அத்தியாயம் 2
மனம் விரும்புதே மாயவா
அடர்ந்த வனப்பகுதிக்குள் பாராசூட் மூலம் கீழே குதித்தவன் மேலே வருகிறானா என மலை முகட்டின் மேலே இருந்து கீழே பார்த்து கொண்டு இருந்த விக்கி என்ற விக்னேஷ்க்கு தலை சுற்றுவது போல இருக்க அவன் சற்று முன் அடித்த சரக்கு எல்லாம் தெளிந்து மேற்கொண்டு அந்த காட்சியை காண முடியாமல் அவனுக்கு வாந்தி தான் வந்தது...
இவனது செய்கையை பார்த்து கூட இருக்கும் அவனது நண்பர்கள் , "மச்சி என்ன டா ஆச்சு?? மாசமா இருக்கியா??"...என்று சிரித்தபடி கேட்க
முதலிலே மயக்கத்தில் இருப்பவனுக்கு இந்த கிண்டல் அந்நேரம் ருசிக்கவில்லை , "ஆமாம் டா ..மாசமா தான் இருக்கேன்..இதோ என்னை ஏமாத்திட்டு கீழே குதிச்சு இருக்கான் பாரு..அவன் தான் என் புள்ளைக்கு அப்பன்..போங்கடா நாதாரிங்களா ..
ஒண்ணா படிச்சோம் அதோட உங்க எல்லாரோட சங்காத்தமே வேணாம்னு தான் டா இந்த காட்டுக்குள்ள வந்து வேலைங்கிற பேர்ல உக்கார்ந்து இருக்கேன்...இங்கே என்ன டா உங்களுக்கு ட்ரிப் வேண்டி இருக்கு..எதுக்கு டா இங்க வந்தீங்க"... என்று அவர்களை பொரிய தொடங்கினான் விக்கி...
கூட இருந்த நண்பர்களோ , "மச்சி நீ எங்களுக்கு வேண்டி இங்க வந்து ஒளிஞ்சு இருக்கியா இல்ல பிருத்வி கண்ணுல பட கூடாதுன்னு ஒளிஞ்சு இருக்கியா "...என்று அவர்கள் மிக சரியாக கணித்து கேட்க..
உண்மையை கண்டு பிடித்து விட்டார்களே என்ற கொலை வெறியில் , "ஆமாம் டா அவனுக்கு வேண்டி தான் இங்கே வந்து ஒளிஞ்சு இருக்கேன் அப்போவாவது விடறானா..3 வருஷம் அவன் இல்லாமல் நல்லா, சந்தோஷமா இருந்தேன்..இப்போ யார் அவனை இங்க தேடி வர சொன்னது..அது தான் நீங்க எல்லோரும் நல்ல படியா செட்டில் ஆகிட்டீங்கல அப்புறம் எதுக்கு டா வேலையை பார்க்காமல் இன்னும் அவன் கூட சுத்திட்டு இருக்கீங்க.. அவனும் நல்ல படியா பிஸினஸ் பண்ணிட்டு இருக்கான் அப்படியே வாழ்ந்து செத்து தொலைய வேண்டியது தானே எதுக்கு டா இங்க வந்து என் தாலியை அறுக்கறீங்க..வந்தவன் சும்மா இருக்கானா என்னை உயிரோட கொல்லவே வந்து இருக்கான் அங்க பாரு மேலே இருந்து மலையில் இருந்து கீழே குதிச்சு விளையாடிட்டு இருக்கான்"... என்று கூறும் போதே விக்கிக்கு பீதியாக அவனை மேலும் பீதி ஆக்கவே , "ஹேஊஊஊ".. என்ற பிருத்திவியின் சத்தம் அந்த அடர்ந்த முகிலை பிளக்க இங்கே விக்கி ஓரமாக சாய்ந்து விட்டான் , " அவன் வந்தா என்னை எழுப்பி விடுங்கடா இந்த கருமத்தை எல்லாம் பாக்கவோ கேட்கவோ எனக்கு சக்தி இல்லை".. என்று படுத்து கொண்டான்..ஆனால் விக்கி தான் பயந்து சாகிறானே ஒழிய அவனை அங்கே கூடி இருந்த சுற்றுலா பயணிகள் இது போல பயணம் செய்ய வந்தவர்கள் என அனைவரும் அவனை உற்சாகப்படுத்தி கொண்டு தான் இருந்தனர்...
பாரா சூட்டில் குதித்து கீழே இருந்து மேலே எழும்பி பின் மீண்டும் கீழே செல்ல என அவன் அவனது சாகசத்தை செய்து கொண்டு இருந்தவன் ஒரு வழியாக கண்களில் ஏதோ சாதித்து விட்ட வெறி வர அது தந்த அமைதியோடு மேலே வந்தவனை பலர் பாராட்ட மெல்லிய சிரிப்போடு அவர்களை கடந்தவன் தன் நண்பர்களை கண்காளாலே தேடியவன் கண்களில் மருந்துக்கும் சிரிப்பு இல்லை...அவன் எப்போதும் இப்படித்தான் சிரிப்புக்கு பஞ்சம் இருக்கும் அவனது முகத்தில் வில்லத்தனம் மட்டும் குடி கொண்டு இருந்தது...அதை யாரும் அறியா வண்ணம் முகத்தை பல தருணங்களில் பல விதமாக மாற்றி அமைப்பதில் கில்லாடி..அவனுக்கு ஒன்று தேவை என்றால் அது கிடைக்க எந்த அளவுக்கும் செல்வான் அதுவே ஒன்று வேண்டாம் என்றால் அதே அவனுக்கு தேவை இல்லை என அவன் எப்போது உணர்கிறானோ அப்போது கீழே போட்டு நசுக்கவும் அஞ்ச மாட்டான்..
அவன் பிருத்திவி ராஜ் குடும்ப தொழிலான ஹோட்டல் பிசினஸை திறம்பட நடத்துபவன்...அவனுக்கு இருக்கும் ஒரே உறவு அவனது தாத்தா மட்டுமே அவரும் இவன் குழந்தையாக இருக்கும் போதே அமெரிக்காவிலே செட்டில் ஆனவர் தான் இன்று வரை இந்தியா வரவில்லை...இந்தியா வர வேண்டும் என்ற எண்ணம் இன்னும் அவருக்கு தோன்றவில்லை என்றே கூற வேண்டும்..
ஆனால் அவரது தொழிலை மட்டும் பல இடங்களில் நடத்தி வருகிறார் இப்போது அவரது பேரன் அந்த தொழிலை கவனித்து அவருக்கு பக்க பலமாக இருக்கிறான்..இந்தியாவில் மட்டும் அவர்களது நிறுவனம் இல்லமால் இருக்க இதோ கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அங்கேயும் பிருத்திவியால் தொடங்கப்பட அதையும் அவரது பேரன் ஒரு கை பார்த்து வருகிறான்...
அவனுக்கு அவனது தாத்தாவிற்கு பிறகு இதோ இந்த விக்கியை தான் பிடிக்கும்..விக்கி அவனது பால்ய கால நண்பன் ஆரம்பம் முதல் இதோ இப்போது வரை அவனுடன் இருக்கிறான் என்ன தான் பிருத்வி செய்யும் செயல்கள் விக்கிக்கு பயத்தை கொடுத்தாலும் நண்பனுக்காக கூடவே இருப்பான்...இப்போது மூன்று ஆண்டுகளாக தான் விக்கி விலகி இருக்கிறான்...
விக்கியின் தந்தை ஒரு வக்கீல் அவரை போல விக்கியையும் சட்டம் படிக்க வைக்க அவனுக்கு கோர்ட் கேஸ் என்றாலே பயம் அதனாலே ஒரு பெரிய கம்பெனியில் லீகல் அட்வைசர் ஆக பணி புரிகிறான்.. விக்கி பயம் பயம் என்று இருக்க அவனது நண்பன் பிருத்வியோ பயம் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது போல வாழ்ந்து வருகிறான்...அவனுக்கு உடனே இந்தியா செல்ல வேண்டும் அவனுடன் அவனது நண்பனை அழைத்து செல்லவே இங்கே வந்து இருக்கிறான் ஆனால் விக்கியோ பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான்..
தன் நண்பர்கள் இருக்கும் இடம் நோக்க அங்கே கீழே படுத்து இருக்கும் விக்கியை பார்த்து தனது க்ளோவ்ஸை கழட்டி கொண்டே வந்தவன் , "என்ன டா சொல்றான் அவன் " என்று பிருத்வி கேக்க
பிருத்திவியை காண பிடிக்காமல் கண்களை மூடி படுத்து இருக்கும் விக்கியின் மீது க்ளோவ்ஸ்ஸை இட அப்போதும் முகம் சுணுங்கினானே தவிர கண்களை திறக்கவில்லை..
"டேய் கொஞ்சம் அந்த தண்ணியை எடு"... என்று கூறிய பிருத்திவி நண்பன் தந்த பாட்டிலை வாங்கி ஒரு மிடறு நீரை குடித்தவன் மீதி நீரை விக்கியின் முகத்திலேயே ஊற்ற மீதம் உள்ள அவனது நண்பர்கள் சிரிக்க விக்கியோ கோபம் கொண்டு வெகுண்டவன் தன்னை விட இறுக்க முகத்தில் தெனாவெட்டை பூட்டி தன்னை முறைத்து கொண்டு இருக்கும் தன் நண்பனை பார்த்து விக்கி தான் அவன் பால் பொங்கும் கோபத்தை கட்டுப்படுத்தி தன் முகத்தில் ஒழுகும் நீரை துடைத்து, " இப்போ உனக்கு என்ன டா பிரச்சனை"... என்று விக்கி முதலில் இருந்து ஆரம்பிக்க
விக்கியை பார்த்து பதிலே கூறாமல் உனக்கு தெரியாதா என்று திமிர் பார்வையை வீச எப்போதும் போல விக்கி தான் அவனிடம் தழைந்து போக வேண்டி இருந்தது..
"எனக்கு சிங்கப்பூர்ல புது வேலை கிடைச்சு இருக்கு எனக்கு அங்கே போகனும்"... என்று தன்னால் உன்னுடன் வர முடியாது என்பதை எங்கோ பார்த்தபடி விக்கி கூற அவனை பார்த்து முறைத்த பிருத்திவி அவன் கூறிய கடைசி வரியை மட்டும் எடுத்து கொண்டு, " அப்போ உன்னால வர முடியாது ..ஓக்கே "...என்று மட்டும் அவனை பார்த்து தான் எப்போதும் பார்க்கும் வில்லத்தனமான பார்வையை பதித்தவன் அதற்கு மேல் அவனை எந்த கேள்வியும் கேக்கவில்லை...
அதன் பிறகு ஒரு நொடி அவன் அங்கே இருக்காமல் விக்கி சொல்வதை செவி கொடுத்து கூட கேக்காமல் இந்தியா சென்று விட்டான்..விக்கிக்கு தான் மனதுக்குள் சங்கடமாக போய் விட்டது நண்பன் கேட்டும் செய்யவில்லையே என்று ஆனால் விக்கிக்கு புதிய வேலை கிடைத்து இருக்க அவனும் பின் ஒரு நாள் தன் நண்பனை சமாதானம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து சிங்கப்பூர் பறந்தான்..
விக்கி சிங்கப்பூரில் தரை இறங்கியதும் ஹோட்டலில் அறை எடுத்து ரெடியாகி அலுவலகம் செல்ல அவனது புதிய கம்பெனியின் வாயிலுனுள் நுழையவில்லை வாசலில் வைத்தே அவனது வேலை இந்தியாவிற்கு மாற்றல் ஆகி இருக்கிறது என்றும் உடனே செல்ல வேண்டும் என்று டிக்கெட், விசா மாற்றல் ஆன கடிதம் எல்லாம் தர குழம்பிய விக்கி அலுவலகத்தின் உள்ளே நுழைய முற்பட காவலாளி தடுக்க மேற்கொண்டு குழம்பிய மனதுடனே இந்தியா பறந்தான்...
அங்கே மும்பையில் four square கம்பெனி பிரமாண்டமாக ஒளிர்ந்து மிளிர்ந்து இருந்தது...அலுவலகத்தின் பெயருக்கு ஏற்ப நான்கு மாடி கட்டிடடமே தான் ...அதை பார்த்ததுமே விக்கிக்கு அதன் பிரம்மாண்டம் பிடித்து போக உள்ளே சென்று வரவேற்பில் இருந்த பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்த அந்த பெண்ணோ MDயின் அறை நோக்கி அவனை அனுப்பி வைத்தாள்..
MD P. ராஜ் என்று எழுதி இருக்க அந்த பொன்னிற பெயரை பார்த்து குழம்பியபடியே விக்கி கதவை தட்டாமல் கதவை திறக்க, " கதவை தட்டிட்டு வரணும்னு பேசிக் மேன்னெர்ஸ் கூட தெரியலையா மிஸ்டர் விக்னேஷ் நாராயணன்???"... என்ற கம்பீர குரல் அந்த குரல் கேட்டு விக்கி எதிரே உள்ள தன் முதலாளியின் முகத்தை பார்க்க அது அவனே தான் பிருத்வி ராஜ்..
அவனை கண்டதும் விக்கி மனதில் அரித்து கொண்டு இருந்த சங்கடம் எல்லாம் போயி தன்னை சுற்றலில் வைத்து இருக்கும் தனது முதலாளி இவன் தானா என நினைத்து, "டேய் பிருத்வி"... என்று உற்சாக குரலில் தனது முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி சிரிக்க பிருத்வி முறைத்தான்..
விக்கியை இதற்கு முன் பார்த்ததே இல்லாதது போல, "என்ன மிஸ்டர் விக்னேஷ் உங்க பாஸ் கிட்ட இப்படி தான் பேசுவீங்களா கால் மீ பாஸ்".. என்று எரிக்கும் விழிகளில் கூற விக்கிக்கு பாவம் இது அவனது நண்பன் பிருத்வி ராஜ் தானா என குழப்பமே ஏற்பட்டு போனது..
வெளியேயும் ராஜ் என்ற பெயர் தான் இட்டு இருக்க ..விக்கியின் கையில் உள்ள வேலைக்கான பணி நியமனம் பேப்பரிலும் ராஜ் என்றே இருக்க இவன் வேறு இதுவரை கண்டதே இல்லாத பார்வையில் விக்கியை பார்க்க முழுவதுமாக குழம்பி போய், " சாரி நீங்க என்னோட பிரெண்ட் பிருத்வின்னு நெனைச்சுட்டேன் "..என்று ஆங்கிலத்தில் கூற அவன் முகத்தை பார்த்து பிருத்விக்கு உள்ளூர சிரிப்பு மூண்டாலும் அடக்கியவன் , "கோ உங்க வேலையை பாருங்க மிஸ்டர் விக்னேஷ் "...என்று கூறி அவனது இருக்கையை காட்ட குழப்பத்திலேயே சென்றவன் முன்னால் எதனால் விக்கி இவனை விட்டு ஓட்டம் எடுக்கிறானோ அதே பைல் கண் முன் இருக்க அதை பார்த்ததும் விளங்கியது இது அவனது நண்பனே தான் என எரிச்சல் மிகுந்த முகத்தோடு திரும்பி தன் தோழனை பார்க்க அவன் அங்கே இல்லை அதற்கு முன்னே அவன் வெளியேறி இருந்தானே..
அவன் ஒன்றை நினைத்து விட்டால் அதை நடத்தி காட்டாமல் இருக்க மாட்டான் என தெளிவாக தெரிந்தும் அவனிடம் இருந்து ஓடி ஒளிய நினைத்த தன் மடத்தனத்தை எங்கே போய் முட்டி கொள்வது நீ அவனிடம் வசமாக சிக்கி விட்டாயிற்று அவன் செய்யும் செயல்களில் விருப்பமே இல்லையென்றாலும் அவனுக்காக கூட நின்றே ஆக வேண்டும் என்று நினைத்து அந்த பைலை பிரித்தான் விக்கி... இது தான் பிருத்வியின் குணமே அவனுக்கு ஒன்று தேவை என்றால் அவனது தேவையை எதிராளியை கொண்டே அதை செய்ய வைத்து விடுவான்..அதற்காக எந்த விலையும் கொடுக்க அவன் முயல்வான் என்பதற்கு இதுவே சாட்சி...
**********
மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையம் மிக பெரிய விமான நிலையம் பறந்து விரிந்து காட்சி அளிக்க அங்கே தான் வேகமாக பிலைட்டை பிடிக்க வந்து கொண்டு இருந்தான் பிருத்வி அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியபடி பின்னாலே புலம்பியபடி ஓடி வந்து கொண்டு இருந்தான் விக்கி..." மனுசனா இவன் கூட பழகின பாவத்துக்காக இவனை சும்மா விடறேன் இல்லாட்டி "..என புலம்பியபடியே கவுண்டரில் வந்து நிற்க ஏதோ கூற வருவது போல குனிந்த பிருத்வி , "இல்லாட்டி என்ன பண்ணுவ மூடிட்டு வா இல்லாட்டி அதுக்கும் ஏதாவது பனிஷ்மெண்ட் வாங்குவ "...என்று முறைத்தபடி கூற விக்கியோ பேய் முழி முழித்தான், " அட சண்டாளா உன் கம்பெனினு தெரியாமல் மூணு வருஷம் அக்ரிமெண்ட் பேப்பர்ல கையெழுத்து போட்ட பாவத்துக்கு பிரெண்ட்ன்னு கூட பார்க்காம இப்படி சாவு அடி அடிக்கிறியே டா..உன்னை எல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களான்னு தெரியலையே"...என்று புலம்பி கொண்டே பிருத்வியின் பின்னால் நடந்தான்..
பார்மாலிட்டிஸ்க்காக வரிசையில் நின்று இருக்கும் போது தான் அபியும் சம்யூவும் வந்து கொண்டு இருந்தனர்..அதும் அபியின் கையை சம்யூ இறுக்கமாக பிடித்து வந்து கொண்டு இருக்க அவர்களின் நெருக்கத்தை தான் அணிந்து நிற்கும் ரெபேன்ஸ் வழியே குரூரத்துடன் கண்டவன் விழிகள் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க தொடங்கியது..
ஆனால் அதற்கு பிருத்வியை சம்யூ விடுவதாக இல்லை போலும் , "அபி நீயும் வாயேன் அப்படியே கோவால உன் பிரெண்ட்ஸ்ஸை வர சொல்லு...அப்போ அங்கேயே ஜாலியா இருக்கலாம்".. என்று இவள் வேறு தூண்டில் போட்டு அழைக்க
அபியோ , "சான்ஸே இல்ல அதும் உன்னோட அட்டு கேங் கூட ..உனக்கு தான் என்னோட பிளான் தெரியுமே "...என்று அவளை அவன் வெறுப்பேற்ற சம்யூவோ முறைத்தாள்..
அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் , "பாக்கி எல்லாம் நாம பேசினது போல ..நான் மானாலி போய்ட்டு இரண்டு நாள் முன்னே கோவா வந்திடுவேன் ..தென் கோவால இருந்து நாம ஒன்னா மும்பை வரலாம் ..யாருக்கும் சந்தேகம் வராது..அதுக்கு முன்னாடி வீட்டுல இருந்து கூப்பிட்டா நாம பேசி வெச்ச கோட் வர்ட்ஸ் வெச்சு நீயும் சமாளி நானும் சமாளிக்கறேன்".. என்று அபி மீண்டும் அவளை எச்சரிக்கை செய்ய சம்யூவோ , "அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சந்தேகம் வராத மாதிரி நீ நடந்துக்கோ அவங்க கூப்பிடறதுக்கு முன்னே நீயே கூப்பிட்டு பேசு சரக்கு அடிச்சிட்டு மட்டை ஆகி மறந்துடாத "..என்று எல்லாம் அவள் கூற அபியின் மண்டையில் ஏறியது போலவே இல்லை அவன் பார்வை முழுவதும் அவனது நண்பர்கள் படையிலேயே இருக்க அவன் , "சரி சரி நான் பார்த்துக்கறேன் பை"... என்று கூறி அவளை அணைக்க அவளும் அணைத்து அவனது கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்து அனுப்பி வைத்தாள்...
அவர்கள் இருவரும் ஈஸ்வரிடம் சம்யூக்கு கோவா செல்ல வேண்டும் நான் துணைக்கு அழைத்து சென்று கூட்டி கொண்டு வருகிறேன் என அபி தன் தந்தையிடம் அனுமதி கேக்க ஈஸ்வரோ கோவாவில் நடக்கும் திருமணத்தை பற்றி எல்லாம் விசாரித்தவர் ஆழ்ந்து யோசனை செய்து விட்டு சம்மதிக்க விஷயமறிந்த ராஜேஸ்வரியோ "அதெல்லாம் வேணாம்"... என்று கூறி மறுக்க பிள்ளைகள் முகம் கூம்பி போனது..
அதை கண்டு தாளாத ஈஸ்வர் தன் மனைவியிடம், " நாம தான் டென்ஷன்ல இருக்கோம்னா நம்ம குழந்தைகளையும் அப்படியே இறுக்கி வெச்சு இருக்கனுமா ராஜி விடு அவங்க போயிட்டு வரட்டும் "...என்று கூற மனமே இல்லாமல் சம்மதித்தார் ராஜேஸ்வரி..
அதன்படி சம்யூ மற்றும் அபி இட்ட பிளான் படி அபி சம்யூடன் கோவா வந்து அவளை விட்டு விட்டு அங்கே இருந்து மானாலி செல்வது போலவும் பின் இரு நாட்கள் முன்னே கோவா வந்து அங்கே தங்கி பெற்றோர்கள் நம்ப அங்கே சுற்றி பார்த்து விட்டு அவளையும் அழைத்து ஒன்றுமே நடவாவது போல வரலாம் என்பது தான் இவர்கள் செய்த பிளான் எல்லாமே நல்ல படியாக சென்று கொண்டு இருக்கும் போதே அபியின் புதிய நெருக்கமான தோழி பாயல் , "நீ என்கூட வா..நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் அபி..நீ இல்லாட்டி போர் அபி"...என்று சிணுங்கி அழைக்க அபியின் குரங்கு மனம் பாயலிடம் தாவியது..
வீட்டில் இருந்து ஏர்போர்ட் வந்து கொண்டு இருக்கும் போதே அவன் என்ன சமாதானம் சொன்னாலும் அவனது கேர்ள் பெஸ்டி கேப்பதாக இல்லை...உடனே அவன் பாயலுக்காக நொடியில் வேறு பிலைட் புக் செய்தான் சம்யூவிடம், " தனியாக செல்வாயா"... என்று கேட்க
அவளோ , "ஹே நான் எப்படி தனியா போவேன் "..என்று சம்யூ சிணுங்க ஏனோ அந்த நேரம் அபிக்கு அவளது சிணுங்கல் கோபத்தை கொடுக்க, "சம்யூ நான் வரதே உனக்காக தான் ..சும்மா அது இதுன்னு சொல்லிட்டு இருக்காத ..எத்தனை தடவை பிலைட்ல போய் இருக்க..பிறகு என்ன பயம்...பயம் வந்தா கண்ணை மூடிக்கோ..பயம் போயிடும் "... என்று கோபம் பாதி சமாதானம் மீதி என அவளை சம்மதிக்க வைக்க சம்யூவும் காரியம் நடக்க தலையை ஆட்ட வேண்டியதாகி போனது..பின் சில சமாதானத்தில் சம்யூ சாமதானம் ஆகி போக அப்படியே ஏர்போர்ட் வந்த அவர்கள் இருவேறு பிலைட்டை பிடிக்க தயாராகினர்..அபி அவனது நண்பர்களை கண்டதும் இவளை விட்டு அவர்களோடு சென்று விட்டான்..
வைட்டிங் ஏரியாவில் தனியாக அமர்ந்து கொண்டு இருந்த சம்யூவை ரேபனூடே வைத்த கண் மாறாமல் அவளது தலை முதல் கால் வரை பிருத்வி பார்த்து கொண்டே இருந்தாலும் சற்று அபியின் கன்னங்களில் சம்யூ கொடுத்த முத்தம் பிருத்திவியை வெகுவாக இம்சித்தது..
இதோ அவளுக்குக்கான ஸ்கெட்ச்சை எப்போதே வகுத்து விட்டானே...அவன் மனம் வேகமாக நடத்த இருக்கும் செயல்களை யோசிக்க விக்கி அவனது செவியில் , "யாரு டா அந்த பிகரு "....என்று கண்களாலயே சம்யூவை தேட
அவனை பார்த்து முறைத்து , "கொஞ்சம் வாயை மூடிட்டு வரீங்களா மிஸ்டர் விக்னேஷ் "...என்று கூற
விக்கியோ, "ஓகே பாஸ்"... என்று கூறி திரும்பிய விக்கி, " இவன் விக்கின்னு கூப்பிடும் போது மச்சான்னு சொல்லணும் விக்னேஸ்ன்னு சொன்னா பாஸ்ன்னு கூப்பிடனுமா பேசாமல் வேற யாருக்காவது பிரெண்ட்டா தத்து போயிடலாம்னு இருக்கேன் "...என்று விக்கி அவனது முடியை பிய்த்து கொள்ளாத குறை தான் பிருத்திவியின் காது படவே புலம்பி கொண்டு இருந்தான்...ஆனால் அருகில் இருப்பவனை கவனிக்க கூட சமயம் இல்லாமல் சம்யூவை அளந்து கொண்டு இருந்தான் பிருத்வி...
பிலைட் எடுக்க சமயம் ஆனதும் ஒவ்வொருவராக உள்ளே செல்ல எதேக்ஷியாக சம்யூவின் பின்னால் வந்து கொண்டு இருந்த ஒரு ஆள் தீடிரென அவளை இடித்து கொண்டு முன்னே செல்ல அவளோ நிலை தடுமாறி விழ போனாள் உடனே அவள் விழுந்து விடாமல் இருக்க அவளுக்கு பின்னால் வந்து கொண்டு இருந்த ஒரு வலிய கரம் அவளின் இடையை தாங்கி பிடித்தது...
அவளோ விழுந்து விடுவோம் என்று நினைத்து கண்களை இறுக மூட அவளை பிடித்து இருந்த வலிய அவளின் இடையை அழுத்தமாக பிடித்து அவளின் செவிக்கு அருகில் குனிந்து, " ஆர் யூ ஓகே "...என்று கம்பீரமாக மெல்லிய குரலில் கேட்க மெல்ல விழி விரித்த சம்யூ முதன் முறையாக தனது ராவணனை காண்கிறாள்...
அலை அலையான கேஷம் காற்றில் சுழல கூரான நாசி அழுத்தமான உதடு அவளை காப்பாற்றினாலும் அவனது கண்ணில் இருந்து எதையுமே அவளால் படிக்க முடியாத படி அவனது ரேபன் மறைத்து இருக்க அவனது முகத்தை பார்க்க, "நன்றி "...என ஆங்கிலத்தில் கூறி அவன் முகத்தை பார்த்து கொண்டு இருக்க அவனோ பதில் ஏதும் கூறாமல் அவளையே பார்த்து கொண்டு இருக்க அவர்கள் நிற்கும் நிலையை கருதி தன்னிலை பெற்ற அவள் பதறி விலக அவனோ, " ஜஸ்ட் ரிலாக்ஸ்..இப்போ ஓகே தானே"... என அவளின் பதட்டத்தை குறைத்த அவன் அவளை நோக்கி அவளை மயக்கும் புன்னகையை சிந்த அவனது கன்னக்குழி சிரிப்பில் அந்த நொடி தன்னை தொலைத்தாள் என்றே கூற வேண்டும் அதுவும் மிக கண்ணியமாக அவளை விட்டு நீங்கி நின்று சிரித்தபடியே சென்று விட்டான் அந்த மாயக்காரன்..அவளோ என்னவோ இது நாள் வரை வேறு ஆணையே காணாதது போல அவனை பார்த்து நின்று கொண்டு இருக்க அங்கே விமானப்பணி பெண் இவளது பெயரை இரு முறை அழைத்த பின் தான் இவளுக்கு புத்தி வர வேகமாக ஓடினாள்..
ஆனால் இந்த கொடுமையை எல்லாம் கண்ட விக்கியோ தலையில் அடிக்காத குறையாக எல்லாம் நல்லபடியா நடந்தா சரி என்று முனகி கொண்டே உள்ளே போனான்..
விமானத்தில் இவளது நல்ல நேரமா இல்லை கெட்ட நேரமா என தெரியாது மூன்று பேர் அமர கூடிய இருக்கையில் அவனுக்கு அருகில் உள்ள ஜன்னலோர இருக்கை அவளுக்கு கிடைக்க அவனை பற்றி நினைத்து கொண்டே வந்தவளுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாக மாறி உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்து அவனை பார்த்து அங்கேயேயும் சிலை போல நின்று கொண்டு இருந்தாள்..
அவனோ அவளை கவனிப்பதாக கூட இல்லை..சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டு இருக்கும் இந்த பெண்ணை பார்த்தால் விக்கிக்கு பாவமாக தான் இருந்தது ஆனால் அவனால் ஒன்னும் செய்ய இயலாத நிலையில் அவன் உள்ளதால் பிருத்திவியை நினைத்து அடக்கியே வாசித்தான்..
அவளுக்கு பின்னால் இருப்பவர்கள் அதற்குள் வர இவள் வேகமாக மூன்று பேர் கொண்ட இருக்கையில் மெல்ல விக்கியை தாண்டி உள்ளே வந்தவள் அங்கே நடு இருக்கையில் அமர்ந்து இருக்கும் அவனை தாண்டும் போது மீண்டும் அவள் தடுமாற அவன் மீதே விழுந்தவளை அவனோ மீண்டும் காப்பாற்றினான்.. பின்னே காலை நீட்டி அவள் காலை அந்த குறுகலான இடத்தில் அவளை வேண்டுமென்றே அவன் இடற வைத்தால் அவள் அவன் மீது விழாமல் எங்கே போய் விழுவாள்...
தன் மீது விழுந்தவளை பூவாக மீண்டும் தாங்கிய பிருத்வியின் மீதே அவளின் மொத்த உடல் உரச அவளோ அவனை அவ்வளவு நெருக்கத்தில் கண்டவளுக்கு உள்ளுக்குள் கிலியை கொடுக்க அவளின் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் படம் பிடித்து வரும் பிருத்விக்கு மீண்டும் கள்ளச்சிரிப்பை விட அவளுக்கு இங்கே வெட்கமாக போனது இருந்தும் விடாமல் அவள் அவனை விட்டு விலகாமல் இருந்தாள்...விக்கி வேறு விடாமல் இவர்களை கவனித்து கொண்டு இருந்தவன் அவர்களின் மோன நிலையை கலைக்கும் பொருட்டு இறும அந்த சத்தத்தில் விக்கியை கண்டதும் மீண்டும் தன்னிலை பெற்றவள் "சாரி"..என்று கூறி வேகமாக பதறி எழுந்தவள் அவன் அருகில் உள்ள ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள்...
இதை எல்லாம் கவனித்த பிருத்வி விக்கியின் செவிக்கு அருகில் குனிந்து , "இவ கூட நான் இருக்கும் போது இதே மாதிரி பார்த்திட்டு இருந்த பிலைட்ல நின்னுட்டு டிராவல் பண்ணிட்டு வந்த ஒரே பேசஞ்சர் நீயா தான் இருப்ப".. ..என்று கூறி விக்கியை மிரட்டினான் பிருத்வி...
அவன் கூறியதை கேட்ட விக்கியோ பிருத்வியை பார்த்து முறைக்க , "என்ன முறைக்கற மூணு வருஷம் நான் என்ன சொன்னாலும் செஞ்சு தான் ஆகனும் மிஸ்டர் விக்னேஷ்".. என்று முதலாளியின் குரலில் கூற விக்கி என்ற விளக்கு அணைந்து கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்து உறங்கி விட்டது...
ஆனால் அந்நேரம் வரை வெட்க பூவை சூடி பார்வை மொழியில் பேசிக் கொண்டு இருந்த சம்யூவோ அவன் திரும்பவும் வேகமாக தன் முகத்தை திருப்பி கொண்டாள்...அவளின் வெட்கம் அவளை அவனின் முகம் நோக்க விடாமல் செய்தது...
ஒரு வழியாக எல்லாம் சரியாகி விமானம் மெல்ல ஊர்ந்து கொண்டு இருக்க விமானம் எடுக்க போகிறார்கள் என்பதை அறிந்ததும் சம்யூவுக்கு நடுக்கம் வர தொடங்கியது...விமானம் ரன் வேயில் டேக் ஆப் செய்ய தொடங்கும் போது எப்போதும் சிறு வயதில் இருந்தே தோன்றும் விமானம் தரையேற்றம் தரை இறக்க பயம் இயல்பாக மேலோங்கி அருகில் அமர்ந்து இருப்பவனின் கையை அவனின் அனுமதி இல்லாமல் அழுத்தமாக பிடித்து கொண்டாள் சம்யூ ...அவள் அவனின் கையில் அழுத்தம் கொடுத்து பிடிப்பதை பார்த்து பிருத்வி கேள்வியாக அவளை பார்க்க அவள் எங்கே அவனை பார்த்தால் இல்ல..கண்களை இறுக மூடி அவளின் அந்த நொடி பயத்தை போக்கி கொண்டு இருந்தாள்...அதை கண்டதும் அவனது முகம் எதையோ சாதித்த விட்ட சிரிப்பு மேலோங்க அவள் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்...விதி வலியது..
சம்யூவின் விதி அவளின் அருகிலேயே அமர்ந்து அவளுடனே பயணம் மேற்கொண்டு வருகிறது..
மாயவன் வருவான்…
