாவோட விருப்பம் இதெல்லாம் உங்களுக்கு தெரியனும்னு தெரிஞ்சிக்கிட்டிங்கன்னு நெனைக்கிறேன் தயாராக இருங்க உங்க புருஷன் சாவுக்கு..பயப்படாதீங்க நீதி நேர்மை நியாயம்ன்னு கோர்ட் வாசல் எல்லாம் ஏறி இறங்குற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை" ...என்று பிருத்வி ராஜேஷ்வரியின் முகத்தை கூட காண பிடிக்காமல் மொபைலை நோண்டி கொண்டு பேசிக்கொண்டிருக்க அப்போது தான் புது எண்ணில் இருந்து அவனுக்கு ஒரு செய்தி வந்தது..
"உன் மனைவி இன்று இரவு என்னுடன் கழிக்க போகிறாள் என்றும் உன் நண்பன் அடிபட்டு கிடக்கிறான்..யார் உயிர் உனக்கு முக்கியமோ வா வந்து அழைத்து செல்".. என்று அந்த செய்தி இருக்க அதை கண்டவன் மூளை ஒரு நொடி நின்று வேலை செய்தது அதிர்ச்சி தான் இருந்தாலும் வேகமாக அவன் கையில் அணிந்து இருந்த கைகடிகாரத்தில் ஏதோ தேடியவனின் முகம் செந்தனலாய் சிவந்து இருக்க வேகமாக தன் இருக்கையை விட்டு எழுந்தவன் ,"உன் புருஷன் பொணத்தை தேட தயாரா இரு அவனை இது நாள் வரை விட்டு வைச்சதே என்கிட்ட நேரடியா மோதனும்னு தான் மோதிட்டான் என்னோட கண்ணில் இரண்டையும் பிடுங்கி வெச்சு என்கிட்டேயே பூச்சாண்டி காட்டுறானா நான் அவனை அழிக்கிறேன் நீ உன் பொட்டை அழிக்க தயாரா இரு "..என்று எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து புயல் போல கிளம்பி விட்டான்.. ராஜேஸ்வரி என்ற சிலை தான் கேட்டது எல்லாம் உண்மை தானா என அதிர்ச்சியில் மூச்சு பேச்சு இல்லாமல் உறைந்து அமர்ந்து இருந்தார்...
மாயவன் வருவான்...
