மந்தாரம் 4
மந்தாரம் : 4
அவள் உள்ளுக்குள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு இவன் என் வாழ்க்கையின் கடந்த காலம் என்பதை அவளுக்குள் பதிவு செய்து அவனை தைரியமாக எதிர் கொள்வது போல நடிக்கவாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பில் அவனை நோக்கி அவள் நடந்தாள்..
உள்ளுக்குள் திக்கென்று இருந்தாலும் இதோ இதோ அவனை நெருங்கி விட்டாள்.. இன்னும் நான்கு அடி கடந்தால் போதும் அவனை கடந்து விடலாம் என எண்ணி அவனுடைய முகத்தை கூட பார்க்காமல் அவள் குழந்தையை தூக்கி கொண்டு அவள் நடக்க, தன்னை பார்த்ததும் நாய் போல தன்னிடம் வருவாள் என எதிர்பார்த்து இருந்தவன் முகம் அவள் செய்கையில் அவமானத்தில் கருக்க, இவளை இப்படி எல்லாம் கையாள கூடாது.. இவளை கையாளும் விதமே வேறு விதமாக இருக்க வேண்டும் என கருதி, "ஏய்.. நில்லு டி" என்றான்..
அவனின் முகம் பார்க்காமல் அவனைக் கடந்து விட்டாலும் அவனின் ஏய் என்ற விழி அவளை அசைத்துப் பார்த்தது..
இருந்தும் மனதில் தைரியத்தை வரவழைத்து மேலும் ஒரு அடி எடுத்து வைக்க, "உன்னத்தான் எங்க போற என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போற?? நில்லு ஒரு நிமிஷம்.. அவ்வளவு திமிர் என்கிட்டயே வா?? நான் வர சொல்லியும் வர முடியாதுன்னு சொல்லி என்னை இங்கே வர வச்சிருக்க அவ்வளவு திமிர் அப்படித்தானே??" என்றான்..
அதைக் கேட்டதும் அவள் கால்கள் நின்றது.. அவனுடைய பேச்சும் அவளுக்கு படபடவென இருந்தது.. அவள் நின்றதும், "என்ன அஞ்சு வருஷத்துல திமிர் எல்லாம் வந்துடுச்சு போல?? சரி பண்ணிக்கலாம்.. அதுக்கு தானே நான் திரும்ப வந்து இருக்கேன்.. வா காரில் ஏறு" என்று அவன் கூறினான்..
அவன் வந்தான்.. திமிராக அவளை மிரட்டினான்.. அவளை காரில் ஏறு என்று அழைத்தால் அவள் செல்ல வேண்டுமா என்ற கடுப்பு அவளுக்கு லேசாக எட்டிப் பார்த்தது.
"எனக்கு யாருன்னு தெரியாதவங்க வண்டியில ஏறனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.. நான் எனக்கான வாழ்க்கையில சந்தோஷமா இருக்கேன்.. அந்த வாழ்க்கை எனக்கு போதும்.. நீங்க யாரு அப்படின்னு எனக்கு தெரியல??
இதை நான் ஏற்கனவே உங்க வேலைக்காரங்க கிட்ட சொல்லி அனுப்பிட்டேன்.. மறுபடியும் வந்து தொல்லை பண்றதுல எந்த அர்த்தம் இல்ல.. நான் இப்போ வேற ஒரு நல்ல வாழ்க்கையில சந்தோஷமா இருக்கேன்.. என்னை நிம்மதியா வாழ விடுங்க" என்று அவன் முகம் பார்க்காமல் அவள் நேராக ரோட்டை பார்த்து அவள் அந்த விஷயத்தை மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து மேலும் நகர, அதைக் கேட்டவன் அவளின் திமிரை இந்த நொடி அடக்கியே ஆக வேண்டும் என எண்ணி, "உன்னை நான் போனு சொல்ல கிடையாது நில்லு.." என்றான்.
மேலும் அவள் கால்கள் நின்றது.. உள்ளுக்குள் படபடப்பு நின்ற பாடில்லை.. அவன் முகத்தை பார்த்தால் அவள் சென்று விடுவாள் அதனால் தான் இன்னும் அவனுடைய முகம் பார்க்காமல் அவள் செல்ல ஆனால் அவளுடைய இந்த திமிர் பேச்சு அவனுடைய கோபத்தை மேலும் அதிகரித்தது என்று தான் கூற வேண்டும்..
அதனால் மேலும் அவளை பேச்சால் அடிக்க வேண்டும் என கருதி, "உன் கையில இருக்கிற குழந்தை என் மூலமா வந்தது தானே??" என தன் கோபத்தை தணிக்க தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து கேட்டான்..
அந்தக் கேள்வியை கேட்டதும் அவளுக்கு திக் என்று இருந்தது.. குழந்தையை வாங்கி செல்ல தான் வந்திருக்கிறானோ என நினைத்தாள்.. அப்படி ஏதாவது ஒன்று நடந்தால் சத்தியமாக அவள் அவளாக இருக்க மாட்டாள் குழந்தையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பது வேறு விஷயம்..
அந்த நொடி அவள் திரும்பி அவனை ஏறிட்டு சற்றே அழுத்தமாக, "இது என்னுடைய குழந்தை" என கூறவும் அவள் எந்த இடத்தில் அடித்தால் அவள் வீழ்வால் என அவனுக்கு தெரியாதா என்ன?? அவன் முகத்தை அவள் ஏறிட்டு பார்த்ததும்,
அவன் நக்கலாக, "உன்னோட குழந்தை தான்.. ஆனால் நான் இல்லாம வரல இல்ல.. எனக்கும் அதுல பார்ட்னர்ஷிப் இருக்கு தானே??" என்று நக்கலாக கேட்டான்..
அந்த கேள்வியில் அவள் முகம் ரத்தம் என சிவந்து அவன் முகத்தை பார்க்கவே அவளுக்கு பிடிக்காமல் போக, முகத்தை திருப்பிக் கொண்டவள் மேலும் தன்னுடைய அழுத்தத்தை கூட்டி, "என் குழந்தைக்கு நான் தான் அம்மானு அப்படின்னு எனக்கு நல்லா தெரியும்.. ஆனால் அப்பா நீங்க தானேன்னு நான் சொன்னா மட்டும் தான் உங்களால தெளிவா கண்டு பிடிக்க முடியும்??" என்றாள்..
அவளின் பதிலில் அவன் அதிர்ந்து அவன் அணிந்து இருந்த ரேபனை கழட்டி அவளை அழுத்தமாக பார்த்தான்.. ஏனெனில் அவனை அவள் ஒரே வார்த்தையில் அவமானப்படுத்தி அல்லவா இருக்கிறாள் அது எப்படி விது பிரதாப் ஒப்புக்கொள்வான்???
அவனுடைய பார்வையில் இருந்த வீரியத்தில் அவள் உள்ளுக்குள் நடுங்கினாலும் அவளுக்கு பேச வேண்டிய செய்தியை பேசிய ஆக வேண்டும் என எண்ணி, "இதோ பாருங்க.. பழையதை எதையும் நான் பேசவோ யோசிக்கவோ விரும்பவில்லை.. இப்போ நீங்க என் வாழ்க்கையில இல்ல.. இப்ப நான் வேறொரு வாழ்க்கையில ஒருத்தர் கூட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன்.. நாங்க ஒரு குடும்பமா இருக்கோம்.. இந்த வாழ்க்கை எனக்கு போதும்..
என்னை வேண்டாம் என்று நீங்க ஒதுக்கினது பிறகு நான் என் வழியில் போயிட்டேன்.. உங்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கல.. இப்போ எதுக்கு நீங்க என் வாழ்க்கைக்குள் வரீங்க??" என கேட்டாள்..
அவனைப் பேசக்கூட விடாமல் இவளே பேசிக் கொண்டிருக்கவும் அவனுக்கு கடுப்பானது.. அவனுடைய நிலைமை இவளிடம் எல்லாம் பேச வேண்டுமா?? என எண்ணி, " ஏய் என்னடி நானும் போனால் போகுது அப்படின்னு பொறுமையா போகலாம் என்று பார்த்தால் ரொம்ப எகறிட்டு இருக்க?? எனக்கு அதெல்லாம் தெரியாது நீ எவன் கூட வாழ்ந்துட்டு இருந்தாலும் எனக்கு ஒரு மயிரும் கிடையாது..
இப்போ இந்த நொடி இந்த குழந்தையும், நீயும் என் கூட வரணும்.. வந்தே ஆகணும்.. இல்ல அவ்வளவுதான்..
என்ன பத்தி தெரியுமில்ல.. எனக்கு ஒன்னு வேணும்னா வேணும்.. வேண்டாம் அப்படின்னா எனக்கு வேண்டாம்..
இப்பவும் நீ எனக்கு வேண்டாம் தான்.. ஆனால் உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும்.. என்னுடைய பிரச்சனைக்கு காரணம் நீ.. நான் ஒன்னும் உன்மேல ஆசைப்பட்டு இங்கே வர கிடையாது.. எப்போ உன்னுடைய மூஞ்சிய பார்த்து தொலைச்சேனோ அப்ப பிடிச்சது சனி அதை போக்கத்தான் வந்திருக்கேன்..
நீ எனக்கு அந்த பிரச்சினையை நீ முடிச்சு வச்சிட்டு நீ எவன் கூடவே போய் வாழு.. எனக்கு அதை பத்தி கவலையில்லை.. என் காரியம் நடக்கிற வரை நீ என் கூட இருந்து தான் ஆகணும் சொல்லிட்டேன்.. என்னடி ஓவரா பண்ணிட்டு இருக்க நானா உன் பின்னாடி வந்தேன்..
நீ தான் பின்னாடி வந்த.. அதனாலதான் உனக்கும் எனக்கும் கல்யாணமே நடந்துச்சு.. அது எல்லாம் ஒரு கல்யாணமா?? இப்ப வரைக்கும் நான் என்னால ஏத்துக்க முடியாது..
ஆமாம் நீ தான் பெருசா தாலி சென்டிமென்ட் பேசுற ஆளாச்சே?? அது எப்படி எனக்கு கழுத்த நீட்டிட்டு எவனோ ஒருத்தன் கூட வாழ்ந்துட்டு இருக்கேன்னு சொல்ற?? இதுதான் உன்னோட பாரம்பரியமா?? நீங்க தான் பாரம்பரியத்தை காக்க வந்த குல பெண்ணாச்சே.. இது எல்லாம் தான் உங்க குலத்தில் எழுதி இருக்கா??
இல்லை ஆம்பிளை பண்ணினா பாவம்.. இதையே பொண்ணுங்க பண்ணினா பாவம் இல்லையா புரியல.. " என்றான்..
அவன் கேட்ட கேள்வியில் அவளுக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.. ஆம் ஒரு இக்கட்டில் அவள்தான் இவன் வேண்டுமென அவனை நிற்கதியில் நிற்க வைத்து திருமணம் செய்து கொண்டாள் இல்லை என்று சொல்லவில்லை..
அவனுக்கு இதில் துளியும் விருப்பமில்லை.. அதன் பிறகு இவன்தான் கணவன் அடித்தாலும் சரி, உதைத்தாலும் சரி, அவனுக்கு பிடித்தாலும் சரி, பிடிக்கவில்லை என்றாலும் சரி, இவன் மட்டும் தான் கணவன் என இவன் பின்னாலே நாய் போல சென்றவள் இவள் தான்..
இப்பொழுது இவளுக்கு ரோஷம் வந்து விட்டால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் எல்லாம் கிடையாது.. அவன் பக்கா தொழிலதிபன், சுயநலவாதி அவன் தேவை என்ன அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருக்கும் ஒருவன்.
அப்படி இருக்க, அவனிடம் எல்லாம் வாய் ஜாலத்தில் பேசி சமாளித்து வெளியே வர முடியும் என இவள் யோசிப்பது எவ்வளவு பெரிய மடத்தனம்..
இதோ அவன் முன்னே நீ தோற்று விட்டாய் என்பது போல அவன் கேட்ட ஒரே கேள்வியில் அவளுக்கு கண்ணீர் எட்டிப் பார்த்தது..
அதை கண்டவன் முகத்தில் வெற்றி குறி வந்ததோ என்னவோ அதனால் அவளை ஏளனமாக பார்த்து, "வாய்சவடாலோ, ரோஷமா பேசி எல்லாம் என்கிட்ட வேலைக்காகாது.. எனக்கு ஒரு சின்ன வேலை நடக்கணும் அதுவும் உன்னால.. நீ ஆரம்பித்து வைத்ததை நீ முடிச்சு வச்சுட்டு தான் போகணும்.. நான் இதெல்லாம் வேண்டாம் அப்படின்னு தான் நான் உன்னை விலக்கி விட்டேன்.
ஆனால் திரும்பவும் கலங்கி தெளிஞ்சு இதோ நீயும், இந்த குழந்தையும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்கலாம்னு பாக்குறீங்க என் வாழ்க்கையில் குறுக்குடுறீங்க..
அதுக்கு நான் கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன்.. என்னால உனக்கு எந்த பிரச்சினையும் நடக்காது..
நான் சொன்ன மாதிரி என் கூட வர்ற.. என் வேலை முடியிற வரைக்கும் என் கூட இருக்க.. முடிஞ்சதும் கிளம்பி வந்துகிட்டே இரு.. நான் கவலைப்பட மாட்டேன்.. உன்னை இழுத்து கார்ல தூக்கி போட்டுட்டு போக தெரியாம இல்ல.. இருந்தாலும் நான் மரியாதையா பேசிட்டு இருக்கேன் அந்த மரியாதையை காப்பாத்திக்கோ" என்று கையில் இருப்பது அவனுடைய குழந்தை என தெரிந்தும் அந்த குழந்தையின் மீது சிறு இரக்கம் கூட காட்டாத இந்த ராவணனின் மனநிலை தான் என்ன??
அப்படி இருக்கும் போது ஆட்டோவை எடுத்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்த வெற்றி இவர்களுக்கு எதிரே வந்து நின்றான்..
தேவிகா யாருடனோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்து யாரது என யோசித்துக் கொண்டே ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி நிற்கவும் ஆட்டோவின் சத்தத்தை கேட்டதும் குழந்தை ரூபன் திரும்பி பார்த்து, "அப்பா" என்று கூற,
அதை கண்டு வெற்றி சிரிக்கவும் அதைப் பார்த்த தேவிகா முகத்தில் பயத்தில் முகம் வெளிற, விது பிரதாப்புக்கு அப்படியெல்லாம் இருக்கவில்லை..
அவனுடைய முகம் கோபத்தில் இருந்தது.. யார் இந்த ஆட்டோ டிரைவர் என்பது போல தான் இருந்தது..
தந்தையின் கோபத்தை மேலும் அதிகமாகும் விதத்தில் விது பிரதாப்பின் மைந்தன் ரூபன், "அப்பா" என அந்த ஆட்டோ டிரைவரை பார்த்து கூறவும் இவனுடைய முகம் அதிர்ச்சியில் உறைந்தது..
என்னதான் அந்த குழந்தை மீது அவனுக்கு அக்கறை இல்லை என்றாலும் அவன் மூலம் உதிர்ந்த குழந்தை அவனை அப்பா என்று கூறவில்லை என்றால் கூட அவனுக்கு கவலை இல்லை..
ஆனால் போயும் போயும் ஒரு ஆட்டோ டிரை
வரை அப்பா என்று கூறுவதை அவனால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
