Share:
Notifications
Clear all

அத்தியாயம் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மனம் விரும்புதே மாயவா

அவளைத் தேடி பிருத்வி வந்தால் அது பிருத்வி அல்லவே ...அவனுக்கு வேண்டியதை செய்து வருகிறான் இதில் நியாயம் தர்மம் பார்க்க அவன் ஒன்றும் ராமன் அல்லவே ராவணன் அல்லவா??? அவன் அவளை கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்...

அழுதழுது ஒய்ந்தவள் அபியின் அழைப்பில் கழிப்பறையில் இருந்து வெளியே வந்தாள்...

அபியின் மனம் முழுவதும் பிருத்திவியை எப்படி வீழ்த்துவது என்பதிலே குறியாக இருப்பதால் அபிக்கு சம்யூவின் வேதனையோ வலியோ அவன் உணரவில்லை...

உணரும் காலம் வரும் போது சம்யூ அவன் எதிராளியின் உடைமையாக அவள் இருப்பாள் என அவன் இந்நேரம் அறியவில்லை...

எப்படி அபியுடன் வீடு வந்து சேர்ந்தால் எனச் சம்யூ அறியாள்...இதோ இரவு கூட வந்து விட்டது...

பால் கனியில் நின்று கொண்டு எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தாள் சம்யூ...

முழு நிலவின் அழகை கூட அவளால் ரசிக்க முடியவில்லை..பால் வண்ண நிலவு கூட வெள்ளை பூதம் போலவே அவளுக்குக் காட்சி அளித்தது..

காற்றில் ஊஞ்சலாடும் மரங்களில் வரும் சப்தங்கள் கூட மரண ஒலி போல அவள் செவியில் ஓலமிட்டது...

தன்னை இப்படி எல்லாம் ஏமாற்றி விட்டானே... என் காதல் பொய்த்து போனதே என வருந்தியவள் அதன் பின் சில மணி நேரம் அவன் மீது கோபம் கொண்டவள், பின் தன் மீதே வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டவள் பின் அவனைக் கண்டு நாக்கை பிடுங்கி எறிவது போலக் கேள்வி கேட்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தாள் சம்யூ..அவள் இந்த காலத்து பெண் தான் ஒரு கயவனால் சீரழிக்கப்பட்டோம் என அவள் உணர்ந்தாலும் முடங்கி வீட்டில் அமராமல் விரைவிலேயே அதில் இருந்து மீள வழி யோசித்தாள்.. அதே நேரம் பிருத்வியை இப்படியே விடவும் அவளுக்கு மனது இல்லை..

அதன் பயன் மறு நாளே அவனைக் காண அவனது அலுவலகத்திற்கே சென்று விட்டாள்..

அவனிடம் கேட்காவிட்டால் அவள் மனம் தான் ஆறாதே...

வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள், " பிருத்...P.ராஜ் அவரைப் பார்க்கணும்"... என்க

"அப்பாயின்மெண்ட் இருக்கா மேடம்??"... என்று கேட்டாள் அந்த பெண்

அவளோ , "அதெல்லாம் இல்லை சம்யுக்தான்னு சொல்லுங்க உங்க பாஸ்க்கு தெரியும் "...என்று அவள் சிடுசிடுவென்று கூற

அந்தப் பெண்ணோ , "சாரி மேம் அப்பாயின்மெண்ட் இல்லாட்டி சாரை பார்க்க முடியாது "...என்று மறுக்கும் போதே வெளியே செல்வதற்காக வந்து கொண்டிருந்தவனின் கண்களில் இந்தக் காட்சிப்பட்டது..

அவனுடன் வந்த விக்கியின் கண்களிலும் இந்தக் காட்சி பட்டது..

சம்யூவின் சிடுசிடுவென்ற முகத்தையும் வாக்குவாதத்தையும் கண்டுகொண்டே வந்தவன் மனதுக்குள் வந்துட்டா போல என்று நினைத்து இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாத பிருத்திவி திமிராக நடந்து வர அவன் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த விக்கியோ , "டேய் பாவி அவளுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு போல ..நீ ஒண்ணுமே செய்யாதவன் மாதிரி இப்படிப் பந்தாவா நின்னுட்டு இருக்க உன்னைக் கொல்ல போற வெறில நின்னுட்டு இருக்கா.. இதுக்குத் தான் சொன்னேன் பெண் பாவம் பொல்லாதுன்னு "...என்று விக்கி பிருத்திவியின் உயரத்துக்கு எம்பி காதில் சிசுசிசுக்க

அதைக் கேட்ட பிருத்திவியின் முகம் கோபத்தில் சிவந்திருந்தாலும் விக்கிக்கு உள்ள பதட்டம் எல்லாம் பிருத்திவிக்கு இல்லை மெல்ல விக்கியின் செவி நோக்கி குனிந்தவன் , "அவளை எப்படிக் கரெக்ட் பண்ணனும்னு எனக்குத் தெரியும் "...என்று கூற

"இருந்தாலும் நீ செய்யறது பாவம் டா பிருத்வி"... என்று மனம் கேட்காமல் தன் நண்பனின் செய்த செயலை எண்ணி கூற

"அந்தப் பாவத்தை எல்லாம் பார்த்தா என்னால என்னோட பாதையில் போக முடியாது அண்ட் அவ விஷயத்துல உன்னைத் தலையிட வேண்டாம்னு ஏற்கனவே சொன்னதாக நியாபகம்".. என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுக்க

"ஆமாம் பெரிய லார்ட் லபக்கு இவன் ..இவன் சொன்னா கேட்கணுமா"... என்று வாய்க்குள் விக்கி முணுமுணுக்க அது பிருத்திவியின் பாம்பு காதுக்குச் சரியாகக் கேட்டு தொலைத்து , "நீ கேட்டு தான் ஆகனும் மிஸ்டர் விக்னேஷ் "...என்று கூற விக்கி மௌனமானான்..

வரவேற்பில் இருந்த பெண்ணோ பிருத்வியைக் கண்டதும் அமைதியாகச் சம்யூவை குற்றப்படுத்துவது போல, " அப்பாயின்மென்ட் இல்லாம வந்திருக்காங்க சார்"... என்று குறை கூற அவளது பதிலை செவி சாய்க்காதவன் சம்யூவை பார்த்து, " உள்ளே வா "...என்று அழைக்கச் சம்யூவுக்கு அவனது அழைப்பு எரிச்சலை கொடுத்தது..இருந்தாலும் அவனுடன் பேசியே ஆக வேண்டும் என நினைத்து அவன் பின்னால் அமைதியாக சென்றாள்...

இதோ அவனது ஓங்கி வளர்ந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் இவனுக்காகத் தனியாகப் பிளாட் போன்ற வசதியில் கிட்டத்தட்ட வீடு போன்று சகல வசதியும் நிரம்பி வழிந்த அந்த இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்று, " உள்ளே வா".. என்றழைக்க ,அவளுக்கு அவனை நம்பி உள்ளே செல்ல விருப்பமில்லை என்பதால் அறையின் வாயிலிலே நின்றவள், " நான் இங்கேயே நிற்கிறேன்"... என்க

அவனோ அவளின் செயல்களை புரிந்து கொண்டாலும் அவளைத் திரும்பி பார்த்து, " உன்னை உள்ளே வான்னு சொன்னேன் "...என்று வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூறியவனின் கைகள் அவளை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து கதவை அடைத்தது..

"என்ன செய்யறீங்க யாரை கேட்டு கதவை அடைக்கறீங்க??"... என்று சம்யூ அவன் அழுத்ததோடு பிடித்த கைகளைத் தேய்த்து விட்ட படி கேட்க

"என் கதவு நான் வெச்சது இதை எவன் கிட்ட கேட்டு நான் வைக்கணும் "... என்று நக்கல் குரலில் கூறியவன் மேலும் , "இதுக்காக தானே உள்ளே வர பயந்த??".. என்று கூறியவன் சட்டென்று அவளது கோபத்தில் சிவந்த செர்ரி இதழ்களை தன் இதழ்களோடு பொருத்தினான்...அவளின் தேகம் முழுவதும் வலிக்கும் அளவுக்கு அவளை அணைத்து பின் அதே நொடியில் அவளை விட்டான்...பின், " எதுக்கு வந்த "...என்று ஒன்றுமே தெரியாதவன் போலக் கேட்க

சம்யூ பொங்கி எழுந்து விட்டாள்..அவளுக்கு அவன் முத்தமிட்டது கோபத்தை கொடுத்தது என்றால் அவனது கேள்வி அதை விட கோபத்தை கொடுக்க, " எதுக்கு வந்து இருக்கேன்னு உங்களுக்குத் தெரியல??"..

அவனோ கையை விரித்துத் தெரியல என்றே கூறினான்..

"உங்களுக்கு எப்படித் தெரியும் பாதிக்கப்பட்டது நாங்களாச்சே..உனக்கு அப்படி என்ன எங்க குடும்பத்துக்கு மேல வெறுப்பு ..தொழிலை மட்டுமா அழிச்ச??"... என்று கேவலமாகப் பிருத்திவியைப் பார்க்க பிருத்திவி கையைக் கட்டி அவள் பேசி முடிக்கட்டும் என்பது போல நின்று கொண்டான்..ஆனால் அவன் மீதி அவளது வெறுப்பான பார்வையை ஏனோ பிருத்திவியால் ஏற்று கொள்ள முடியவில்லை...

அவளுக்கு அவனுடைய முகத்தைப் பார்க்க கூடப் பிடிக்கவில்லை இருந்தும் விடாமல், " உனக்கு அப்படி என்ன நாங்க செஞ்சுட்டோம் ..எதுக்கு என்னோட வாழ்க்கையை அழிச்ச?"... என்று வெகுண்டு அவனது சட்டையைப் பிடித்துக் கேட்டவள் அவ்வளவு அருகில் அவனது முகத்தை பார்த்து அவள் உடலில் மிச்சம் அவன் மீது ஒட்டி கொண்டிருந்த காதலை தேக்கியபடி,

"உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு தெரியுமா ?? பழி வாங்க உனக்கு நான் தான் கிடைச்சேனா?? என்னை எதுக்கு ஏமாத்தி என் வாழ்க்கையை உன்னோட பழி வெறிக்கு ஈடு ஆக்கின சொல்லு?"...என்று அவள் கொதிக்க

தன் அருகே வந்து கதறி அழும் அவள் முகம் செங்கொழுந்தாய் சிவந்து அவளின் அழகுக்கு மேலும் அழகு ஏற அவன் எங்கே அவள் கூறுவதைக் கேட்டான் தன் சட்டையைப் பிடித்து இருப்பவளின் முதுகை தான் தொட போனான்..

உடனே தீ சுட்டது போலச் சம்யூ அவனிடம் இருந்து விலகினாள் சம்யூ...

"என்ன நெனைச்சுட்டு இருக்கீங்க...என்னை நம்பவெச்சு ஏமாத்தி நாசம் பண்ணினது பத்தாத?? இதுல என்னை தொட வேற வரீங்களா..பொண்ணுங்க தான் வேணும்னா நெறைய பேர் இருக்காங்க அவங்ககிட்ட போங்க.. நான் ராமா விலாஸ் பொண்ணு...அதை நியாபகம் வெச்சுக்கோ எங்களுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு " என்று அவள் கொதிக்க அதுவரை பொறுமையாக இருந்தவனின் முகம் சட்டென்று இருண்டு அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்..

அவன் பார்வை அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது அதிலும் அவளை நோக்கி ஓர் அடி முன்னோக்கி எடுத்து வைத்தவன் அவளை பார்த்து, " நான் என்ன உன்னைக் கடத்திட்டு போய் ரேப் பண்ணினேன் ஆஹ்??".....என்று கேட்க அவளிடம் பதில் இல்லை

"இல்லை உன்னை நம்ப வெச்சு நாடகம் ஆடினேனா??..உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தானே சொன்னேன்..மாத்தி எதுவும் சொல்லிடலையே??

ஆமாம் டி ராஜேஸ்வரியை பழி வாங்கிட்டு தான் இருக்கேன் இனியும் பழி வாங்குவேன்..அண்ட் இப்போவும் சொல்றேன் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிப்பேன் ராஜேஸ்வரிக்கும் எனக்கும் நடக்கிற வார்ல நீ எனக்கு பகடைக்காய் தான் டி உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..உன்னால என்னோட தலை முடியை கூட அசைக்க முடியாது "... என்று கோபத்துடன் கூற

அவன் கூறுவதைக் கேட்ட அவளுக்கு ஆத்திரம் பொங்கி, "நீங்க என்ன என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது??? எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை.. என்ன வாழ்க்கை பிச்சை கேட்டு உங்ககிட்ட வருவேன்னு நெனைச்சீங்களோ??அதுக்கு வேற யாராவது இருப்பாங்க...

ஆமாம் நீங்க எங்களைப் பழி வாங்கி இருக்கலாம் நான் உங்களை உண்மையா தான் நேசிச்சேன்..அதுனால என்னோட உயிர் நாடியை உங்ககிட்ட இழந்த போதும் கூட நான் நீங்க சொன்ன ஆறுதலில் சமாதானம் அடைஞ்சேன் எப்போ நீங்க தான் எங்க குடும்பத்தைக் குறி வெச்சிங்கன்னு தெரிஞ்சதோ"... கண்களை இறுக மூடி திறந்தவள் ,

"இது காதல் இல்லை பழி வாங்கும் வெறின்னு தெரிஞ்சது...உங்க வெறிக்கு நான் பகடைக்காயா??? நான் சம்யுக்தா... இனி இது தான் நீங்களும் நானும் சந்திக்கிற கடைசிச் சந்திப்பு "...என்று கூற

முகம் இறுக அவள் கூறுவதை கேட்டு கொண்டிருந்தவனின் முகம் மேலும் இருண்டது அதைக் கண்டவள் மிடுக்காக, "கூடிய விரைவில் எனக்கும் அபிக்கும் கல்யாணம் நடக்கப் போகுது சோ நான் கல்யாணம் பண்ணாம உங்களை நெனைச்சுட்டே வாழ்க்கையை ஓட்டுவேன்னு நினைச்சு சந்தோசப்பட்டுக்காதீங்க வரட்டா??"... என்று வலிய வர வைத்த மலர்ந்த முகத்தோடு கம்பீரமாகவே அவள் சென்றாள்...

அவன் பார்க்கும் போது பயந்த பெண்ணாக ,விளையாட்டு பெண்ணாக இருந்தவளா இவள் என்று பிருத்வி யோசித்தவன் விழிகள் ஆச்சர்யம் அடைந்து , "நீ சம்யுக்தான்னா நான் பிருத்வி ராஜ் உன்னைத் தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் பண்ணிப்பேன் டி என்ன ஆனாலும் நீ தான் என் பொண்டாட்டி"... என்று முணுமுணுத்துக் கொண்டான்...

அப்படி அவன் வேண்டாம் நாய் கடித்து விட்டால் மருந்து இட்டு நம்மை நாம் குணப்படுத்திக் கொள்வதில்லையா??அது போல அவனது நினைவுகளை அவள் மனதிலிருந்து அகற்ற முயற்சி செய்து கொண்டாள் அதன் பலன் அபி வந்து சம்யூவிடம், " உனக்கு என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா??".. என்று கேட்கும் போது ஆம் என்றே அவளைத் தலையாட்ட வைத்தது...

அபிக்கும் முகமறியாத பெண் தன்னைக் காப்பாற்றி இருந்தாலும் தாயின் தொல்லைக்காகக் சம்யூவை மணந்து கொள்ளச் சம்மதித்து இருந்தான்..

அதுவும் காலம் முழுவதும் இதே போல நண்பர்களாகவே இருப்போம் என்ற கோட்பாடை இருவரும் ஒன்று சேர்ந்து விதித்து அதற்கு இருவரும் உடன்பட்டும் இருந்தனர்..

ஆம் சம்யூ அபியிடம் , "எனக்கு ஒரு காதல் இருந்துச்சு இப்போ இல்லை"... என்று கூற அபி அதியசமாகப் பார்த்தான் ஆனால் சம்யூ அபியிடம் அது யாரென்று கூற மறுத்து விட்டாள்...பின் அபியின் விஷயம் தான் சம்யூவுக்குத் தெரியுமே!

அப்படி இருவரும் பரஸ்பர உடன்படிக்கையின் பேரில் ஒன்றிணைந்து இதோ மணமேடையில் காட்சி அளிக்கும் போது தான் பிருத்வி வந்து குட்டையைக் குழப்புகிறான் என அவள் நினைக்க அதிலும் நீ வரலனா உண்மையைக் கூறி விடுவேன் என்று அவன் மிரட்டியது வேறு இந்த நேரம் சம்யூவுக்கு வயிற்றில் புளியை கரைத்தது..

அவள் காதலித்தாள் என்று மட்டுமே அறிந்த அபிக்கு தன்னுடைய எதிரியை தான் காதலித்து இருக்கிறாள் என்று கூறினால் என்ன நடக்கும் அதிலும் அத்தை மாமா அவர்களுக்கு எல்லாம் விஷயமறிந்தால் என்ன ஆவது என்று நினைத்தே சுற்றும் முற்றும் பார்க்க அபி மற்றும் அவனது பெற்றோர்கள் இருவரும் அவர்களுடைய தொழில் நண்பர்களிடம் விவாதித்துக் கொண்டிருக்க உறவினர்கள் அனைவரும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அமர்ந்து இருக்க ஒரு சிலர் உணவு அருந்திக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து அபியிடம் பாத்ரூம் செல்வதாகக் கூறியவள் அரங்கத்தின் பின்புறம் வழியாகச் சம்யூ தோட்டத்துக்குச் சென்றாள்..

அரங்கத்தின் முன்புறம் எல்லாம் விளக்கு ஒளியில் மின்ன இந்த இடம் மட்டும் இருட்டாக இருந்தது..

மெல்ல தந்து லெஃஹங்காவை தூக்கிய படி சலசலக்கும் காலடி ஓசையோடு அந்த இருள் மறைவில் பிருத்திவியைத் தேடி கொண்டு அவள் வந்து கொண்டிருக்க ஏதோ ஒரு கல் தடுக்கியது போல இருந்தது கால் இடற கீழே விழ போனவளின் இடையில் கையை வைத்து தாங்கி பிடித்தான் பிருத்வி...

அவன் சற்று முன் கூறியது போல அவளது வெண்ணிற இடையில் அவனது வலிய கரம் அழுத்தத்துடன் பிடித்து இருக்க, " விடுங்க"... என்று அவனிடமிருந்து விலகப் போனவளை முறுக்கி பிடித்து அவள் இடையைத் தன்னோடு சேர்த்து அழுத்தியவன், " நீ சொன்னா போகனுமா "...என்று செவிக்குள் ஹஸ்கி குரலில் பிருத்வி கூறினான்..அவனது குரலில் தாபம் வழிந்தோடியது...

"நான் தான் உங்களை வேணாம்னு சொல்லிட்டேனே??"...

"நான் உன்னை வேண்டாம்னு சொல்லலையே"... என்று கூறியவன் அவளின் கன்ன கதுப்புகளில் கோலமிட

"என்னை விடுங்க யாராவது பார்த்திட போறாங்க "...என்று சம்யூ பதறி விலக

"பார்த்தா பார்த்துட்டு போறாங்க"... என்று கூறியவன் அவளது உதட்டை பார்த்து,

"இன்னிக்கும் கொஞ்சம் லிப்ஸ்டிக் அதிகம் தான் போல "...என்று வருடிக் கொண்டே அவளின் இதழ் நோக்கி குனிய , "ப்ளீஸ் என்னை விடுங்க"... என்று கெஞ்சி கொண்டிருந்தாள் சம்யூ..

அவனோ அவளை ஒரு நொடி பார்த்து, " செம்ம பியூட்டி ஆஹ் இருக்க பேபி எனக்கு இப்போ ஒரு கிஸ் வேணும் அது நீயா தந்தாலும் சரி நானா உனக்கு கொடுத்தாலும் சரி ஏதோ ஒன்னு ஐ நீட் கிஸ்"...என்று கிறக்கத்தோடு கூற

அவளுக்குப் பயம் கிட்டத்தட்ட ஒரு 300 பேர் கூடியிருக்கும் இடத்தில் அவர்கள் குடும்பத்தின் எதிரி அவனுடன் தான் இந்த நிலையில் இருந்தால் அதுவும் என்னுடைய நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் என்று அவள் நொந்து, " என்னால முடியாது என்னை விடுங்க"...

"அப்போ என்னாலையும் உன்னை விட முடியாது இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னைத் தேடி உன் வீட்டு ஆளுங்க வந்திடுவாங்க அதுவரை என்கூட இப்படியே நிற்கிற தான் இருந்தா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை "...என்று பிருத்வி அவளது இடுப்பில் வைத்த பிடியை விடாமல் மேலும் அவளது இடுப்பு எலும்பு ஓடியும் அளவுக்கு கட்டி அணைத்து இருக்க அந்த நேரம் செய்வதறியாது தவித்த சம்யூ மலைபாம்புவிடம் மாற்றி கொண்ட தவளை போல தன்னை எண்ணி கொண்டவள் அவனது உயரத்துக்கு இலேசாக எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட போகவும் அவன் அவனுடைய முகத்தை திரும்பி அவனது உதட்டை காட்டவும் அந்த முத்தம் இதழ் முத்தமாகி போனது...

அவனது இதழை தீண்டியது அவளுடைய இதழ் என்றால் அவளது இதழை விடாமல் பிடித்து வைத்திருப்பது அவனுடைய தடித்த இதழ்..

அவனை மறந்து விட்டேன் என நினைத்து அபியுடன் மேடையேறியவளின் மூளை அப்போது தான் உரைத்தது அவனைத் தன்னால் மறக்க இயலாது என்று அவன் தான் தன் இதழில் குடி கொண்டுள்ளான் என்றால் தானும் தானே அவனுக்கு இயைந்து கொடுத்து கொண்டிருக்கிறோமே என நெனைத்தவளின் கை அவனது வேகத்தில் துவண்டு போய் அவனுடைய தலை முடியை வாகாகப் பிடித்து இழுக்கவும் இருவரும் ஒருவரை ஒருவர் மெய் மறந்த நிலையில் அந்த இருட்டான பகுதிகள் எல்லாம் விளக்கு பளிச்சென்று எறிந்தது கூடவே இவர்களின் தனிமை காட்சி மிக அருமையாக அங்கே கூடி இருந்தவர்கள் கண்களுக்கு விருந்தானது அதில் சம்யூவின் குடும்பத்தாரும் அடக்கம்...

இந்தக் காட்சியைக் கண்டு அனைவரும் அதிர்ந்து நிற்க , "சம்யுக்தா"... என்ற குரலில் நிமிர்ந்த சம்யூ அங்கு அனைவரையும் கண்டு அதிர்ந்தாள்...

மாயவன் வருவான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top