அத்தியாயம் 12
மனம் விரும்புதே மாயவா
எல்லாம் சம்யூவின் கை மீறி போய் விட்டது ...அவள் செய்த தவறு இதோ ஒரு பத்து நிமிடம் முன் தனக்கு தாலி கட்டிய பிருத்திவியை கண்டதும் பார்த்து மயங்கியது மட்டும் தான் அவள் செய்த தவறு..
அதை தவிர வேறெதுவும் அவள் செய்யவில்லை...இருந்தும் அவளுக்கு கிடைத்த பழி சொல்லோ அவள் ஒரு நம்பிக்கை துரோகி என்ற பெயரை வாங்கி கொண்டு அவனுடன் அவனது மனைவியாக பயணம் செய்து கொண்டிருக்கிறாள் ..
இந்த நொடி அவள் சம்யுக்தா பிருத்விராஜ் ...அவள் ஆசைப்பட்ட நொடி இது...ஆனால் கால மாற்றத்தின் பலன் இப்படி எதிர்பாரா சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன..
இதுவே இரண்டு மாதங்களுக்கு முன்பு என்றால் அவளை விட அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை...ஆனால் இன்றோ அவளை விட தூர்தஷ்டசாலி யாருமில்லை என தன்னை நினைத்தே நொந்து போனவளுக்கு இதிலிருந்து எப்படி மீள்வது என புரியவில்லை...
எவ்வளவு தான் இவனிடமிருந்து தன்னம்பிக்கையாக இவனை விட்டு வெளியே வந்தாலும் இவனிடமே இப்படி மீண்டும் அவனிடமே மாட்டி விட்டோமே என துடித்தவளுக்கு கோபம் தலைக்கேற ,
அவனுடன் காரில் ஏறியது முதல் பேசாமல் வந்து இருந்தவளுக்கு இப்போதும் அது போல பேசமால் இருக்க முடியவில்லை..
அவளுக்கு அவள் வீட்டில் யார் அவளை வெறுத்தாலும் கவலை இல்லை அபி வெறுத்து பேசியதை தான் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை...
அதிலும் மீடியாக்காரர்கள் வாய்க்கு சிறந்த அவிலாக இட்டு கொடுத்து அவர்களின் சரமாரி கேள்விக்கு பதில் அளிக்காமல் சம்யூவின் கையை பிடித்துக்கொண்டு சிரித்த முகத்தோடு அவளுடன் பயணித்த அவனுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம்...
ஏனெனில் அவன் நினைத்தது எல்லாம் தான் நடக்கிறதே..பிறகு என்ன என்று நினைக்கும் போதே கொந்தளித்தவள் பிருத்திவியை பார்த்து,
"இப்போ உங்களுக்கு சந்தோஷமா ??"... என்று கேட்க
பிருத்திவியோ திமிருக்கு அரசன் அவள் கேள்வி புரிந்தாலும் புரியாதது போல, " நான் எப்போவும் சந்தோஷமா தான் இருப்பேன் நீ எதை பத்தி கேக்கிற??"...என்று கண் சிமிட்டி கேட்க
அவளோ , "உங்களுக்கு எதுவுமே தெரியாதா இல்லை தெரியாதது மாதிரி நடிக்கறீங்களா?? இப்போ நடந்த விஷயத்தை பத்தி கேக்கிறேன்"... என்று அவள் சூடாக பதில் அளிக்க
அவனோ யோசிப்பது போல, " ம்ம் ரொம்ப சந்தோசம் தான்"... என்க
"சீ நீங்க எல்லாம் ஒரு மனுஷனா நான் தான் அங்கே அவ்ளோ கெஞ்சுறேனே உங்களுக்கு அப்போ கூட இளகலையா?? நீங்க எல்லாம் மனுசன் தானா?? "...என்க
"இல்லை நான் மிருகம் தான்...அந்த இடத்தில் நான் உண்மையை தானே சொன்னேன் நீ என்னை காதலிச்சது உண்மை தானே "...என்று பிருத்வி சம்யூவை பார்த்து எதிர் கேள்வி கேட்க
அவளோ தீயில் குளித்தவள் போல அவனை பார்த்து, " என்ன சாமர்த்தியமா பேசுறதா நினைப்பா??
உங்கள பத்தி தெரிஞ்சு விலகி வந்த என்னை மிரட்டி பின்னாடி வர சொல்லி என்னை மிரட்டி உங்க ஆசைக்கு பணிய வெச்சு".... அதை சொல்லும் போதே அவளது உதடு விம்மி துடிக்க அதை கண்டவன் காரை ஓட்டி கொண்டே அங்கே இருந்த டாஸ் போர்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தவன் , "குடி அப்புறம் பேசு"... என்றான்..
அந்த நேரம் அவளுக்கும் அந்த நீர் தேவையானதாக தான் இருந்தது மறுக்காமல் வாங்கி குடித்தவள் அவனது கரிசனத்தை எண்ணி எரிச்சல் ஆனவள், " உங்களை நம்ப முடியாது இதுல விஷத்தை கலந்தாலும் கலந்து இருப்பீங்க அது தான் குடிக்க குடிக்கறீங்க"... என்றாள்..
உடனே அந்த தண்ணீரை வாங்கி ஒரு மிடறு அவனும் குடித்து பாட்டிலை மூடி வைத்து பேசு என்பது போல சைகை காட்டி விட்டு சாலையில் கவனம் பதித்தான்..
அவனது செய்கையை பார்த்து கொதித்தவளுக்கு அந்த நேரம் ஒரு சந்தேகம் வந்தது இவர்கள் இருவரும் தனிமையாக இருந்த நேரத்தில் எப்படி இருட்டாக இருந்த நேரத்தில் விளக்கு எரிந்தது என்ற கேள்வி அவளை குடைய அதை கேட்டே விட்டாள் அதன் பிறகு அவனது பதிலில் அதிர்ந்தே விட்டாள்...
அவனது பதில் இது தான் , "ஹா ஹா எஸ் நானே தான் ...என்ன ?? நான் உனக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்னு நெனைக்கறியா??உன்னை தூக்கிட்டு போக தான் வந்தேன் ரெடியா தாலி கூட வெச்சு இருந்தேனா அதை மறந்துட்டியா??"...என்று கேட்க அந்த கேள்வியில் அவள் அதிர்ந்தாள்..
மேலும் பிருத்வி, "ரொம்ப உன் முட்டை கண்ணை விரிக்காத குதிச்சு வெளியே வந்திட போகுது...உன் மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியும் எஸ் பிளான் பண்ணி தான் உன்னை தூக்கினேன்...உன்னை தூக்கணும்ன்னு இப்போ இல்லை கோவா போனோமே அப்போவே முடிவு செஞ்சது தான்... கொஞ்சம் லேட் ஆகிடுச்சு "...என்று அவனது வில்லத்தனத்தை கேட்டு அதிர்ந்தவளை பார்த்து,
" அதுக்குள்ள நீயே என்னை காதலிச்சு என்கிட்ட வந்தது எனக்கு வசதியா போச்சு"... என்று கூற இந்த நாள் முடியாதா கனவாக மாறி விடாதா என்பது போல சம்யூ நினைத்தாள்..
அதிலும் அவள் வாழ்வில் கடந்த இரண்டு மணி நேரமாக நடக்கும் அதிர்ச்சிக்கு அழுது கரைந்தவளுக்கு அவன் கூறியதை கேட்டு அழுகை கூட வரவில்லை மாறாக அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது
"ஒரு வேளை நான் உங்களை பார்க்காமல் அபியை கல்யாணம் செஞ்சு இருந்தா என்ன செஞ்சு இருப்பீங்க..உங்களை பார்த்ததுனால தானே இப்படி எல்லாம் நடந்துச்சு"... என்று வேதனையுடன் கூற
"அப்போவும் உன்னை தூக்கி இருப்பேன் சம்மு".. என்று ஒரு அழுத்தத்துடன் கூறினான்.. அந்த பதிலில் அவள் கண்டதோ அவ்வளவு தீவிர வெறி,அழுத்தம் எல்லாமே கலந்து இருந்தது...
பிறகு என்ன அவள் கூறுவது அது தான் தெரிந்து தான் செய்கிறேன் என கூறுபவனிடம் நியாயம் தான் பேச முடியுமா ??அமைதியானாள் சம்யூ..அவள் வாழ்க்கை இப்படி தானா இருக்க வேண்டும் என்ற கேள்வி அவளை வாட்டியது..
அதற்குள் வீடு வந்து விட வீட்டை பார்த்தாள் சம்யூ மும்பை மாநகரில் இது போன்ற வீட்டை அவள் கண்டது இல்லை..அந்த அளவுக்கு எழில் கொஞ்சி இருந்தது...
வெளியே இருந்து பார்க்கும் போதே பணத்தை வாரி இறைத்து இருப்பது புலப்பட்டது கூடவே அந்த இரவிலும் முழு நிலவை அப்படியே இந்த இடத்தில் பிய்த்து வைப்பது போல அழகாக இருந்தது..
அதை பார்த்து கொண்டே வந்தவள் மனம் சற்றே சாந்தி அடைவது போல இருக்க கார் நின்றது கூட தெரியாமல் வெறித்து கொண்டிருந்தவளின் முகத்திற்கு முன்பு சொடக்கு இட அவள் தன்னிலை அடைந்தாள்..
அவளிடம் , "என்ன கண்ணை திறந்துட்டே தூக்கமா வா உள்ளே"... என்று இயல்பாக ஒன்றுமே நடவாவது போல அவளிடம் அவன் பேச அவளுக்கு எரிச்சல் தான் வந்தது...
"நான் வரல "...என்று முறுக்கி கொண்டாள் சம்யூ
"என்னால கார்ல குடும்பம் நடத்த முடியாது சோ உள்ளே வா "..என்று அவன் கிண்டலாக கூற
அவளோ , "எப்படி எல்லாமே செஞ்சுட்டு எவ்வளவு ஈஸியா இருக்கீங்க உங்களுக்கு எல்லாம் இந்த குற்ற உணர்ச்சி எல்லாம் வராதா? இல்லை அப்படினா என்னன்னு தெரியாதா??"... என்று சத்தமாவே கேட்க
மெல்ல பிருத்திவிக்கு இவ்வளவு நேரம் இருந்த மென்மை காற்றில் பறக்க துவங்கி இருந்தது மெல்ல சுற்றும் முற்றும் பார்க்க இவன் இங்கே இருக்கிறான் என்பதை அறிந்தே வந்து இருந்த மீடியாக்களை பார்த்து, " சம்யூ உள்ளே வா "...என்று குரலில் சற்று அழுத்தத்தை கொடுத்து கூற
சம்யூவோ பிடிவாதமாக காரிலே அமர்ந்து இருக்க
அதை கண்டவன் மீடியா வெளிச்சத்தை கண்டு கையை அசைத்து கொண்டே , "என்கிட்டேயே உன் வேலையை காட்டுறியே"... என்று அவளை நோக்கி சிரித்த படியே கூறியவன் அவள் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கி சென்றவன் அவள் புறம் அடைத்து இருந்த கதவை திறந்தவன் அவன் என்ன செய்கிறான் என உணரும் முன்னே அவளை தன் கைகளில் ஏந்தி இருந்தான்..
அவளோ அதிர்ச்சியாக அவனிடம் இருந்து விலக துடித்தவளை முடியாத படி அழுத்தமாக பிடித்தவன் மீடியா ஆள்களை பார்த்து சிரிக்கவும் இவளும் வெளிச்சம் வரும் திசை நோக்கி திரும்பவும் சரியாக இருக்க அந்த காட்சியை கேமிராக்கள் மொய்த்து படம் எடுத்து விட்டது..
காதல் திருமணமா என்ற கேள்விக்கு ஆம் என்பது போல பதிலே அளிக்காமல் ஊடங்களுக்கு நிரூபித்து விட்டான்..
அவளோ அதிர்ந்து பார்க்க அவனோ அவளை பார்த்து கண்ணடித்து, " இதுக்கு தான் உன்னை இறங்கி வர சொன்னேன் நீ கேக்கலை இது காதல் கல்யாணமான்னு சில பேர்க்கு சந்தேகம் இருக்கும் அந்த சந்தேகம் இப்போ தீர்ந்து இருக்கும்..அப்படியே உன் வீட்டில காதல் கல்யாணம் தான்னு இந்த படத்தை நாளைக்கு பார்த்தா கன்பார்ம் பண்ணிப்பாங்க"..... என்று கூற சம்யூவுக்கு தலையில் அடித்து கொள்ளலாம் என்பது போல இருந்தது..
அவளை ஏந்தி கொண்டே வீட்டுக்குள் செல்ல வீடு உள்ளேயும் அழகாக கலைநயத்துடன் இருந்தது ஆனால் வீட்டுக்கு வெளியே இருந்து ரசித்தது போல அவளால் வீட்டுக்குள் இருந்து அதிலும் அவனது கைகளில் இருந்து கொண்டு ரசிக்க முடியவில்லை...அந்த நொடி அவனது அருகாமை அவளுக்கு எரிச்சலை தான் கொடுத்தது...
"அது தான் மீடியாக்காரங்க நம்பிட்டாங்களே அப்புறம் ஏன் என்னை தூக்கி வெச்சு இருக்கீங்க இறக்கி விடுங்க அது தான் நீங்க நெனைச்சது நடந்துடுச்சே "... என்று சம்யூ கூற
அவனோ அதை கேட்காமல் அவனது அறை வந்த பின் அவளை இறக்கி விட்டான்..
அவனை போலவே அவனது அறையும் அழகாக இருந்தது ஆனால் வெளித்தோற்றத்தில் அழகு இருந்து என்ன பயன் அகத்தில் அல்லவா இருக்க வேண்டும் அது தான் இல்லையே என நொந்தவள் அவனிடம், " நீங்க எதுக்கு இங்க என்னை கூட்டிட்டு வந்து இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது பட் என்னால உங்க கூட இருக்க முடியாது சோ நான் போறேன் "...என்று கூறி கதவின் அருகே அவள் போக முற்பட அதுக்கு முன் கதவை பட்டென அடைத்தவன் அவளை பார்த்து , "எங்கே போக போறீங்க மேடம் ??"...என்று நக்கல் குரலில் கூறி கொண்டே அவனது கோட்டை அவிழ்த்தான்...
அவளோ கோபத்தில் எகிறி , "எதுக்கு கதவை இப்போ அடைக்கறீங்க நான் சொன்னது உங்களுக்கு காதில் விழலையா?? எனக்கு உங்க கூட இருக்க விருப்பம் இல்லை"... அவளுக்கு அவன் அருகாமையில் இருந்து எங்கேயாவது சென்றால் போதும் என்ற நிலையில் இருந்தாள் ...
அதை கேட்டவன் கோபத்துடன், " உன்னோட விருப்பம் எனக்கு தேவையில்லை..இவ்ளோ ஸ்கெட்ச் போட்டு வேலை செஞ்சு இருக்கேன் உன்னை விடவா?? "...என்று கூறியவன் முகம் அதற்குள் இறுகி,
"சி உனக்கு பிடிச்சு இருக்கோ இல்லையோ அதை பத்தி எனக்கு கவலை இல்லை நீ என்கூட என்னோட மனைவியா நீ இருந்து தான் ஆகனும் இருக்கற..".. என்று கூற,
அவளோ ,"என்னால முடியாது "..என்ற ஒரு வார்த்தையை தான் விட்டாள்..
அதற்குள் பிருத்வி ராஜ் மனநிலை மாறியது அதன் பலன், " என்ன டி முடியாது ??"...என்று அவளது கையை அழுத்தத்துடன் பிடித்து பின்னால் திருப்பி ஓடிக்க கை வலிக்க துவங்கியது
"வலிக்குது "...என்று அலற
அப்போதும் மனம் இளகாமல் மேலும் அவளது கையை ஒடித்து கொண்டே இருந்தவன் , " இதோ பார் எனக்கு பொறுமை ரொம்பவே கம்மி..நான் சொன்னதை கேட்டு இருந்தீனா உனக்கு எந்த பிரச்னையும் இல்லை..இல்லை இதை விட மோசமா இருக்கும் "..என்று கூறியவன் ,
"அப்புறம் எனக்கு தெரியாமல் வெளியே போறது தப்பிச்சு ஓடி போலாம்னு நினைக்கிறது எந்த வேலையும் வேணாம் .. நான் பிருத்திவி ராஜ் ..இந்த ஜென்மத்தில் நீ என்னோட மனைவி சம்யுக்தா பிருத்விராஜ் ..அந்த மரியாதையோட சொசைட்டில நடந்துக்கோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வெளியே வெச்சு ஸீன் போட்டில அந்த மாதிரியோ இல்லை உன்னோட வீட்டு ஆளுங்க கூட சேர்ந்து கொஞ்சம் முன்னே டிராமா பண்ணி மீடியாக்கு நியூஸ் கொடுத்தீங்களே அந்த வேலை எல்லாம் இங்கே வேணாம்..அண்ட் எனக்கு தெரியாமால் நீ உன் வீட்டு ஆளுங்க கூட பேச கூடாது அவங்கள எங்கேயும் பார்க்க கூடாது...எங்கேயாவது பேசிட்டு இருந்த "...என்று கூறி மேலும் கையை முறுக்க அவனது மறுபக்கத்தை கண்டவளுக்கு வலியால் விழி நீர் சுரந்தவள் இனியும் அவனிடம் முறுக்கி கொண்டால் கொன்றாலும் கொன்று விடுவான் என நினைத்து, "
மாட்டேன் "...என்று கூற,
அப்போது தான் அவளது பிடியை விட்டவன் சற்று முன் அரக்கனாக இருந்தவன் முகம் பழைய படி இயல்பு நிலைக்கு மாறியவன் அவளது கன்றிய கையை பார்த்து ,"நான் சொன்னதை கேட்டா இந்த மாதிரி எல்லாம் நடக்காது பேபி "...என்று கூறியவன் அவள் அருகே நெருங்க அவனை கண்டு பயந்து ஒரு அடி பின்னால் வைத்தவளை மீண்டும் தன் அருகே கொணர்ந்தவன் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்...
மாயவன் வருவான்...
