Share:
Notifications
Clear all

மந்தாரம் 6.2

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மந்தாரம் : 6.2

உண்மையில் வெற்றியோடு வாழ வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது.. ஆனால் வெற்றி அப்படி ஒரு வார்த்தையை கேட்டதும் அப்படி ஆனால் என்ன தவறாகிவிடும் எனக்கு தான் வாழ்க்கை முடிந்து விட்டதே என்ற எண்ணம் தேவிகாவுக்கு எழாமல் எல்லாம் இல்லை அதை குத்துவது போல அவன் பேசுவதுதான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

அதனால் அவளைப் பார்த்து, "நீ என்ன கேட்ட உன்னை எதுக்கு கூட்டிட்டு போறேன் அப்படிதானே?? நான் தான் சொல்லிட்டேனே கூட வாழ கிடையாது. எனக்கு ஒரு வேலை ஆகணும்.. அந்த வேலைக்கு நீங்க வந்தே ஆகணும்.. அதுக்கு தான் உன்னையும் குழந்தையும் அழைச்சிட்டு போக வந்து இருக்கேன்" என்று அவன் கூறினான்..

அதை கேட்டு, "ச்சீ நீங்க எல்லாம் ஒரு மனுஷனா?? ஒருவேளை நான் வர முடியாதுன்னு சொன்னா?? உங்களால என்ன பண்ண முடியும்??" என்று வெகுண்டு கேட்டாள் தேவிகா..

"சொல்லித்தான் பாரு அதுக்கப்புறம் நடக்கிறது நான் உனக்கு கண் முன்னாடி காட்டுறேன்" என்று சிகரெட்டின் பப்பை இழுத்துக் கொண்டே விது கூறினான்..

வெற்றிக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது இவளோடு வாழ அவனுக்கு விருப்பமில்லை என்பது மட்டும் புரிந்தது.. அப்படி இருக்க அவன் தேவிகா என்ன சொல்ல போகிறாளோ என்பது போல பார்த்தான்..

"என்னால உங்க கூட வர முடியாது.. இவ்வளவு தூரம் கேவலமா நீங்க பேசுனதுக்கு பிறகு நான் ஏன் வரணும்?? கூட இருக்கும்போது நீங்க என்னை மனுஷியா மதிச்சது கிடையாது.. நான் ஒதுங்கி அஞ்சு வருஷமா தனியா வாழ்ந்துகிட்டு இருக்கேன்.. இதோ இந்த குழந்தையோட பெயர் கூட உங்களுக்கு என்னனு தெரியாது.. அப்படி இருக்கும்போது நான் எதை நம்பி உங்க பின்னாடி வரது.. வரமாட்டேன்.. நான் வெற்றி கூட தான் இருப்பேன்.. இதை சொல்ல எனக்கு எந்த கவலையும் இல்லை.. ஏன்னா இதெல்லாம் உங்களுக்கு தப்பா தெரியாது.. அப்படிப்பட்டவங்க தான் நீங்க தயவு செஞ்சு இந்த இடத்தை விட்டு போயிடுங்க.. நான் வரமாட்டேன்.."என்று அவள் கூறியதும் வெற்றி முகம் இலேசாக தெளிந்தது.. அவளுக்கு நம்முடன் இருப்பது தான் பிடித்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டான்..
அவள் அந்த வார்த்தைகளை கூறிய அடுத்த நொடி அவளின் கைகளைப் பிடித்த விது பிரதாப் பொறுமை காற்றில் பறந்து, அவளை ஒரே இழுவையில் இழுக்க வெற்றியின் கண் முன் தேவிகா விதுவின் கைகளில் அகப்பட்டு இருந்தாள்..

அதன் பிறகு அவளின் இடையை அழுத்தமாக பிடித்தான்.. அப்படியே அவன் மீது சரிந்தவள் அவனின் உடல் சூட்டை அவளது உடலும் உணர்ந்து கொண்டு இருந்தது..

குழந்தையை பிடித்து கொண்டு இருந்த வெற்றி, "ஹே என்ன பண்றீங்க?? அவளை விடுங்க.. இல்லை அவ்வளவு தான் சொல்லிட்டேன்" என்று கோபமாக கூறினான்..

அதற்குள் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பின் அவனுடைய நெருக்கத்தையும் அவனின் வாசத்தையும் முகர்ந்தவளுக்கு ஏதேதோ எண்ணங்கள் அலையாக மோத அப்படியே அவள் முகம் சிவக்கவும், அதை பார்த்து நக்கலாக, "இதுதாண்டி நீ.. இவ்வளவுதான் நீ.. ஒரே ஒரு உரசலில் உன்னுடைய மொத்த வைராக்கியமும் உடைஞ்சு போச்சு.. இதுக்கு தேவையில்லாமல் டிராமா பண்ணிட்டு இருக்க" என்று கூறிய விது, "மிஸ்டர் வெற்றி.. ஸ்டில் இவ என்னோட பொண்டாட்டி தான்.. இவளை கையை பிடித்து இழுக்கவும், கட்டிப்பிடிக்கவும், முத்தம் கொடுக்கவும், இன்னும் என்ன வேணாலும் பண்ணவும் எனக்கு உரிமை இருக்கு.. அதைக் கேட்க உங்களுக்கு தான் உரிமை இல்லை.. அதனால நீங்க உங்க எல்லை எதுவோ அதே இடத்தில் இருந்தால் உங்களுக்கான மரியாதை என்னிடம் இருந்து கிடைக்கும்.." என்று சற்றே அழுத்தமாக கூறவும் வெற்றி அப்படியே தன்னிலை கருதி அமைதியாக நின்று கொண்டான்..

அவனுடைய பேச்சும், அவனுடைய நெருக்கமும் அவளுக்கு மூச்சு முட்டுவது போல இருக்க, அவள் வாயால் அவனை திட்டுவது போல பேசினாலும் அவளின் அகத்தில் நிறைந்திருக்கும் விது பிரதாப் என்னும் அரக்கனை அவளால் அவ்வளவு எளிதாக மறக்க இயலவில்லை.. இதோ அவன் சொன்னது போல தானே ஆயிற்று..

அவனின் தொடுகைக்கு நெளியும் அவளின் உடலும், உணர்ச்சி பிரவாகம் எடுக்கும் அவளுடைய மனமும், அவனின் நெருக்கத்தில் மேலும் அவரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க துடிக்கும் அவளின் நாசிக்கும், என்ன பதில் சொல்வது இவ்வளவுதானா அவள்?? இதை தெரிந்து தானே அவன் விளையாடுகிறான்..

அதனால் தன்னை எண்ணியே அவளின் கண்ணில் கண்ணீர் வர, அவனுடைய பேச்சில் அவமானம் பிடுங்கி தின்றது.. "என்னை விடுங்க.. உங்களுக்கெல்லாம் அறிவில்ல.. ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கணும் அப்படின்னு தெரியலையா?? என்னை விடுங்க.. நான் வரமாட்டேன்" என்று தேவிகா கத்தினாள்..

அவன் அவள் என்ன கத்தினாலும் அவளை விடாமல், அவளை அழுத்தமாக பிடித்து, அவனின் அடுத்த கை அவளின் இடையில் அழுத்தம் கொடுத்து, "என்னடி சொன்ன வரமாட்டியா??" என அழுத்தமாக கேட்டான்..

அவளோ, "என்னை விடுங்க.. மாட்டேன் இவ்வளவு கொச்சையான ஒரு ஆள் கூட நான் வரமாட்டேன்" என்று அவள் கூற,

அவனோ, " அப்போ நீ வரல அவ்வளவு தானே.. இனி என்ன நடக்கப்போகுது அப்படிங்கறதையும் நீ கேட்டுக்கோ" என்றவன், "நீ வரல அப்படின்னா இந்த இடத்தில் நான் கிஸ் பண்ணுவேன்.. அதை ஊரே வேடிக்கை பார்க்கும்.. இதோ உன்னை காதலிக்கிறவன் அவனும் பார்ப்பான்.. ஏற்கனவே நொந்து போய் இருக்கிறவன் இந்த காட்சியை பார்த்தா எப்படி இருக்கும்னு நீ யோசிச்சு பாரு?? நான் ஒன்னும் உன்னை தொல்லை பண்ண கூப்பிட கிடையாது.. கூட வாழனும்னு சொல்ல கிடையாது.. எனக்கு சில வேலைகள் நடக்க நீ வந்தாகணும்.. இதெல்லாம் வெறும் சாம்பிள் தான்.. என்னை பத்தி உனக்கு தெரியும் இல்ல.. அடுத்ததா இதோ இவனையும் இவனுடைய குடும்பத்தையும் உயிரோடு விட்டு வச்சிருக்க மாட்டேன்.. எல்லாம் விசாரிச்சிட்டேன் ஒரே ஒரு வயசான அம்மா மட்டும்தான் இருக்காங்களாமே.. உன்னால இரண்டு உயிர் அநியாயமா போயிடும் நான் கண்ணசைச்சா போதும் இந்த மொத்த இடத்தையும் அவங்க தரமட்டமாக்கிடுவாங்க.. இனி நீயே யோசி" என்று அவளை அழுத்தமாக தன்னோடு சேர்த்து பிடித்து அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் அவள் காதுக்குள் விஷயத்தை கூறினான்..

அதைக் கேட்டவள் மேலும் அதிர்ந்து போனாள்..தான் வரவில்லை என்றால் இவன் இவர்களை ஏதாவது செய்து விடுவான் என நினைத்தவள் அடுத்த நொடியே தன்னால் இவர்களுக்கு ஏதாவது ஆகி விடும் என்று பயந்து, "நான் வரேன்" என்று கூறி விட்டாள்..

அதை கேட்டவன், "தட்ஸ் குட் பிள்ளையை வாங்கிட்டு வண்டியில் ஏறு" என்று பேச்சு முடிந்தது என்பது போல காரில் ஏறி அமர்ந்து விட்டான் விது பிரதாப்.. இனி அவள் வந்து விடுவாள் என அவனுக்கு நன்றாக தெரியும்..

அவன் சொன்னது போல அடுத்த ஒரு மணி நேரத்தில், அடிப்பட்ட பார்வையில் நிற்கும் வெற்றியை பார்க்க முடியாமலும், நடந்த உண்மையை தெரிந்து கொண்ட மாரியம்மாள் கதறும் காட்சியை பார்க்க முடியாமலும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் அவளை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டு இருந்தாலும், அவள் கனத்த இதயத்தோடு பிள்ளையை தூக்கி கொண்டு அவனுடைய காரில் ஏறினாள்..

அவள் காரில் ஏறியவுடன் வெற்றி, "உங்களுக்காக காத்துட்டு இருப்பேன் வந்துடுவீங்க தானே ரூபன் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்னு தெரியல எல்லா விஷயமும் முடிச்சுட்டு என்கிட்ட வந்துடுங்க நான் உங்களை நல்லா பார்த்துப்பேன். இனி சந்தோஷமா நாம இருக்கலாம் கவலைப்படாமல் போயிட்டு வாங்க எதுவா இருந்தாலும் என்னை கூப்பிடுங்கள் நான் வரேன்" என்று கூறினான் வெற்றி..

அங்கு ஏக்கத்தோடு நிற்கும் வெற்றியை பார்த்து, "நான் திரும்ப வருவேன்.. உங்களுக்கு நான் வந்ததிலிருந்து தொல்லை மட்டும்தான் கொடுத்து இருக்கேன்.. நடந்ததுக்கு எல்லாம் என்னை மன்னிச்சிடுங்க" என்று கூற,

அதைக் கேட்ட மாரியம்மாள், "போய் தொலைடி.. இனி என் வாசப்படி பக்கம் மிதித்து விடாதே.. நீ இல்லைனா என் மகனுக்கு வேறொரு வாழ்க்கை கிடைக்காதா?? அவன் ராஜா டி நான் ஒரு நல்ல பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன்..

எவ்வளவு பெரிய பொய்யை இரண்டு பேரும் இத்தனை வருஷமா மறைச்சு வச்சிருக்கீங்க..ச்சீ நீங்க எல்லாம் மனுஷங்களா??

நானும் என்னென்னமோ ஆசைப்பட்டு இருந்தேனே?? அது எல்லாம் பொய்யா?? என் மகன் இவ்வளவு நாளும் தனிமரமா தான் வாழ்ந்துட்டு இருந்தானா?? என் மகனை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கே.. ஐயோ பாவி இதை முன்னாடியே சொல்லி இருந்தா நான் வேற ஏதாவது பண்ணி இருப்பேனே..

ஏண்டா சொல்லல.. பேரப்பிள்ளைன்னு நினைச்சுட்டு இருந்த குழந்தையை கொண்டு போறாங்களே.. ஐயோ கடவுளே.. குழந்தை இல்லாமல் எப்படி இருப்பேன்" என்று அவர் கதறினார்..

அதைக் கேட்ட தேவிகாவுக்கு கண்ணில் கண்ணீர் வந்து ததும்பியது.. அந்த மக்கள் அனைவரும் அவளை கேவலமான பிறவி போல பார்ப்பதாக அவளுக்கு தோன்றியது.. ஆனால் இவர்களின் உயிருக்காக தான் அவள் செல்கிறாள் என்ற விஷயத்தை அவளோடு புதைத்து இது எல்லாம் தனக்கு தேவைதான் இந்த வார்த்தைகளுக்கு எல்லாம் அவள் அருகதை பட்டவள் தான் என்ற கருதி அவள் குழந்தையோடு சென்றாள்..

என்னதான் ஏக்கத்தோடு இருக்கும், வெற்றியிடம் அவள் திரும்ப வருவேன் என்று கூறியிருந்தாலும் இனி திரும்பி வரவே மாட்டாள் என்பது அந்த நொடி அவளுக்கு தெரியாது...

இத்தனை பேரின் மன வருத்தம் கண்ணீரெல்லாம் தனக்கு ஒரு பொருட்டல்ல.. தன்னுடைய தேவை அது நடந்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்ட விது பிரதாப் அவளை அழைத்துக் கொண்டு தன் அடுத்த கட்ட வேலைகளுக்கு பயணம் ஆனான்...

அவனுக்கும் இப்பொழுது இவளை அழைத்து தன் காரியம் முடிந்ததும் விட்டு விடுவேன் என்ற எண்ணத்தில் தான் அவன் அழைத்துச் செல்கிறான் ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று, அவன் கண்டிப்பாக அவளையும் சரி இந்த குழந்தையையும் சரி இனி விடவே மாட்டான் என்பது அவனுக்கும் அந்த நொடி தெரியாது...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top