அத்தியாயம் 7
தன்னை கைகளில் ஏந்தி படுக்கையில் கிடத்தி தன்மேல் விழுந்திருக்கும் அவனது அதிரடியான செயல்களை கண்டு அவளுக்கு மூச்சு திணறியது.. அவனோ எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மென்மையான முத்தத்தோடு துவங்கினான்… தனது காதல் வித்தையை அவனது அருகாமையை மூச்சு திணற வைக்கும் அவனுக்கு அவனது இந்த மென்மையான முத்தம் மூச்சே நின்றுவிடுவது போல இருக்க அவளது கைகள் பிடிமானத்திற்காக அவனது கைகளை தாங்கிக் கொண்டது..
அவனது கைகளில் அவளது கரங்கள் கோர்த்தவுடன் மெல்லிய உணர்வு அவனுள் எழ அவன் அடுத்த கட்டமாக அவளது மென்மையாக முகத்தை பார்த்தவனுக்கு அவளது துடிக்கும் செம்பவள இதழ்கள் அவனை சுண்டி இழுக்க உடலோடு உடல்கள் உரசி கொண்டிருந்தாலும் அவன் பார்வையை எதிர்கொள்ளாத அவள் விழிகளும் அவளிடம் பேசாத அவளது அதரங்களும் அவனை மேலும் நெருங்கி வர செய்ய சூடான மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டு மோதும் போது அவளுக்கு கூச சிலிர்க்க அவள் சிலிர்ப்பை பொருட்டாகவே நினைக்காமல், அவள் காதில்," உனக்கு பிடிக்கலனாலும் உனக்கு தாலி கட்டி ஊரறிய நீ தான் என் மனைவின்னு எல்லோர்க்கும் தெரிந்து என்னை பொறுத்தவரை உன்னை என் மனைவியாக முடிவு பண்ணின நான் என்னோட வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறது எனக்கு தவறாக படல...கிட்டத்தட்ட ஐந்து நிமிடமாக நம்ம இரு உடல்களும் இப்படி உரசி கொண்டு தான் இருக்கு அப்போ உனக்கும் இதில் விருப்பம் இருக்கு அப்படி தானே அர்த்தம் ஏன்னா நீ என்கிட்டிருந்து விலகல அப்படித்தானே??? ஒரு வேளை உனக்கு இப்போ விருப்பம் ஆகலனாலும் போக போக விருப்பம் ஆகிடும் இப்போ நான் செய்யறது ரேப் மாதிரி உனக்கு தோணலாம் ஆனால் அப்படி ஒரு பீல் எனக்கு வரல உனக்கும் பிடிச்ச மாதிரி தான் இருக்கு நீ ரசிக்கிறதை நான் உணர்ந்துட்டு தான் இருக்கேன்" என்றவன் தன் மீது தவறில்லை என்பதை அவளுக்கு உணர்த்த அதை கேட்டு அதிர்ந்த அவளது விழிகளை ஆழ பார்த்தவன் அந்த விழிகளிலே தன் இதழ்களை பதித்தவன் கைகளால் அவள் தேகங்களில் தன் ஊர்வலத்தை துவங்கினான்.. அதற்கு அச்சரமாக அவளது துடிக்கும் அவளது இதழ்கள் அவனது இதழ்களுக்குள் ஐக்கியம் ஆனது...
உடலோடு உடல் உரசும் பொழுது பற்றி எரியும் மோகத்தீ அவனுள் கொழுந்துவிட்டு எரிந்தது.. அவனுக்கு எப்போதும் அவன் என்ன நினைக்கிறானோ அது மட்டும் தான் நடக்க வேண்டும் அதற்காக அவன் எந்த எல்லைக்கும் செல்வான் இதோ அவளை தனது இரு முத்தத்தாலே கூச செய்து அவளுக்கும் இதில் விருப்பம் தான் என கூறி அவளோடு அவன் சல்லாபித்து கொண்டு இருந்தான்... அவளுக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும் அவன் சொல்வது கொஞ்சமே கொஞ்சம் உண்மைதான் இல்லை என்று மறுத்து விட முடியாது அவனது கைகள் அவள் தேகங்களில் ஊடுருவும் பொழுது அவளுக்கு புதுவிதமான உணர்வுகள் இருந்தது என்னவோ உண்மைதான் அதை அவளால் மறுக்க இயலாத வெறும் வாய் வார்த்தையாக அவனிடம் இல்லையென மறுத்தாலும் அவளது மனசாட்சிக்கு நடக்கும் சம்பவங்கள் தெரியும் ஆதலால் தன் உடலையே தனக்கு துணை வராமல் அவனோடு போட்டி போட்டுக் கொண்டிருக்க அவள் நிலை தடுமாறிக் கொண்டிருந்தாள் அவளை அதிகம் யோசிக்க விடாமல் அவன் அவள் கண்களில் முத்து எடுக்க துவங்கினான் அங்கு இனிமையான இல்லறம் இனிதே துவங்கியது...
அதே நேரம் அங்கு பாரில் குடித்துக் கொண்டிருக்கும் ஆதியின் மனநிலையோ நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டு இருந்தது திருமணமே வேண்டாம் என்று தொழிலில் தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டு வந்தவனுக்கு முதல் எதிரியாக ஆத்ரேயன் இருக்க அவன் முன்னால் எதற்கும் தலை குனிந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்த சமயத்தில்தான் இந்த திருமண முடிவு நடந்தது அவனுக்கும் அபியை பிடிக்காமல் இல்லை..
அவளுக்கும் அவனை பிடித்தும் இருக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் விரைவில் நடந்துவிடும் என்று நினைக்கும் பொழுது தான் இந்த ஒரு காரியம் நிகழ்ந்துவிட அதைக்கூட இப்பொழுது ஏற்றுக் கொள்வான் போலும் சிவப்பிரகாசம் பேசியதை தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவருக்கு என்ன தைரியம் இருந்தால் என்கிட்டயே இப்படி ஒரு வார்த்தையை பேசுவார் என எண்ணிக் கொண்டிருக்கும் சமயத்தில் தான் ஸ்ரீ லட்சுமி அவனை அழைத்தாள்...
தன் ஒரே அக்காவுக்கு நடந்த துரோகத்தை கொடுமையை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அதிலும் ஆதியின் நிலையை நினைக்கும் பொழுது அவளுக்கு வருத்தமாக இருக்க அவளது அக்காவை தொடர்புகொண்டு அவள் சலித்து விட்டாள்...வீட்டில் அவளது பெற்றோர் கூறியதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை போலீஸில் புகார் கொடுக்க மாட்டேன் என்று இருக்கும் பெற்றோர்களை என்ன செய்வது என்று புரியாமல் தான் ஆதியை அவள் அழைத்தாள்...
மூன்று நான்கு முறை அழைத்தும் அவளது அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த அவன் பிறகு அவளது தொடர் அழைப்பை பார்த்து போனை எடுத்தான் எடுத்தவனோ அவளது தந்தை மீதும் அவளது அக்கா மீதும் உள்ள கோபத்தை பாவம் ஸ்ரீலட்சுமியிடம் காட்டினான் ஆதி...
"எதுக்கு கூப்பிடுற என்ன விஷயம் சும்மா எதுக்கு தொண தொணன்னு கால் பண்ணிட்டே இருக்க??" என்று கேட்டான்...
"இல்ல அது வந்து நான் இப்படியெல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல நீங்க அந்த ஆத்ரேயனை ஏதாவது செஞ்சு எங்க அக்காவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்" என்று அவள் மனதில் உள்ளதை கூறினாள்...
அதுகேட்ட அவனும் ஏற்கனவே இருந்த கடுப்பில் ,"என்ன எனக்கு ஊர்ல வேற எந்த பொண்ணும் கிடையாதுன்னா நினைச்சுட்டு இருக்கிங்களா??? என்னமோ உங்க அக்கா தான் பெரிய மகாராணி மாதிரி அவ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு என்னை குத்தி காட்டிட்டு இருக்கியா எனக்கு இப்பதாண்டி ஒவ்வொன்னும் புரியுது இது எல்லாம் உன்னோட அப்பனோட வேலையாகத்தான் இருக்கும் உங்க அக்காவோட வேலையாகவும் இருக்கும் என்னை பக்காவா அசிங்கப்படுத்தனும்னு தான் இதை எல்லாம் செஞ்சு இருக்கீங்க???
"இதுக்குத்தான் தராதரம் பார்த்து பழகனும்னு சொல்றது அதெப்படி உங்க அக்கா அவன் தாலியைக் கட்டினதும் தாலியை கழட்ட மாட்டாளா அதுவும் கட்டாய தாலின்னு நாடகம் வேற என்னம்மா என்கிட்டயே நடிக்கிறா??? இதையெல்லாம் பார்த்துட்டு நம்பி உனக்காக அவன் கூட சண்டை போட்டு அவளை அழைச்சுட்டு வருவேன்னு இன்னும் நினச்சிட்டு இருக்கியா உனக்கு தான் உன்னோட அக்காவை பத்தி தெரியல அவ இந்நேரம் அவன் கூட வாழ்ந்துட்டு இருப்பா!!!" என்று மிக சரியாக தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை கணித்து கூறினான் ஆதி...
அவன் உள்ளே அந்த அளவுக்கு கடுப்பு சுழற்றி கொண்டு இருந்தது... அதிலும் சிவப்பிரகாசம் பேசியதுதான் தாங்கவே முடியவில்லை அதுவரை அபியின் மீது வருத்தத்தில் இருந்தவனும் பாட்டி என்னதான் சொன்னாலும் அதை மீற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது சிவப்பிரகாசம் அழைத்து பேசியதுதான் அவனை உச்சகட்ட கடுப்பில் ஆழ்த்தியது அதன்பிறகுதான் தெளிவாக யோசித்து அவனை அவனே குழப்பிக் கொண்டான் இதற்கெல்லாம் காரணம் அபி அவளாக தான் இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டான்..
"ஐயோ நீங்க அக்காவை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க அக்கா எனக்காகத்தான் இதையெல்லாம் செய்ததா அப்பா சொன்னாரு" என்று அவள் கூறினாள்... அதைக் கேட்ட அவனும் ,"அப்படி உன்னுடைய அப்பா சொல்லி இருப்பார் உங்களால பாதிக்கப்பட்டது என்னவோ நானாகத்தான் இருப்பேன் இதனால என் குடும்ப மானம் போனது தான் மிச்சம் ...எவ்ளோ அசிங்கப்பட்டுட்டு இருக்கேன்னு தெரியுமா டி ... போனை வை டி இனி எனக்கு கூப்பிடாத ஏதாவது அசிங்கமா சொல்லிடப் போறேன்" என்று கூறி பட்டென போனை வைத்து விட்டான்.. ஆனால் அவளுக்கு தான் அவனுடைய வலி நிறைந்த பேச்சு அவள் மனதை பாதித்தது அதேநேரம் ஆத்ரேயனின் மீது கோபமும் வந்தது...
விடியல் எப்போதும் போல அழகாக விடிந்தது....ஆனால் இரவு நடந்த களியாட்டத்தில் இன்னும் போதை தெளியாமல் இருவரும் படுத்து உறங்கி கொண்டிருந்தனர்...அபியும் இரு நாட்களாக தன் வாழ்வில் புரட்டி போட்ட மாறுதல்களால் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவள் தீடிரென அவளது இடையில் ஒரு வலிமையான கரம் அழுத்தவும் சுய உணர்வு பெற்று தன் கண்களை திறந்து பார்க்க அவனுடைய கைக்குள் சிறைப்பட்டு படுத்து இருந்தாள் அபி...அவனது மார்பு சூட்டை உணர்ந்து இருந்தவளுக்கு தன் நிலையை கண்டதும் தூக்கி வாரி போட அதே நேரம் நேற்று இரவு நடந்ததும் நியாபகத்துக்கு வந்து அவளை தொல்லை செய்ய வேகமாக அவனிடம் இருந்து விடுபட போராடியவள் மெல்ல அவனது கைகளை விலக்க முனைந்தாள்...அதில் உறக்கம் கலைந்தான் ஆத்ரேயன்..அவனுக்கு நல்ல ஒரு விடியலாக இருந்தது அவன் எண்ணியது எல்லாம் நடந்தால் அப்படி தானே இருக்கும்...
தன் மார்பில் படுத்து இருப்பவள் எழ முற்படும் போது அவளை விடாமல் அணைத்து படுத்து இருந்தான் ஆத்ரேயன்... விடிந்து சில நேரம் ஆகி விட்டதற்கான அறிகுறிகள் தென்பட அவளுக்கோ இதெப்படி நடந்தது சீ பிடிக்காத ஒருவனிடம் என்னை கொடுத்து விட்டேனே என ஊமையாய் அவனது அணைப்பில் இருந்து அழுது கொண்டிருந்தவளின் கண்ணீர் அவனது வெற்று மார்பில் பட அதில் அவன் அனுபவித்து கொண்டு இருக்கும் மோன நிலை இலேசாக கலைந்தது...
நொடியில் அவன் முகம் கடுப்பாகி தன் மேலே சற்று முன் அவளை விடாப்படியாக தன் உடலோடு உடல் உரச படுக்க வைத்திருந்தவன் அவள் அழுது கொண்டிருப்பதை கண்டதும் அவளை சற்றும் எதிர்பார்க்காமல் கீழே தள்ளிவிட்டு இருந்தான்.. அவள் கீழே விழுந்த கணம் அவள் அதிர்ந்து அவனை பார்க்க அவன் முன்னே ஆடைகள் இன்றி இருப்பது கூட அவளுக்கு அசிங்கமாக பட்டது வேகமாக அவள் கைகள் படுக்கையில் இருக்கும் ஒரு போர்வையை எடுத்து தன் மீது போட்டுக்கொண்டாள்...
அவ்வளவுதான் அவள் அவசர அவசரமாக தன் உடலை அவன் பார்வையில் இருந்து மறைத்தாலும் அவனிடம் இருந்தும் அவனது பார்வையில் இருந்தும் அவளது உடலை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவள் தடுமாறிக் கொண்டிருக்க அதைக்கண்ட அவனுக்கு எரிச்சல் தான் பட்டது அவளைப்பார்த்து ,"நான் நேற்று இரவு பார்க்காத எதுவும் இல்லையே சும்மா மறைச்சு மறைச்சு வைக்கிற??? உனக்கு அசிங்கமா இல்லை?? எதுக்கு இப்போ அழுதிட்டு இருக்க??? நேத்து ராத்திரி இந்த அழுகாட்சியை காணோம் இன்னிக்கு என்ன?? விடிஞ்சதும் எல்லாம் மறந்துடுச்சா??" என்று ஈயத்தை காய்ச்சி ஊற்றினான்..அதில் அவள் வருத்தப்படவும் அதை பார்த்து கொண்டு இருக்க அவனுக்கு திராணி இல்லை அதனால் கடிகாரத்தை பார்த்தவன் ,"இன்னும் அரை மணி நேரத்தில் தயாராக இரு ஒரு இடத்துக்கு போகணும் திரும்பி வந்துட்டு உக்கார்ந்து அழு" என்று கூறி விட்டு அவன் சென்று கொள்ள அவளோ அப்படியே அந்த போர்வையில் சுருண்டு குமைந்தாலும் அவனது செய்கை அவளுக்கு பயத்தை கொடுத்தது...
அதனால் வேகமாக எழுந்தவள் தயராக சென்றாள் அரை மணி நேரம் ஆவதற்குள் அவள் தயாராகி வர தாய் ஹாலில் அமர்ந்து இருப்பதை கூட பொருட்படுத்தாமல் உணவு கூட உண்ணாமல் அவளை அழைத்து கொண்டு சென்று விட்டான்...
அவன் அவசரம் அவசரமாக அவளை அழைத்துக் கொண்டு சென்ற இடம் ஒரு மருத்துவமனை பணக்காரர்கள் மட்டுமே வர இருக்கும் மருத்துவமனைக்குள் அவனது கார் நுழைந்தது எங்கு வந்து இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்று எதுவும் அவளுக்கு தெரியாது இப்படி அவனது கைப்பாவையாக போனோமே என அவள் எண்ணிக் கொண்டிருக்க அவனோ மருத்துவமனை பார்க்கிங்கில் காரை நிறுத்தி அவன்," கீழே இறங்கு " என்று கூறினான் அவள் வேகமாக கீழே இறங்கவும் அவளை உரிமையாக அவளது கைகளை பிடிக்க போக அவளோ மறுக்க மறுக்க அவளது கைகளை இறுக்க பிடித்து கொண்டு அவன் செல்ல எதிரே மிக சரியாக ஆதித்தியனின் கார் அந்த மருத்துவமனைக்கு வந்தது....
இதை எதிர்பார்த்து தானே இவன் இங்கு அவளை அழைத்து வந்து இருக்கிறான் காரை கண்டதும் ஆத்ரேயன் நிற்க வாகனத்தை செலுத்தி கொண்டிருந்த ஆதித்தியனும் காருக்குள்ளே இருந்து இவனை பார்த்தும் காரின் ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தினான்..அதை பற்றி கவலை இல்லாமல் ஆத்ரேயன் நின்று கொண்டிருக்க ஆதித்தியனின் அம்மா வைதேகி," என்ன பா என்ன ஆச்சு?? எதுக்கு கோபப்படுற??" என்று கூற ,"அங்கே பாருங்க யார் வந்து இருக்காங்கன்னு" என்று கூறிய திசையை பார்த்ததும் வைதேகி அதிர்ந்தார்...இன்று என்ன நடக்க இருக்கிறதோ என்று அவர் எண்ணினர்...அதற்கு தகுந்தது போல தான் இருவரும் சந்தித்து
வேறு விட்டார்களே??? அப்போ பிரச்சனை வராமல் இருக்குமா என்ன???
