Share:
Notifications
Clear all

அத்தியாயம் 8

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அந்த பிரபலமான மருத்துவமனையில் முன்னால் ஆதியின் கார் கர்ஜித்து நின்றது அதை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்த ஆத்ரேயன் தன் மனைவியின் கைகளை இறுக்கமாக பிடித்திருந்தான்.... அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை தலை குனிந்தபடி இருந்தாள்..அவளுக்கு தான் எங்கு வந்து இருக்கிறோம் என்று கூட தெரியாத நிலையில் தானே அவள் இருந்தாள்... ஆனால் அவள் அப்படி நிற்கவும் எதிரே காரில் இருப்பவன் வேறு முறைக்கவும் இவனுடைய அகம்பாவம் சுடர் விட்டு எரிய அதை அவளிடம் அப்படியே கொட்டினால் தானே அவனுக்கு நிம்மதியாக இருக்க முடியும் அதனால்

அவனும் அவளது காது வரை குனிந்து, "என்ன அவனை பார்க்காம இருக்க முடியலையா இருக்கமுடியாது என்கூட இரவெல்லாம் இருந்துட்டு காலைல எழுந்து அழுதவ தானே நீ... நீ என்கூட மட்டும் தான் அப்படி இருந்த அப்படின்னா அவனை நிமிர்ந்து பார் இனி வாழ்க்கை முழுவதும் உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலானாலும் என் கூட ஒரே பெட்ல நீ படுத்து தான் ஆகணும்" என்று வெட்கமே இல்லாமல் கூற என்ன மனிதன் என்று எண்ணியவள் நிமிர்ந்து தன் எதிரே உள்ள காரை பார்த்தாள்...

அவளுக்கு உண்மையில் யார் கண்ணெதிரே இருக்கிறார்கள் என்று கூட தெரியாது இருந்தும் அவன் கூறியதும் மனதுக்குள் இவன் வாய் என்ன தேளா இப்படி கொட்டிட்டே இருக்கான் என்று நிமிர்ந்து அவள் பார்க்க, அங்கு ஆதியை காரை கண்டதும் அவள் சற்று அதிர தான் செய்தாள்.... அதிலும் எப்பொழுதும் பாசமாக பேசும் ஆதியின் தாய் வைதேகி அவர்களை பார்க்க கூட அவளுக்கு முடியவில்லை ...

ஆனால் ஆதிக்கு நேற்று இரவு தான் இவள் மீது உள்ள வன்மத்தை எல்லாம் மனதில் சேகரித்து வைத்து அவளை அவளது கணவனோடு சேர்ந்து பழி வாங்கும் எண்ணத்தில் இருக்கிறானே அதனால் அவர்களின் நெருக்கம் கூட அவனுக்கு எரிச்சலை கொடுத்தது என்ன ஆனாலும் இனி இவனை வளரவே விட கூடாது என்று எண்ணினான் ஆதி...எதற்காக அவன் இங்கே இருக்கிறான் என்பதும் அவனுக்கு தெளிவாக தெரியும் அதனால் காரிலிருந்து இறங்கிய ஆதி காரின் பின்பக்க கதவை திறக்க முயல அதற்குள் காரிலிருந்து வைதேகி இறங்கினார் அவரது மனம் படபடவென அடித்துக்கொண்டது என்ன நடக்க போகிறதோ என்று , இருந்தும் மகன் முன்னால் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவரும் மகன் கார் கதவைத் திறக்கும் திசை நோக்கி விரைந்தார்...

அங்கு சக்கர நாற்காலியில் ஆட்டோமேட்டிக்காக ஆதி ஒரு பட்டனை அழுத்தியதும் அந்த சக்கர நாற்காலி அப்படியே திரும்பி காரிலிருந்து கீழே இறங்கிய அதில் அமர்ந்திருந்தார் அருணாச்சலம்...

அருணாச்சலத்தை காரிலிருந்து கீழே இறக்கியதும் வைதேகி வேகமாக சக்கர நாற்காலியை தள்ள போக ஆதி மறுத்து," அம்மா இருங்க நானே அப்பாவை அழைச்சிட்டு வர்றேன்" என்று கூறினான்... அவர் அருணாச்சலம் ஆதியின் அப்பா...இல்லையில்லை ஆத்ரேயனின் தந்தையும் அவர் தானே??? அவரால் எழுந்து நடக்க இயலாது பேசவும் இயலாது ஆனால் உயிரும் உணர்வும் மட்டுமே உள்ள ஒரு ஜடம் அந்த நிலையில் தான் அவர் இன்று வரையும் வாழ்க்கையை நடத்தி வருகிறார் அவரது ரெகுலர் செக்கப்பிற்க்காக இந்த மருத்துவமனைக்கு மாத மாதம் இதே நாள் எப்பொழுதும் வருவார்கள் அதை அறிந்து கொண்டு தான் ஆத்ரேயன் வந்து நிற்கிறான் என்பதை அங்கு இருக்கும் அனைவரும் அறிவர் அபியை தவிர...

அப்படி இருக்க அவரை கண்டதும் ஆத்ரேயன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு அவர் முன்னால் போய் நின்றான்... இங்கு இவளுக்கோ எதற்காக இவர் இதையெல்லாம் செய்துட்டு இருக்கார் அடுத்தவங்க மனசை நோகடித்து பார்கிறதே இந்த மனுஷனுக்கு வேலையா போயிடுச்சு மனதுக்குள் எண்ணிக் கொண்டே இது எல்லாம் விதி என்பது போல அவனுடன் சென்றாள்...

அருணாச்சலம் என்னதான் சக்கர நாற்காலியில் தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் அருணாசலத்திற்கு உயிரும் உணர்வும் இருப்பதால் அவரது கண்கள் காரில் இருந்து இறங்கியதும் ஆத்ரேயனை கண்டுவிட்டார்...அவனை கண்டதும் அவரது கண்கள் வேகமாக பனித்தன....

ஆத்ரேயனை கண்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன என அருணாச்சலம் எண்ணிக்கொண்டார்... அன்றைய சம்பவத்திற்குப் பிறகு இன்று தான் அவனை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருந்தது...எத்தனை நாள் யாரிடமும் கூற முடியாமல் தவித்து இருப்பார்....அவரது ரணம் பட்டு இருப்பதை அவர் மட்டுமே அறிவார்..மகனை கண்ட நொடி அவர் கண்கள் யாரையோ தேடியது...அது அவரின் ஆசை சாரதாவை தான் ஆனால் அவர் கண்ணில் அகப்படவில்லையே ஒரு வேளை சாரதா வரவில்லையோ??? என கண்களாலேயே தேடினார்..சாரதா கிடைக்காமல் போக மகனை ஏக்கம் சுமந்த விழிகளில் பார்க்க துவங்கினார்..அவனை கண்டதும் அவருக்கு இன்ப அதிர்ச்சி மற்றும் உள்ளம் குளிர்ந்தது என்று கூறினால் மிகையாகாது...

அப்படியிருக்க அவனது மாற்றம் அப்படியே அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது...கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு அவனை அவர் காண்கிறார்... ஒரு இருபத்தி எட்டு வயதில் தான் எப்படி இருந்தோமோ அப்படி தன் கண் முன்னே தனது மூத்த மகனான ஆத்ரேயன் நிற்பதை கண்டவர்க்கு கண்கள் பனிக்க இங்கு அவரது சக்கர நாற்காலியை தள்ளி கொண்டிருக்கும் ஆதிக்கு சற்று கடுப்பாக இருந்தது என்ன தான் அப்பாவுக்கு எல்லாம் செய்தாலும் அவரது மனம் முழுவதும் இவனை சுற்றி தானோ என எண்ணிக்கொண்டான்....

ஆம் ஆத்ரேயன் மற்றும் ஆதித்தியன் இருவரும் அருணாசலத்திற்கு பிறந்தவர்கள் தான் ... ஆனால் இருவரும் வந்த இடம் தான் வேறு வேறு... ஆம் ஒரே தந்தை வெவ்வேறு தாய் அது தான் இவர்களுக்கு பிரச்சனையாக இருந்தது... காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதைப்போல அருணாசலத்திற்கு தன் இரு மகன்களும் அவரது இரு கண்கள் போலத்தான் அதை எவ்வளவோ முறை இருவருக்கும் புரிய வைக்க முயன்றிருக்கிறார் ஆனால் இருவரும் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை இப்பொழுது ஜென்ம சத்ருவை போல இருவரும் காட்சி அளிக்கின்றனர்...

ஆத்ரேயன் தன் தந்தைக்கு அருகில் வந்து நின்றவனுக்கு ஒரு நொடி சிலிர்த்தது அவருடன் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது...அவன் எண்ணினாலும் அவரால் பேச இயலாது அது வேறு விசயம் இத்தனை வருடத்துக்கு பிறகு வேண்டுமென்றே வீம்புக்கு என்று அவன் அவர் முன்னே வந்து நிற்கிறான் அதுவும் தன் மனைவியோடு தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை அவனுக்கு அவரிடம் கூறியே ஆக வேண்டும் அதனால் அவன் இங்கு வந்து இருக்கிறான்... அது ஆதிக்கு எரிச்சலாக இருக்க வைதேகிக்கு வருத்தமாக இருந்தது...

ஆதியின் தந்தை தான் தன் கணவனின் தந்தை என அபி நந்தனா அறிவாள் அப்படியிருக்க இந்த ஒரு காரணம் தான் சிவப்பிரகாசம் தன் மகளை ஆத்ரேயனுக்கு திருமணம் செய்து கொடுக்க முன்வராததும் அதற்கு முக்கிய காரணம் அப்படி இருக்க ஏறெடுத்து பார்க்கும் தன் தந்தையை எந்த உணர்வுகளை வெளிக்காட்டாமல் இறுகிய மரம் போல பார்த்த ஆத்ரேயன், "நான் கல்யாணம் பண்ணிட்டேன் இது தான் என்னோட மனைவி" என்று கூற அதை கேட்ட ஆதிக்கு கடுப்பாகி," ஆமாம் உங்களுக்கு பிறந்த மகன் கல்யாணம் நின்னு போனதுக்கும் காரணம் இதோ இவன் தான் அதையும் நல்லா கேட்டுக்கோங்க நான் கல்யாணம் பண்ண வேண்டியவளை கடத்தி கல்யாணம் பண்ணி இருக்கான் இது எல்லாம் ஒரு பொழப்பு" என்று வெகுண்டு கூறினான் ஆதி...

அதை கேட்டதும் ஆத்ரேயன்," அது நான் என்ன பண்ண முடியும் ப்ரோ இவளுக்கு என்னை தான் பிடிச்சு இருக்காம்" என்றான் அவனை வேண்டும் என்றே வெறுப்பு ஏற்றினான்..

அதில் கடுப்பான ஆதி,"வாயை மூடு இதோ இவளை கட்டிட்டா நீ ஜெயிச்சதா நினைப்பா??? இப்போ சொல்றேன் டா நான் தூக்கி எரிஞ்ச செருப்பு தான் இவ" என்று வேண்டும் என்றே அவனை வெறுப்பேற்றுவதாக கூறி அவளை அவமானப்படுத்த அவளோ அதிர்ந்து ஆதியை பார்க்க அவனும் அதே நேரம் அவளை தான் பார்த்தாள்.. அவளை வருத்தப்பட வைக்க வேண்டும் என்று தானே இதை எல்லாம் அவன் கூறி கொண்டு இருக்கிறான்..

"சீ என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் இவனைப் போய் நல்லவன் என நம்பினேனே தன் கணவன் என கூறி கொண்டிருக்கும் இவன் கூட செய்வது எல்லாம் தவறு என்றாலும் நான் தவறானவன் என்று கூறிவிட்டு தான் அதை செய்கிறான் அதுவே ஆதியை போல உள்ளவர்கள் நல்லவன் வேடம் போட்டு சமயத்திற்கு தகுந்தது போல மாறும் குணம் கொண்ட நயவஞ்சகர்கள் என அவள் எண்ணுமளவுக்கு அவனது பேச்சு இருக்க ஆதி தான் பேசுவதா என நம்ப முடியாமல் திணறினான்...அதைக்கேட்டு இவள் வேண்டுமானாலும் வாயை மூடிக்கொண்டு இருக்கலாம் ஆனால் அவள் கணவன் அப்படி நிற்க மாட்டான்...

"நீ வேண்டாம்னு ஒதுக்கினியா??? ஹா ஹா குட் ஜோக் அப்போ நேத்து வந்து என் பொண்டாட்டி கிட்ட கெஞ்சியது எல்லாம் மறந்து போச்சா ப்ரோ???எப்பவும் எனக்குப் பிறகுதான் நீ அதை எப்பவுமே மறந்துடாத அப்புறம் இவ என்னுடைய பொண்டாட்டி இன் ஃபேக்ட் உனக்கு அவ அண்ணி அதற்கான மரியாதையை நீ கொடுத்துதான் ஆகணும் புரியுதா ப்ரோ???" என்று கூறினான் ஆத்ரேயன்...

"யாருக்கு யார் டா அண்ணி நீ என்ன என் கூடவா பொறந்த?? இவளை அண்ணின்னு சொல்ல??? கண்டவனை எல்லாம் உரிமை கொண்டாடும் அளவுக்கு ஆதி இன்னும் தரம் இரங்கலை!!! இப்போ சொல்லு யாருக்கு நீ பிறந்தேன்னு உனக்கு இப்போவாவது தெரியுமா???" என்று வேண்டும் என்றே ஆதி அவளை எங்கே அடித்தால் அவன் வீழ்வான் என்பதை அறிந்து அவன் கூறினான்..அதை கேட்டதும் ஆத்ரேயனுக்கு ரத்த நாளங்கள் எல்லாம் சூடானது.. அதற்கு மேலும் பொறுமை இல்லை என்பதை உணர்த்திய ஆதி சட்டையை பிடிக்க வந்தான் அவனும் தயாராக இருப்பது போல ஆதியின் கழுத்தை பிடித்திருந்தான் ஆத்ரேயன்...

" நான் யாருக்கு பொறந்தேன்னு இதோ வீழ் சேரில் இருக்கிற உன் அப்பாகிட்ட கேளு டா அவர் சொல்லுவார்" என்று கூறி அவனது சட்டையை பிடித்து இருக்க இப்போது ஒரு கைகலப்பு நடக்க எல்லா சூழலும் ஒத்துவர எல்லோரும் அதிர்ந்து நிற்க இதை எல்லாம் வாய் பேச முடியாமல் கண்களில் கண்ணீர் நிறைந்து நிற்க வைதேகி தான் இடையில் வந்து," தயவுசெய்து இரண்டு பேரும் விலகுங்க எல்லோரும் பார்கிறாங்க" என்று இருவரையும் ஒதுக்கியவர் ,"ஆதி இனி போய் டாக்டர் இருக்கிறாரான்னு பார் நான் அப்பாவை கூட்டிட்டு வரேன்" என்று கூறினார்..

"நான் போக முடியாது மா!! நான் ஏன் மா போகணும்??? எனக்கு இன்னிக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகனும் யார் இவன் எதுக்கு இங்கே வரான்??? என் வாழ்க்கையில் ஏன் எல்லா சமயமும் இடையில் வரான்??? இவனை நான் சும்மா விட மாட்டேன் மா"

"இது உன் வீடில்லை யார் வேணாலும் வரலாம் அண்ட் இவரை பார்க்க நான் எப்போ வேணாலும் வருவேன் அதை தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை" என்றான் ஆத்ரேயன்..அங்கு ஆட்டம் சூடு பிடிக்க மகன் விலகி போக மாட்டான் என்பதை அறிந்தவர் ஆத்ரேயனை பார்க்கவே அவருக்கு பயமாக இருந்தது இருந்தாலும் ,"உன்...உங்களுக்கு என்ன வேணும்??? எதுக்கு இப்படி பிரச்சனை பண்றிங்க???" என்று கேட்டார் வைதேகி...

"நான் ஒன்னும் பிரச்சினை பண்ண வரல எனக்கு அவர்கிட்ட ஒரு இரண்டு நிமிஷம் பேசணும் அவ்ளோ தான்" என்று அவர் முகத்தை பார்க்காமல் எங்கோ பார்த்து பதில் கூற, "சரி பேசுங்க" என்று கூறினார் வைதேகி...

"அம்மா என்ன இது??? எதுக்கு தேவை இல்லாத வேலை பண்ணிட்டு இருக்கீங்க??" என்று ஆதி கேட்க,"ஆதி எனக்கு சமாதானம் தான் வேணும்" என்று கூறி மகனின் வாயை அடைத்து விட்டார் வைதேகி...

ஆத்ரேயன் அபியின் கையை பிடித்து அவரின் சக்கர நாற்காலி அருகே சென்றவன்," இவ தான் உங்க மருமகள்" என்று கூறியவன் வேண்டும் என்றே , "உங்க மூத்த மருமகள்" என்று அழுத்தி கூறினான்..அதை கண்டதும் அருணாச்சலத்தின் கண்கள் மீண்டும் கலங்கியது அவனோ உணர்வுகள் இன்றி பார்த்துக் கொண்டிருந்தான் உணர்வுகளை வெளிக் காட்டினால் தான் தோற்றுப் போவது போன்ற உணர்வு அவனுக்கு கிடைக்கும் அதனால் எப்பொழுதும் தன் உணர்வுகளை வெளிக்காட்ட மாட்டான் அப்படி இருக்க அவர் ஏதோ கூற முயன்று தோற்று கொண்டிருப்பதை அவரது கண்கள் அவனுக்கு உணர்த்தின...

அதை கண்டவனோ மேற்கொண்டு அங்கு நிற்க முயலாமல் தன் மனைவியை பார்த்து, " அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கு" என்று கூறி அவன் மாறி நின்று கொண்டான்...பெற்ற தகப்பனே என்றாலும் காலில் விழ கூடாது என்றெண்ணி இருக்கிறான் அதனால் அவன் விழாமல் அவளை விழ சொல்ல அவளும் வைதேகியை ஒரு பார்வை பார்த்து விட்டு அருணாசலத்தின் காலில் விழுந்தாள் இதை எல்லாம் எரிச்சலோடு பார்த்து கொண்டிருந்தான் ஆதி...

பிறகு எதுவும் பேசாமல் தந்தையை ஒரு நொடி பார்த்தவன் தன் மனைவியை பார்த்து, "வா போகலாம்" என்று அவரிடம் விடை பெற கூட தோன்றாமல் அங்கிருந்து சென்று விட்டான்...

மகன் செல்கிறானே என்று அருணாசலத்திற்கு தான் துடித்தது..இத்தனை வருடத்துக்கு பிறகு தன்னை பார்க்க வந்தவன் தன்னிடம் எதுவுமே அவன் பேசவில்லையே என்று அவர் எண்ணினார் அவருக்கு கொஞ்ச நேரமாவது அவனுடன் இருக்க வேண்டும் என தோன்ற அவன் திரும்பி கூட பார்க்காமல் தன் மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் தான் எதற்காக வந்திருந்தாலும் அது நிறைவேறி விட்டதாகவே ஆத்ரேயன் எண்ணினான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top