Share:
Notifications
Clear all

மந்தாரம் 2

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மந்தாரம் : 2

 

       ஆக்ரோஷமான விழிகளோடு அவன் அமர்ந்து இருந்தான்..அவனுடைய விழிகள் யாரை கடித்து தின்னலாம் என இருந்தது.. அதற்கு காரணம் காலையிலேயே அவன் எதிர்கொண்ட செய்தி தான்..ஆம் அவனுடைய தந்தை இப்படி தனக்கு எதிராக நிற்பார் என அவன் எதிர்பார்க்கவில்லை..

 

அதை விட தந்தை விஷயத்தை தனக்கு எதிராக போட்டு உடைத்ததும் அவன் நேராக ஒரு லாயரிடம் தான் விஷயத்தை பற்றி டிஸ்கஸ் செய்தான்.. அதில் அவர் கூறியது அதிர்ச்சிகரமான விஷயம் தான் ஏனெனில், "ராம் மோகன் பெயரில் இருக்கும் சொத்துக்களை அவர் யாருக்கு வேண்டுமானாலும் சொத்துக்களை எழுதிக் கொடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது" என கூறி விட அவன் அதிர்ந்து விட்டான்..

 

அவனுக்கு சொத்து போவதை விட அவனுடைய சொத்துக்கள் போவதை தான் ஏற்று கொள்ள முடியவில்லை..ஆம் அவன் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்க அவன் விரும்பவில்லை..

 

எந்த வகையிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதுதான் முக்கியமான விடயம்..

 

எல்லாத்துக்கும் காரணம் அவள் ஒருத்தி தான்.. எப்போது அவளை அவன் அவனுடைய வாழ்க்கையிலேயே சந்தித்தானோ அப்போதிருந்து அவனுக்கு தலைவலி தான்.. அவனுக்குத் தலைவலி கொடுக்கவே அவள் அவனுடைய வாழ்க்கையில் நுழைந்திருக்கிறாள் என்பது அவனுடைய கருத்து...

 

இப்பொழுது அவனுடைய ஆணி வேரையே அவள் பிடுங்க நினைக்கிறாளோ என எண்ணினான் கண்டிப்பாக விடமாட்டேன் என்ற கர்ஜனை அவனுக்குள் முழங்கிக் கொண்டே இருந்தது..

 

எதிரே உள்ள அனைவரும் அவனின் கோபத்தை கண்டு திகைத்து போய் இருக்க, அவன் அவளுடைய போட்டோவை காட்டி, "எனக்கு இவள் வேணும் எவ்வளவு செலவானாலும் பரவால்ல இந்த போட்டோல இருக்கிறவ என் முன்னாடி வந்தே ஆகணும்.. அவள் என்ன பண்றா? எப்படி இருக்கா? எல்லா விஷயமும் எனக்கு தெரிஞ்சே ஆகணும்.. 

அதே போல அவள் கிட்ட விது பிரதாப் கூட்டிட்டு வர சொன்னேன் என சொல்லி கூட்டிட்டு வா" என்று அவன் தன் வேலையாட்களுக்கு வேலை கொடுத்தான் விது பிரதாப்.. 

 

தன் பெயரை அவளிடம் கூறினால் குட்டி போட்ட நாய் போல தன் பின்னால் அவள் வந்து விடுவாள் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்..அந்த அளவுக்கு அவளுக்கு அவன் மீது மயக்கம் இருக்கிறது என்பதை அவன் அறிவான்..

 

அதனால் தான் அவன் தன் பெயரைச் சொல்லி அழைத்து வரச் சொல்கிறான்.. அவன் கண் அசைத்தால் போதும் அவள் அவனுடைய காலடியில் விழுந்து கிடப்பாள்.. அந்த அளவுக்கு அவளை அவன் நினைக்கும் பொழுது ஏளனம் அவன் முகத்தில் குடி கொண்டிருந்தது..

 

 ஆனால் அவன் தான் அவனுடைய வீட்டில் வேலைக்காரியாக இருக்க கூட தகுதி இல்லாத ஒருத்தியை ஒதுக்கி வைத்திருக்கிறான்.. 

 

ஆம் அவனைப் பொறுத்தவரை அவன் வீட்டில் வேலை செய்யக் கூட ஒரு சில தகுதிகள் வேண்டும் அந்த தகுதி கூட அவளுக்கு இல்லை என்று தான் அவன் நினைப்பான்..

 

 ஆனால் அவளையே அவன் மூலம் தேட வைத்து விட்டாரே என்ற கடுப்பு தன் தந்தையின் மீது அவனுக்கு வந்து போனது என்னவோ உண்மை...

 

அவன் போனில் கூட அவளின் புகைப்படத்தை வைத்திருக்கும் தகுதி அவளுக்கு இல்லை என்பதை ஆணித்தரமாக உணரும் அவன் இப்பொழுது அவளை தேடி வர சொல்கிறான் எனில் என்ன விசயமாக இருக்கும்? யாரவள்? 

 

ஏற்கனவே கோபக்காரன் ஆனால் அவனை ஆட்டி வைக்க நினைத்தால் என்ன ஆகும் என காட்டிக் கொடுக்க வேண்டாமா? கண்டிப்பாக காட்டி கொடுத்தே ஆக வேண்டும் என்ற கடுப்பில் அவன் இருக்கிறான்..

 

இதற்கெல்லாம் காரணம் அவனுடைய தந்தை ராம் மோகன் தான்..அவன் தான் எதிரிகளை இதுவரை திணறடித்து இருக்கிறான்..

 

இப்போது அவனையே திணறடிக்க அவனுடைய தந்தை முயல்கிறார் அதை எதிர் கொள்ள அவள் அவன் கண் முன்னே வந்து நிற்க வேண்டும் அவ்வளவு தான் அவனுக்கு வேண்டும்..

 

அவள் அவனுடைய வாழ்கையில் அவன் திரும்பி கூட பார்க்க விரும்பாத பக்கங்களில் ஒன்றான அவள் மீண்டும் அவனுடைய வாழ்கையில் வர வேண்டும் என்ற நிர்பந்தத்தில் அவன் இருக்கிறான் அதன் காரணம் என்னவாக இருக்கும்? 

 

அவளைத் தேட சொல்லி ஆட்களை அனுப்பி இருந்தான்.. 

 

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு அவர்கள் சொன்ன செய்தி அவனுக்கு இடியை இறக்கியது..

 

ஆம் அவன் தேட சொன்ன அவளோ திருமணம் செய்து குழந்தையுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்றும் தனக்கு விது பிரதாப் யாரென்று தெரியாது அதனால் தன்னால் வர முடியாது.. மேலும் மேற்படி கூறிய நபரை கேட்டு தன்னை தேடி வர கூடாது என அவள் கூறியதாக அவனிடம் அவர்கள் கூற அதை கேட்டவன் அதிர்ந்தான்..

 

தான் வர சொல்லியும் அவள் வரவில்லையா என்பது முதல் அதிர்ச்சி என்றால் தன்னை யார் என்று அவளுக்கு தெரியாது என்று கூறியது இரண்டாவது அதிர்ச்சி மூன்றாவது தனக்கு திருமணமாகி சந்தோஷமாக இருப்பதாக அவள் கூறியிருப்பது அவனுக்கு மூன்றாவது அதிர்ச்சி.. இதன் மூலம் தன்னை அவள் அசிங்கப்படுத்த நினைக்கிறாளா என நினைத்தான்..

 

அவனுடைய அதிர்ச்சியின் வீரியத்தில் அந்த அறையில் இருந்த அனைத்து பொருட்களும் சிதற விஷயத்தை கூற வந்த ஆட்கள் கூட தள்ளி நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகினர்..அப்படி யாரவள் அவளுக்கும், அவனுக்கும் என்ன சம்பந்தம்?..

 

எப்படி அவளால் திருமணம் செய்து கொள்ள முடிந்தது? தன் கையால் தாலி வாங்கி விட்டு வேறு திருமணம் செய்து கொண்டாலோ என எண்ணினான்..

 

ஆம் அதுவரை அவள் மீது அவன் எந்த உணர்வும் இல்லாதவன் அவன் வேறொருவன் மனைவியாக இருக்கிறான் என்றதும் கடுப்பு ஆகி விட்டான்..

 

பின்ன இருக்காதா அவன் தாலி கட்டி இருக்கிறான்.. அவளோடு படுத்து இருக்கிறான் அதில் அவள் கர்ப்பமும் அடைந்து இருக்கிறாள்.. அப்படி இருக்க அவனை விட்டு சென்றது எல்லாம் அவனுடைய பிரச்சனை இல்லை..அவள் வேறொருவனுக்கு எப்படி மனைவி ஆக முடியும்..

 

அவன் விவாகரத்து கொடுக்காமல் எப்படி இவள் வேறொருவனை திருமணம் செய்து கொண்டு அதுவும் சந்தோஷமாக இருப்பதாக கூற முடியும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்..

 

ஆரம்பம் முதல் இறுதி வரை அவளால் மட்டும் தான் அவன் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறான்.. இந்த முறை இதை ஒரே அடியாக முடிக்க வேண்டும் என்பது தான் அவனுடைய பிரச்சனையாக இருந்தது..

 

பிறகு அவள் எங்கு இருக்கிறாள் என கேட்டு சம்பவ இடத்துக்கே சென்று விட்டான் விது பிரதாப்.. அது வேறு அவனுக்கு அசிங்கமாக இருந்தது.. தான் அவளை தேடி செல்லும் நிலைமைக்கு அவள் தன்னை கொண்டு வைத்து வைத்து விட்டாலே என எண்ணினான்..

 

அதில் அவனுடைய அகங்காரம் துளிர் விட்டு ஆடியது.. ஏற்கனவே தந்தை மீதுள்ள கோபத்தில் மொத்தமாக தன்னிலை இழந்து இருப்பவன் முன்னால் இவள் வேறு திமிராக ஆடுகிறாளா என்ன திமிர் இருக்கும் என்று அவளை வசைப்பாடிக் கொண்டே இது போன்ற ஒரு அவனை பொறுத்தவரை கீழ் மட்டமான நபர்கள் வசிக்கும் இடத்துக்கு எல்லாம் அவனுடைய கார் நுழைந்தது கூட இல்லை.. ஆனால் இப்பொழுது நுழைகிறது.. அதுக்கு காரணம் அவள்..

 

அவளை அவனுக்கு வேண்டாம் ஆனால் ஒரு மாதத்திற்காவது அவளும் சரி அவளுடைய மகனும் சரி அவனுக்கு வேண்டும்.. அவனுடைய கம்பெனியை மீட்டு எடுக்கும் வரை இவர்கள் அவனுடய கஸ்டடியில் இருக்க வேண்டும் என எண்ணி அவனை கண்டால் நாய் போல அவள் வந்து விடுவாள் என்ற எண்ணத்தில் அவன் அவளின் வீட்டின் வந்தும் விட்டான்.. ஆனா

ல் அவள் அவனை தேடி வருவாளா என்பது சந்தேகம் தான்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top