Share:
Notifications
Clear all

மந்தாரம் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மந்தாரம் : 10

ராம் மோகன், "அவன் கிட்ட என்ன கேள்வி கேட்டுட்டு இருக்க?? அதுதான் உன்னுடைய பேரக்குழந்தை பார்த்தாலே உனக்கு தெரியலையா?? இவனை அப்படியே உரிச்சு வைச்சிருக்கு.. இதோ இந்த வீட்டுக்கு முன்னாடி ஹால்ல பெருசா நீ இவனோட படத்தை பிரேம் பண்ணி மாட்டிருக்கியே.. அந்த போட்டோ மாதிரி இல்ல??" என்று அவர் நக்கலாக கேட்டார்.. அதைப் பார்த்து அவருடைய மைந்தன் அவரை முறைத்தான்..

"என்னங்க இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறீங்க?? இந்த பொண்ணு வேற இவனை கல்யாணம் பண்ணனும்னு வந்து நிக்குது.. நீங்க அஞ்சு வயசுல குழந்தை இருக்குன்னு சொல்றீங்க?? எனக்கு எதை நம்புவது எதை நம்ப கூடாதுன்னு தெரியலைங்க" என்று ரேவதி தன் கணவனின் தோளில் சாய்ந்து அழ துவங்கினார்..

அவரோ தன் மனைவியை தேற்றி, "நானும் உன்னை மாதிரி அதிர்ச்சியா தான் இருந்தேன்.. ஆனால் நானே அந்த அதிர்ச்சியை குறைத்து விட்டு அடுத்தது என்ன நடக்க வேண்டும் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்.. நான் எடுத்த முடிவுனால தான் இப்போ உன் பையன் இவங்களை கூட்டிட்டு வந்து இருக்கான்.. இல்லனா இப்படி ஒரு உறவு இருக்குனே தெரியாது.. இந்த பொண்ணும் அந்த குழந்தையும் அனாதையா இருந்திருக்கும்.. அந்த அளவுக்கு நம்மளை முட்டாள் ஆக்கி இருப்பான்" என்று ராம் மோகன் தன்னுடைய வருத்தத்தை தன் மனைவியிடம் பகிர்ந்து கொண்டார்..

ஸ்ரேயா அவர்களின் பேச்சில் இருக்கும் உண்மையை உணர்ந்து தான் ஆசைப்பட்ட வாழ்க்கை தனக்கு கிடைக்காதோ என்ற பயத்தில், "அப்போ உனக்கு அஞ்சு வயசுல ஒரு குழந்தை இருக்கு அப்படின்னா நீ அந்த பொண்ணு கூட பழகிட்டே என் கூடயும் பழகி இருக்க?? அப்படித்தானே?? யூ ஆர் சீபெஸ்ட் மேன் இன் த வேர்ல்ட் என்னை எதுக்கு ஏமாத்துன?? உனக்காக என்னுடைய மார்க்கெட் எல்லாம் தூக்கி வீசிட்டு நீ மட்டும் போதும் நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனால் என் கூடயும் பழகிட்டு இவ கூட குழந்தை பெத்து இருக்க.. யூ டேமிட்" என்று அவனுடைய சட்டையை பிடித்து ஷ்ரேயா கேட்டாள். ஏனெனில் அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை..

இவன் வீட்டில் வரும் நேரங்களில் எல்லாம் இவளை ஸ்ரேயா கண்டு இருக்கிறாள்.. ஒருமுறை ஸ்ரேயாவுக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட தேவிகா தான் அவளுக்கு துணை இருந்தாள்..

அதனால் தேவிகாவை ஸ்ரேயாவுக்கும் நல்ல ஞாபகம் இருக்கிறது.. அப்படி இருக்க, தனக்கு இப்படி ஒரு துரோகம் செய்து விட்டானே என்று உள்ளுக்குள் கொதிப்போடு அவள் சட்டையை பிடித்து கேட்கவும், இதற்கு மேல் தனக்கு பொறுமை இல்லை என்பது போல அனைவரும் தன்னை குற்றவாளி ஆக்குகிறார்களோ என எண்ணி முதலில் தன் சட்டையை பிடித்திருக்கும் அவளைப் பார்த்து, "ஸ்ரேயா என் சட்டையில் இருந்து கையை எடு அந்த அளவு உரிமையை நான் உனக்கு கொடுக்க கிடையாது.." என்றவன் அதிர்ந்து நிற்கும் அவளை பார்த்து,

"என்ன என்னோட சட்டையை பிடிக்கிற அளவுக்கு நீ வந்துட்டியா??இதோ பார் காதல், கத்திரிக்காய் இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்.. உனக்கு என்னை பிடிச்சிருந்தா எனக்கும் உன்னை பிடிச்சிருந்தது.. நீயும் எல்லாத்துக்கும் சம்மதமாய் இருந்த நானும் எல்லாத்துக்கும் சம்மதமாய் இருந்தேன்.. அதனால மட்டும் தான் நமக்குள்ள ரிலேஷன்ஷிப் வந்துச்சு.. இது ஒரு மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் ரிலேஷன்ஷிப்..

நான் உன்னை எங்கேயாவது காதலிக்கிறேனு சொல்லி இருக்கேனா?? இல்லை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கேனா?? அப்புறம் எப்படி நான் உன்னை ஏமாத்தினதா ஆகும்..

இப்ப கூட நீதான் காதல், கல்யாணம்னு சொல்லிட்டு என் பின்னாடி சுத்திட்டு இருக்க.. நான் ஒன்னும் பின்னாடி சுத்த கிடையாது.. உன்னோட லெவல் என்னை பொறுத்த வரைக்கும் இதுதான்.. நீ எப்பேற்பட்ட மாடலாக இருக்கலாம்.. ஆனால் இந்த விது பிரதாப் முன்னாடி நீ வெறும் தூசு தான்" என்றவன்,

"அதுதான் நான் உன்னை ஏமாத்திட்டேன்னு தெரிஞ்சிருச்சில்ல.. இனி நீங்க இருக்க வேண்டிய அவசியம் கிடையாது கிளம்பு" என்று அவன் ஸ்ரேயாவை முகத்தில் அடித்தது போல அனுப்பி வைக்க ஸ்ரேயா மிகவும் அவமானப்பட்டு போனாள்..

தான் முதன் முதலாக ஆசைப்பட்டவன் இப்படிப்பட்டவனா என்பது போல அவளுக்கு அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை..

அவள் அதிர்ச்சி நிறைந்த விழிகளோடு அவனைப் பார்க்க அவன் அவளை எல்லாம் ஒரு பொருட்டே இல்லாதது போல நின்று கொள்ளவும், அதற்கு மேல் அங்கு நின்று கொண்டிருக்கும் அவளுக்கு மனம் இன்றி அவள் மிகவும் அவமானத்தோடு அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்..

இந்த அவமானம் எல்லாம் ஒரு நாள் ஆறாவடுவை விது பிரதாபுக்கு கொடுக்கும் என்பதை அவன் இந்நேரம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டான்..

அவள் செல்வதைப் பார்த்து ரேவதி, "அந்த பொண்ணையும் ஏமாத்திட்டாங்க.. நானும் இவன் முன்னாடி ஏமாந்து நிக்கிறேன்.. ஒரே மகன் ஆசையா நாலு பேர் முன்னாடி கல்யாணம் பண்ணனும்.. எப்படி எல்லாம் மனசுக்குள்ள நினைச்சிருந்தேன் தெரியுமா?? இப்படி குழந்தையோட வந்து நிற்கிறானே?? எப்படி இதெல்லாம் நடந்துச்சு?? எதுவுமே எனக்கு புரியலையே?? கல்யாணம் நடந்துச்சா நடக்கலையா இல்லை?? எப்படி இதெல்லாம் நடந்துச்சு?? எனக்கு எதுவும் புரியலைங்க?? வீட்டுக்குள்ளேயே இருந்தேன்.. ஆனால் இப்படி ஒரு விஷயம் நடந்தது எனக்கு தெரியலையே??" என்று தன் கணவனை கட்டிக்கொண்டு அழுதார்..

அப்படி இருக்க அவளை அவமானப்படுத்தி அனுப்பியவன் அங்கு புலம்பிக் கொண்டிருக்கும் ரேவதியை பார்த்து, "கொஞ்சம் வாயை மூடுங்க.. என்ன எல்லாரும் என்னை குற்றப் படுத்திட்டு இருக்கீங்க?? குழந்தை வந்தது தெரிஞ்சிருச்சு இல்ல.. இனி ஒரு விஷயத்தை கூட சொல்றேன்..

அதையும் கேட்டுட்டு ஒரேடியா வருத்தப்படுங்க.. இவளை நான் தாலி கட்டி கல்யாணம் பண்ணி இருக்கேன்.. அதுக்கப்புறம் தான் இந்த குழந்தை வந்துச்சு..

உங்க பாரம்பரிய படி நான் எந்த தப்பும் பண்ணல.. எனக்கு இப்போ இவளை புடிக்கல.. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.. அவ்வளவுதான்.. மத்தபடி நீங்க ரொம்ப யோசிக்கிறதுக்கெல்லாம் இங்க வேலை கிடையாது" என்றவன்,

தன் தந்தையை பார்த்து, "எவ்வளவு சீக்கிரம் முடியுமோ என்னுடைய கம்பெனி என் பேர்ல வந்து இருக்கணும்.. இதோ இவங்கள வச்சு பிளாக்மெயில் பண்ணலாம்னு நீங்க நினைக்காதீங்க" என்று அவன் எச்சரிக்கை செய்தான்.. அதற்காகத்தான் அவன் இவ்வளவு தூரம் அவமானப்பட்டு நிற்கிறான்..

தந்தையின் அடுத்த கட்டம் அதுவாக இருக்குமோ என்ற எண்ணம் அவனுக்கு இருக்க, அவரோ தன் மகனை பார்த்து, "இவ்வளவு அவசரப்பட்டா எப்படி? நான் உயில் எழுதி வச்சிருக்கேன்.. அதுபடி தான் எல்லாம் நடக்கும்.. அதுல உன்னுடைய கம்பெனியும் அடங்கும்.. இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை எங்களுக்கு கொடுத்திருக்க.. அப்படியே உன்னை விட்டு விடுவோமா?? அப்படி எல்லாம் விட முடியாது.. உனக்கு கம்பெனி வேணும் அப்படின்னா நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும்.. கேட்காமல் எந்த வேலையும் நடக்காது.. நான் உனக்கு அப்பன்டா" என்றவர்,

தேவிகாவை பார்த்து, "அம்மா உனக்கும் இவனுக்கும் என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியாது.. கல்யாணம் நடந்ததா இவன் சொல்றான்.. ஜஸ்ட் 2 நிமிஷத்துக்கு முன்னாடி தான் அந்த விஷயமே எனக்கு தெரிஞ்சது.. ஆனால் உன்னுடைய குழந்தையையும், உன்னையும் ஒரு இடத்துல பார்த்தேன்.. அப்ப இந்த குழந்தையை பார்த்ததும் புரிஞ்சு போச்சு..

இது என் வீட்டு வாரிசு தான் அப்படின்னு நான் இவன்கிட்ட கேட்டேன்.. இவனும் அதை மறுக்கல.. அதனாலதான் நீ இப்போ இங்கே வந்து இருக்க.. உங்களுக்கு கல்யாணம் குடும்பம் குழந்தை அப்படின்னு சொன்னா எல்லாம் விளையாட்டா போயிடுச்சு இல்ல. உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினை நீங்கதான் தீர்த்துக்கணும் .. முடிஞ்ச அளவுக்கு கூடிய சீக்கிரம் ஒன்னா வாழ்க்கை வாழ பாருங்க.. என்னை பொருத்தவரைக்கும் ஒருவனுக்கு ஒருத்தி தான்" என்றவர் அழும் தன் மனைவியை அழைத்துக்கொண்டு சென்று விட்டார்..

தன் தந்தை பேசிவிட்டு சென்றதைக் கேட்டு அதிர்ந்தவன், "என்ன கூட இவள் கூட வாழ்வதா?? இதெல்லாம் நடக்கிற காரியமா??" என நினைக்க அதையே இவளும் நினைத்தவள் அவனைப் பார்க்க அங்கு ஆத்திரத்தின் விளிம்பில் அவன் நின்று கொண்டிருந்தான்..

ஏனெனில் அவன் அவமானப்படுவதற்கும் அவன் இப்பொழுது இப்படி அனைவரும் முன்னிலையிலும் கூனிக்குறுகி பேச வார்த்தைகள் இன்றி தவித்து கொண்டிருப்பதற்கும் காரணமாக இருப்பதை இவள் ஒருத்தி தானே இவளை எப்போது அவன் கண்டானோ அப்போது பிடித்தது சனி என்று அவன் கடுப்பாகி ஒரு அடி அவளை நோக்கி வந்தான்..

அதை கண்டு அவள் அதிர அவனோ, "ஏண்டி பிரச்சனை பண்ணி என்னை கல்யாணம் பண்ணினதும் இல்லாம இப்படி என்னை எல்லோரும் முன்னாடியும் அசிங்கப்படுத்தி, ஒரு குழந்தையை தூக்கிட்டு வந்து பெரிய தியாகி மாதிரி நின்னுட்டு இருக்க??

அவர் சொன்னார்.. இவர் சொன்னார் என்று கூட வாழலாம்னு நினைச்சுட்டு இருக்கியா?? அது மட்டும் கனவிலும் நடக்காது டி.. உனக்கெல்லாம் அந்த ஆட்டோ டிரைவர் தான் சரியா இருப்பான்.. பண்றது எல்லாம் பண்ணிட்டு என் வாழ்க்கையை இந்த அளவு அசிங்கப்படுத்திட்டு, இங்கே நல்லவள் மாதிரி நாடகம் போட்டுட்டு இருக்கியா?? ஏன்டி என்னை கார்னர் பண்ணி இதையெல்லாம் பண்ண வச்சது நீ தானே" என்றவன், "என் காரியம் மட்டும் நடக்கட்டும் அப்புறம் இருக்கு உனக்கு... இதுக்கெல்லாம் பழி வாங்காமல் உன்னை விடவே மாட்டேன்.. நீ எப்படி என்னை மீறி நிம்மதியா வாழ்ந்துடுற அப்டின்னு நானும் பாக்குறேன்" என்று கூறிவிட்டு அவன் உள்ளே சென்றான்..

அவன் பேசிவிட்டு சென்றதும் அவள் கண்கள் குளமாகியது.. அத்தனை நேரம் அவன் முன்னால் தைரியமாக இருக்க வேண்டும் என பிடித்து வைத்திருந்த அழுகை எல்லாம் ஒவ்வொரு மணிகளாக கீழே உதிரத் துவங்கின..

அவன் எதற்காக அவளை அழைத்து வந்திருக்கிறான் என்ற காரியம் அவளுக்கு புரிந்து விட்டது.. ஆனால் அவனுடைய வார்த்தைகளை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

ஆம் அவளால் தான் அனைத்தும் நடந்திருக்கிறது.. அதை அவள் மறுக்கவில்லை.. ஆனால் அப்படி கோடியில் புரண்டு கொண்டிருக்கும் விது பிரதாப்புக்கும் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தேவிகாவுக்கும் இடையே அப்படி என்ன நடந்து இருக்கும்???

அப்படி இவர்கள் எங்கு தான் சந்தித்தார்கள்.. பெற்றவர்களுக்கு கூட தெரியாமல் எப்படி அவனுக்கு திருமணம் ஆனது.. அதுவும் ஐந்து வயது மகன் எப்படி என அவள் அந்த வீட்டின் வாயிற் படியிலேயே நின்று தன்னுடைய கடந்த காலத்தை நினைக்க துவங்கினாள் தேவிகா..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top