மந்தாரம் 1
என் நெஞ்சோரம் மந்தாரமாய் வந்தாயோ
அத்தியாயம் : 1
ஓம் சரவணபவ!!
அதிகாலை நேரம்..காலையிலேயே எழுந்தான் வெற்றி..அவனுக்கு இன்று காலை ஒரு வயதானவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் விட வேண்டிய அவசியம் உள்ளது..அதனால் அவன் அந்த ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டில் படுத்து இருக்கும் யாரையும் தொல்லை செய்யாமல் எழுந்து தயராகினான்..ஆம் அவன் ஒரு ஆட்டோ டிரைவர்..இருப்பதை வைத்து சிறப்பாக வாழும் இருபத்தி ஒன்பது வயது வாலிபன் தான் அவன்..
அவன் எழுந்த சத்தத்தை கேட்டதும் அவனுடைய ஐந்து வயது மகன் ரூபன் எழுந்து அழ துவங்கி விட அவனுடைய மனைவி தேவி எழுந்து விட, அதற்குள் அவனுடைய அம்மா இருமிக் கொண்டே, "குழந்தை அழுகுது பார்க்க துப்பு இல்லையா இன்னும் அப்படி என்ன தூக்கம்?" என காலையிலேயே ஆரம்பித்தார்..
அதை கேட்ட வெற்றியின் கண்கள் வேகமாக தேவியை பார்க்க தேவியின் கண்களும் அவனை தான் சந்திக்க அவன் தயாராகி இருப்பதை பார்த்து, "கொஞ்சம் குழந்தையை பார்த்துக்கோங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்றாள்..
"அதெல்லாம் வேண்டாம் எனக்கு ஒரு ட்ரிப் இருக்கு" என கூறுவதற்குள் அவள் எழுந்து அவன் பேச்சுக்கு காத்திராமல், காபி போட துவங்க இனி காபி குடிக்காமல் செல்ல முடியாது என கருதி அரை தூக்கத்தில் அழுது கொண்டிருந்த ரூபனை உறக்க, அவனும் தன்னுடைய தந்தை அரவணைக்கவும் உறங்கி விட்டான்..
பின் மெல்ல அவனை படுக்க வைத்து விட்டு திரும்பும் முன் காபி மற்றும் இரண்டு தோசை வார்த்து தொட்டு கொள்ள இட்லி பொடியை கொடுத்து அவனிடம் நீட்ட, "இதெல்லாம் வேண்டாம்..இந்த நேரத்தில் எனக்கு இதெல்லாம் இறங்காது" என மறுக்க,
"இனி போனால் மதியம் தான் வருவீங்க.. காலையில எதுவும் சாப்பிட மாட்டீங்க வெளிய சாப்பிட்டா உங்களுக்கு ஒத்துக்காது இப்போ இதை சாப்பிட்டு போனா நாங்களாவது நீங்க சாப்பிட்டோம் அப்படிங்கிற நிம்மதியோட இருப்போம்.. இந்த நேரத்தில் சட்னி ஆச்சா மிக்ஸி சத்தத்தில் ரூபன் தூங்க மாட்டான் உங்களையும் வேலைக்கு அனுப்ப மாட்டான் அதனால பொடி தான் வச்சிருக்கேன் சாப்பிட்டுக்கோங்க" என்று அவள் கூற அதைக் கேட்டவன் எதுவும் பேசாமல் உண்டான்..அவள் சொல்வதிலும் ஒரு உண்மை உண்டு..
அவன் வெளியே சாப்பிட மாட்டான்..அவன் தான் உழைப்பவன் அவன் உண்ணாமல் அவளால் உணவு உண்ண இயலாது அது அப்படித்தான் அவன் உண்ட பின் தான் அவள் உணவு உண்பாள்..ஏனோ அப்படியே பழகி விட்டாள்..
"அப்படி சொல்லு அவன்கிட்ட நான் சொன்னா கேட்கிறான் சொல்றவங்க சொன்னாத்தான் கேட்பான்" என்று இழுத்தார் மாரியம்மா..
மாரியம்மாவுக்கு தேவியும், வெற்றியும் ஒன்றாக ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்வது பிடித்திருந்தாலும் வயதானவர் தானே எதையாவது பார்த்தால் திட்ட துவங்கி விடுவார்...
அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவாள் தேவி.. இப்படித்தான் கடந்த ஐந்து வருடமாக நடந்து கொண்டிருக்கிறது..
அப்படி இருக்க, இன்றும் அப்படி தான் இருக்க அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் வேலையை துவங்கி விட்டாள்..
பெரிய ஆடம்பரமான வாழ்க்கை வெற்றி மற்றும் தேவி வாழவில்லை என்றாலும் நிம்மதியான வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..
அவர்கள் அனைவருக்கும் உலகமே ரூபன் தான்..அப்படி இருக்க, எப்படியோ பாதை மாறி வாழ்ந்து கொண்டிருந்த வெற்றிக்கு கிடைத்த பொக்கிஷம்தான் ரூபன் மற்றும் தேவி..அவர்களுக்காக தான் வெற்றி தான் ஏற்கனவே செய்து கொண்டு இருந்த சண்டித்தனத்தை எல்லாம் ஒதுக்கி விட்டு நல்ல விதமாக நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் வெற்றி..
அவன் வேலைக்கு செல்ல போக, "குழந்தையை பள்ளிக்கூடத்துல சேர்க்கணும் பால்வாடி ஆயம்மா சொன்னாங்க நான் ஒரு ஃபார்ம் வாங்கிட்டு வந்து வச்சிருக்கேன்" என தேவி கூற,
அதற்கு அவனோ, "சரி நாளைக்கு கொண்டு போய் ஸ்கூல்ல சேர்த்து விடலாம் சின்ன பையனுக்கு எல்லாம் இப்பவே ஸ்கூல் போகணுமா என்ன?" என்று உறங்கும் மகன் இன்னும் சிறு குழந்தை என நினைத்துக் கொண்டிருக்க அதை பார்த்து தேவி மெல்லிய புன்னகையோடு அவனுக்கு, "அஞ்சு வயசு ஆக போது எல்லாரும் நாலு வயசுலே சேர்த்துடுவாங்க" என்று கூறவும்,
"இப்பதான் அவன் அம்மாவே அம்மானு சரியா சொல்றான்..சரியா வார்த்தை கூட பேச தெரியாத அவனை போய் இப்பவே ஸ்கூல்ல சேர்த்துட்டு என்னதான் படிப்போ எனக்கு ஒன்னும் தெரியல..என அழுத்தவன் மனைவி சொல்லுக்காக எதுக்கும் நாளைக்கு போய் சேர்த்துவிடலாம்" என்று அவளையும் சமாதானப்படுத்தி விட்டு அவன் வேலைக்கு சென்று விட்டான்...
அதே நேரம் மும்பையில் காலையிலேயே ஒரு முக்கியமான கிளையண்ட் மீட்டிங்காக தயாராகி வந்தான் விது பிரதாப்..
அவனை கண்டதும் இறுகிய முகத்தோடு அமர்ந்து இருந்தார் ராம் மோகன்..
அதை அவன் கண்டு கொள்வதில்லை...அவன் யாரை பற்றியும் கவலை கொள்வதில்லை என்பது வேறு விசயம்..அவனுக்கு அவன் விடயங்கள் மட்டும் தான் பெரிதாக இருக்கும்..
விது பிரதாப் முப்பது வயது வாலிபன்.. அந்த வயதுக்கு ஏற்ப உடலும், உயரமும் கொண்ட ஒருவன்..பான் வித் சில்வர் ஸ்பூன் என்று கூறுவார்களே அதுபோல ஒரு பணக்கார குடும்பத்தில் ஏகபோக வாரிசு..அந்த வீட்டின் செல்ல மகன்..அதனாலேயே பிடிவாதம் அதிகம்.. அவன் நினைத்தது தான் அந்த வீட்டில் நடக்கும்.. அவனுடைய அம்மாவுக்கு மகன் இல்லை என்றால் உலகமே இல்லை. அதீத செல்லத்தால் அவனிடம் நல்ல குணங்களை காட்டிலும் தீய குணங்கள் அதிகம் உண்டு..
அவனைப் பற்றி கூற வேண்டும் என்றால் கோபக்காரன், அழுத்தக்காரன் தான் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவன் தான் நினைக்காதது நடந்து விட்டால் அதை எப்படி தான் நினைத்தது போல மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வெகுவாக உண்டு..திமிர் பிடித்தவன் தனக்கு எதிரே யார் இருந்தாலும் அவர்கள் தன் காலுக்கு கீழே என நினைக்கும் குணத்தை கொண்டவன்..அகம்பாவம் நிறைந்த ஒருவன்..
எப்படி அவன் மாறி இருக்கிறான் என்றால் மற்றவர்களின் உணர்வுகளுக்கு அவன் மதிப்பு கொடுப்பது இல்லை..
வெளிநாட்டில் எல்லாம் படித்ததாலோ என்னவோ மேற்கத்திய பழக்கங்கள் கூடுதல் அவனிடம் உண்டு..அப்படி ஒரு தவறை செய்து விட்டு தன் பக்கம் தவறே இல்லை என நியாயம் கற்பிக்கும் அவனை என்ன செய்வது என தெரியாமல் தடுமாறி இருக்கிறார்..
ஆம் அவனின் இந்த குணங்கள் முதல் எதையும் ராம் மோகனால் மாற்ற முடிந்தது இல்லை..அவருடைய மகனிடம் தொடர்ந்து தோற்றுப் போய் அமர்ந்திருக்கிறார்..
அவன் தந்தையின் தொழிலை ஏற்று நடத்த துவங்கி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.. தொழிலில் எல்லாம் அவனை அடித்துக் கொள்ள முடியாது தொழிலதிபரின் மகன் என்பதை அவன் நிரூபித்து விட்டான்.. ஆனால் அவனுடைய குணம் அதுதான் அவருடைய பிரச்சனையாக இருந்தது..அதன் மூலம் பலரின் வாழ்க்கை கேள்வி குறியாக மாறி இருக்கிறது..
ஆம் சமீபத்தில் தான் மகனைப் பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை அவர் அறிய நேர்ந்தது அதை அறிந்ததும் மகனிடம் நேரடியாக சென்று கேட்க அவன் மறுக்காமல் ஆமாம் என ஒப்புக்கொண்டான்...அதிலிருந்து தான்.. அவனுக்கும், அவருக்கும் பிரச்சனை ஏற்பட துவங்கியது..
அப்படி இருக்க, வெளியே செல்ல மகன் வரவும், "கண்ணா சாப்பிட்டு போடா" என ரேவதி கூற, "நோ மாம் வெளியே சாப்பிட்டுகிறேன் எனக்கு மீட்டிங் இருக்கு" என அவன் கூற
அதை கேட்ட அவரோ, "என்னமோ போ ப்பா தினமும் உனக்கு பிடிச்ச மாதிரி 10 முதல் 15 வகையான உணவை சமைச்சு வைக்கிறேன்.. ஆனால் நீ எதையும் சாப்பிட மாட்டேங்குற" என்று குறைபட்டுக் கொள்ள அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை..
அதைப் பார்த்த ராம் மோகன், "அவனை கெடுக்கிறதே இவ ஒருத்தி தான்" என்று எண்ணியவர், தன் மகனைப் பார்த்து, "எனக்கு உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்" என்றார்..
"எனக்கு டைம் இல்ல மீட்டிங் இருக்கு" என்று அவன் திமிராக கூறினான்.. ஆம் இது தன அவனுடைய குணம்.. தந்தையே என்றாலும் அவனுக்கு சமயம் இருந்தால் தான் அவன் பேசுவான் இல்லை என்றால் முகத்தில் எடுத்தது போல இல்லை எனக் கூறி விடுவான்..
சில காலங்கள் முன் வரை தந்தையுடன் நல்ல உறவு இருந்தது.. அது இப்போது இல்லை அதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை அப்படி பேசினாலும் உரசுவது போல தான் இருக்கும்...
அவனின் பதிலை கேட்ட அவர் கடுப்பாகி, ஒரு விசயத்தை போட்டு உடைக்க அதை கேட்டவன் அதிர்ந்தான்..
"வாட் யூ மீன்.. வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்" என கேட்க
"நான் சொன்னது தெளிவா கேக்கலயா? என் சொத்தை எல்லாம் நான் மாத்தி எழுதி இருக்கேன்..அதுல நீ புதுசா ஸ்டார்ட் பண்ணிட்டு இருக்கிற கம்பெனியும் அடங்கும்.. அதாவது லோக்கல், இன்டர்நேஷனல் எல்லாவிதமான சொத்துக்களையும் நான் மாத்தி எழுதி இருக்கேன்..சோ இனிமேல் நீ இதுல இருந்து விலகி இருக்கிறது தான் சரியான முடிவு.." என அவர் மேலும் ஒரு குண்டை தூக்கி போட,
அதை கேட்ட அவன் வெகுண்டு விட்டான்..இந்த கம்பெனிக்காக ஐந்து வருடம் அவனுடைய கடின உழைப்பை போட்டு இருக்கிறான் எப்படி அதை அவன் விட்டு விட்டு போவான்..
"இதோ பாருங்க பழிவாங்க இதையெல்லாம் செய்யறீங்க அப்படின்னா இதுக்கு மேல பழிவாங்க எனக்கு தெரியும் தேவையில்லாத வேலை பண்ணிட்டு இருக்காதீங்க காலையிலேயே கடுப்பு கிளப்பாதீங்க" என்றான்..
"நான் ஏன் பொய் சொல்ல போறேன் இதோ இந்த பேப்பர் பாரு நான் மாத்தி எழுதிட்டேன்.. இனி ஒரு வாரத்துல எல்லாமே ப்ராசஸ் பண்ணிடுவேன்" என அவன் முகத்துக்கு நேராக காட்டினார் ராம் மோகன்..
அதை பார்த்தவன் மேலும் கடுப்பாகி அந்த உயிலில் அவர் குறிப்பிட்டு இருந்த பெயரை பார்த்து மேலும் அதிர்ந்தான்..இதை எல்லாம் நடக்கவே விட கூடாது என முடிவு செய்தான் அவன்..
பிறகு அவன், "ஓ இதுக்காக தான் இதையெல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்களா என்னைய விட இது உங்களுக்கு முக்கியமா போயிடுச்சு அப்படித்தானே? நான் ஆரம்பத்தில் வேலை செஞ்சது உங்க கம்பெனியில் இருக்கலாம்.. ஆனால் இப்போ நான் எனக்கான ஒரு கம்பெனியை உருவாக்கிட்டு இருக்கேன்..
என்னோட உழைப்பு அதுல அதிகம் உங்களுடைய சொத்தை நீங்க என்னமோ பண்ணிக்கோங்க.. யாருக்கு வேணாலும் கொடுத்துக்கோங்க.. எனக்கு அதுல பிரச்சனை கிடையாது.. ஆனால் இதுல நீங்க கை வைக்கவே முடியாது" என்று அவன் ஆணித்தரமாக கூறினான்..
அதை கேட்ட அவர் கூலாக, "கோபமா இருந்தா யோசிக்க கூடிய திறன் இருக்காதாமா அப்படித்தான் இருக்கு உன்னுடைய நிலைமை ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன் நீ புதுசா ஆரம்பிச்ச கம்பெனியும் சரி ஆரம்பிக்கப் போற கம்பெனியும் சரி எல்லாத்துக்கும் நான்தான் பவுண்டர் சோ என் பேருல தான் இருக்கு.. அப்போ எனக்கு எதை எப்படி வேண்டுமானாலும் மாத்தி எழுத உரிமை இருக்கு இதுல சொன்னபடி நீ கேக்கல அப்படின்னா மொத்தமா நீ வெளியே போக வேண்டியதுதான் எப்படி வசதின்னு நீ யோசிச்சுக்கோ" என அவர் கூறினார்..
அதைக் கேட்டவன், "என்ன மிரட்டி பாக்குறீங்களா? கண்டவளுக்காக என்னை பகைச்சுக்காதீங்க" என கூறினான்..
"பல தடவை நான் இதைப் பற்றி பேசி இருக்கிறேன் நீ அப்ப எல்லாம் தட்டி கழிச்ச இப்போ என்னோட முடிவை நான் எடுக்கிறேன்.. ஒன்னு அவங்க கூட சேர்ந்து வாழற வழியை பாரு இல்லை என்னுடைய சொத்தை நான் அவங்களுக்கு எழுதி கொடுத்திடுவேன் அவ்வளவுதான்" என அவரும் கூற,
அதை கேட்டவன் முகம் இறுகி ஒரு வாழ்க்கை அவளோடு வாழ்வதா என எண்ணி, "இதோ பாருங்க இப்பவும் சொல்றேன் உங்க சொத்துல எனக்கு சல்லி பைசா கூட வேண்டாம்.. நீங்க அதை எவளுக்கோ குடுங்க எனக்கு பிரச்சனை இல்லை..
ஆனால் நான் சம்பாதிச்சது எனக்கு ரொம்ப முக்கியம். உங்க பேரில் நான் அன்னிக்கு ஸ்டார்ட் பண்ணினேன் அதை வைச்சு இப்போ நீங்க பண்றது சரியில்லை" என அவன் கூறினான்..
அதைப் பார்த்து அவர், "எனக்கும் வேற வழி இல்ல நீ மட்டும் எல்லாரையும் ஏமாற்றும் போது நான் உன்னை ஏமாற்றுவது தப்பில்லையே" என்று அவர் கூறினார்..
அவனைவிட இந்த மாதிரி நுணுக்கமான வேலைகள் செய்வதில் தன் தந்தை கில்லாடி என அவனுக்கு நன்றாக தெரியும் இதனால் பின்னால் பாதிக்கப்பட போவது அவன் தான் என்பதும் நன்றாக தெரியும், "வேற வழியில்லையா? கடைசியா இப்ப என்னதான் சொல்ல வரீங்க?" என்று அவன் கேட்டான்..
அவரும் கூலாக, "இல்லை என்று எனக்கு தோணுது..நான் சொன்னது தான் முடிவு" என்று கூறி விட அவனோ கடுப்பாகி சென்று விட, "உனக்கு ஒரு வாரம் சமயம் தரேன் அதுக்குள்ள ஒரு நல்ல முடிவை எடு" என கூறினார்..
அதை கேட்டவன் தன் கூரிய விழிகளால் அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான் விது பிரதாப்..அந்த விழிகளில் ரௌத்திரம் தாண்டவம் ஆடியது..
இதற்கு எல்லாம் காரணம் அவள் ஒருத்தி தான் என அவள் மீது கோபத்தை வளர்த்தினான்..அந்த கோபத்தால் பாதிக்கப்பட போவது என்னவோ அவள் மட்டும் தான்...
ஆம் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு துவங்கிய தலைவலி இப்பொழுது தான் அடங்கி இருக்கிறது என அவன் நினைக்கும் பொழுது மீண்டும் அந்த தலைவலியை அவனுடைய அப்பா எடுக்க முயற்சி செய்கிறாரா? கண்டிப்பாக விடக்கூடாது இதையெல்லாம் விட ரொம்ப முக்கியம் அவனுடைய கம்பெனியும் அவனுடைய சொத்து அதற்காக அவன் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அவன் செல்வான் என்பது வேறு விஷயம்...
