அத்தியாயம் 1
மும்பை - பாந்த்ரா
பணக்காரர்கள் மட்டுமே வாழும் சொர்க்க பூமி...பணக்காரர்கள் மட்டும் தான் வாழ முடியும் என்ற கோட்பாடை விதித்த இடமது...எங்கு பார்க்கினும் செல்வ செழிப்பு திகழ்ந்து காணப்படும் ஒரு பணக்கார பகுதி தான் மும்பையில் உள்ள பாந்த்ரா...இன்றைய மின்னும் நட்சத்திரங்கள் முதல் பரம்பரை பணக்காரர்கள்,தொழில் அதிபர்கள் வரை வாழும் இடம் பல பண முதலைகளை உள்ளடக்கிய ஒரு இடம்...
அங்கே வசிப்பவர்கள் எல்லாம் முக்கிய புள்ளிகள் என்பதால் என்னவோ அந்த ஏரியா முழுவதுமே போலீசார் தொடர் கண்காணிப்பின் கீழ் அடங்கும் பகுதிகளில் ஒன்றாக இருக்க அப்பேற்பட்ட பகுதியில் தான் ராமா விலாஸ் அமைந்து உள்ளது...
ராமா விலாசை பற்றி அறியாதவர்கள் அந்த பாந்தரா பகுதியில் இருக்க முடியாது..அவ்வளவு பேர் போன வீடு...அந்த வீட்டில் வசிப்பவர்கள் என்னவோ தமிழர்கள் தான் என்றாலும் பரம்பரை பரம்பரையாக மும்பையில் வசிப்பதால் அந்த பகுதியின் முக்கிய புள்ளிகளில் ஒருவர் ஆகிவிட்டனர்..
ராமா விலாசின் உடைமையாளர் அமரர் திரு ராம மூர்த்தி அவர்கள் எண்பது வயது ஆன அவர் இருபது நாள் முன் தான் வயோதிகம் காரணமாக மறைந்தார்...அதும் அவர் மரணத்திற்கு முன் ஒரு பத்து தினங்களாக படுக்கையில் கிடந்தவர் அதன் பிறகு மருத்துவர்களும் அவரின் வயதை காரணம் காட்டி கையை விரிக்க இந்த ராமா விலாசை விட்டு மறைந்தார்..
மனைவி இருபது வருடங்களுக்கு முன் மறைந்து இருக்க அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.. முதலாவது மகன் ராஜராஜன் இரண்டாவது மகள் ராஜராஜேஸ்வரி..ராஜராஜன் மற்றும் அவரது மனைவி பார்வதி ஒரு விபத்தில் பத்து வருடங்களுக்கு முன் மறைந்து விட அவரது மகள் சம்யுக்தா இவர்களுடன் இந்த வீட்டில் தான் வளர்கிறாள்...
ராம மூர்த்தியின் அடுத்த வாரிசு தற்போது ராமா விலாசில் கோலோச்சி வரும் ராஜராஜேஸ்வரி பெயரை போலவே கம்பீரம் அவரிடம் நிரம்பி வழியும்... கம்பீரமும் அதே அளவு கோபமும் கொண்ட பெண்மணி...துணிச்சல் மிக்க பெண்மணி...தைரியம்,தன்னம்பிக்கை ,திமிர், ஆணவம் இதற்கு எல்லாம் பெயர் போனவர்...அவர் ஒன்றை நினைத்து விட்டால் அதை நடத்தி காட்டியே தீருவார்..அவருக்கு ஒருவரை பிடித்து விட்டால் தலையில் தூக்கி வைக்கும் அவரே அவருக்கு விருப்பம் இல்லையென்றால் தூர எறியவும் அஞ்ச மாட்டார்...
தந்தையின் தொழிலையும் அவரது தொழிலையும் திறம்பட நடத்தும் பெண்மணி..அவருக்கு வயது ஐம்பது என்று சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.. அந்த அளவுக்கு இன்னும் இளமையாகவும் தன் உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்...அவர் எப்போதும் உடல்நலத்தில் அக்கறை உள்ளவர் அவரின் அந்த அக்கறை வீட்டில் கண்டிப்பாக மாறி அந்த வீட்டையே ஆட்டியும் வைப்பார் என்றே கூற வேண்டும்..
அவரது கணவர் ஈஸ்வர்..அமைதியான சாந்த சொரூபி மனைவி கோபத்தால் வடக்கே நின்றார் என்றால் இவர் அவரது அமைதியான குணத்தால் தெற்கே நின்று மனைவியை சாந்தப்படுத்தி மனைவியை அன்பால் அடக்கி வைக்கும் ஒரு அன்பான துணைவர்...என்ன தான் ராஜராஜேஸ்வரி வீட்டுக்கு வெளியேயும் வீட்டுக்குள்ளேயும் புலியை போல இருந்தாலும் ஈஸ்வர் என்ற பெயரை கேட்டாலே அமைதியாகி விடுவார்...அவருக்கு எல்லாமே ஈஸ்வர் தான் ஈஸ்வர் சொல்லுக்கு அங்கே மந்திரமில்லை...ராஜேஸ்வரி தன்னை நம்புவதை விட ஈஸ்வரை பெரிதும் நம்புவார்..ஈஸ்வருக்கும் ராஜேஸ்வரி மீது அதீத காதல் வெறியே உண்டு ..அதனாலே ராஜேஸ்வரி சிறிது மனம் சுருங்கினாலும் அவரால் தாங்கி கொள்ள முடியாது..
அவர்கள் இருவருக்கும் அன்பின் அடையாளமாக பிறந்த ஒற்றை வாரிசு அபிஷேக் என்ற ஒரு மகன் அவனுக்கு வயது இருப்பதைந்து ஆகி இருக்க படிப்பை முடித்தாலும் இன்னும் தொழிலை ஏற்க மனம் இல்லாமல் உல்லாசமாக சுற்றி வரும் ஒரு பணக்கார இளைஞன்..பல தடவை இதை பற்றி ராஜேஸ்வரி அவனை கடிந்தாலும் எப்போதும் போல தன் தந்தையின் தயவால் அவன் தன் அன்னையிடம் இருந்து தப்பித்து கொள்வான்...அவன் மட்டுமில்லை அந்த வீட்டில் இன்னொருத்தியும் இதே போல தான் அவள் தான் சம்யு என்கிற சம்யுக்தா..
சம்யுக்தா அவளை பற்றி கூறுவதென்றால் பெயரை போலவே அவள் ஒரு ரதி என்றே கூற வேண்டும்.. பால் வண்ண நிறத்தவள்...குண்டும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் உடல் வாகை கொண்டவள்..பிறை போன்ற நெற்றியும் மீன் விழியும் கூரான நாசியும் செதுக்கி வைத்த சிலை என்றே கூறலாம்..சாப்பாத்தியும் வெண்ணையும் கலந்து உண்டு அதே நிறத்தையும் முகத்தில் தமிழ்நாட்டு வாடை தென்பட்டாலும் அவள் ஒரு மராத்திக்காரி தான்..ஆனால் அவளது தாத்தா ராம மூர்த்தி உள்ளவரை தமிழ் மட்டுமே வீட்டுக்குள் அனுமதி என்பதால் இன்னும் தமிழ் அங்கே அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது...பெரும்பாலும் அவளும் அபிஷேக்கும் தாத்தா காணாத வகையில் ஆங்கிலத்திலும் இந்தியிலுமே உரையாடி கொள்வர்...
அவளை விட அவன் இரு வயது பெரியவன் என்றாலும் அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இழையோடி கொண்டு இருந்தது..இதோ இப்போது அவனது அறையில் தான் அவனுக்காக காத்து கொண்டு இருக்கிறாள்..
ஒரு வயதுக்கு வந்த வாலிபனின் அறை எப்படி இருக்குமோ அப்படி சர்வ லட்சணத்துடன் பிளே பாய் புக் பறந்து விரிந்து கிடக்க அவன் குளியறைக்குள் இருப்பதை உணர்ந்து அவளோ அறையை நோட்டம் விட அவனின் மொபைல் போன் மின்னி கொண்டு இருந்தது...அதை எடுத்து பார்த்தவள் பே என்று முழித்து கண்களை பொத்தி கொண்டு போனை வீசி எறிந்தாள் சம்யூ.. ஆம் அதில் கண்ணில் கூசும் அளவுக்கு ஒரு வீடியோ இருக்க அதை கண்டவளுக்கு தலை கால் புரியாமல் அந்த போனை தூக்கி எறிய பெண்களை கவர்வதற்காகவே சிக்ஸ் பேக்கிற்கு முயன்று கொண்டு இருப்பவன் துண்டு விளம்பரத்தின் மாடல் போல இடுப்பில் துண்டை மட்டும் அணிந்து கொண்டு வெளியே வர அவள் தன் மொபைலை தூக்கி எறிவதை கண்டவன் , "ஹே வாட் ஆர் யூ டூயிங் ஹீயர்..என்ன பண்ற என்னோட போனை..அதை எதுக்கு இப்போ தூக்கி வீசின ..தட்ஸ் நியூ போன் யூ நோ"... என்று கூறியபடியே அவளை கோப விழிகளில் உறுத்து விழித்தவனை பார்க்க முடியாமல் முகத்தை அந்த பக்கமாக திருப்பி கொண்டாள் சம்யுக்தா..
"பாஹல் ஒரு பொண்ணு முன்னாடி இப்படி தான் வந்து நிற்பியா".. என்று திறந்த புத்தமாக வந்தவனை பார்க்க முடியாமல் கண்களை மூடிய படி கூற
அவளின் செய்கைகளை கண்ட அபிஷேக்கிற்கு அதுவரை அவள் மீது இருந்த கோபம் மட்டுப்பட்டு தன்னை காணாமல் திரும்பி நிற்பவளை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தோன்ற
அவள் பின்னாலே பூனை போல நடந்தவன் அவளை பின்னே இருந்து தன்னோடு சேர்த்து அணைத்து அவளின் செவியில் , "உன்னை எல்லாம் ஒரு பொண்ணா நினைச்சா தானே ...என்னை பொறுத்தவரை நீ எல்லாம் பொண்ணே இல்ல"... என்று கூற அதுவரை அவனிடமிருந்து விடுபட திமிறிக் கொண்டு இருந்தவள் அவன் கூறியதை கேட்டு கோபம் கொண்டு விலகி பின் வேறு எதுவும் யோசிக்காமல் அவனை கட்டிலில் தள்ளி , "நான் பொண்ணே இல்லன்னு தானே சொன்ன ஆமாம் டா நான் பொண்ணே இல்லை தான் ஆனால் நீ ஆம்பிளை தானே"... என்று விஷமமாக கூறியவள் அவன் அணிந்து இருந்த துண்டை உருவ போக அவனோ அவள் கண் இமைக்கும் நேரத்தில் அவளிடம் இருந்து விடுபட்டு வேகமாக கப்போர்ட்க்கு பின்னே போய் நின்று கொண்டு, தன் மானம் இப்படியா இவளிடம் போக வேண்டும் என நொந்து, " வெளியே போடி எருமை ஒரு ஆம்பிளை பையன் ரூம் ல என்ன பண்ற".. என அவன் அவளிடம் தழைந்து போக அவனின் செய்கையை பார்த்து சிரித்தவள், " ஏன் அபி நான் உன் பக்கத்தில் வர கூடாதா '..என்று கூற
"ஒரு அடி எடுத்து வெச்சே இப்போவே அம்மாவை கூப்பிடுவேன்".. என்று அவன் மிரட்ட அவளோ அத்தை என்றதும் கொஞ்சமே அடக்கி வாசித்து அங்கேயே நிற்க
"கண்ணை மூடு டி நான் சொல்ற வரை கண்ணை திறக்காத".. என்றான் கடுப்புடன்
அவளோ சிரித்தபடியே கண்ணை மூடியவள் , "இவ்வளவு வெக்கத்தை வெச்சிட்டு பலான படமா பார்த்துட்டு இருக்க ..அதை சொல்லவா அத்தை கிட்ட"...என்று கூற
அதை கேட்ட அபிஷேக்கோ, " இது வாலிப வயசு "...என்று கூறி வேகமாக உடையை எடுத்து அணிந்து அவள் கண் முன்னே வந்து நின்றான்..
"இப்போ சொல்லு என்ன வேணும் உனக்கு எதுக்கு என் ரூம்க்கு வந்து இருக்க "..என்று கேக்க
சம்யுக்தாவோ அதுவரை கண்ணில் இருந்த குறும்புத்தனம் போய் பாவமாக முகத்தை மாற்றி அவன் அருகே நெருங்கி வந்து நின்று அபி என்று அவனது பனியனை பிடித்து இழுக்க
"என்ன பனியன் வேணுமா"..
"இல்ல அபி"...என்று கொஞ்ச
அந்த கொஞ்சல் வேறு அவனுக்கு கடுப்பை கொடுக்க, "என்ன வேணும்னு சொல்லி தொலை டி..எனக்கு நேரம் ஆகுது வெளில போகனும்"..
"நம்ம சோனு இல்ல"...
"யாரு உன் பிரெண்ட் குண்டு சோனு வா ..அவளுக்கு என்ன??"...
"அவளுக்கு கல்யாணம் டா கோவால..எனக்கு போகனும் இன்னும் பத்து நாள்ல கல்யாணம் டா..நான் போகனும் அதுக்கு நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்..அத்தை கிட்ட நீ தான் பெர்மிஷன் வாங்கி தரனும்"... என்று பாவமாக கண்களை சுருக்கி எல்லாம் கேட்க,
அபிஷேக்கோ ஏதோ வயிறு வலி வந்தவன் போல பலமாக சிரிக்க அவளோ முறைக்க வேகமாக தன்னை நிதானபடுத்திய அவன், " தாத்தா இறந்து 20 டேஸ் தான் ஆகுது..நெக்ஸ்ட் வீக் ஹோலி வேற உன்னை விடுவாங்கன்னு நினைக்கிற சான்ஸே இல்ல "...என்று கையை விரித்தவன் தலை வாற செல்ல
அவளின் மனமோ அவன் கூறியதை ஏற்க முடியாமல் முரண்டு பிடிக்க தொடங்கியது அவளுக்கு எப்படியாவது சென்றே ஆக வேண்டும்.. அவளது தோழிகள் அனைவரும் வருவார்கள் ஜாலியா இருக்கும் என்று மனதுக்குள் கணக்கிட்டவள் வேகமாக அபிஷேக்கிடம் வந்து , "அபி உனக்கு தான் உன் பிரின்ட்ஸ் கூட ஜாலி ட்ரிப் போகனும்னு பேசிட்டு இருந்தியே நாம ஏன் இந்த சான்ஸை யூஸ் பண்ணிக்க கூடாது "..என்று மீண்டும் அவனிடம் தூண்டில் போட அவனோ மீண்டும் யோசிப்பது போல பாவனை செய்ய சம்யுக்தாவின் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ தெரியவில்லை... அது கெட்ட நேரமே தான் விதி வலியது அல்லவா யாரால் மாற்ற முடியும் அந்த நொடி அபி அவளை ஆழ பார்த்து , "நான் யோசிச்சு சொல்றேன்"... என்று கூறி பதிலே சொல்லாமல் படி இறங்க இவளோ , "ஹே நில்லு டா..பதில் சொல்லிட்டு போ "...என்று விரட்ட
அவனோ அவளுக்கு பிடி கொடுக்காமலே ஓடினான்... சிரித்து கொண்டே வேகமாக ஓடியவனின் கீழே இறங்க அவர்கள் இருவரின் சத்தத்தை கேட்டு அங்கே ஹாலில் வக்கீலுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருந்த ராஜேஸ்வரி , ஈஸ்வர் மற்றும் வக்கீல் நிமிர்ந்து பார்க்க முதலிலே கடுப்பில் இருந்த ராஜேஸ்வரிக்கோ , "இது என்ன ஒழுங்கினமான செயல்"... என்று மகனை முறைக்க பின்னாலே அவனை துரத்தி கொண்டு வந்தவள் அவனை சிரித்த படி அவனை இடிக்க சிலை போல நின்றவன் நிற்கும் திசை நோக்கி திரும்பியவளின் பார்வை அங்கே தனது அத்தையை கண்டதும் சர்வமும் அடங்க அவள் கால் தானாக இரண்டு அடி பின்னோக்கி சென்றது..ராஜேஸ்வரி சுட்டு எரிக்கும் பார்வையால் அவர்கள் இருவரையும் பொசுக்கி கொண்டு இருந்தார்...
ஈஸ்வரும் ஏதோ கோபத்தில் இருப்பது போல தான் தெரிந்தது..அவரின் சிவந்த முகம் அது உண்மை என்று கூறினாலும் அவர்கள் முன்னே வெளியே காட்டி கொள்ளாமல் கண்களாலேயே அவர்கள் இருவரையும் போக சொல்ல அவர்களும் விட்டால் போதுமென்று ஒரே ஓட்டம் பிடித்தனர்..
சற்று நேரத்திற்கு முன்..
ராஜேஸ்வரியின் கம்பெனியின் வக்கீல் ராஜேஸ்வரியின் அழைப்பின் பேரில் ராமா விலாஸ்க்கு வர அவரை வரவேற்ற ராஜேஸ்வரி மற்றும் ஈஸ்வர் ஜோடி அவரிடம் அவரது தந்தை எழுதி வைத்த உயில் அடங்கிய கோப்பை அவரிடம் கொடுத்து வாசிக்க சொல்ல அவரும் வாசித்தார்..
அந்த உயிலில் இருப்பது என்னவென்றால் அவரின் அசையா சொத்துக்களின் எழுபது சதவீதம் சம்யுக்தா பேரிலும் முப்பது சதவீதம் அபிஷேக் பேரிலும் எழுதி வைத்திருந்தார்..
மேலும் அவரின் அசையும் சொத்துக்களான கம்பெனிகள் அனைத்தும் அவரது பேத்தியை திருமணம் செய்து கொள்ளும் அவரது பேரனுக்கே சொந்தம் என்றும் சம்யுக்தா விருப்பப்பட்டால் அவள் யாருக்கு இந்த சொத்துக்களை கொடுக்க விருப்பம் கொள்கிறாளோ அவர்களுக்கு எழுதி கொடுக்கலாம் என்றும் அதிலும் சம்யுக்தாவிற்கு வர போகும் கணவன் சம்மதித்தால் மட்டுமே மேற்கொண்ட எதுவும் நடக்கும் என்றும் எழுதி வைத்து இருந்தது.. அதிலும் அவரது சொந்த மகளான ராஜேஸ்வரிக்கு அவர் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த வீடும் கொடைக்கானலில் உள்ள எஸ்டேட் இரண்டு மட்டுமே சேரும் என உயிலில் கூறி இருக்க ராஜராஜேஸ்வரியின் முகம் இருண்டு தனது தந்தை தனக்கு செய்த சதியை எண்ணி தலை கால் புரியாமல் கணவரை பார்க்க ஈஸ்வரோ கண்காளாலே மனைவியை அடக்கியவர் மேலும் சில சந்தேகங்களை கேக்க தொடங்கினார்...
"நடராஜ் சார் இதுல சம்யூ கணவர் அவரோட பேரன்னு எழுதி இருக்கு அப்போ சம்யூவை அபி கல்யாணம் பண்ணிகிட்டா அபிக்கும் இந்த சொத்தில் உரிமை இருக்கு தானே".. கூற,
வக்கீலோ, " கண்டிப்பா இருக்கு...அதே சமயம் சம்யூ வேற யாரையாவது கல்யாணம் செஞ்சுட்டா அவங்களுக்கு தான் சொத்துக்கள் போய் சேரும்".. என்று அழுங்காமல் ஒரு குண்டை தூக்கி இட ஈஸ்வர் முகத்தில் சிறிய ஒளி வட்டம் வந்தது..
"அதே போல சார் பெரியவர் பேர்ல இருக்கிற 'R ட்ரேடர்ஸ்' கம்பெனி இப்போ நாங்க ரன் பண்ணிட்டு இருக்கிற கம்பெனி.. நாங்க முப்பது வருஷத்துக்கு முன்னாடி நாங்க தொடங்கினது ..அது எப்படி சம்யூ பேர்ல போகும் நியாயப்படி எங்களுக்கு தானே அந்த கம்பெனி சேரனும் "..என்று அதி முக்கியமான கேள்வியை கேட்டார் ஈஸ்வர்..
"அதிலும் பெரியவர் சொத்து பெரியவர் யாருக்கு வேணா எழுதி வைக்க உரிமை இருக்கு ஆனால் இந்த கம்பெனி எங்க உழைப்பு "..என்று உறுதியான குரலில் கூற,
மீண்டும் அந்த உயிலையும்,அவர்களது கம்பெனியின் பேப்பர்களையும் வாங்கி படித்து பார்த்த வக்கீல் , "சார் முப்பது வருஷத்துக்கு முன்னாடி நீங்க இவர் கிட்ட இருந்து முதல் வாங்கி அந்த கம்பெனி தொடங்கி இருக்கீங்க...அதுக்காக அவரை போர்ட்ல பவுண்டேர்ரா சேர்த்து இருக்கீங்க..அண்ட் இறந்த உங்க அண்ணன் கூட அதில் ஒரு மெம்பர் தான்...ஆனால் இப்போ வரை இதெல்லாம் அப்படியே தான் இருக்கு.. மேற்கொண்டு நீங்க பணத்தை திருப்பி அவருக்கு கொடுத்தற்கான ஆதாரமோ பேப்பரோ இல்லை...மேலும் அவர் பேரில் இருந்த இந்த பேப்பர்களை உங்க பேருக்கு மாற்றவோ எழுதவோ இல்லை அவர் பேரில் தான் இப்போது வரை இருக்கிறது அவருக்கு தான் சொந்தம்னு சொல்லாமல் சொல்லிட்டு போயிருக்கார் "...என்று கூற ,
உள்ளடங்கிய கோபத்துடன் ,"ஒன்னும் பண்ண முடியாதா"... என்று ஈஸ்வர் சாந்தமாக கேக்க
வக்கீலோ , "ஒன்றும் செய்ய முடியாது".. என்பது போல கையை விரிக்க ராஜேஸ்வரி வெகுண்டு எழுந்து , "என்ன சார் ஒன்னும் பண்ண முடியாது இது நான் உருவாக்கின கோட்டை அதெப்படி ஒரே நாள்ல விட முடியும்..என்ன அந்த மனுசன் என்ன பிச்சை போட்டு இருக்காறா..யாருக்கு தேவை அவரோட பணம் எனக்கு என்னோட கம்பெனி வேணும் அவ்வளவு தான் ...அதும் நியாயப்படி என்னோட பையனுக்கு சேர வேண்டியது அது எப்படி அவ பேர்ல எழுதி வைப்பாரு..மாத்தி எழுத என்ன வழி இருக்கான்னு பாருங்க ..உங்களுக்கு பத்து நாள் அவகாசம் தருவேன் அதுக்குள்ள ஒரு வழி சொல்லுங்க இப்போ கிளம்புங்க"... என்று உச்சாதிதியில் கத்த மனிதன் அரண்டு விட்டார்..
ஈஸ்வரோ நிலைமையை கண்டு வக்கீலை சமாதானம் செய்து அனுப்பியவர் , "எங்கேயாவது ஓட்டை இருக்கான்னு பாருங்க சார் அவங்க ஏதோ கோபத்தில் பேசிட்டாங்க அதை எதுவும் மனசுக்குள்ள வெச்சுக்காதீங்க"... என்று தன்மையாக பேசி அனுப்பி வைத்தவர் உள்ளே வந்து தன் மனைவியை தோளை தொட அவரோ அவரது கையை விலக்கி , "இப்படி அந்த மனுசன் செய்வார்ன்னு நெனைக்கலை ஈஸ்வர் ...செருப்பால அடிச்ச மாதிரி செஞ்சுட்டு போயி இருக்கார்...அந்த ஆளுக்கு அப்படி என்ன நான் பண்ணிட்டேன்..செத்தும் கெடுத்தான் சீதக்காதி மாதிரி செத்தும் நம்ம உயிரை வாங்கிட்டு போய் இருக்கார்"... என்று குதிக்க..
ஈஸ்வரோ , "ராஜீ எதுவும் எங்கேயும் போயிடலை நம்ம அபியை சம்யூக்கு கல்யாணம் பண்ணி வெச்சா எல்லாம் சரி ஆகிட போகுது...ஒரு வேளை அதை தான் அவர் இப்படி சுத்தி வளைச்சு எழுதி இருக்காரோ என்னவோ"... என்க அவர் சொன்ன சமாதானத்தில் கொஞ்சம் அமைதி ஆனார் ராஜேஸ்வரி...
என்ன தான் கணவர் அவரை சமாதானம் செய்தாலும் அவர் மனது உலைகலன் போல கொதித்து கொண்டே இருக்க ஈஸ்வரோ இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும் பசங்களுக்கு தெரிய வேணாம் என்று கூற ராஜேஸ்வரியும் தலை ஆட்டி விட்டு சென்றார்...ஈஸ்வரோ செல்லும் மனைவியையே பார்த்து கொண்டு இருந்தார்...
ஆனால் அவருக்கு இந்நேரம் தெரியவில்லை இவர்கள் என்ன தான் உருண்டு பிரண்டாலும் இவர்களின் குடும்பத்தையே அக்குவேர் ஆணிவேராக மாற்ற ஒருவன் வருகிறான் என்றும் அவனால் இவர்கள் இதை விட முழி பிதுங்கி நிற்க போகிறார்கள் என இந்நேரம் அவர்கள் அறியவில்லை...
இவர்களே இந்த அளவிற்கு யோசிக்கும் போது அவன் இந்நேரம் அதற்கான வேளைகளில் இறங்கி இருப்பான் என்றும் அவர்கள் அறியவில்லை...அவன் பிருத்திவிராஜ் ...கலியுக ராமன் இல்லை அவன்.. அவன் ஒரு ராவணனே ஆவான்..அவனுக்கு என்னவோ பத்து தலை இல்லை தான் ஆனால் அவனது ஒற்றை தலையை வைத்து கொண்டு இந்த குடும்பத்தில் உள்ள அனைவரின் தலையையும் ஆட்ட வருகிறான்...
அட்வென்ச்சர்ஸ் இல் விருப்பம் உள்ளவன் இப்போது என்னவோ ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு அடர்ந்த காட்டின் நடுவே பெரிய மலை முகட்டில் நின்று தனது பாராசூட் மூலம் கீழே குதித்து அவனது உற்சாகத்தை வெளிப்படுத்தி கொண்டு இருந்தாலும் அவன் மனதில் குடி கொண்டு இருக்கும் தற்போதைய அட்வெஞ்சர் சம்யூ...அவளிடம் இருந்து சுபமாக அவனது ஆட்டத்தை தொடங்க இருக்கிறான்...
மாயவன் வருவான்....
