Share:
Notifications
Clear all

அத்தியாயம் 15

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

ராஜேஸ்வரிக்கு மனம் ஆறவே இல்லை பெத்த கடனுக்காக அந்த வீட்டில் தங்க மட்டுமே அனுமதி அளித்திருக்கும் அவரது தந்தைக்கு தன் மீது ஏன் இந்த வெறுப்பு எதுவுமே அவருக்கு விளங்கவில்லை...

ஈஸ்வரும் அதே நேரம் அதே தான் யோசித்து கொண்டிருந்தார்...ஈஸ்வரின் சொந்த தாய் மாமா தான் ராம மூர்த்தி அப்படி இருந்தும் முகத்துக்கு நேரே ஒரு சிறு கடுசொல்லோ இல்லை வாக்குவாதமோ இதுவரை அவர்கள் இருவருக்கும் நடந்தது இல்லை அப்படி இருக்க தன்னை வளர்த்தியவரே இப்படி செய்து விட்டார் என நினைத்து கொண்டிருந்தார்..

சொத்து எல்லாம் இப்படி போய் விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தார் இந்த சொத்தை ஆள வேண்டும் என்பது ஈஸ்வரின் இன்றைய நேற்றைய கனவு அல்ல கிட்டத்தட்ட அவரின் வாழ்நாள் லட்சியம் என்றே கூறலாம் ..ஆம் தாய் தந்தை யாருமின்றி அனாதையாக தாய் மாமன் வீட்டில் காலடி எடுத்து வைத்தது முதல் அவருக்கு அந்த சொத்துக்களின் மீது மோகம் இருந்தது என்னவோ உண்மை தான்...அது நடக்கும் என காத்து இருந்தவரின் எண்ணம் இப்படி கானல் நீராக போனதை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை..

அபிக்கு பெற்றோர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்கள் பொய் பிரட்டு செய்தது இந்த நொடி வரை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை..உண்மையில் தன் பெற்றோர்கள் தானா என நம்ப கூட முடியாமல் தள்ளாடினான்...

ஏனெனில் அவனும் சம்யூவும் ராம மூர்த்தியின் வளர்ப்பு அவர்களால் இந்த பொய் பிரட்டு எல்லாம் செய்ய முடியாது அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் உண்மை ,நேர்மை மட்டுமே..

தாத்தா ஏன் இப்படி தன் பெற்றவர்களை ஒதுக்கினார் என அவனுக்கு தெரியாது ஆனால் அவனுக்கு அவனது தாத்தா மீது நம்பிக்கை உண்டு அவர் எது செய்தாலும் அது தங்களின் நன்மைக்கே என்று அவனுக்கு தெரியும்.. அதனால் தானும் தன் தாத்தாவை போல முன்னேற வேண்டும் என நினைத்து அவன் வாழ்க்கை பாதையில் முன்னேற துவங்கினான்...

என்ன தான் இருந்தாலும் பிருத்விக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது ஒரு வேளை வக்கீலின் நண்பன் என்பதால் உண்மை தெரிந்து சொத்தை கைப்பற்ற எண்ணி இருப்பானோ என்றெல்லாம் எண்ணியவனுக்கு பிருத்வி மீது நல்ல அபிப்பிராயம் மட்டும் வரவில்லை..

அவனுக்கு மட்டுமா அவனுடைய மனைவிக்கும் தான் வரவில்லை...அன்றைய சொத்து பிரச்சனை வெடித்து ராஜேஸ்வரி வீட்டில் தீர்வை கண்டெத்தி வீட்டுக்கு வந்ததும் அவனிடம் தாள முடியாமல் வெடித்தே விட்டாள் சம்யூ ..

"அப்போ இந்த சொத்துக்காக தான் எல்லாம் செஞ்சீங்களா ?"...என்று அவள் கேட்க

அவனோ கூலாக, " ஆமாம்"... என்று தோளை குலுக்கி பதில் அளித்தான்..

"அப்போ என்னை பார்த்தது, என்கூட பழகினது இதெல்லாம்??"... என்று அவள் அழுகையினூடே கேட்க

அவனுக்கு அவளுடைய அழுகை பாதித்ததோ என்னவோ, " சி சம்மு எனக்கு தேவையான இலக்கை அடைய நான் எந்த அளவுக்கும் இறங்குவேன்"... என்று அவன் ஒரு கணக்கில் கூற சம்யூ வேறொரு விதத்தில் எடுத்து கொண்டவள் அவ்வளவு நேரம் கண்ணீர் சிந்தியவள் கண்ணீரை அழுந்த துடைத்து வெறி கொண்ட பெண் வேங்கை போல, "அப்போ என்கூட படுத்தது, என்னை கிஸ் பண்ணினது, என்னை இப்போ கல்யாணம் பண்ணினது எல்லாம் பணத்துக்காக தானா???"... என்று ஆத்திரத்துடன் கேள்வி கேட்டாள்..

அதற்கு அவனிடம் விடை இல்லை ஏனெனில் அவள் கூறியது எல்லாம் அவன் பழி வாங்கும் வெறியில் செய்யவில்லை..அவன் அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று தான் நெனைத்தானே ஒழிய அவள் கூறிய காரணங்கள் இல்லை.... அவன் எப்போது சம்யூவை முதன் முதலாக பார்த்தானோ அப்போதே அவள் மீது காதல் கொண்டான்..

எப்படி சம்யூ பிருத்திவியை கண்டதும் காதல் கொண்டாளோ அதே போல தான் பிருத்திவியும்... ஆனால் பிருத்திவியின் காதல் பல வருடங்கள் கடந்து இருந்தது இந்த விடயம் அவனுக்கே சில வருடங்கள் முன்பு தான் புரிந்தது அது வேறு கதை...

அதை இப்போது கூற பிருத்திவிக்கு மனம் இல்லாது போனது அவனது துர்தஷ்டம் என்றே கூற வேண்டும்... அவனது அமைதியை கண்டவளுக்கு ஆத்திரம் மேலிட அவன் அருகே வந்து அவனது சட்டையை பிடித்து, "என் கூடவே படுத்து என் கிட்டயே பணத்தை வாங்கி இருக்கிற உங்க திறமையை நான் பாராட்டுறேன் ஒரு தடவை சுயநினைவு இல்லாமல் படுத்ததுக்கு இவ்வளவும் இழந்து யாருமில்லா அனாதையா நின்னுட்டு இருக்கேன் அதெல்லாம் காதல்ன்னு நான் நினைக்க பழி வெறின்னு நீங்க சொன்னீங்க இருந்தும் உங்க மேல நான் வெச்ச காதலால் நான் பொறுத்து போனேன் ஆனால் பழி வெறி இல்லை பணத்தாசைன்னு இன்னிக்கு புரிஞ்சிகிட்டேனே சீ உங்களை பார்த்ததுக்கு நான் முதன் முதலா வெட்கப்படுறேன்..இந்த பொழப்புக்கு நீங்க வேற வேலை செய்யலாம் "....என்று அவள் கூறி முடிக்கவில்லை அவள் அவர்கள் அறையில் ஒரு மூலையில் படுத்து கிடந்தாள்..அவள் கீழே விழுந்த நொடி அவள் கன்னம் திகுதிகுவென எரியும் போது தான் அவளுக்கு புரிந்தது அவன் அடித்து இருக்கிறான் என அப்படியே எழ முடியாமல் சுருண்டு விட்டாள்...

அடி வாங்கியவள் நிலைமை இப்படி என்றால் அடி கொடுத்தவன் அதோடு விடாமல் , "ஆமாம் டி நான் உன்கூட படுத்தேன் தான் இனியும் உன்கூட தான் படுப்பேன் பணத்தை ரெடி பண்ணி வை..நான் வரேன்...யாருக்கு டி வேணும் உன் பணம்.. தொலைச்சிடுவேன்"...என்று கர்ஜனையோடு மொழிந்து விட்டு இனியும் இங்கே இருந்தால் அவள் பேசிய பேச்சுக்கு ஏதாவது செய்தாலும் செய்து விடுவேன் என நினைத்து வெளியேறி விட்டான்...

வெளியேறிவனின் மனது சாந்தி அடையாமல் தறி கெட்டு ஓடியது...அவனது மனம் போல அவனது கையில் சுழன்று கொண்டிருக்கும் அவனது வாகனமும் தறி கெட்டு ஓடியது..பல எண்ண அதிர்வலைகள் அவன் மனதில் ஓட துவங்கி அவனுக்கு மூச்சு முட்டுவது போல தோன்ற துவங்கியது...

"எனக்கு என்ன ஒரு மனம் இல்லையா இருக்கே அதில் அவள் தானே இருக்கிறாள்...என்ன வார்த்தை கூறி விட்டாள் என்னை பார்த்து நான் தான் எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தேனே என்னை எதுக்கு இப்படி ஒரு இக்கட்டில் நிற்கிறேன் நான் இதுக்கு எல்லாம் காரணம் நீங்க தான்"... என்று ராம மூர்த்தியை வாய்க்கு வந்தபடி சாடினான்..

கண்களை மூடினால் அவரின் மென்மையான முகம் வந்து அவனிடம் கெஞ்சுவது போல இருக்க , அதற்காக தானே அவன் இங்கே வந்தது இவ்வளவு வேலைகள் செய்தது இவை அனைத்தும் ராம மூர்த்திகாக தானே செய்தான்...கூடவே அவனது ஆழ் மனதில் கிடக்கும் ஒரு வெறிக்காகவும் தானே இவ்வளவு தூரம் இறங்கினான்...அதில் அவளை தான் பகடைக்காயாக உபயோக படுத்தினானே ஒழிய அவளது காதலை அல்ல.. ஏனெனில் அவனும் தானே அவள் மீது காதலை கொண்டுள்ளான்..காதல் வைத்துள்ள எந்த ஆண் மகனும் பெண்ணவளை இப்படி நோகடிக்க எண்ண மாட்டானே ..சந்தர்ப்ப வசத்தால் அவனுடைய காரியம் ஆக வேண்டும் என்றெண்ணி சில காரியம் அவளை வைத்து செய்தது உண்மை தான் ஆனால் அதிலும் அவன் அவளை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நெனைக்கவில்லையே..

அதிலும் அவன் மனதில் இருப்பது போல அவளும் அவனை காதலிக்கிறாள் என தெரிந்த பின்னரே அவளுடன் உறவாடினானே ஒழிய அவள் கூறுவது போல பணத்துக்காக அல்ல என்றெல்லாம் குமைந்தவன் மனம் ஆறாமல் உடனே அமெரிக்காவில் இருக்கும் அவனது தாத்தா வேலாயுதத்தை அழைத்தான்..

விடாமல் போன் அலறி கொண்டிருப்பதை கண்டே புரிந்து போனது அவருக்கு...அது அவரது பேரன் பிருத்வி தான் அழைக்கிறான் என்று வேகமாக போனை எடுத்தவர், " சொல்லு கண்ணா "...என்று வாஞ்சையாக கூற அவன் பொங்கி விட்டான்..

"என்ன நெனைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசில என்னை மட்டும் இங்கே அனுப்பிட்டு நீங்க மட்டும் ஓடி ஒளிஞ்சு இருந்தா என்ன அர்த்தம் சொல்லுங்க உங்களால வர முடியுமா முடியாதா இல்லாட்டி நான் எதுவும் வேணாம்ன்னு போயிட்டே இருக்கேன்"... என்று கூற

அவரோ, " தம்பி அப்படி எல்லாம் செய்யாத பா நம்ம பரம்பரையில யாரும் கொடுத்த வாக்கை காப்பாத்தமால் இருக்க மாட்டோம் நீ வாக்கு கொடுத்து இருக்க அதை முடிச்சிட்டு வா அப்போ தான் இறந்த ஆத்மா சாந்தி அடையும் "...என்று கூற

"இதை சொல்லியே என்னை அடக்கிடுங்க "...என்று கூறி நடந்த விஷயத்தை கூற அதை கேட்டவர், " ரொம்ப அவங்களை வருத்தி எடுக்காத பா என்ன இருந்தாலும்"... என்று அவர் தொடங்கவில்லை ..

அதற்குள் , "என்ன இருந்தாலும் யாரா இருந்தாலும் அவங்க செஞ்சதுக்கு பலன் அவங்க அனுபவிக்கணும்"... என்று கூறியவன் மீண்டும் தன்னுள்ளே இறுகி போனான்..

" இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு பிலைட் வந்து சேருங்க"... என்று கூற அவரும் பேரன் மனநிலை அறிந்து, "சரி டா என்னோட பேத்தி எப்படி இருக்கா??"... என்று கேட்கவும் அதுவரை இருந்த மனநிலை மாறி, " ஹ்ம்ம் இருக்கா இருக்கா என்னை உயிரை வாங்கிட்டு இருக்கா "...என்று கூற,

அவரோ, " நீ அவ உயிரை வாங்காமல் இருந்தா போதும் குழந்தை டா அவ"... என்று பெரியவர் கூற அதை கேட்டு சிரித்தவன் , "யாரு குழந்தை அவ குழந்தையா அவ பேசுறத கேட்டா இப்படி சொல்ல மாட்டீங்க "...என்று கூறி சிரித்தவனுக்கு அப்போது தான் மனதில் அடக்கி வைத்திருந்த பாரம் இறங்கியது போல இருந்தது...

அந்த நெனைப்பிலே வீட்டுக்கு சென்றவனுக்கு அவள் இன்னும் அதே இடத்தில் சுருண்டு கிடப்பது கண்ட பிருத்திவியே அவனை வெறுத்தான்...முன் கோபத்தால் என்ன காரியம் செய்து விட்டேன் என நொந்தவனுக்கு,

இப்போது அவள் அருகே அவனுக்கு செல்ல ஒரு தயக்கம் ஏற்பட்டாலும் அவளை எப்படியோ போ என விட்டுவிட முடியாத காரணத்தினால் அவள் அருகே சென்று அவள் தோளை தொட்டான் அழுது அழுது தேற்றுவார் யாருமின்றி அப்படியே உறங்கி இருப்பாள் போலும், " சம்மு"... என்றழைக்க அவளிடம் அசைவு இல்லை மெல்ல அவளை தூக்கியவன் அவளை தன் கைகளில் ஏந்தி பார்க்க அவள் முகத்தில் அவனது கை விரல் பதிந்து சிவந்து இருந்தது...அதற்குள் அவளுக்கு அசைவு வர கண் விழித்தவள் அவனை பார்த்து மிரள அந்த இடத்தில் அவன் தன்னையே வெறுத்தான்..

காதலித்த பெண் தன்னை கண்டு மிரளும் அளவுக்கு அவனது செய்கை இருக்கிறதே என நொந்தவன் வேகமாக அவள் தன்னிடம் இருந்து விலக முற்படுவதை பார்த்து, " பிளீஸ் டி நீயும் என்கிட்ட இருந்து விலகி போகாத ...உன்னை எனக்காக கூட்டிட்டு வந்து இருக்கேன்...எனக்காக மட்டும் தான்... நான் உன் வாழ்க்கையில் நுழைந்தது வேணா தவறான பாதையிலா இருக்கலாம் ஆனால் உன் காதலோ நம்ம கல்யாணமோ பொய் இல்லை..உன்னை யார்க்கும் விட்டு கொடுக்கும் எண்ணமும் எனக்கு இல்லை ..

அண்ட் கோவால நடந்த விஷயத்துக்கும் உன் அத்தை விஷயத்துக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை..அவங்க கிட்ட இருந்து உன்னை பிரிக்கனும்னு தான் நினைச்சேனே தவிர உன்னை எல்லோர் முன்னாடியும் காட்சி பொருளாக்கனும் நெனைக்கல "...என்று கூற சம்யூவின் காதல் மனம் இது கனவா இல்லை நினைவா இவன் கூறுவதை நம்பலாமா கூடாதா என்பது போல பார்க்க அவளது நெற்றியோடு தன் நெற்றியை முற்றியவன் , "நம்பு டி என் பொண்டாட்டி கொஞ்ச நாள் போனா எல்லா விஷயமும் வெளிச்சத்துக்கு வரும்..

இப்போ நான் என்ன சொன்னாலும் நீ நம்ப மாட்டேன்னு எனக்கு தெரியும்... இப்போ பல குழப்பங்கள் உன்னோட தலையில் ஓடிட்டு இருக்கும்னு எனக்கு தெரியும் அதெல்லாம் பொறுமையா உன் புருஷன் மேல நம்பிக்கை இல்லாட்டியும் நம்பிக்கை வெச்சு யோசிச்சு பார்"... என்று கூற அப்போதும் முழித்து கொண்டு இருப்பவளை தன் கையில் இருந்து இறக்க மனம் இல்லை என்றாலும் இறக்கியவன் அவள் தோளை தொட்டு , "உனக்கு உன் தாத்தா ராம மூர்த்தி மேல நம்பிக்கை இருக்கா?"... என கேட்கவும்

அவள் தலை தானாக ஆடியது, " அப்போ என்னையும் நம்பு உன் தாத்தா சொல்லி தான் நான் வந்து இருக்கேன்..இப்போதைக்கு என்னால இதை மட்டும் தான் சொல்ல முடியும் "...என்று கூற அவள் முகம் அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தாலும் காலையில் அவளது தாத்தாவின் வீடியோ, உயில் எல்லாத்தையும் மனதில் வைத்து சரி என்பது போல தலையாட்டினாள்...

அதுவே அந்த நேரம் பிருத்விக்கு போதுமானதாக இருக்க அவளை அணைக்க போனான்..அவளோ சட்டென்று விலகி நின்று , "என்னோட குழப்பம் எப்போ தீருதோ அப்போ என்கிட்ட வாங்க "...என்று மிடுக்காக கூறியவள் மனதுக்குள் என்னை எப்படி வதைச்ச உங்களை கொஞ்சமாவது பழி வாங்க வேணாம் என கூறியவள் கட்டிலில் சென்று படுத்து கொண்டாள்..இப்போது அதிர்வது பிருத்திவியின் முறை ஆனது..

அதே நேரம் அபி தன் தாத்தாவின், " ராம் ட்ரேடர்ஸை".. மீண்டும் துவங்குவது பற்றி லீகலாக விசாரித்து வரும் வழியில் ஒரு பெண் தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தாள் அவளை நான்கு பேர் துரத்தி கொண்டிருந்தனர்...

அவளோ காரில் அடிப்பட்டாவது உயிரை விட வேண்டும் என எண்ணி கொண்டிருப்பாள் போலும் மிக சரியாக அந்த நேரம் பார்த்து அபியின் கார் வர அதை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள்..

வேகமாக காரை நிறுத்தவும் அவள் வேண்டும் என்றே பாயவும் சரியாக இருக்க காரில் இருந்து அபி இறங்கவும் அந்த நான்கு பேர் , "இங்கே தான் டா இருக்கா அவ பிடி டா"... என்று கூறினர்..

அதை கேட்ட அபிக்கு அவர்களின் தோற்றம் மீது சந்தேகமாக இருந்தது... அதற்குள் அந்த நால்வரில் ஒருவர் அந்த பெண்ணின் அருகில் வர அவளை மறைத்தபடி அவனால் அந்த பெண்ணை தொட முடியாத படி அபி வந்து நின்றான்..

"தள்ளி நில்லு அந்த பொண்ணை நான் கூட்டிட்டு போகனும்"...

"முடியாது நீங்க எதுக்கு அந்த பொண்ணை துரத்திட்டு வந்திங்க அதை சொல்லுங்க முதல்ல??"...என்க

"அது உனக்கு தேவையில்லாத வேலை என்ன டா பார்த்துகிட்டு இருக்க அவனை அடிச்சுப்போட்டு அவளை இழுத்துட்டு வா டா"... என்று ஒருவன் கூற

அபிக்கு முன்னால் நின்றவன் கையை ஓங்கியது மட்டும் தான் அவனுக்கு நினைவில் இருந்தது வேறு எதுவும் அவனுக்கு நினைவு இல்லை..கூடவே அடி வயிறு கிழிந்து போனது போல ஒரு வலி அவனுக்கு உருவாகி சுருண்டு படுத்து அலறினான்...

அபி அவனின் வயிற்றில் ஓங்கி குத்தியதின் பலன் தான் அவன் சுருண்டு படுத்து இருக்க மீதம் உள்ள மூன்று பேரும் அபியை தாக்க வர அதே போல அவர்களுக்கும் குத்து விட அவர்கள் நால்வரும் சுருண்டு விழ அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு காரில் விழுந்த பெண்ணிடம் செல்ல அவள் அதிர்ச்சியில் மயக்கமாகி இருந்தாள்..

சுற்றி முற்றி பார்க்க யாருமில்லை மேலும் அவனோ என்ன செய்வது என்று யோசித்தவன் , "ஹே எழுந்திரு"... என்று அவள் தோளை தொட அசைவில்லாமல் படுத்து கிடந்தாள்...அதிலும் அவள் முகத்தை மறைத்து இருந்த முடியை விலக்க அந்த தெரு விளக்கின் ஒளியில் அவள் முகத்தை கவனிக்க மிக கலையான அவளது முகம் அவனை வெகுவாக ஈர்த்தது...

ஒரு நொடியே ரசித்தான் பின் தன் தலையில் தானே குட்டி இவளை என்ன செய்வது என்று யோசித்தவன் ஆபத்துக்கு பாவமில்லை என நினைத்து அவளை தூக்கினான்.. அவன் அவளை தூக்கும் போது அவள் காலில் அணிந்து கொலுசு அவள் காலோடு உரசின ..அந்த கொலுசு அந்த பெண்ணின் காலில் மட்டுமல்ல அபியின் மனதிலும் தான் அந்த கிங்கினி ஒலி உரசி சென்றது...

மனாலியில் தன்னை காப்பாற்றிய பெண் தானா அந்த சப்தம் போல இருக்கிறதே என்று மீண்டும் ஒரு முறை முகம் பார்க்க அதோ பாவம் அவன் தான் அந்த பெண்ணின் முகத்தை பார்க்கவில்லையே..

அபியின் கைகளில் இருக்கும் பெண் அவனை காப்பாற்றிய அவன் மனதை நிறைத்தவளாக இருப்பாளோ???..

மாயவன் வருவான்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top