Share:
Notifications
Clear all

அத்தியாயம் 6

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அவன் கூறியதை எண்ணிப் பார்க்கும் பொழுது அவளுக்கு கூசியது...என்ன மனிதன் இவன் என நினைக்க தோன்றாமல் இல்லை... அவள் அப்படியே நின்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு வேலைக்காரி அவளது அறைக்குள் வந்து ஒரு தட்டில் அவள் உண்ண வேண்டிய உணவையும் மறு தட்டில் அவள் சூட வேண்டிய பூவையும் கொண்டுவந்து வைத்து இருந்தாள்...அதை பார்த்தவளுக்கு விம்மியது இருந்தாலும் அடக்கிக் கொண்டாள்," அம்மா இதை சாப்பிட்டுட்டு தயாராக சொன்னாங்க ஏதாவது உதவி வேணும்னா என்னை கூப்பிடுங்க மா" என்று கூறினாள் அவள் தலையை ஆட்ட கூட அவளுக்கு திராணி இல்லாமல் போனது அந்தப் பெண்ணும் அவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றுவிட்டாள்...

அந்த அறையை விட்டு வெளியே சென்ற வேலைக்கார பெண் நேராக சென்றது என்னவோ சாரதாவிடம் தான்," அம்மா ஐயா தயாராக சொன்னாங்க ஆனால் அந்த பாப்பா அழுதுகிட்டே இருக்கு" என்று கூற சாரதா வேலைக்காரியை பார்த்து," நான் பார்த்துகிறேன் நீ போ" என்று மேற்கொண்டு அவளை எந்த பேச்சும் பேச வைக்காமல் அனுப்பி வைத்து விட்டார்.. பிறகு அவளை காண அவள் இருக்கும் அறை நோக்கி செல்ல அவள் அந்த உணவையே வெறித்துக்கொண்டு நின்றுக்கொண்டு இருந்தாள்...

அவளைக் காணும் பொழுது அவருக்கு பாவமாகத்தான் இருந்தது.. ஆனால் என்ன செய்ய மகனை மீறி அவரால் எதுவும் செய்ய இயலாது அதனால் இவள் ஏதாவது பேசலாம் என்று எண்ணி அவளருகே வந்தவர் மென்மையாக ,"அபி மா இன்னும் சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகறது??என் பையன் செய்தது தப்பு தான் மா நடந்தது எல்லாம் நடந்து போச்சுமா இனி நடக்க வேண்டியதை பார்க்கலாம் மா... அம்மா என் பையன் பார்க்க கரடுமுரடாக இருந்தாலும் அவன் நல்லவன் மா அவன் செய்வது முழுவதும் தவறுதான் ஆனால் அவன் கெட்டவன் கிடையாது ஆனது ஆகிடுச்சு உன்னால முடிஞ்சா இந்த வாழ்க்கையை ஏத்து பழகிக்கோ" என்று அவர் மனதில் உள்ளதை எல்லாம் அவர் கொட்டினார்...அவருக்கு தான் ஆரம்பத்தில் இருந்தே இவளை பிடிக்கும் ஆகிற்றே..இவளை கண்ட போதே தன் மகனுக்கு ஏற்ற ஜோடி இவள் தான் என எண்ணியவர் அதனால் அவள் மனதை தேற்றலாம் என்று கூறினார்.. அதைக் கேட்ட அவளோ அதுவரை வருத்தத்தில் கண்களில் நீர் ததும்ப நின்று கொண்டு இருந்தவள் அவரை பார்த்து வெடுக்கென்று ,"இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா??? என்று அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டாள் அபி...

அதை கேட்டதும் அவர் அதிர்ந்தார்... "உங்க பையன் இந்த ஒரு காரியத்தை செஞ்சுட்டு நிக்கிறாங்க அதை சர்வசாதாரணமாக மறந்துட்டு அவரை ஏத்துக்க சொல்றீங்களா??? என்னோட வாழ்க்கை இப்படித்தான் போகும்னு எனக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு எப்போ உங்க மகன் தாலியை கட்டினாரோ எப்போ அவர் என்னை மிரட்டினாரே அப்பவே எனக்கு தெரிஞ்சிடுச்சு இதுதான் என்னுடைய வாழ்க்கை அப்படின்னு ஆனால் ஒரு பொண்ணா நீங்களாவது என் பக்க நியாயத்தைக் புரிஞ்சுக்குவீங்க என் மனசை புரிஞ்சுக்குவீங்கன்னு நினைச்சேன் ஆனால் நீங்க அப்படி இல்லை உங்களுக்கு உங்க பையனுடைய வாழ்க்கை மட்டும் தான் முக்கியம் அப்படித்தானே உங்க பையன் செய்யறது எல்லாம் செய்வாங்க அவரை மாத்த நான் வந்து என் வாழ்க்கையை கொடுக்கணுமா அப்படித்தானே சொல்லி வரீங்க இத்தனை வருஷமா நீங்க சொல்லியே திருந்தாத உங்க மகன் நான் சொல்லித்தான் தெரிந்த போறாறா??? ..

நான் அவர் கூட வாழ்ந்து அவர் பண்ற கொடுமை எல்லாம் சகிச்சிக்கிட்டு வாழ சொல்றிங்க அப்படி தானே உங்களுக்கு ஒரு மகள் இருந்து இப்படிப்பட்ட சூழ்நிலை அந்த பெண்ணுக்கு வந்தா அப்போவும் இப்படி தான் சொல்லுவீங்களா??? சொல்லுங்க உங்களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா??? இதோ ஆட்டை அறுக்க போகும் போது தண்ணீர் தெளிப்பாங்களே அது மாதிரி இப்போ என்னை தயாராக சொல்லி இருக்கார் உங்க அருமை மகன்!!! யாரை பத்தியும் எதை பத்தியும் அவருக்கு கவலை கிடையாது இல்லையா??? அவர் சொன்னதை நான் செய்யாமல் விட்டா என் தங்கையை இழுத்துட்டு இதோ இப்போ நான் நிக்கிறேனே அப்படி ஒரு நிலையில் நிக்க வைப்பார் உங்க மகன்.. அப்படி தான் உங்க மகன் என்கிட்ட சொல்லி இருக்கார்.. இப்பேர்ப்பட்ட அருமை மகன் கூட தான் வாழ சொல்றிங்க.. நீங்க என்கூட பேசலனா கூட பரவாயில்லை தயவு செய்து ஆறுதல் சொல்றேன்னு ஏதாவது வந்து சொல்லிட்டு இருக்காதீங்க" என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டவள் வேகமாக இது தான் என் வாழ்க்கை இதில் இருந்து தப்பிக்க முடியாது என்றெண்ணி தன் மனதை ஒரு நிலை படுத்தி வேகமாக தன் உடலை சுத்தம் செய்ய குளியலறை நோக்கி நடந்தாள்...

அவள் கூறியதை கேட்டதும் மிகவும் அவமானமாக தாங்க முடியாத வலியையும் உணர்ந்தார் சாரதா.. அவருக்கு கண்ணீர் அதிவேகமாக முட்டியது அவருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை அவள் கூறுவது அனைத்தும் சரிதானே அந்த சிறு பெண் பேசும் பொழுது ஏதாவது ஒரு வார்த்தை எதிர்த்து தன்னால் பேச முடிந்ததா என்ன தைரியத்தில் நான் அவளுக்கு ஆறுதல் என்ற பெயரில் அவளுக்கு மேலும் வலியை கொடுக்க போனோம் என எண்ணி குமைந்தவர் இனி என்ன நடந்தாலும் தலையிடுவதில்லை நடப்பது நடக்கட்டும் என எண்ணி அவ்விடம் விட்டு அகன்று போனார் சாரதா...

அவன் கூறியது போல அவள் இயந்திரத்தனமாக புடவை அணிந்து பூவை சூடி விதியே என அமர்ந்து இருந்தாள் அபி... அவளை பார்க்க மிக அழகாக இருந்தது ஆனால் கொஞ்சம் முகமலர்ந்து சிரித்தால் கொஞ்சம் கூட அழகாக இருக்கும் ஆனால் அவள் சிரிக்காமல் இருக்க ஒரு அரை மணி நேரம் கடந்தது அந்த சமயம் பார்த்து ஒரு வேலைக்காரி வந்து ,"பாப்பா உங்களை ஐயா மேலே வர சொன்னாங்க" என்று கூறி செல்ல அவளது கையில் ஒரு பால் சொம்பை கொடுத்துவிட்டு அனுப்பி வைத்தாள் அந்த வேலைக்காரி....

அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது... இதற்கு பதிலாக விஷத்தை கொடுத்திருந்தால் இப்பொழுது குடித்துவிட்டு பரலோகம் போய் இருப்பேனே என எண்ணிக்கொண்டு அவள் மேலே நடந்தாள்... மாடியில் படிகள் இருபத்தி ஐந்து படிகள் கடந்ததும் வலதுபுறத்தில் இரண்டாவது அறைதான் அவனுடைய அறையாக இருந்தது..

அந்த அறையில்தான் அவன் இருந்தான் என்னதான் சாரதாவிடம் வீரவசனம் பேசினாலும் தன் கோபத்தை கொட்டினாலும் இதோ இந்த நொடியிலும் கோபம் அவளுக்குள் இருந்தாலும் அந்த அறையின் வாயிலை அடைய இரண்டு நொடி இருக்கும் பொழுதே அவளது இதயம் படபடவென அடித்துக் கொண்டது ஏன் எதற்கு என அவளுக்கு பிரித்தறிய முடியவில்லை அவனை பார்க்கும் பொழுது அவன் அருகாமையை நுகரும் பொழுது எப்பொழுதும் அடித்துக்கொள்ளும் அவளது இதயம் அவனது அறையை எட்டும் முன்னே அடித்துக்கொண்டது இரு நொடி அங்கேயே நின்று விட்டாள்... உள்ளே செல்வதா வேண்டாமா என்று ஒரு பிரளயம் அவளை சுழற்றிக் கொண்டிருந்தது ஏதோ பால் சொம்பு தான் அவளுக்கு கையில் இருக்கும் ஆயுதம் போல அவளை காக்கும் ஆயதம் போல அதை முறுக்க பிடித்து இருந்தாள் அது இல்லை என்றால் அவள் கீழே விழுந்து விடுவது போன்ற ஒரு நிலையில் தான் அபி இருந்தாள்...

அவனது அறை லேசாக திறந்து தான் இருந்தது இவள் இங்கேயே நின்று கொண்டிருக்க அது அவனது கண்களுக்கு தெரிந்து விட்டதோ என்னவோ அறைக்குள் இருந்து ,"இன்னும் எவ்வளவு நேரம்தான் அங்கேயே நின்னுட்டு இருப்ப ஒருவேளை நான் வந்து அழைச்சிட்டு வரணும்னு எதிர்பார்க்கிறயா???" என்ற கேள்வி அறைக்குள்ளிருந்து எழுந்தது...

அதைக்கேட்டதும் அவனுக்கு எப்படி தெரிந்தது என்று அவள் மனம் அந்த குரல் வந்த திசை நோக்கி ஓடினாலும் அவள் கால்கள் முன் நோக்கி சென்றன.. இதயம் மட்டும் படபடவென அடித்துக் கொண்டே அவளை மேலும் பதட்டப்படுத்தியது.. இதோ வாசல் வரை வந்து நின்று விட்டாள் அதுக்கு மேல் அவளால் உள்ளே செல்ல முடியவில்லை... அவள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த அவன் முன் அவனது மனைவி நின்று கொண்டிருக்க முதன்முறையாக லேசான அலங்காரத்தோடு அவளை அவன் பார்க்கிறான் அவள் அழகானவள் என்பதை அவன் இந்தநேரம் ஒப்புக்கொண்டு இருப்பான் போல அவன் முறுக்கு மீசைக்கு இடையே மெல்லிய இதழ் முறுவல் ஒன்று வெளிப்பட்டது...

என்ன ஆச்சரியம்?? ஆத்ரேயன் சிரிக்கிறான் அவனுக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா நக்கலுக்காக மட்டுமே தன் இதழ்களை பிரித்து வரும் அவனுக்கு மெல்லிய முறுவல் கூட வருமா என்ற அளவுக்கு அவனது மனசாட்சியே அவனிடம் கேள்வி கேட்டது ஆனால் அவனையும் அவனது சிரிப்பையும் அவள் பார்த்தால் தானே குனிந்த தலையோடு அவள் நின்று கொண்டிருக்க அவன் அவளுக்கு 4 அடி இடைவெளி விட்டு மார்பில் கையை கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தான்...அவள் அப்படியே இரு நிமிடங்கள் நின்று அவனை சோதிக்க இவள் எத்தனை நேரம் ஆனாலும் இப்படி தான் நிற்பாள் என்று எண்ணியவனோ," இனி உள்ளே வர யாராவது சொல்லிக் கொடுக்கணுமா என்ன??" என்று கேட்டான்.. அவள் கால்கள் மெல்ல உள்ளே எடுத்து வைத்தது...

அதற்குள் அவள் செத்து விட்டாள் என்றுதான் கூறவேண்டும் அவள் உள்ளே நுழைந்த நொடி அவனும் அவள் புறம் நோக்கி நடந்தவன் வேகமாக கதவை அடைத்தான் அவனது கைகளில் சிகரெட் எப்பொழுதும் போல அவளை வரவேற்றது....

"வெல் வெல்கம் டூ அவர் பிரைவேட் ஸ்பேஸ்" என்று கூறியவன் அவளருகே நெருங்கி நின்றான் அவளுக்கு இதயம் பந்தய குதிரை போல தடதடவென ஓடிக்கொண்டிருக்க அவளது கைகளை மெல்ல தான் வைத்திருக்கும் சிகரெட் விரல்களால் மெல்ல வருடினான் ஆத்ரேயன்...

அவளுக்கு கூசி சிலிர்த்தது விட்டாள் இந்த பால் சொம்பை கீழே தவற விட்டு விடுவாள் போலும் வந்ததிலிருந்து அவனும் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவள் புறம் இதோ நெருங்கியும் நின்று விட்டான்..இன்னும் உடல்கள் உரச அவள் கையில் இருக்கும் பால் சொம்பு மட்டும் தான் தடையாக இருந்தது.. அவள் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை அதை அவன் எதிர்பார்க்கிறான் என்னவோ அதை கூட அவளிடம் சொல்ல அவனது அபிமானம் விட்டுக்கொடுக்கவில்லை...

"லுக்" என்று கூற அவளோ நிமிராமல் இருந்தாள் ,"என்னை பார்" என்று கொஞ்சம் சத்தமாக கூற அப்போதும் அவள் நிமிராமல் இருக்க," இனியும் இதையே என்ன சொல்ல வச்ச அப்படினா நான் ஒரு அஞ்சு நிமிஷம் உன்கிட்ட பேசலாம்னு நெனச்சேன் அது கூட இப்போ இருக்காது டிரெக்ட் ஆஹ் அடுத்த ஸ்டெப்க்கு போயிடலாம் அப்படின்னு என்னை முடிவு பண்ண வைச்சிடாதே" என்று கூறினான் ஆத்ரேயன்...

அவன் குரலில் மாறுதலை கண்ட அவளோ வேகமாக தலை நிமிர அதுவரை கொஞ்சமே கொஞ்சம் மென்மையாக பார்த்துக் கொண்டிருந்த அவனது விழிகள் அவளது விழிகளை சந்திக்கும் பொழுது கொஞ்சம் கடுமையாக அவளை பார்த்து இது என்ன மாயம் என்பது போல அவனது பார்வை இருக்க அவளுக்கு பெரிய ஆச்சரியம் ஆக ஒன்றும் இருக்கவில்லை அது வேறு விஷயம் அவளை பார்த்து ,"உனக்கும் எனக்கும் இடையே நடந்தது.. எல்லாத்துக்கும் காரணம் நான் மட்டும்தான் இங்கே நடந்த எந்த சம்பவத்துக்கும் என்னுடைய அம்மாவுக்கும் சம்பந்தம் கிடையாது.. இனி என் அம்மா கிட்ட நீ எதிர்த்து பேசுவதையோ இல்லை நடந்த சம்பவத்தை வைத்து அவர்களை குற்ற உணர்ச்சியில் தள்ளுவதையும் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன் இதுதான் முதலும் கடைசியுமான உன் பேச்சாக இருக்கணும் அவங்க என்னுடைய அம்மா அதை மறந்துடாதே… உனக்கு அப்படி சண்டை போடணும் நாடி நரம்பு எல்லாம் கொதித்து எழுந்து நிற்குது அப்படின்னா என்கிட்டே உன் கோபத்தை காட்டலாம் தட் மீன் என்கிட்ட மட்டும் தான் உன் கோபத்தை காட்டனும் அதுக்கு தைரியம் இல்லாமல் என் அம்மாகிட்ட பொங்கிட்டு இருக்காதே" என்று சற்றே கடுமையாக கூறினான்....

அவளுக்கு இலேசாக அதிர்ச்சி தான் அவன் கூறியதை கேட்டதும் ஒரு வேளை சாரதா அம்மா சொல்லி கொடுத்து இருப்பாங்களோ என்று அவள் நினைக்க அவன் அவளைப் பார்த்து அவள் நினைப்பதை புரிந்து கொண்டு ,"என் அம்மாவுக்கு யாரைப் பற்றியும் குறை சொல்ல தெரியாது அதனால அந்த வழியில் யோசிக்காதே எங்க அம்மா இதை என்கிட்ட சொல்லல சொல்லவும் மாட்டாங்க நீ ரெண்டு நாள் முன்னாடி எங்க இருந்த அப்படின்னு அப்போ உனக்கு மூணாவது மனுஷன் ஆன எனக்கு தெரியும் பொழுது என் வீட்டுக்குள்ள நீ எந்த நேரம் என்ன பேசுற அப்படின்னு எனக்கு தெரியாதா என்ன ரொம்ப யோசிச்சு உன் மூளையை குழப்பிக்காத... ஓகே நிமிஷம் நான் 3 நிமிஷம் பேசிட்டேன் அப்படின்னு நினைக்கிறேன் இன்னும் இரண்டு நிமிஷம் சமயம் இருக்கு உனக்கு ஏதாவது கோபமா பேசணும்னா என்கிட்ட பேசலாம்" என்று கூற இவளுக்கு கோபம் ஆத்திரம் உள்ளுக்குள் சுழன்று கொண்டு இருந்தது என்ன மாதிரியான மனிதன் இவன் இரண்டு நிமிடம் சமயம் தருகிறான்...இவனை திட்ட இரு நிமிடம் போதுமா??? இவனையெல்லாம் என்ன செய்தால் தகும் என்று அந்த நொடி அவள் நினைக்க அவனை பார்த்துக் கொண்டே தான் அவளது மன ஓட்டத்தை அவன் எண்ணி கொண்டிருக்க அவள் அப்படியே சமைந்து நின்று கொண்டிருந்தாள் கோபத்தோடு அவனும் அவளை அசராமல் பார்த்துக்கொண்டிருக்க கிட்டத்தட்ட 120 வினாடிகள் கடந்ததும் ,"ஓகே தொடங்கலாமா" என்று கூறவும் அவள் அதிர்ந்து விட்டாள்...

ஐந்து நிமிடம் படபடப்பாக இல்லாமல் அமைதியாக இருந்த அவளது இதயம் மீண்டும் படபடக்க துவங்கும் முன் அவளது கையில் இருக்கும் பால் சொம்பை அவளது இரு விரல்கள் உரச வாங்கியவன் மேசையின் ஓரமாக வைத்தான் பிறகு அவளை பார்த்தவன் தன் கைகளில் இருக்கும் சிகரெட்டையும் ஓரமாக வைத்துவிட்டு அவளது இரு விரல்களை தன் இரு விரல்களால் மெல்ல வருடியது போல பிடித்தான்.. இங்கு இவளுக்கு படபடவென அடித்துக் கொண்டு இருக்க அவன் அவளது படபடப்பை பொருட்படுத்தாமல் அவளை நெருங்கி நின்று இருந்தான் ஆத்ரேயன்...

அவளது உடலோடு அவனது உடல் உரச அவளது கைகளை அவன் பிடித்ததுமே அவளுக்கு உதறி விட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.. அதை செயலாற்றுவோம் என அவள் முயல அவளது கைகளோ அவனை விட்டு அவளிடம் வரவே இல்லை அந்த கைகள் அவனுள் தான் அடங்கிப் போய் இருந்தது...அவளது செயல்களை பார்த்தவன் அவள் முகத்தை தான் நிற்கும் நிலையிலேயே அவன் அவளை பார்த்து ,"நான் எப்பவாவது உன்கிட்ட இந்த விஷயம் செய்யப் போறேன்னு சொல்லாம செய்து இருக்கேனா நான் கல்யாணம் பண்ணும்போது கூட ரெண்டு நிமிஷம் முன்னாடி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிட்டு தானே செய்தேன் அதே மாதிரி தானே இன்னைக்கு நைட் உனக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் நைட்னு சொல்லிட்டு தானே செய்யறேன் எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணிட்டு இருக்க??? இல்ல உனக்கு ஓவரா ரியாக்ட் பண்றதுதான் விருப்பம் அப்படினாலும் எனக்கு ஓகே நான் எதுவாக இருந்தாலும் தயாராகத்தான் இருக்கிறேன்" என்று கூறினான் ஆத்ரேயன் எந்த நிலையிலும் அவனது எண்ணத்தில் இருந்து அவன் மாற மாட்டான் என்பதை அவளுக்கு ஒவ்வொரு நொடியும் அவன் உணர்த்திக் கொண்டு இருக்க அவன் கைகளில் அகப்பட்டு விட்டு அவனிடமிருந்து விலகிப் போக போராடி என்ன பயன் என அவளையே அவன் உணர வைத்து விட்டான் ஆத்ரேயன்....

அவள் பின் நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கலாம் என்று எண்ணினால் கூட அது ஆட்டோமேட்டிக் கதவாக இருக்க அவள் உள்ளே வந்ததும் எப்பொழுது அந்தக் கதவு அடைந்து போனது என அவள் கவனிக்க தவறிவிட்டாள்...ஆனாலும் அவளது மனசாட்சி அவளிடம் அந்த நேரத்தில் கேள்வி கேட்டது அவனிடம் இருந்து உன்னால் ஒரு அடி நகர்ந்து பின்னால் போனால் தப்பித்து செல்ல முடியுமா என்று கேள்வி கேட்க உண்மை நிலையை உணர்ந்த அவளும் இனி என்ன நடந்தாலும் மரம்போல நிற்க வேண்டும் என்றுதான் அவளது மனமும் எண்ணிக் கொண்டிருக்க ஆனால் அவளது உடல் அவனது ஆளுமையான உரசலில் குழைந்தது என்னவோ உண்மைதான்...

அதிலும் அவன் அவளது இடையை அவனது உடல் சேர்த்து அணைத்து பிடிக்கும் பொழுது அவள் கூசி கொண்டிருந்தாள்.. அதே நேரம் ஏதோ ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது பிடிக்காத ஒருவன் தான் இரண்டு அடி விலகி இருக்கும் பொழுது அவனை சுத்தமாக பிடிக்கவில்லை ஆனால் இப்பொழுது இவ்வளவு நெருக்கத்தில் அந்த அருகாமை அவளை ஏதோ செய்ததில் அது என்ன மாயம் என அவளால் பிரித்தறிய முடியவில்லை... அதிலும் இரு நாட்கள் முன்னால் வேறொருவனை ஆசைப்பட்ட மனம் அவளுடையது அந்தக் காதல் எல்லாம் எங்கே போனது என அந்த நொடி தெரியவில்லை அவனது கைகளில் குழைந்து கொண்டு இருக்கிறோமே என அவள் வெட்கி கொண்டிருக்க அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொட்டுத் தூக்கி கிடத்தி அவள் மேல் படற துவங்கினான் ஆத்ரேயன்....

அதேநேரம் ஒரு விலையுயர்ந்த பாரில் அவனுக்கு மட்டும் தனி சூட் புக்கிங் செய்து யாரும் இல்லாத இடத்தில் தனியாக அமர்ந்து சரக்கு அடித்துக் கொண்டிருந்தான் ஆதி அவனுக்கு தன் வாழ்க்கை இப்படி மாறி விட்டதே என எண்ணும் பொழுது அவன் மீதே அவனுக்கு வெறுப்பு குடும்பம், குடும்ப மானம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் அவனுக்கு அந்த குடும்ப கௌரவத்தை விட்டு வெளியே வந்து ஆத்ரேயன் அளவுக்கு தரம் இறங்கி வேலை செய்ய முடியாது அப்படி செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனை போட்டு படுத்திக் கொண்டிருக்க ஆத்ரேயன் மீது உள்ள கோபம் அப்படியே அபி மீதும் வந்தது எப்படி அவளால் அப்படி சொல்ல முடிந்தது என எண்ணிக் கொண்டு இருக்கும் நேரம் வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மி ஆதியை அழைத்தாள்... அவள் மனம் மாறாமல் நடந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளாமல் அவள் அவனை அழைக்க அவள் அவனை அழைக்காமல் இருந்திருக்கலாம் என ஒரு காலத்தில் அவள் சிந்திக்க போகிறாள் என அவளுக்கு இந்த நேரம் அறியவில்லை...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top