Share:
Notifications
Clear all

அத்தியாயம் 20

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

அபியின் அலுவலகத்தில் அபி பணி செய்து கொண்டிருக்கும் போது சோனாலி அவளை பார்த்து கொண்டே இருந்தாள் இவனுக்கு நம்மை நியாபகமே இல்லையா இல்லை நடக்கிறாரா?? என்ற கேள்வியில் அவனை பார்த்தவள் அவனை உற்று பார்க்க தொடங்கியவள் அவனை வரிவரியாக ரசிக்க துவங்கி விட்டாள்..

அலைலையான கேசம் ,சீரான நெற்றி கூரான மூக்கு மீசையில்லாமல் கூட ஆப்பிள் தக்காளி போல இருந்தாலும் அழகாக கம்பீரமாக இருக்க முடியுமா எங்கேயோ தென் இந்திய தோசையின் வாடை தென்பட்டாலும் ஆனால் அதை வட இந்திய பாவ் பாஜி மூலம் ஒளித்து வைத்திருக்கிறான் என சோனா நினைக்கும் போதே, " என்ன சோன் பப்டி இன்னிக்கு என்னை இப்படி பார்க்கிறா பசு எதுக்கு இப்படி வெறிக்குது"... ..என மனதில் கூறிக்கொண்டே அவளை பார்த்தவன் விழிகளில் வெண்ணிற சிற்பம் போல வெள்ளை நிற உடையில் அழகாக ஒளிர்ந்தவளை அருகே நிறுத்தி அவளது வாசத்தை உணர வேண்டும் என அபிக்கு தோன்றியது ..

ஆனால் அதை இப்போது செய்தால் இவள் அவனை அடித்தே கொன்று விடுவாள் என்ற பயம் அவனுள் எழுந்ததால், " ராட்சஷி என்னை கொல்ற டி "..என்று முனக அதை தெள்ள தெளிவாக அவள் கேட்டு விட்டாள்..ஆனால் அந்த கள்ளியோ தனக்கு தமிழ் தெரியும் என்பதை அவனிடருந்து மறைத்து விட்டாள்..மேலும் அவனை உள்ளுக்குள் அவளும் ரசிக்கவே தொடங்கினாள் ஆனால் மனதுக்குள் பூட்டி ஒளித்து வைத்து கொண்டாள்... அவன் தனது முதலாளி நான் ஒரு தொழிலாளி என்பதில் அவள் உறுதியாக இருப்பதாலேயே இந்த முடிவை அவள் தேர்ந்தெடுத்து இருந்தாள்.. இதை அறியாத அபியோ அவளின் கடைக்கண் பார்வைக்காகக் காத்து கொண்டு இருக்கிறான்...

**********

ராஜேஸ்வரியின் கார் பிருத்திவியின் அலுவலகம் நோக்கி பறந்தது...அவருக்கு பிரித்வியிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்..ஆனால் அவன் பதில் அளிப்பானா என்று தான் தெரியவில்லை..இருந்தாலும் அவனை கண்டே ஆக வேண்டும் என முடிவு செய்து இருந்தார்...

புயல் போல உள்ளே நுழைந்த ராஜேஸ்வரி பிருத்திவியை சந்திக்க வேண்டும் என்று கூற அங்கு பிருத்வி இல்லை ..அவர் , "தர்மா ஹோட்டல்ஸ் போய் இருக்கார்"... என்று உதவியாளர் தகவல் கொடுக்க பிருத்திவியை காண்பதற்காக அங்கு சென்றார்...அவன் இந்த நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் அவனிடம் இன்று பேசியே ஆக வேண்டும் என நினைத்து இருந்தார் ராஜேஸ்வரி...

கடந்த வாரம் வரை அவர் கையிலிருந்த இந்த சொத்து இப்போது அவன் கையில் இருப்பாதாலோ இல்லை உண்மை சுடுவதாலோ என்னவோ தெரியவில்லை..அவருடைய கால்கள் தள்ளாடின..காருக்குள் இருந்த போதும் கூட அவரால் அந்த இடத்தில் நுழையும் போது ஒரு வித குற்ற உணர்வு எழுந்ததை அவரால் தடுக்க இயலவில்லை...

அவரது கார் உள்ளே நுழையும் போதே இரண்டாவது தளத்தில் இருந்த அவனது அறையில் இருந்து கண்டு கொண்ட பிருத்திவிக்கு அவர் எதற்காக வந்து இருக்கிறார் என்பது தெரியமால் இல்லை...

ராஜேஸ்வரியின் வருகையை நேற்றே எதிர் பார்த்தான் ஆனால் இன்று நான் இருக்கும் இடம் தேடி ஓடி வருவார் என எதிர்பார்க்காதவன் இதோ அவர் வெளியே நின்று கதவை தட்டியும் உடனே வர சொல்லாமல் காக்க வைக்கிறான்..

ராஜேஸ்வரிக்கோ அவன் செய்த செயல் அவருக்கு கடுப்பை கொடுத்தாலும் மீண்டும் கதவை தட்ட, " எஸ் கமீன் "...என்ற கம்பீர குரல் ஒன்று வெளிப்பட்டது..

ராஜேஸ்வரி உள்ளே நுழைந்து தன் மகனை தலை முதல் கால் வரை முதன் முதலாக பார்ப்பது போல பார்த்தார் ..தான் ஏன் பார்க்கிறோம் என அவருக்கு தெரியவில்லை..அவன் மீது கோபம் வந்தாலும் ஏதோ ஒரு உணர்வு ராஜேஸ்வரியை ஆட்கொண்டது..

ஏற்கனவே அவனை பல முறை கண்டிருந்தாலும் இன்று அவருள்ளே சொல்ல முடியா ஒரு உணர்வு வந்து வாட்டியது ..

அவரின் ஒவ்வொரு அசைவையும் கண்டு கொண்டிருந்த பிருத்திவியோ, " வாங்க வாங்க மிசஸ் ஈஸ்வர் உக்காருங்க "...என்று தர்மராஜின் ஆளுயர படம் இருக்கும் திசை நோக்கி இருக்கும் நாற்காலியில் அமர சொல்ல அவரோ பதில் ஏதும் கூறாமல் அமர்ந்தவர் தர்ம ராஜின் புகைப்படத்தை பார்த்து அதில் பிருத்திவியின் முகத்தை மனக்கண்ணில் வைத்து பார்க்க சர்வ லட்சணமும் பொருந்தி இருந்தது ..

இது ஏன் என் கண்ணில் படாமல் போனது..தர்மராஜ் இலேசாக கிராமத்து வாடையில் இருப்பார் என்றால் இவனோ பக்கா அமெரிக்க வாசத்தில் இருப்பதாலோ அவருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை..

இது எந்த ஒரு தாய்க்கும் இந்த சூழல் வர கூடாது தான் பெற்ற மகனையே இவன் தன் மகன் தானா என தேடும் கண்கள் அந்த தவிப்பு யாருக்கும் வர கூடாது ஆனால் இதை எல்லாம் ராஜேஷ்வரி மனதில் நினைத்தாலும் வெளியே அதை காட்டாமல் அமர்ந்து இருக்க

"என்ன ராஜேஸ்வரி மேடம் வந்ததில் இருந்து எதுவும் பேசாமல் அமைதியா இருக்கீங்க சொல்லுங்க என்ன விஷயம் உங்க பொருள் ஏதாவது இங்கே விட்டுடீங்களா?? "...என்று ஒரு சூடான கேள்வியோடு பிருத்வி ஆரம்பிக்க,

ராஜேஸ்வரியோ தர்மராஜின் புகைப்படத்தை பார்த்து, " தர்மா"... என்க

"எஸ் தர்மராஜ் என்னோட அப்பா தான் அதுக்கு என்ன மேடம்??"... என்க

ராஜேஸ்வரிக்கு புரிந்தது அவனுடைய வாக்கின் சூடு இருந்தாலும், " நான் யாருன்னு உனக்கு தெரியுதா ??"...என்க

"ஹ்ம்ம் நீங்க தி கிரேட் ராஜேஸ்வரி மேடம்.. ஈஸ்வரோட மனைவி ராம மூர்த்தி அவரோட பொண்ணு மும்பையில் தொழில் வட்டாரத்தில் இரும்பு மனுஷின்னு ஒரு பேர் கூட உங்களுக்கு இருக்கு..உங்களோட சுய புகழ்ச்சியை கேட்க தான் இங்கே வந்தீங்களா?? மன்னிக்கனும் எனக்கு சமயம் இல்லை அதே நேரம் எந்த ஒரு விஷயத்தையும் நான் சும்மா செய்யறது இல்லை "...என்று ராஜேஸ்வரியின் மூக்கை உடைப்பது போலவே பேசினான்..

"நான் உனக்கு யார்ன்னு தெரியுதா??"... என்று அவரும் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க

அவனோ, " ஏன் தெரியாது உங்களுக்கும் எனக்கும் ஒரு பத்து மாச கடன் இருக்கு வேற என்ன ??"... என்று அவன் வெறுப்பாக கூற

"தெரிஞ்சுமா என்கிட்ட இப்படி நடந்துக்கற??"...

"உங்களை பத்தி நல்லா தெரிஞ்சதுனால தான் நான் இப்படி நடந்துக்கறேன்".....

"பிருத்வி "..என்று கத்த

"பேரை சொன்ன மரியாதை கெட்டுடும் என்னை பத்து மாசம் சுமந்த பாவத்துக்காக பேசாமல் இருக்கேன் சும்மா ஏதாவது பேசிட்டு வந்து அவமானப்பட்டு போகதீங்க

இல்லை தெரியாமல் தான் கேக்கிறேன் என்னை சுமந்ததே பாரமா நினைச்சிட்டு இருந்த உங்களுக்கு இப்போ என்ன மகன் பாசம் பொத்துக்கிட்டு வருது.. இதை எல்லாம் ஏமாற தர்மராஜானால அவர் பெத்த பையனால முடியாது "...என்க

"நீ செத்துட்ட என்கிட்ட சொன்னாங்க"...இதை கூறும் போதே ராஜேஸ்வரியின் குரல் உள்ளே போய் இருந்தது..

"யார் சொன்னா ?? இதை இருபத்தெட்டு வயசு ஆம்பிளையா உங்க கண் முன்னாடி இருக்கேனே..அதெப்படி உங்களுக்கு தான் என்னை பார்க்கிறதே பிடிக்காதே இதுல நான் செத்துட்டேன்னு சொல்லாட்டி மட்டும் நீங்க தூக்கி கொஞ்சிடுவீங்க

இதோ பாருங்க நீங்க என்னை பெத்தீங்கன்னு எந்த இடத்திலும் எனக்கு சொல்றது எனக்கு பிடிக்காது நான் சொல்லவும் மாட்டேன்..அதை இன்னிக்கு வரை அசிங்கமா நெனைச்சுட்டு இருக்கேன் எனக்கு அப்பா மட்டும் தான் அவரும் இறந்துட்டார்"... என்று கூறியவன், " இனி இதை பத்தி பேச ஒன்னும் இல்லை வேற ஏதாவது பேசனுமா ??"... என்று பேச்சை முடிக்க பார்த்தான்...

அவனது ஒவ்வொரு கேள்வியும் தன்னை ஈட்டியாக குத்தி கீற அந்த இடத்தில் அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போனது ஆனால் அவன் விடவில்லையே அவனுக்கு கேட்க நிறைய கேள்விகள் இருந்ததே..

"இப்படி எல்லாம் பேசுறவன் எதுக்கு இந்த சொத்தை வாங்கிட்டு போன??"... என்று ராஜேஸ்வரி கேட்க என்ன தான் அவர் குமைந்தாலும் இந்த கேள்வி அவரை குடைந்தது போல...

"ஹா ஹா நல்ல கேள்வி..இது நான் எதிர்பார்த்த கேள்வி தான்.. உங்க காலடி மண் கூட நான் இந்த நொடி வரை வாங்கல ...அது எனக்கு தேவையும் இல்ல ..இதோ இந்த இடம் என்னோட அப்பா கஷ்டப்பட்டு வாங்கினது.. எனக்கு மட்டுமே உரிமையானது அதை எந்த லெவலுக்கு போனாலும் கைப்பற்றனும்ன்னு நினைச்சேன் அதுக்கு தான் இத்தனை வேலை செஞ்சேன் நேர்மையா பணத்தை கொடுத்து கூட வாங்கலாம் ன்னு இருந்தேன் ஆனால் உங்களை பார்ட்னர் ஆஹ் வெச்சுக்க எனக்கு விருப்பம் இல்லை அதுனால தான் இப்படி செஞ்சேன் "...என்று பிருத்வி கூற

"இந்த இடம் தர்மாவுடையது தான் ஆனால் அதை இந்த அளவுக்கு வளர்த்தி இருக்கேன் நான்..உன் அப்பானால இதெல்லாம் முடியும்னு நெனைக்கிறியா?? "...என்று கொஞ்சம் பெருமையாகவே கூற

அதை கேட்டு பிருத்வி சும்மா இருப்பானா ??," என் அப்பா அப்படியே வித்து நஷ்டமடைஞ்சாலும் உங்களுக்கு என்னங்க அக்கறை?? அவரோட இந்த இடம் வேணும் அவர் வேணாமா?அந்த மனுசன் என்ன காதல் உங்க மேல வெச்சிருந்தா உங்க பேர்ல அந்த இடத்தை வாங்கி இருப்பார்.. ச்ச "...என்று காரி உமிழ ராஜேஸ்வரிக்கு செருப்பில் அடித்தது போல இருந்தது இருந்தாலும் விடவில்லை

" அதெப்படி வயித்துல வளர குழந்தையை கொன்னுடுவேன்னு சொல்லி தானே நீங்க மிரட்டி பணம் வாங்கி இந்த தொழிலை தொடங்கினீங்க அப்படி என்ன அது பெரிய புடலங்காய் தொழில்னு தான் அதை அழிச்சேன்..

என்ன எனக்கு இதெல்லாம் தெரியும்னு பார்க்கறீங்களா உங்க அப்பா எல்லாம் தெளிவா என்கிட்ட உங்களை பத்தியும் உங்க புருஷனை பத்தியும் சொல்லி இருக்கார்..நானும் மூணு வருஷம் உங்களை பத்தி நல்லா அலசி ஆராய்ஞ்சு தான் இங்கே வந்து இருக்கேன் சோ சும்மா கட்டுக்கதை கட்டுற ஐடியா இருந்தா விட்டுடுங்க...அதை எல்லாம் உங்களுக்கு கூஜா பிடிக்கிற மாதிரி நடிச்சிட்டு இருக்கானே உங்க புருஷன் அந்த சில்லறை கிட்ட பேசிக்கோங்க"... என்று கூறவும்

"பிருத்வி நீ என் பையன்னு பார்க்கிறேன் இல்லாட்டி நடக்கிறதே வேற.. அவர் எனக்காக அவரோட வாழ்க்கையை அழிச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கார்..அவரை பத்தி பேசாத..அவர் ஒன்னும் என்னை குடிச்சிட்டு வந்து எல்லோர் முன்னாடியும் அடிக்கலை"...என்று கூற

"நீங்க என்னை பையனாகவே தயவு செய்து நினைக்காதீங்க விரோதியா நெனைச்சுக்கோங்க...பிகாஸ் நான் பிறப்பு எடுத்ததே உங்க அழிவை பார்க்க தான்...என் அப்பா குடிச்சிட்டு உங்களை அடிக்க தான் செஞ்சார் நானா இருந்தா வெட்டி போட்டு இருப்பேன்,

இதுல உங்களை நினைச்சாலும் எனக்கு பாவமா தான் இருக்கு ஏன்னா நீங்க ரொம்ப நம்பிட்டு இருக்கீங்களே அந்த ஈஸ்வர் அவனை பத்தி உங்களுக்கு முழுசா தெரியல"....என்று நக்கல் குரலில் கூறி சிரிக்க

"என்ன தெரியல?".. என்பது போல பார்த்தவர் அதையே கேட்டார் கணவர் மீது அந்த நேரத்திலும் அபார நம்பிக்கை இருந்தது...

"உங்களுக்கு அவனை பத்தி ஒன்னுமே தெரியல இப்போ கூட நீங்க எப்படியோ போங்கன்னு விட்டு இருப்பேன் என்கிட்ட உங்க அப்பா சில விஷயத்தை சொல்ல சொன்னாங்க அதை நான் இறந்த பின் சொல்லு அப்போ தான் அவ நம்புவான்னு சொன்னாங்க அதுனால தான் சொல்றேன் "...என்று கூறியவன்

" உங்க அப்பா எப்படி இறந்தார்ன்னு தெரியுமா??"... என்று கேட்க

"அவர் மாடியில் இருந்து கால் வழுக்கி விழுந்து சிகிச்சையில் இருந்தார் பின் அவரோட வயசு அவர் போய் சேர்ந்துட்டார்"... என்று பிருத்திவியை கேள்வியாக பார்த்துக்கொண்டே பதில் அளிக்க

அதை கண்டு நக்கலான பார்வையை வீசியவன், "நீங்க அந்த வீட்டில் இத்தனை நாள் வாழ்ந்து இருக்கீங்களே தவிர உங்களுக்கு எதுவுமே தெரியல ..அண்ட் உங்க அப்பா முதல் உங்க வீட்டுல நடந்து ஒவ்வொரு கொலைக்கும் உங்க வீட்டுக்காரர் தான் காரணம்னு சொன்னா நம்புவீங்களா??"... என்று கேட்க

அவன் கூறுவதை கேட்டு அதிர்ச்சி ஆனவருக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை..பேய் அடித்தது போல முழித்து கொண்டிருந்தார்..

மாயவன் வருவான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top