மந்தாரம் 13
மந்தாரம் : 13
"சார் சார் கதவை திறங்க உங்களுக்காக சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன்.." என கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாக விது இருக்கும் வீட்டின் கதவை தட்டி கொண்டு இருந்தாள் தேவிகா.. அவளுக்கோ இது எல்லாம் புது விதமாக இருந்தது.. கூடவே அவன் மீது சற்று எரிச்சலாகவும் இருந்தது...
தன்னை இப்படி வேலை வாங்க வைத்து விட்டானே என்று சற்றே அவன் மீது கோபத்தில் தான் அவள் அவன் அவன் வீட்டு கதவை படப்படவென தட்டிக் கொண்டிருந்தாள்..
அவனுக்காக காலையில் எழுந்து சமைத்து இந்த குளிரில் குளித்து தயாராகி வந்தவளுக்கு அந்த மலையின் காலை வேளை குளிர் வேறு வாட்டி கொண்டு இருந்தது.
அவளும், 'என்ன இவரு கதவை திறக்கவே இல்லை ஒரு வேளை இவரு எங்கேயாவது போய்ட்டாரா.. அப்படி போனா நமக்கு நல்லது தான்.. இந்த குளிரில் இப்படி இவருக்கு சமைச்சு கொண்டு வர தேவை இல்லையே?? எல்லாம் உன்னோட வாய் அதை அடக்கி இருந்தா இதெல்லாம் நடக்குமா?? இவருக்கு வேலை செய்யணும்னு உனக்கு ஏதாவது இருக்கா.. இவரே என்னை வேணாம் அப்படின்னு துரத்தனும் அது போல ஏதாவது செய்யனும்' என புலம்பி கொண்டே கதவை தட்டினாள்.. மீண்டும் மீண்டும் பலமாக அந்த ஊர் மக்கள் முழுவதும் கேட்கும் அளவுக்கு தட்டினாள்..
அந்த சத்தம் அவனது காதுகளை அடைக்க ஏகத்துக்கும் கடுப்பு ஆகி விட்டான் விது..அதனால் குளியல் அறையில் இருந்து கடுப்பாக கதவை திறந்து வெளியே வந்தான்..
ஆம்..அவனோ அப்போது தான் குளித்து முடித்து இடையில் துண்டோடு அவனுடைய கேசத்தை கூட சரியாக துடைக்காமல் இவளின் இடி சத்தத்தை கேட்டு வெறுப்பாகி, ஆங்காங்கே நீர்க்குமிழிகள் இருக்க தன்னுடைய உடற்கட்டை காட்டியபடி வந்து கொண்டு இருந்தவன் முகம் மிகவும் அழுத்தமாக இருந்தது..
ஆம் இவள் இப்படி தொடர்ந்து இடையூறு செய்வது போல கதவை தட்டுவது அவனுக்கு பிடிக்கவில்லை..
அதனால் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை மறந்து கதவை அவன் திறக்க பட்டென்று அவனை கண்ட அவளோ அவனுடைய கோலத்தை கண்டு திடுக்கிட்டாள்..
ஆம் துண்டோடு வந்து நின்றவனை கண்டதும் ஏனோ அவள் அறியாமல் அவள் முகம் செம்மை உற்றது.. இப்படி ஒரு காட்சியை அவனிடம் அவள் எதிர் பார்க்கவில்லை..
அவள் ஆண்களை கண்டிராதவள் அல்ல.. இருந்தாலும் அவனை போன்ற ஒரு ஆண் மகனை அவள் கண்டது இல்லை என அவர்களின் முதல் சந்திப்பிலேயே அவள் நினைத்து இருக்க, அதை மேலும் பறை சாற்றும் விதமாக இப்படி அவன் வந்து நிற்கவும், வெளியே இவ்வளவு குளிர் அவனின் வெற்று தேகத்தை பாதிக்காதா?? எனக்கு எல்லாம் என் மயிர்க்கால்கள் எழுந்து நின்று நடனமாடுகிறதே என எண்ணினாள்..
அவள் குளிரால் அவள் உடல் செம்மை அடைந்து, அவளின் தேகத்தில் மயிர் கால்கள் எழுந்து நிற்கிறது என அவள் எண்ணிக் கொண்டு இருக்கிறாள் ஆனால் அது உண்மை அல்ல..
ஆம் அவனின் முறுக்கேறிய உடலும் திண்ணி இருக்கும், மார்பும் வரி வரியாக இருக்கும் அவனின் உடற்கட்டும், குளிரில் சிவந்த அவனின் பொன் தேகமும் முகத்தில் அவன் காட்டும் கடுமையும் அவன் அழுத்தத்தை பறைசாற்றும் விதமாக அவன் ஈரத் தலையில் இருந்து விழும் நீரும் எல்லாம் சேர்ந்து அவளுக்கு உடல் தானாக சிவக்க துவங்கியது.. அவன் கண்களை அவளால் பார்க்க முடியாதபடி அவள் தவித்து தான் போனாள்..
அதே நேரம் அவன் கைகளில் அன்று அவன் அவளை காப்பாற்றும் போது கிடந்தது நினைவில் வந்து அவள் மனம் அவன் தேகத்தில் அலைபாய துவங்கியது..
அவன் மீது அவளுக்கு இப்படி நிற்க வைத்து விட்டான் என்ற கோபம் இருந்தாலும் அவனின் இந்த கோலம் அவளை படபடக்க வைத்தது..
அவனோ அவளின் உணர்வுகளை எல்லாம் புரிந்து கொள்ளாமல், "எதுக்கு இப்படி கதவை போட்டு உடைக்கிற வருவேன்ல" என்று கத்தினான்..
அவன் கத்தவும் தான் அவன் தன்னிலை பெற்று, "அ..து உங்..களுக்கு சாப்பாடு கொண்டு வந்தே..ன் இந்தா..ங்க" என்று அவன் முகம் பார்க்காமல் கையை மட்டும் நீட்ட அவன் சற்று என்று அவள் கையைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்தவன் கதவை அடைத்தான்..
திடீரென அவன் அவனுடைய கையைப் பிடிக்கவும் அவள் ஏற்கனவே அவனின் அழகில் மயங்கி இருப்பவனுக்கு அவன் சற்றென்று இழுக்கவும் நிலை தடுமாறி அவன் மீதே விழ போக அவன் அவனுடைய இடையைப் பிடித்து நிறுத்தி இன்னும் அவளின் இடையை விடாமல் அவனோடு உரசுவது போல நிற்க வைத்தவன், "எங்க உன்னோட நினைப்பு இருக்கு?? உன்னால எனக்கு குளிர் அடிக்குது" என்றவன் இன்னும் அவளின் இடையில் இருந்து கையை எடுக்கவில்லை..அவளோ அவனின் தொடுகையில் தவித்து, திகைத்து கொண்டு இருக்க, அவனோ இன்னும் அவளின் இடையை விடாமல் அழுத்தம் கொடுத்து, தன்னை இப்படி குளிரில் நிற்க வைத்து விட்டாலே என்ற கடுப்பில் பார்க்க அவன் தலை முடியில் இப்பொழுது விழும் என்று இருந்த நீர் குமிழி அவன் எதிர் பாராத விதத்தில் தொட்டதும் எப்படி விலகுவது என தெரியாமல் தவித்து நிற்கும் அவளின் சிவந்த அதரங்களின் மீது விழவும் அவள் அப்படியே திணறி போய் விட்டாள் என்று தான் கூற வேண்டும்..
அவளுக்கோ வெளியே அவ்வளவு குளிரில் இருந்த தேகம் அவனின் தொடுகையில் பட்டென்று சூடாக துவங்கியது..கூடவே அவளின் இதழில் சூடி இருக்கும் நீர் குமிழி வேறு அவளின் இதழ்களில் படரி அவளை தவிக்க வைத்து கொண்டு இருந்தது..
இந்த நிலையில் அவளுக்கும் அவனிடம் இருந்து விலக வேண்டும் என்ற நினைவு இல்லை.. படபடக்கும் இதயத்தை எப்படி அடக்குவது என தெரியாமல் தடுமாறி கொண்டு இருந்தவள் அவனையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த அவன், "என்ன இப்படி பேய் மாதிரி முழிச்சிட்டு இருக்க" என்றவன் அப்போது தான் அவள் அவன் கையில் அகப்பட்டு இருக்கிறாள் என்பதை கவனித்து, அவள் திகைத்து இருக்கிறாள் என்பதை புரிந்து, அவள் முகத்துக்கு அருகே போய் தன் வாயை குவித்து அவளின் முகம் நோக்கி ஊதினான்.. அவன் ஊதவும் அவள் அப்படியே சொக்கி முகம் எல்லாம் அவன் தீண்டியது போன்ற உணர்வை அது கொடுத்தது..
அப்படி மேலும் அவள் பதறி சிலிர்த்தவள் மனம் அவன் தீண்டியது போலவே தோன்ற வேகமாக அவளின் உடல் அவளுக்கு சிலிர்க்க துவங்கி படபடக்க, அவனோ இவள் என்ன இப்படி விடாமல் பார்க்கிறா என புரியாமல் பார்க்க அவளின் வெட்கத்தை கண்டதும், 'ஓ அப்படி போகுதா கதை இரு உன்னை எப்படி நடத்தனும்னு எனக்கு இப்போ புரியுது.. இவ்ளோ ஹேண்ட்ஸமா யாரையாவது பார்த்திட கூடாதே' என எண்ணியவன், அவள் முகம் நோக்கி குனிந்து, "உன் மேல செம்ம கோபத்தில் இருந்தேன்.. ஆனால் இப்படி இவ்வளவு நெருக்கத்தில் உன் மேல என்னால கோப பட முடியல.. பொண்ணுங்களை நெருக்கமா பார்த்தா நான் அமைதி ஆகிடுவேன் போல.. அது உன் விஷயத்தில் சரியா தான் இருக்கு.. கிட்ட பார்க்க கொஞ்சம் அழகா தான் இருக்க.. இப்படியே உன்னை பிடிச்சிட்டு இருந்தா என்னோட குளிர் எல்லாம் போயிடும் போல" என்றவன் பேச்சில் அதிர்ந்து கிறங்கி நிற்கும் அவளை நக்கலாக பார்த்து, "எனக்கு கப் காபி வேணும் போய் போட்டு தா" என்றான்..
அவளோ அவ்வளவு நேரம் இருந்த ஒரு வித மோன நிலை உடைவது போல இருக்க, "என்ன காபியா??" என பட்டென்று தன் நிலை உணர்ந்து அவள் விலகினாள்.. அவளுக்கு இத்தனை நேரம் அவனுடைய கைகளுக்குள்ளா இருந்தோம் என எண்ணி அவனை எதிர் கொள்ளவே ஒரு மாதிரியாக இருந்தது..
