Share:
Notifications
Clear all

அத்தியாயம் 11

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

அந்த அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் , இருவரும் தனிமையில் இருந்த காட்சியை பார்த்து விட்டதை எண்ணி அதிர்ந்தவளுக்கு பூமிக்குள் புதைந்து போய் விட மாட்டோமா என்று அவமானத்தில் முகம் கருத்தது..

அதை பற்றி எல்லாம் பிருத்திவிக்கு பயம் இல்லை உண்மையை கூற வேண்டுமெனில் அவனுக்கு அவமானமும் இல்லை...இவர்களை அவமானப்படுத்துவதற்காக தானே அவன் இவ்வளவு செய்கிறான் அதில் பலியாடு சம்யூ தான் இவனை நேசிக்கவும் செய்து விட்டாள்...வெறுக்கவும் தொடங்கி விட்டாள்... முள்ளில் மீது நிற்கும் பூவின் அவஸ்தை தான் அவளுடையது...

அதிலும் அங்கே கூடிருந்தவர்கள் இடையே சலசலப்பு கேட்க அதை எல்லாம் அவளால் காது கொடுத்து கேட்க முடியவில்லை..நிமிர்ந்து அவளது குடும்பத்தை பார்க்க முடியவில்லை அதிலும் சம்யூ என்று வார்த்தைக்கு நூறு முறை அழைத்து வந்த அபிஷேக் , "சம்யுக்தா".. என்றழைத்ததே அவளுக்கு புரிந்தது அவனது கோபத்தின் அளவை இருந்தும் தன்னை புரிந்து கொள்ளும் ஓரே ஜீவன் நான் கூற வருவதை புரிந்து கொள்வான் என நினைத்து மனதில் எழுந்த சிறு நம்பிக்கையில், " அபி "...என்று வார்த்தையை மென்று மிழுங்கியவள் மெல்ல பிருத்திவியை விட்டு இரு அடி நீங்கி நின்றாள்..

எது நடக்க கூடாது என்று ராஜேஸ்வரி நினைத்தாரோ அது நடக்க போகிறதோ என்று முதன் முறையாக பயம் அவரை தழுவியது..ஈஸ்வரோ எப்படி இது சாத்தியம் என்பது போல பார்க்க பிருத்வி அங்கே நடக்க இருக்கும் நாடகங்களை காண ஆவலுடன் தயாராக இருந்தான்...அதற்காக தானே அவன் வருகை புரிந்ததும்...

அவள் அழைக்கவும் பேசாதே என்பது போல கையை உயர்த்திய அபி, " நீ இவனை தான் காதலிச்சியா??"... என்று கேள்வி கேட்டான் ..அபிக்கு தான் முன்னரே தெரியுமே சம்யூவை பற்றி சம்யூ ஒருவரை காதலித்த விஷயம் அது இவன் தானா என்று அறியவே இந்த கேள்வியை அபி அங்கு முன் வைக்க ,

சம்யூவோ பதில் கூறாமல் அபியை ஏறிட்டு பார்த்து விட்டு தலை குனிய ராஜேஸ்வரி மற்றும் ஈஸ்வரும் சேர்ந்து அபியிடம், " நீ என்ன அபி அவ கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்க நாலு அறை விட்டு அந்த கழுதையை இழுத்துட்டு வா "...என்க

"இருங்க மாம் எனக்கு இப்போ பதில் தெரிஞ்சாகனும்"... என்றான் ஒரு வித தீவிரத்தோடு

சம்யூவின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் ஊற்ற அவளோ வேகமாக பிருத்திவியை விட்டு அபியிடம் ஓடி வந்தவள், " அபி நான் சொல்றதை லிசன் பண்ணு அபி பிளீஸ் "...என்று கெஞ்ச

அதை கேட்கும் மனநிலையில் அபி இருந்தால் தானே அவனது எல்லாமுமாக இருந்தவள் அவனிடமே பொய்யாக போய் விட்டாளே என்று கேள்வி அபியை வாட்ட அவனது முகம் இறுகி , "உன்னை நான் கேள்வி கேட்டாத நியாபகம்"... என்க

அவளுக்கு அவனது கேள்வி பயத்தை கொடுத்தாலும் கூடவே எது நடக்க கூடாது என்று நெனைத்தாலோ அது நடந்து விட்டதே என நினைத்து வருந்தியவள், " அபி நான் என்ன சொல்ல வரே..ன்..னா??"...

"நான் உன்கிட்ட கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் வேணும்"... என்று முடிவோடு அவன் இருக்க

அபிக்கு அவள் இல்லை என்று கூறி விட மாட்டாளா என்று இருக்க பிருத்திவிக்கு அவள் கூற போகிறாளோ என்று இருந்தது..

இறுதியில் பிருத்வி தான் வென்றான்..ஆம் சம்யூ ஆமாம் என்று கூற அதை கேட்டு உடைந்து போனது என்னவோ அபி தான்...அபியை ஒற்றை வார்த்தையில் சாய்த்து விட்டாள் சம்யூ..

அபி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று அவனது முகமே கூறியது... ஈஸ்வருக்கும் அதிர்ச்சி தான் என்றாலும் ராஜேஸ்வரிக்கு மட்டும் பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை...

பிருத்வி தான் ராஜேஸ்வரிக்கு மாரடைப்பு வந்த அன்று அவரிடம் தெளிவாக கூறி விட்டானே... அந்த நொடி ராஜேஸ்வரி அந்த நாளை நினைவு கூர்ந்தார்..

அன்றைய தினம் , "என்ன ராஜேஸ்வரி மேடம் இதுக்கே வியர்க்குது உங்களுக்கு..உங்களுக்கு ஒரு அண்ணன் பொண்ணு இருக்கு தானே ..அவளை ஒரு வேளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன ஆகும் இப்போ நீங்க போட்டுட்டு இருக்கிற பிளான் எல்லாம் தவிடு பொடி ஆகாதா??? ..

அதுமட்டுமில்லை நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த இரண்டு சதவீதம் இல்லாமலே உங்க சீட்ல நான் உக்கார முடியும் அப்படி தானே??"... என்று கூற ராஜேஸ்வரிக்கு இடியே விழுந்தது போல இருந்தது...

அதை இப்போது நினைவு கூர்ந்தவர் சொன்ன மாதிரி செஞ்சுட்டானே என்பது போல நினைத்தாலும் ராஜேஸ்வரி மனதில் எப்படியாவது இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்க, சம்யூவை பார்த்து, " ஹே என்ன டி பண்ணிட்டு இருக்க ?? ..என் பையன் கூட நிச்சயம் பண்ணிட்டு இவன் கூட நின்னுட்டு இருக்க எவ்வளவு கொழுப்பு இருக்கும் உனக்கு வாடி கழுதை ".. என்று ராஜேஸ்வரி அபியின் அருகில் அபியின் முகத்தை பார்த்துக்கொண்டே நின்ற சம்யூவை பார்த்து கூற

சம்யூ அசைந்தாள் இல்லை அவளுக்கு யாருடைய பேச்சும் காதில் விழவில்லை...அவளது விழி இரண்டும் அபியிடமே இருந்தது...அபியோ அவளது முகத்தை கூட காண பிடிக்காதவன் போல அவளை ஒரு அந்நிய பார்வை பார்த்து ,

"அவன் கூட சேர்ந்து எங்களை அவமானப்படுத்த தானே இந்த டிராமா பண்ணின???அவனை தான் காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல அவன் சொன்னான?? வாயை திறக்கக்கூடாதுன்னு??

"அபி"..என்று சம்யூ கத்த

"பேசாத டி உன்னை என்னோட உடம்புல பாதியா நினைச்சு இருந்தேன் எல்லா விஷயமும் சொன்னேனே டி...ஆனால் நீ இவ்வளவு நடந்தும் நீ எதுவுமே தெரியாத மாதிரி இருக்க அப்படின்னா உங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கும்??

ஏன் இவ்வளவு நாள் உன்னை வளர்த்தின எங்களை விட அவன் உனக்கு முக்கியமா போயிட்டானா??? இல்லை எங்களை அவள் உன்மேல வெச்ச காதல் உனக்கு பெரிசா போச்சா.. இங்கே அவனுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சனை போயிட்டு இருக்குன்னு தெரிஞ்சும் நீ இப்படி செஞ்சு இருக்கேனா என்ன அர்த்தம் அப்போ இவன் தான் முக்கியம் அது தானே அர்த்தம் சொல்லு டி"...என்று அபி கூறும் போதே அபிக்கு ஆத்திரம் தலைக்கு ஏறி இருந்தது..அவனால் இந்த நொடி கூட நம்ப முடியவில்லை அவனது சம்யூவா இப்படி என்று ஆனால் அது உண்மை தான் என்று சம்யூ உணர்த்தி விட்டாளே!..

"இல்லை அபி நான் சொல்றதை கேளு அபி நீ நெனைக்கிற மாதிரி எதுவும் இல்லை அபி என்னை கொஞ்சம் பேச விடேன்"...

"இன்னும் நீ என்ன டி பேசறதுக்கு இருக்கு?? அது தான் எல்லாமே கண் கூட பார்த்தாச்சே இன்னும் என்ன சொல்ல இருக்கு"...

அபி கூறுவதை கேட்ட ராஜேஸ்வரிக்கு நிலைமை கையை விட்டு போவது போல தோன்ற

"அபி அவளை இழுத்திட்டு வா டா நாளைக்கே அவளுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...வீட்டை விட்டு வெளியே போனா தானே இவ கண்டவங்க கூட பழகிட்டு இருக்கா?? இனி எப்படி பழகுறான்னு பார்க்கிறேன் "...என்று ராஜேஸ்வரி கூற ,

அதை கேட்ட அபியோ, " மாம் எப்போ இவ அவன் கூட சேர்ந்துட்டு நம்மல அசிங்கப்படுத்தணும்னு நெனைச்சாலோ அவ இனிமேல் நமக்கு வேணாம் மா அவன் கூடவே போக சொல்லுங்க"... என்று கூறினான் அபி..

அதை கேட்டு அனைவரும் அதிர்ந்தனர் பிருத்வி உட்பட..

"மாட்டேன் அபி நான் உன்னை விட்டு போக மாட்டேன் அபி நான் சொல்றதை கேளு அபி"...என்று சம்யூ கதற அதெல்லாம் அபியின் செவியை சென்றடையவில்லை...

"அபி அவ தான் ஏதோ தெரியாமல் பண்ணிட்டா அதுக்குன்னு முன்னபின்ன தெரியதாவன் கூட அவளை அனுப்பி வைக்க முடியுமா?"... என்று அவ்வளவு நேரம் வாயை திறக்காத ஈஸ்வர் இப்போது வாயை துறக்க அதையும் அபி கேட்டானில்லை...

"நோ டாட் இனி அவளுக்கும் , எனக்கும் செட் ஆகாது... நம்ம கண் முன்னாடி அவ இப்படி பண்ணிட்டு இருக்கானா இன்னும் அவன் கூட சேர்ந்துட்டு என்ன எல்லாம் செய்வா??" என்று கூற பிருத்திவிக்கு இதை எல்லாம் கேட்டவன் முகத்தில் வில்லத்தனமே குடிபுகுந்து ஒரு நக்கல் சிரிப்பை தான் உதிர்த்து கொண்டிருந்தது..

அதை கண்ட ராஜேஸ்வரியின் கண்களில் ஆவேசம் மின்ன பிருத்திவியிடம் தோற்று போய் விடுவோமோ என்ற பயம் ஊசலாட, " அபி இங்கே வெச்சு பேச வேணாம் அவளை இழுத்திட்டு வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம் "...என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல

அதை கேக்கும் மனநிலையில் அபி இல்லை..அபியின் இந்த கோப முகம் அனைவருக்கும் புதிது விளையாட்டு பையனாக இருந்தவன் இப்படி கோப மூலாம் பூசி பேசவும் அதை கேட்ட அவனது குடும்பத்துக்கும் அதிர்ச்சி தான் என்றாலும் மேலும் இங்கே நடக்கும் கூத்தில் முற்றிலும் அவமானப்பட்டு நிற்கும் சம்யூவின் நிலைமை அதை விட மோசமாக இருந்தது...

"அபி ப்ளீஸ் அபி கொஞ்சம் லிசன் பண்ணு நீ நெனைக்கிற மாதிரி இல்ல நான் காதலிச்சது உண்மை தான் ஆனால் இப்..போ ??"...என்று சம்யூ தடுமாற

"என்ன இல்லைன்னு சொல்ல வரியா??காதலிக்கலன்னு சொல்லி தான் அவன் கூட கட்டி பிடிச்சு நின்னுட்டு இருந்தியோ ..இடியட் எங்களை பார்த்தா உனக்கு என்ன முட்டாள் மாதிரி இருக்கா ??"...என்று கேட்டவனுக்கு அவனுடைய சம்யூ இப்படி செய்து விட்டாளே என்ற ஆத்திரத்தில் அபியின் கை சம்யூவின் கன்னத்தை பதம் பார்த்தது..

அபி அடித்ததும் சம்யூவின் கன்னம் சிவக்க ஒரு நொடி பூமியே சுற்றுவது போல இருக்க அவளுக்கு பொறி கலங்கியது...ஒன்றும் செய்யாமலே தண்டனை அனுபவித்தவளின் மனம் போராடும் போராட்டத்தை வார்த்தையால் வடிக்க இயலாது அதை புரிந்து கொள்பவர் யாரும் அங்கு இல்லை...

இருந்தும் அவள் அழுது கொண்டே அபியிடம் எப்படியாவது தன்னுடைய நிரபராத்தித்துவத்தை புரிய வைக்க முயற்சி செய்ய முயல்கிறாள் அவளால் முடியவில்லை கேட்கும் நிலைமையில் அபி இல்லை ...

ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்ற நிலையில் தான் அபி இருந்தான்...எல்லா உண்மையும் தெரிந்தவன் பிருத்வி ஒருவனே ..இந்த நிலையில் அவனால் மட்டுமே அவளை காப்பாற்ற இயலும்...

பிருத்வி வாயை திறக்கவும் மாட்டான் எனக்கு இந்த இடத்தில் உதவி செய்யவும் மாட்டான் என்று அவளுக்கு தெரிந்தாலும் அவனிடமே போய் நின்று , "உண்மையை சொல்லுங்க அபிகிட்ட "...என்று கூற

பிருத்திவி அவ்வளவு நேரம் இங்கே நடந்த கூத்தை பொறுமையாக பார்த்தவனுக்கு ஏனோ கடைசி காட்சி பிடிக்கவில்லை..தன் கண் முன்னால் சம்யூ அடி வாங்கியதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை..

தன் அருகே வந்து கிட்டத்தட்ட இறைஞ்சும் நிலையில் இருக்கும் அவளை பார்த்து அவன் மனம் இளகினாலும் அவளுக்கு பின்னால் நிற்கும் ராஜேஸ்வரியை கண்டவனுக்கு அதை விட சூறாவளி உள்ளுக்குள் கிளம்ப அவளது விழி நீரை துடைத்தவன் அவளை இழுத்து தன்னருகே கிட்டத்தட்ட அவளை ஒரு கையால் தனது தோள் வளைவுக்குள் கொணர்ந்தவன் அவளை பார்த்து அவளது வீங்கிய கன்னத்தை இலேசாக வருடி கொடுக்க சம்யூவுக்கு புரிந்து போனது இவன் உண்மையை கூற மாட்டான் என்று அவள் உடலில் அவனிடமும் சண்டையிட தெம்பு இல்லாத நிலையில் மெல்ல அவனிடமிருந்து விலக முயற்சி செய்ய அது முடியவில்லை..

இனி இந்த இடமே நிரந்தரம் என்பது போல அவளை தன்னுடைய கை வளைவுக்குள்ளே வைத்தவன் மெல்ல அபி மற்றும் ராஜேஸ்வரி அருகில் வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தவன் பளார் என கண்கள் வெளியே தெறிக்கும் அளவுக்கு அபியை அறைந்து இருந்தான் பிருத்வி..

அவனது அறையின் சப்தமே கூறியது அபி அல்லாது வேறொருவன் இந்த அடியை வாங்கி இருந்தால் அவனது ஆயுள் முடிந்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

"யாரை டா அடிச்ச "..என்று ராஜேஸ்வரி மற்றும் ஈஸ்வர் பிருத்திவியின் அருகே வந்து பிருத்திவியின் சட்டையை பிடித்து ஆத்திரத்தில் கத்த..

"என்கிட்ட வந்தா இந்த அடி உங்களுக்கும் விழும் ...உங்க பையன் இவளை அடிச்சான் அதுக்கு பதிலா நான் அடிச்சேன் அவ்வளவு தான் ...கணக்கு முடிஞ்சு போச்சு இதுல நீங்க என் மேல கையை வெச்சு திருப்பி நான் உங்களை அடிச்சா என்ன ஆகும்னு நினைச்சு பாருங்க அதுனால என் சட்டையில் இருந்து கையை எடுங்க மிஸ்டர் ஈஸ்வர் "...என்று கூறவும் ஈஸ்வர் கையை எடுத்தார்...

அடுத்த நொடி அபி நிமிர்ந்து பிருத்திவியை பார்க்க அவனும், " உனக்கு இப்போ என்ன தெரியணும் ஆமாம் நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம் அதுக்கு என்ன இப்போ?".....என்க

ராஜேஸ்வரி அதிர்ந்து விட்டார் நிலைமை கை மீறி போய் விட்டது என்பதை தெள்ள தெளிவாக உணர்ந்து கொண்டார் ஏனெனில் பிருத்வி ஏதாவது வில்லத்தனம் செய்வான் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவனுடன் சம்யூவும் கூட்டு என்ற விஷயம் ராஜேஸ்வரியை தாக்க செய்வதறியாது நின்றார்...

அபியோ, " யார்மேலே டா கையை வெச்ச இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும்..இதோ பார் உன்னோட சித்து விளையாட்டுக்கு இவளும் உடந்தை தானே ..அவளையும் இழுத்துட்டு போ இந்த நம்பிக்கை துரோகியை ..எங்க முன்னாடி முழிக்காத போ"... என்று அபி கத்த

"யார் துரோகி அவ இந்த பிருத்விராஜ் வீட்டு மகாராணி டா..நீ என்ன டா சொல்றது இப்போவே நான் அவளை கூட்டிட்டு போறேன் எவன் என்னை தடுக்கிறான்னு பார்க்கிறேன்"... ..என்றான் பிருத்திவியும் அவன் பங்கிற்கு..

"யார் போனாலும் எனக்கு பரவாயில்லை நான் ஜெயிப்பேன்..உன்னை எதிர்த்துட்டே இருப்பேன்...உலகமே அழிஞ்சு போனாலும் இதோ இந்த நம்பிக்கை துரோகத்தை மறக்க மாட்டேன் இவளையும்"...என்று அங்கே விழி நீர் மங்க பார்த்து கொண்டிருந்தவளை பார்த்து அபி கூறி விட்டு , "வாங்க மாம் போலாம்"... என அழைத்தான்...

நிலைமை கை விட்டு போன ஆதங்கத்தில் இருந்த ராஜேஸ்வரி அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க கால அவகாசம் தேவைப்பட அவர்களும் அவனுடன் செல்ல ஆயத்தமாக , "ஒரு நிமிஷம் "...என்று அழைத்த பிருத்விராஜ்

"இவனோட நிச்சயத்துக்கு வந்து இருப்பீங்க இதோ என்னோட கல்யாணத்தை பார்த்துட்டு போங்க"... என்று இமைக்கும் நேரத்தில் தனது பாண்ட் பாக்கெட்டில் வைத்து இருந்த தங்க தாலியை சம்யூவின் கழுத்தில் அணிவித்து அவளை தன் மனைவியாக அதிகார பூர்வமாக ஏற்று கொண்டான்...சதி என்னும் வலையில் சிக்கிய சம்யூ செய்வதறியாது சிலை போல நின்றாள்...

மாயவன் வருவான்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top