மந்தாரம் 7
மந்தாரம் : 7
ஸ்ரேயா விதுவின் வீட்டுக்கு சென்று இருந்தாள்.. அவள் சென்ற நேரத்தில் இருந்து என்னமோ போல அவளுக்கு இருந்தது.. எப்போதும் அவளை கண்டால் சிரித்து பேசும் ராம் மோகன் அவளை கண்டு கொள்ளாமல் இருந்தார்..
பெயருக்கு மட்டும், "வா மா" என்று கூறி விட்டு அவர் வேலையை பார்க்க அலுவலக அறையை நோக்கிச் சென்று விட்டார்.. அவரின் இந்த மாற்றம் என்னவோ போல அவளுக்கு இருந்தது..
ரேவதி மட்டும் தான் அவளோடு அமர்ந்து இருக்க, அவர் இன்முகமாக தான் அவளிடம் பேசிக் கொண்டு இருந்தார்.. "ஆன்டி விதுவை பார்க்கவே முடியவில்லையே.. எங்கே போனார்??.. போன் பண்ணினா போன் கூட எடுக்க மாட்டேங்கிறார்" என்று அவள் சிறிய கலக்கத்தோடு கேட்டாள்..
அதற்கு அவனோ, "எங்கே போனான்னு தெரியல மா.. வீட்டுக்கு வரல.. நான் கால் பண்ணினாலும் அவன் எடுக்கல..எதை அவன் சொல்லிட்டு செஞ்சு இருக்கான். உன்கிட்ட மட்டும் இல்லம்மா.. எங்க கிட்டயும் அப்படித்தான் இருக்கான்.. என்ன சொல்லி அவனை மாற்றுவது என்று எனக்கு தெரியவே இல்லை.. ஒரே ஒரு மகன் சொல்லி செல்லம் கொடுத்து வளர்த்துனது தப்பா போச்சு..
இவங்க அப்பா எப்பவுமே இப்படி சொல்லித்தான் என்னை திட்டுறார்... ஆரம்பத்தில் ஒரு மகன் சொல்லி செல்லம் கொடுத்து வளர்த்துனது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்னு எனக்கு இப்போ ரொம்ப புரியுது..
ரொம்ப பிடிவாதம் எதையும் காது கொடுத்து கேட்பதில்லை.. அவனுடைய இஷ்டம் அப்படின்னு சுத்துறான் யாரையும் மதிக்கிறது இல்ல.. என்ன சொல்றது எனக்கும் தெரியல..
அவனுடைய பிடிவாதம் கோபம் எல்லாம் நாளுக்கு நாள் அதிகம் தான் ஆகுதே ஒழிய குறையல" என்று இவள் புலம்ப அவரிடம் சென்றால் அவர் அவர் மனதில் உள்ள புலம்பலை எல்லாம் இவள் தலையில் இறக்கினார்..
அதைக் கேட்ட அவளோ இனி என்ன சொல்வது என்பது போல பார்த்தாள்.. உண்மையில் ஸ்ரேயா பார்க்க படு மாடர்னாக இருந்தாலும் பாவம் என்று தான் கூற வேண்டும்..
கிட்டத்தட்ட 16 வயதில் மாடலிங் துறையில் வலம் வர துவங்கி, 17 வது வயதில் ஒரு பேஷன் ஷோவில் விதுவின் கண்களில் பட்டாள்.. பதினெட்டாம் வயதில் அவளுடைய கன்னித்தன்மையை அவன் மீதுள்ள மையலில் அவளின் சுய விருப்பத்தின் பெயரில் பறி கொடுத்தாள்..
அவளுக்கும் அவனின் அழகில் மையல் இருந்தது என்னவோ உண்மை தான்.. அவளுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது என்று கூறும் பொழுது அவன் அவளோடு இருப்பதில் தவறு என்றுமில்லை என்பது அவனுடைய கருத்து..
அதற்கு அவள் வைத்துள்ள பெயர் காதல்.. அவனை பொறுத்தவரை அப்படி அல்ல..அவளுக்கும் பிடித்திருக்கிறது தனக்கும் பிடித்திருக்கிறது..
அதனால் இரண்டு பேரும் இன்பமாக கலந்தோம் அவ்வளவுதான்.. அதற்கு இவள் காதல் என்று பெயர் வைத்தால் அதற்கு அவன் பொறுப்பல்ல என்பது அவனின் வாதம்.. இந்த பேச்சை எல்லாம் துளியும் கேட்க அவன் விரும்பியதில்லை..
அதனால் இவள் காதல், கல்யாணம் என்ற பேச்செல்லாம் எடுத்தால் அவன் தவிர்த்து விடுவான்..ஆனால் ஏனோ இவளுக்கு தெரியவில்லை.. அவளால் அவனை மறக்க முடியவில்லை..
ஒரு வேளை அவள் அந்த வயதில் இவனை கண்டு இவன் அழகில் மையல் கொண்டதாலோ என்னவோ?? அல்லது அவள் பார்த்த ஆண்களில் இவனை போல ஒருத்தனை கண்டதில்லையோ என்னவோ என்னவென்று புரியவில்லை மனதையும் உடலையும் அவனிடம் பறிகொடுத்து அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்...
தற்போது அவளுக்கு வயது 23 பார்த்தால் 23 வயது என கூறி விட முடியாது.. அந்த அளவுக்கு இவள் தன் அழகை பேணிக் காத்து வருகிறாள்..
ஆம் அவள் ஒரு மாடல் அழகி என்பதால் அவள் பெயர் மாடல் உலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறததால் ஐந்து வருடங்களுக்கு ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் அவள் ஒப்பந்தமிட்டு இருப்பதாலும் அந்த நிறுவனத்திற்காக அவள் வேலை செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அவள் இந்த ஐந்து வருடங்களும் பயங்கர பிசியாக அவள் தன் வேலையில் மூழ்கி இருந்தாள்..
இடையிடையே தான் விது பிரதாப்பிடம் அவளுக்கு பேச முடியும்.. மேலும் அதிகம் அவளால் அவனை காணவோ, பேசவோ அவளால் முடிந்ததில்லை.. கிடைக்கும் நேரத்தில் எல்லாம் விது மற்றும் அவளும் ஊடலில் கூடியிருந்தனர்.. அவர்களுக்கு இடையே பேச்சை விட மோகம் வென்று இருந்தது..
இப்பொழுது ஐந்து வருட காண்ட்ராக்ட் அவளுக்கு முடிந்து விட்டது..
இனி அவளுக்கு சினிமா வாய்ப்புகள் வேறு வந்த வண்ணம் இருக்கிறது...ஆனால் அவனுக்காக அவள் எல்லாம் மாற்றி வைத்து விட்டாள்..
அவன் அவளை ஒன்றும் மாற்றி வைக்க சொல்லவில்லை.. அவளாக தான் மாற்றி வைத்து இருக்கிறாள்.. ஏனெனில் ஆசைப்பட்டு வந்த அவளுடைய இந்த வேலை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களில் அவள் ஓடிய ஓட்டத்தில் அவளுக்கு ஒரு சலிப்பு ஏற்பட்டு விட்டது..
இனி கல்யாணம், குழந்தை என வாழ்ந்து விடலாமா என்று எண்ணம் இருக்கிறது.. அவனைப் பிரிந்து அவளால் இருக்க முடியவில்லை.. அதற்காகத்தான் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவனை பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறாள்..
இத்தனை நாள் அவன் அவள் பின்னால் வராததும் முகம் கொடுத்து அவளிடம் பேசாததும் ஸ்ரேயாவுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவள் அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் அவனும் கண்டுகொள்ளாமல் இருக்கவும் அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது..
ஏனெனில் ஆரம்பத்தில் அவள் மீது இருந்த அவனது மயக்கம் இப்போது எல்லாம் இல்லையோ என்ற கலக்கம் அவளுக்கு நிறையவே உண்டு..
கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.. அவள் அவனுடன் பேசி அவள் அழைத்தாலும் போனை எடுப்பதில்லை.. என்ன ஆச்சு என தெரியாமல் விழி பிதுங்கி அவள் அவனை காண வீட்டுக்கே வந்து விட்டாள்..
ஆனால் அந்த வீட்டில் இன்னும் சில நேரத்தில் அவளுக்கு மிக பெரிய அதிர்ச்சி அவளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது..
ஆம்..அவளை பொருத்தவரை ஸ்ரேயா அவனுடைய காதலி..அப்படி தான் அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. அவனுடைய குணம் இது தான் நினைத்து கொண்டு இருக்கிறாள்.. கண்டிப்பாக அவளை திருமணம் செய்து கொள்வான் என்றும் அவளுக்கு என்ன குறைச்சல் இருக்கிறது என்று இறுமாப்பும் அவளுக்கு நிறையவே இருந்தது..
அவனுக்காக அவளுடைய கேரியரை விட்டு கொடுத்த அவனுடைய காதலி.. கிட்டத்தட்ட ஆறு வருட காதல்.. காதல் என்ற வார்த்தைக்கு எல்லாம் அவனுக்கு அர்த்தம் தெரியாது என்று கூட அவள் இத்தனை நாள் அவனுடன் தன் படுக்கையை பகிர்ந்தும் அவள் அவனை பற்றி துளியும் புரிந்து கொண்டதில்லை..
ஏனெனில் இதே விஷயத்தை அவனிடம் எடுத்துக் கேட்டால் அவன் அவளை ஒரு பேஷன் ஷோவில் கண்டான்.. பார்த்ததும் பிடித்தது.. அவளிடம் போய் பேசினான்.. அவளுடன் இருந்தான்.. அவனுக்கு தேவையான நேரத்திலும் அவளுக்கு தேவையான நேரத்திலும் இருவரும் காமம் என்ற உணர்வை இருவரும் சமமாக பகிர்ந்து கொண்டார்கள்.
அதை அவள் காதல் என எண்ணி அடுத்த கட்டத்துக்கு செல்ல முடிவு எடுக்க ஆனால் அவனோ இதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் சுற்றி கொண்டு இருக்கிறான்.. அவள் மேலும் இதை உடைத்து கேட்டால் அவனுடைய பதில் வேறு விதமாக இருக்கும் என்பது அவளுக்கு இந்நேரம் தெரியாது..
இதை பற்றி ஒரு முடிவெடுத்தே ஆக வேண்டும் என அவள் நினைத்து தான் இங்கு வந்து இருக்கிறாள்...
அதனால் அவன் இல்லை என்றால் என்ன அவனுடைய அம்மா தான் இருக்கிறாரே என எண்ணி, "ஆன்டி நான் நிறைய தடவை எனக்கு டைம் கிடைக்கும் போதெல்லாம் உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன்.. கிட்டத்தட்ட இந்த ஒரு மாசமா நிறைய தடவை வந்து இருக்கேன்.. உங்களுக்கு நல்லா தெரியும்.. நான் விது பிரதாப் ஃபிரண்ட் மட்டும் கிடையாது.. லவ்வர் நான் லவ் பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கு.. ஆனால் அவர் அதை பத்தி பேசக்கூட மாட்டேங்குறார் ஆன்ட்டி.. எனக்கு இப்போ சினிமால நிறைய சான்ஸ் கிடைச்சு இருக்கு.. பட் எனக்கு விது தான் முக்கியம் அப்டின்னு நான் காத்துகிட்டு இருக்கேன்" என அவள் உள்ளதை உள்ளபடி கூறினாள்..
இதையெல்லாம் அலுவலக அறையில் இருந்தாலும் ராஜ்மோகன் கேட்டுக் கொண்டிருக்க, அவருக்கு தன் மகன் மீது கோபம் வந்தது.. இன்னும் தன் மகன் எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறானோ என்னவோ என நினைத்தார்..
அதை கேட்ட விஷயம் அறியாத ரேவதி, "அப்படியா டா உன்ன போய் எதுக்கு அவன் காக்க வச்சிட்டு இருக்கான்.. என்கிட்ட இது முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல.. நானே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்.. சினிமா எல்லாம் வேண்டாம் டா. நம்ம குடும்பத்துக்கு ஒரு கவுரவம் இருக்கு அதனால சினிமாவெல்லாம் நடிக்க வேண்டாம்..
நானும் இப்படி ஒரு நல்ல செய்தி என் மகனுக்கு நடக்காதா என்று காத்துகிட்டு இருக்கேன்.. இந்த விஷயம் மட்டும் கொஞ்சம் முன்னாடி தெரிந்திருந்தால் நானே கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்.. இப்போ ஒன்னும் கெட்டு போகல.. அவன் வரட்டும் இதை பேசி முடிச்சு இப்பவே கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறேன்..
அப்பொழுது தான் அவனும் ஒழுக்கமா இருப்பான்.. நீ வரணும்.. ஒரு பொண்ணு வாழ்க்கை குள்ள வந்தா தான் பசங்க அடங்கி இருப்பாங்க" என்று விவரம் தெரியாத அவனுடைய அம்மா ரேவதி அவளுக்கு நல்ல நேர்மறையான கருத்துக்களை கூறிக் கொண்டிருக்க அதை கேட்டதும் அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது..
அவனுடைய அம்மா என்னவோ உள்ளதை உள்ளபடி கூறிவிட்டார்..ஆனால் அவருடைய மகன் வரும் போது தன் மனைவி ஐந்து வயதான மகன் என தனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்பதையே யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கும் அவருடைய அன்பு மகன் அந்த குடும்பத்தை அவனின் குடும்பத்தார் முன்னிலையில் காட்டப் போகிறான் என்றும் அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவன் குடும்பமே திணறப்போகிறது என்பதே அறியாத அவர் ஸ்ரேயாவின் அழகில் மயங்கி இவளை போய் கல்யாணம் பண்ணாம இருக்கான் பாரு கிறுக்கன் என்று மகனை திட்டிக் கொண்டிருந்தார் அந்த அப்பாவி அம்மா..
