Share:
Notifications
Clear all

அத்தியாயம் 19

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

பிருத்வி யார்?? என்ற கேள்விக்கு ராஜேஸ்வரிக்கு விடை கிடைத்து விட்டது ...ஆனால் அந்த விடையில் அழுவதா, மகிழ்வதா , கோபப்படுவதா என நிலை இல்லா பல எண்ணங்களுடன் தள்ளாடி கொண்டிருந்தார் ராஜேஸ்வரி...

உண்மையில் குழந்தை பிறந்து ஜன்னி வந்து உயிர் பிழைத்து கண் திறந்த போது ராஜேஸ்வரியின் அருகில் குழந்தை இல்லை...ஈஸ்வர் மட்டும் தான் அருகில் அவருடைய கணவர் போல இருந்தார்..

"ஈஸ்வர் குழந்தை எங்கே??"... என்று ராஜேஷ்வரி கேட்க

"குழந்தை இறந்துடுச்சாம் ராஜி ..அதான் மாமா , அத்தை பெரிய டாக்டர் கிட்ட காட்ட எடுத்துட்டு போய் இருக்காங்க"... என்று குழந்தைக்கு தாய் பால் இல்லாத நிலையில் பல தாய்மார்கள் இது போன்ற குழந்தைகளுக்காக சேமிப்பு வங்கியில் சேமித்து வைத்திருக்கும் தாய் பாலை கொடுக்க தான் அவர்கள் குழந்தையை அழைத்து சென்றிருந்தனர்...அதற்குள் ஈஸ்வர் குழந்தை இறந்து விட்டது எனவும் ராஜேஸ்வரியால் தாள இயலவில்லை...

குழந்தையும் பசி ஆறியதும் குழந்தையும் உறங்கிவிட பெரியவர்கள் இருவரும் குழந்தையை எடுத்து கொண்டு வரும் போது தன் மகள் பல போராட்டங்களுக்கு பிறகு கண் விழித்து விட்டாளா என நினைத்து கண்ணீர் மல்க , "ராஜி பாப்பா "..என்று கூற தந்தை இறந்த குழந்தையை தான் காட்ட போகிறாரோ என நினைத்து பதறிய ராஜேஸ்வரி தன் முகத்தை திருப்பி கொள்ள,

ராம மூர்த்தியோ மகளிடம் அவள் பெற்ற மகவை காட்ட அந்நேரம் இறந்த குழந்தையை நான் பார்த்து என்ன நடக்க போகிறது என நினைத்த ராஜேஸ்வரி கத்த துவங்கினார்...

அதை நினைவு கூர்ந்தவர் , "ஈஸ்வர் ஏன் என்கிட்ட பொய் சொல்லணும்??".. என்ற கேள்வி அந்நேரம் அவர் மனதில் எழாமல் இல்லை..இருந்தாலும் ஈஸ்வர் மீது அவர் வைத்திருந்த அதீத நம்பிக்கை அவரால் ஈஸ்வரை சட்டென்று சந்தேகிக்க இயலவில்லை...

ஆனால் மனதில் அரித்து கொண்டே இருந்தது...இன்னும் அவரால் நம்ப இயலவில்லை பிருத்வி தன் மகன் தானா என ஆம் தர்மராஜ் என்னுடைய அப்பா என்று தானே கூறினான் என யோசித்து பார்க்கும் போதே ராஜேஸ்வரியின் தலை வெடிப்பது போல இருந்தது...

ஆனால் பாவம் அவருக்கு இன்னும் பல விஷயங்கள் தன் கணவரை(ஈஸ்வரை) பற்றி தெரியவில்லை...தெரிந்தால் அவரால் தாங்கி கொள்ள இயலுமா ??

அதே நேரம் அறிமுக விழா முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர் பிருத்திவியும் மற்றும் அவனது குடும்பத்தினரும்...பெரியவர் அமைதியாக கண்களை மூடி அமர்ந்து இருக்க சம்யூவோ எதையோ யோசித்து கொண்டிருப்பாள் போலும் விரலே தேய்ந்து விடுமளவுக்கு நகத்தை கடித்து கொண்டிருந்தாள்..

"என்ன டா நெனைச்சதை சாதிச்சிட்ட போல??"... என்று சிரித்த முகமாக காரை செலுத்தி வரும் தன் நண்பனை பார்த்து விக்கி கேட்க,

பிருத்திவியோ பதிலே கூறாமல் சிரித்த முகமாகவே இருக்கும் அவன் மனதில் இன்னும் வெறி அடங்கவில்லை என்றே தான் கூற வேண்டும்...

ஏனெனில் குடிப்பழக்கமே இல்லாத தன் தந்தை குடித்து குடித்து தன்னை மாய்த்து கொள்ளும் அளவிற்கு சென்று உள்ளார் எனில் அதற்கு காரணமே அந்த ராஜேஸ்வரி தான்... அவரை என்ன செய்யலாம் என்றே அவன் அந்த நொடியும் நெனைத்து கொண்டிருந்தான்...

நண்பனின் முகபாவம் மீண்டும் வில்லத்தனமாக மாறுவதை கண்டு, " பிருத்வி ரொம்ப யோசிக்காத செஞ்ச வரைக்கும் போதும்..வண்டியை நேரா ஹில்ஸ் டவுன் விடு "..என்று கூற

" அங்கே எதுக்கு டா??".. என்றான் பிருத்வி

"ஹ்ம்ம் எனக்கு பிரசவ நடக்க போகுது விடு டா "..என்று கூறிய விக்கி , "அங்கே இறக்கி விடு டா கிளையண்ட் மீட்டிங் இருக்கு "...என கூறிய விக்கி இறங்கி கொண்டான்..

காரில் இருந்து இறங்கிய விக்கி சம்யூவை பார்த்து , "நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கட்டும் மறந்துடாத"... என கூறி தலையாட்ட அவளும் சரி என்று அவனை வழி அனுப்பி வைத்தாள்..

மீண்டும் அவள் யோசனையில் ஆழ்ந்தாள்.. ஆம் அவள் தலைக்குள் விக்கி காலையில் கூறியதே ஓடிக்கொண்டிருந்தது..

ஆம் விழா நடந்து கொண்டிருக்கும் போது அனைவரும் பிருத்திவியை புகழ்ந்து தள்ளி கொண்டிருந்தனர்...

அந்த சமயம் அவளும் விழாவை மேடையின் கீழே வரிசையாக போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்து கண்டு களித்து கொண்டிருந்தவள் தலையில் , "தர்மா அப்பா வா அப்போ இவரோட அம்மா யாரு ??எதுக்கு இந்த இடத்தை மட்டும் வம்படியா வாங்கணும் ??"...என்று எல்லாம் குடைய விக்கி வந்து அவள் அருகில் அமர்ந்து , "என்ன சம்யூ பிருத்வி ரொம்ப அதிரடியா இருக்கானா??"... என்க

அவளோ சிரித்து கொண்டு பதில் ஏதும் கூறாமல் இருக்க , "ஐ நோ உன்கிட்ட எதுவும் அவன் சொல்லி இருக்க மாட்டான் உன் குழப்ப முகம் தான் எல்லாம் சொல்லுதே!"... என்று கூறியவன்..

"பிருத்வி யார்னு உனக்கு தெரியுமா ?? ஏன் அவன் ராஜேஷ்வரியை டார்கெட் பண்றான்னு தெரியுமா??

பிகாஸ் அவன் உன்னோட அத்தையோட பையன் "...என்று கூற சம்யூவிற்கு அதிர்ச்சி அப்படியே அவள் விழி வெளியே தெறித்து விடுமளவுக்கு முழித்தவள் ,

"என்ன சொல்றீங்க நீங்க அவரு என் அத்தையோட பையனா ?"..என அதிர்ச்சி மாறாமல் கூற ,"ஆமாம் அவங்க முதல் கணவரோட மகன் அவங்க கணவர் இறந்துட்டாங்க சோ உன் அத்தை பிருத்திவியை பிறந்ததும் முகத்தை கூட பார்க்காமல் வேணாம்னு சொல்லிட்டாங்க "...என்று கூறிக்கொண்டிருக்கும் போதே விக்கியை யாரோ அழைக்க அவன் கூற வந்ததை முழுதாக முடிக்காமல் பாதி கூறி விட்டு சென்று விட்டான்..

அதை கேட்டவளுக்கு பாதி புரிவது போல இருந்தது..மகனை வேணாம்னு சொல்லிட்டாங்களா அத்தை என்று நினைக்கும் போதே தன் கணவன் மீது ஈரம் கூட சுரந்தது...

முன்பே அவன் தவறு செய்த போதிலும் அவனிடமிருந்து விலக தோன்றாமல் இருக்கும் அவளுக்கு இதை கேட்டதும் அவளுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்று துடித்தது...இனி அவன் என்ன செய்தாலும் அவனை விட்டு விலக கூடாது என்ற முடிவை எடுத்து இருந்தாள்..

அப்படியே அங்கே விழா அரங்கின் மேடையில் தன் கணவனை பார்க்க அவனோ சிரித்த முகமாக அனைவரையும் வரவேற்று கொண்டிருப்பதை ஆசையாக பார்க்க அந்த நொடி அவனும் அவளை பார்த்து , "இங்கே வா "..என்றழைக்க அவளோ , "சீ இப்படியா பார்த்து வைப்ப "..என்று கூறி அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்...

அப்போது அவன் அவள் செவியில், " என்ன ரொம்ப நேரமா என்னையே பார்த்துட்டு இருக்க அண்ட் இன்னிக்கு எனக்கு நீ வேணும் "...என்று ஒபனாக கூற அவளோ முழித்து அவனை பார்க்கவும் ,

"உன்னோட குழப்பம் கோபம் ரிவெஞ்ச் இதெல்லாம் இன்னிக்கு மட்டும் ஒதுக்கி வைக்கிற இல்லாட்டியும் எனக்கு கவலை இல்லை... நானே உன்னை எடுத்துப்பேன்..நீ தயாராக இரு "...என்று கூற அவனது பேச்சில் கன்னம் சிவந்தவளுக்கு அவனது சூடான மூச்சுக்காற்று செவியில் பட அவளது செவி சிவந்து கூசி சிலிர்க்க அதை கண்டும் விடாத அவனோ மேலும் அவள் செவியில், " இந்த வெட்கத்துக்கே என்னோட விரதத்தை முடிக்க போறேன் "...என கூறினான்..

அவனை பொறுத்தவரை அவன் ஒன்றும் அவளை ஒரு இடத்தில் கூட அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையோ அல்லது காதல் வாழ்க்கையோ கொச்சைப்படுத்தவில்லையே அதனால் அவனுக்கு அவளுடன் வாழும் வாழ்க்கையில் எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை ...அதனால் அவன் ஏற்கனவே தாண்டிய கிணற்றில் மீண்டும் தாவ முயல்கிறான்..

கணவன் கூறியதையும், விக்கி கூறியதை எல்லாம் மனதில் வைத்தவள் அதை பற்றி யோசித்து கொண்டே வீடு வந்தவளின் மூளை முழுவதும் அவனே..எப்போதும் தாத்தாவிடம் உரையாடிவிட்டே அவர்களது அறைக்கு செல்பவள் அன்று ஏதோ நியாபகத்தில் மேலே ஏறி விட்டாள்...

விழாவிற்காக மாந்தளிர் நிற பட்டு புடவை அணிந்து இருந்தாள்... மிக அழகாக உடுத்தி இருந்தாள் காலையிலே கணவனின் ஏக்க விழி பார்வையையும் சந்தித்து இருந்தவள் அவனை கண்டு கொள்ளாமல் சுற்ற,

இன்று காலை அவளை பட்டு சேலையில் கண்டதும் விளையாட்டாக அவளை அணைப்பது போல அவன் வரவும் இவள் வேகமாக கீழே ஓடியதை எல்லாம் நினைத்து கொண்டே கதவை அடைத்தவள் சாரியின் பின்னை அவிழ்த்து சாரியை கழட்டி கொண்டிருந்தாள்..

அவளுடைய எண்ணமே அவன் வரும் முன் படுத்து உறங்கி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் ஓடி கொண்டிருந்தது ஏனெனில் இந்நிலையில் அவன் அவள் அருகே வந்தால் அவளால் அவனை மாற்றி நிறுத்துவது என்பது இயலாத காரியம் எனவே தான் அவள் ஓட்டமாக ஓடி வந்தது..

பிருத்திவிக்கு கூறவே வேண்டாம் எதையோ சாதித்து விட்ட வெறி எழுந்தவனுக்கு மனம் அவன் வீட்டை அடைந்ததும் இலேசான உணர்வு ஏற்பட்டது என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை..

தன் தாத்தாவிடம் விடை பெற்று கொண்டு அவனது அறைக்கு சென்றவன் கதவை திறக்க அங்கே அவன் கண்ட காட்சி அவனை பித்து பிடிக்க வைத்தது என்றே கூற வேண்டும்...

ஒரு பெண்ணால் தன்னை இவ்வளவு தூரம் வீழ்த்த முடியுமா என்று கேட்டால் இதோ அவளது காதலால் அவளது அழகால் அவளது நடத்தையால் வீழ்த்த முடியும் என்றால் அது இதோ தன்னை கண்டதும் அதிர்ச்சியில் மாராப்பை கூட மேலே போடாமல் திகில் அடித்து கண்கள் வெளியே தெறிக்கும் அளவுக்கு நிற்கிறாளே அவளால் மட்டுமே முடியும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை..

அதிலும் அவள் அவளது ரவிக்கையின் இரண்டாவது கொக்கிகளை அவிழ்த்து கொண்டிருக்கும் போது தான் அவனது வருகை இருக்க பேயை பார்த்தது போல இவள் நிற்க இந்த நிற்பு தானே அவனுக்கும் வேண்டும்..

அப்போது தானே அவளை ஆசை தீர அவனால் ரசிக்க இயலும்.. அவனது பார்வை அவளின் காடு ,மேடு , பள்ளம் என கரை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது...

அது பார்வை தன் உடலை அவனது ஊசி குத்தும் பார்வையால் மேய்வதை கண்ட சம்யூ பதட்டமடையும் அவளது இதயத்தை அவனுக்கு தெரியாமல் மறைத்து , "இங்கே என்ன செய்யறீங்க நான் தான் கதவை அடைச்சு இருந்தேனே எப்படி திறந்தீங்க??" என்க

அவனோ திறந்து இருந்த கதவை காலால் எட்டி உதைத்து அடைத்து, " அதுவா ?"...என கூறி ஒவ்வொரு அடியாக அவள் அருகே எடுத்து வைத்தவன் , "நான் மேலே வந்துட்டே இருந்தேனா..அப்போ இந்த கதவு சரியா அடைக்காம இருந்துச்சா "...என்று கூறி ஒரு அடி வைக்க அவளோ இரண்டு அடி பின்னால் சென்றாள் , "அப்புறம் கேளு சம்மு..நீ ஏன் விலகி போற நில்லு சம்மு".. என்று கண்களில் குறும்போடு அவள் ஓடி விடுவாள் என்று தெரிந்தே ஒரே எட்டில் அவள் தோளை பற்றவும் அவள் அவசரமாக தோளில் இட்ட மாராப்பு கீழே விழுந்து விட்டது அவனோ அதை கண்டு விசமத்துடன் சிரிக்க , "அவளோ என்னை விடுங்க எனக்கு போகனும்"... என்றாள் அவளுக்கே கேக்காத குரலில்

பிருத்திவியோ , "போலாம் சம்மு இரு நீ தான் கேள்வி கேட்டியே நான் இன்னும் பதிலே சொல்லி முடிக்கலை அதுக்குள்ள போறேன்னு சொல்ற?"... என கேட்க

சம்யூவோ மனதுக்குள் அடேய் நீ பதில் சொல்லி முடிக்கறதுக்குள்ள விடிஞ்சிடும் டா என மனதுக்குள் நினைக்கவும்

பிருத்வியோ அவளை பார்த்து, "எஸ் அதே தான் பேபி ...என் பதில் நீளமானது அதை கேட்க நீ தயாரா??"... என அவளது கண்ணை பார்த்து அவளின் இரு கைகளையும் எடுத்து அவனது கையில் பொத்தி பிடித்து கொண்டு அவள் கேக்க அவளால் பதில் கூறவா முடியும்...

அவனது நெருக்கத்தில் அவள் தவிக்க அவனோ அவளது கழுத்து வளைவில் சிக்கி இருக்கும் முடி கற்றைகளை ஒதுக்கி விட்டு இது என்னோட இடம் என்பது போல புதைந்து அவளது நுகர துடிக்க அவளோ கூச்சத்தில் நெளிந்தாள்...

அவனோ மெல்ல கழுத்தில் இருந்து கன்னத்தில் வரும் வேளை இவளோ பயத்தில் பின்னோக்கி சம்யூ சாயவும் நிலை தடுமாறி கட்டிலில் விழுந்தாள்..

அவள் விழுகிறாள் என்றவுடன் அவளை பிடிக்கவென அவளை தாங்க போன பிருத்வியும் விழ பிருத்திவியின் கோர்ட்டில் பால் விழுந்தது என்றே கூற வேண்டும்..

அவன் விசமத்துடன் அவளை பார்த்து சிரிக்க அவளோ அவனிடமிருந்து விடுபட போராடி கொண்டிருந்தாள்..

அவனிடம் அவளால் போராட தான் முடிந்ததே தவிர விடுபட முடியவில்லை...ஆண்மையின் முழு உருவமாக இருப்பவன் தன் மீது விழுந்து இருப்பதை பார்த்து அவளுக்கு இன்று ஏதோ எதிர்பாராத ஒன்று நடக்க போவதாகவே அவள் உணர்ந்தவளோ அவனிடம், " ப்ளீஸ்".. என்க

அவனோ திமிரும் அவளது இரண்டு கைகளையும் தனது கைகளில் அடக்கி பிடித்து , "ஏன் டி நாம பர்ஸ்ட் நயட் செலிபரேட் பண்ற மாதிரி இப்படி நர்வஸ் ஆகி என்னை மூட் ஆக்குற சம்மு நமக்கு இது செகண்ட் நயட் டி"... என்று அவளின் கன்ன கதுப்புகளில் தன் இதழை பதிக்க அவளுக்கு கூச்சமாக இருந்தது கூடவே அவன் பேசிய பேச்சுக்கு அவளது காது மடலும் சூடானது..

அவனோ அவனுக்கு தடை விதித்து கொண்டிருக்கும் அவளது சேலையை கழட்டி ஓரமாக வைத்து," நீ கொஞ்ச நேரம் இங்கே இரு நான் இல்லாத சமயம் வந்துக்கோ"... என கூறிக்கொண்டே அவளை மேலும் மேலும் சிவக்க வைத்து கொன்றான்..

பிரித்திவியால் இப்படி எல்லாம் பேச முடியுமா என விழியோடு வாய்யையும் பிளந்த அவளின் இதழை மென்மையாக சுவைத்து கொண்டே அவன் கைகள் அவளது மென்மையான உடலில் ஊர்வலம் போனது..

காம தேவனின் காம லோகத்தில் ஆடைகளுக்கு அங்கு என்ன வேலை ஆண் என்ன பெண் என்ன இருவருக்கும் ஒரே உணர்ச்சிகள் தானே ...உணர்ச்சிகள் சதிராட முழு உணர்வோடு அவளை மெல்ல மெல்ல தன் வலைக்குள் அவளை கொண்டு வந்த பிருத்வி பின் மெல்ல சம்யூவை ஆட்கொண்டாள்..

முதலில் அவனிடம் இருந்து விலக துடித்த அவள் பின் அவனின் மென் காதலில் கரைந்தாள்...

உணர்ச்சிகள் கூடும் வேளையில் அவனது உச்சக்கட்ட காதலை அவள் உணர்ந்தாள் ஆம் காமத்தில் அல்ல அவனது காதலில்... அவள் காதில் முதன் முறையாக தன் காதலை கூறினான் பிருத்வி, " சம்மு ஐ லவ் யூ"... என்க சம்முவின் கை தானாக அவனது தலையை தன்னோடு இழுத்து கோர்த்து கொண்டது...

இந்த வார்த்தையை தானே அவள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது...அதை அவன் வாயிலே கூறவும் அவனது சம்யூ அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்ட்டாள்..அந்த முத்தத்தில் அவன் கரைந்தான் எனில் அவளோ இனி உனக்காக நான் இருப்பேன் என்பது போல இருந்த அந்த முத்தமே அவனது அடுத்த கட்ட ஆட்டத்துக்கு ஏதுவாக இருக்க அவளும் சுகமாக அவனோடு ஒன்றி போனாள்..

பிறகு வெகு நேரம் கழித்து அவன் அயர்ந்து உறங்கும் சத்தம் அவளுக்கு கேட்டாலும் சம்யூவின் கண்களில் ஈரம் சுரந்தது..

அவனது முகத்தை இரவு விளக்கு ஒளியில் பார்க்கும் போது மீசை மட்டும் இல்லையெனில் அமைதியான குழந்தை முகம் போல தான் இருக்கிறது ஆனால் அவனுள் இந்த வில்லத்தனம் வர காரணம் அவளது அத்தை எனும் போது அவரை நாக்கை பிடுங்கும் படி கேட்க வேண்டும் என்ற வெறி சம்யூவின் மனதில் எழுந்தது..

அதை செயலாற்றும் விதத்தில் மறுநாள் கணவன் சென்ற பின் வெளியே சென்றாள்.. சென்றவள் வெகு நேரமாகியும் காணவில்லை என பெரியவர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார் அதே நேரம் பிருத்திவியின் தனிப்பட்ட எண்ணுக்கு செய்தி ஒன்று வந்தது..சம்யூ கடத்தப்பட்டாள் என்றும் மற்றொன்று விக்கி அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான் என்றும் தகவல் வந்தது...கூடவே நீ யாரை காப்பாற்ற போகிறாய் என்ற நக்கல் கேள்வியும் இடம் பெற்று இருந்தது..

மாயவன் வருவான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top