மந்தாரம் 8
மந்தாரம் : 8
விது பிரதாப்பின் கார் அந்த பெரிய வீட்டுக்குள் நுழைந்தது.. அந்த வீட்டை கண்டதும் தேவிகாவின் உள்ளம் பல எண்ண அதிர்வலைகளை அவளுக்கு தந்தது..
வெற்றியை பிரிந்து குழந்தையை அழைத்து வந்ததில் அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை..அவர்களின் கதறல் சத்தம் இன்னும் அவளின் காதுக்குள் தான் ஒலித்து கொண்டு இருந்தது.. இந்த வீட்டுக்கு இரண்டகம் அவள் செய்து விட்டு வந்து இருக்கிறாள் என அவளின் உள்மனம் அவளை கேள்விக் கேட்டுக் கொண்டு இருந்தது..
இந்த வீடு அவளின் பல உணர்வுகளையும் அவளின் பல துக்கங்களை கண்டு இருக்கிறது.. ஆம் இந்த வீட்டில் வீட்டு வேலைக்காரியாக நுழைந்து கடைசியில் இந்த வீட்டு வாரிசை அவள் சுமந்து கொண்டு தான் சென்றாள்.. மீண்டும் அந்த வீட்டுக்குள் அவள் நுழைவோம் என அவள் கனவிலும் நினைத்து இருக்க மாட்டாள்..
பல கலங்கிய உணர்வோடு அவள் இந்த வீட்டில் இருந்து இறங்கி இருக்கிறாள்.. ஆனால் மீண்டும் இந்த வீட்டுக்குள் நுழையும் பொழுது உங்களுக்கு என்னவோ போல இருந்தது.. உண்மையில் சொல்ல முடியாத வலி தான் அவளுக்கு வந்தது..
அதிலும் அவனோடு செய்த இந்த பயணமே அவளுக்கு வெறுப்பை மட்டும் தான் கொடுத்தது..
இதுபோன்று ஒரு வாழ்க்கை கிடைக்காதா என பலமுறை ஏங்கி இருக்கிறாள்.. ஆனால் அதற்காக அவள் வெகுவாக காத்தும் இருந்து இருக்கிறாள்... ஆனால் இப்பொழுது ஏன் தான் இவனோடு வருகிறோம் என்ற நிலையில் தான் அவள் இருந்தாள்.. ஒரு மாதிரி இறுகிய மனநிலை அவளுக்கு வந்தது..
அவனும் அதை எதையும் யோசிக்கவில்லை.. அவனுக்கு அவன் காரியம் நடக்க வேண்டும் அப்படி இருக்க அந்த வீட்டுக்குள் கார் நுழைந்து கார் நின்றதும் அவன் அவளை ஒரு அழுத்தமான பார்வை பார்த்துக் கொண்டு காரில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கி உறங்கிக் கொண்டிருந்த மகனை அனைத்து படி அமர்ந்திருக்கும் அவளோடு, "காரிலிருந்து கீழே இறங்கு" என்று கூறினான்..
அவளுக்கும் வீடு வந்தது தெரியும் என்றாலும் குழந்தையை வைத்து எப்படி காரில் இருந்து இறங்குவது என யோசிக்கும் முன்னே அவன் காரில் இருந்து இறங்கி கார் கதவை அடைத்து விட்டான்.. இவளுக்கோ எப்படி திறப்பது என தெரியவில்லை..
ஏனெனில் ஒரு இவளோடு தன்னை பயணம் செய்ய வைத்து விட்டாரே தன்னுடைய தந்தை என்ற கோபம் அவனுக்கு உள்ளுக்குள் வந்தது..
அது மட்டுமின்றி முடிந்து, கிழிந்து போன பக்கங்களை எல்லாம் எடுத்து ஒட்ட வைத்து படிக்க சொல்வது போல அவனுடைய தந்தை செய்த காரியம் அவனுடைய கோபத்துக்கு இரையாகி இருந்தது..
அதே நேரம் இந்த வீட்டுக்குள் நுழைந்ததும் அவன் முகம் மேலும் இறுகி ஆக்ரோஷத்தின் உச்சியில் அவன் இருந்தான் விது.. இது எல்லாம் நடக்க கூடாது என நினைத்திருந்தானோ அது எல்லாம் தன் தந்தை மூலமாக நடப்பதை அவனால் கொஞ்சமும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அவளோ மெல்ல குழந்தையை பிடித்துக் கொண்டு எப்படி கதவை திறப்பது என முழித்துக் கொண்டிருக்க, அவனும் இவளை அழைத்து வந்ததையையே எண்ணி கடுப்பின் உச்சியில் இருக்கும் பொழுது இவன் அழைத்தும் இவள் இறங்காமல் இருப்பதை பார்த்து கடுப்பாகி, "கார் கதவை திறந்து உன்னால இன்னும் இறங்க முடியலையா??" என்று கடுப்பாக கேட்டான்..
அவளோ அதை கேட்டு திணறிக் கொண்டு இருந்தாள்.. அவளால் உண்மையாக முடியவில்லை.. அதனால் கடுப்பான அவன், "ஒரு கார் கதவை கூட திறக்க இருக்க தெரியல பட்டிக்காடு உனக்கு எல்லாம் அந்த ஆட்டோக்காரன் தான் சரியான ஜோடி இந்த மாதிரி கார்ல எல்லாம் கூட்டிட்டு வந்தேன் பார் என்னை சொல்லணும்" என்று அவளை அவமானப்படுத்த தேவிகாவின் உள் மனம் அவமானத்தில் கருத்தது..
அவனாகவே அழைத்து வந்து இவனாகவே திட்டுகிறான் என்று எண்ணிய அவளுக்கு கடுப்பு ஆகிவிட்டது ஏற்கனவே இவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் முள் மேல் இருப்பது போலத்தான் அவள் இருந்தாள்.. இனி இவன் முன் தலை குனிந்து நிற்கவே கூடாது என முடிவெடுத்தாள்..
அதனால் அவள், "இதோ பாருங்க.. நீங்களா தான் கூட்டிட்டு வந்து இருக்கீங்க.. உங்க காரியம் நடக்கத்தான் நான் வந்து இருக்கேன் நான் ஒன்னும் உங்க கூட வாழ நான் வர கிடையாது.. அதனால சும்மா இந்த திட்டுற வேலை எல்லாம் வேண்டாம்.. இவ்வளவு சீக்கிரம் உங்க வேலை முடியுமோ அதோட எங்களை தலைமுழுகிடுங்க.. உங்க பக்கத்துல நிக்கிற ஒவ்வொரு நொடியும் எனக்கு அருவருப்பா இருக்கு.. எங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல வெற்றி கிட்ட போகணும்.. வெற்றி எனக்காகவும், என் குழந்தைக்காகவும் காத்துகிட்டு இருப்பார்" என்று வேண்டுமென்றே அவனை தாக்க வேண்டும் என அவள் அந்த ஒரு வார்த்தை கூறிவிட, அதை கேட்டவன் கடுப்பாகி விட்டான்..
உடனே அவள் பக்கம் திரும்பி, இவளுக்கு என்ன அப்படி ஒரு திமிர் என எண்ணியவன் வெற்றி கிட்ட போகணுமா என எண்ணி, "அவன் காத்துகிட்டு இருந்தா கிளம்பி போடி..நான் ஒன்னும் உன்னுடைய அழகுல மயங்கி உன்னை கூட்டிட்டு வரல.. போயும் போயும் நீ பேசறதை எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு.. ரொம்ப ஆசையா இருக்கோ அவன் கூட போய் வாழ கவலைப்படாதே, என் வேலை முடியட்டும் அதுக்கப்புறம் கொண்டு போய் நானே கல்யாணம் பண்ணி வச்சுடறேன்.. என்னதான் நீ அவனை கல்யாணம் பண்ணினாலும் உன் கையில இருக்கிறது நான் உனக்கு கொடுத்தது அதை மறந்துடாத.. அந்த குழந்தை முகத்தை பார்க்கும் போதெல்லாம் உனக்கு என் முகம் தான் டி" என்று வேண்டுமென்று அந்த இடத்தில் அவளை ஒரு கொட்டு கொடுக்க வேண்டும் என்று கொட்டினான்..
அதை கேட்டு அவள் முகம் கறுத்து வாயை மூடி கொள்ளவும் அவன் அதன் பின்னே திருப்தி அடைந்தான்..
அவனுடைய கார் போர்டிகோவில் நுழைந்ததும் வேகமாக இன்முகத்துடன் ஸ்ரேயா வெளியே வந்து நிற்க ஸ்ரேயாவோடு, ரேவதியும் வெளியே வந்தார்..
அவர் வந்ததும் அவன் அருகே அழுத்தமாக நிற்கும் தேவிகா மற்றும் அவள் கையில் இருக்கும் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்..
"நீ தேவிகா தானே" என்றவர், "தேவிகாவை எங்கிருந்துடா கூட்டிட்டு வர?? ஏன் தேவிகா போயிட்ட?? நான் வரதுக்குள்ள வீட்டை விட்டு வெளியே போயிட்ட?? எதுவுமே சொல்லவே இல்ல?? ஏன் வேலையை விட்டுட்டு போயிட்ட?? இது என்ன உன்னோட குழந்தையா??" என்று குழந்தையின் முகத்தை பார்க்காமல் கேட்டார்..
அவள் தோளில் குழந்தை இருக்கவும் கிட்டத்தட்ட அவர்கள் வீட்டில் ஒரு வருடம் வீட்டு வேலைக்காரியாக வேலை செய்த வேலைக்காரியை மகன் அழைத்து வந்திருக்கிறானே என்று குழப்பத்தோடு ரேவதி கேட்டார்.. அவருக்கு தெரியாது அவள் கையில் இருப்பது அவருடைய வீட்டின் வாரிசு என்றும் அவள் அந்த வீட்டு மருமகள் என்றும் அவருக்கு தெரியாது அல்லவா?? அதனால் அவர் அவ்வாறு கேட்டார்..
அதைக் கேட்ட தேவிகா எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருக்க அவனும் கடுப்பாக தாயைப் பார்த்து கூடவே ஸ்ரேயா அவளைக் கண்டு இவள் எதற்கு வந்திருக்கிறாள் என நினைத்து கடுப்பாகி நிற்கும் பொழுது, "என்ன கண்ணா இவளை எங்கிருந்து கூட்டிட்டு வர??" என மீண்டும் தன் மகனை பார்த்து கேட்டார்..
அவன் நக்கலாக அவளைப் பார்த்துக் கொண்டே சற்றுமுன் அவள் அவனிடம் பேசியது அதிகப்படி தான் என்பதை உணர்ந்து கொண்டு அவளை மேலும் வலிக்க வைக்க வேண்டும் என கருதி, "வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னீங்க இல்ல.. இவ வேலைக்கு வரேன்னு சொன்னா.. அதனால கூட்டிட்டு வந்து இருக்கேன்" என்று நக்கலாக கூறியவன், "கொஞ்ச நாள் இங்க தான் இருப்பா ஏதாவது வேலை இருந்தா வாங்கிக்கோங்க.. சம்பளம் கொடுத்து விடலாம்" என்று கூறினான்..
அதை கேட்டு அவரும், "ஏன்மா உன் புருஷன் கூட ஏதாவது சண்டை போட்டுட்டு வந்துட்டியா??" என கேட்கவும் அவன் தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறான் என கருதி தேவிகா குனிய குனிய குட்டுவான்..
இவன் முன் இனி குனியவே கூடாது என கருதி, " ஆமா மா என் புருஷன் என்னையும் என்னுடைய பிள்ளையையும் அனாதையா விட்டுட்டு அவருடைய சுகம் தான் பெருசு அப்படின்னு போயிட்டார்.. அதனால நாங்க இப்படி ஒவ்வொரு வீடா வீட்டு வேலை செஞ்சு எங்க பிழைப்பை ஓட்ட வந்திருக்கோம்" என அவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே அவள் கூறவும் அவன் கடுப்பாகி விட்டான்.. அவன் பார்த்த தேவிகா இவள் இல்லை.. ஐந்து வருடம் இவளுக்கு நிறைய மாற்றத்தை கொடுத்திருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டான்..
அதைக் கேட்ட அவரோ, "படுபாவி இப்படியுமா இருப்பான்.. கவலைப்படாதம்மா உனக்கு எவ்வளவு நாள் இங்கு இருக்க வேண்டும் என்று தோணுதோ அவ்வளவு நாள் நீ இருக்கலாம் சரியா??"என்று ஆறுதலும் கூறினார்..
ஆனால் அவனுக்கு அவளுடைய பேச்சும் திமிரும் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. இதற்கு எவ்வளவு சீக்கிரம் முடிவு கட்ட வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவு கட்டியே ஆக வேண்டும் என நினைத்தான்...
ஸ்ரேயாவோ அவனை கண்டதும் வேகமாக ஓடி சென்று அவனை அணைத்து கொண்டு அங்கு யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அவனின் அனுமதிக்க கூட காத்திருக்காமல் அவனின் முகம் எல்லாம் முத்த மழை பொழிந்தாள்..
அதைக் கண்டு ரேவதி வெட்கத்தில் சிரித்து, " இரண்டு பேருக்கும் எப்படியாவது கல்யாணம் பண்ணி வச்சிரணும்" என்று முணுமுணுக்க இங்கு இவளுக்கு பத்தி கொண்டு வந்தது..
கட்டிய கணவன் தன் முன்னே வேறொரு பெண்ணை அணைத்தது மட்டுமின்றி அவள் முத்தமிடவும் அதை ரசித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறான்.. இதை காணத்தான் என்னை மீண்டும் இங்கு அழைத்து வந்திருக்கிறானா என நொந்தாள்..
ஸ்ரேயா தன்னை அணைத்து கொண்டிருந்தாலும், அவனின் பார்வை என்னமோ தேவிகா மீதுதான் படிந்திருந்தது.. அவள் அந்தக் காட்சியைப் பார்க்க பிடிக்காமல் தலையை தாழ்த்துகிறாள் என்று எண்ணியவனுக்கு மெல்லிய நக்கல் புன்னகை வந்தது..
அதை கண்ட அவள் மேலும் அடிபட்டு போனாள்..தான் மட்டும் எவ்வளவு ஆனாலும் சரி இவனுக்கு சந்தோஷமாக இருந்து விடவே கூடாது அப்படி இருந்து விட்டால் இப்படி தேடி வந்து அவளை அழைத்து வந்து வருத்தத்தை கொடுப்பான் போல என்று அவள் அங்கு எதிரே நடக்கும் முத்த யுத்தத்தை காண சக்தி இல்லாமல் வேறு பக்கம் பார்வையை திருப்பி கொண்டாள்..
அதற்குள் ரேவதி அவளைப் பார்த்து, "என்ன உன் வீட்டுக்காரர் என்ன பண்றார்?? ஏன் உன்னை விட்டுட்டு போனான்?? ஏன் இன்னைக்கு வீட்டை விட்டு போயிட்ட?? நான் வீட்டுக்கு வந்து எல்லார்கிட்டயும் கேட்டேன்.. நீ போனது யாருக்குமே தெரியலன்னு சொன்னாங்க.. ஏன் போயிட்ட?? என்ன பிரச்சனை" என்று மேலும் குசலம் விசாரிக்க துவங்கினார்..
அவளுக்கு அதுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.. ஆம் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனது இங்குள்ள யாருக்குமே தெரியாது.. அப்படி இருக்க அவள் என்னவென்று சொல்வாள்..
இதை எல்லாம் விட ஒரு இக்கட்டில் தான் இருவருக்கும் திருமணம் நடந்தது..அவன் தான் கூறியிருக்கிறானே இவளை இந்த வீட்டிற்கு முதன் முதலாக அழைத்து வரும்போதே அவன் எச்சரித்து விட்டான்..
"இது நான் தான் கட்டின தாலி அப்படின்னு உனக்கு இருந்தா இந்த தாலிக்கு உண்மையான மரியாதை நீ கொடுக்கிற மாதிரி இருந்தா இது நான் தான் கட்டின தாலின்னு நானா சொல்ற வரைக்கும் நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது" என்று அவன் கூறியிருந்தான்..
அப்படி இருக்க அவள் வாயையே திறக்காமல் அமைதியாக நின்று கொண்டிருக்க இவள் என்ன அமைதியாக இருக்கிறாள் என்று கருதிய அவர், "இது என்ன உன்னோட குழந்தையா??" என்று குழந்தையின் முகத்தை பார்க்க அவர் போவதற்குள் இங்கு நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் காரணமான ராம் மோகன் அங்கு வந்து நின்றார்..
