மந்தாரம் 11
மந்தாரம் : 11
சில வருடங்களுக்கு முன்பு...
அது ஒரு மலையும் மலைச்சார்ந்த ஒரு மலை பிரதேசம்.. அந்த இடத்தில் ஒரு சிறிய குக்கிராமம்.. அதில் வாழும் பழங்குடியினர்.. மொத்தமே ஒரு 50 வீடுகளுக்குள் இருக்கலாம்..
அந்த 50 குடும்பங்களும் தான் உறவினர்கள்.. அந்த 50 குடும்பங்களும் தான் அந்த ஊரில் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்திலும் பங்கு பெறும் ஆட்கள்..
அந்த ஊர் மக்களுக்கு என்று ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு.. அதற்கு உட்பட்டு அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. அதை மீறி யாரும் நடக்கக்கூடாது என்பதில் அந்த கிராமம் மிகவும் கட்டுப்பாடாக இருக்கிறது..
கட்டுப்பாடுகள் அந்த கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கே அன்றி வேறு ஆட்களுக்கு கிடையாது..
இப்படி ஒரு எழில் கொஞ்சும் கிராமம் இருக்கிறது என பெரிதாக யாருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்புகள் இல்லை..
ஆனாலும் அதையும் தேடி ஒரு சில ஆட்கள் வந்து போகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.. அப்படி வரும் மக்கள் அந்த ஊரில் தங்கி அந்த எழிலை எல்லாம் ரசித்து அங்கு கிடைக்கும் மலை பொருட்கள் மற்றும் கைவினை பொருட்களை எல்லாம் வாங்கி செல்வார்கள்.. அதில் கிடைக்கும் வருவாய் தான் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படும் வகையில் இருக்கும்..
அதனால் வெளியூரிலிருந்து யார் வந்தாலும் அவர்களை என் முகத்துடன் வரவேற்று நல்லபடியாக அவர்கள் ஊரை சுற்றி காட்டி அவர்களை மகிழ்வித்து அந்த ஊராரும் மகிழ்ந்து அனுப்பி வைப்பார்கள் இது அந்த ஊரின் வழமை..
அப்படி ஒரு கிராமத்தில் தான் தேவிகா வாழ்ந்து வருகிறாள்..தேவிகா அவள் 21 வயதில் இருக்கிறாள்.. அந்த ஊர் வழக்கப்படி ஒரு பெரிய மனுஷி ஆனதிலிருந்து 20 வயதுக்குள் திருமணம் ஆகி இருக்க வேண்டும் அப்படித்தான் அனைத்து பெண்களுக்கும் அங்கு திருமணம் ஆகி இருக்கிறது..ஆனால் அவளுக்கோ இன்னும் திருமணம் நடக்கவில்லை..
அது ஒரு கொலை குற்றமாக தான் அந்த ஊரில் பார்க்கப்பட்டு வருகிறது.. அதை ஒரு தோஷமாக கூட கருதி வருகிறார்கள்.. அப்படி இருக்க இவள் இன்னும் திருமணம் ஆகாமல் கன்னி கலையாமல் இருப்பதை அந்த ஊர் மக்கள் பெரிதாக விரும்பவில்லை..
சதா அந்த ஊரில் நடக்கும் எந்த ஒரு கூட்டத்திலும் இதைப் பற்றி ஒரு பேச்சாகவே பேசிக் கொண்டிருக்க அவளுக்கென்று இருக்கும் ஒரே உறவான அவளுடைய பாட்டிக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது.. ஏனென்றால் அவர் எல்லாம் 13 வயதில் திருமணம் செய்து கொண்டவர் அப்படி இருக்க அவருக்கு பேத்திக்கு திருமணம் ஆகவில்லை என்பது பெரிய மனக்குறையாக இருந்தது..
அவரும் மாப்பிள்ளை பார்க்காமல் எல்லாம் இல்லை அவர்கள் ஊரில் கிடைக்கவில்லை என்றாலும் பக்கத்து ஊர் வெளியூர் வரை அவர் பார்த்து விட்டார்.. ஆனால் இவளுடைய நேரமா இல்லை அவர்களுடைய நேரமா என தெரியவில்லை எந்த மாப்பிள்ளைக்கும் ஒன்று இவளை பிடிக்கவில்லை.. இல்லை என்றால் பிடித்திருந்தால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து திருமண பேச்சு நின்று விடுகிறது.. இது அவருக்கு ஒரு குறையாகவே இருந்தது..
அவரும் பார்த்து பார்த்து அலுத்து போய் இனி ஆகும் போது ஆகட்டும் என விட்டுவிட்டார்.. இவருக்கும் இந்த ஊர் மக்களுக்கும்தான் அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்பது பிரச்சனையே தவிர தேவிகாவுக்கு அந்த பிரச்சனையே இல்லை.. அவள் எப்போதும் போல அந்த ஊரில் இருக்கும் சிறுவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி விளையாடிக் கொண்டிருப்பாள்.. ஏதாவது மலை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை எல்லாம் செய்து விற்பனை செய்வாள் அது தான் அவளுடைய வேலை..
இந்த சிறுவர்களோடு ஊர் சுற்றுவதை அவளுடைய பாட்டி எப்போதும் எதிர்பார்.. "உன்னோட வயசுல இருக்கிற பிள்ளைகளை எல்லாம் பார் கையில் ஒரு குழந்தையையும் இடுப்பில் ஒரு குழந்தையையும் தூக்கிட்டு போறாங்க நீயும்தான் இருக்கியே இன்னும் விளையாட்டு தனமா" என்ன பாட்டி கடியும் போதெல்லாம் அவள், "எனக்குன்னு ஒருத்தன் வருவான் அப்ப நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. நானும் போயிட்டனா உன்ன யாரு பாத்துக்குறது.. போ போனா எங்க போறது.. உனக்கு நீ எனக்கு நான் இருக்கிற வரை நிம்மதியா இருந்துட்டு போவோம்.. சும்மா கல்யாணம் கல்யாணம்னு சொல்லிட்டு இருக்காத.. அது ஆகும்போது ஆகட்டும்" என அவள் தட்டிக் கழித்துவிட்டு அவள் வேலையை பார்க்க துவங்கி விடுவாள்..
ஆனால் பாட்டிக்கு தான் இதை எண்ணி மிகுந்த மன வருத்தம்.. அவருடைய காலத்திற்குப் பிறகு அவளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.. அவர் கண்ணை மூடுவதற்குள் இவளை யார் கையிலாவது பிடித்துக் கொடுத்துவிட்டு நிம்மதியாக கண்ணை மூட வேண்டும் என்று தான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவர் வாழ்ந்த வருகிறார்...
அப்படி இருக்க, பாட்டி இவளை எண்ணி கவலையாக சுற்றிக் கொண்டு இருந்தாலும் அவளோ ஒரு மாமரத்தில் இருந்து மாங்காயை பறித்துக் கொண்டிருந்தாள்... அப்படி சொல்ல கூடாதோ மாங்காய் திருடிக் கொண்டு இருந்தாள்.. அது தான் உண்மை..
அவளை சுற்றி இல்லை இல்லை அவள் ஏறி இருக்கும் மரத்தைச் சுற்றி நான்கு ஐந்து சிறுவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்..அவர்கள் தான் அவளுடைய நண்பர்கள்..
அவர்களும் மரத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.. அவள் எப்பொழுது மாங்காய் பறிப்பால் அதை சாப்பிடலாம் என ஆசையாக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்..."அக்கா தூரமா மேல சிவப்பா பழுத்து நிக்குது பாரு அதை பறி.." என்று ஒரு சிறுவன் கூறினான்..
இவளோ இவள் அணிந்து இருந்த பாவாடை தாவணியை தூக்கி இடுப்பில் சொருகி அவளின் வெண்ணிற கால்கள் தெரிய, மரத்தின் ஒரு கிளையில் இருந்து வேறொரு கிளைக்கு எப்படி ஏறுவது இதில் எப்படி உயரத்தில் இருக்கும் அந்த மாம்பழங்களை பறிப்பது என யோசித்துக் கொண்டு இருந்தாள்..
"டேய் இது பறிக்கிறது கஷ்டம் போல.. ஏதாவது பக்கமா இருந்தா சொல்லுங்க.." என மேலே பார்த்துக்கொண்டே கூறினாள்..
அதற்குள் ஒருவன், "அக்கா இந்தா இந்த குச்சியை பிடிச்சு சரியா குறி பார்த்து மாங்காய் அடி.. நாங்க கீழே இருந்து பிடிச்சுக்குறோம்.. மொத்தமா மாங்காய் விழும்.. நம்ம சாப்பிட்டது போக மிச்சத்தை வித்து காசாக்கிடலாம்" என்று அவன் கூற அதைக் கேட்ட அவளும், "சரி தா டா" என்று குச்சியை மெல்ல வாங்கி கையில் வைத்து கொண்டாள்.. பிறகு அந்த கிளையில் இருந்து கொண்டே எம்பி அவர்கள் சொன்ன மாங்காயை அடிக்க முனைந்தாள்..
அந்த சமயம் பார்த்து கிட்டத்தட்ட ஒரு ராட்சத பைக் என்றுதான் அதனை கூற வேண்டும்.. அதன் சத்தம் அந்த ஊரையே அச்சுறுத்தி, அந்த பைக்கின் ஒலி விண்ணை பிளக்கும் வகையில் இருக்க, இவர்கள் என்னவென்று பார்க்க, ஒருவன் அதி வேகமாக அந்த பைக்கை ஓட்டிக் கொண்டு வர,
அந்த பைக் அவர்கள் அருகே நெருங்கும் போது அதில் எழுந்த சத்தத்தின் அலறலில் அவள் மாங்காயை எம்பி அடிக்க முனைந்து கால் இடறி அப்படியே கீழே விழவும் அவளின் தாவணி அந்த கிளைகளில் பட்டு கிழிந்து, " ஐயோ அம்மா" என கத்திக் கொண்டே இனி நான் செத்து விடுவேன் என எண்ணிக் கொண்டே கீழே விழ தயாரான அவளை, எந்த பைக்கின் சத்தத்தை கேட்டு அவள் பயந்தாலோ அதை ஓட்டி வந்த இளைஞன் அவள் கீழே விழுவதை பார்த்து அப்படியே அவளை ஒரே எட்டில் பிடிக்க கண்களை இறுக மூடி கீழே விழுந்து விட்டோம் என எண்ணி கொண்டு இருந்த அவள் ஏதோ வலிமையான கரங்களில் இருப்பதை எண்ணி, "நான் என்ன சொர்க்கத்திலயா இருக்கேன்??.. கடவுள் கைக்கு வந்துட்டேனா" என எண்ணி கண்களை திறந்து பார்க்க முகத்தை மறைத்து ராக்ஷத ஹெல்மெட் அணிந்து இருக்கும் ஒருவனின் கையில் அவள் இருந்தாள்..
அவனை கண்டதும் அவள் ஒரு நொடி பயந்து, அப்போ தப்பிச்சுட்டோமா என எண்ணி, அவள் பெருமூச்சு ஒன்றை விட, அதற்குள் அவளின் சமாதானம் போவது போல அவள் பறிக்க நினைத்த மாங்காய்கள் அவளை பின்தொடர்ந்து கிளையோடு கீழே விழ எண்ணி அது சரியாக அவனின் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது கொத்தாக விழவும் அந்த டேங்க் லேசாக நசுங்கியது..
அந்த சத்தத்தை பார்த்து அவள் திரும்பிப் பார்க்க மாங்காய் வந்து விழவும், "நானும் நல்ல வழியா தப்பிச்சிட்டேன்.. நீயும் வந்துட்ட.. கடவுளே ரொம்ப நன்றி" என்று அந்த மாங்காயை பார்த்து அவள் கூற அதை பார்த்த அவனோ எரிச்சலாக முறைத்தான்..
ஆம் இன்னும் அவன் கைகளில் இருந்து அவள் கீழே இறங்காமல் தான் இதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தாள்..
அவள் தப்பித்து விட்டால் என்பதால் யாரும் கைகளில் அகப்பட்டு இருக்கிறோம் என்பதை அவள் நினைக்க மறந்து விட்டாள்..
ஆம் மரத்தின் மீது இருந்து ஒரு பெண் கீழே விழுகிறாளே என அவன் வேகமாக வந்து அவளை காப்பாற்ற முனைந்தாள்..
அவனின் விலை உயர்ந்த பைக் டேங்க் மீது கொத்தோடு மாங்காய் கிளை விழவும் அதை பார்த்து சமாதானம் அடையும் அளவுக்கு விது பிரதாப்புக்கு பொறுமை கிடையாது..
அவன் முறைத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியாமல், "டேய் மாங்கா விழுந்துடுச்சு எடுங்கடா" என்று திரும்பிப் பார்க்க, அவள் கீழே விழப் போகிறாள் என்றதுமே, அந்த பெண்ணை காப்பாற்ற அவன் நினைத்து காப்பாற்றியும் விட்டான்..
ஆனால் அதனால் அவனுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அவன் நல்லவன் இல்லை.. அவன் ஒரு வேலைக்காக இந்த ஊருக்கு வந்து இருக்கிறான்..
அதுவும் அவனுடைய தந்தையின் தொல்லையால் தான் இங்கு வந்திருக்கிறான்.. அவனுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்றாலும் தந்தையின் விருப்பத்தை ஏற்று இங்கு வந்த கடுப்பு வேறு அவன் முகத்தில் நிறைந்திருந்தது..
அப்படி இருக்க பைக்கில் இலேசாக மாங்காய் கிளை விழுந்ததில் டேங்க் நசுங்கி விட்டது என்றதும் கைகளில் ஏந்தி இருந்தவனை அப்படியே கீழே விட அவள் கீழே விழுந்தாள்.. கீழே விழுந்தவளுக்கு இடுப்பில் அடி வேறு பட்டது..
"ஐயோ அம்மா.." என அவள் கத்த அவனோ அவள் உயிரை பணயம் வைத்து பறித்த மாங்காய் மீது காலை வைத்து நசுக்கி கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் கூட இல்லாமல் தற்போது காப்பாற்றிய பெண்ணை கீழே விட்டோம் என்ற எண்ணமும் துளியும் இல்லாமல் பைக்கை பார்த்து பதறியவன்,
"யூ டேமிட்.. விழ வேற இடம் கிடைக்கல?? நீ செத்து தொலைய என் வண்டி தான் கிடைச்சிதா??" என்று ஹெல்மெட்டை எடுக்காமல் கேட்டான்..
அவளோ இங்கிருந்து இரண்டு அடியில கீழே விழுந்ததுக்கே இந்த வலி வலிக்குதே மேலே இருந்து கீழே விழுந்திருந்தா என் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்று நினைத்தாலும், "ஒரு உயிரை விட பைக் முக்கியமா போயிடுச்சா இவனுக்கு??" என்று கருதி, "எதுக்கு சார் கீழே போட்டீங்க?? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா கை, கால் போனா நீங்களா கொடுப்பீங்க??" என கேட்டாள்..
இவளை காப்பாற்றியது மட்டுமில்லாமல் என்னையே எதிர்த்து பேசுகிறாளா என்ற கடுப்பில், "என்ன சொன்ன உன்னையெல்லாம் கீழே விழட்டும்னு விட்டு இருக்கணும் காப்பாத்துறேன் பாரு.. என்னை சொல்லணும்??" என்றவன் பைக்கை நகர்த்த அவன் கால்களில் கிடந்து நசுங்கிய அந்த மாங்காய்களை பார்த்து, "என்ன சார் பண்றீங்க உசுர குடுத்து இதை பறிச்சிருக்கேன் தெரியுமா?? உங்க வண்டி சத்தத்தினால் தான் நான் கீழே விழுந்தேன்.. இதுக்கு காரணமே நீங்கதான்" என்று அவன் கத்தினாள்..
"யூ இடியட் இந்த ரெண்டு மாங்கா போனது தான் உனக்கு பெரிய விஷயமா இருக்கா?? பத்து லட்ச ரூபா பைக் இதோட டேங்க் நசுங்கிப் போய் இருக்கு.. அது உனக்கு பெரிய விஷயமா இல்லையா??" என்று அவன் கொந்தளித்து கேட்டான்..
இவளும் விடாமல் தன்னுடைய வாய் துடுக்கில், "உங்களை யாரு என்னை காப்பாற்ற சொன்னா விட்டிருக்க வேண்டியது தானே?? ஆமாம் யார் நீங்க இவ்வளவு பெரிய பைக் எல்லாம் எடுத்துட்டு எங்க ஊருக்குள்ள எதுக்கு வரீங்க?? இது எங்க ஊர். நாங்க என்ன வேணாலும் பண்ணுவோம்.. உங்களுக்கு என்ன வந்துச்சு?? முகத்தை மூடிட்டு பேசினா நாங்க பயந்து நடுங்கிட்டு போயிடுவோமா?? அப்படி எல்லாம் போக முடியாது.. இது எங்க ஊரு.. எங்க ரோடு நான் இங்கே தான் நிற்பேன்" என்று வாய் பேசினாள்..
அதைக் கேட்ட அவன் கடுப்பாகி ஹெல்மெட்டை கழட்டினான்.. கழட்டியவன் முகத்தை பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்..
இவ்வளவு உயரமான, இவ்வளவு நிறமான, இவ்வளவு ஏன் இவ்வளவு அழகான ஒருவனை அவள் வாழ்க்கையில் கண்டது கிடையாது.. ஆம் அவள் விழிகள் ஒரு நொடி அவனை மொத்தமாக உள்வாங்கி கொண்டது என்னவோ உண்மை தான்..
ஆனால் அவளின் மனதை புரிந்து கொள்ளாத விது, "வாட் டிட் யூ சே டெல் மீ ஹொவ் டேர் யூ.. உன் அப்பன் வீட்டு ரோடா இது?? இடியட்.. ரோட்ல இருக்குற மரத்துல மாங்காய் பறிச்சதும் இல்லாமல் திமிரா வேற பேசுறியா??" என கத்தவும் அவள் ஒரு நொடி அதிர்ந்தாலும், "என்ன வாயை திறந்தால் இங்கிலீஷ் தான் வருமா தமிழ் எல்லாம் வராதா??" என்றவள்,
"போங்க.. போங்க.. போய் வேற வேலை இருந்தா பாருங்க.. சும்மா வந்துட்டாங்க.. மரத்துகிட்ட பைக் நின்னுட்டு இருந்தா காய் எல்லாம் விழத்தான் செய்யும்.. அதுக்கு போய் இப்படி பேசுறீங்க??' என்று அவள் கூறினாள்..
ச்சீ எந்த நேரத்தில் இது போல ஒருத்தியை பார்த்தேன்னு தெரியல என்று இவளிடம் பேசி அவனை தாழ்த்தி கொள்ள அவன் விரும்ப வில்லை.. அதனால் அவன் அங்கிருந்து செல்ல விரும்பினான்.. ஒரு அடி தான் பைக்கை தள்ளி அதில் அமர்ந்து இருப்பான்..
அவள் திமிராக அங்கேயே பேசியதுக்கு இடியாக ஒருவர் தலையில் அடிக்க அவளோ திரும்பி பார்க்க அங்கு தேவிகாவின் பாட்டி நின்று கொண்டு இருந்தார்..
அவளோ பாட்டியை கண்டதும் அதிர்ந்து நிற்க அவளின் கோலத்தை கண்ட அவரோ சற்றும் யோசிக்காமல் ஓங்கி அவளை அடிக்கவும் அந்த சத்தத்தை கேட்டு திரும்பிய விது பிரதாப் திகைத்தான்..
அவனுக்கு அங்கு என்ன நடந்தது என துளியும் புரியவில்லை என்பதை போல அவன் அதிர்ச்சியில் இருந்தான்..
அதே நேரம் அவளின் பாட்டியோ அவனை ஒரு முறை முறைத்து, "என்ன டி கோலம் இது?? வா டி வீட்டை விட்டு இனி வெளியே போய் பார் அப்போ இருக்கு.. உனக்கு வா காலை உடைச்சு அடுப்பில் வைக்கிறேன் வா.." என அவளை தரதரவென இழுத்து செல்லும் காட்சியை அவன் என்ன நடக்குது இங்கு என புரியாமல் பார்த்தான் அவன்.. ஆனால் அவளுக்கு கிடைத்த அடியும் வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டான்..
ஆனால் பின்னாளில் இவர்கள் மூவரையும் இணைக்கும் விதமான ஒரு பிரச்சினை ஒன்று நிகழ போகிறது என்பதை இவர்கள் அறியாமல் அவரவர் அவரவர் பாதையை நோக்கி சென்றனர்..
