Share:
Notifications
Clear all

அத்தியாயம் 16

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

அபி அவளை அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவர்கள் இவளை பரிசோதித்து பார்த்து இலேசான மயக்கம் தான் கொஞ்சம் ரெஸ்ட் எழுந்தால் சரியாகி விடும் என்று கூற அபி அவளது முகத்தை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான்..

அவனது உள்மனம் கூறியிருந்தது அது அவளே என அவளது கால் கொலுசில் தான் அவன் கண்களும் நிலைத்து இருந்தது அவன் மனதை கொள்ளையடித்தவளின் குரல் மற்றும் இந்த கொலுசொலி இந்த இரு துப்பு மட்டுமே அவனிடம் அவளை பற்றிய தகவலாக இருக்க அதை வைத்து கொண்டு ஒரு பெண்ணை தேடுவது கஷ்டமான விடயம் என்பது அவனுக்கும் தெரியாமல் இல்லை..

பல சமயங்களில் இது ஒரு மடத்தனம் என்றே நினைத்து அவளது நெனைப்புகளை மூளையில் ஒதுக்கி வைத்திருந்தான் ஆனால் இப்போது அப்படி இருக்க முடியவில்லை அதிலும் இவளின் கொலுசும் அதே ஒலியை தானே ஒலித்தது அது அவன் மனதில் இடம் பிடித்தவளாகவே இருக்க வேண்டும் என நினைத்து அவன் காத்து இருக்க பெண்ணவள் மெல்ல கண் விழித்தாள்..

அவளால் கண்களை பிரிக்க கூட முடியவில்லை இரண்டு நாட்களாக அவள் உணவு உட்கொள்ளவில்லை அதனால் அவள் உடலில் வலு இல்லை.. உடல் வெளுத்து போய் கண்ணில் ரத்த பசை கூட இல்லாமல் வெளுத்து இருக்க மெல்ல கண்களை திறந்து பார்த்தவள் முன் அவன் அவனே தான் ..அவள் கண்கள் எட்டாவது அதிசயமாக அவனை பார்த்தது.. அவனது தலை முதல் கால் வரை அவள் கண்கள் மேய்ந்தன..

அவள் அன்று அவனை காப்பாற்றிய போது அவனது பெயர் கூட தெரியாது..அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தாலும் அவன் பிழைப்பதற்கான எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் கையை விரிக்க இவள் பதட்டமடைந்து பிழைப்பானா மாட்டானா என அவள் வணங்கும் தேவிக்கு வேண்டுதல் வைத்த நேரத்தில் தான் அவனுடைய உறவின பெண் அழைக்க விஷயத்தை கூறியவள் மறுநாள் வந்து பார்க்கும் போது அவன் அங்கு இல்லை..மருத்துவர்களிடம் விசாரித்த போது அவனது உறவினர்கள் வந்து அழைத்து சென்று விட்டனர் என கூறவும் அவள் மனது நிம்மதி அடைந்தாலும் கூடவே அவனுக்கு ஒன்றும் ஆகி விட கூடாது என்று வேண்டுதலும் இருந்தது..

அவனுக்கு என்ன ஆகிற்றோ என வருந்தியவளுக்கு முழுமையாக குணமடைந்து தன் முன் நிற்கிறானே என்று அவள் முகம் அவனை பார்த்து மென்மையான சிரிக்க அபியோ தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல கருத்த சிலை போல நின்று அவளை தீர்க்கமாக பார்த்து கொண்டிருந்தான்..

அவளுக்கு நன்றாக தெரியும் அது அவனே என்று இருந்தாலும் அவனது அந்நிய பார்வையை எதிர் கொண்டவளுக்கு புரிந்து போனது இவனுக்கு என்னை நியாபகம் இல்லை என மேலும் அவனிடம் போய் நான் உனை காப்பாற்றினேன் எனை நியாபகம் இருக்கா என சுய அறிமுகம் செய்து கொள்ள அவளுக்கும் விருப்பம் இல்லாத காரணத்தினால் அவளும் தன் பார்வையை அந்நிய பார்வையாக மாற்றி அமைதியாக படுத்து இருக்க அவளது முதல் விழி பார்வையிலே அவனை அதிசயமாக அதே நேரம் அவனது கை கால்களை கண்காளாலே வருடும் போதே அபி உணர்ந்து கொண்டான் இது அவள் தான் என்று அவளின் பார்வையை சந்தித்தவனின் மனதை வார்த்தையால் வடிக்க இயலாது ..

தொட்டாலும் அருகே இருந்தாலும் ,பார்த்தாலும் தான் காதலை உணர முடியுமா தொடாமலும் அருகே இல்லாமலுமே காதலை கொண்டாடலாம் என அபி இந்த நொடி உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், " யார் நீ??"... கடினமாக கேட்க ஹிந்தியில் கேட்க ,

அவளோ அவனுக்கு சத்தியமாக நினைவு இல்லையா என மீண்டும் ஒரு முறை அவளின் உள்மனம் ஆராய்ச்சி செய்தாலும் வெளியே அதை காட்டி கொள்ளாமல், " நான்".. என திக்கி அவள் தடுமாற

அவனோ, "என்ன சொல்ல தெரியலையா.. உன் பேர் என்ன ??"... என்க

அவன் கேட்ட விதம் அவளுக்கு கோபத்தை கொடுக்க, "நான் ஏன் உங்ககிட்ட பதில் சொல்லணும்??..யார் நீங்க"..என்று திருப்பி அவள் கேட்க

"ஹ்ம்ம் உன்னை காப்பாதினதுக்கு நீ இதை சொல்லி தான் ஆகனும்".. என்று அவன் கூற அவளோ உதட்டை கடித்து தன்னை நிலைப்படுத்தியவள் மெதுவாக, " என்னோட பேர் சோனாலி"... என்று கூற

அபியின் மனதுக்குள், " ஓ சோன் பப்டி யா அப்போ செல்ல பேர் ஓகே ஆகிடுச்சு"... என்று குதுகலித்தவன் வெளியே அதை வெளிக்காட்டாமல், " அப்போ உன் குடும்பம்"... என்க

குடும்பம் என்ற கேள்வி வந்ததும், " எனக்கு யாருமில்லை நான் ஒரு அனாதை".. என்ற வார்த்தையை அவள் உதிக்கும் போது அவளுள் பெரும் வேதனை உருவானது அதை கண்டவன், " மாமன் குத்து கல் மாதிரி இருக்கும் போது நீ ஏன் டி வேதனைப்படுற இனி மாமன் தான் உனக்கு எல்லாமே".. என்று மனதில் கூறிக்கொண்டவன் வெளியே, " அப்போ ஏன் அவங்க உன்னை துரத்தினாங்க ??..யார் அவங்க??"... என்க

"அது வந்து எங்க ஊர்ல ஒரு பணக்காரன் என்னை இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னான்.. நான் அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி ஊரை விட்டு ஓடி வந்துட்டேன் அவங்க தான் என்னை துரத்துறாங்க"... என்க

அவனோ மனதுக்குள் , "அப்போ வில்லனுங்க இருக்காங்க அதெப்படி டா அபி உனக்கு மட்டும் வில்லனுங்க இப்படி தேடி வரானுங்க சரி இங்க ஒருத்தனை சாமாளிக்கிறோம் (பிருத்வி) இனி ஒருத்தனை கூட சாமாளிப்போம் "...என்று மனதுக்குள் தன்னம்பிக்கையாக தனக்கு தானே தட்டி கொடுத்தவன் , "ஹ்ம்ம் அப்போ உனக்கு யாருமில்லை "...என்று மீண்டும் ஒரு முறை கேட்க

"இல்லை"... என்றாள் சோனா..

"ஹ்ம்ம் ஓகே என்ன படிச்சு இருக்க??"... என்று அவன் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு அவளை குடைந்தான் அபி...

"நான் காலேஜ் படிப்பை பாதியில் விட்டுட்டேன்.. பி. காம் இரண்டாவது வருஷம் முடிச்சு இருக்கேன் "..என்று கூறவும்

"ஏன் படிப்பை முடிக்கல??"...

"அது என்னை ஒருத்தர் படிக்க வெச்சிட்டு இருந்தார் அவர் இறந்துட்டாராம் அதுனால மேற்கொண்டு என் படிப்பை தொடரல"... என்று கூற அதை கேட்டவனுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது , "இனி உன்னை எப்படி பார்த்துக்க போறேன்னு பாரு டி "

.என்று நினைத்தவன் ,

"ஹ்ம்ம் என்னோட ஆபீஸ்ல ஒரு வேலை இருக்கு அங்கேயே தங்கிக்க வசதி அப்படியே பார்ட் டயமா படிக்கலாம்.. சேர்ந்துக்க விருப்பமா??"... என்று கேட்க

கடவுள் இருக்கிறானா இல்லையா என தினமும் புலம்பி கொண்டிருப்பவளுக்கு, அவள் முன் கடவுள் போல அவளது எல்லா வேண்டுதலையும் ஒரே நேரத்தில் அபி ரூபத்தில் நிறைவேற்றினாலோ என சந்தோசித்தவள் வேகமாக, " சரி"... என தலையாட்டினாள்...

மேலும் அவளுக்கு ஒரு சந்தேகம் எழ அதை அவனிடமே கேட்டாள், "எப்போ உங்க ஆபிஸ்ல எனக்கு வேலை தருவாங்க ஆமாம் நீங்க அங்கே என்ன வேலை செய்யறீங்க ??..நீங்க சொன்னா எனக்கு வேலை தருவாங்களா?? "...என்று சோனாலி சந்தேகமாக கேட்க ,

அவனுக்கு தலையில் அடித்து கொள்ளலாம் என இருந்தது.. இருந்தாலும் , "ஹ்ம்ம் அதெல்லாம் நான் சொன்னா தருவாங்க "...என்று கூறியவன் அவளிடம் விடைப்பெற்று

சென்று விட்டான்..

அவன் கூறிய படி ஒரு வாரம் ஆவதற்குள் அவளை அவனது பி.ஏ வாக தன்னுடனே இருப்பது போல பார்த்துக்கொண்டான்... கூடவே அவளை நல்ல ஒரு காலேஜிலும் சேர்த்து விட்டான்...அவனும் அவனுடைய பாகத்தை பிரித்து தன்னுடைய தொழிலை அவனுடைய வசதிக்கு ஏற்ப தொடங்கி கொண்டான்..

பல தரப்பட்ட விமர்சனங்கள் வந்த போதிலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் வாழ்க்கை பயணத்தை மிக அருமையாக துவங்கி இருந்தான் அபிஷேக்..

அவனுடைய கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்து கொண்டிருந்த பலர் இப்போது பிருத்திவியின் கம்பெனியை நாடி போனாலும் இன்னும் ஒரு சிலர் அபியின் தாத்தாவின் பேருக்காக அவனுடன் தொழில் செய்ய முன் வர இறந்தும் தன் தாத்தாவிற்கு இருக்கும் நன்பெயரை பார்த்து மகிழ்ந்தவன் அதே போல அவனும் முன்னேற வேண்டும் என எண்ணி கொண்டான்..

ஆரம்பத்தில் பிருத்வி செய்த செயலால் அவனை வீழ்த்த வேண்டும் என்றெல்லாம் எண்ணி இருந்தாலும் அவனது தாத்தா இறக்கும் முன் பேசிய வீடியோவில் கூறிய அறிவுரையை இப்போதும் எண்ணி கொண்டவன் அந்த கெட்ட எண்ணங்களில் இருந்து எல்லாம் விடுப்பட்டு அவன் வாழ்க்கையை துவங்கி இருக்கிறான் கூடவே தன் பெற்றோர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கிறான் ...

இப்படி அபி வாழ்க்கை சென்று கொண்டிருக்க சம்யூ வாழ்க்கை தெளிந்த நீரோடை போல எந்த வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தது...

அதில் அவனது வீட்டுக்கு புதிய வரவாக வந்து இருக்கும் அவனது தாத்தாவை அவளுக்கு ரொம்ப பிடித்து போனது..

ஆம் அவரை பார்க்கும் போது அவளுக்கு அவளுடைய தாத்தாவின் நியாபகம் தான் வந்து போனது அதுமட்டுமின்றி அவரிடம் பிடித்த விஷயமே அவருடைய சமையல் தான் ..

இந்த வயதிலும் அவர் தான் வந்தது முதல் சமைத்து தருகிறார்..அவளும் நல்ல வக்கனையான உண்டு ஒரு சுத்து பெருத்து வருகிறாள்...இதை கண்ட பிருத்திவிக்கு அவர்கள் இருவரின் இணக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும் தன் மனைவி அவள் மட்டும் வயிறு முட்ட உண்பவள் தன்னை மட்டும் பட்டினி போடுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அவன் அவள் அருகில் வந்தாலே அவனை ஒரு பார்வையாலே மாற்றி நிறுத்தி விடுகிறாள்...

ஆனால் இதில் மட்டும் தான் அவள் இப்படி செய்கிறாளே ஒழிய தாத்தாவின் வருகைக்கு பின் தாத்தா உள்ள போதேல்லாம் அவனின் பதி விரதை போல நன்றாக நடிப்பாள் அதிலும் அவனை நெருங்கி அமர்வது,அவனது கையோடு கை கோர்த்து கொள்வது , அலுவலகம் விட்டு வரும் அவனிடம் பசை போல ஒட்டி கொள்வது அறைக்குள் வந்தால் மட்டும் நீ யாரோ நான் யாரோ என்பது போல இருப்பது என்று பிருத்வியிடமே தன் சித்து விளையாட்டுகளை காட்டி வருகிறாள்..

அவனும் தன் மீது உள்ள கோபத்தை எல்லாம் மனைவி இப்படி காட்டி தீர்த்து கொள்ளட்டும் என நினைத்து சுகமாக அவளது விளையாட்டுகளை ரசித்து வருகிறான் அந்த கள்வன்..

அவனுக்கும் இது தான் வேண்டும் இந்த குறும்பு சம்யூ தான் வேண்டும் சதா ஏது சமயமும் அழுது வடிந்து கொண்டிருந்தால் எப்படி அதற்கு இப்படி ஏதாவது செய்யட்டும் என விட்டுவிட ஆனால் ஒரு நாள் வசமாக அவனிடம் மாட்டி விட்டாள் சம்யூ..

தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு நாள் இரவு பிருத்திவியின் தாத்தா தோசை வார்த்து கொடுக்க இவர்கள் இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர்..

அந்த நேரம் பார்த்து சம்யூவின் மூளை அதி பயங்கரமாக வேலை செய்து , "தாத்தா நான் அவருக்கு தோசை ஊத்தி தரேன் நீங்க வாங்க"... என்றாள்..

அதற்கு , "அவரோ வேணாம் மா தம்பிக்கு என்னோட பொடி தோசைனா ரொம்ப விருப்பம் நானே செஞ்சு தரேன் "...என்று கூறவும்

"தாத்தா உங்க பேரன் எப்போவும் உங்க சமையல் தானே சாப்பிடுறார் இன்னிக்கு என்னோட தோசையை சாப்பிடட்டும் "...என்று தேன் ஒழுக பேசுபவளை பார்த்து , "சரி".. என பெரியவர் தலையசைக்க என்ன செய்ய போகிறாள் என முன் கூட்டி கணிக்க முடியாத அளவுக்கு பிருத்வி ஒன்றும் முட்டாள் இல்லையே..

பிருத்திவியோ அவனது தட்டில் உள்ள உணவில் கவனம் பதித்து கொண்டே அடுக்களையில் அவள் என்ன செய்கிறாள் என எட்டி பார்க்க அங்கே அவள் தோசை வார்க்கிறேன் பேர்வழி என்று அடுக்களையை நாசம் செய்தது மட்டுமின்றி தோசை என்ற பெயரில் ஏதோ ஒன்றை வார்த்தவள் மிக புத்திசாலித்தனமாக தோசைக்கு மேல் இட்லி பொடிக்கு பதில் மிளகாய் பொடியை விதறி கொண்டிருந்தாள் அதிலும் அவள் கணவன் மீது அலாதி அன்பு போலும் நான்கு ஸ்பூன் மிளகாய் பொடியை விதறி சிவப்பு நிற தோசையாக மாற்றியவள் அதை லாவகமாக திருப்பி போட்டு குதுகலித்து சிரித்து , "இன்னிக்கு முடிச்சீங்க இதை சாப்பிட்டு பாருங்க..எல்லாமே வெந்து போயிடும்".. என்று முனகி கொண்டே திரும்ப அங்கே அவன் அவள் கணவன் அவளை நெருங்கி நின்று கொண்டிருந்தான்....அவனை கண்டதும் அவள் முகத்தில் ஈயாடவில்லை...அப்படியே சிரித்த சிலை போல நின்றவளையும் அவளது தோசையையும் கிச்சன் டாப்பில் உள்ள மிளகாய் பொடியையும் கண்டவன்,

அவளை பார்த்து, "காரமான பொடி தோசை தயார் போல "...என்று கூறியவன் அவளை பார்க்க சம்யூ பேந்த பேந்த விழித்தாள்..."சரி உன் புருசனுக்கு நீயே ஊட்டி விடு".. என்று பிருத்திவி கூற,

அவளோ வேகமாக தலை குனிந்து நின்றவள் தோசையை அவளுக்கு பின்னால் மறைத்து பிடித்து மாட்டேன் என்பது போல தலையை ஆட்ட, அவனோ தட்டை வெடுக்கென பிடுங்கி , "ஹ்ம்ம் ஊட்டு".. என்று அதட்ட

அவளோ , "வேணாம் நான் சும்மா விளையாட்டுக்கு செஞ்சேன் "..என்று கம்மிய குரலில் கூறவும்

"ஹ்ம்ம் சரி ..நான் உன்னை எதுவும் சொல்லலையே தோசையை ஊட்டி விடுன்னு தானே சொன்னேன்...முதன் முதலா என் பொண்டாட்டி எனக்கு ஆசை ஆசையா சமைச்சு இருக்க அதை நான் டேஸ்ட் பண்ணி பார்க்க வேணாமா?? "...என கேட்டவன்

"ஹ்ம்ம் தா"... என்று கூற

அவளோ, " காரமா இருக்கும்".. என்று மறுத்தவளை வம்படியாக அவளை கொண்டே ஒரு வாய் உணவை வாங்கி உண்டான்..

காரம் சுர்ரென்று தலைக்கு ஏறி இருக்கும் போல அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோட அதை கண்டவளுக்கு அவள் செய்த தவறு புரிப்பட அவள் கண்ணிலும் கண்ணீர் இலேசாக சுரந்தது அதை கண்டவன் அவள் அருகே நெருங்கி வந்து, " எனக்கு இந்த அழகான தோசையை சுட்டு தந்த உனக்கு பரிசு தர வேணாம்".. என கூறியவன் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான்..

அழுத்தமான முத்தத்தில் இத்தனை நாள் அவன் கட்டி காத்த விரதத்தை இறக்கி வைத்தவன் அவளை விட்டு விலகி அவளின் சிவந்த அதரங்களை பார்த்து கண்காளாலே சிவக்க வைத்தவன் அவள் அருகே நெருங்கி அவள் செவியில் , "இன்னும் வேற ஏதாவது ட்ரை பண்ணு பேபி ..உன் புருஷன் அதுக்கு வைட்டிங் அப்போ தான் எனக்கு இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் கிடைக்கும்" ..என்று கூறி விட்டு அவளது கன்னம் தட்டி சென்றான்...

அவனது செய்கையில் அவள் விலக துடித்தாலும் அவள் மனம் அவனுடன் கலக்கவே துடித்தது..

இப்படி இவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது தான் ஆர் ட்ரேடர்ஸின் அறிமுக விழா துவங்கியது...அதற்கு ஊரில் உள்ள அனைத்து தொழில் அதிபர்களையும் அழைத்து இருந்தான்..தொழில் நிறுவனர் என்ற பெயரில் ராஜேஸ்வரிக்கும் அழைப்பு சென்றது..

தொழில் செய்ய முடியாமல் தன் தொழிலை முடக்கி தன்னை வீட்டிலே அமர வைத்ததும் இல்லாமல் இதில் அழைப்பா என நெனைத்தவர் , " செய்யறதை எல்லாம் செஞ்சு எனை இப்படி உக்கார வெச்சிட்டு நீ புது தொழிலா ஆரம்பிக்கிற என்னோட உழைப்பை சிதைத்த உன்னை சும்மா விட மாட்டேன் டா "...என கருவியவர் அவனது அழைப்பிதழை கிழித்து தூக்கி வீசினார்...

எடுத்து சரியாக பார்த்து இருந்தாலாவது அவரால் இந்நேரம் எதற்காக அவன் இதை எல்லாம் செய்கிறான் என கணித்து இருக்க முடியும் பாவம் அவரோ தவற விட்டுவிட்டார்...பிருத்திவியின் வாயாலே கேட்க வேண்டும் என்று அவர் தலையில் எழுதி இருக்கிறது போலும்...

ஆம் அவனது தாத்தாவின் ஆசிப்படி ஆர் ட்ரேடர்ஸ் நிறுவனத்தின் பெயரை பிருத்வி, " தர்மா நிறுவனம்"... என்று பெயரை மாற்றினான்..கூடவே இந்த தர்மா நிறுவனம் ஹோட்டல் தொழிலை தான் செய்ய இருக்கிறது என்ற அறிவிப்பும் கொடுத்தான்..முதலில் இருந்த இந்த நிறுவனம் செய்த தொழிலை செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறவும் அதை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்...ஆம் இவனிடம் நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்து இங்கே தாவினால் அவன் இந்த தொழிலை செய்ய போவதில்லை என்றவல்லவா கூறுகிறான் என நினைத்து பலரும் அபியின் நிறுவனத்திலே மீண்டும் இணைந்து கொண்டனர்..பிருத்திவியின் இந்த செயல் அபிக்கு நன்மையாக முடியும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை..

அங்கே கூடி இருந்தவர்கள் அனைவரும் அந்த பெயரையும், தொழிலையும் கேட்டு சலசலக்க, " சம்யூவும் என்ன பேர் கொஞ்சம் பழசா இருக்கிற மாதிரி இருக்கே "...என நெனைத்தாலும் நமக்கு ஏன் வம்பு என அவள் கேட்காமல் இருக்க அவளை போல அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் அமைதியாக இருக்க மாட்டார்களே அவர்கள் கேட்டு விட பிருத்வி ராஜ் கம்பீரமாக மிடுக்கோடு அனைத்தையும் சாதித்து விட்டோம் என்ற வெறியோடு , "எஸ் இது என்னோட அப்பாவோட பெயர் தான் அதை சுருக்கி தான் தர்மான்னு வெச்சு இருக்கேன் அண்ட் அவர் ஒரு சமையல் கலை நிருபர் அதனால் அவர் பெயரில் ஹோட்டல் துவங்கி இருக்கேன்..எங்க குல தொழில் சமையல் தான்...என் தாத்தா காலத்தில் இருந்து இந்த தொழில் தான் நானும் பல தொழிலில் கால் பதித்தாலும் முக்கியமா இந்த தொழில் தான் செய்யறேன் ..எனக்கு முதலிலே நிறைய ஹோட்டல் இருந்தாலும் இது எனக்கு ரொம்ப முக்கியமான ஒன்று.." ..என்று சிரித்தபடி கூற அந்த வீடியோ அதி வேகமாக வைரல் ஆனது..

கூடவே ராஜேஸ்வரிக்கும் அந்த வீடியோவை காணும் பாக்கியம் கிடைத்தது...அதை கண்டவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியானவர் பெயரை விட அந்த வீடியோவில் இருந்த பெரியவரை கண்டதும் அவருக்கு தான் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டோம் என மிக சரியாக விளங்கியது...

அவர் வீடியோவை கண்ட அடுத்த சில மணி துளிகளில் பிருத்வி அவரை அழைத்து இருந்தான்..அவன் தான் அழைக்கிறான் என உணரும் சக்தி கூட இல்லாமல் அமர்ந்து இருந்தவர் போனை எடுத்து அவர் காதில் வைக்க , "என்ன ராஜ ராஜேஸ்வரி மேடம் என்னோட புது பெயர் , புது தொழில் எல்லாம் பிடிச்சு இருக்கா?? இல்லை பழசை நெனைச்சுட்டு உக்கார்ந்து இருக்கீங்களா?? உங்களுக்கு தான் பழசு எப்பவுமே பிடிக்காதாமே..இப்போ புரிஞ்சு இருக்குமே நான் எதுக்கு வந்து இருக்கேன்னு"... என்று கூறியவன் அடுத்த நொடி போனை வைத்தும் விட்டான்...அவன் கூறியதை கேட்ட ராஜேஸ்வரி சிலை போல அமர்ந்து விட்டார்..

மாயவன் வருவான்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top