Share:
Notifications
Clear all

அத்தியாயம் 13

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

சம்யூவின் வாழ்க்கையில் சம்யூ மூச்சு விட வேண்டுமென்றாலும் அது பிருத்திவியை கேட்டு தான் செய்ய வேண்டும் என்பது போல பல தடைகளை விதித்து அவன் வீட்டு மகாராணி ஆக்கினால் இவனை என்னவென்று சொல்வது???

தன் நெற்றியில் இதழ் பதித்தவன் எல்லாம் முடிந்தது போல தன்னை சுத்தம் செய்து வந்தவன் சிலை போல நிற்கும் அவளை பார்த்து, " இன்னும் ஏன் இந்த ட்ரெஸ்லயே இருக்க??".. என்று இயல்பாக கேட்க

அவனது ஒவ்வொரு கேள்விக்கும் நாலு அறை விட வேண்டும் என்று தான் அவளுக்கு கோபம் எழுந்தது இருந்தாலும் சற்று முன் அவன் செய்த செயலின் தாக்கம் இன்னும் அப்படியே இருக்க , "வேற ட்ரெஸ் இல்ல "...என்று கூறவும் ,

ஓ என்று கூறியவன் அவளை பார்த்து, "அந்த கப்போர்டை திற "...என்று கூறினான்..

அவளும் அவன் கூறிய கப்போர்டை திறக்க அதில் அவளுக்காக ஆடைகள் முழுவதும் இருந்தன.. அதும் அவள் எப்படி அணிவாளோ அதே போல அந்த கபோர்ட் முழுவதும் நிறைத்து இருக்க சத்தியமாக அவளுக்கு அதை எல்லாம் பார்த்து, " இவன் என்ன டிசைனோ".. என்று தான் அவளுக்கு தோன்றியது..

அதில் இருந்து ஒரு இலகுவான உடையை எடுத்து பாத்ரூமுக்குள் சென்று அணிந்து வந்தவளுக்கு அவள் அணிந்து இருக்க நகையை அவிழ்க்க இயலவில்லை..

அதுமட்டுமல்ல உடையை கூட தான் அவளால் இயலவில்லை இருந்தும் முயன்று அணிந்து வந்தாள்.. ஆனால் நகையை அவளால் தொட கூட இயலவில்லை... இவன் கையை பிடித்து முறுக்கியதில் அவளால் கையை தூக்க முடியாமல் தவித்தவள் என்ன செய்யலாம் என்பது போல சம்யூ முழிக்க அவள் முழிப்பதை தலைக்கு அடியில் கையை கொடுத்து கொண்டே அவளை நோட்டம் விட்டு கொண்டிருந்தவனின் விழிகளில் அவள் மீது ஈரம் சுரந்ததோ தெரியவில்லை...

ஒரு கன்னம் அபியால் வீங்கி இருக்க அவளது இரு கண்கள் பிருத்வியால் சிவந்து இருக்க அவளை பார்க்கவே பாவமாக தெரிந்ததோ என்னவோ, " சம்மு"... என்றழைத்தான் மிக மென்மையாக தேன் ஒழுகுவது போல இருந்தது அவனது அழைப்பு ஆனால் அதை சம்யூ உணர்ந்தாளா என தெரியவில்லை ..

அவனது அழைப்பை கேட்டு அவள் நிமிர்ந்து பயந்து பார்க்க அவனோ, "இங்கே வா"... என்றழைத்தான்...

அவளோ தயங்கியபடியே அவன் அருகே சென்று நிற்க இங்கே வா என்பது போல இயல்பாக அவளை தான் படுத்து இருக்கும் படுக்கையில் அழைக்க அவளுக்கு பயப்பந்து வயிற்றில் உருண்டது...

அவளுக்கு அவனிடம் பேச பயம் இல்லை ஆனால் சற்று முன் அவனிடம் தேவையில்லாமல் வாயை கொடுத்து வாங்கி கட்டி கொண்டதால் அவள் அடங்கி அங்கேயே நிற்க அவளின் பயத்தையும் பதட்டத்தையும் அறிந்தவன் , "நான் பார்க்காதத அப்படி என்ன மறைச்சு வெச்சு இருக்க வா டி பார்க்கிறேன் "..என்று ஹஸ்கி குரலில் கூறியவன் அவளது வேதனை இல்லாத கையை பிடித்து இழுக்க அவன் மீதே விழுந்தாள்..

தன் மார்பின் மீது பூவாக விழுந்தவளை தாங்கியவன் அவனது முகத்தில் மோதிய அவளது முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டான்...

பின் அழுதது சிவந்த அவளின் அதரத்தை அவன் விரல்களால் வருடியவன் அப்படியே அடிபட்ட கன்னத்தையும் வருடி கொடுத்து கொண்டே அவளுடைய கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்...

அவளோ மெல்ல அவனிடமிருந்து விலக முயற்சி செய்ய அவனோ அவளது இடையில் கையை விட்டு அவளது இடையை வருட துவங்கினான்...

மெல்ல அவளது கன்னத்தில் இருந்து அவனது உதடு இடம் பெயர்ந்து அவளது கழுத்துக்கு முன்னேற அவளால் அதற்க்கு மேல் தாங்க இயலாமல் , "ப்ளீஸ் விடுங்க"... என்று கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் கூற அதை கேட்ட அவனோ என்ன நகையோடவே , "விடாட்டி என்ன செய்வ..இந்த நகையோட இப்படியே தூங்கலாம்னு எண்ணமா??"... என்று மென் குரலில் அவளது கழுத்தில் அவனது உதட்டால் வருடிக் கொண்டே அவளது பின்னங்கழுத்தில் முத்தமிட்டவன் மெல்ல அவளது மென்மையான முடியை அளந்து கொண்டே அவளது கழுத்தில் கை வைத்து ஒவ்வொரு நகையாக அவிழ்த்தவன் கைகள் ஒவ்வொரு நகை அவிழ்க்கும் போது செய்த சில்மிஷமங்கள் அவளுக்கு மட்டுமே தெரிந்த விடயம்..

கூச்சத்தில் அவளை நெளிய வைத்து கொண்டே அவளை படாதபாடு படுத்தியவனுக்கு அவளை விடவே மனம் இல்லை...ஆனால் இன்று நடந்த சம்பவங்களில் அதிர்ந்து இருப்பவளை தொல்லை செய்தது போதும் என்று நெனைத்தவன் அவனது தொடுகையால் துடித்து கொண்டிருந்த அவளது அதரங்களை மட்டும் அவனது இதழ் கொண்டு சுவைத்து பின் அவளை விட்டான்..

அவள் விலகியதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது மெல்ல எழ போனவளை, " என்ன சோபால படுக்கலாம்னு என்னமா?? ..நானும் பக்கத்தில் வந்து படுப்பேன் பரவாயில்லை யா ??"...என்று விசமமாக அவன் கூற

அவளோ வேகமாக அவன் அருகிலே படுத்து கொண்டான் ஏனெனில் அந்த சோபாவில் ஒருவர் மட்டுமே படுக்க கூடியது அதில் இவனுடன் சேர்ந்து படுப்பதா என நினைத்து அவன் அருகேயே படுத்து கொண்டாள்..

அவளின் செய்கையை கண்டு கன்ன குழி தெரிய சிரித்தவன் அவளின் இடையில் தனது கரத்தை கோர்த்து தன்னருகே பிடித்து இழுத்து அவளது செவியில், " எப்போவும் இதே மாதிரி விலகி இருக்கலாம்னு நினைக்காத எனக்கு அந்த ஐடியா எல்லாம் இல்லை அண்ட் இதே மாதிரி நான் சொல்றதை கேட்டு நடந்தா உனக்கு எந்த பிரச்சனையும் வராது..."...என்று கூறிக்கொண்டே சம்யூவின் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளை கட்டி பிடித்தபடி படுத்து கொண்டான்..

அதாவது அவன் கூற வருவது யாதெனில் நின்று போல என்றும் நான் விலகி இருக்க மாட்டேன் உன்னுடய விருப்பம் இல்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை என்பதே அதன் அர்த்தமாகும் அதை கேட்டு அதிர்ந்தாள் சம்யூ..

இங்கே இப்படி என்றால் ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அவமானப்பட்டு வீட்டை அடைந்த அபி மற்றும் அவனது குடும்பம் அடுத்து என்ன செய்யலாம் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது..

அதில் அபி ஒருவன் மட்டுமே சம்யூ செய்த சதியை சகிக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான்...ஆனால் ராஜேஸ்வரி மற்றும் ஈஸ்வர் இருவருக்கும் எப்படி சொத்துக்களை கைப்பற்றுவது என்றே எண்ணம் மேலோங்கி இருக்க அபி அவனது அறைக்கு சென்றதும் , "என்ன ஈஸ்வர் இப்படி ஆகிடுச்சு அவன் அன்னிக்கே என்கிட்ட இந்த சொத்தை பத்தி பேசினான் ஈஸ்வர்"... என்று கூற

"அவனுக்கு எப்படி தெரியும்".. என்ற கேள்வி அவரை குடைந்தது...

"ராஜி இப்போ அதை பத்தி பேச வேண்டிய நேரம் இல்லை...நாம முதலில் போலி உயில் தயார் பண்ணி வெச்சு இருந்தோம்ல அதை எடு "...என்க

அதை கொண்டு வந்து கொடுத்த ராஜேஸ்வரி , "ஈஸ்வர் இவ்ளோ வருஷம் கட்டி காப்பாத்தினதை ஒரே நாள்ல அவளுக்கும் அந்த பிருத்திவிக்கும் என்னால தார வார்க்க முடியாது "...என்று ராஜேஸ்வரி கூறினார்...

ஈஸ்வரோ , "ராஜி யார்க்கும் உயிலை பத்தி தெரியாது அதுனால யாருக்கும் எந்த சந்தேகமும் வராது வந்தா அந்த வக்கீல் மூலமா தான் வரும் அவனையும் பணத்தை கொடுத்து சரி பண்ணியாச்சு இனி பிருத்வி இல்லை எந்த கொம்பன் வந்தாலும் நம்மல ஒன்னும் செய்ய முடியாது "...என்று ஆறுதல் அளித்த ஈஸ்வர் , "அந்த பிருத்திவியை ஏதாவது செய்யணும் ராஜி அவன் ரொம்ப டேஞ்சரா இருக்கான்"...என்று கூறவும்

"அது உண்மை தான் ஈஸ்வர் அதுல ஊமை கொட்டான் மாதிரி இருந்த சம்யூ இவனை காதலிச்சு நமக்கு எதிரா திரும்புவான்னு நெனைக்கல ஈஸ்வர்"... என்று கூற

அவரும் ஆமோதிப்பது போல தலையாட்டினார்...

ஆனால் இவர்களே இவ்வளவு தூரம் யோசிக்கும் போது பிருத்வி எந்த அளவுக்கு இறங்கி இருப்பான் என அவர்களுக்கு தெரியவில்லை..

பிருத்திவியை மிக சாதரணமாகவே அவர்கள் எடை போட்டு விட்டனர்...

இப்படியே இரண்டு நாட்கள் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல அமைதியாக செல்ல அந்த நீரோடையில் கல் இட்டேறிவது போல அபியின் அலுவலகத்திற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்று வந்தது...

அதாவது , "திருமதி. சம்யுக்தா பிருத்விராஜ் அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் அவர் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவருக்கு உடைமையான சொத்துக்கள் வேறு யாரும் அனுபவிப்பதை அவர் விரும்பவில்லை "..என்ற வக்கீல் நோட்டிஸ் ஒன்று வந்தது..

அதை படித்த அபிக்கு கோபம் தலைக்கு ஏறி, " என்ன டி வீட்டை விட்டு போய் இரண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ள சொத்து கேக்கிற அளவுக்கு வந்துட்டியா"... என்று கடுப்பானவன் அதை அவனது தாயிடம் காட்ட அவரோ இதை எதிர்பார்க்கவில்லை போலும் ..அவர் முகமே அதை அவனுக்கு காட்டி கொடுத்தது உடனே தகவல் ஈஸ்வருக்கு தெரிவிக்கப்பட,

அவரோ , "ஒன்னும் கவலை இல்லை ராஜி நீ தைரியமா இரு"... என்று கூறி ஆறுதல் அளித்தவருக்கு பிருத்வி மீது கொலைவெறியே எழுந்தது அவனை ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார்...

ஆனால் அதோ பாவம் அவனை பற்றி அவருக்கு இன்னும் சரியாக விளங்கவில்லை..

அதன் படி இதோ வக்கீல் நோட்டீஸ் ராம விலாசை அடைந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்த நிலையில் ஒரு நாள் பிருத்வி அதிகாலையிலேயே விரைவாக எழுந்தவன் தன் அருகே உறங்கும் மனையாளை கண்டான்..

உறக்கத்தில் கூட அவன் மீது பயம் இருக்கும் போல தலையணையை அவனுக்கு தடையாக கொடுத்து ஒரு வித பீதியிலே உறங்கி கொண்டிருந்தவளை பார்த்து மென்மையாக சிரித்தவன், " ஏன் டி கடல் கடந்து பல வருடங்கள் கடந்து உன்னை தேடி வந்து உன்னை தூக்கிட்டு வந்த எனக்கு உன்னோட இந்த ஒத்த பில்லோ தாண்டி உன் பக்கத்தில வர முடியாதா?? "...என்று மனதில் நினைத்தவனுக்கு அவளை குறித்த பல நினைவுகள் வந்து போனது..

அதை எல்லாம் தன் மனதின் ஓரத்தில் ஒதுக்கியவனுக்கு ராஜேஸ்வரியை அது போல ஒதுக்க முடியவில்லை அவரை நடு தெருவில் நிறுத்தியே ஆக வேண்டும் என்பது அவனது வெறியாக மாறி இருக்க தான் நினைத்ததை மற்றவர்கள் மூலம் செய்விப்பதில் இவன் கில்லாடி ஆகிற்றே...

சம்யூவுக்கு இந்த நொடி வரை பிருத்வி செய்த செயல் மற்றும் எதற்காக இதை செய்கிறான் என தெரியாது அதனுடன் பாவம் இதோ இந்த வக்கில் நோட்டீஸ் அனுப்பிய விவகாரமும் தெரியாது..

அந்த நிலையில் இன்றைய விடியலும் அவளுக்கு சுகமானதாக இருக்க போவதில்லை என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை..

ஏதோ மென்மையான சத்தம் கேட்டு சம்யூவின் செவியில் ரீங்காரமாக கேட்டுக் கொண்டே இருக்க ஆழ்ந்த நித்திரையில் இருந்தவள் அந்த சப்தம் கேட்டு கண் விழித்தவள் முன் அவ்வளவு நெருக்கத்தில் குளித்து முடித்து ஈரம் சொட்ட ஒழுகும் தலையை ஒரு கையால் துடைத்து கொண்டே பெட்டின் அருகே உள்ள டேபிளில் இருந்த போனை அவன் எடுத்து விட்டு நகர்ந்து விட்டான் பிருத்வி ராஜ்...

ஆனால் ஒரு நொடியே ஆனாலும் அவனின் அருகாமை அவளை கொன்றது என்னவோ உண்மை தான் இவளும் இவர்களின் திருமணம் முடிந்த அன்று அவன் கூறியதை மனதில் வைத்தவளுக்கு அவன் தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் இல்லாமல் இல்லை அதிலும் கடந்த கடந்த மூன்று நாட்களாக படுக்கையில் அவன் அருகே படுத்தால் விடியற்காலையில் தான் எழுந்து கொண்டிருக்கிறாள்..

அப்படி இருக்க அவனோ அவளிடம் அவள் எதிர்பார்த்த போல அவன் வரவே இல்லை அவன் உண்டு அவன் வேலை உண்டு என்றே இருந்தவன் ஒரே கட்டிலில் படுத்து இருந்தாலும் மிக கண்ணியமாகவே நடந்து கொண்டான்...

அவள் இருப்பதை கூட அவன் உணரவில்லை என்று தான் கூற வேண்டும் இருந்தும் அவன் மீது துளியும் அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் தான் தலையணையை இடையில் வைத்து உறங்குகிறாள்..

இந்நிலையில் அவன் போனை எடுப்பதற்காக என்றாலும் அவள் அருகே வந்த நேரம் சம்யூ கண்களை திறக்கவும் சரியாக இருக்க அவனை அவ்வளவு அருகே கண்டவளுக்கு மூச்சு முட்டி போனது...அதிலும் அவன் போனை எடுத்து விட்டு திரும்பவும் அவன் தலையில் இருந்து ஒரு துளி நீர் அவள் உதட்டில் பட என்னவோ அவனே அவள் உதட்டை தீண்டியது போல இருந்தது...அந்த நொடி சம்யூ செத்து விட்டாள் என்றே கூற வேண்டும்...

அவள் கண்களுக்கு எங்கோ மனதில் அவன் மீது எப்போதோ புதைத்து வைத்த காதல் மெல்ல எட்டி பார்க்க உடனே அவனை கண்டு கன்னம் சிவந்தவள் வேகமாக எழ அவளின் கன்ன சிவப்பை அந்த கள்வனும் கண்டுக்கொண்டான்...ஒரு விஷமம் சிரிப்போடு அங்கிருந்து அவன் அகல அவனது சிரிப்பை கண்டவளுக்கு மேலும் நாணமே வந்தது...

எப்போதும் அவனை காணும் போது பயக்கும் அவள் விழிகள் இன்று காலை சிவப்பை அளிக்க பிருத்திவிக்கு உள்ளுக்குள் இனம் புரியாத உணர்ச்சி எழுந்தது...மழை பெய்யும் நேரம் சூடான காபி குடிப்பதை போன்ற புத்துணர்வை அளித்தாள் அவன் மனைவி...

விலகி நின்றே காதல் செல்லும் பாதையில் பயணிக்க முடியுமா ??..பயணிக்க பிருத்வி நினைக்க இதே மனநிலையில் சம்யூ இரவு வரை இருந்திருந்தால் ஒரு வேளை பயணித்து இருப்பாளோ என்னவோ??

மாயவன் வருவான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top