Share:
Notifications
Clear all

அத்தியாயம் 9

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

"ஆதி நான் உனக்கு ஒரு பொண்ணை முடிவு பண்ணலாம் என்று இருக்கிறேன் எல்லாம் நமக்கு தெரிஞ்ச பொண்ணு தான்" என்று விடியற்காலையிலேயே தயாராகி வந்த அவனிடம் கூறினார் குலசேகரி...

அதைக் கேட்டதும் வைதேகி அருணாச்சலத்திற்கு உணவை ஊட்டி விட்டுக்கொண்டே மனதுக்குள் நொந்து கொண்டார்... அந்தப் பையனே இப்பதான் அமைதியா இருக்கான்...மூணு நாளா அவன் விடியற்காலையில் தான் வரான் அவன் கழட்டி போடும் உடை எல்லாம் மதுவின் வாடை வேற அதனால் மகனின் இந்த போக்கு மகன் நடந்த சம்பவத்தால் குடிக்கு அடிமை ஆகி இருக்கிறானோ என்ற சந்தேகம் அவருக்கு இல்லாமல் இல்லை ஆனால் இந்த சூழ்நிலையில் அவனிடம் இதைப் பற்றி கேட்டு ஒரு வாக்குவாதம் செய்ய வைதேகிக்கு மனதும் இல்லை அதனால் அமைதியாக அப்படி நொந்து இருக்கும் மகனிடம் திரும்பவும் இது மாதிரி இக்கட்டான நிலையில் தள்ளறது இவங்களுக்கு வேலையா போயிடுச்சு என மனதுக்குள் புகைந்து கொண்டார் ...

அவரால் வாயை திறந்து அப்படியெல்லாம் தன் மாமியாரிடமோ அல்லது இந்த வீட்டிலோ உரிமை கோரி விட முடியாது.... அதனாலேயே அவர் அமைதியாக இருந்தார் அவரது அமைதி அவரது மகனின் வாழ்க்கையை பாதிக்கும் என அவர் அறிந்தும் இப்படி இருப்பது சரியில்லை என அவருக்கு தெரிந்து கொண்டே தான் இருந்தது மகனிடம் இதைப் பற்றி தனியாக பேச வேண்டும் என எண்ணிக் கொண்டார்....

யார் என்று அவன் கேட்பான் என சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர் கூற அவன் அவரைப் பார்த்து ,"பாட்டி எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் ஆனால் நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன் நம் குடும்ப கவுரவம் குறையாமல் என்னுடைய கல்யாணம் நடக்கும் நடந்தே ஆகணும்...நடத்தி இருப்பேன்" என்று உறுதியாக கூறியவன்,"ஆனால் நீங்க பார்த்த பொண்ணு நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் பாட்டி" என்று கூறினான்...

அதைக் கேட்ட குலசேகரி அதிர்ந்து பார்த்தார்... இதுவரை அந்த வீட்டில் யாரும் அவரை எதிர்த்து பேசியது கிடையாது அவரது மகன் அருணாச்சலம் முதற்கொண்டு அவர் கூறுவதை தான் கேட்டு நடப்பார்கள், நடக்க வேண்டும் அது அந்த வீட்டின் மாண்பு அதை எதிர்த்து இவன் பேசி இருக்கிறான்...அது அவருக்கு பிடிக்கவில்லை என அவரது முகமே அவனுக்கு கூறி இருந்தது....அதை அவன் பொருட்படுத்தவில்லை ... பொருட்படுத்த வேண்டிய நிலையில் அவன் இல்லை...

குலசேகரி தனது பேரனை பார்த்து,"என்னையா ஏதாவது மனசுல நினைச்சு இருக்கியா????எல்லாம் உன்னை மறக்க சொன்னேனே???" என்று அபிநந்தனாவை எண்ணி கேட்டார்...

"பாட்டி நான் ஒரு விஷயம் நெனச்சி இருக்கேன் என்னை கொஞ்ச நாள் என் போக்கில் விடுங்க அசிங்கப்பட்டது நான்!!!! குடும்பத்துக்காக அமைதியா இருக்கேன் ஆனால் பல நேரத்தில் என்னால என்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியல.. ஆனால் நம்ம குடும்ப மானத்தை வாங்காமல் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.. என்னால முடியல பாட்டி அடக்கி அடக்கி வைக்க முடியல வெடிச்சிடுவேன்னு பயமா இருக்கு அவன் கை ஓங்க நான் விடமாட்டேன் அதுக்கு நான் கல்யாணம் பண்ணியே ஆவேன்" என்று பூடகமாக கூறினான்...

அவன் போக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் வைதேகி மற்றும் குலசேகரிக்கு புரிந்தது..."தம்பி நீ என்ன பண்ணினாலும் பரவாயில்லை உன்னுடைய சந்தோசம் இந்த பாட்டிக்கு முக்கியம்தான் ஆனால் இந்த குடும்பத்துக்கு ஒரு கவுரவம் இருக்கு அந்த கௌரவத்தை எங்கும் நீ விட்டுக் கொடுக்கக் கூடாது" என்று கூறினார் கிட்டத்தட்ட அவர் எச்சரித்தார்...

அதைக் கேட்ட அவனும்,"நம்ம குடும்பம் மானம் எங்கேயும் போகாது என் மேல நம்பிக்கை வையுங்க நான் வரேன்" என்று கூறினான்..

அவன் நேராக சென்றது ஆத்ரேயன் கூட இருக்கும் அவனுக்கு வேண்டப்பட்டவர்களைத்தான் சூறையாட வேண்டும் என்று எண்ணித்தான் ...அதில் சாரதா அம்மா , அபிநந்தனா மற்றும் வசுந்தரா அவள் மீது அவன் அன்பை வைத்திருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன...அப்படி இருக்க சாரதா மற்றும் அபிநந்தனாவை விட்டுவிட்டு அவளை தூக்க முடிவு செய்தவன் அவளது புள்ளி விவரத்தை இரு நாட்களில் சேகரித்து வைத்து விட்டான்... அவனுக்கு இவ்வளவு பெரிதாக அவள் சிக்குவாள் என எதிர்பார்க்கவே இல்லை...

வசுந்தரா எவெர் கிரீன் மருத்துவமனையின் தற்போதைய நிறுவனர் மற்றும் மருத்துவர்...கூட படித்த இந்திரஜித் என்பவனை காதலிக்க அவனோ அவளுடைய முறை பெண்ணான திலோத்தமாவை திருமணம் செய்து விட்டான்...அப்படி இருக்க அவளை தான் இவன் விருப்பமே இல்லாமல் அடைய துடிக்கிறான்...கிட்டத்தட்ட ஆத்ரேயன் செய்த அதே வேலையை செய்து அண்ணனுக்கு தம்பி என்பதை இந்த விசயத்தில் உறுதிபடுத்தி விட்டான்...

அடுத்த நொடியே அவன் சந்திக்க சென்றது என்னவோ வசுந்தராவின் பெற்றோர்களை தான் அவர்களிடம் வசுந்தராவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டான் ...

ஆதியின் குடும்பப் பெருமையை பற்றி அறியாதவர் இந்த உலகத்தில் இருக்கிறார்களா என்ன அதற்கு வசுந்தராவின் பெற்றோரும் விதிவிலக்கு அல்லது மேலும் இவர்களுக்குள் சிறிய உறவும் இருக்கிறது தாத்தா வழி பழக்கவழக்கம்...ஆம் ஆதியின் தாத்தா கொடுத்த இடத்தில் தான் தற்போது மிக் பெரிய மருத்துவமனையை வசுந்தராவின் குடும்பம் நிறுவி இருக்கிறது...

அப்படி இருக்க மரியாதை நிமித்தமாக வசுந்தராவின் தந்தையை சந்தித்தவன் முறையாக வசுந்தராவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நேரடியாகவே கேட்டு விட்டான் அதைக் கேட்ட அவர் ,"ரொம்ப சந்தோஷமான விஷயம் ஆதி ..எனக்கு உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறது இல்ல ரொம்ப சந்தோஷம் ஆனால் கல்யாணம் என்று சொன்னாலே ஓடிட்டு இருக்கா என்ன செய்யறது???" என்று கேட்டார்...

"அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் கல்யாணத்துக்கு நீங்க ஏற்பாடு பண்ணுங்க வீட்ல வந்து பேசுவாங்க" என்று கூறியவனை பார்த்த அவரோ, "உங்களுக்கு நிச்சயம் பண்ணின பெண்ணை ஆ..." என்று தொடங்க அதற்குள் கையை தூக்கி அவரது பேச்சை நிறுத்திய அவன், "நிச்சயம் நடந்த விடயம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு அப்படின்னா கல்யாணம் ஏன் நின்னு போய் இருக்குன்னு அப்படின்னு உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே அதை எல்லாம் விடுங்க... நான் பேச வந்தது வசுந்தராவை பத்தி அவளை பத்தி மட்டும் என்கிட்ட பேசுங்க அண்ட் உங்களுக்கு யாருக்கும் விருப்பம் இல்லைனாலும் எனக்கு ஒன்னும் கவலை இல்லை" என்று அவன் கூறி விட்டான்..

அதை கேட்ட அவளின் தந்தை விழுந்தடித்து கொண்டு ,"அப்படி எல்லாம் இல்லை உங்க சம்பந்தம் கிடைக்க நாங்க கொடுத்து வைச்சு இருக்கணும்" என்று கூறினார்...

"இன்பாக்ட் நாங்களே மிஸ் பண்ணிட்டோம்னு இருந்தோம்" என வசுவின் தாய் நேரிடையாகவே இதற்கு சம்மதம் என்பது போல கூறி விட அதை அவன் எதுவும் கூறாமல் நேராக வசுந்தராவை பார்த்து கிட்டத்தட்ட பிளாக்மெயில் செய்தான் ஆதி...அவளோ மறுத்தாள்...

"ஆம் இந்த திருமணம் நடக்கல அப்படின்னா நாங்க உங்களுக்கு கொடுத்த இடம் இப்போ எனக்கு வேணும்" என்று அவன் அவளுக்கு செக் வைத்தான்...

அவளுக்கு இந்திரஜித் முதல் இதோ அவள் பெற்றோர்கள் வரை அவள் வாழ்கையில் பொய்யாக போக தன்னால் தன் தாத்தா உருவாக்கிய நிறுவனத்தையாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணி கொண்டவள் வேண்டா வெறுப்பாய் திருமணத்துக்கு சம்மதிக்க,அவனும் வெளிநாடு சென்று வந்ததும் திருமணம் என்று கூறி இருந்தான்...

சற்றும் எதிர்பாராத காயை தான் ஆதி நகர்த்தி இருக்க இந்த விசயம் காதும் காதும் வைத்தது போல யாருக்கும் தெரியாமல் செய்து முடித்து இருந்தான்... வசுவை ஆத்ரேயன் பல முறை அழைத்து இருந்தான்...ஆனால் அவள் எடுக்கவே இல்லை...

அவள் அவன் மீது கோபமாக இருக்கிறாள் அதனால் அவனுடைய அழைப்பை நிராகரித்தாள்...ஆம் அவள் கோபத்தில் தான் இருந்தான் வசுவும் ஆத்ரேயன் இருவரும் பால்ய கால நண்பர்கள்...

இருவருக்கும் இடையே மூன்று நான்கு வயது வித்தியாசம் இருந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் இருவரும் நண்பர்கள் ஆகியிருந்தனர்...

பள்ளியில் படித்த இருவரும் நல்ல நண்பர்கள் அந்த நட்பு இன்று வரையும் தொடர்ந்து கொண்டு இருந்தது ..

ஆத்ரேயன் தன் மனதை சில சந்தர்ப்பங்களில் அவளிடம் பகிர்ந்து கொள்வான்... பெரும்பாலும் தன் மனதை மறைத்தே வைப்பவன் அவளிடம் மட்டும் சற்று இலகுவாக இருப்பான்...

வசுந்தராவின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தாலும் இருவரும் நண்பர்கள் என்பதால் அவர்களும் விட்டுவிட்டு இருந்தனர்....

இருவர் மனதிலும் தவறான எண்ணங்கள் எதுவும் இல்லை என்பதை அவர்கள் நன்றாக அறிந்தும் இருந்தனர்.... அப்படி இருக்க இப்பொழுது எல்லாம் ஆத்ரேயன் குணம் அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவனை எங்கும் அவள் விட்டுக் கொடுத்தது கிடையாது....

இருவருக்குள்ளும் உன் விஷயத்தை நீ பார் என் விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற அடிப்படையில் தான் அவர்களே நண்பர்கள் ஆகி இருந்தனர்... முக்கியமாக வசுந்தரா லொடலொட வாய் பேசிக்கொண்டே இருப்பாள்… ஆனால் இவனும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தான் பின்னாளில் பல விஷயங்கள் அறிந்த பின்னர் அவன் அவன் சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது இல்லை...

அதனால் பொதுவாக இருவரும் தங்கள் குடும்ப விஷயத்தை பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்... மேலும் தங்கள் மனதில் இருக்கும் விஷயங்களையும் தேவைப்பட்டால் மட்டுமே பகிர்ந்து கொள்வார்கள் முன்பு எல்லாம் நன்றாக பகிர்ந்து வந்தவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவரவர் அவரவர் கூட்டில் ஒதுங்கிக் கொண்டனர்... ஆனாலும் இப்பொழுதும் சினேகம் விட்டுப் போவது இல்லை..

வசுவும், ஆத்ரேயன் கல்யாணம் செய்து விட்டான் என்பதை மற்றவர்களைப் போல பேப்பரை பார்த்து தான் தெரிந்து கொண்டாள்...

அதை கண்டதுமே அவளுக்கு சரியான கோபம் தான் வந்தது... எதற்கு அடுத்தவர் குடும்பத்தில் இப்படி தேவையில்லாமல் தலையிட வேண்டும்... அதுவும் வேறொருத்தனுக்கு நிச்சயமான பெண்ணை எதற்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று எண்ணி அவனை அழைத்தால் அவனோ போனை எடுக்க மறுக்கவும் இவளுக்கு ரோஷம் வந்துவிட்டது...

"அவனுக்கே அவ்வளவு திமிர்னா இருக்கட்டும் பார்க்கிறேன் என்னை தேடி வரும் போது அவனுக்கு இருக்குது" என்று எண்ணிக் கொண்டவள் பிறகு ஆதியின் தொல்லையும் மேலும் அவள் வாழ்க்கையில் இந்திரஜித்துக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை அறிந்தவளோ இந்திரஜித் மனைவியிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாள்.. அது வேறு கதை.. ஆனால் இந்திரஜித் உறுதியாக தன் மனைவி தான் வேண்டும் என்று கூறியதால் இந்த வாழ்க்கை வேண்டாம் எனக் கூறி வெளியே வந்து விட்டாள்...

அப்படி இருக்க ஆத்ரேயன் செய்த வேலைக்கு தான் ஆதி இவளை பழிவாங்குகிறானோ என எண்ணிக் கொண்டவள் அதை நேரடியாக ஆதியிடமே அவன் லண்டன் செல்லும் முன் இவளை காண வந்திருந்தான் ..அப்பொழுது கேட்டு விட்டாள்...

"நீங்க என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பப்படுறீங்க ஆனா எதுக்குன்னு சொல்லவே இல்லையே??? நான்தான் பணம் கூட கொடுக்க தயாராக இருந்தோமே???? இன்பாக்ட் உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல" என்று உள்ளதை உள்ளபடி முகத்துக்கு நேராகவே கேட்டுவிட்டாள்...

அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை சிந்தியவன்," உன் பணம் யாருக்கு வேணும் எனக்கு பணத்தை விட என்னுடைய கௌரவம் தான் பெருசு அதைவிட உன்னுடைய நண்பனை உசுரோட கொன்னே ஆகணும்... அதுக்கு தான் உன்னை கல்யாணம் பண்ண போறேன்னு வச்சுக்கோ!! என்னோட வாழ்க்கை பலியாகி தான் அந்த பொறுக்கிய சாகடிக்க போறேன்... எனக்கு மட்டும் உன்னை பார்த்ததும் பிடிக்க எல்லாம் இல்ல.. அதனால ரொம்ப ஓவரா டிராமா பண்ணிட்டு இருக்காத!! என்னவோ நான் உன் பின்னாடி வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்று தப்பா நினைச்சுக்காத ரிவஞ்ச் பண்ண தான் கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா???" என்று கோபத்தோடு தெளிவாக எதற்காக இந்த திருமணம் நடக்க இருக்கிறது என்பதை கூறிவிட்டு சென்றான்...

இது சரி இல்லை என்று கூறி திருமணம் ஆனதிலிருந்து வசுவை அழைத்துப் பார்த்து தோற்று இருந்த ஆத்ரேயன் அவளை நேரடியாக காண மருத்துவமனைக்கு சென்றான்... அங்கு அவரது தந்தை இருக்க இவனை கண்டதும் அவர் பாராமுகமாக இருந்தார்...

ஆம் அந்த வீட்டில் வசுக்கு மட்டும் தான் இவனை ரொம்ப பிடிக்கும்... அப்படி இருக்க ஆத்ரேயன் கண்டதும் அவளது தந்தை," லுக் ஆத்ரேயன் என் பொண்ணும் நீங்களும் நண்பர்களாக இருக்கலாம் அதெல்லாம் எப்பவோ நடந்து முடிந்த விஷயம்... இப்போ அவளுக்குன்னு கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்கோம்... அதனால இனி நீங்க அவளை பார்க்க வரத் தேவையில்லை.. உங்களுடைய நட்பும் அவளுக்கு தேவை இருக்காதுன்னு நினைக்கிறேன்" என்று கூற அதைக் கேட்டதும் இவன் கோபமுற்றான்...

மேலும் ,"என்ன அவளுக்கு திருமணமா??? அப்போ அவள் காதலித்து இருந்த பையன் கூட தான் கல்யாணமா சொல்லவே இல்ல அவன் ஒத்துக்கிட்டானா???" என்றெல்லாம் எண்ணினான்.. ஏனெனில் அதன் பிறகு அவளிடம் சரியாக அவனால் பேச முடியாத நிலை ஏற்பட்டது அவனுக்கு அபிநந்தனாவை திருமணம் செய்ய வேண்டும் அதனால் இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று ஆத்ரேயன் சரிவர தெரிந்து கொள்ள வில்லை என்று வேண்டும் ஆனாலும் கூறலாம்...

ஆனால் தன்னை மட்டம் தட்டிய வசுந்தராவின் தந்தையை நாலு கேள்வி கேட்கவில்லை என்றால் அவன் என்ன பெரிய மீசை வைத்துக் கொண்டு அவரது முன்னால் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நிற்பது அதனால் அவரை பார்த்து,"மிஸ்டர் வெங்கடேஷ் நீங்க அதை சொல்ல வேண்டாம் உங்க பொண்ணு கிட்ட நான் பேசணும்னு விருப்பப்பட்டால் நான் பேசி இருப்பேன் பேச கூடாதுன்னு விருப்பப்பட்டால் பேசி இருக்க மாட்டேன் எங்களுக்குள்ள நீங்க வராதீங்க… உங்க பொண்ணு சொல்லட்டும் என்னை பார்க்க வர வேண்டாம், பேச வேண்டாம்ன்னு அவ சொல்லட்டும் நீங்க சொல்ல வேண்டாம் இப்ப கூட நான் உங்க பொண்ணை பார்க்க தான் வந்தேன் அவ இல்லைன்னு நான் என்னோட வீட்டுக்கு போயிருப்பேன் ஆனா நீங்க இத சொன்னதுனாலயே இப்ப நான் உங்க வீட்டுக்கு தான் போறேன் அவள பாத்துட்டு தான் மறு வேலை" என்று கூறினான் அவன்...

அதைக் கேட்டதும் வெங்கடேஷ் கோபப்பட்டு அதையும் பார்க்கலாம் ...என்று கூறி விட்டு உடனே வீட்டுக்கு அழைத்து அவன் வந்தால் உள்ளே கூட விட கூடாது என்று காவலாளியிடம் கூறி விட்டார்...

"இந்த இடியட்டுக்கு என்ன கேடு கூப்பிட்ட ஃபோன் எடுக்க மாட்டாளா??? இவளால கண்ட கண்ட பரதேசி எல்லாம் என்னை கேள்வி கேக்குது" என்று அவளது தந்தையை தான் திட்டுகிறோம் என தெரிந்தே திட்டினான் ஆத்ரேயன்...

அவளை திட்டிக்கொண்டே அவள் வீட்டுக்கு வீம்புக்கு சென்றான் ஆத்ரேயன்... அவளை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது.... அவனுக்கு இப்போது வரை அவளுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது... ஆதி தான் மாப்பிள்ளை என்பது தெரியாது...

அப்படி இருக்க தன் திருமண விஷயத்தை பற்றி பேச தான் அவளைக் காண சென்றான்...

ஆனால் வாயிலில் வைத்தே காவலாளி அவனது காரை தடுத்து,"சார் உங்களை உள்ளே விடக்கூடாது என வெங்கடேஷ் சார் சொல்லி இருக்காங்க" என்று கூற அவனது பொசுக்கும் பார்வையை பார்த்த காவலாளி,"சார் நான் அவங்க சொல்றது தானே சார் செய்ய முடியும்" என்று தன்மையாக கூற அந்த இடத்திலிருந்து வசுவை அழைத்தான்..

வசு அப்போதும் எடுக்காமல் போக ஆத்ரேயனுக்கு ஆத்திரமிகுதியில் ,"நீ என்ன ரொம்ப இன்சல்ட் பண்ற வசு என்னை பத்தி தெரிஞ்சும் நீ போன் எடுக்காம என் அவாய்ட் பண்றது எனக்கு எரிச்சலா இருக்கு... ஒரு நாள் நீ என்னை தேடி வருவ அப்ப நான் பாத்துக்குறேன்" என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்...

என்னவோ அவன் அவமானப்பட்டது போன்ற ஒரு உணர்வைத் தான் வசுந்தராவின் வீடு அவனுக்கு கொடுத்தது....இனி அவளாக அழைக்காமல் அவளை தேடி வருவது இல்லை என அவன் முடிவு செய்தான்...

ஆனால் வசுவும் என்ன நடக்க போகிறது என்ற விசயத்தை அவனிடம் கூறி இருக்கலாம்!!!! கூறாமல் அவளுக்கும் அவனுக்கும் இடையே உள்ள பிளவை பெரிதாக்கி விட போகிறாள் என்பதை அவள் இந்நேரம் உணரவில்லை....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top