Share:
Notifications
Clear all

மந்தாரம் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மந்தாரம் : 5

"அப்பா.. அப்பா.." என்று வெற்றியை பார்த்ததும் ரூபன் தாவ, வெற்றி வேகமாக வந்து தேவிகா கையில் இருக்கும் குழந்தையை வாங்கியவன், குழந்தை கன்னத்தில் முத்தம் கொடுத்து, "என்ன இங்க நின்னுட்டு இருக்கீங்க?? ரெண்டு பேரும் யாரு இவரு??" என்று தேவிகாவை பார்த்து புரியாமல் கேட்டான்..

அதற்கு தேவிகா என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்.. ஆம் அவளுக்கு இவன் யாரென்று வெற்றியிடம் சொல்ல தயக்கம்..

அப்படி இருக்க எதிரே நிற்கும் ஆட்டோ டிரைவரை பார்த்து அந்த குழந்தை அப்பா என்று கூறியதை பெரிதாக விரும்பாத விதுவுக்கு அவனை கண்டதும் ஏனோ பிடிக்கவில்லை..

அதுவும் அந்த குழந்தை அவனிடம் ஒட்டி கொள்வதை ஏனோ அவனால் சகித்து கொள்ள முடியவில்லை.. அந்த நொடி அவனுக்கு இது அவன் பெற்ற குழந்தை தானே என்ற எண்ணம் என்னவோ வந்து போனது..மேலும் இவன் இவர்களுக்கு யார் என்பதை தெரிந்து கொள்ளும் முனைப்பும் விதுவுக்கு இருந்தது..

அதனால், "நீ யாரு??" என்று விது வேண்டுமென்றே வம்பு இழுக்க நக்கலாக கேட்டான்..

அதைக் கேட்டதும் வெற்றி, "இது என்னுடைய பையன்.. தேவிகா என்னுடைய மனைவி.. நீங்க யாரு??" என்று வெற்றியும் எப்போதும் எல்லோரிடமும் சொல்வது போல கூறினான்..

அதை கேட்டதும் விது, "இது தான் உன்னுடைய புது வாழ்க்கையா??" என அவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்து, "நான் யாரா?? குட் ஜோக்.. நான் யாருன்னு உன்னுடைய பொண்டாட்டி அப்படின்னு எனக்கே இவளை அறிமுகம் செஞ்சியே இவள் கிட்ட கேளு.. அவள் பதில் சொல்லுவா?? அவளுக்கு நான் என்ன வேணும்னு அவ வாயிலேயே பதில் சொல்லுவா.. அதை கேட்டுட்டு நீ யார் அப்படிங்கிற விஷயத்தை அதுக்கு பிறகு சொல்லு" என்று கூறினான்..

அவனின் நக்கல் பேச்சு துளியும் வெற்றிக்கு பிடிக்கவில்லை.. அவனின் ஆணவத்தை கண்ட வெற்றிக்கு ஓங்கி அடிக்கலாமா என்று கூட இருந்தது..பழைய வெற்றி என்றால் இதை அப்போதே செய்து இருப்பான்..

ஆனால் இப்போது உள்ள வெற்றி அப்படி அல்ல இருந்தாலும் இது எல்லாம் தேவிகாவுக்கு பிடிக்காது என கருதி அமைதியை கடைபிடித்து அமைதி காத்தான்.. ஏனெனில் தேவிகாவை அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.. அவள் வருந்துவதை வெற்றி விரும்ப மாட்டான்..

அப்படி இருக்க தேவிகாவின் பதட்டம் அவனுக்கு ஏதோ இங்கு தவறாக இருப்பது போல தோன்ற, "யார் இவரு.. உன் கிட்ட தான் கேட்கிறேன் தேவி சொல்லு" என கேட்டான்..

அவள் என்ன என்று சொல்லுவாள்.. ஏதுவென்று சொல்லுவாள்.. அவள் இவன் யார் என வெற்றியிடம் கூறினால் வெற்றி பலமாக அடிபட்டு போவானே..அதை காணும் சக்தி தனக்கு இல்லையே என எண்ணினாள்.. அதனால் அவளுக்கு உடனே முனுக்கென்று கண்ணீர் வந்தது..

இதோ அவள் கழுத்தில் தாலி கட்டிய கணவன் என்ற போர்வையில் இன்று திமிராக வந்து நிற்கும் விது பிரதாப் அவளை ஒரு நாள் அவன் வசிக்கும் மாளிகையில் போன்ற வீட்டை விட்டு துரத்தி விடவும் அதுவும் அவள் கர்ப்பிணி என்று தெரிந்தும் அவளை துரத்தி விட்டு இருந்தான்..

அவளுக்கு எங்கு செல்வது என்று தெரியாமல், நிராதரவாக கர்ப்பத்தோடு வந்த அவளை நடு இரவில் கொட்டும் மழையில் பெண் சதை தேடும் கயவர்களிடம் இருந்து, அந்த சமயத்தில் வெற்றி ரவுடியை ஆனாலும் பெண்கள் ஆபத்தில் இருக்கும் பொழுது அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு அவன் கயவன் அல்ல.

அப்படி இருக்க, அவளை அவர்களிடம் இருந்து காப்பாற்றி போக இடம் தெரியாமல், எதற்கு கேட்டாலும் அழுகையோடு நின்ற தேவிகாவை ஆறுதல் செய்து அவள் கழுத்தில் தாலியை கண்டவன் திருமணம் ஆனவள் என்பதை உறுதி செய்து கொண்டு அவளின் பயம் போகும் வரை தன் வீட்டில் இருக்கட்டும் என எண்ணி அழைத்து வந்தான்.. அவளும் இவனை தன்னை காக்க வந்த தெய்வம் என்பது போல அவனை நம்பி அவனோடு சென்றாள்..

அடுத்த நாள் வெற்றி, அவளிடம் அவள் யார் என்பதை கேட்க அவளோ அழுது கொண்டே, "என் பெயர் தேவிகா.. நான் கர்ப்பமா இருக்கேன்.. என்னை யாருக்கும் வேண்டாம்.. நான் ஒரு அனாதை .. என் புருஷனுக்கும் என்னை வேண்டாம்.. இப்போ நானும் என் வயித்தில் இருக்கிற குழந்தை மட்டும் தான் இருக்கோம்.. எனக்கு இந்த குழந்தை வேணும்.. ஏதாவது வேலை வாங்கி கொடுங்க.. எனக்கு எங்க போகணும்னு தெரியல.. என்னை காப்பாத்துங்க" என அவள் அழுது புலம்பினாள்..

அதை கேட்ட அவனுக்கு மிகவும் பாவமாக தோன்றியது.. அன்றிலிருந்து அவன் வீட்டில் தங்க அவன் இடம் கொடுத்தான்..அது சரியா தவறா என்பதை எல்லாம் வெற்றி யோசிக்கவில்லை.. அவள் அவனோடு இருக்கும் வரை தேவிகா பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் அந்த நேரத்தில் அவனுடைய எண்ணமாக இருந்தது..

திருமணமாகாதவன் ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு குடும்பம் நடத்துகிறான் என் அக்கம்பக்கத்தினர் வீட்டு முதலாளியிடம் கூறி விட இவன் என்ன செய்வது என்று தெரியாமல் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தான்..

ஆனால் அவனாக எதுவும் அந்த புதிய வீட்டு முதலாளிடம் இவளை பற்றி கூறவில்லை என்றாலும் அவராகவே இவர்களை கணவன், மனைவி என கணக்காக்கிக் கொள்ள அந்த இடத்தில் உள்ளவர்கள் எல்லாரும் இவர்களை கணவன், மனைவி என்று நினைத்தனர்.. அதை இருவருமே மாற்ற முயற்சிக்கவில்லை... வீடு கிடைப்பதே அரிது என எண்ணி இவர்களும் மற்றவர்களின் எண்ணத்தை மாற்ற முயற்சிக்கவில்லை..

அவனுடைய அம்மா ஊரில் இருக்கும் அம்மா இவன் சண்டித்தனம் செய்து கொண்டு ஊரைச் சுற்றி திரிகிறான் என இவன் மீது கோபத்தில் இருந்த அவனுடைய அம்மா திடீரென உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்ற செய்தி கேட்டதும் அவரை அழைத்து இவன் அவனுடன் வைத்துக் கொள்ள, அவரும் இவனைப் பார்த்து இவளையும் பார்த்து, "ஏன்டா கல்யாணமாகி மாசமா இருக்கா என்கிட்ட உனக்கு கல்யாணம் ஆச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்கு தோணலையா?? நான்தான் நீ வேண்டாத சவகாசத்தோடு சேர்ந்து தப்பு பண்றியே அப்படின்னு உன்னை வேண்டாம்ன்னு உன்னை ஒதுக்கி வச்சேன்..

ஆனால் நீ இதை சொல்லணும்னு தோணவே இல்லையா?? இப்பதான் அதுவும் நானா வந்ததுக்கப்புறம் தான் தெரியுது.. இதுதான் உன்னுடைய பொண்டாட்டியா??" என்று அவர் கேட்கவும், அதற்கும் அவன் அவளை ஒரு நொடி பார்த்தானே ஒழிய வேறெந்த பதிலும் சொல்லவில்லை.. அவளும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவும் இல்லை..

அதில் தேவிகாவின் சுயநலமும் அடங்கி இருந்தது.. ஏனெனில் அவளுக்கு வேறு போக்கிடம் இல்லை.. அதனால் அவளும் அமைதியாக இவர்களின் தயவில் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைதியாக இருந்தாள்..

அப்படி இருக்க அவளும் எதுவும் பேசவில்லை.. மாரியம்மாவும் எப்படியோ மகன் ரவுடி தனத்தை எல்லாம் கைவிட்டு திருந்தி விட்டானே அதுவே போதும் என்று கருதி அவரும் மகனுக்கு திருமணம் ஆன விஷயத்தை தனக்கு சொல்லவில்லையே என்றதை மறந்து தேவிகா தன்னுடைய மருமகள் என எண்ணி அவளுக்கு வேண்டிய விஷயங்களை எல்லாம் செய்து கொடுக்க தொடங்கினார்..

அவனுக்கும் அது ஆறுதலாக இருந்தது ஏனெனில் அவளுக்கு இந்த நேரத்தில் என்ன மாதிரியான உணவு முதல் எப்படி அவளை பார்த்து கொள்ள வேண்டும் என்பது எல்லாம் அவனுக்கும் தெரியாமல் தான் இருந்தது..

அவனுடைய அம்மா வரவும் அவனுக்கும் மகிழ்ச்சி தான்.. இவர்களை கவனிக்க வேண்டும் என்று கருதியே அவன் பழகி இருந்த தவறான பழக்கத்தில் இருந்து முழுவதுமாகவே வெளியே வந்து விட்டான்..

அப்படி இருக்க, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இவர்களுக்காகத்தான் வெற்றி தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று கூற வேண்டும்..

அவள் திருமணம் ஆனவள் என்பதை அவள் ஏற்கனவே அவனிடம் கூறியிருந்தாள்.. அப்படி இருந்தாலும் கடந்த வாரம் குழந்தையை பள்ளிக்கு விட வேண்டும் என்று கூறும் பொழுது வெற்றி அவளிடம் நீண்ட நாட்களாக தன் மனதில் உள்ள விஷயத்தை தேவிகாவிடம் கூறியிருந்தான்..

அது என்னவென்றால், "இன்னும் எத்தனை நாளைக்கு நீங்க இப்படியே இருக்க போறீங்க?? எனக்கும் ரூபனை ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் பெறாத மகனாகவே அவனை நினைத்துவிட்டேன்.. இந்த வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இப்பத்தான் உங்களால நான் புது மனுஷனா வாழ துவங்கியிருக்கேன்..

நாம ஏன் நிஜமான கணவன் மனைவியாக இருக்க கூடாது??.. இதுவரை உங்க கடந்த வாழ்க்கையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. அது இனியும் தெரியவும் வேண்டாம்..

இனி உங்க கடந்த காலம் உங்களை தேடி வராது அப்படிங்கற நம்பிக்கை உங்களுக்கு இருந்தாலோ நான் உங்களை நல்லா பார்த்துப்பேன் அப்படிங்கற நம்பிக்கை உங்களுக்கு இருந்தா சொல்லுங்க.. புதுசா வாழ்க்கையை துவங்கலாம்..

ஏற்கனவே யார்கிட்டயும் சொல்லலைனாலும் நாம யார் அப்படிங்கற விஷயம் நமக்கு தெரியும்..

வெளியே எல்லாரும் நம்ம ரெண்டு பேரை கணவன் மனைவி அப்படின்னு நினைச்சிட்டு இருக்காங்க.. அதையே உண்மையாக்கினால் என்ன?? நான் சும்மா என்னோட மனசில் பட்டதை கேட்டேன்.. உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா இதை இப்படியே விட்டு விடலாம்..

எனக்கு எந்த எண்ணமும் இல்லை என்னுடைய ஆசையே சொன்னேன் அவ்வளவுதான்.. அதுக்காக நீங்க வீட்டை விட்டு போகணும் எல்லாம் கிடையாது.. என்னால ரூபன் இல்லாமல் இருக்க முடியாது.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க" என்று தன் மனதில் உள்ளதை அவ்வளவு ஆசையாக அவன் கூறினான்..

அவன் கூறியதை அவளால் தவறாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.. ஏனெனில் அவளுடைய வாழ்க்கையிலேயே முதன்முதலாக ஒருவன் தேவிகாவை பிடித்திருக்கிறது என்ற வார்த்தையை கூறுகிறான் என்றால் அது வெற்றி மட்டும் தான்.. மேலும் அவள் தான் இந்த ஐந்து ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறாளே. வெற்றியின் மாற்றத்தை வெற்றி இன்று வரை ஒரு சிறு துளி பார்வை கூட அவள் மீது தவறாக அவன் பார்த்தது இல்லை..

மேலும் அவளுடைய கணவனாக இருந்த விது பிரதாப் மீது அவளுக்கும் வெறுப்பு மட்டும்தான் அந்த நொடி வந்தது..

இனி அவன் வரப்போவதும் இல்லை என்பது அவளுக்கு ஊர்ஜிதம் ஆகிவிட்டது..

வீட்டை விட்டு துரத்தியவன் எப்படி வருவான் வரமாட்டானே அப்படி இருக்க அவளும் அவனை நோகடிக்க மனம் வராமல், "யோசிச்சு பதில் சொல்றேன்" என்று மட்டும் அவனுடைய நம்பிக்கையை உடைக்காமல் இருக்க அந்த வார்த்தையை கூறியிருந்தாள்..

ஆனால் இத்தனை காலம் இல்லாமல் எந்த நேரத்தில் இந்த பேச்சை வெற்றி எடுத்தானோ என்னவோ அந்த நேரம் பார்த்து அவளுடைய தாலியின் கனம் கூடியது..

ஒருவேளை அவள் எடுத்த முடிவு தவறோ என்பதை அது உணர்த்துகிறதோ என அவள் யோசிக்கும் பொழுது தான் விது அவளைத் தேடி அவனுடைய வேலை ஆட்களை அனுப்பி இருந்தான்..

இத்தனை நாட்கள் இல்லாமல் மீண்டும் அவன் வரவும் அவள் முழுவதுமாகவே குழம்பிப் போய்விட்டாள்..

அந்த குழப்பத்தில் இருக்கும் தருணத்தில் தான் இப்பொழுது மீண்டும் கண் முன்னே அவன் நிற்கிறான்.. தன்னை இத்தனை காலம் பாதுகாத்து அரவணைத்து தனக்கு வேண்டியதை எல்லாம் செய்து தனக்கு மட்டும் இன்றி தன் குழந்தைக்கு அவனால் முயன்றளவு சிறப்பான ஒரு வாழ்க்கையை கொடுத்துக் கொண்டிருக்கும் வெற்றியின் முகத்தைப் பார்த்து எப்படி அவள் கூறுவாள்?? நீ ஆசைப்பட்டது இனி நடக்காது என்று எப்படி கூறுவாள்..

அதுதான் வரவே மாட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்த அவள் வாழ்க்கையில் மீண்டும் வந்து தன் தேவை முடியும் வரை நீ என்னுடன் இருக்க வேண்டும் என அவன் கூறி விட்டானே.. இனி இவன் நினைத்ததை நடத்திக் காட்டாமல் அவளை விட மாட்டானே??

வெற்றி ஆசையாக கேட்டவன் அடிபட்டு போவானே?? அதைப் பார்க்க அவளால் முடியாதே.. மீண்டும் கண்ணீர் வெற்றியின் கேள்வியில் அவளுக்கு வந்தது..

திடீரென அவள் கண்ணில் கண்ணீர் வரவும் வெற்றி பதறி, "என்னாச்சு தேவி?? ஏதாவது பிரச்சனையா??" என விதுவை பார்த்துக்கொண்டே கேட்டான்..

ஆனால் இவனின் தவிப்பையும் அவளின் கண்ணீரையும் குழந்தையின் சந்தோஷத்தையும் பார்த்துக் கொண்டிருக்க விது பிரதாப்பால் முடியவில்லை..

அதனால் வெற்றியிடம், "ஹலோ மிஸ்டர்.. ஒரு நிமிஷம்" என்றவன், "கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலைன்னா அழுதுடுவியா??" என்றவன் மீண்டும் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து இழுத்துக்கொண்டு, 'நான் யாருன்னு நானே சொல்றேன்.. ஏன்னா அவ ரொம்ப வெட்கப்படுறா.. என் கூட படுக்கும்போது கூட இவள் இந்த அளவுக்கு வெட்கப்பட்டு நான் பார்த்ததில்லை.. அதனாலதான் அழுகை அவளுக்கு சீக்கிரம் வருது" என்றதும் வெற்றி அதிர என்ன பேச்சு இது என எண்ணி அவள் முகம் வெற்றியை நிமிர்ந்து கூட பார்க்க திராணியில்லாமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள்..

அவனைப் பார்த்து, "நான் யார் அப்படின்னா அவ கழுத்துல தாலி தொங்குதே அது கட்டுனது நான்தான்.. உன்னுடைய கையில் நீ தூக்கி கொஞ்சிட்டு இருக்கியே அந்த குழந்தையோட அப்பா.. அதாவது உண்மையான பெத்த அப்பன் நான் தான்" என்று வேண்டுமென்று நக்கலாக அதே சமயம் வெற்றியை வார்த்தைகளால் அடிக்க வேண்டும் என்று எண்ணியே வார்த்தைகளால் அடித்தான்..

அதைக் கேட்டதும் வெற்றி அதிர்ந்து தேவிகாவை பார்க்க தேவிகாவால் நிமிர்ந்து அவனை முகத்தை பார்க்கவே முடியவில்லை..

இவன் ஏன் மீண்டும் தன் வாழ்க்கையில் வந்தான் என்றுதான் அவளுக்கு தோன்றியது.. அதே நேரம் வெற்றியின் மனநிலையோ இந்த வாழ்க்கை தன்னை விட்டுப் போய் விடுமோ என்ற பதட்டம் அவனுக்குள் இருந்தது..

ஆனால் இந்த மாதிரி என்ன ஓட்டங்கள் எதுவும் இன்றி இவளை கண்டிப்பாக இந்த குழந்தையோடு அழைத்து செல்வேன் என்ற இறுமாப்போடு அவன் நின்று கொண்டிருந்தான் விது பிரதாப்..

இதில் முடிவு எடுக்கப் போவது வெற்றியா இல்லை தேவிகாவா இல்லை இவர்களின் தலையெழுத்தை எல்லாம் மாற்ற வந்திருக்கும் விது பிரதாப்பா????



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top