Share:
Notifications
Clear all

மந்தாரம் 3

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மந்தாரம் : 3

அவள் தங்கியிருக்கும் வீட்டின் முன்னே அவனுடைய கார் நின்றது.. அந்த காரை கண்டதும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் வாயை பிளந்து பார்த்தனர்..இது என்ன டி புதுசு புதுசா கார் வருது என உள்ளுக்குள் பேசிக் கொண்டனர்..மாரியம்மா வீட்டுக்குள் இருந்ததால் அவர் பார்க்கவில்லை..அவளும் வீட்டில் இல்லை அது வேறு விஷயம்..

அவனுடைய அசிஸ்டன்ட் ஜீவா, "சார் இது தான் அந்த வீடு" என்று மென்மையாக கூறினான்.. அதைக் கேட்டதும் காரை திறக்க ரோட்டில் சேரும் சகதியுகமாக அழுக்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது..

அதை கண்டவன் முகம் சுழித்து தன் காலை எடுத்து உள்ளே வைத்தவன் அதன் நாற்றத்தை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காரின் கதவை அடைத்து, "இங்கேயோ அவள் தங்கி இருக்கா!!" என கேட்டான்..

"ஆமாம் சார்.. இங்கே தான் இருந்தாங்க.. அன்னிக்கு இதோ இந்த வீட்டில் இருந்து தான் வெளியே வந்து பேசினாங்க" என கூறவும், அதை கேட்டவன் அந்த வீட்டின் கோலத்தை பார்த்து, "காரை கொஞ்சம் நல்ல இடத்துல பார்க் பண்ணு.. ரோட்ல கால் வைக்க முடியாது போல" என்று கூறவும் டிரைவரும் காரை சற்று முன்னோக்கி நகர்த்தினான்..

அந்த அளவுக்கு கௌரவம் பார்க்கும் ஒருவன் தான் இந்த விது பிரதாப்...

கார் சற்று முன்னோக்கி செல்லவுமே, "சார் நீங்க போட்டோல கேட்டவங்க ஒரு குழந்தையை கூட்டிட்டு வராங்க.. இவங்க தான் அவங்க" என்று ஜீவா விது பிரதாபிற்கு அவனுடைய சொந்த மனைவியை அறிமுகம் கூறவும் அவன் நிமிர்ந்து பார்த்தான்.. அவன் முகத்தில் அவர்களை கண்டதும் ஒரே ஒரு நொடி இனம் புரியாத அவனாலேயே புரிந்து கொள்ள முடியா உணர்வில் அவன் அகப்பட்டான்..

குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்து குழந்தைக்கு ஒரு லாலிபாப் வாங்கிக் கொடுத்திருப்பார் போல அந்த லாலிபாப்யை சப்பி கொண்டே குழந்தை சிரித்தபடி வர, அவள் கையில் ஏதோ ஒரு கனமான பையை தூக்கி கொண்டு அவள் வந்து கொண்டு இருந்தாள்..

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவளை அவன் சந்திக்கிறான் அன்று அவள் கர்ப்பமாக இருந்தாள்.. அப்படி தான் அவள் சொன்னதாக அவனுக்கு ஞாபகம்.. தேவை இல்லாத விஷயத்தை எல்லாம் அவன் அவனுடைய மூளைக்குள் வைப்பது இல்லை அது வேறு விஷயம்..

இன்று அவனுக்கு இதெல்லாம் தேவை அதை எல்லாம் ஞாபகப்படுத்தி வைத்திருக்கிறான்..

அன்று அவள் சொன்ன அந்த குழந்தை தான் போலும்.. இது அந்த குழந்தையை அளவிட்டவனின் முகம் மெல்லிய புன்னகையை தவறவிட்டது தந்தை அதிர்ச்சியானதில் அதிசயம் இல்லை.. இப்படி ஒரு விஷயத்தை அவன் தந்தையிடம் மட்டும் இல்லை யாரிடமும் கூறியது இல்லை..

அப்படி இருக்க தன் தந்தை இந்த குழந்தையை பார்த்து தான் சொத்தை எழுதி வைத்திருக்க வேண்டும் என்பதை அவன் உறுதிப்படுத்திக் கொண்டான்..

ஆம் அவனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது அவனுடைய மகன் தான்.. அதே அவள் ஒரு குழந்தை பெற்றவள் போல இல்லை அவன் முன்பு பார்க்கும் பொழுது கூட லேசான உடல்வாகோடு இருந்தாள்..

இப்பொழுது மெலிந்து ஒட்டி போய் இருக்கிறாள் என அளவிட்டு விட்டவன்.. இது எல்லாம் என் பிரச்சனை இல்லையே..

தன்னை இந்த இடத்திற்கு இவள் கொண்டு வர வைத்து விட்டாலே என்று அந்த நொடியும் அவள் மீது கோபத்தை வர வைத்தவன் காரில் இருந்து இறங்கி அவளையும் அந்த குழந்தையையும் தூக்கி காரில் போட வேண்டும் செல்ல வேண்டும் அவ்வளவுதான் என்று முடிவோடு தன் சட்டை காலரை சரி செய்தவன் காரைத் திறந்து காரில் இருந்து இறங்கினான்..

அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு 20 அடி தூரம் இருக்கும் காரில் இருந்து இறங்கியவன் பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்து லேசாக அவளையே தன்னுடைய துளைத்தெடுக்கும் பார்வையால் பார்க்க துவங்கினான்..

அவள் இன்னும் அவனை கவனிக்கவில்லை..அப்படி இருக்க அவளுடைய மைந்தன் தான், "அம்மா கார்" என்று குழந்தை அந்த விலை உயர்ந்த காரை காட்டவும், அவளும் குழந்தையிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே குழந்தை கூறியதை கவனிக்காமல், ஒரு நான்கு நாட்கள் முன்பு வந்த பெரிய காரில் வந்து விது பிரதாப் அழைத்து வரச் சொன்னான் என்ற செய்தியை கொண்டு வந்தவனை கண்டதும் அதிர்ந்தவள் தான் இன்னும் அவளால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை..

ஐந்து வருடமாக அவள் உண்டு.. அவளுடைய வாழ்க்கை உண்டு என வாழ்ந்து வருகிறாள்.. அது அவனுக்கு பொறுக்கவில்லையா?? நான் தான் எதுவும் வேண்டாம் என ஒதுங்கி வந்து விட்டேனே.. மீண்டும் மீண்டும் ஏன் என்னை தொடர வேண்டும்?? இனி என்ன ஆனாலும் சரி எதற்காக இருந்தாலும் சரி அந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்.. இப்படியே என் குழந்தையோடு என் வாழ்க்கை முடியட்டும் என்று அவள் யோசித்துக் கொண்டே குழந்தையை தூக்கி வரும் பொழுது தான் குழந்தை காரை காட்ட, அவளும் அந்த காரை நிமிர்ந்து பார்க்க காரை விட உயரத்தில் அவன் அவனை கண்டதும் அவளுக்கு படபடவென வந்தது..

ஆம்.. அவன் ஐந்து வருடங்களுக்கு பிறகு அவனே.. அவனை கண்டதும் அவளுக்கு திக்கென்று இருந்தது.. இறுக்கமாக பற்ற குழந்தை மட்டும் இல்லையென்றால் அவ்வளவு தான்.. அப்படியே மயங்கி விழுந்து இருப்பாள்..

அதாவது ஒருவனின் பெயர் போதும் அவளின் மொத்த தைரியமும் அப்படியே கரைந்து போக எனில் அது இதோ இவன் தான்..இவன் ஏன் வந்தான் என அவள் விழிகளில் கேள்வி தொக்கி நின்றது.. அது சற்று வினாடிக்குள் அவன் மீது அவளுக்கு எழுந்த பயமாக மாறியது..

அவன் தன்னை தேடி வர மாட்டான் என்ற தைரியத்தில் அவள் வந்தவர்களை திமிராக பேசி அனுப்பி விட்டாள்.. இதோ வந்து நிற்கிறானே நான்கு நாட்கள் கூட ஆகவில்லை.. அவளின் தைரியத்தை உடைத்து எறிய வந்து விட்டானே என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்கியது..

அதே நேரம் இவன் ஒருவனால் தான் இப்பொழுது அவள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆகியிருக்கிறது. இந்த ஐந்து வருடமாக தான் இதுதான் வாழ்க்கை என அவள் தன்னை பழக்கப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..

அப்படி இருக்க மீண்டும் இவன் ஏன் எதற்காக எதுவும் தெரியவில்லை இருந்தாலும் இது வேண்டாம் என்று தான் தோன்றியது ஏனெனில் அவ்வளவு கஷ்டத்தை அவன் அவளுக்கு கொடுத்திருக்கிறான்..

அவள் ஒரு மனுஷி என்பதை கூட அவன் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தது இல்லை.. அவளை துளியும் மதித்தது இல்லை..

அவன் அளவுக்கு அவள் இல்லை தான்.. அவன் அளவுக்கு அவள் படிக்கவில்லை.. பணம் இல்லை அழகில்லை அறிவில்லை.. எதுவுமே அவளிடம் இல்லை தான்.. ஆனால் அவன் மீது அவளின் உயிரை விட அவள் அன்பு வைத்து இருந்தாள்.. அதை துளியும் அவன் உணர்ந்தது இல்லையே..

வேண்டாம் என அவளை ஒதுக்கி கழுத்தை பிடித்து வெளியே அனுப்பி விட்டு இப்போது எதற்கு வந்து இருக்கிறான் என யோசித்தாலும் அவன் மேல் அன்பு கொண்ட உள்ளம் அவன் எப்படி இருக்கிறான் என அவளின் அதிர்ச்சி மிகுந்த கண்களால் அவனை தேகத்தை ஆராய கருப்பு நிற சட்டை கருப்பு நிற பேண்ட் அதற்கு ஏதுவாக கருப்பு நிற ரேபன் அவனுடைய கண்களை நிறைத்து இருந்தது..

அவனுக்கு மட்டும் உயரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்குமோ என்னவோ ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த உயரத்தை விட சற்று அதிகமாக இருப்பது போல அவளுக்கு தோன்றியது..அது அவளின் கண்களின் மாயமா என தெரியவில்லை...

உடலையும் அழகையும் பேணி பாதுகாக்கும் அவனிடம் இதை எல்லாம் பரிசோதிக்க வேண்டுமா என்று அவளின் உள் மனம் கேட்டுக் கொண்டாலும் அவன் மீது ஆசை வைத்த மனம் அளவிட துவங்கியது.. அதோடு அவள் கால்களும் நிற்காமல் அவள் பேச்சை கேட்காமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தது..

ஆனால் அவனோ திமிராக நின்று கொண்டு இருந்தவன் அவளையே பார்த்தவன், "வெல்.." என தொண்டையை செருமினான்..

அப்படி ஏதாவது அவன் செய்தாலே அவன் யாருடைய மனதையும் பார்க்காமல் அவனுக்கு என்ன தேவையோ அதை இந்த வார்த்தையை முதலில் சொல்லித்தான் அவன் அவனுடைய தேவையை நிறைவேற்றுவான்..

அந்த ஞாபகம் அவளுக்கு வேகமாக வந்தது.. உடனே கையில் இருக்கும் குழந்தை அம்மா கார் என்று கூறவும் குழந்தையை கேட்டு தான் வந்திருக்கிறானோ என்ற ஆவேசம் அவளுக்கு வந்தது..

ஆம் இது இவனுடைய குழந்தை தான். மறுப்பதற்கு இல்லை.. ஆனால் இப்பொழுது அவள் வெற்றியின் வீட்டில் வெற்றியின் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.. கண்டிப்பாக குழந்தையை அவளும் அவளிடம் ஒப்படைக்க மாட்டாள் அதற்கு வெற்றியும் சம்மதிக்க மாட்டான்..

அவன் வந்ததுமே அவளுடைய மனம் வேகமாக வேலை செய்ய மூளை குழம்பி நின்றாலும் மனம் சொன்னது போல இதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என எண்ணி அவனை அறியாதது போல அவனை கடக்க அவள் முயற்சி செய்தாள்..

தன்னை நோக்கி வருபவளை எதிர்கொள்ள விது பிரதாப் அவனும் தயாராகி விட்டான்.. இவளே இவ்வளவு யோசித்தால் ஏழு கடல் ஏழுமலை தாண்டி யோசிக்கும் அவன் எந்த அளவுக்கு யோசித்து இருப்பான் என்பதை அவள் மறந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top