அத்தியாயம் 14
மனம் விரும்புதே மாயவா
மென்மையான காலை வேளையில் கணவனுடன் பயணிப்பது கூட இன்பமான சுகம் தான் போல சம்யூவுக்கு தோன்றியது...இந்த நொடி அவனுடன் பயணிக்கும் போது அவள் மிக பாதுகாப்பாக உணர்கிறாள்...ஏன் என அவளுக்கு விளங்கவில்லை..
காலையில் அவள் குளித்து தயாராகிக் கொண்டிருக்கும் போது அவள் பின்னால் வந்து அவளின் உடலோடு உடல் உரசி நிற்பது போல நெருங்கி நின்று அவளை மூச்சடைக்க செய்தது மட்டுமின்றி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அப்படியே அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவள் செவியில்," காலையிலே பிரெஷ் மார்னிங் ஆஹ் பீல் பண்ண வெச்சதுக்கு தான் இந்த கிஸ்"...என்று முத்தமிட்டு கூற அவன் செய்த செயலில் கூசி சிலிர்த்தவள் மனது படபடவென அடித்து கொள்ள மேலும் அவள் செவியில் , "ரெடி ஆகு வெளில போயிட்டு வரலாம் "...என்று கூறியவன் அவளை மேலும் இறுக்கி அணைத்து விட்டு ,"மீதி நயட் பார்த்துக்கலாம்"... என்று கூறி அவளை மனமே இல்லாமல் விட்டான்..
நெஞ்சு நிறைய அவன் மீது ஆசை வைத்திருந்தாலும் அவனது பழி வாங்கும் வெறியில் தான் பகடைக்காயாக ஆக்கப்பட்டோம் என்றே அவள் அவனிடமிருந்து விலகி இருக்க ஆனாலும் அவள் மனதில் அவன் மீது கொண்ட காதல் மடிந்து விடவில்லை...
அதுவே ஒவ்வொரு முறையும் அவளை அவனிடம் உந்தி செல்கிறது..
இதோ இப்போது கூட அவன் தந்த மயக்கமே அவனுடன் காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறாள் ..காலையில் நடந்த சம்பவத்தை இப்போது வரை நினைத்து கொண்டிருக்கிறாள்...எங்கே செல்கிறாள் என சம்யூ அறியாள்..அவன் அழைத்ததின் பேரில் அவனுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறாள்...ஒரு வேளை அறிந்தால்???..
மெலடியான பாடல்கள் மெலிதாக இசைக்க அவனது இடைக்கண் பார்வை வேறு அடிக்கடி அவளை தழுவ ஏனோ அவனது பார்வை அவளது வயிற்றில் பட்டாம் பூச்சி ஊர்வது போல படபடக்க குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தாள்..
அதில் என்ன ஒரு அதிசயம் என்றால் அவளால் அவன் என்ன செய்தாலும் அவளுள் அவன் மீது வைத்துள்ள காதல் மட்டும் அப்படியே இருக்க, எப்படி நான் இவன் மீது இவ்வளவு நடந்தும் பைத்தியமாக இருக்கிறேன் என நெனைத்து கொண்டே இருக்கும் போதே சம்யூவின் வீடு செல்லும் பாதையில் கார் திரும்பியது கூடவே அவனது காருக்கு பின்னால் வேறு ஒரு காரும் சேர்ந்து கொண்டது..
இதை ஏதும் கவனிக்காமல் குனிந்த தலையிலே அமர்ந்து இருந்தவளை பார்த்தவன் , "என்ன இப்படியே குனிஞ்சு உக்கார்ந்துட்டு இருந்தா போதுமா நிமிர்ந்து உக்கார் "...என்று கூறவும் ராமா விலாஸ் கேட்டுக்குள் நுழைந்தது..
அதை கண்டவளுக்கு அத்தனை நேரம் இருந்த மென்மையான மனநிலை மாறி மனதுக்குள் திகில் உருவானது...
இங்கே எதற்கு வந்து இருக்கிறோம் என அவள் முழிக்க அப்போது தான் அவள் பின்னால் ஒரு கார் வருவதை கண்டவள் அவனை பீதியோடு பார்த்து , "இங்கே எதுக்கு வந்திருக்கோம்"... என்று கேட்டாள்...
"உன் வீட்டுக்கு தான வந்திருக்கோம் இதுக்கு எதுக்கு இவ்ளோ சாக் ஆகுற??"... என்று கூறிக்கொண்டே காரை லாவகமாக நிறுத்தியவன் , "வா இறங்கு"... என்று கூலாக கூற
"எதுக்கு ப்ளீஸ் போலாம்"... என்று சம்யூ கூறினாள் ..ஏனெனில் ராம விலாசை அடைந்தது முதல் ஏதோ அசம்பாவிதம் நடக்க போவது போலவே அவளுக்கு தோன்ற காரில் இருந்து இறங்காமலே அமர்ந்து இருந்தாள்...
அவனோ, "சம்மு பயப்படாத உன்னை விட்டுட்டு போற ஐடியா எல்லாம் எனக்கு இல்லை.. உனக்கு சேர வேண்டியது கொஞ்சம் இருக்கு அதை வாங்கிட்டு போயிடலாம் வா "...என்று கூறவும் சம்யூ புரியாமல் முழித்தாள் இருந்தாலும் காரில் இருந்து இறங்கினாள்..
அவள் இது நாள் வரை வாழ்ந்த வீடு தான் ஆனால் நான்கு நாட்களில் அந்நியம் போல தோன்ற மனதுக்குள் திக் திக் என்ற உணர்வை எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை..
"ஹ்ம்ம் எவ்வளவு நேரம் இப்படியே நின்னுட்டு இருப்ப??"... என்று கூறியவன் அவள் அருகே வந்து அவளது கையை முறுக்கி பிடித்துக்கொண்டு உள்ளே போனான்..
அவளுக்கு உள்ளே செல்லவே பயமாக இருந்தது ஏதோ குற்றவாளி போல தன்னை தானே நினைத்து கொண்டாள்...அது போல எல்லாம் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை போலும் அவன் மிக சாதாரணமாகவே நடந்து உள்ளே சென்றான்...
வீட்டுக்குள் இவர்கள் நுழையும் போதே இவர்களை எதிர்பார்த்து காத்து இருந்த ராஜேஸ்வரி ஓங்காரமாக எழுந்து நின்றவர் அவர்கள் இருவரும் ஜோடியாக வருவதை பார்த்து அவர் மனம் கொதித்தது...
அதிலும் சம்யூவை கண்டதும், " ஏன் டி உன்னை இத்தனை நாள் வளர்த்தின பாவத்துக்கு எங்க மேலேயே கேஸ் போடுற அளவுக்கு உனக்கு கொழுப்பு வந்திடுச்சா ??"... என்று ஆரம்பித்து விட்டார்... எதற்காக வந்து இருக்கிறோம் என புரியாமல் வந்தவளுக்கு ஏதோ புரிவது போல இருந்தது..
ஈஸ்வரோ, " உன்கிட்ட இதை எதிர்பார்க்கல யார் சொத்தை யார் கேக்கிறது வீட்டை விட்டு போய் நாலு நாள் கூட ஆகலை அதுக்குள்ள இப்படி...பசு ன்னு நினைச்சு வளர்த்தினா அது பாம்பால்ல இருக்கு"... என்று அவரும் அவர் பங்கிற்கு சாடினார்..
அங்கேயே அமர்ந்து இருந்த அபி அங்கே ஒருத்தி நிற்பதை கூட கண்டு கொள்ளவில்லை..
இப்போது வரைக்கும் அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை எதற்காக கணவன் தன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறான் என உள்ளே நுழையும் முன்னே வசைமழையில் நனைந்தவள் கணவனை குற்றப்படுத்தி பார்க்க அவன் அங்கே நடக்கும் விவாதங்களை கையில் எடுத்து கொண்டான்..கூடவே அவனுடைய மனைவிக்கு புரியும் விதத்திலே பேச்சை ஆரம்பித்தான்...
"மிஸ்டர் அண்ட் மிசஸ் ஈஸ்வர் எதுக்கு இப்படி கத்தறீங்க?? இவ இப்போ உங்க வீட்டு பொண்ணு கிடையாது என்னோட மனைவி இதுக்கு மேலே என்னோட மனைவியை யாராவது ஒரு வார்த்தை சொன்னா நடக்கிறதே வேற ...நான் இங்கே வந்தது உங்க பேச்சை கேட்டுட்டு போறதுக்கு இல்லை...இவளோட சொத்தை வாங்கறதுக்கு தான் "...என்று தெள்ள தெளிவாக மனைவிக்கு புரியும் படி விளக்கி விட்டான் பிருத்வி
அதோடு இல்லாமல்,"மிஸ்டர் விக்னேஷ் "...என்றழைக்க அவன் முன் வந்தவனிடம் கண் அசைத்து வேலையை ஆரம்பி என்பது போல கூற,
விக்னேஷ் அவர்கள் புறம் இருந்த லாயரிடம் சொத்தை வாங்குவதற்கான வக்கீல் நோட்டீஸ் அடங்கிய பேப்பரை முதலில் கொடுத்தான்... அதை வாங்கி பார்த்தவற்கு பேப்பர்கள் எல்லாம் பக்காவாக இருப்பதை பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் தலையை சொறிந்தார்...
அதற்குள் ஈஸ்வரின் வக்கீல் போலி உயிலை எடுத்து காட்டி எழுபது சதவீதம் சொத்துக்கள் ராஜேஸ்வரியின் பேரில் இருப்பது போல மாற்றிய போலி உயிலை எடுத்து முன் வைத்தார்..
அதையே தான் இரண்டு நாட்களுக்கு முன் அபியிடமும் காட்டி இருந்தனர்...அந்த மிதப்பில் தான் அபியும் சம்யூவை கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருந்தான்..
அதை வாங்கி படித்த விக்கிக்கு ஒரே குழப்பம் அச்சு அசல் மாறாமல் சம்யூ என்ற பெயர் வருவதற்கு பதில் அனைத்து இடங்களிலும் ராஜேஸ்வரியின் பெயரை குறிப்பிட்டு மிக அழகாக தயார் ஈஸ்வர் தயார் செய்து இருந்த உயிலை எடுத்து படித்ததும் அவன் பிருத்திவியிடம் காட்ட பிருத்வி அங்கே கூடியிருந்த அனைவரையும் பார்த்து நக்கலான சிரிப்பை ஒன்று உதிர்த்தான்....
பிருத்வி எதற்காக சிரிக்கிறான் என்பதை புரிந்து கொண்ட விக்கியும் கூட சேர்ந்து சிரிக்க தன் சொத்துக்களை கைப்பற்ற தான் என்னை அழைத்து வந்தானா அதுக்கு தான் காதல் நாடகம் நடித்தானா என நினைத்தவள் அவனை குற்றப்படுத்தினாலும் வெளியே அவனை அவமானப்படுத்த மனம் இல்லாமல் , "என்கூட வாங்க உங்க கிட்ட பேசனும் "...என்று தன்னருகில் நிற்பவனின் கையை பிடித்து கூற
"டார்லிங் நீ என்ன பேச போறன்னு எனக்கு தெரியும் அதை வீட்ல போய் பேசிக்கலாம்.. முதல்ல உன் வீட்டு ஆளுங்க கிட்ட எனக்கு பேசணும் "...என்று அவள் தோளில் கையிட்டு என்னமோ இருவரும் அந்நியோனியமாக இருப்பது போல சிரித்தபடி கூறியவன் அவளை தன் கை வளைவுக்குள்ளே வைத்து பின் அவர்களை அனைவரையும் பார்த்து, " என்ன ராஜேஸ்வரி மேடம் போலி உயில் சும்மா ஜரூரா போட்டு இருப்பீங்க போல கண்டே பிடிக்க முடியல..ஆனால் பாருங்க உங்க மூளை அடிக்கடி வேலை செய்ய மாட்டேங்குது..உங்க கணவர் கொடுத்த ஐடியாவா ரொம்ப அவரை நம்பாதீங்க "...என்று சூசகமாக கூறியவன், " விக்கி அதை அவங்களுக்கு காட்டு"... என்று கூற உண்மையை கண்டு பிடித்து விட்டானே என நினைத்த ராஜேஸ்வரி மற்றும் ஈஸ்வர் அதிர அபியோ என்ன நடக்குது என்று புரியாமல் விழித்தவன், " என்ன போலி பத்திரமா??".. என்க
பிருத்திவியோ , " ஆமாம் போலி பத்திரம் தான் உனக்கு தெரிய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு அதுக்கு முதல்ல கோபத்தை ஓரம் கட்டி வெச்சிட்டு சுத்தி என்ன நடக்குதுன்னு சரியா கவனி இது தான் தொழிலில் இறங்கின உடனே செய்ய வேண்டிய முதல் விஷயம் "...என்று பிருத்வி மறைமுகமாக அவனையும் தாக்கினான்...அதை கேட்ட அபி என்ப நடக்கிறது என்று பொறுமையாக கவனிக்க தொடங்கினான்..
விக்கி எதற்காக பிருத்திவியிடம்
வேலைக்கு சேர மாட்டேன் என்று கூறினானோ அந்த பைலை வெளியே எடுத்தான்..
பின் அனைவரையும் பார்த்து, "இதோ நீங்க உண்மைன்னு நினைச்சு மறைச்சு வெச்சுக்கிற உயில் அண்ட் பொய்யா எங்களை நம்ப வைக்க உருவாக்குன உயில் எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சிடுங்க ..இது தான் மிஸ்டர் ராம மூர்த்தி எழுதி வெச்சிருந்த உயில் ...கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு முன்னே அவரு எழுதி வெச்சிட்டார் ".... என்று மிக பெரிய குண்டை அழுங்காமல் விக்கி எடுத்து போட்டான்..
அதை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்..."என்ன உளறல் இது..நீங்க வக்கீல் அப்படின்னு நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது.. எங்க வீட்டு உயில்ன்னு சொல்லி ஒரு பத்திரத்தை போலியா உருவாக்கிட்டு வந்திட்டு பேசுறீங்களா "...என அபி கேட்க
"அப்படி சொல்லு அபி நல்லா ஏமாத்தி சொத்தை அடையனும்னு நெனைக்குதுங்க "...என்று ராஜேஸ்வரி குமறினார்...
சம்யூ மட்டும் அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் அதற்குள் ஈஸ்வர் , "என்ன சார் சும்மா பூச்சாண்டி காட்டிட்டு இருக்கீங்க??"... என்று எகிற
"மிஸ்டர் நீங்க ஏன் இப்போ சத்தம் போடுறீங்க கொஞ்சம் அடங்குங்க பொட்டுன்னு போயிட போறீங்க "...என்று கூறிய பிருத்வி தீர்க்கமாக அனைவரையும் பார்த்து அவர்களை அடக்கி, " நீ பேசு டா".. என்பது போல விக்கியை பார்த்து கூற விக்கியும் தலையசைத்து அவனது பேச்சை துவங்கினான்..
"நான் விக்னேஷ் பாலகிருஷ்ணன் ..பால கிருஷ்ணன் என்னோட அப்பா ஒரு லீடிங் வக்கீல் ..இப்போ யூஎஸ்ல இருக்கோம்...அவரோட கிளைன்ட் மிஸ்டர் ராம மூர்த்தி அவரோட சொத்துக்கள் அடங்கிய உயிலை என்னோட அப்பா கிட்ட கொடுத்து வெச்சி இருக்கார்"... என்று தொடங்கவும்
அதை நம்பாத பார்வை பார்த்த அனைவரையும் கவனித்த விக்கி, " நான் சொல்லி முடிச்சடறேன் அதுக்கு பிறகு உங்க கேள்விகளை வெச்சுக்கோங்க "...என்று கூறியவன்,
" என்னோட அப்பாவோட கிளையண்ட் தான் மிஸ்டர் ராம மூர்த்தி ..அவரோட கம்பெனி, சொத்துக்கள் எல்லாத்துக்கும் என்னோட அப்பா தான் லீகல் அட்வைஸர்..மிஸ்டர் ராம மூர்த்தி இந்தியால ஒரு வக்கீல் வெச்சி இருந்தாலும் பைனல் ரிப்போர்ட் முடிவு செய்யறது என்னோட அப்பா..அப்படி இருக்கும் போது தான் பத்து வருடத்துக்கு முன்னாடி மிஸ்டர் ராம மூர்த்தி அவரோட குடும்ப உறுப்பினர் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அவரோட சொத்துக்கள் அடங்கிய உயிலை எழுதி எங்க அப்பா கிட்ட கொடுத்து வெச்சி இருந்தார் ....
அந்த உண்மையான உயில்படி சொத்தை நான்கு பாகமாக பிரிச்சு இருக்கார் அதில் ஒரு பங்கு தான் சம்யூவுக்கும் அவரது கணவருக்கும் மற்றொரு பங்கு அபிக்கு "..என்று கூற
இந்த கதையை கேட்டவர்கள் மலைத்தாலும் அவர்களின் முதல் கேள்வியே, "மீதம் 50 சதவீத சொத்து யாருக்கு??"... என்று ஈஸ்வர் குழப்பமாக கேட்க
"அதை சம்பந்தப்பட்ட ஆட்கள் அவங்களா எல்லோர் முன்னிலையில் வர விருப்பப்பட்டால் மட்டுமே சொல்ல முடியும் "...என்று விக்கி கூற
"என்ன சார் கதை அளக்குறீங்களா?? என்ன சார் புது கதை நீங்க சொன்ன உயில்படி பார்த்தாலும் யாரு அந்த இரண்டு பேர்"... என்று விக்கியிடம் கேட்ட ஈஸ்வரை பார்த்து , "சார் அது அவங்க விருப்பம்"... என்று கூற மறுத்துவிட்டான்...
அதன் கூடவே காபி உயிலை மட்டுமே கொடுத்து இருக்க அதிலும் அந்த இருவர் பெயர் தெரிவிக்கப்படவில்லை..
"என்ன சார் பேர் இல்லாட்டி எப்படி செல்லுபடி ஆகும்?? "...என்று அபி கேட்க
"அது அவங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் தனி உயில் சார் இதுல அபிஷேக் ,சம்யுக்தா இவங்க இரண்டு பேரோடது மட்டும் தான் இந்த உயில்ல இருக்கு மற்றும் மீதம் உள்ள இரண்டு பேர் எப்போ வராங்களோ அப்போ தான் அவங்களுக்கு அந்த சொத்துக்கள் போய் சேரும்..சோ அந்த பேச்சை இப்போ விட்டுட்டு நீங்க உங்க சொத்துக்கள் அடங்கிய உயிலை பாருங்க "...என்று அந்த இடத்தில் விக்கி ஒரு குட்டும் கொடுத்தான்..
கூடவே விக்கி, "பெரியவர் நீங்க நான் சொல்றதை நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சு ஒரு வீடியோ இணைப்பையும் கொடுத்து இருக்கிறார்..அதோட காபி என்னோட போன்ல இருக்கு "...என்று கூறி அதை காட்ட அதில் ஒரு வயதான மனிதர் அவர் தான் ராம மூர்த்தி ...அவர் இத்தனை பிரச்சனைக்கும் காரண கர்த்தா ..வெண் தாடியும் நீண்ட வெள்ளை முடியும் வெள்ளை ஜிப்பா அணிந்து கண்ணாடியை சரி செய்து சிரித்தபடி தனது கரகரத்த குரலை சரி செய்தவர் , "என்ன எல்லோரும் வக்கீல் கிட்ட சண்டை போட்டு முடிச்சுட்டீங்களா..இது தான் செய்விங்கன்னு எனக்கு தெரியும் ஆமாம் பால கிருஷ்ணன் சொன்னது உண்மை தான் சொத்தை எல்லாம் நாலா பிரிச்சு இருக்கேன்... சம்யூ உனக்கு தான் R ட்ரேடர்ஸ் அதாவது உனக்கு வர போகிற புருசனுக்கு".. என்று கூற அந்த இடம் ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு மிக அமைதியாக இருந்தது...அடுத்து, " நம்ம அபிக்கு உனக்கு வர வேண்டிய சொத்துக்கள் சேர்த்து தாத்தா முதன் முதலா ஆரம்பிச்சு வெற்றி கொடிகட்டிய கம்பெனி ராம் ட்ரேடர்ஸ்ஸை எழுதி வைக்கிறேன் என்ன டா அப்படி ஒரு கம்பெனி இல்லைன்னு முழிக்கிறியா அபி அந்த கம்பெனியை தான் R ட்ரேடர்ஸ் கூட உன்னோட அம்மா என்னோட வயசை காரணம் காட்டி இரண்டு கம்பெனியையும் இணைச்சுட்டா ஆனால் நான் உனக்கு அதை பிரிச்சு தரேன் ..ஆம்பிளை பையன் விளையாட்டு தனத்தை எல்லாம் விட்டிட்டு இனி தொழிலில்ல இறங்கு" என்று அறிவுரை கூறியவர் ,
அபி இதுல கஷ்டமோ நஷ்டமோ நீ யோசிச்சு முன்னேறு அப்புறம் நீ மட்டும் யோசி ..உன்னை பெத்தவங்கலே ஆனாலும் அவங்களை நம்பாத என்று கூறியவர்..
சம்யூ மா நீயும் உன்னோட புருஷன் சொல்றதை கேட்டு நல்ல படியா இரு...தாத்தா மறுபடியும் வருவேன்".. என்று கூற அந்த வீடியோ நின்றது இதை கண்டவர்களுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி என்றால் வார்த்தையால் வடிக்க இயலாது..
அதிலும் பெத்த மகள் மீது இவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று இப்போது தான் ராஜேஸ்வரியே இப்போது தான் உணர்கிறார்..ஏனெனில் அவர் இருந்த வரை அவர் யார் மீதும் வெறுப்பை காட்டியது இல்லை..கடிச்சொல் கூறியது இல்லை பிறகு ஏன் இப்படி கூறுகிறார் என புரியாமல் திகைத்தவர் அதும் அவருக்கு அவர் தந்தை இறந்த பின்னும் கொடுத்த செருப்படியாகவே இருக்க ஈஸ்வரோ ஆத்திரத்தை அடக்க முடியாமல் கொதித்தார்..
இவ்வளவு சொத்துக்களும் பிரிக்கப்படும் என்று கூறினால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை செய்வதறியாது நின்றார்..
அவர்களின் அமைதியை கண்டு ஒரு வில்லத்தனம் மிகுந்த சிரிப்பை கொணர்ந்த பிருத்வி , "என்ன எல்லோரும் இப்படியே நின்னுட்டா எப்படி யாருக்கு என்ன ஒதுக்கி இருக்கோ அதை வாங்கிட்டு போக வேண்டியது தானே".. என்று கூறவும் அவனது முகத்தைக்கண்ட அபிக்கு அப்போது தான் புரிப்பட்டது அவன் அவர்கள் வாழ்க்கையில் நுழைந்தது பழி வெறி மட்டுமே காரணம் இல்லை அவர்களுடைய குடும்ப விசயங்கள் அனைத்தும் அவனுக்கு தெரிந்தே தான் அவன் இந்த ஆட்டத்தை துவங்கி இருக்கிறான் என தாமதமாக புரிந்துக்கொண்ட அபிக்கு விளங்கவில்லை பிருத்வி எப்போதோ விளையாட்டை விளையாட துவங்கி விட்டான் என்று ராஜேஸ்வரிக்கு இந்த உயில் அதிர்ச்சி தாள இயலவில்லை யாரிடமும் ஒரு வார்த்தை மேற்கொண்டு பேசாமல் சோபாவில் அமர்ந்த அவரை பார்த்து சீண்டும் விதமாக , "என்ன ராஜேஸ்வரி மேடம் நான் சொன்ன கணக்கு சரியா வந்துச்சா??? "...என்று கேட்டவன் ,
"கூடிய விரைவில் கம்பெனியை காலி பண்ற வழியை பாருங்க அண்ட் இந்த உயிலை பத்தி நீங்க நம்பாட்டி எந்த கோர்ட்டுக்கு வேணாலும் போகலாம் எனக்கு எந்த கவலையும் இல்லை".. என்று கூறி விட்டு அதிர்ந்து நின்று கொண்டிருப்பவளை , "பார்த்து வா டார்லிங் வந்த வேலை முடிந்து போச்சு"... என்று கூறி அவளை இழுத்து கொண்டு சென்றான்...விக்கியும் ராஜேஸ்வ
ரியின் வக்கீலும் சேர்ந்து மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களில் ஈடுபட்டனர்...
மாயவன் வருவான்..
